Page 145 of 210 FirstFirst ... 4595135143144145146147155195 ... LastLast
Results 1,441 to 1,450 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1441
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்*33 வது*நினைவு நாளை முன்னிட்டு*தமிழகமெங்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.* முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தில் ,மற்றும் டிஜிட்டல் வடிவில்*தோன்றும்*அன்பே*வா திரைப்படம் 18/12/2020 முதல் வெளியாக உள்ளது .**
    மதுரை*மாவட்ட வெளியீடு விவரம் .
    ------------------------------------------------------
    மதுரை*- சினிப்பிரியா, அண்ணாமலை, சோலைமலை அரங்குகள் .

    திண்டுக்கல்*-ராஜேந்திரா*,* * பழனி*- வள்ளுவர்*,*

    ராஜபாளையம் - மீனாட்சி* * *சிவகாசி*- பழனி*ஆண்டவர்*

    அருப்புக்கோட்டை -தமிழ்மணி* * போடிநாயக்கனூர் - ஆரா*

    சின்னமனூர் - வெங்கடேஸ்வரா* , பொன்னுசாமி*அரங்குகள்*

    மேலூர்*- கணேஷ்* * * பெரியகுளம்*-பார்வதி .* *கூடலூர்*- எஸ்.டி.பி.

    ஒட்டன்*சத்திரம்*- இந்தியன்* * சோழவந்தான் - வி*. தியேட்டர்* .

    உசிலம்பட்டி - பொன்னுசாமி*


    தகவல் உதவி : மதுரை*எம்.ஜி.ஆர். பக்தர்*திரு.எஸ்*குமார் .

  2. Thanks orodizli thanked for this post
    Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #1442
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சரித்திரத்தில் பல தலைவர்கள் வருகிறார்கள் ஆனால் சரித்திரம் படைத்த தலைவர்களில் மிக மிகச் சிலரே அவர்களில் முக்கியமாவர்
    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர் பல சாதனைகளை புரிந்து சரித்திரங்களை படைத்தார்.

    தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டு பல சாதனைகளைப் படைத்து மக்களின் மனதில் என்றும் நீங்காத இதயக்கனியாக விளங்குகிறார்.

    அவருக்கு நடிக்க தெரியாது என்று சொன்னார்கள். ஆனால் நம் நாட்டில் அரசாங்கத்தால் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான "பாரத் "விருது அவருக்கு வழங்கப்பட்டது.

    அவர் நடித்த படம் ஓடாது என்று சொன்னார்கள்.ஆனால் அவர் நடித்த படம் பலநூறு நாட்களையும் கடந்து ஓடி வசூலில் சாதனை படைத்தன.

    அவருடைய முகம் திரைக்கு ஏற்றதாக இல்லையென்று ஒரு பிரபல டைரக்டர் சொன்னார்.ஆனால் அந்த முகத்தை திரையில் காண இலட்சக்கணக்கான, கோடானுகோடி ரசிகர்கள் தவமிருந்தார்கள்.

    அவருடைய கட்சி அதிக நாட்களுக்கு நிலைக்காது என்று ஆரூடம் கூறினார்கள். ஆனால் அவர் காலஞ்சென்ற பின்னும் அவருடைய கட்சி தமிழகத்தை ஆட்சி புரிந்து வருகிறது. அம்மஹான் மறைந்த பிறகு இந்திய திரு நாட்டின் மிக உயர்ந்த, உயரிய விருது "பாரத ரத்னா" வழங்கப்பட்டு அவ்விருதும் மகத்தான பெருமையை சூடிக்கொண்டது.

    அவர் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்ற போது அவரால் சிறப்பாக ஆட்சி செய்ய முடியாதென்று சொன்னார்கள். ஆனால் அவர் ஆட்சி செய்த நாட்களே தமிழகத்தின் பொற்காலம் என்று சொல்லுமளவிற்கு மிகமிகச் சிறப்பாக ஆட்சி புரிந்தார் . ஆனால் இன்று அந்த வள்ளல் பெருமான் இல்லாதது தமிழ் நாட்டிற்க்கு பேரிழப்பாகிவிட்டது என்பதை இன்று எல்லோரும் உணர்ந்துள்ளனர்.

    அருடைய சாதனைகள் மகத்தானவவை. சரித்திரம் , சகாப்தம் படைத்த அந்த மாபெரும் தலைவரின் சாதனைகள் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புகழ் வாழ்க.........Sar.Sub....

  5. #1443
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    என்றுமே தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரங்களில் எம்.ஜி.ஆர். அவர்களுடைய
    நீங்காத சாதனைகளும்... வெற்றிகளும்... அதிக
    நபர்களின் பேசு பொருள்களாகும்.அப்படித்தான் 'தந்தி 'டி.வியின் நேற்றைய ஆய்த எழுத்து நிகழ்ச்சியும் ,இன்றைய 'புதிய தலைமுறை'
    நேர்படப்பேசு நிகழ்ச்சியும் கூறும் ஒரே கருத்து என்னவென்றால் தமிழ்நாட்டின் நிரந்தர வெற்றியின் ஒரே அதிசயம் எம்.ஜி.ஆர்.அவருடைய நல்ல கொள்கைகளையும் மக்களின் செல்வாக்கையும் அனைத்துக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு பாராட்டி அவரின்
    முகத்தை தங்கள் கட்சிகளில் காட்டி பெருமைப்படுத்த போட்டி போடுகின்றனர்.இந்த நேரத்தில் அ.தி.மு.க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தான் எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் அவருடைய இரட்டை இலை இரண்டும் எங்களுக்கு முக்கியம் என்றும் வாதாடுகின்றனர்.இவர்கள் மற்ற நேரங்களில் இந்த அ.தி.மு.க வை அம்மா அரசு என்றும் எம்.ஜி.ஆரை மறந்துவிடுகின்றனர் என்றும் மற்ற கட்சியினர் உண்மை நிலையை கூறி வாதிடுகின்றனர்.இந்த நிலையில் எம்.ஜி.ஆர். என்ற வெற்றியை மட்டும் கண்ட தலைவரை நாங்களும் பாராட்டுவோம் என்றும் அவர் புகழை நீங்கள் ஏன் உங்கள் கட்சிக்கு மட்டும் பயன்படுத்த நினைக்கிறீர்கள் எனவும் அனைவரும் வாதிடுகிறார்கள்.அவர்களின் வாதம் நியாயமானதுதானே! எம்.ஜி.ஆர் ஒரு தலைசிறந்த தலைவர் அவரை அனைவரும் ஆராதிக்கின்றனர்.
    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்!��������... Ranjith...

  6. #1444
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    டிசம்பர்...ஜனவரி ஏதாவது ஒரு மாதத்தில் மீண்டும் வருகிறார் புத்தம் புதிய பொலிவுடன்...

    காத்து இருக்கிறோம் எங்கள் தலைவா.

    உங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை..
    எங்கள் இரு விழிகளும் ஒரு போதும் இமைப்பதில்லை இமைப்பதில்லை.

    ஏன் என்றால் நீங்கள் அழகிய தமிழ் மகன்..

    உலக திரைப்பட வரலாற்றில் நம் தலைவர் படங்களை போல வேறு எந்த நடிகர் படங்களும் மீண்டும் மீண்டும் பிறப்பதில்லை.

    Ever never in the universe..the one and only..m..g..r..

    நமது பொன்மனம் உடன் நடித்த படங்கள் தவிர வேறு எந்த புகழ் பெற்றவர் படங்களும்....எங்கும் திரையிடப்பட்டு நாமும் பார்க்கவில்லை..
    நாடும் பார்க்கவில்லை

    ஒண்ணா இருக்க கத்துக்கணம்..பல உண்மையை சொன்னா ஒத்துக்கணும்............nm.........

  7. #1445
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "எது வந்தாலும் ஏற்றுக் கொண்டால் துணிவே துணையாய் மாறும், இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் பூமியே புதியபூமி" என்று மக்களுக்கு வாழ்வில் நம்பிக்கையையூட்டி பிரச்சனைகளை சமாளிக்கும் ஆற்றலை உருவாக்கினார் மக்கள் திலகம். வாழ்க்கையை தர்மநீதியுடன் போராடி வெற்றி கொள்ள வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு கற்றுக் கொடுத்தவர்.

    எந்த எம்ஜிஆர் ரசிகர்களும் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழைகளாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய உலகில்
    தற்கொலை மிகவும் மலிந்து காணப்படுகிறது. வாழ்க்கையில் நிறைவேறாத எண்ணங்களை தோல்வியாக நினைத்து உடனே தற்கொலைக்கு விழைகின்றனர் இன்றைய இளைஞர்கள். அவர்களுக்கு மாற்றுப்பாதையை காட்டி வாழ்வில் நம்பிக்கையூட்ட தகுந்த தலைவரில்லை.

    அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையூட்டி சீரான வாழ்வை ஏற்படுத்திக் கொடுக்க இன்று தகுந்ததோர் தலைவர் இல்லை. ஆனால் அன்று திரைப்படத்தின் மூலம் மக்களின் வாழ்வியல் நீதியை கற்றுக் கொடுத்தவர் எம்ஜிஆர். தாயை போற்றினால் தரணியில் உயர்வுண்டு என்பதை எடுத்து சொன்னார். எதிரிகளை திருத்த வேண்டுமேயொழிய அழிக்கும் எண்ணம் கூடாது.

    நிராயுதபாணியாக நிற்கும் எதிரிக்கு கூட கருணை காட்ட வேண்டும் என்ற
    ராஜபுத்திர வீரர்களின் கோட்பாடுகளை கடைப்பிடிக்க சொன்னவர். சண்டை காட்சிகளில் கூட முறை தவறி வெற்றி பெற நினைக்க மாட்டார். "தர்மம் தலை காக்கும்" என்று இல்லாதவர்களுக்கு உதவி செய்து அவர்கள் தொழில் செய்து பிழைக்க வழி வகை
    ஏற்படுத்திக் கொடுக்கச் சொன்னது மட்டுமின்றி அவரே முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர். மொத்தத்தில் நல்லொழுக்கங்களை மக்களுக்கு போதித்த வாத்தியார் என்பதால் "வாத்யார்" என்று அன்போடும் மரியாதையோடும் அழைக்கப்பட்டார்.

    தாயை போற்றும் பாடல்கள் அவரது படத்தில் இடம் பெற்றிருக்கும். மாற்று நடிகர் தாயை பழித்து பாடிய பாடலை கவனியுங்கள். "அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம், என்னை பெற்ற தாய் என்னை கொல்லலாம், உன்னை மறந்து நான் உயிரை தாங்கலாம், நீ சொன்னது எப்படி உண்மையாகலாம், நம்பமுடியவில்லை". புரட்சி நடிகர் படத்தில் இப்படி ஒரு பாடலை தாயை வைத்து அறம் பாட அனுமதிப்பாரா?

    "அன்னை தந்த பால் அமிர்தம் அல்லவா? என்னை பெற்ற தாய் தெய்வமல்லவா? உன்னை பிரிந்து உயிர் பறந்து போகலாம்? நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்? நம்ப முடியவில்லை"! என்றல்லவா கவிஞரை நேர்மறையாக மாற்ற சொல்லியிருப்பார். "ஒரு குடம் பாலுக்கு ஒரு துளிவிஷம்" என்பார்கள். அதுபோல பல
    நல்ல படங்களில் தன்னுடைய மிகைநடிப்பு என்ற விஷத்தை கலந்து முழு படத்தையும் கெடுத்து குட்டிச்சுவர். ஆக்கி விடுபவர்.

    அதிகமான குளோஸப் ஷாட்களை வைத்து படத்தின் கதையிலிருந்து விலகி தன்னை முன்னிலைப்படுத்தியவர். அவரின் படங்களின் தோல்விக்கு வேறு யாரையும் குறை சொல்ல முடியாது.
    முழு முதற் காரணம் அவரேதான் என்பது மிகையல்ல. அவரை என்.டி.
    என்று கைஸ் அழைப்பார்கள். ஆம் அது உண்மைதான். 'நடிப்பின் துயரத்தை' அப்படி அழைப்பதில் தவறொன்றும் இல்லை, மிகப் பொருத்தம்தான்.

    மேலும் கைஸ் "தியாகத்தை"யும் "திரிசூல"த்தையும் சாதனை என்று புளகாங்கிதமடைவதை பார்த்தால் காமெடியா இருக்கு. ஏதோ 1977 தேர்தலில் தலைவரோடு சேர்ந்து மேடைக்கு வந்த காரணத்தால் எம்ஜிஆர் ரசிகர்கள் அந்த இரண்டு படங்களையும் ஓரளவு சகித்துக் கொண்டு பார்த்ததால் தான் இந்த வசூலும் வந்தது. 1980 தேர்தலில் மீண்டும் அய்யன் தீயசக்தியோடு சேர்ந்து முகத்தில் சேரும் சகதியும் அப்பிக்கொண்டு போனதால் அடுத்து வந்த அய்யனின் ஆக்ரோஷ மிகை நடிப்பு படங்களை நமது ரசிகர்கள் கைவிட்டதால் அத்தோடு திரையுலகில் இருந்தும் தூக்கி வீசப்பட்டார்.

    புரட்சி தலைவரின் அடிப்பொடியாக இருந்தால் கூட ஏதாவது பதவி கிடைத்திருக்கும். எதிரிக்கட்சிக்கு போய் முகத்தில் சேரும் சகதியும் அப்பிக்கொண்டு வந்ததுதான் மிச்சம். தலைவருக்கு வந்த கூட்டத்தில் பாதி தனக்கு வந்தது என்று நினைத்த அய்யனை என்னவென்று அழைப்பது. கழுத்தறுபட்டாலும் தான் சாகவில்லை என்ற எண்ணத்தில் சிங்க நடை போட்டு தலை இல்லை என்று தெரிந்ததும் விழுந்து விடும் வாத்தை நாம் என்ன சொல்வோம்.
    அதைப்போல அழைத்தாலும் தகுமென்றே நினைக்கிறேன். தான் பெரிய சக்தி என்று நினைத்துக் கொண்டு தானும் கட்சியை ஆரம்பித்து 50 ல் நின்று(ஒன்றைத்தவிர) அத்தனையிலும் அய்யன் டெபாசிட் இழந்த சோகத்தில் கைஸ் பிதற்ற ஆரம்பித்து விட்டனர் என்றே தெரிகிறது..........ksr.........

  8. #1446
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சூரியன் நெருங்க முடியாது...
    சந்திரன் வாழ முடியாது...
    எம் ஜி ஆர் ஆக முடியாது ...

    மலையை தோளில் தூக்குவேன் என்று ஒருவன் கூறினாலும் நம்பும் கூட்டம் உண்டு தமிழகத்தில்
    நேரா கதாநாயகன் வேஷம் தான் தமிழகத்தின் அவல நிலை லட்சியம் இல்லா வாழ்க்கை கொள்கை இல்லா திரைபடம் மக்கள் பிரச்சனைகளை கண்டு கொள்ளமை துயரபடுவோர்க்கு உதவாத மனம் இவை கொண்ட ஒருவர் நடிகன் என்ற தகுதி மட்டும் கொண்டு தமிழகத்தை ஆளநினைப்பதும் அதை ஒரு கூட்டம் ஆதரிப்பதும் தமிழகத்தின் அரசியல் நிலையின் பரிதாப நிலை

    ஆடுகள் சண்டையிட நரிகள் கொண்டாடம் போட்டது

    தமிழன் என்று இனம் உண்டு
    தனியே அவர் கொரு குணம் உண்டு

    வாழ்க எம்ஜிஆர் புகழ்...am...

  9. #1447
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நிலைக்கும் எம்.ஜி.ஆர் புகழ் :
    ����������������������
    இந்த நேரத்தில் நடக்கும் விவாதங்களில் இரண்டு கட்சிகளும் பரஸ்பர ஊழல் குற்றச்சாட்டுகளை இருவரும் மாறி மாறி கூறிக்கொள்ளும் பொழுது விவாதிப்பவர்கள் புரட்சித் தலைவருக்குப் பின் வந்த ஆளுமைகளைத்தான் ஊழல் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.ஆனால் அங்கே விவாதிப்பவர்கள் எதிர்க் கட்சி அணியிடம் எம்.ஜி.ஆர் பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டால் எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த மனிதாபிமான தலைவர் அவரைப் பற்றி குறை சொல்ல எதுவுமே இல்லை எனவும் அவர் அனைவரையும் மரியாதையுடன் நடத்துபவர் எனவும் அவர் சிறந்த தலைவர் எனவும் எதிர் தரப்பினர் கூட புகழாரம் சூட்டுகின்றனர்.மேலும் எம்.ஜி.ஆரும் இரட்டை இலையும் இல்லாமல் எந்த கொம்பனும் ஜெயித்திருக்க முடியாது எனவும் சவால் விடுகின்றனர்.இது முற்றிலும் உண்மையே!
    எம்.ஜி.ஆரின் புகழைப் போற்றும் அனைத்துக் கட்சியினருக்கு மத்தியில் எங்கள் தலைவர் படத்தை சிறிதாக செய்தவர்கள் எப்போதுதான் திருந்துவார்கள்?...Rnj...

  10. #1448
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரையுலகின் வரையறை தனித்தன்மையின்
    புகலிடம் எம்.ஜி.ஆர் :
    ����������������������������������
    இவர் முதல் படத்திலேயே பெரிய கதாநாயக அந்தஸ்து எதுவும் கிடைத்து விடவில்லை.ஆனால் தான் சினிமாவில் அறிமுகமான ஆண்டிலிருந்து ஒவ்வொரு பத்தாண்டையும் செதுக்கி செதுக்கி வரையறை செய்தவர். திரையில் எப்படித் தோன்றினாலும் ரசித்த மக்களிடம் இப்படித்தான் கதாநாயகன் இருக்க வேண்டும் என்பதற்கு உட்சபட்ச வரம்பு எம்.ஜி.ஆர்.கதாநாயகன் நேர்வழியின் நேர்த்தியாக உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்
    மட்டுமே.அவர் காலத்தின் மற்ற நடிகர்கள் படத்தையும் எம்.ஜி.ஆர் படத்தையும் பார்க்கும் பொழுது புரட்சித் தலைவரின் நேர்த்தியான மிக யதார்த்த இயற்கை நடிப்பு அற்புதமாகவும்
    அறிவுரை கூறும் ஆசானாகவும் அமையும். அவரின் அந்த இயற்கையான நடிப்பு இன்றுவரை அவர் புகழை கொஞ்சம் கூட குறையாமல் பார்த்துக்கொள்கிறது.இன்றுகூட அவருக்கு உண்டான புகழைத் தாங்க முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் நிறைய உள்ளனர்.
    பிறந்தால் அவரைப்போல் பிறக்கவேண்டும்,வாழ்ந்தால் அவரைப் போல் வாழ வேண்டும்,புகழடைந்தால் அவரைப் போல் அடைய வேண்டும் என்பது இன்றைய அனைவரின் வயிற்றெரிச்சல்.அவர்களுக்கெல்லாம் ஒரே சொல்:இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் பொன்மனச் செம்மல் புகழ் என்றுமே நிலைத்திருக்கும்.
    வாழ்க புரட்சித் தலைவர் புகழ்����������...Rnjt...

  11. #1449
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஐயா பக்தவச்சலம் மறைவுக்கு பின் அவருக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது...அப்போது நடை முறைப்படி சென்னை நகர செரீப் ஆக அப்போது இருந்த ஐயா ஏ.வி.எம்.சரவணன் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்வில் தலைவர் கலந்து கொண்டார்.

    அமைச்சர் பெருமக்கள்* முக்கிய பிரமுகர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை ராமானுஜம் அவர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு இருந்தார்.

    நிகழ்ச்சி நடுவில் அவர் ஒரு செய்தியை தலைவருக்கு சொல்ல சொல்லி ஐயா ஏ.வி
    எம்.* அவர்களிடம் சொல்ல அவரும் தலைவர் இடம்.

    ராமானுஜம் அவர்கள் வீட்டில் பணி புரியும் ஒரு ஏழை பெண்ணுக்கு உயர் சிகிச்சை மேற் கொள்ள அதிகம் பணம் தேவை படுகிறது.

    அதற்கு என்று நாங்கள் முக்கிய நண்பர்களிடம் ஒரு பெரிய தொகையை வசூல் செய்து வைத்து உள்ளோம்...

    இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தால் சிகிச்சை செலவு இலக்கை எட்டி விடுவோம் என்று சொல்ல.

    தலைவர் மொத்தம் எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்க அவர்கள் மொத்த செலவு தொகை சொல்லி எங்களுக்கு இப்போ வசூல் ஆன தொகை போக மீதி இவ்வளவு போதும் என்று சொல்ல.

    மன்னவர் மாணிக்கத்தை அழைத்து காதில் ஏதோ சொல்ல உடன் 2 நிமிடங்களில் தலைவர் காரில் இருந்து ஒரு பண்டில் செய்யப்பட்ட தொகை உடன் அவர் வர...

    தலைவர் அவர்கள் இருவரிடமும் அந்த தொகையை கொடுக்க அண்ணே என்ன இது நாங்க இவ்வளவு கேட்கவில்லை என்று சொல்ல.

    தலைவர் நீங்கள் குறிப்பிட்ட அந்த ஏழை பெண்ணின் சிகிச்சை மொத்த பணமும் இதில் இருக்கு...வைத்து கொள்ளுங்கள் என்று சொல்ல.

    அவர்கள் அப்போ நாங்க வசூல் செய்த பணத்தை என்ன செய்வது என்று கேட்க

    சிகிச்சைக்கு பிறகு அந்த ஏழை பெண்ணின் செலவுக்கு அவர் யாரிடம் போவார் அதற்கு உங்கள் நிதி உதவட்டுமே என்று சொல்ல..

    ஒரு நிமிடம் வாய் அடைத்து போகிறார்கள் அந்த* முக்கிய பிரமுகர்கள்.

    உதவி செய்ய நினைத்து விட்டால் அது கல்யாண வீடாக இருந்தாலும் சரி அல்லது அஞ்சலி செலுத்த வந்த இடம் ஆக இருந்தாலும் சரி நம்மவரை போல வரம் கேட்ட உடன் கொடுக்கின்ற கடவுள் இவரை தவிர வேறு இவரை இனி எப்போது எங்கே காண முடியும்?

    முடிந்தால் எங்கள் தலைவர் போல ஆகுங்கள்...இருந்தால் தொண்டர்கள் ஆகிறோம்.

    ஒருபோதும் வாய்ப்பு இல்லை...

    The one and only*
    m
    g
    r.....in the universe.
    Ever never again.

    நன்றி...தொடரும்..

    உங்களில் ஒருவன் நெல்லை மணி...

    வாழ்க தலைவர் புகழ்.

    அடுத்து நிகழ்வதையும் சிந்திக்க உங்களை போல ஒருவரை எங்கள் தலைவர் என்று அடைந்ததை எங்கள் பிறவி பயன் என்று கருதும்..........
    ����������*.........nm.........

  12. #1450
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்களால் உருவாக்கப்பட்ட மாபெரும் தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

    புரட்சித் தலைவருக்கு எண்ணற்ற பட்டங்கள் இருந்தாலும் , இயற்கையாகவே அவருக்குள் இருந்த மனிதநேயம் தான் இன்றுவரை அவரது புகழுக்கு அஸ்திவாரமாக உள்ளது. இன்று சினிமாவில் தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் பட்டம் போடுகின்றனர். தனது அற்புதமான பண்புள்ள குணத்தின் மூலமாகவும். இல்லை என்று வருபவர்களுக்கு அவர்களின் முகத்தைப் பார்த்து கேட்காமலேயே அள்ளிக்கொடுத்ததாலும் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு தானாகவே தேடிச்சென்று உதவிய வள்ளல் குணத்தாலும் அரசியலில் நல்ல தலைவராக உருவானார். இன்று தலைவர்களை செயற்கையாக உருவாக்குகின்றனர். "ஊருக்கு உழைப்பவன்", திரைப்படத்தில் புரட்சித்தலைவர் பேசும் ஒரு வசனம் தகுதி இல்லாத பட்டமும் அஸ்திவாரம் இல்லாத கட்டிடமும் ரொம்ப நாள் நீடிக்காது. மாபெரும் தலைவர் புரட்சித்தலைவரின் புகழ் என்றும் என்றென்றும் நிலைத்திருக்கும்.

    கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........ssm...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •