Page 147 of 210 FirstFirst ... 4797137145146147148149157197 ... LastLast
Results 1,461 to 1,470 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1461
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வாத்தியார் #நல்லாயிட்டாரு

    எம்ஜிஆருக்கு ஒரு வில் பவர் இருக்கு. அவர் உடம்புக்கு சரியில்லேன்னாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார். அது தெரியாத அளவுக்கு எப்போதும் போல் இருப்பார்.

    குண்டுபாய்ந்ததில் தொண்டையில் ரணம் இருப்பதால் மூன்று மாதத்திற்கு டயலாக் பேசக்கூடாது; பைட் பண்ணக்கூடாது பாடக்கூடாது....பாடுவது மாதிரி மூவ்மெண்ட் வேணும்னா கொடுக்கலாம் என்று டாக்டர் அட்வைஸோடு டிச்சார்ஜ் ஆனார் எம்ஜிஆர்.

    அந்த சமயத்தில் பெற்றால்தான் பிள்ளையா படத்தின் 100-வது நாள் விழா ராஜேஸ்வரி மண்டபத்தில் நடந்தது. அந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு விழாவில் அண்ணா எல்லோருக்கும் கேடயம் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    மாமா நாகராஜராவ் வெளியூரில் உள்ள காரணத்தால் அவரின் சார்பில் அவர் உதவியாளர் இந்த கேடயத்தை வாங்கிக்கொள்வார் என்று அறிவித்ததும், நான் (எ.சங்கர்ராவ்) மேடைக்கு போனேன். அண்ணா எனக்கு கேடயத்தை கொடுத்துவிட்டு, ‘தம்பி, எப்படி இருக்க..?’ என்று விசாரித்தார்.

    அண்ணாவுக்கு அருகில் எம்.ஜி.ஆர். உட்கார்ந்துகொண்டிருந்தார். ’ஸ்ஸ்சங்கர்.....’என்று மெல்ல எம்.ஜி.ஆர். குரல் கேட்டதும் திரும்பினேன். தொண்டையில் ரணம் இருந்ததால் அவரால் சரியாக பேசமுடியல. வாய் குளறி குளறி...’நாளை குடியிருந்த கோயில் ஷூட்டிங் இருக்கு. நீ வந்துடு’ என்றார்.

    சுடப்பட்ட சம்பவத்திற்கு பிறகு முதன் முதலாக குடியிருந்த கோயில் படத்தில் நடிப்பதற்காக சத்யா ஸ்டூடியோவிற்கு வந்தார் எம்ஜிஆர். அவர் பிழைத்து வந்ததே பெரிய விசயம். ஷூட்டிங்கில் எல்லாம் கலந்துப்பாரா என்று நினைத்திருந்தவர்கள் அவர் மீண்டும் நடிக்கிறார் என்றதும் நேரில் பார்க்க பல விஐபிக்கள் வந்துகொண்டே இருந்தார்கள்.

    படத்தின் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆளுயுர மாலை கொண்டு வந்து போட்டு எம்.ஜி.ஆர். காலில் விழுந்தார்.

    சத்யா ஸ்டூடியோவிற்கு வெளியே மக்கள் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது. தள்ளுமுள்ளு அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதைக்கவனித்துவிட்ட எம்.ஜி.ஆர். , அவர்களை உள்ளே அனுப்புங்க என்று சொல்லிவிட்டார். கேட்டை திறந்ததும் தான் போதும். திபு திபுன்னு மொத்த கூட்டமும் வந்துவிட்டார்கள்.

    ‘’உன் விழியும் என் வாலும் சந்தித்தால்....’’என்ற பாடலுக்கு அவர் ஆடினார். அந்த பாடலுக்கு சரியாக வாயசைக்கிறாரா என்று #மொத்த #கூட்டமும் #அவர் #வாயையே #பார்த்துக்கொண்டிருந்தது.

    அப்படி ஒரு சம்பவமே நடக்காதது மாதிரி (சுடப்பட்ட சம்பவம்) எம்.ஜி.ஆர். எப்போதும் போல் பாடலுக்கு வாயசைத்துக்கொண்டிருந்தார்.
    அதுமட்டுமா அவர் துள்ளிக்குதித்து ஆடியதும், ஆஹா #வாத்தியார் #நல்லாயிட்டாரு என்று மொத்த கூட்டமும் துள்ளிக்குதித்தது. குடியிருந்த கோயிலுக்கு முதலில் வைத்த பெயர் சங்கமம். தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி.
    இதற்கு மறுநாள் வாகினி ஸ்டூடியோவில் காவல்காரன் படத்தின் ஷூட்டிங். அங்கேயும் கூட்டம், தள்ளுமுள்ளுவை பார்த்ததும் உள்ளே விடச்சொல்லிவிட்டார் எம்.ஜி.ஆர்.


    வாகிணியில் நினைத்தேன் வந்தாய் நூறு வயது என்ற பாடலுக்கு ஆடினார். நான் நல்லா இருக்கேன். உடம்புக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணர்த்த துள்ளிக்குதித்து ஆடினார். பொதுவாகவே எம்.ஜி.ஆர். ஒரு இடத்தில் நின்று பாடமாட்டார். அங்கே இங்கே ஓடி ஆடி பாடுவார். அதே மாதிரி செய்ததும்

    #பழையபடி #பார்க்கமுடியாதா என்று ஏங்கிக்கொண்டிருந்த வாத்தியார் ரசிகர்கள் எல்லோரும் சந்தோசத்தில் வெகு நேரம் விசிலடித்துக்கொண்டும், உரக்க சத்தம் எழுப்பிக்கொண்டும் இருந்தார்கள்....bsm...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1462
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர் #பைத்தியம்

    தமிழில், "#பைத்தியம்", "#வெறியன்" என்பதெல்லாம் ஒருவரை இழிவாகக் குறிப்பிடும் வார்த்தைகளாகும். ஒருவரைப் 'பைத்தியம்' என்று ஏசினால் ஒன்று நம்மை அடிக்கவருவார் அல்லது நம்மைக் கண்டபடி ஏசுவார். இது தான் நிதர்சனமும் கூட...

    ஆனால் இந்த இரு வார்த்தைகளுக்குமே ஒப்பற்ற மரியாதை கிடைக்கிறதென்றால் அது உலகிலேயே இந்த ஒரு விஷயத்திற்கு மட்டுமாகத் தான் இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து...

    #எம்ஜிஆர் #பைத்தியம், #எம்ஜிஆர் #வெறியன்...

    இந்த வார்த்தைகள் அநேகமாக எல்லா எம்ஜிஆர் பக்தர்களாலும் பேசப்படும் என்பதை நான் நிறைய தருணங்களில் பார்த்திருக்கிறேன்...

    ஒருவர் சொல்வார் : "நான் எம்ஜிஆர் ரசிகர்னு", அதை இடைமறித்து இன்னொருவர் கூறுவார் : நான் எம்ஜிஆர் வெறியன்னு", இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் மற்றவர் இவர்களைப் பார்த்து ஏளனமாகக் கூறுவார் : "அட போங்கப்பா, நான் எம்ஜிஆர் பைத்தியம் " அப்படீன்னு...

    இப்படித் தன்னைப் பெருமையாகப் பறைசாற்றுவதில் எம்ஜிஆர் பக்தர்களுக்குத் தான் எவ்வளவு பெருமை ...!

    முன்பு ஒரு பதிவில் நான் வாத்தியார் 'ஆயிரத்தில் ஒருவன்' என்று போட்டதற்குக்கூட, ஒரு பக்தர் அதெப்படிச் சொல்லலாம்...? அவர் 'கோடியில் ஒருவர்' என்று சண்டைக்கு வந்துட்டாரு....

    தங்களது எம்ஜிஆர் பக்தியைக் காண்பிப்பதி்ல் தான் என்ன ஒரு போட்டி...எந்தளவு அவர் மேல் ஈடுபாடும் பக்தியுமிருந்தால் இப்படிக் கூறிப் பெருமைப்படுவார்கள்...!!!

    பக்தியின் உச்சநிலை இது...
    எந்த அளவு உன்னதமானவர்கள் எம்ஜிஆர் பக்தர்கள்...

    இழிவான வார்த்தைகள் கூட எம்ஜிஆரைத் தாங்குவதால் எப்பேர்ப்பட்ட பெருமையை அடைகிறது பாருங்கள்...!

    ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் பாதம் பட்டதால் கல்லாக இருந்த அகலிகை என்ற பெண்ணுக்கு விமோசனம்...

    எம்ஜிஆரின் பெயரைத் தாங்கியதால் இந்த வார்த்தைகளுக்கு விமோசனம் ...

    #நானும் #ஒரு #எம்ஜிஆர் #பைத்தியம் என்று கூறுவதில் எனக்கும் பேரானந்தம்...

    உங்களுக்கு ???..........vtr.........

  4. #1463
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரொம்ப பதிவு சினிமாவைப் பற்றி போட்டாச்சு!. இனி அரசியல் பதிவு ஒன்றை போடலாம் என்று இந்தப் பதிவை வரைய விரும்புகிறேன்.
    தலைவரின் அந்தக்கால சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்திருப்பீர்கள். கதாநாயகியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் வாளேந்தி எதிரிகளை அவர்கள் கோட்டைக்குள்ளே வீழ்த்தி
    ஆட்சியை கைப்பற்றி நாயகியையும் காப்பாற்றி கை பிடிப்பது போல் காட்சி அமைத்திருப்பார்கள்.

    அதே காட்சி அவரது வாழ்க்கையிலும் அரசியலில் நடைபெற்றது. 1980 ல்
    தலைவரது ஆட்சி கலைக்கப்பட்டதும்
    அருகிலிருந்த அரசியல் துரோகிகள் அணி மாறிய காட்சி தீயசக்தியின் தூண்டுதலால் அவரின் திரைக்கதையில் தோன்றியவாறு நிகழ்ந்தது.

    ஆனால் சற்றும் பதட்டமடையாத தலைவர், தன்னை நம்பி வருபவர்களை மட்டும். இருகம்யூனிஸ்ட், காகாதேகா போன்ற கட்சிகளை மட்டும் அரவணைத்துக் கொண்டு தமிழகத்தின் பெரும் கட்சிகளாக செயல்பட்டு வந்த இ.காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியை எதிர்த்து தனியொருவனாக களத்தில் நிராயுதபாணியாக மக்கள் ஆதரவு
    என்ற தேரில் ஏறி அமர்ந்து அதர்மத்தை அழிக்க சங்கொலி முழங்க களத்தில் முன்னேறி வரும் போது மற்றொரு பக்கம் தீயசக்தி தேர்தலுக்கு பின் அமையப்போகும் மந்திரி சபையில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற
    பட்டியலை தயாரிக்கும் அதிகார,சதிகார பணியில் இறங்கியிருந்தார்.

    அத்தோடு நிற்கவில்லை. வள்ளுவர் கோட்டம் வண்ணமயமாக ஜோடிக்கப்பட்டு பதவியேற்பு விழாவுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தது. புரட்சித்தலைவரோ
    சூறாவளி சுற்றுப் பயணத்தில், நான் செய்த தவறென்ன? என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்ப
    மக்களோ மகராசா! உன்னிடம் ஏதும் குறை காணவில்லை. அதோ அந்த தவறான பொருந்தாத கூட்டணி மீதுதான் தவறு! என்று மனமேங்கிக் கொண்டு தர்ம தேவனுக்கு வாக்களிப்பது என்ற சங்கல்பத்தை
    மேற்கொண்டு செல்லும் இடமெல்லாம் மலர்தூவி நின்றனர்
    நம் காவிய நாயகனுக்கு. தேர்தல் வேளை வந்து விட்டது.

    தம்முடன் அணி சேர்ந்த கம்யூனிஸ்டுகள் மற்றும் காகாதேகா ஆகிய சிறிய அணிகளுடன் பெரும் போரை நடத்தி எதிரிகளை முன்பைவிட பலமாக தாக்கி ஓட ஓட விரட்டி ஆட்சியை கைப்பற்றிய மாட்சி இருக்கிறதே அது சொல்லில் அடங்கா. இதே காட்சியை சிவாஜிக்கு நினைத்து பாருங்கள். ஆட்சி டிஸ்மிஸ் செய்தவுடன் "தில்லானா மோகனாம்பா"ளில் கத்திகுத்துக்கு உருண்ட மாதிரி இந்திரா அம்மையாரின் காலிலும் தீயசக்தியின் காலிலும் கதறி உருண்டு அழுதிருப்பார். புரட்சித்தலைவரின் வீரத்தையும், ஆற்றலையும் பார்த்தும் சில கோழைகளுக்கு வீரம் வரவில்லையே? என்ன செய்ய! கடவுள் வீரத்தை வாயிலேயே வைத்து விட்டான் வசனம் பேசுவதற்கு.

    ஆனால் நம் தலைவரோ 'எதையும் தாங்கும் இதயம் கொண்டு' துரோகிகளை மக்கள் முன் நிறுத்தி தோலுரித்து காட்டி வெற்றி கண்டார். அந்தக் காட்சி "மந்திரி குமாரி"யில் கதாநாயகியை தூக்கிக் கொண்டு போர்புரியும் காட்சியை நினைவு படுத்தவில்லை? "மன்னாதி மன்னனி"ல் கட்டவிழ்த்து பாதபூஜை செய்யச் சொல்லும் போது கொதித்தெழுந்து சோழனின் குலப்பெண்ணையும் தூக்கிக் கொண்டு 'தாயை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்' என்று வீரத்தின் உச்சியில் எக்காளமிட்டு ரதத்தில் ஏறி அனைவரையும் கண்ணில் விரல் விட்டு ஆட்டி விட்டு தாயகம் திரும்பும் காட்சி நிழாலாடுகிறதா?.

    சினிமாவில் மட்டுமல்ல வீரம்? அரசு வித்தைகளிலும் அவர் காட்டும் வீரத்தை மறக்க முடியுமா? 'புறமுதுகு காட்டி ஓடியவர்களுக்கு' இதெல்லாம் புரியுமா என்ன? ஒரு தேர்தலில் தோற்றதற்கு புறமுதுகு காட்டி ஓடி பதுங்கு குழியில் பதுங்கியவர்களுக்கு புரியுமா வீரத்தின் விளையாட்டை?. மீண்டும் சதிகாரனோடு சேர்ந்து சபையில் சங்கமித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க மட்டுமே அவர்களுக்கு தெரியும்.
    அந்த தேர்தலில் தன்னை நம்பிய கம்யூனிஸ்ட்கள் பெற்ற அதிகபட்ச வெற்றியே இதுவாகத்தான் இருக்கும்.

    கம்யூனிஸ்டுகள் 20 சீட்களில் வெற்றி பெற்றார்கள். குமரி அனந்தனின் காகாதேகாவோ 6 சீட் வெற்றி பெற்றார்கள். இந்தத் தடவை முதலிலே புரட்சித் தலைவரின் வெற்றி அறிவிக்கப்பட்டது. மதுரை மேற்கில் சுமார் 20000 ஓட்டுகள் அதிகம் பெற்ற வெற்றியடைந்த செய்தி கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த நினைவு நெஞ்சை விட்டகலா!. தீயசக்தி ஹண்டேயிடம்
    வெற்றிக்கு அண்ணா நகரில் போராடி பின் தலைவரின் கடைக்கண் பார்வையால் வெற்றி கிடைத்த காட்சியை கண்டு தமிழகமே எள்ளி நகையாடியதும் மறக்க முடியாத காட்சி.

    இந்திரா அம்மையாருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தின் தலைமையோடு கை கோர்த்தது தவறு என்பதை உணர வைத்த அற்புதமான தேர்தல்.
    புரட்சித்தலைவரின் புனிதப் போரில் அதிமுகவின் வெற்றியின் வீச்சு கூடியிருந்தது. தீயசக்திக்கு கணிசமான அளவு ஆதரவு குறைந்து காணப்பட்டது. அவருடைய ஆர்ப்பாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

    தீயசக்தியின் பதவி ஏற்புக்கு அடிக்கப்பட்ட 'வால்போஸ்டர்' என்ன கதி ஆனதோ தெரியவில்லை. இது போன்ற ஒரு வித்தியாசமான தேர்தலை மக்களும் அரசியல் கட்சிகளும் கண்டதில்லை என்றே நினைக்கிறேன். இது ஒரு சரித்திர சாதனை என்றே சொல்ல வேண்டும்..........shr...

  5. #1464
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனை முகம் காட்டினாலும் அந்த முகம் ஆசைமுகம் ஆஹா அது அவதார முகம் ! நம்மை என்றும் வாழ வைக்கும் முகராசி முகம் ! அ௫ள்த௫ம் வெற்றிமுகம்! எதிாிகளை விரட்டியடிக்கும் சிங்க முகம் ! அற்புதம் நடக்கும் என புரடாவிடும் கிறுக்கா்களை சறுக்கிவிடும் ஆவேச முகம் ! ஆா்ப்பாிக்கும் அழகு முகம் !���� ������������������������

    எம்ஜிஆர் முகம்...
    ஆசைமுகம்..
    அவர் ராசி ..முகராசி...
    அந்த முப்பிறவி...
    தனிப்பிறவி...
    அவரின் சத்யா தாய்..
    தாய் சொல்லைத் தட்டாதவர்.
    அவர் நாடு...நம்நாடு...
    அவர் ஓட்டும் கார் வாகனம்
    அதுவே ஜானகி அம்மாளின் காதல்வாகனம்.
    அவர் தங்கம்..
    ஆம் நமக்கு எங்கள் தங்கம்.

    அவர் இளம்தலைமுறையினருக்கு தலைவன்.
    அவர் கரங்கள் உழைக்கும் கரங்கள்.பொதுவாக
    அவர் ஊருக்கு உழைப்பவன்(ர்)
    அவர் விஜயகுமாரியை அடிக்கடி என் தங்கை என்பார்.அவர் புகழ்
    இன்றுபோல் இன்றும் வாழ்க!
    மேலும்... பல்லாண்டு வாழ்க!

    எம்ஜிஆர் மன்னன். ஆம் மன்னாதி மன்னன்.அந்த தலைவர்(ன்)ஒரு குடும்பத்தலைவன்(ர்)

    நம் தலைவர் வீட்டிற்கு செல்லும் பக்தர்களை ரசிகர்களை தொண்டர்களை என்றேனும் அவரில்லை பார்க்க முடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்களா? அவரைப் பார்க்கச் செல்லும் அனைவரும் வயிறார உண்டு தலைவரைப் பார்த்து ரசித்து பின் வீட்டிற்கு திரும்புவார் பார்த்து செல்லும் அனைவரையும் அழைத்து அன்பான முறையில் அனுசரித்து அவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்று யோசித்து உதவி செய்யக்கூடிய மனிதன் நம் தலைவர் எம்ஜிஆர் அவர்கள்...gdr...

  6. #1465
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    வேண்டாம்--விலகு!!
    -------------------------------
    உன்னைத் திட்டறவங்களுக்கு தான்ணா நீ உதவி செய்யறே/ அது உன் ராசி!
    நினைத்ததை முடிப்பவன் படத்தில் சாரதா,,தன் அண்ணன் எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கூறுவார்!
    வசனம் மட்டுமல்ல இது உண்மையான விசனம்!
    எம்.ஜி.ஆரால் உயர்ந்தவர்கள் தான் பெருமளவில் அவரை உதாசீனம் செய்தும் இருக்கிறார்கள்!
    அந்த வகையில்--
    எம்.ஜி.ஆரை இழிவு படுத்தி,,அந்த விளம்பரத்தில் தங்களை வளர்த்துக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்!
    காலச் சக்கரம் கடந்து வந்த பாதையை நோக்கினால் இத்தகையோர் நிறைய பேர்களைப் பார்க்கலாம்!
    தற்போதோ--கேட்கவே வேண்டாம்|
    ஆலங்குடி வெள்ளைச்சாமி!!
    சொற் பொழிவாளராம் சொல்லிக் கொள்கிறார்
    அறிஞராம்! அலட்டிக் கொள்கிறார்!
    எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்!
    குறிக் கோளிலும்,,,கொள்கையிலும் குறைபாடு இருக்கக் கூடாதல்லவா?
    யு--டியூப் சேனலில்,,அடுக்கடுக்காக எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை சொல்லி வருகிறார்--
    உற்று கவனித்தால் அதில் எம்.ஜி.ஆரை விகாரமாக சித்தரிப்பது புலனாகும்!
    சினிமா,,பொது வாழ்வில் இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் எம்.ஜி.ஆரை கேவலப் படுத்தும் இவரது கற்பனை நிகழ்வுகளில் இன்று நாம் பார்க்கப் போகும் விஷயம் அவதூறின் உச்சம் மட்டுமல்ல,,பயங்கரத்தின் உச்சமும் கூட!
    எம்.ஆர் ராதா,,எம்.ஜி.ஆரை சுட்டதற்கு அவர் கூறும் காரணம்--இதோ---
    காமராஜர்,,,அன்றைய தி.மு.கவுக்கு எதிராகப் போட்டியிடும்போது,,,ராமசாமி நாயக்கர்,,காமராஜரை ஆதரிக்க--
    அவர்கள் தேர்தலில் ஜெயித்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக---
    எம்.ஜி.ஆர்,,காமராஜரைக் கொல்ல முடிவு செய்தாராம்???
    தன் நண்பர்கள் சிலரிடம் தம் பயங்கர திட்டத்தை எம்.ஜி.ஆர் தெரிவித்தாராம்??
    அன்றைய பத்திரிகைகள் இரண்டொன்றில் கூட இது வெளி வந்திருந்ததாம்
    நாயக்கரின் நெருங்கிய நண்பரான எம்.ஆர்.ராதா இதனால் ஆத்திரமுற்று,,எம்.ஜி.ஆரைக் கொல்லப் போவதாக நாயக்கரிடம் தெரிவித்தாராம்
    நாயக்கர் தடுத்தும்,,ராதா,,ஆத்திரம் அடங்காமல்--
    எம்.ஜி.ஆரை டுமீலாம்??
    லட்சக் கணக்கானோர் பார்வையிடும் யு-டியூப் சேனலில் இப்படிப்பட்ட விஷத்தைக் கக்கியிருக்கிறார் ஆலங்குடி வெள்ளைச்சாமி!!
    தம்மை அறிஞராகப் பிரகடனப் படுத்திக் கொள்ளும் அந்த பிரகஸ்பதிக்கு வரலாறு தெரியுமோ தெரியாதோ--
    காமராஜர் என் தலைவர்
    அண்ணா என் வழிக்காட்டி என்று பொது மேடையில் சொன்னவர் எம்.ஜி.ஆர்!
    அதனாலேயே என் கடமை உட்பட அவரது இரண்டொரு படங்கள் வசூலில் பாதிக்கப்பட்டன என்பதை நாமறிவோம்
    இந்திய சீன யுத்தத்தின் போது இந்தியாவிலேயே முதல் நபராக நிதி கொடுத்தவர் எம்.ஜி.ஆர் என்பதும்,,அதுவும் அந்த நிதியை அவர் காமராஜரிடம் தான் கொடுத்தார் என்பதையும் இந்த வெள்ளைச்சாமி அறிவாரா?
    காமராஜர் மீதான தோல்வி பயமா??
    1972--இல் சிண்டிகேட் காமராஜர்,,இந்திரா தலைமையிலான காங்கிரஸ்,,அன்றைய ஆளுங்கட்சி தி.மு.க இவற்றையெல்லாம் ஒற்றை ஆளாய் எதிர்த்து நின்று வெற்றியை ஈட்டிய எம்.ஜி.ஆருக்குக் காமராஜர் மீது பயம் இருந்ததாம்??
    இத்தனைக்கும் எம்.ஜி.ஆர்,,கட்சி துவக்கியப் புதிது
    கேட்பதற்கு நமக்கு வேடிக்கையாய் இருந்தாலும்--
    சொல்வதற்கு அவருக்கு வெட்கமாயில்லை??
    எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிலிருக்கும் காங்கிரஸ் இன்று காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்றுக் கூவிக் கொண்டு திரிகிறது
    அன்று இவர்களின் முதலாளியம்மா இந்திரா தான் செய் நன்றி மறந்து காமராஜரை ஓரங்கட்டியது!
    இன்று வெள்ளைச்சாமி என்னும் புளுகு மூட்டைக்--
    கோயபல்ஸ் புதிதாகக் கண்டு பிடிக்கும்
    கொலம்பஸ் கணக்காக அள்ளி வீசுகிறார்_-
    எம்.ஜி.ஆர்,,காமராஜரைக் கொல்ல முடிவு செய்தார் என்று??
    வெள்ளைச் சாமி!
    பெயரில் மட்டும் வெள்ளை இருந்தால் போதாது
    உள்ளத்திலும் கொஞ்சமாவது இருத்தல் வேண்டும்!!
    உணருங்கள்!--இல்லையேல்
    உணர்த்தப்படுவீர்கள்!!!.........vtr...

  7. #1466
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1977 இல் நம் தங்கதலைவர் பொது தேர்தலில் தனி இயக்கம் கண்டு போட்டியிட்ட வரலாற்று தருணம்..

    4 முனை போட்டி அந்த தேர்தலில்...வரலாற்று நாயகன் தமிழகம் எங்கும் ஒற்றை படை தலைவனாய் தளபதியாக சுற்றி சுழன்று தன் இறுதி கட்ட பிரச்சாரத்தை அருப்புக்கோட்டை தொகுதியில் நிறைவு செய்யும் நாள் அன்று.

    அரைக்கால் ட்ரவுசர்கள் விசில் அடித்த குஞ்சுகளை நம்பி அரசியல் களத்தில் இறங்கி இருக்கும் இவர் இயக்கம் எங்கே வெற்றி பெற போகிறது என்று ஒரு செல்வந்தர் தான் போட்டி இடும் தொகுதியில் படுவேகமாக தலைவரை பேசி கொண்டு இருந்தார்.

    அருப்புக்கோட்டை கூட்டம் பேசி முடித்து இன்னும் பிரச்சாரம் ஓய மாலை 4 தாண்டி நேரம் இருக்க..

    தலைவர் கழக தோழர்களை அழைத்து இன்னும் ஒரு கூட்டம் பேசிவிடுகிறேன் எங்கே போகலாம் என்று கேட்க.

    அவர்கள் அண்ணே காரைக்குடி நகரில் அழகப்பா திடலில் பேசலாம் என்று சொல்ல ...வேண்டாம் சாக்கோட்டை ஒன்றிய அலுவலகம் அருகில் பேசுகிறேன் என்று மாமன்னர் சொல்ல.

    அங்கே புரட்சிதலைவர் வருகிறார் என்றவுடன் கட்டு கடங்காத மக்கள் வெள்ளம்.. பிரச்சார வாகனம் அங்கே வர மணி 4.15 தாண்டி விட தலைவர் தேர்தல் விதி முறைகள் படி பேச முடியாத நிலை.

    தலைவர் சற்றும் யோசிக்காமல் கூட்டத்தில் இருந்து ஒரு மிக சாதாரணம் ஆக அழுக்கு லுங்கி கிழிந்த சட்டை மெலிந்த தேகம் கொண்ட ஒருவரை தன் அருகில் அழைத்து கூட்டத்தில் அவரை காட்டி..

    அவர் நெஞ்சில் கை வைத்து... இவரின் மன சாட்சியாக நான் நடப்பேன் என்று சைகையில் சொல்ல புரிந்து கொண்ட மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்து கொண்டாட..

    தேர்தல் முடிவுகள் எண்ண படும் அந்த நாளில் பலம் பணம் சமுதாய அந்தஸ்து உடைய அந்த செல்வ சீமான் மற்ற வாக்கு சாவடிகளில் தலைவர் சின்னத்தை விட அதிக வாக்குகள் பெற்று முன்னணி நிலையில் வர..

    சாதாரண தொண்டன் அந்த தொகுதியில் போட்டி இட்ட காளியப்பன் என்பவரின் பூத் ஏஜெண்டுகள் சோகத்தில் மூழ்க.

    அடுத்த ஒரு சுற்று மட்டும் எண்ண பட வேண்டிய நிலையில் தலைவர் தன் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு சைகையில் பேசிய சாக்கோட்டை ஒன்றியம் உட்பட்ட வாக்குகள் எண்ண பட ஆரம்பிக்க பட..

    16 செல்லாத வாக்குகள் தவிர எண்ணி முடிக்க பட்ட அந்த சுற்றில் மட்டும் செல்வாசீமான் வாக்குகளை விட ஏழை தொண்டன் காளி அப்பன் சுமார் 420 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்ற அந்த நிகழ்வை நினைத்தால் இன்றும் புல்லரிக்கும்..

    புரட்சிதலைவர் செல்வாக்கை எண்ணி மனம் பத பதைக்கும் என்றும்...

    தீயசக்தி கட்சி மூன்றாம் இடம் பெற்று படுதோல்வி அந்த தொகுதியில் அடைய இரண்டாம் இடத்தில் வந்து வெற்றி வாய்ப்பை இழந்த ..

    ப..சிதம்பரம் அவர்களுக்கு அன்று தலைவர் மீது ஏற்பட்ட கோவம்........

    நன்றி ..வாழ்க தலைவர் புகழ்..

    உங்களின் உணர்வுகளை எழுத்தில் வடிக்கும் உங்களில் ஒருவன் நெல்லை மணி...

    கழுத்துக்கு மேலே தலை இருக்கும் எல்லோரும் தலைவர் ஆகி விட முடியாது.

    கட்சிகள் ஆரம்பிக்கும் சில பல நடிகர்கள் எங்கள் எம்ஜிஆர் போல வர முடியாது....நன்றி..........

  8. #1467
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மீனவர் #பிரச்சனைகளை #அன்றே #கையிலெடுத்த #எம்ஜிஆர்

    #தெரிந்த #விஷயமென்றாலும்

    படகோட்டி படத்தில் அறிமுகப்பாடல் காட்சி கடலோடிகளின் துன்பத்தை பறை சாற்றுவதாக அமைந்திருக்கும்.

    “தலைமேல் பிறக்க வைத்தான் - எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
    கரைமேல் இருக்க வைத்தான் - பெண்களைக்
    கண்ணீரில் குளிக்க வைத்தான்

    பாடல்...
    தற்கால துயரத்தை வெளிப்படுத்தும் அந்தப்படம் ...

    முழுக்க முழுக்க படகோட்டிகளுக்கு அவர்கள் மீனுக்கு நல்ல விலை கிடைக்கவும் வந்து கந்து வட்டிக்காரர் கொடுமையிலிருந்து விடுபடவும் அரசாங்கத்தின் திட்டங்களால் பயனடையவும் உழைக்கும் மாணிக்கமாக பாத்திரம் ஏற்று நடித்திருப்பார்...

    படம் நெடுக படக்கோட்டிகளின் அவலமும் பாடுகளும் அவநம்பிக்கையும் தொடரும் ...

    இறுதியில் இரண்டு மீனவ குப்பங்களும் ஒன்று பட்டு அரசின் நலத்திட்டங்களைப் பெற்று தனிநபர் கொடுமையிலிருந்து விடுபடும்...என்பது போல மிக அற்புதமாக...
    பாசிடிவ் ஆக காட்சியமைத்திருப்பார்...

    ஆத்மார்த்தமாக இந்த எண்ணங்கள் பொன்மனச்செம்மலின் ஆழ்மனதில் இருந்ததால் காட்சியிலும் வெளிவந்தது....bsm...

  9. #1468
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இது நிஜமா??
    -----------------------
    அது 1945.
    எம்.ஜி.ராமச்சந்தர் என்ற பெயரில்---எம்.ஜி.ஆர்--
    மின்னல் போல் எப்போதோ ஒரு முறை வருமானமும்,
    பின்னல் போல் இன்னல் என்னும் பெறுமானமும் கண்டு,வாழ்வில் உழன்று கொண்டும் அதே சமயம் நம்பிக்கையோடு சுழன்று கொண்டும் காலத்தோடு போராடிக் கொண்டிருந்த காலம்!!

    வி.கே ராமசாமி நடத்தி வந்த நாடகத்துக்கு தினமும் மாலையில் ஆஜர் ஆகிவிடுவாராம் எம்.ஜி.ஆர்!!
    ஒரு நாள் வி.கே ஆரைக் காணமுடியவில்லை எம்.ஜி.ஆரால்??
    மறு நாள் வி.கே ஆரிடம் காரணம் கேட்கிறார் செம்மல்!

    சென்னையை சுற்றிப் பார்க்கப் போயிருந்தேன். எல்லா இடங்களையும் பார்த்தேன் கோட்டையை மட்டும் பார்க்க முடியலே??

    சுத்தி போலீஸ்காரங்க நிக்கறாங்க--சுட்டுப் புடுவாங்களாம்?? அதனால அதை மட்டும் பார்க்க முடியலே--வருத்தத்தோடு மிகுந்த வருத்தத்தோடு சொன்ன வி.கே ஆரை சமாதானம் செய்கிறார் எம்.ஜி.ஆர்!!
    விடுங்க!!

    அது என்ன? விண்ணில் இருக்கும் வினோதப் பொருளா?? பார்க்க முடியாமல் போவதற்கு???

    அது 1977!!
    எம்.ஜி.ஆர் தமிழ் நாட்டு முதல்வராகிறார்!!
    ஒரு நாள் அவரை வாழ்த்த அவர் தோட்டத்துக்கு சென்ற வி.கே.ஆரை அன்புடன் வரவேற்று விருந்தோம்பல் செய்த எம்.ஜி.ஆர்,,,,,,தன் காரில் அவரை ஏறிக் கொள்ளச் சொல்லி ஓரிடத்துக்கு அழைத்துச் செல்கிறார்??

    அங்கே,,முதல்வர் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த மரியாதை யாவும்
    வி.கே ஆருக்கும் கிடைக்கிறது!!
    அந்த இடத்தை இடுக்கு விடாமல் பார்த்து வரச் சொல்லி,,,மிடுக்கு இல்லாமல் வேண்டுகிறார் வி.கே.ஆரை!!

    சுற்றிப் பார்த்து விட்டு வந்த வி.கே.ஆர்--நா தழுதழுக்க எம்.ஜி.ஆரிடம் சொல்கிறார்??
    அன்னிக்கு என் நாடகத்துக்கான மரியாதை இன்னிக்குத் தான் எனக்குக் கிடைச்சுது??

    அது தான்---அந்த காலத்தில் அவர் பார்க்க விரும்பிய-
    செயின்ட் ஜார்ஜ் கோட்டை???
    கண்ணதாசன் ஒரு பாடலில் இப்படி எழுதியிருக்கிறார்- காலம் நம்மைப் பார்த்துக் கண்ணடித்தால்
    பதவி வரும்!!--அதுவே
    மெதுவாக ஜாடை செய்தால்
    சிறையும் வரும்???--ஆனால் இங்கே--
    காலத்தையும் வென்று தன் தன்னம்பிக்கையால் கோட்டையைப் பிடித்தும்--தன் அபாரமான நினைவாற்றலால்,

    32 ஆண்டுகள் கழிந்தும் --
    வி.கே ஆரின் விருப்பத்தை நிறைவேற்றிய எம்.ஜி.ஆர்???
    அன்று வி.கே ராமசாமிக்கு மட்டுமா புல்லரித்திருக்கும்?? ---
    பதிவைப் படிக்கும் நமக்கும் தானே?????

    மகிழ்ச்சி நிறைந்த
    இனிய வணக்கம்.......... Nm...

  10. #1469
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் பதிவு. உ...த்தமன் பதிவு- 1
    -----------------------------------------------------

    இதுவரை நாம் கைபிள்ளைகளின் வடக்கயிற்றின் ஆற்றலை பார்த்தோம். ஆனால் ஒரே பதிவில் அவர்களின் திறமையை விளக்கமுடியவில்லை என்பதால் "உ...த்தமனி"ன் தூத்துக்குடி வடக்கயிறு இழுவை மேட்டரை பற்றி தொடராக எழுதுகிறேன். அத்தனையும் உண்மை. பொழுதுபோக்காக கொஞ்சம் காமெடி கலந்து சொல்கிறேன்.

    சென்ற பதிவில் "உ......த்தமனி"ன் அகில உலக சாதனையை பார்த்தோம். அப்படியானால் தூத்துக்குடியில் உ....த்தமனின் சாதனை என்ன? தூத்துக்குடி கைஸ் விளக்குவார்களா? இல்லை நான் விளக்கட்டுமா?. அய்யனின் கைஸ் "சிவந்தமண்ணு"க்கு பிறகு வெகுவாக எதிர்பார்த்த படம் "உ....த்தமன்தா"ன்.
    "எங்கள் தங்க ராஜா" கொடுத்த உற்சாகத்தில் "உ...த்தமனை" ரொம்ப நம்பியிருந்தார்கள். ஆனால் சரியாக விளக்காததால் அவன் "ஊத்தமன்" ஆகி விட்டான்.

    ஹிந்தியில் இயல் நடிப்பால் பெரிய ஹிட் அடித்த படமெல்லாம் இங்கு அய்யனின் மிகை நடிப்பால் பணால் ஆவது வழக்கம்தானே. ஆனாலும் கைஸ் எடுத்த காரியத்தை முடிக்க கையில் போர் தளவாடங்களுடன் (வடக்கயிறு ஸ்டெச்சர் சகிதம்) கிளம்பி விட்டார்கள். கைஸ் கையில் ஆயுதங்களுடன் கிளம்பி விட்டார்கள் என்றவுடன் தூத்துக்குடி இனி இழுவை பூமிதான் என்று நினைத்தவர்களும் உண்டு.

    இதில் ஒரு சில கைஸ் சபாரி அணிந்து கொண்டு பெரிய ஆபிஸர் போல் லுக் கொடுத்துக் கொண்டு தியேட்டரை சுற்றி அலைந்தவுடன் காரனேஷன் தியேட்டரை சுற்றி பரபரப்பு தொற்றிக் கொண்டது. அய்யனுக்கு அன்புப் பரிசாக கைஸ் ஒரு 105 நாள் படத்தை உருவாக்கி தருவார்கள் என்ற எண்ணத்தை எல்லோருக்கும் ஏற்படுத்தி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். மேலும் இந்த முறை 105 நாட்களோடு 100 தொடர்hf போட வேண்டும் என்ற ஆசையும் கைஸ்களுக்கு உருவாகி விட்டது. பெரிய ஊர்களிலெல்லாம் 100 hf போடுவது பார்த்து எங்க ஊர் கைஸ்களுக்கு பேராசை வந்து விட்டது. நிற்க.

    அதற்குமுன் தூத்துக்குடி காரனேஷன் தியேட்டரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
    தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் அமைந்த ஒரு பழமையான தியேட்டர்தான் காரனேஷன். இங்கு இன்னொரு தியேட்டர் ஜோஸப் என்ற பெயரில் இவர்களின் சகோதரர் தியேட்டர் ஒன்று உண்டு. இவற்றின் அதிபர்தான் கர்டோஸா சகோதரர்கள். காரனேஷனை பொறுத்தவரை மார்க்கெட் பகுதி என்பதால் எந்த நேரமும் மக்கள் போக்குவரத்து சற்று அதிகமாக இருக்கும்.

    இங்கு பொதுவாக திரையிடும் திரைப்படங்களுக்கு சராசரி கூட்டம் வந்து விடும் என்பதால் பெரிய படங்களை இவர்கள் திரையிடுவது கிடையாது. அதிகமாக பிற நடிகர்கள் நடித்த படம்தான் அதிகமாக திரையிடப்படும். ஏனென்றால் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பார்ப்பார்கள். எந்த படத்தை வெளியிட்டாலும் அதிகபட்சம் 2 வாரம்தான். மூன்றாவது வாரத்தில் புதிய அல்லது பழைய படங்களை விநியோகஸ்தர்களுக்கே தெரியாமல் கூட திரையிட்டு விடுவார்கள்.

    அதிகமாக எம்ஜிஆரின் பழைய படங்களை திரையிட்டவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.
    "ஆயிரத்தில் ஒருவன்" "நாடோடி மன்னன்' "புதுமைப்பித்தன்" "மன்னாதி மன்னன்" தாயை காத்த தனயன், தாய் சொல்லை தட்டாதே, அன்பே வா "பெரிய இடத்துப் பெண்"
    "பணக்கார குடும்பம்" போன்ற படங்களின் வருகை 6 மாதங்களுக்கு ஒரு முறை இருக்கும். புது படங்களை காட்டிலும் எம்ஜிஆரின் பழைய படங்கள் அதிக நாட்கள் ஓடி வசூலை ஈட்டுவதால் தொடர்ந்து வெளியிட்டார்கள்.

    அவர்கள் வசூல் கணக்கு எல்லாம் ரூ7000 லிருந்து ரூ10000 க்குள்தான் இருக்கும். படப்பெட்டியின் விலை ரூ3000 தான் இருக்கும். பழைய கட்டான பிரிண்ட் தான் அதிகம் வெளியிடுவார்கள். புதிய பிரிண்ட் என்றால் ரூ 5000 வரை கேட்பார்கள் என்பதால் கிடைத்த பிரிண்ட்டை போட்டு காசை அள்ள பார்ப்பார்கள்.

    தொடர்ந்து வரும்..........ksr.........

  11. #1470
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்.சமாதி - டிக்.. டிக்..டிக்

    எம்.ஜி.ஆர் The Man we called GOD - புரட்சித்தலைவர் பாரதரத்னா பொன்மனச்செம்மல் டாக்டர் எம்ஜிஆர் #MGR அவர்கள் சமாதிக்குள்ளிருந்து “டிக்.. டிக்..டிக்” என்று வாட்ச் சத்தம் கேட்கிறாதா என காது கொடுத்து கேட்கும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள்.#MGR #merina .

    நடிகராகவும்,சிறந்த அரசியல் தலைவராகவும் எம்.ஜி.ஆர் தமிழகத்தில் அறியப்பட்டாலும்,அவருடைய வள்ளல் தன்மையும்,எளிய மக்களுடன் பழகும் மனப்பாங்கும்தான் தற்போது வரை அவரை நம் நினைவில் நிறுத்தியுள்ளது.எம்.ஜி.ஆரிம் வள்ளல் தன்மையை பார்த்த அருட்திரு.கிருபானந்த வாரியர்தான்,அவருக்கு ‘பொன் மனச் செம்மல்’ என்ற பட்டத்தை கொடுத்தவர்.அதற்கேற்றார் தன் கையில் இருக்கும் பணம் எல்லாவற்றையும் கொடுத்து,கொடுத்தே சிவந்த கரம் அவருடையது.

    சினிமாவில் பெரிய இடத்திற்கு வருவதற்கு முன்னால் கூட,அவரின் வள்ளல் பண்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.குறிப்பாக அந்த காலத்தில் ஓரளவுக்கு பெரிய பணமாக பார்க்கப்படும் பத்து ரூபாய் நோட்டுத் தாள்களை தனது கை சட்டையின் மடிப்பில் எம்.ஜி.ஆர் வைத்துக் கொள்வாராம்.எளியவர்கள்,ஏழைகள் யாரையாவது அவர் பார்த்துவிட்டால்,உடனடியாக பத்து ரூபாய் தாள்களில் ஒன்றை கொடுத்துவிட்டு வந்துவிடுவாராம்.

    தனது வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர் எவ்வளவோ பேருக்கு உதவிகள் செய்திருக்கிறார்.ஆனால் அது குறித்து அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.அப்படி ஒரு வேளை அவர் உதவி செய்த நபர்களை கணக்கில் கொண்டால்,அது பல்லாயிரத்தை தாண்டும் என்கின்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள்.

    தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த எம்.ஜி.ஆர். 1987-ம் ஆண்டு மரணம் அடைந்தார். தமிழக முதல்வராக 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி அதிகாலையில் மரணமடைந்த எம்.ஜி.ஆர். மறுநாள் (டிச.25) மாலையில் மெரினாவில் அடக்கம் செய்யப் பட்டார். அவரது வழக்கமான அடையாளமான தொப்பி -கறுப்புக்கண்ணாடி, வலதுகையில் அவர் கட்டியிருந்த கைக்கடிகாரத்துடன்தான் புதைக்கப் பட்டார்.

    மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட போது எம்.ஜி.ஆர். கையில் கட்டி இருந்த Rado கை கடிகாரத்தை அகற்றவில்லை. அந்த கடிகாரத்துடனேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு விட்டது. இதன் பின்னர் எம்.ஜி. ஆரின் கடிகாரம் ஓடிக் கொண்டே இருப்பதாக அவரது ரசிகர்களும், அ.தி. மு.க.வினர் நம்பினர். சமாதி யில் காதை வைத்து கேட்டால் டிக் டிக் என கடிகாரம் ஓடும் சத்தம் கேட்பதாகவும் கூறப்பட்டது. எம்.ஜி.ஆர். இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதும் எம்.ஜி.ஆரின் கை கடிகாரம் ஓடுகிறது என்கிற நம்பிக்கை மாறாமலேயே உள்ளது. குறிப்பாக ஏழை எளிய மக்கள், கிராமப்புறங் களில் இருந்து சென்னைக்கு வருபவர்களிடையே இந்த நம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. சமாதியில் காதை வைத்து கேட்டு விட்டு ஆமா... எனக்கு கடிகாரம் ஓடுற சத்தம் கேட்டது என்று ஒருவர் கூறியதும், பெரும் பாலானோரும் அதே கருத்தையே பிரதிபலிக்கும் நிலையையே எம்.ஜி.ஆர். சமாதியில் காண முடிகிறது.

    அந்த செய்தியை எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள் என்பதே உண்மை. எம்.ஜி.ஆர் அவர்களை கடவுளாகவே பார்க்கும் ஏழை எளியோரின் நம்பிக்கை இது, அவர்களது நம்பிக்கைக்கு மதிப்பளிப்போம்..........Dev..........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •