Page 168 of 210 FirstFirst ... 68118158166167168169170178 ... LastLast
Results 1,671 to 1,680 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1671
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #மணியக்காரர் என்ற ஒரு கிராம நிர்வாக அதிகாரி பதவி தமிழகத்தில் பிரிட்டிஷ் காலம் தொடங்கி #திமுக ஆட்சி வரைக்கும் இருந்தது.!

    மணியக்காரர் பதவி தலைமுறை தலைமுறையாக ஒரே குடும்பத்திற்கே வரும் வாரிசுரிமை பதவி.!

    100% உயர் சாதியினர்/ ஆண்ட சாதியினர் என சொல்லப்பட்டவர்கள் மட்டுமே வகித்துவந்த பதவி அது. அதற்கு அரசும் சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்தது!.

    பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களில் யாரும் மணியக்காரர் பதவியை நினைத்துக்கூட பார்க்க முடியாது.!

    அந்த ஒரு சூழலில் அனைத்து சமூகத்தினரும் மணியக்காரராக ஆக வேண்டும். குறிப்பிட்ட சமூகம், குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கே மட்டுமேயான பதவியாக இது இருக்கக்கூடாது என நினைத்தார் முதலமைச்சர் #எம்ஜிஆர்!.

    பரம்பரை மணியக்காரர் முறையை அவசர சட்டம் மூலம் ரத்து செய்துவிட்டு அனைத்து சாதியினரும் கிராம நிர்வாக அலுவலராகலாம் (#VAO) என சட்டம் கொண்டு வந்தார்.!

    பல நூறு ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினரும் VAO ஆனார்கள்.!

    இதெல்லாம் எம்.ஜி.ஆர் போட்ட பிச்சை என யாரும் பேசிக் கேட்டதில்லை. ஒரு முதலமைச்சராக இதெல்லாம் எம்.ஜி.ஆர் செய்திருக்க வேண்டிய கடமை இது. அதைத்தான் செய்தார்!.

    தற்போது தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டின் மூலம் மொத்தம் 12,606 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள்!.

    கீழ் மட்ட சமூக கட்டமைப்பில் எழுந்த முக்கியமான புரட்சிகளில் இதுவும் ஒன்று.!

    இந்த புரட்சி நடக்காவிட்டால் இன்னும் பல கிராமங்களில் குறிப்பிட்ட சில சான்றிதழ்கள் வாங்க ஆண்ட சாதியினர் வீட்டு வாசலில்தான் நாம் காத்திருக்க வேண்டும்.!

    #MGR இன்னொன்றையும் செய்தார். அது தனியாரிடம் இருந்த ரேஷன் கடைகளை ரத்து செய்தது..

    திமுக ஆட்சி முடியும்வரை ரேஷன் கடைகள் தனியாரிடம்தான் இருந்தன. ஊர் முக்கியஸ்தர்களாக இருக்கும் ஆண்டைகள்தான் அந்த தனியார் . அவர்களை அவ்வூரில் எதிர்த்து கேள்வி கேட்க ஆளில்லாததால் ரேஷன் விநியோகத்தில் கொள்ளை நடந்தது!.

    அந்த அவலத்தை மாற்றி அரசு மூலம் 22 ஆயிரம் ரேஷன் கடைகளை திறந்தார். அப்போதே அனைத்து சாதிகளையும் சேர்ந்த 22,000 பேருக்கு ரேஷன் கடையில் அரசு வேலை கிடைத்தது. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து புரட்சி செய்தார்!

    அப்போதுமுதல் #ரேஷன்_கடைகள் அனைவருக்கும் பொதுவானதாக மாறியது.!

    அதனால்தான் அவர் மக்களால்
    #புரட்சித்தலைவர் என அழைக்கப்பட்டார்.!

    - Rahman Sharief...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1672
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் படங்கள் என்றும் ரசிக்கும் படியாக இருப்பதற்கு காரணங்கள்.........

    1.படத்தில் தலைப்பிலே நல்ல ஒரு கருத்து .

    2.படத்தின் கதாநாயகன் அமைந்துள்ள பாத்திரம் எல்லோருக்கும் நல்லவராகவும் , சமுகத்தின் மீது அக்கறை உள்ளவரா கவும் அமைந்துஇருக்கும்

    3.படத்தின் பாடல்களில் தத்துவ பாடல் ஒன்று கண்டிப்பாக இடம் பெற்றிஇருக்கும் .

    4.கதைக்கு ஏற்றார் போல் சண்டை காட்சிகள் இடம் பெற்றிஇருக்கும் .

    5.தலைவரின் மிகைஇல்லா நடிப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்து இருக்கும்

    6.தலைவரின் ஸ்டைல் மற்றும் ஆடை அமைப்புகள் இன்றைய மற்றும் நாளைய தலைமுறையையும் கவர்ந்து இழுக்கும்

    7.தலைவரின் இளமை தோற்றம் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்து இருக்கும்

    8.தலைவரின் சண்டை காட்சிகள் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்து இருக்கும் . படத்திற்கு படம் வித்தியா சாமாக இடம் பெற்றிஇருக்கும் .

    9. பெண்களை மதிக்கும் பாத்திரமாக அமைந்து இருக்கும்

    10. ஒரு வெற்றி படத்திற்கு தேவையான் பிற அம்சங்கள் இடம் பெற்றிஇருக்கும் .

    சிரித்து வாழ வேண்டும்
    பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

    உழைத்து வாழ வேண்டும்
    பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...

  4. #1673
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர் பதிவு. உ...த்தமன் 11
    ------------------------------------------------
    இனி பாலகிருஷ்ணா திரையரங்கில் அய்யனின் ஆட்டத்தை பார்க்கலாம்.
    1966 வரை சிறப்பாக சொல்ல ஒன்றுமில்லை. 1967 ல் வெளிவந்த
    "நெஞ்சிருக்கும் வரை" "திருவருட்செல்வர்" போன்ற தோல்விப் படங்கள் வெளியாகி இழுவை முயற்சியில் தோற்றன.இரண்டும் முறையே 4வாரம் 5 வாரம் நடைபெற்றது.
    நகரில் மையப்பகுதியில் அமைந்த தியேட்டர் ஆனபடியால் ஒரளவு பெண்கள் அதிகம் பார்க்கும் திரையரங்கமாக திகழ்ந்தது எனலாம்.

    பாலகிருஷ்ணா தியேட்டர் பிரபலமானதே தலைவரின் படங்களால்தான். ஆரம்பத்தில் லீசுக்கு நாடககொட்டகையாக இருந்த பாலகிருஷ்ணாவை தியேட்டராக மாற்றி பல படங்கள் திரையிட்டாலும் தியேட்டருக்கு பெயரை கொடுத்தது தலைவரின் "மதுரை வீரன்"தான். 100 நாட்கள் ஓட வேண்டிய படத்தை 84 நாட்களில் நிறுத்தினார்கள்.தூத்துக்குடியை விட மிகச் சிறிய ஊர்களில் எல்லாம் 100 நாட்கள் ஓடிய "மதுரை வீரன்" இங்கு 100 நாட்கள் நிறைவு செய்வதற்குள் எடுத்து விட்டார்கள்.
    அடுத்தாற்போல் அதிக நாட்கள் ஓடியது "ஆயிரத்தில் ஒருவன்". மீண்டும் "அன்பே வா" 55 நாட்கள் நிறைவு செய்தபின் 1968 ல் வெளியான "குடியிருந்த கோயில்" 70 நாட்களை நிறைவு செய்தது.

    "பணமா பாசமா" விநியோகஸ்தர் கொடுத்த நெருக்கடியால் படத்தை 70 நாட்களில் எடுக்க வேண்டியதாயிற்று. அதுவரையில் எந்தப்படமும் 50000 தொடாத நிலையில் ரூ 67000 தாண்டி வசூல் சாதனை செய்தது. வேறு எந்த நடிகரின் படங்களும் ரூ35000 தாண்டாத நிலையில் இந்த சாதனையை "குடியிருந்த கோயில்" செய்தது ஒரு அதிசயம்தான். அதற்கப்புறம் "அடிமைப்பெண்" 100 நாட்களை நிறைவு செய்தது. பின்னர் "உரிமைக்குரல்" 68 நாட்களுடன் வசூலில் அசுர சாதனை செய்தது. ஆனால் இதில் எதையுமே செய்யாத அய்யனின் கைஸ்கள் "சிவத்தமண்ணை" மட்டும் சீரழித்து 101 நாட்கள் ஓட்டி அசிங்கத்தை அரங்கேற்றினார்கள்.

    1967 தீபாவளிக்கு வெளிவந்த "ஊட்டி வரை உறவை" 52 நாட்கள் ஓட்டி முடித்தார்கள். இரவு 6 மணி காட்சி மட்டும் உயர்வகுப்பு டிக்கெட்டில் ஓரளவு கூட்டம் இருந்தது.1968 ல் ரிலீஸ் நாளன்று வெளியாகாமல் நவ 9 ம் தேதி வெளியான "தில்லானா மோகனாம்பாள்" 53 நாட்கள் நடைபெற்றது. ஆனால் பகல் காட்சி மொத்தம் 16 நாட்கள் தான் நடைபெற்றது. மற்ற நாட்களில் தினசரி 2 ஞாயிறு 3 காட்சிகள்தான் நடைபெற்றது. அய்யனின் படங்களுக்கு மாட்னி காட்சிக்கு யாரும் வரமாட்டார்கள் என்பதால் எந்தப்படமும் அதிகபட்சம் 18 தினங்களுக்கு மேல் மாட்னி காட்சி நடைபெற்றதில்லை.

    1969 ல் வெளியான முதல் படமே "அன்பளிப்பு" தான்.
    மல்டி ஸ்டார் படமாக இருந்தும் ஜன 1 ல் வெளியான இந்தப்படம் 13 நாட்களே நடைபெற்றது. படம் அத்தனை போர். மிகை நடிப்பில் எல்லோரையும் விரட்டி விட்டார் அய்யன். ஜெய்சங்கருக்காக எல்லா படங்களும் 10 நாட்களாவது ஓடும். அப்படியானால் அய்யனுக்கு? அடுத்து வெளியான "தெய்வமகன்" உலக மகா மிகை நடிப்புடா? அது என்று சொல்லுமளவுக்கு மக்களை வதைத்த படம். செல்ல மகனுக்கு அலியின் பழக்கம் எப்படி வந்தது என்பதை சொல்லவேயில்லை.

    இருப்பினும் கைஸ்கள் முயற்சியில் 35 நாட்கள் ஓட்டி 50 நாட்கள் கனவை வடக்கயிறு பயன்படுத்தியும் முடியாமல்போனதால் கைஸ்களின் வடக்கயிறு வெறி வானளாவ வளர்ந்து அடுத்த படமான "சிவந்தமண்ணி"ல் நிலை பெற்றது. இதை விட்டால் நமக்கு தூக்கு கயிறுதான் என்று முடிவு செய்து "சிவந்தமண்ணை" இழுத்த கதை நாம் அறிவோம். 18 நாளில் தூக்க வேண்டிய மாட்னியை 73 நாட்கள் வரை இழுத்தார்கள். மேலும் எல்லா பண்டிகை தினங்களிலும் 4 காட்சிகள் போட்டு "அடிமைப்பெண்ணை" காட்டிலும் 50 காட்சிகள் அதிகம் ஓட்டியும் 99 நாட்கள் வரை "அடிமைப்பெண்ணை" முறியடிக்க முடியவில்லை.

    1970 பொங்கலுக்கு ஜோஸப்பில் வெளியான "மாட்டுக்கார வேலன்" கூட வெளிவந்த "எங்க மாமாவை" திரையிடாமல் சிவந்தமண்ணை கைஸ்கள் ஓட்டினர். சிவந்தமண்ணை தூக்கியபின் "எங்க மாமா" திரைக்கு வந்து குறுகிய காலத்தில் தியேட்டரை காலி செய்தார். "மாட்டுக்கார வேலனி"ன் புயலில் சிக்கிக் கொண்ட ஏனைய திரையரங்குகள் வெறிச்சோடி கிடந்தன. அதிலிருந்தே "சிவந்த மண்ணி"ன் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனாலும் அந்தப் புயலில் ஒரு சோக விஷயம் நடந்தது மறக்க முடியாதது.

    பாலகிருஷ்ணா தியேட்டர் வாசலில் காண்டா பொருத்தி தேங்காய், இஞ்சி முரப்பா விற்கும் ஒருவர் என் நினைவு தெரிந்த நாள் முதல் அந்த இடத்தை மாற்றாதவர் "சிவந்தமண்" 6 வது வாரத்திலிருந்து தியேட்டர் வாசலுக்கே வரவில்லை. அவரை எங்கு தேடியும் காணாமல் ஒரு நாள் சிவன் கோயில் வாசலில் பார்க்க நேர்ந்தது. அப்போது அவரை பார்த்து என்ன ஆளையே காணோம் என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் அய்யா கொஞ்சமாவது வியாபாரம் இருந்தா நான் ஏன் இங்கே வரப்போறேன்.

    தியேட்டருக்கு ஆள் வராமல் வெறுமனே டிக்கெட் கிழித்தால் என் வியாபாரம் எப்படி நடக்கும். 10, 15 பேரை வைத்து தியேட்டர் நடத்தினால் எங்க பொழப்பு என்னாகிறது. அடுத்த படம் போட்டவுடன் அந்த இடத்துக்கே வந்து விடுவேன் என்றதும் பாவம் அய்யனின் கைஸ்கள் ஏழைகள் வயிற்றிலும் அடிக்கிறார்களே என்ற வருத்தம்தான் ஏற்பட்டது.

    1970 ல் "எங்க மாமா" "வியட்நாம் வீடு" "எதிரொலி" "ராமன் எத்தனை ராமனடி" "பாதுகாப்பு" போன்ற படங்கள் வெளியாகி "வியட்நாம்வீட்டை" 50 நாட்கள் ஓட்டி போணி அடித்தனர். இதில் "பாதுகாப்பு" மிகக் குறைந்த நாட்கள் ஓடி அந்த வருட சாதனையை தன்னகத்தே வைத்துக் கொண்டது.
    1971ல் "தங்கைக்காக" வெளியாகி 3 வாரங்கள் நடைபெற்றது. 1971ல் "மூன்று தெய்வங்கள்" மூன்று வாரங்களில் இறைவனடி சேர்ந்தது.

    1972ல் "ராஜா" "ஞானஒளி" "பட்டிக்காடா பட்டணமா" "தர்மம் எங்கே" போன்ற படங்கள் வெளியாகி "ராஜா" 21 நாட்களும் "ஞானஒளி" 18 நாட்களும் ஓடியது. "பட்டிக்காடா பட்டணமா" 50 நாட்கள் படத்துக்கு தேர்வு ஆனது. "தர்மம் எங்கே" 15 நாட்கள் ஓட்டி அந்த ஆண்டு சாதனை படமாக அமைந்தது. 1973 ல் வெளியான "பொன்னூஞ்சல்"(13) மீண்டும் ஒரு சாதனை செய்தது.

    74 ல் "சிவகாமியின் செல்வன்" "தாய்" ஆகிய படங்கள் வெளியாகி தங்கள் சாதனையை மீண்டும் புதுப்பித்து கொண்டன. 75ல் "அவன்தான் மனிதனை" 50 நாட்கள் இலக்கு வைத்து தேரோட்டினர். அதன்பின் "வைர நெஞ்சமு"ம் "பாட்டும் பரதமு"ம் மீண்டும் அந்த ஆண்டு சாதனையை தக்க வைத்துக் கொண்டது. அதன்பின் நிர்வாகத்தினர் அய்யனின் மார்க்கெட்டை தெளிவாக புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக
    அய்யன் படம் திரையிடுவதிலிருந்து விலகி விட்டனர்.

    மீண்டும் அடுத்த பதிவில்.........ksr.........

  5. #1674
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜியார் Vs #சென்சார்_ஃபோர்டு

    #எம்ஜிஆர் படங்களில் பாடல்களும் சரி, பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் சரி. ரசிகர்களுக்கு விருந்துதான்.

    ஆனால், ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். படங்களின் பாடல் வரிகள் சென்சாரின் பிடியில் இருந்து தப்பி வருவதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். சென்சார் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் காரணமாக பல பாடல்களில் வரிகள் மாற்றப்பட்டன.

    ‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தில் ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…’ பாடலில் கடைசி யில் ‘மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் காட்சி படமாக்கப்பட்டது.

    #அண்ணா பெயர் இடம் பெறுவதற்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால், அந்த வரி ‘மேடையில் முழங்கு திரு.வி.க.போல்’ என்று மாற்றப்பட்டு ஒலி மட்டும் படத்தில் சேர்க்கப்பட்டது.

    ஆனால், எம்.ஜி.ஆரின் வாயசைப்பு ‘அறிஞர் அண்ணா போல்’ என்றுதான் படத்தில் இருக்கும். இசைத்தட்டிலும் அப்படியேதான் இருக்கும்.

    ‘அண்ணா போல்’ என்ற வார்த்தை மாறி ஒலித்தா லும் படம் வெளியானபோது திரையரங்கு களில் கைதட்டலும் விசிலும் காதைப் பிளந்தது. ‘திரு.வி.க. போல்’ என்ற வார்த்தைகள் ‘திமுக போல்’ என்று ஒலித்ததுதான் காரணம்.

    ‘அன்பே வா’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் ‘புதிய வானம் புதிய பூமி…’ பாடலின் ஒரு வரியில் முதலில் ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்று தான் வாலி எழுதியிருந்தார். படத் தயாரிப்பாளரான ஏவி.எம். செட்டியார் அதை சென்சார் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் வார்த் தையை மாற்றும்படியும் வாலியிடம் கூறினார்.

    வாலி அதைக் கேட்கவில்லை. கடைசியில் செட்டியார் சொன்னது போலவே நடந்தது. பின்னர், ‘உதய சூரியனின்‘ என்பதற்கு பதிலாக ‘புதிய சூரியனின்’ என்று ஓரளவு ஒலி ஒற்றுமை யோடு மாற்றி எழுதினார் வாலி. இன் னும்கூட பாடலைக் கேட்பவர்கள் பலர் அதை ‘உதய சூரியனின் பார்வையிலே’ என்றுதான் நினைப்பார்கள்.

    இந்தப் பாடலைப் பற்றி சொல்லும் போது ஒரு சம்பவம். பாடல் காட்சி சிம்லாவில் படமாக்கப்பட்டது. பத்திரிகையாளர் சாவி அப்போது சிம்லாவில் இருந்தார். ‘எந்த நாடு என்ற கேள்வி இல்லை…’ என்று வரும் வரிகளின்போது எம்.ஜி.ஆர். அருகே நிற்பவர்களோடு சாவியும் சில விநாடிகள் நின்றுவிட்டுச் செல்வார்.

    படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாட்களைக் கடந்து ஓடியது. பின்னர், எம்.ஜி.ஆரை சந்தித்த சாவி, ‘‘நான் நடித்ததால்தான் ‘அன்பே வா’ படம் 100 நாள் ஓடியது’’ என்று சொல்லி எம்.ஜி.ஆரை வெடிச் சிரிப்பு சிரிக்கச் செய்திருக்கிறார். அநேகமாக, சாவி நடித்த ஒரே படம் இதுவாகத்தான் இருக்கும்.

    ‘தெய்வத்தாய்’ படத்தில் ‘வண்ணக்கிளி சொன்ன மொழி…’ பாடலில் ஒரு இடத்தில் ‘அத்திப்பழ கன்னத்திலே முத்தமிடவா?’ என்று இருந்தது. சென்சார் கெடுபிடி காரணமாக ‘முத்தமிடவா?’ என்ற வார்த்தை ‘கிள்ளிவிடவா?’ என்று மாற்றப்பட்டது.

    ‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக் கப்படும்போதே சென்சாருக்கு ஏராளமான புகார்கள். அப்போதிருந்த தணிக்கைக் குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண்டிப்பானவர். படத்தை அவருக்கு போட் டுக் காட்டி அவரும் ‘நோ கட்ஸ்’ என்று கூறிவிட்டார்.

    அதன் பிறகு அவர் கேட்ட கேள்வி, ‘‘ஆமாம். எங்கே அந்த ‘காளை மாட்டை பால் கறக்க பாக்கறாங்க’ பாடல் காட்சியைக் காணோம்?’’

    படத்தில் அப்படிப்பட்ட வரிகளோடு கண்ணதாசன் ஒரு பாடலை எழுதியிருந்தார். சென்சாரில் அது எப்படியும் தப்பாது என்று அந்தப் பாடலை படத்தில் பயன்படுத்தவே இல்லை.

    ‘காங்கிரஸைத் தாக்கி படத்தில் பாடல் காட்சி ஒன்று இருக்கிறது’ என்று முன்பே யாரோ புகார் செய்திருக்கின்றனர். அதனால்தான் சாஸ்திரி அதைக் கேட்டிருக்கிறார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் காளை மாடு.

    சென்சார் கெடுபிடிகளில் இருந்து தப்பிக்க படங்களில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். பயன்படுத்துவார். நெற்றியில் திமுகவின் சின்னமான உதய சூரியன் திலகம் வைத்துக் கொள்வார்.

    ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில் காவிரிப் பூம்பட்டினத்தின் இளவரசராக வரும் எம்.ஜி.ஆரின் பெயர் ‘உதய சூரியன்’. ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். காளை மாட்டை அடக்குவார். 1957-ம் ஆண்டு தேர்தலில் காளை மாட்டை எம்.ஜி.ஆர். அடக்குவது போன்ற சுவரொட்டிகள் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

    சென்சார் கெடுபிடி ஒருபுறம் இருக்கட்டும், எம்.ஜி.ஆரே தன் படங்களின் பாடல் வரிகளில் அக்கறை செலுத்துவார். தவறான அர்த்தம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

    ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்தில், ‘கண்ணை நம்பாதே…’ என்ற கருத்தாழம் மிக்க சூப்பர் ஹிட் பாடல் உண்டு. பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி. ஒரு இடத்தில் ‘பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டுத் தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி எழுதியிருந்தார்.

    அவரை எம்.ஜி.ஆர். அழைத்து, ‘‘தன் வழியே என்று சொல்லியிருக்கிறீர்கள். அது ஏன் நல்ல வழியாக இருக்கக் கூடாது? நல்ல வழியாக இருந்தால் ஒருவர் ஏன் தன் வழியே போகக் கூடாது?’’ என்று கேட்டார்.

    மருதகாசி அசந்துபோய் விட்டார். பின்னர், எம்.ஜி.ஆரின் விருப்பத்துக் கேற்ப, ‘தன் வழியே போகிறவர் போகட்டுமே’ என்பதற்கு பதிலாக ‘கண்மூடிப் போகிறவர் போகட்டுமே’ என்று மருதகாசி மாற்றி எழுதினார்.

    அந்தப் பாடலில்,

    ‘நன்றி மறவாத நல்ல மனம் போதும்
    என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்’

    என்ற வரிகளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடுவார். எம்.ஜி.ஆரின் மூலதனத்துக்கு என்றுமே குறைவில்லை.

    நன்றி:ஶ்ரீதர் சுவாமிநாதன்/தமிழ் இந்து.........

  6. #1675
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் தங்கதலைவரின் வரலாற்று காவியம் "அடிமைப்பெண்", படம் காட்சிகள் ஜெய்ப்பூர் பகுதியில் எடுக்கப்பட்டு கொண்டு இருந்த நேரம்..

    தனது சொந்த படம் என்பதால் படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கண்ணின் இமை போல காத்து தொடர்கிறார் தலைவர் படம் எடுப்பதை.

    படத்தின் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த சோ அவர்கள் படப்பிடிப்பின் நடுவில் கடும் வயிற்று வலியால் துடிக்க..

    பதறி போகிறார் பொன்மனம்.... துக்ளக் இதழை இந்த படம் முடிந்த பின் துவக்குகிறார் சோ அவர்கள்...ஒரு முக்கிய வழக்கிலும் அவர் ஆஜர் ஆக வேண்டிய நிலையில் சென்னைக்கு மிகுந்த சிரமம் எடுத்து அவரை அனுப்பி வைக்கிறார் நம் இதயதெய்வம்.

    மிகுந்த பொருள் செலவில் உருவாகி கொண்டு இருந்த படத்தின் படப்பிடிப்பு தடை படுகிறது..

    சோ அவர்கள் சென்னை வந்து உடல் தேறி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயார் ஆகி கிளம்பி கொண்டு இருக்கும் நேரம்.

    தலைவரின் குடும்ப மருத்துவர் சோ அவர்களின் இல்ல கதவை தட்டி நான் எம்ஜிஆர் அவர்களின் மருத்துவர்....உங்கள் உடல் நிலை எப்படி உள்ளது என்று என்னை பரிசோதிக்க சொல்லி இருக்கிறார்.

    எனக்கு உங்கள் முழு ஒத்துழைப்பு அவசியம் என்ற உடன் கண்ணீர் மல்க ஒப்பு கொள்கிறார் சோ ராமசாமி அவர்கள்..

    உடல் நலம் தகுந்த முறையில் இருக்க சென்னையில் இருந்து மீண்டும் கிளம்பி அங்கே அடிமைப்பெண் குழுவினர் கூட இணைத்து கொள்கிறார் தன்னை சோ அவர்கள்..

    தலைவர் எதுவும் தெரியாதது போல வாங்க எப்படி நலமா என்று கேட்க திகைத்து போகிறார் சோ அவர்கள்...

    அடிமைப்பெண் படம் எடுக்க பட்டு கொண்டு இருந்த நேரத்தில் தலைவரின் 100 வது படம் ஒளிவிளக்கு இங்கே தமிழகத்தில் வெளியிட பட்டது.

    அதற்கு என்று ஒரு ஆர்ப்பாட்டம் விழா எதுவும் கிடையாது என்பது முக்கிய செய்தி பதிவில்..

    விஷயம் அறிந்த சோ அவர்கள் உங்கள் 100 வது படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று ஒரு வெள்ளை தாளில் எழுதி அதில் அடிமைப்பெண் பட குழுவினர் அனைவர் கையொப்பம் வாங்கி தலைவர் இடம் கொடுக்க.

    காகிதத்தில் இரு புறமும் இருந்தவற்றை தனி தனியே நகல் எடுத்து தனது முக்கிய சேமிப்பாக வைத்து கொள்கிறார்.

    காலம் ஒருபோதும் இனி ஒரு எம்ஜிஆர் போன்ற ஒருவரை நமக்கு காட்டாது.

    வாழ்க தலைவர் புகழ்.

    உங்களில் ஒருவன்.
    உங்களின் எண்ணங்களை சொல்லும்..
    நெல்லை மணி..நன்றி.

    தொடரும்....

    சில அபூர்வ படங்கள் உங்கள் பார்வைக்கு...

    அடிமைப்பெண் படத்தில் சோ அவர்களை கட்டி வைத்து தீ வைக்க போகும் போது பேசும் வசனம் ..தலைவன் பெயரை சொன்ன உடன் என்ன பாசம் என்ன பக்தி...அவன் தலைவன் என்ற காட்சி நினைவுக்கு வந்தால் குழுவினர் பொறுப்பு அல்ல...நன்றி.உண்மை.............nmi...

  7. #1676
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    : அமரர் புரட்சிதலைவர் நினைவிடத்த்தில் எப்போதும் போல மக்கள் !
    மற்ற தலைவர்களுக்கு எல்லாம் இல்லாத சிறப்பு இவருக்கு என்ன?
    இவரது நினைவு நாளில் மட்டும் எளியமக்களின் கூட்டம் நினைவஞ்சலி
    செலுத்த ஓடிவருவது ஏன்?
    அவரகள்அத்துனை பேர்களின் குறைகளை தீர்த்துவிட்டாரா?
    இல்லை!
    ஆனால் அவரை நினத்தால்,வணங்கினால் தங்களின் குறைகள் தீரும் என்ற நம்பிக்கை !
    அந்த நம்பிக்கையே மண்ணுலகை விட்டு மறைந்தாலும் எளிய மக்களின் மனதைவிட்டு மறையாத மாமனிதரின் வெற்றி!
    வாழ்க எம்.ஜி.ஆர் புகழ்-
    சிரித்து வாழ வேண்டும்
    பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

    உழைத்து வாழ வேண்டும்
    பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே

    தலைவரின் ரசிகர்களுக்கு
    பக்தர்களுக்கு இந்த
    இனிய காலை வணக்கம்
    வாழ்த்துகள் வாழ்க
    வளமுடன் நலமுடன்
    என்று மே தலைவரின் ஆசியோடு ............gdr...

  8. #1677
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர்.,!!!
    --------------------------
    இன்றையப் பதிவு என் அலசல் மட்டுமே!
    ஏற்பவர்கள் ஏற்கலாம் மனமில்லாதவர் புறந் தள்ளலாம்!
    சமீப காலமாக சக்தி rdb என்னும் இளைஞர் ஒருவர் ஆர்வமாகவும்,,ஆழமாகவும் எம்.ஜி.ஆரைப் பற்றி தொடர்ந்து முக நூலில் பதித்து வருகிறார்.
    கண்ணதாசனின் எம்.ஜி.ஆர்ப் பாடல்களை தொடராக மிக அருமையான நடையில் தொடர்ந்து பதித்து வருகிறார்!
    அவரின் ஒரு ஆதங்கத்தைத் தொடர்ந்தே நமது இன்றையப் பதிவு அமைகிறது.
    எம்.ஜி.ஆரை இன்றைய அ.தி.மு.க மேலிடம் சரியான முறையில் ஃபோகஸ் செய்யவில்லையே என்பது தான் அவரது ஆதங்கம்!
    இதை அவர் மட்டுமே,,அதுவும் இப்போது மட்டுமே வெளிப்படுத்துகிறார் என்பது இல்லை.
    ஜெ காலத்திலிருந்தே இத்தகைய விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது!
    நாம் என்னக் கருதுகிறோம் என்றால்--
    இப்படி யாராவது ஒருவர் கருத்து தெரிவித்தாலே-உடனே--
    எங்கள் அம்மாவைப் பற்றி உனக்கென்ன தெரியும் ?
    அன்னிக்கு எம்.ஜி.ஆர். இன்னிக்கு ஜெ! இது நியாயம் தானே??
    நீ எங்கள் அ.தி.மு.கவுக்கு எதிரி! நீ ஓட்டுப் போடாவிட்டால் நாங்கத் தோத்துடுவோமா???
    இப்படியெல்லாம் அரை வேக்காட்டுத் தனமாக சிலர் பொங்கிக் கொண்டு வருவதில் சற்றும் நியாயம் இல்லை என்பதே நம் வாதம்!!
    ஜெ காலத்தில் கொதித்த எம்.ஜி.ஆர் விசுவாசிகள் கூட அதற்காக தங்கள் வாக்குகளைத் தேர்தல் நேரத்தில் மாற்றிப் போட்டதில்லை என்பதையும் இங்கே ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்!
    எம்.ஜி.ஆர்., விசுவாசிகளின் ஆதங்கத்தின் உட் கருத்து என்ன என்பதை நாம் உணர வேண்டும்--
    ஜெ வை முன்னிலைப் படுத்தக் கூடாது என்பதல்ல அவர்களின் வாதம்--
    ஜெ வுக்கு இணையாக எங்கள் எம்.ஜி.ஆரை.யும் வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள் என்பது தானே அவர்களின் ஆதங்கம்?
    நீங்கள் சொல்வது உண்மை தான். உங்களின் ஆற்றாமையைப் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கள் கட்சியில் உள்ள நிர்வாகிகளிடம் உங்களது நியாயமான கோரிக்கையை விளக்குகிறோம்!--இப்படி ஜெ ஆதரவாளர்கள் சொல்லி விட்டால் அங்கேப் பிரச்சனையே இல்லையே? அது தானே நியாயமும் கூட??
    ஒரு வினோதம் என்னவென்றால்--
    இன்றைய இளந் தலைமுறையினர்களை எடுத்துக் கொண்டால்---அவர்களுக்கு எம்.ஜி.ஆர். காலத்தைப் பற்றியும்,,அவருடைய மாண்பைப் பற்றியும் தெரியாத நிலைமையிலும்,,,எம்.ஜி.ஆரைத் தெரிந்து கொள்ள அதிகம் விரும்புகிறார்கள் என்பதே உண்மை!
    அப்படியானால் எம்.ஜி.ஆரைப் புறக்கணித்து அம்மா புராணம் மட்டுமேப் பெரிய அளவில் யார் பாடுகிறார்கள் என்றால்---
    எம்.ஜி.ஆர்., காலத்தில் அரசியலில் நுழைந்து,,அம்மா காலத்தில் தாங்கள் வசதிகளைப் பெறுவதற்காக அன்றைய ஜெ மனசைக் குளிர வைக்க வேண்டிப் பொய் வேடம் போட்ட அறுபது வயதில் இருக்கும் புண்ணியவான்கள் தான் என்று நாம் சொன்னால் அதை மறுக்க முடியுமா??
    ப.வளர்மதி போன்றோர்களின் நடவடிக்கைகள் அன்று எப்படியிருந்தன என்பதைத் தகுந்த நிகழ்வுகளோடு நான் எனது பதிவில் நிச்சயம் அலசுவேன்.
    இன்றைய இளந் தலை முறையினர் எம்.ஜி.ஆரை இவ்வளவு ஆழமாக ரசிக்கிறார்கள் என்பதே பெரிய விஷயம்!
    அவர்கள் வயதுக்கு ஒரு ரஜினி--கமல்--விஜய் அஜீத் என்று அவர்கள் சிந்தித்தால் நாம் தவறு காண முடியுமா??
    இந்த மட்டில் இன்றைய அ.தி.மு.கவின் சிறப்புக்காகத் தானே அவர்கள் சிந்திக்கிறார்கள்?
    கட்சியை விமர்சிக்கவே கூடாது என்பது எந்த விதத்திலும் ஏற்புடையதில்லையே?
    இதில் இன்னொரு அலட்டல் வேறு??
    நாங்கக் கட்சியிலே எத்தனை பேரைப் பார்த்திருப்போம்? எப்படியெல்லாம் கட்சிப் பணி ஆற்றியிருப்போம் என்று இரண்டொருவர்கள் தேவையில்லாமல் தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொள்ளும் செல்ஃப்--பில்டப்??
    அன்று எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய போது வெட்டுப் பட்டுக் குத்துப்பட்டு களப் பணி ஆற்றியவர்களை விடவா??
    அப்படியென்ன பதவியோ,,அடிக்கும் ஊழல் பணத்தில் பங்கோ கேட்கிறார்களா எம்.ஜி.ஆர் ரசிகர்கள்??
    எங்கள் தலைவனின் பெயரையும் புகைப் படத்தையும் உங்கள் மேடைகளில் உயர்த்திக் காட்டுங்கள் என்பது தானே அவர்களது அல்ப ஆசை??
    ஒன்றை நன்றாகக் கவனிக்க வேண்டும்!
    அன்று ஜெ வை விமர்சித்த எம்.ஜி.ஆர். அபிமானிகள் தேர்தல் என்று வந்து விட்டால் எவ்வளவு மும்முரமாக களப் பணி ஆற்றுவார்கள்--ஆற்றியிருக்கிறார்கள் என்பது சைதையார்,,ஜே.ஸி.டி,,கே.பி.முனுசாமி போன்ற கட்சி முன்னோடிகள் நன்றாக அறிவார்கள்!
    ஜெ வின் ஆளுமை கலந்த பங்களிப்பை நீங்கள் சொல்லி மகிழுங்கள் அது நியாயமும் கூட!
    எம்.ஜி.ஆரையும் அதற்கேற்ப உயர்த்துங்கள் என்ற குரலுக்கு ஆதரவு தரா விட்டாலும்,,அதை மலிவாக சித்தரிக்க முயலாதீர்கள்!!!
    இனி உங்கள் அபிப்ராயங்கள்---...vtr...

  9. #1678
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம் இதயதெய்வம் முதல்வர் ஆக இருந்த சமயத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

    அங்கே அப்போது தமிழகத்தில் மிகவும் பிரபலம் ஆன தலைவருக்கு முன்பே அறிமுகம் ஆன ஒரு இன்னிசை குழுவினர் கச்சேரி நடந்து கொண்டு இருக்கிறது.

    மாலை 6.30..மணி அளவில் அங்கே வந்த தலைவர் குழுவினர் இசை நிகழ்ச்சியை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்து கொண்டு இருக்கிறார்.

    இரவு 8.30 மணி அளவில் முதல்வர் கண் அசைவில் ஒரு குறிப்பு நோட்டு வர அதில் ஒரு பேப்பரை எடுத்து ஏதோ எழுதி முடித்து....

    அந்த பாடல் முடிந்தவுடன் மேடை ஏறி இசை நிகழ்ச்சி நடத்தி கொண்டு இருந்த அந்த பிரபலம் அவரை கட்டி பிடித்து அவரின் கோட் பாக்கெட்டில் தான் எழுதிய பேப்பர் குறிப்பை மடக்கி உள்ளே வைத்து கும்பிட்டு புறப்படுகிறார்.

    இன்னிசை நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற அனைவரும் என்ன முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் உங்களுக்கு குறிப்பு தந்தார் என்று அவரை குடைந்து கேள்விகள் எழுப்ப.

    நானே இன்னும் படிக்கவில்லை என்று பதில் அளிக்க வீட்டுக்கு வந்து அதை படிக்கும் போது அதில்.

    தம்பி என்னை மன்னித்து கொள்ளுங்கள்..உங்கள் இசை மழையில் இருந்து பிரிந்து செல்லும் நேரம் வந்து விட்டது...

    எனது இளமை கால நண்பர் கே.ஏ. தங்கவேலு நடிகர் அவர்கள் மகள் திருமண நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டி இருப்பதால் விடை பெறுகிறேன் உங்கள் இடம் இருந்து.

    உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது என்னை வந்து எப்பவும் சந்திக்கலாம் என்று எழுதி இருந்த குறிப்பை படித்து பெரும் மகிழ்ச்சி கொள்கிறார் அந்த நபர்...

    4 முறைக்கு மேலாக அவரின் இன்னிசை நிகழ்வை முழுவதும் இருந்த ரசித்த தலைவர் அவரை தன் கட்சியில் சேர சொல்லி அழைத்தும் அந்த வாய்ப்பை தவற விட்ட அவர்..

    தலைவர் அமெரிக்க சிகிச்சை முடிந்து தலைவர் வீட்டுக்கு சென்று தன் 8 வயது மகன்...மனைவி உடன் பார்க்க சென்ற போதும் தலைவர் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று என்னை நீங்கள் சரியாக பயன் படுத்தி கொள்ள வில்லை...

    பரவாயில்லை...உங்கள் எதிர்காலம் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் என்று சொல்லி வழக்கம் போல தலைவர் பாணியில் வழி அனுப்பி வைக்கிறார்.

    இசை தம்பதியர் இருவரும் அழ ஆரம்பிக்க எட்டு வயது மகன் ஏன்பா அழுகுறீர்கள் என்று அவனும் கண்ணீர் விட துவங்க....

    என்ன ஒரு பெருந்தன்மை..நம் இதய தெய்வத்துக்கு என்று எண்ணிய படி கலங்கிய கண்கள் உடன் வீடு நோக்கி திரும்ப தன் காரை நோக்கி நடந்த அந்த.

    அவர் பிரபல பாடகர் ஏ.வி ரமணன்...மற்றும் அவர் மனைவி உமா ரமணன் மற்றும் அவர் மகன் விக்னேஷ் ரமணன் ஆவர்.

    எல்லோர் இடத்திலும் ஒரே மாதிரி பழக நம் தங்கதலைவர் அவர்களால் மட்டுமே முடியும் என்பதற்க்கு இது போல சான்றுகள் என்றும் தொடரும்.

    உங்களில் ஒருவன்.
    நன்றி..பதிவின் படத்தில் தலைவர் அருகில் அவர்கள் படம் உள்ளது...நன்றி...........nmi

  10. #1679
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்.ஜி.ஆர் இரசிகர்களே, தொண்டர்களே, விசுவாசிகளே, பக்தர்களே...

    ஊழல் செய்யாத முதல்வர்; சிறைக்கு செல்லாத முதல்வர்; தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்கு கொடுத்த ஒரே முதல்வர்; தொடர்ந்து மூன்று முறை நாடாண்ட ஒரே முதல்வர்; பாரத ரத்னா விருது வாங்கிய ஒரே திராவிடத் தலைவர்; அ.தி.மு.க.வின் நிறுவனர்; இரட்டை இலை நாயகர்...
    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைக் காணவில்லை... கடுமையாக கண்டிக்கின்றோம்...

    பாரத ரத்னா விருது வாங்கியவரும் கழக நிறுவனருமான எம்.ஜி.ஆரை இவ்வளவு சிறிதாகப் போட இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது...?

    மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் இவர்களுக்கா உங்கள் ஓட்டு...?...

  11. #1680
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    போற்றத் தகுந்த ஜானகி அம்மாள்!

    திருமதி.வி.என்.ஜானகி சிறந்த கலைஞானம் உடையவர். அந்தக் காலத்தில் முக்கியக் கதாநாயகியாகப் பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். திரு.எம்.ஜி.ஆர். அவர்களை மணந்ததும் நடிப்புத் துறையிலிருந்து விலகிக் கொண்டார்.

    இது கடமைப் பண்புக்காக அவர் செய்த தியாகம் என்றால் அது மிகவும் பொருந்தும். கலைத்துறை வாழ்வில் ஈடுபட்டுள்ள நடிகையர்கள், மணமானதும் கலைத் துறையைக் கைவிடுவது என்பது சற்றுக் கடினமான காரியம் தான்.

    ஆனால் வி.என்.ஜானகி தனது கணவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயங்காதவர். மனைவி என்ற சொல்லுக்கு இலக்கணமாக இருந்தவர். இவர்களின் நன்னெறிக் குடும்பத்தை நேரில் கண்டு அறிந்து பழகும் வாய்ப்புப் பெற்றவனாதலால், நான் அறிந்த உண்மையைத்தான் கூறினேன்.

    பொதுவாக கலைஞர்களுக்கு வாழ்க்கைப்படும் பெண்கள் சுயநலம் என்பதை நினைக்க முடியாது. அதிலும் எம்.ஜி.ஆர். அவர்கள் கலைஞர் மட்டுமல்ல, கலையுலகின் மன்னர்.

    எந்நேரமும் சுறுசுறுப்பாக பணியாற்றி வரும் தொழிலாளர். அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரையிலும் சில தினங்களில் படப்பிடிப்பு வேலையில் ஈடுபட்டிருப்பார்.

    நள்ளிரவில்தான் இல்லம் வந்து சேர்வார். ஆனால் அப்போதும் அவர் வருகைக்காக விழித்திருந்து வரவேற்பார் ஜானகி அவர்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் எம்.ஜி.ஆர் அவர்கள் சேர்ந்தாற்போல், இரவு பகல் எந்நேரமும் வீட்டுக்கு வர முடியாதவாறு படப்பிடிப்பில் இருப்பதுண்டு!

    வெளியூர் காட்சிகளுக்குப் போவதுண்டு. இக்காலத்தில் எல்லாம் தனிமையும் தானுமாய் இருக்கப் பழக்கப்பட்டுவிட்டார் ஜானகி அவர்கள்.

    இவ்வாறு லட்சியக் கணவன் மனைவி என்று கூறத்தக்க வகையில் இன்று உயர்ந்த கலைஞர்களின் குடும்ப வாழ்வுக்கு ஓர் இலக்கணமாக இருந்து வந்த இவரை எத்தனை முறை போற்றினாலும் தகும்.

    -‘மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்’ என்ற தலைப்பில், எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியிருக்கிற வித்வான் வே.லட்சுமணன் எழுதிய நூலிலிருந்து....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •