Page 189 of 210 FirstFirst ... 89139179187188189190191199 ... LastLast
Results 1,881 to 1,890 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1881
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    உலகில் எந்த ஒரு நடிகருக்கோ தலைவருக்கோ இல்லாத வரலாற்று சிறப்பு மிக்க சாதனை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு. திமுக ஆட்சிக்கு எதிராக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மதுரை வந்த போது அவரை சந்தித்து மனு கொடுக்க புரட்சித் தலைவர் திட்டமிட்டார். ஆனால் வழியெங்கும் மக்களின் எழுச்சி மிக்க வரவேற்பால் ரயில் 10 மணி நேரம் தாமதமாக மதுரைக்கு சென்றது. இதனால் இந்திரா காந்தியை புரட்சித் தலைவர் சந்திக்க முடியவில்லை.என்றாலும் மக்களின் வரவேற்பால் ரயில் 10 மணி நேரம் தாமதம் ஆனது. இது உலக வரலாற்றில் எந்த தலைவருக்கும் கிடைக்காத பெருமை.இன்று இந்திரா காந்தியின் பிறந்த நாள். இந்த நாளில் இதோ அந்த வரலாற்று சம்பவம்.
    --------------------

    திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். 1973-ம் ஆண்டில் அப்போது மதுரை வந்த பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்து மாநில அரசு மீது புகார் கொடுக்க முடிவு செய்தார்.

    அதற்காக, சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மதுரைக்கு கிளம்பினார். இரவு நேரம் என்றாலும் வழியெங்கும் மக்கள் காத்திருந்தனர். திருச்சியில் இருந்து ஆங்காங்கே மக்கள் வெள்ளம் ரயிலை வழியில் நிறுத்தியது. எம்.ஜி.ஆரும் தான் இருந்த ரயில் பெட்டியின் கதவைத் திறந்து மக்களின் உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் ரயிலுடன் மக்கள் ஓட்டமும் நடையுமாக பக்கவாட்டிலும் ரயிலுக்கு முன்னாலும் செல்ல ஆரம்பித்து விட்டனர். மக்களுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்று இன்ஜின் டிரைவரும் ரயிலை மெதுவாக இயக்க ஆரம்பித்தார். ரயில் மரவட்டையாக ஊர்ந்து சென்றது.
    மதுரை வந்த இந்திரா காந்தியோ ஏற்கெனவே, திட்டமிட்டபடி எம்.ஜி.ஆரை சந்தித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட வேண்டும். ரயில் ஊர்ந்து சென்றால் குறிப்பிட்ட நேரத்தில் இந்திரா காந்தியை சந்திக்க முடியாது என்பதால் எம்.ஜி.ஆர். ஒரு முடிவுக்கு வந்தார். கொடைரோடு ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து காரில் மதுரை சென்று இந்திரா காந்தியை சரியான நேரத்தில் சந்திக்க திட்டமிட்டார்.

    கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி காரில் செல்ல ஏற்பாடுகள் நடக்கும்போது, விஷயம் அறிந்து ரயில் இன்ஜின் டிரைவர் பதறிப் போய்விட் டார். டிரைவரும் ஸ்டேஷன் மாஸ்டரும் நேரே எம்.ஜி.ஆர். இருக்கும் ரயில் பெட்டிக்கு வந்தனர். ‘‘கொடைரோடில் இருந்து மதுரை வரை வழி நெடுக மக்கள் உங்களுக்காக காத்திருக்கின்ற னர். நீங்கள் ரயிலில் இல்லையென்றால் நிலைமை விபரீதமாகிவிடும். நீங்கள் ரயிலிலேயே வருவது தான் ரயிலுக்கு பாதுகாப்பு. எனவே, தயவு செய்து ரயிலிலேயே பயணத்தை தொடருங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர்.

    நிலைமையை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர். ரயிலிலேயே பயணத்தை தொடர முடிவு செய் தார். ஆனாலும், அதிமுக கட்சியின் முக்கியஸ்தர் களை இந்திரா காந்தியிடம் அனுப்பி வரமுடியாத நிலைமையையும் அவரிடம் விளக்கச் சொன் னார். வழியெங்கும் மக்களின் ஆரவார வரவேற்பால் காலை 7 மணிக்கு மதுரைக்கு வரவேண்டிய ரயில், மாலை 5 மணிக்கு வந்தது.

    எம்.ஜி.ஆருக்கு நேரு குடும்பத்தின் மீதும் இந்திரா காந்தியின் மீதும் மிகுந்த அபிமானம் உண்டு. இந்திராவும் எம்.ஜி.ஆருக்கு மதிப்பு அளித்து வந்தார். 1977- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக - இந்திரா காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டது. மதுரையில் நடந்த பிரம்மாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஜி.ஆரும். இந்திரா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர்.

    அரசியல் காற்று அவ்வப்போது திசை மாறுவதால் எதிரணியில் இருக்க வேண்டி இருந்தாலும் இருவரும் பரஸ்பரம் கொண்ட அன்பும் மரியாதையும் என்றும் மாறியது இல்லை. உடல் நலம் பாதிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். சென்னை தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை பார்ப் பதற்காகவே டெல்லியில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி பறந்து வந்தார். அவர் அமெரிக்கா செல்வதற்காக மத்திய அரசு சார்பில் எல்லா உதவிகளையும் செய்தார்.

    எம்.ஜி.ஆருக்கும் இந்திரா காந்திக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆர் பிறந்த அதே 1917-ம் ஆண்டில்தான் இந்திரா காந்தியும் பிறந்தார். பிறப்பு முதல் கடைசி வரை எம்.ஜி.ஆருக்கும் 7-ம் எண்ணுக்கும் தொடர்பு உண்டு. அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் ஆண்டுகள், தேதிகள் மற்றும் அவற்றின் கூட்டுத் தொகைக்கும் 7-க்கும் தொடர்பு இருக்கும்.

    எம்.ஜி.ஆர் பிறந்த தேதி 17, பிறந்த ஆண்டு 1917, முதன்முதலில் எம்.எல்.ஏ. ஆன ஆண்டு 1967, அப்போது அவர் சார்ந்திருந்த திமுக ஆட்சியைப் பிடித்த ஆண்டு 1967, அவர் அதிமுகவை தொடங்கிய தேதி 17, எம்.ஜி.ஆர். முதல்முறையாக முதல்வரானது 1977, அவர் பயன்படுத்திய அம்பாசிடர் கார் எண் 4777, இதன் கூட்டுத் தொகை 7. எம்.ஜி.ஆர். மறைந்தது 24-12-1987, இதன் கூட்டுத் தொகையும் 7-தான்.

    உடல் நலம் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆரை சந்திப்பதற்காக வந்ததுதான் இந்திரா காந்தி கடைசியாக தமிழகம் வந்தது. அடுத்த சில நாட்களில் அவர் கொல்லப்பட்ட துயரம் நடந்தது. அதேபோல, எம்.ஜி.ஆர். கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி, பிரதமர் ராஜிவ் தலைமையில் சென்னையில் நடந்த நேரு சிலை திறப்பு விழா.

    சென்னை மருத்துவமனையில் எம்.ஜி.ஆரை சந்தித்து நலம் விசாரித்த இந்திரா காந்தி அவரிடம் கூறினார்... ‘‘நீங்கள் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்தவர். இந்த சோதனையில் இருந்தும் மீண்டு வருவீர்கள்’’ என்றார். அவர் சொன்னது பலித்தது. அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக முதல்வராக சென்ற எம்.ஜி.ஆர்., உடல் நலம் தேறி அங்கிருந்தபடியே, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகவே வந்தது வரலாறு.

    நன்றி -- தி இந்து நாளிதழ்...mj

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1882
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆரை_போல்
    #கோயில்களை_சீரமைப்பீர் !

    பல நுற்றாண்டுகள் பழமைவாய்ந்த நம் கோவில்கள் பராமரிப்பின்றி அழிந்து போகும் நிலையில் உள்ளன.அவற்றை காப்பாற்ற வேண்டும். கோவில் நிர்வாகமும் அரசும் பக்தர்களின் பணத்தை வெவ்வேறு காரியங்களுக்கு செலவு செய்கின்றது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனரே தவிர கோவில்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில்லை. கோவில்களை காப்பாற்ற வேண்டும் என்றால் இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்று ‘தினமலர்’ நாளிதழில் ‘இது உங்கள் இடம்’ பகுதியில் அந்த துறையால் எந்த பயனும் இல்லை என்ற தலைப்பில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.

    முதல்வர் எம்ஜிஆர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பிய பின்பு அப்போதைய இ.காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த வைஜயந்திமாலா பாலி இல்ல நிகழ்ச்சிக்கு வந்தார். அங்கு இருந்த பெண் ஒருவர் எம்ஜிஆரிடம் சென்று "அதிகாலையில் பார்த்தசாரதி ஆண்டவன் முகத்தில்தான் விழிப்போம்.
    இப்போது தரிசிக்க முடியவில்லை. கோவில் குளம் பொது கழிப்படமாக மாறிவிட்டது. கோயிலை சுற்றி துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் தெப்பத்தை பார்த்து நீண்ட காலம் ஆகின்றது. அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை" என்றார்.

    அந்த பெண் கூறிய குறைகளை பொறுமையாக கேட்ட எம்ஜிஆர், "கவலை வேண்டாம், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார். திடீர் என்று ஒரு நாள் கோடைகாலம் என்பதால் வெயில் சுட்டெரிக்கும் மதிய நேரத்தில் பார்த்தசாரதி கோவிலுக்கு எம்ஜிஆர் காரில் வந்து இறங்கினார். வேஷ்டியை மடித்து கொண்டு ஜிப்பாவில் இருந்த கைக்குட்டைi எடுத்து முகத்தில் மாஸ்க்காக கட்டிக் கொண்டு குளத்தில் உள்ளே மைய பகுதிக்கு இறங்கி சென்றுவிட்டார்.

    விஷயம் அறிந்தவுடன் இதுவரை அந்த பக்கமே வராத அதிகாரிகள் குடையை தூக்கிக் கொண்டு குளத்திற்குள் இறங்கி ஓடினார்கள். குடையை பிடிக்க வேண்டாம் என்று எம்ஜிஆர் தடுத்துவிட்டார். உடல் நிலையை பொருட்படுத்தாமல் துர்நாற்றத்தை தாங்கிக்கொண்டு குளத்தை ஆய்வு செய்த பின்பு மேலே ஏறி வந்தார்.

    "கோவில் நிலையை அரசின் கவனத்திற்கு ஏன் கொண்டு வரவில்லை?" என்று அதிகாரிகளை கண்டித்தார். அதன் பின்பு அறநிலையத்துறை அதிகாரிகளை மாற்றவும் உத்தரவிட்டார். முதல்வரின் உத்தரவை ஏற்று அமைச்சர் வி.வி.சாமிநாதனும் இரவு பகலாக அதே இடத்தில் முகாமிட்டு குளத்தை சீர் செய்யும் பணிகளை மேற்கொண்டார். லாரிகள் மூலம் குளத்தில் தண்ணீர்விட ஏற்பாடு செய்தார். குளத்தில் தெப்பம் சென்ற பிறகுதான் அமைச்சர் அங்கிருந்து சென்றார்.

    ஏனென்றால் எம்ஜிஆர் தன்னுடன் வந்த, அப்போது அறநிலையத் துறையை கூடுதலாக கவனித்த சுற்றுலாதுறை அமைச்சர் வி.வி.சாமிநாதனிடம் "கோயில் குளம் விரைவில் சீராக வேண்டும். அது வரை இந்த இடத்தை விட்டு நகரக்கூடாது. குளத்தில் தெப்பம் விட்ட பிறகுதான் நீங்கள் இந்த இடத்தை விட்டே செல்ல வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

    திடீர் என்று எம்ஜிஆர் அந்த பகுதிக்கு வந்தவுடன் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அக்ரகாரத்து மாமி ஒருவர் தன் வீட்டில் ஜுஸ் தயார் செய்து கொண்டு ஓடி வந்து காவல் தடுப்பை மீறி வழங்கினார்.

    அந்த பெண்மணிக்கு தன் இரு கரங்களால் கைகூப்பி வணங்கி "உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. மருந்து கட்டுப்பாட்டில் இருக்கின்றேன். ஜுஸ் வேண்டாம்" என்று சொல்லி விட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். பார்த்தசாரதி கோயில் இந்த நிலமை என்றால் கபாலீஸ்வரர் கோயில் எப்படி இருக்கிறது என்பதை நேரில் அறிந்து கொள்ள சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தையும் எம்ஜிஆர் திடீரென்று பார்வையிட்டு அதையும் சீர் செய்ய உத்தரவிட்டார்.

    எம்ஜிஆர் தன் ஆட்சிகாலத்தில் தமிழகத்திலுள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு
    குடமுழுக்கு விழா நடத்தி இந்து அறநிலையத் துறையை பொலிவுடன் வைத்திருந்தார். அத்துறையில் சரியாக செயல்படாத அதிகாரிகளை மாற்ற வேண்டுமே தவிர அந்த துறையையே கலைக்கக்கூடாது. மூட்டை பூச்சியை ஒழிக்க வீட்டை கொளுத்தக்கூடாது....GDR...

  4. #1883
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #பாசத்தில் #ஜெயிக்கப்போவது #யார்? #வாத்தியாரா? #பக்தர்களா?

    தனது பிரமிப்பான இமாலய வளர்ச்சியின் , புகழின் ஆணிவேர் ரசிகர்களே என்பதைப் புரிந்திருந்தவர் மக்கள்திலகம்...

    தினமும் தீபாவளி காணும் திரைஅரங்குகள், வாத்தியார் படங்கள் திரையிடப்படும்போது...

    தன் ரசிகர்களின் மேல் உயிரையே வைத்திருந்தார்...வாத்தியார்...

    1973 ம் ஆண்டு அமெரிக்க பயணம் முடித்து தாயகம் வந்த அன்று மீனம்பாக்கம் முதல் மர்லின்மன்றோ சிலை வரை மக்கள் வெள்ளம்.இதை அறிந்து விமானநிலையத்தில் இருந்து எம்ஜிஆர் வீட்டுக்கு செல்லாமல் மவுண்ட்ரோடு முழுவதும் திறந்த வேனில் வந்து ரசிகர்களை சந்தித்து விட்டே திரும்பினார் !

    சிகிச்சைக்காக தலைவர் அமெரிக்கா பயணம்...
    நடு இரவில்...
    மக்களுக்கு நன்கு தெரியும் தலைவர் முகத்தை பார்க்கவே முடியாது என்பது இருந்தும் மருத்துவமனை முதல் விமானநிலையம் வரை சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் தலைவர் பயணிக்கும் ஆம்புலன்ஸ் வண்டியைப் பார்க்க, கண்களில் நீருடன்...

    #இதுதாங்க #எம்ஜிஆர்

    ஒருவேளை உணவிற்குக் கூட கஷ்டப்படும் வறியவர்கள் கூட தங்களுடைய சொந்த செலவில் தனது பாசத்தலைவனுக்குப் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்
    என்றால் அது உலகிலேயே "#வாத்தியார்" ஒருவருக்குத் தான் என்பதை கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய என்னால் முடியும்......bsm...

  5. #1884
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    பொதுவாக, எம்ஜிஆரின் திரைப்படங்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

    1. திராவிட இயக்க படங்கள் 2.சமூக கதைகளை உள்ளடக்கிய படங்கள் 3. ஹீரோயிஸத்தை அடிப்படையாக கொண்ட ஃபார்முலா படங்கள்.

    ஆரம்ப படங்களில் மாமன்னராகவும், மன்னராட்சியின் கொடுமைகளை எதிர்க்கும் கலகக்காரனாகவும், அரசுக்கு எதிராக சாமான்ய மக்களை திரட்டும் போராளியாகவும் எம்ஜிஆர் சித்தரிக்கப்பட்டார். இரண்டாவதாக சமூக படங்கள்தான் மக்களிடம் எம்ஜிஆருக்கு பிரபலத்தை தர ஆரம்பித்தது. நெருக்கடி ஆனால், 1960-ல் இருந்து தமிழ்த்திரையின் போக்கு வியப்பூட்டும் அளவுக்கு மாற ஆரம்பித்துவிட்டது.. ஸ்ரீதர், கேஎஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட புது புது இயக்குனர்கள் அடிப்படை பிரச்சனைகளையும், கூட்டுக்குடும்பத்தின் உள் முரண்பாடுகளையும் உள்ளடக்கிய திரைப்படங்களை வெளியிட்டனர். சரித்திர சம்பவங்கள், கத்தி சண்டைகள், வீரதீர சாகச செயல்கள் எல்லாம் அப்போது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. அதனால் எம்ஜிஆர் ஒரு நெருக்கடியில் நின்றார். உத்திகள் ஒரு புதிய பாதையை, புதிய பாத்திர படைப்பை அவர் தேர்வு செய்ய வேண்டியதாயிற்று.. மல்யுத்தம், குத்துச்சண்டை, வாள்சண்டை போன்றவை இனி எடுபடாது.. அனைத்தும் காலாவதியாகிவிட்டன. அதனால் சமூக படங்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்தார். கத்தி சண்டைகளுக்கு பதில் நடனங்களில் கவனம் செலுத்தினார். சண்டை காட்சிகளைக்கூட சரித்திர கதைகளில் இருந்த பாணியை மாற்றி புதிய உத்திகளை கையாண்டார். குடும்ப தலைவன், தாய் சொல்லை தட்டாதே, பாசம், தாயை காத்த தனயன், தர்மம் தலைகாக்கும், பணத்தோட்டம், பெரிய இடத்துபெண், தெய்வதாய், படகோட்டி, பணம் படைத்தவன், அன்பே வா, குடியிருந்த கோயில், கண்ணன் என் காதலன், ஒளிவிளக்கு போன்ற எண்ணற்ற சமூகப்படங்கள் வெளிவந்தன. வீழ்த்தினார் கலாப்பூர்வ பார்வையில் அணுகுகிறபோது இப்படங்கள் எல்லாம் இரண்டாம்பட்சமானவையே.. அழகியலோ, கலை நுணுக்கமோ, உள்ளத்தை உருக வைக்கும் உணர்ச்சி குவியலோ இப்படங்களில் இருக்காது என்பது உண்மைதான். ஆனால் சமூகவியல் கண்ணோட்டத்தில் பார்க்கிறபோது, இப்படங்களில் முதல்தரமானவையாய் விளங்கின. மது அருந்துதல், சிகரெட் பிடித்தல், சூதாடுதல், கற்பழிப்பு, பெண்களை ஏமாற்றுவது, வட்டிக்கொடுமையால் ஏழைகள் வாடுவது, திருடுவது, அடுத்தவரை கெடுப்பது போன்ற சமூக தீமைகளை எம்ஜிஆர் கடுமையாக எதிர்த்தார். பாதிக்கப்பட்ட பெண்களை வீரதீர சண்டைகளிட்டு காப்பாற்றினார்.. ஏழைகளுக்கு உதவினார்.. தாயை தெய்வமென வணங்கினார்.. பெண்களை தாயாக போற்றினார்.. அக்கிரமக்காரர்களை, ஆணவக்காரர்களை, காமப்பிண்டங்களை தனி ஆளாக நின்று வீழ்த்தினார். அறநெறிப்பண்பு அதனால் ஒரு புறம் பெண்களும், மறு புறம் இளைஞர்களும் எம்ஜிஆருக்கு அபிமானிகளாய் மாறினார்கள்.. அறநெறிப் பண்புகளை வலியுறுத்தியதால் நடுத்தர மக்களும் அவரை நேசித்தார்கள். இதற்கிடையே ஏற்கனவே திராவிட எழுத்தாளர்களின் படைப்புகளாலும், திமுகவின் அங்கமாக எம்ஜிஆர் இருந்ததாலும் எம்ஜிஆருக்கு ஒரு தனிப்புகழும் செல்வாக்கும் இருந்தது. திராவிட இயக்க தொண்டர்களோடு பெண்களும், இளைஞர்களும், நடுத்தர வர்க்க படிப்பாளிகளும் இணைந்ததால் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக எம்ஜிஆர் உயர்ந்தார். 60 முதல் 70-ம் ஆண்டுகளிலும் முடிசூடா மன்னனாகவே வலம்வந்தார்.. "என் இதயக்கனி" என்று அண்ணாவே பாராட்டும் அளவுக்கு செல்வாக்கு கொடி கட்டி பறந்தது. 3 வித தாக்கம் இறுதியில் எம்ஜிஆரின் திரைப்படங்கள் 3 வித தாக்கத்தை திரைக்கு வெளியே உருவாக்கியது. 1. சினிமாவில் முதன்முதலாக ஹீரோயிசம் உருவாகி வளர்ந்தது. 2. அடித்தட்டில் உள்ள ஏழை மக்கள் புதிய உத்வேகம் பெற்று அகரீதியாகவும், புறரீதியாகவும் அவர்களை மாற்றியது. 3. அரசியல் செல்வாக்கு பெற்று - ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி - ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு புதுமையை நிகழ்த்தியது. எத்தனையோ கலைஞர்கள் எம்ஜிஆருக்கு முன்னும், பின்னும் நடித்து புகழ்பெற்றாலும், அவர்கள் அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாக மட்டுமே கருதப்பட்டார்கள்.. ஆனால் எம்ஜிஆர் படங்கள் நேர் எதிரானவை.. மக்கள் அவர் எந்த கேரக்டரை ஏற்றாலும், அதை நிஜ எம்ஜிஆராகத்தான் பார்த்தார்கள்.. எம்ஜிஆர் நல்லவர், தண்ணி அடிக்க மாட்டார், சிகரெட் பிடிக்க மாட்டார், தன் மனைவியையோ காதலியையோ தவிர பிற பெண்களை தாயாக கருதுவார்.. தீமைகளை எதிர்த்து போராடுவார்.. ஏழைகளை பாதுகாப்பார் என்றெல்லாம் நிஜமாகவே மக்கள் நம்பினார்கள். அதனால் ஹீரோவாக சினிமாவில் மட்டுமல்ல.. திரைக்கு வெளியேயும் உருவானார் எம்ஜிஆர். பாடல்கள் மற்ற ஹீரோக்களின் வாழ்க்கை ஸ்டுடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் முடிந்து போயிற்று என்றால், எம்ஜிஆரோ, இதையெல்லாம் தாண்டி, அரசியல் மேடைகள், மாநாடு, பேரணிகளிலும் பங்கேற்றார். ஏழை எளிய மக்களுக்கும், பொதுநல அமைப்புகளுக்கும் வாரி வழங்கிய வள்ளலாகவும் திகழ்ந்தார்.. தியேட்டரில் இருந்த ரசிகர்கள் காலப்போக்கில் ரசிகர் மன்ற தொண்டர்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், இறுதியில் வாக்காளர்களாகவும் மாறினார்கள். இதற்கு இன்னொரு காரணம் அவருக்காக பாடப்பட்ட பாடல்கள், எழுதப்பட்ட உணர்ச்சிகரமான வரிகள்தான். ஏழைகளை பற்றியும், உழைப்பின் உயர்வு குறித்தும் நற்பண்புகளின் நன்மை குறித்தும் பல பாடல்கள் எம்ஜிஆருக்காகவே எழுதப்பட்டன... இந்த பாடல்கள் இப்படித்தான் அமைய வேண்டும் என்பதில் அவர் மிகுந்த கவனமும் ஆர்வமும் கொண்டிருந்தார்.. சாதாரண டூயட் பாட்டு என்றால்கூட கண்ணியமும் நயமும் கலந்திருப்பதை இப்போதும் நாம் காண முடியும். அடித்தள காரணம் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் மாறுதலை உருவாக்கியது. படகோட்டி வந்தபோது, மீனவர்கள் எம்ஜிஆரை தங்களில் ஒருவராகவும், ரிக்*ஷாக்காரன் வந்தபோது ரிக்*ஷா இழுத்தவர்கள் அவரை தங்களில் ஒருவராகவும் பாவித்தார்கள். அது மட்டுமல்ல.. தங்கள் தொழில் மீது ஒரு பற்றும் பெருமையும் ஈடுபாடும் அவர்களுக்கு உண்டாயிற்று. அழுக்கும் கிழிசலும் கொண்ட கந்தலாடையுடன் ரிக்*ஷா இழுத்தவர்கள், எம்ஜிஆரை பார்த்து முக்கால் பேண்ட்டையும், சட்டையையும் அணிந்தார்கள்.. அதேபோல் விவசாயி, தொழிலாளி, பஸ் கண்டக்டர், டிரைவர், அனாதை, போலீஸ்காரன், நரிக்குறவர், போன்ற பல கதாபாத்திரங்களை எம்ஜிஆர் ஏற்றார்.. இப் பாத்திரப் படைப்புகளில் எம்ஜிஆரை கண்டு விவசாயி, தொழிலாளி, ரிக்*ஷாக்காரன் போன்றோர் தன்னையே மறந்தனர். எம்ஜிஆரின் திரை வெற்றிக்கும், அரசியல் வெற்றிக்கும் இதுவே அடித்தள காரணமாயிற்று. எட்டாவது வள்ளல் ஆனால் பல படங்களை ஃபார்முலா படங்கள் என்று அழைக்கப்பட்டாலும், அடிப்படையில் சில அறநெறிப் பண்புகளை வலியுறுத்தின என்பதிலும், ஆபாசமோ, அருவருப்போ இல்லாமல், ஆரோக்கியமான - அன்றாட வாழ்க்கையின் துன்ப துயரங்களை மறந்து கொஞ்ச நேரமாவது தன்னையே மறந்து ரசிக்கும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருந்தன என்பதிலும் மாற்று கருத்து இல்லை.. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், "வெறும் பொழுதுபோக்கு அம்சமாயிருந்த சினிமாவை மக்களோடும், சமுதாயத்தோடும், இறுதியில் அரசியலோடும் இணைத்து.. ஆட்சியையே கைப்பற்றும் அளவுக்கு மாபெரும் சக்தி படைத்த மகத்தான கலைஞர்தான் எட்டாவது வள்ளல் எனப்படும் மக்கள் திலகம் எம்ஜிஆர்!.........Baabaa

  6. #1885
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனை தலைமுறை ஆனாலும் இவர் புகழ்
    நிலைத்திருக்க இந்த காரணம்தான் :
    ����������������������������������
    எத்தனை தலைவர்களை உலகம் கண்டிருந்தாலும் புரட்சித் தலைவர்போல்
    தன்னிகரற்ற தலைவர் எவரும் இல்லை.
    எந்த இடத்திலும் மக்களை மதிப்பதிலும்,
    மக்களுக்கு நன்மை செய்வதிலும் உலகில்
    முன்னோடி இவர் மனிதநேயம்.எம்.ஜி.ஆர் என்றாலே மக்களும் எங்கள் வீட்டு பிள்ளை என்று உரிமை கொண்டாடினர்.அவரும் தன் இறுதிநாள் வரை அந்த மக்கள் செல்வாக்கை
    காப்பிற்றியவர்.அவரின் அந்த கருணை குணத்தால் மக்கள் முன் அவருக்குண்டான
    செல்வாக்கை இன்றைய தலைமுறை தலைவர்கள் பிரச்சாரம் செய்ய செல்லும்போதுகூட கூட்டத்தில் உள்ள தாய்மார்கள் எம்.ஜி.ஆர் பெயரை தவறாமல் அசைபோடுவதால்தான் அனைத்து சட்டமன்ற
    தேர்தலின் பிரச்சாரங்களின் மூலதனமாக அனைவருக்கும் எம்.ஜி.ஆர் இருக்கிறார்.
    அவரை போற்றிப் பாதுகாக்கத் தெரிந்தவர்கள் பெருமை அடையலாம்..........Rnjt
    ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

  7. #1886
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர் நடித்த காலகட்டங்களில் தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் போக்கிய காவல்காரனாக இருந்தார். அதேபோல் தன்னை நம்பியிருந்த ஒட்டுமொத்த தமிழக மக்களின் காவல்காரனாக இருந்தார். இன்றைய இப்போதைய சூழ்நிலைகளில் மற்ற தலைமைகளை மனதாலும் நினைக்காதே உண்மையாக நேசிக்கின்ற புரட்சித்தலைவரின் ரசிகர்களை மற்றும் பக்தர்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கிறார் மற்றும் அவர்களுக்கும் காவல்காரராக இருக்கிறார் ... புரட்சித்தலைவரை உண்மையாக நம்பியவர்களுக்கு என்றும் எப்போதும் தோல்வி என்பது துளியளவும் கிடையாது.

    கெத்தாக சொல்லுவோம் கம்பீரமாக சொல்லுவோம் நாம் புரட்சித்தலைவரின் மிகத் தூய்மையான அக்மார்க் வெறியர்கள் என்று நம்முடைய ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.

    கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........sbm

  8. #1887
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அன்று இரவு ஜப்பான் நாட்டு விமான நிலையத்தில் அந்த பட குழு வருகைக்காக காத்து இருந்தேன்.

    எனக்குள் பெரும் பட படப்பு.... என்னை நம்பி பெரும் பொருள் செலவில் ஒரு படத்தை எடுக்க விரும்பி நான் ஜப்பான் நாட்டுக்கு சில மாதங்கள் முன்பே வந்து விட்டது நினைவுக்கு வந்தது...

    அந்த விமானத்தின் வருகை அறிவிக்க பட்டு விட்டது...அந்த பட குழு வருகை தெரிந்து தமிழ் மக்கள் கூட்டம் அந்த இரவிலும் அலை மோதியது...

    கஸ்டம்ஸ் பகுதியை தாண்டி தன் படை பரிவாரங்கள் உடன் அந்த சந்திரன் விமான நிலைய வெளிச்சம் தாண்டி வேட்டி ஜிப்பாவில் மின்னி கொண்டு ஒரு தங்க நிலா தரையில் நடப்பதை போல இருந்தது.....பலமுறை அவர் அருகே இருந்து பார்த்த எனக்கு அது புதிதாய் இருந்தது...

    பலத்த கரவொலிகள் இடையே என் அருகில் அவர் வர நான் பதட்டம் கொண்டு ஜப்பான் எக்ஸ்போ 70 பொருள் காட்சி திடலில் படம் எடுக்க அனுமதி வாங்கி விட்டேன்...

    நம்ம தமிழகத்தில் அங்கே போகிறார் அனுமதி எல்லாம் கிடைக்காது என்று சிலர் பேசியது உண்மையா என்று கேட்டேன்...இப்போ எதுக்கு அது நான் வந்து விட்டேன் அல்லவா.

    உங்கள் உழைப்புக்கு நன்றி....எப்படியும் படப்பிடிப்பு எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நாம் நினைத்த படி நடக்கும் வாங்க அறைக்கு போகலாம் என்று என்னை தோளில் கை போட்டு அழைத்து செல்ல..

    டோக்கியோ நகரில் உள்ள பிரபல இம்பீரியல் ஹோட்டலுக்கு வந்தோம் நாங்கள்.

    அசோகன் அசந்து போய் இருந்தார்.

    மஞ்சுளா முகம் மங்கி போய் இருந்தது.

    லதா அவர்கள் நடையில் நளினம் இல்லை..

    சந்திரகலா அவர்கள் எப்போது எங்கே சாய்வோம் என்ற நிலையில்.

    நாகேஷ் பாவம் நடக்கவே முடியவில்லை...

    நெடும் தூர விமான பயணத்தில் அதில் கொடுக்க பட்ட உணவுகள் எவருக்கும் பிடிக்காமல் அனைவரும் பசியில் தவிக்க...

    பாதி ராத்திரி 1 மணி கடந்த நேரம் தலைவர் மட்டும் அசராமல் இங்கே இப்போது அனைவருக்கும் ரசம் மோர் சாதம் கிடைத்தாலும் போதும் கிடைக்குமா என்று கேட்க.....

    என்னது ரசம் மோரா என்று நான் எனக்குள் திகைத்து நிற்க என்ன நடந்தது அடுத்து...

    தலைவர் ரசிகர்கள் வரவேற்பை பொறுத்து அடுத்த பகுதி தொடரும்

    வாழ்க தலைவர் புகழ்

    உங்களில் ஒருவன் நெல்லை மணி நன்றி..........

  9. #1888
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1971 டிச 9 ம் தேதி வெளியான கருப்பு வெள்ளை திரைப்படம்தான் நாஞ்சில் புரடொக்ஷன்ஸ் "ஒரு தாய் மக்கள்". தயாரிப்பில் நீண்ட நாட்களாக இருந்த படம். ஆரம்பத்தில் ஜெய்சங்கர் சரோஜாதேவியுடன் நடித்து ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு முத்துராமன் ஜெயலலிதா நடிக்க படமாக்கப்பட்டது.

    ஜெய்சங்கர் பல படங்களில் கமிட் ஆகியிருந்ததால் அவருடைய கால்ஷீட் பிரச்னையால் அவருக்கு பதில் முத்துராமன் நடித்தார். 1966 ல் பூஜை போட்டு தொடங்கிய படம் 1971 இறுதியில் வெளியானது. கருப்பு வெள்ளை படம் என்பதால் எம்ஜிஆர் இந்தப்படத்துக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று மாற்று அணியினர் பொய் பிரசாரம் செய்தனர்.

    "நீரும் நெருப்பும்" வெளியான அக் 18 க்குப் பின் அதே ஆண்டு டிச 9 ல் வெளியாகி வெற்றி பெற்ற படம். 10 க்கும் மேற்பட்ட அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. சென்னையில் 50 நாட்களும் அதிகபட்சமாக பிற ஊர்களில் 70 நாட்கள் வரையிலும் ஓடியது. இலங்கையில் 10 வாரங்களை கடந்து வசூலில் சாதித்த படம். பாடல்கள் அத்தனையும் படம் வெளிவரும் முன்னரே வெளியாகி வெற்றி பெற்றது.

    'பாடினாள் ஒரு பாடல்' 'கண்ணன் எந்தன் காதலன்' 'ஆயிரம் கண்ணுக்கு விருந்தாகும்' 'இங்கு நல்லாயிருக்கணும் எல்லோரும்' போன்ற பாடல்கள் அத்தனையும் தேனில் தோய்த்த பலா போல் சுவைமிக்கது. பாடலுக்காகவே பலமுறை பார்த்த படம். கொஞ்சம் கூட தொய்வில்லாமல் கதை விறுவிறுப்பாக பின்னப்பட்டிருக்கும்.
    சண்டை காட்சிகளில் தனி முத்திரை பதித்திருப்பார் தலைவர்.

    வேறு ஒரு நாளில் வெளியாகி யிருந்தால் படம் நிச்சயம் 100 நாட்களை எளிதில் கடந்திருக்கும். இங்கு 100 நாட்கள் ஓட்டிய அய்யனின் "மன்னவன் வந்தானடி" மற்றும் அநேக அய்யன் படங்களை இலங்கையில் ஓட ஓட விரட்டிய படம்தான் "ஒரு தாய் மக்கள்". கலர் படங்கள் வந்த நேரத்தில் கருப்பு வெள்ளை படமாக வந்தாலும் கடுகு சிறுத்தாலும் காரம் குறைவதில்லை என்பதை நிரூபித்தது..........ksr...

  10. #1889
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Mgr தன்னுடய தலைவர் *பேரறிஞர் அண்ணா-வை* போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை.

    01. தன் தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .

    02. ''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .

    03. 'அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்' இதய வீணை

    04. 'அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம்' மீனவ நண்பன்

    05. 'உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்' நவரத்தினம்

    06. 'இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்' பல்லாண்டு வாழ்க

    07. 'அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' இதயக்கனி

    09. 'என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது' நினைத்தை முடிப்பவன் .

    10. 'அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்' உரிமைக்குரல்

    11. 'நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்' நேற்று இன்று நாளை

    12 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா' எங்கள் தங்கம்

    13. 'சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்' கண்ணன் என் காதலன்

    14. 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' பெற்றால்தான் பிள்ளையா

    15. 'நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' புதிய பூமி

    16. 'தம்பி! நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று' நேற்று இன்று நாளை

    17. 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்' எங்கள் தங்கம்

    18. '....கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்து ஆளு..' எங்கள் தங்கம்...drn

  11. #1890
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அந்தக் கார் யாருடையது, உள்ளே யார் இருக்கிறார்கள் என்பது வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. கார் கண்ணாடி, கூலிங்கிளாஸ் பொருத்தப்பட்டிருந்தது. அவருடன் காரில் நானும் இருந்தேன். பேசிக்கொண்டே வந்தோம்.

    சாலையோரத்தில் ஏராளமானபேர் சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் அவர் கையெடுத்துக் கும்பிட்டார். அவர்களை கடக்கும் வரை கும்பிட்டபடியே இருந்தார். எனக்குச் சந்தேகம். உள்ளேயிருந்து கும்பிட்டது அவர்களுக்குத் தெரியாது. ஆனா கும்பிடுறீங்களேனு குழப்பத்தோடும் தவிப்போடும் கேட்டேன்*. உடனே அவர் சொன்னார்:

    'அவர்களுக்குத் தெரியணும் என்று கும்பிடும் போடணும்னு அவசியமில்லை.
    இந்தக் கும்பிடு ஒரு நன்றி. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு பல நாள் பசியும் பட்டினியுமா இருந்தவன் நான். இன்னைக்கு என்னை எல்லா விதமாகவும் ஏற்றுக்கொண்டு, மிகப்பெரிய பீடத்தையும் பேரையும் புகழையும் கொடுத்திருக்காங்க. மக்களைப் பார்க்கும்போதெல்லாம் நன்றி சொல்ற விதமா கும்பிடுகிறேன். சாகற வரைக்கும் கும்பிடுவேன்'

    இதைக்கேட்டதும் நெக்குருகிப் போய்விட்டேன். அவர் வேறு யாருமல்ல. அப்ப முதல்வராக இருந்த சினிமாலயும், மக்கள் மனசுலயும் எப்பவுமே முதல் முழு மனிதராக இருந்த எம்ஜிஆர் தான். இந்த நன்றி மறவாத குணம் தான் அவரை மக்கள் திலகம்னு சொல்ல வச்சி கொண்டாடவும் வச்சுச்சு. எம்ஜிஆர் உலகம் இருக்கிறவரை பேசப்படுவார், போற்றப்படுவார்!
    --வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் ஒரு நேர்காணலில் சொன்னது இது.
    அதன்பிறகு வந்தவர்கள்?.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •