Page 196 of 210 FirstFirst ... 96146186194195196197198206 ... LastLast
Results 1,951 to 1,960 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #1951
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எத்தனைத் தடைகள் வந்தாலும் உதவி செய்வதை நிறுத்த மாட்டார் எம்.ஜி.ஆர்.!
    - கவிஞர் முத்துலிங்கம்

    புரட்சித் தலைவரைப் போலவே அவரது திரைப்பாடல்களும் சாகாவரம் பெற்றவை. மெட்டுக்களின் இனிமைக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை வார்த்தைகளின் புதுமைக்கும் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

    அதனால் தான் அவரது திரைப்படப் பாடல்கள் தலைமுறைகள் கடந்து இன்றைக்கும் பாடப்படுகிறது. கண்ணதாசன், வாலி போன்ற ஜாம்பவான்களால் சூழப்பட்ட எம்.ஜி.ஆரின் கவிதைத் தோட்டத்தில் பல புதிய திறமையாளர்களையும் வளர்த்தெடுக்க அவர் தவறவில்லை.

    அந்த வரிசையில் வந்த மிக முக்கியமான கவிஞர் தான் முத்துலிங்கம். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் தமிழக மேல்சபை உறுப்பினராகவும் அதன் பின்னர் தமிழக அரசவைக் கவிஞர் பதவியையும் வகித்தவர் இவர்.

    இந்த கௌரவமான பதவியில் கண்ணதாசன் உட்பட இதுவரை நான்கு கவிஞர்கள் மட்டுமே அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் கவிஞர் முத்துலிங்கமும் ஒருவர். இந்தப் பதவியில் இருந்த கடைசிக் கவிஞரும் அவரே. எம்.ஜி.ஆர். உடனான தன் நீண்ட நெடிய பயணத்தில் இருந்து சில நினைவுகளை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

    “தன் படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பை எனக்கு ஏன் கொடுத்தார் எம்.ஜி.ஆர். என்ற காரணத்தை ஒரு விழா மேடையில் எம்.ஜி.ஆரே சொன்னபோது தான் நானே தெரிந்து கொண்டேன்.

    அது 1981ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருக்கிறார். எனக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது எம்.ஜி.ஆர். கைகளினால் வழங்கப்பட்டது. அந்த விழா மேடையில் இப்படிப் பேசினார் தலைவர்.

    “சினிமாதுறைக்கு வருவதற்கு முன்னர் கவிஞர் முத்துலிங்கம் பத்திரிகைத் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அ.தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டவர்.

    1973ல் ‘பொண்ணுக்கு தங்க மனசு' என்ற ஒரு படத்துக்கு பாட்டு எழுதினார். அதன் பிறகு கொஞ்ச நாளில் கொள்கை காரணமாக அவர் பத்திரிகை வேலையைவிட்டு விலகும்படியான சூழ்நிலை உருவானது.

    அப்போது ஒரு நாள் என்னைப் பார்ப்பதற்காக தி.நகர் அலுவலகம் வந்திருந்தார். நான் வேறு சில முக்கியமான அலுவல்களில் இருந்ததால், வெளியில் இருந்தபடியே இன்டர்காமில் என்னுடன் பேசினார்.

    “வேலையை விட்டுட்டீங்கனு கேள்விப்பட்டேன். ரொம்ப சிரமமா இருக்குமே? கொஞ்சம் பணம் தரேன்... செலவுக்கு வச்சுக்குங்க” என்று நான் சொன்னதும், “பணமெல்லாம் வேண்டாம் பாட்டெழுதும் வேலை கொடுங்க” என்றார். “வேலையெல்லாம் அப்புறம் தர்றேன்... இந்தப் பணத்தை முதல்ல வாங்கிக்குங்க” என்றதற்கு, “பணம் வேண்டாம், வேலை கொடுங்க” என்று சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார். கோபத்தில் படாரென நான் போனை வைத்துவிட்டேன்.

    ஆனால் அந்தச் சம்பவம் என்னை சிந்திக்க வைத்தது. சினிமாத் துறையில் உள்ள பெரும்பாலான கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு நான் பண உதவி செய்திருக்கிறேன். அதெல்லாம் அவர்களாகவே வந்து என்னிடம் கேட்டபோது தான் நான் செய்தேன். ஆனால் நானாக வலியப்போய் பண உதவி செய்தபோது அதை வேண்டாம் என்று மறுத்தவர் முத்துலிங்கம்.

    உழைக்காமல் யாரிடத்திலும் எதையும் இனாமாக வாங்கக்கூடாது என்ற தன்மானம் மிக்க மனிதர் இவர் என்பதை அன்று நான் புரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவருக்கு என் படங்களில் பாட்டெழுதும் வாய்ப்புகள் வழங்கத் தொடங்கினேன்.

    கவிஞர் பாரதிதாசன் தன்மானத்துக்கு பேர்போனவர். அவர் பெயரில் வழங்கப்படும் இந்த விருதை தன்மானம் மிக்க கவிஞர் முத்துலிங்கத்துக்கு வழங்காமல் வேறு யாருக்கு வழங்குவது” என்றார் எம்.ஜி.ஆர்.

    இதைவிட வேற என்ன வேணும் சொல்லுங்க என்று கேட்கிறார் முத்துலிங்கம். சொல்லும்போதே அவர் முகத்தில் அவ்வளவு பெருமிதம். எம்.ஜி.ஆர். அவர்களின் கொடைக் குணம் குறித்து மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தவர், அவரது மனித நேயத்துக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார்.

    “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்துக்கு பாட்டெழுதிக் கொண்டிருந்தபோது என் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுப்போச்சு. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்ட வேண்டும். என் கையில் இருந்ததோ ரெண்டு ரூபாய். எம்.ஜி.ஆரை பார்க்கப் போனேன்.

    அப்போது அவர் சத்யா ஸ்டுடியோவில் ஷூட்டிங்கில் இருந்தார். ஷூட்டிங் முடிந்து மேக்கப்பை கலைத்துவிட்டு அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது மேக்கப் அறை வாசலில் தான் கார் வந்து நிற்கும். விறுவிறுவென வந்து அவர் காரில் ஏறியதும் கார் புறப்பட்டது.

    அப்போது நான் அங்கு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். உடனே வண்டியை நிறுத்தச் சொல்லி அருகில் அழைத்து என்னவென்று கேட்டார்.

    நான் விஷயத்தைச் சொல்லிவிட்டு, ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்துக்கு நேற்று தான் சிச்சுவேஷன் சொன்னாங்க. நாளைக்கு தான் கம்போசிங். அதனால் பாட்டெழுதின பிறகு வாங்கப்போற பேமெண்ட்டை முன்பணமாக இன்றைக்கே கேட்டு வாங்கிக் கொள்ளட்டுமா? என்று கேட்டேன்.

    சற்று யோசித்தவர், “வேண்டாம். அது நல்லா இருக்காது. நீ அந்தக் கம்பெனிக்கு இதுக்கு முன்ன பாட்டு எழுதினதில்ல. நான் தான் உன்னை சிபாரிசு செய்தேன். அதனால அவங்ககிட்ட கேட்டா அது அசிங்கம். அதுவும் நீ கேட்கவே கூடாது” என்று சொல்லிவிட்டு, அவரது உதவியாளர் மாணிக்கத்திடம் காரில் இருக்கும் சூட்கேஸை எடுத்துக்கொண்டு உள்ளே வரும்படி சொல்லிவிட்டு என்னை அழைத்துக் கொண்டு மீண்டும் மேக்கப் அறைக்குள் நுழைந்தார்.

    சூட்கேஸில் இருந்து 2000 ரூபாய் எடுத்துக் கொடுத்து, உடனே டாக்டரைப் போய் பாருங்க என்றார். பவுன் 400 ரூபாய் விற்ற காலம் அது. 2000 ரூபாய் என்பது இன்றைக்கு லட்ச ரூபாய்க்கு சமம். இதுதான் அவருடைய மனித நேயம். காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார் என்றால் எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் மேக்கப் அறைக்கு திரும்ப மாட்டார்.

    ஆனால் அன்றைக்கு என் நிலைமையைச் சொன்னபோது அவர் இறங்கி வந்தார் என்றால் அது எனக்காக என்றில்லை. என் நிலைமையில் அன்றைக்கு அவரிடம் யார் வந்து உதவி என்று நின்றிருந்தாலும் அவர் இதைத் தான் செய்திருப்பார். அப்பேற்பட்ட மனிதநேயம் மிக்க மாணிக்கம் அவர்” என்று சொல்லும்போதே முத்துலிங்கத்தின் கண்கள் கலங்கி இருந்தன.

    அதே போல தன்னை நம்பி வந்தவர்களுக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று எம்.ஜி.ஆர். முடிவு செய்துவிட்டால், எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதை செய்தே தீருவார் என்பதற்கு உதாரணமாக இன்னொரு சம்பவத்தைச் சொன்னார்.

    “மீனவ நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அவரைப் பார்ப்பதற்காக ஸ்டுடியோ சென்றிருந்தேன். என்னைப் பார்த்ததும், “வாங்க முத்துலிங்கம்... இந்தப் படத்துல நீங்க என்ன பாட்டு எழுதறீங்க?”என்று கேட்டார்.

    “நான் எதுவும் எழுதலியே” என்றேன்.

    “என்னது எழுதலியா? உங்களுக்கு ஒரு பாட்டு தரச் சொல்லி இருந்தேனே!” என்றார்.

    “என்னை யாரும் கூப்பிடலியே!” என்றேன்.

    உடனே ப்ரொடக்ஷன் மேனேஜரை அழைத்தார்.

    “முத்துலிங்கத்துக்கு பாட்டு தரச் சொல்லி இருந்தேனே, ஏன் தரல?” என்றார்.

    “நாங்க தேடும்போது அவர் ஊருல இல்லை” என்று பதில் வந்தது.

    “ஊர்ல இல்லைனா ஏன் என்கிட்ட சொல்லல? என்ன... ஸ்ரீதர் படம்னு கொஞ்சம் சலுகை கொடுத்தா அதிகமா உரிமை எடுத்துக்கறீங்களா?” என்று கடுமையாக கோபித்துக் கொண்டவர் என்பக்கம் திரும்பி...

    “கவிஞரே இனிமே ஊருக்கு போறதா இருந்தா என்கிட்ட சொல்லிட்டு போகணும் புரிஞ்சதா” என்று சொல்லிவிட்டு, “முத்துலிங்கத்துக்கு ஒரு பாட்டு கொடுக்க சொன்னேன்னு டைரக்டர்கிட்ட சொல்லு” என்றார்.

    “சார்... படத்துல பாடலுக்கான அத்தனை சிச்சுவேஷனும் முடிஞ்சுட்டதா டைரக்டரும் ப்ரொட்யூசரும் நேத்து பேசிக்கிட்டு இருந்தாங்க” என்றார் ப்ரொடக்ஷன் மேனேஜர்.

    “அப்படியா...? அப்படின்னா டைரக்டரையும், ‘சானா'வையும் கூப்பிடு” என்றார்.

    டைரக்டர் என்றால் ஸ்ரீதர். சானா என்றால் அந்தப் படத்தின் ப்ரொட்யூசர் சடையப்ப செட்டியார். இருவரும் வந்தனர்.

    “இவர் தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வச்சு ஒரு டிரீம் ஸாங் போடுங்க. நல்லாருக்கும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

    “ஸாங்குக்கான சிச்சுவேஷன் எல்லாமே முடிஞ்சிடுச்சே எங்க போடுறது?” என்று செட்டியாரும் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.

    “டிரீம் ஸாங்குக்கு என்ன சிச்சுவேஷன் வேண்டிக்கிடக்கு. சிச்சுவேஷன் இல்லாத ஒரு சிச்சுவேஷனை உருவாக்குறது தானே டிரீம் ஸாங். ஒரு ரிலாக்ஸூக்கு போடுறது தானே. சாப்பிடும்போது நினைச்சு பார்க்குற மாதிரியோ, இல்ல வேலை செய்யும்போது அசதியில கண் அசந்து கனவு காணுற மாதிரியோ போடலாமே.

    ‘அன்பே வா'ல போட்டமே, “ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...” அது என்ன சிச்சுவேஷன்? அது மாதிரி “விழியே கதை எழுது”ன்னு ‘உரிமைக்குரல்' படத்துல போட்டீங்களே அது என்ன சிச்சுவேஷன்? அதமாதிரி ஒன்னு உருவாக்குங்க என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டு போய்விட்டார்.

    அதற்கு அப்புறம் ஒரு டிரீம் சிச்சுவேஷனை உருவாக்கி போட்ட பாடல் தான் அந்தப் படத்துலயே பெரிய ஹிட் ஆச்சு. அதான் “தங்கத்தில் முகமெடுத்து... சந்தனத்தில் உடலெடுத்து”.

    எல்லா பாடல்களும் முடிந்துவிட்ட நிலையிலும் எதற்காக இப்படி ஒரு பாடலை உருவாக்கினார் என்றால், தன்னை நம்பி வந்தவர்கள் இவர்கள். அவர்களுக்கு நாம்தான் உதவ வேண்டும் என்ற அந்த உயர்ந்த எண்ணம் தான். அதனால் தான் அவர் மறைந்தும் மறையாமல் கோடாணுகோடி இதயங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    எம்.ஜி.ஆரிடம் பாடல்களை ஓ.கே. வாங்குவது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. ஒரே நாளில் ஓ.கே. ஆன பாட்டும் உண்டு. அதேபோல ஒரு மாதம் ஆகியும் ஓ.கே. ஆகாத பாட்டும் உண்டு. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்ல நான் மூணு பாட்டு எழுதினேன். அதுல ஒரு பாட்டை அவர் ஓ.கே. பண்றதுக்கு ஒரு மாசமும் ஆனதும் உண்டு....Rmh

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1952
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நம்நாடு திரைப்படம் மக்கள் திலகம் அவாகள் நடித்து 1969ம் ஆண்டு வெளிவந்தது. இதே படம் முதலில் தெலுங்கிலும் பின் நம்நாடு தமிழ்த்திரைப்படத்தைத் தொடர்ந்து இந்தியிலும் வெளியாகியது.

    நம்நாடு திரைப்படம் தமி்ழ் திரையுலகில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. இதன் பிற மொழி ஆக்கங்கள் எதிர்பார்த்த முடிவைத் தரவில்லை.

    அந்த காலக்கட்டங்களில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாகிய திரு. சிவாஜி கணேசன் மற்றும் திரு. M.G.இராமச்சந்திரன் ஆகியோரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி இரசிகர்களை மகிழ்ச்சியில் தத்தளிக்க வைக்கும். அந்த மாதிரியான ஒரு காலகட்டத்தில் நம்நாடு படம் வெளியாவதற்கான சமயத்தில் திரு.சிவாஜிகணேசன் அவர்களின் சிவந்த மண் என்ற படமும் வரிசையில் இருந்தது.

    மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட சிவந்தமண் படத்தோடு சேர்ந்து கதைப்படி அத்துணை பிரம்மாண்டத்திற்குத் தேவையில்லாத நம்நாடு படத்தை வெளியிட தயாரிப்பாளர் திரு.நாகிரெட்டியாருக்கு சிறிது கலக்கம். தன் கலக்கத்தை திரு.M.G.இராமச்சந்திரன் அவர்களிடம் தெரியப்படுத்தி நம்நாடு திரைப்பட வெளியீட்டைத் தள்ளிப் போடலாம் என்ற தன் எண்ணத்தைத் தெரிவித்தார். அதற்கு சம்மதிக்காத திரு.M.G.இராமச்சந்திரன் அவர்கள் நம்நாடு படத்தை சிவந்தமண் படம் வெளியான அன்றைக்கே வெளியிடும்படிச் செய்தார். படம் மாபெரும் வெற்றி. மக்கள் திலகம் அவர்கள் திரு நாகிரெட்டியாரிடம் தம்பி திரு.சிவாஜிகணேசனுக்கு என்றும் தனக்கு என்றும் தனித் தனி இரசிகர்கள் உண்டு என்றும் தன் இரசிகர்கள் மீது தனக்கு என்றும் நம்பிக்கை உண்டு என்றும் கூறினார்.

    படம் வெளியான அன்று திரு.M.G.இராமச்சந்திரன் அவர்களும் திரு. நாகிரெட்டியார் அவர்களும் மேகலா தியேட்டரில் யாரும் அறியா வண்ணம் படம் பார்த்தனர். படத்தில் வாங்கய்யா வாத்தியாரய்யா என்ற பாட்டு வரும் பொழுது அனைத்து இரசிகர்களும் ஒன்றாக எழுந்து நின்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்து Once More Once More என்று கோசம் எழுப்பினர். அன்று தியேட்டரில் அக்காட்சி மறுஒளிபரப்பு செய்யப்பட்டது.

    படம் மிகப் பெரிய வெற்றியை எட்டியது. வசூலில் அன்றைய காலக்கட்டத்தில் ஒரு சாதனையைப் படைத்தது....Rmh

  4. #1953
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தேவருக்கு, கோபம் ஏற்படுத்தும் மூன்று விஷயங்கள்.
    தாமதம், வார்த்தை தவறுவது, மோசடி!
    தேவரின் அர்த்தமுள்ள இந்த கோபத்திற்கு அனைவரும் தலை வணங்கினர். ஒழுக்கம், உண்மை, கடுமையாக உழைப்பவர்களுக்கு அவர், ஒரு குழந்தையாகவே காட்சியளித்தார். அவர், 'டென்ஷன்' அடையும் போதெல்லாம், 'ஏண்ணே டென்ஷன் ஆகறீங்க... எல்லாம் ஒழுங்கா நடக்குது; கொஞ்சம் அமைதியா இருங்க. நான், இருக்கேன்ல பாத்துக்கறேன்...' என்று அவரை சமாதானப்படுத்தி, கோபத்தைக் குறைப்பார் எம்.ஜி.ஆர்.,
    ஒரு நாளில், எட்டு மணி நேரம் கால்ஷீட் வீதம், 40 கால்ஷீட்டுகளில், மொத்தப் படமும் முடிய வேண்டும். ரீ - ஷூட்டிங் என்பதே தேவர் பிலிம்ஸ் வரலாற்றில் கிடையாது.
    எந்த கதாநாயகியாவது நடிக்க தெரியாமல் சொதப்புவார். அதற்காக, பிலிமை, வீணடிக்க மாட்டார் தேவர்.
    நடிகை சொதப்பியதற்கு ஏற்றாற் போல் கதாசிரியர் மாராவை அழைத்து, வசனத்தை மாற்ற சொல்வார். அவரைப் பொறுத்த வரை, எல்லாமே ஒரே டேக்கில் முடிய வேண்டும். இதனாலேயே நடிக்க தெரியாத நடிகைகளை, தன் படத்தில் ஒப்பந்தம் செய்யவே மாட்டார்.
    தேவர், சினிமா இடி அமீன்; யாரும் அவரிடம் யோசனை கூறக்கூடாது; அது, அங்கு சாத்தியமும் இல்லை.
    பாமர மக்களுக்காகவே, படம் எடுப்பதாக கூறுவார். படத்தின் டைட்டில், வசனத்தில் வந்தாக வேண்டும். அதை, எம்.ஜி.ஆர்., மட்டும் பேசினால் போதாது; நடிக்கிறவர்கள் அத்தனை பேரும் சொல்ல வேண்டும் என நினைப்பார். ஒரு முறை, ஆரூர்தாஸ், 'அது வேணாமே... இத்தனை படங்களில் தொடர்ந்து அதையே செய்திருக்கோம்; இதிலுமா...' என்றார். அன்றைய டிஸ்கஷனை, அதோடு முடித்து கொண்டார் தேவர்; அடுத்த படத்தில், அய்யாபிள்ளையை வசனம் எழுத வைத்தார்.

    தனக்கான காட்சிகள் முடிந்தவுடன், 'மேக்-அப்' அறைக்குள் போய் விடுவார் எம்.ஜி.ஆர்., அங்கு பல முக்கியஸ்தர்கள், கட்சிக்காரர்கள் அவருக்காகக் காத்திருப்பர். அவர்களுக்கு குடிக்க ஏதாவது வேண்டுமென்று சைகை செய்வார்
    எம்.ஜி.ஆர்., பையன்களைத் தேடாமல், தானே காபி, டீ, கூல்டிரிங்ஸ் எடுத்துப் போவார் தேவர்.
    எம்.ஜி.ஆரின் மேக்-அப் அறைக்குள், அவரது மேக் - அப் மேன் பீதாம்பரம் தவிர, அன்னியர்கள் பிரவேசிக்கவே முடியாது; கூடாது. எம்.ஜி.ஆர்., அழைக்கும் வி.ஐ.பி.,க்கள் மட்டுமே அங்கு செல்லலாம். பட முதலாளிகள் கூட அவரது அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாது.
    எம்.ஜி.ஆரின் தயாரிப்பாளர்களில், தேவர் மட்டுமே அவரது மேக்-அப் அறைக்குள் சுதந்தரமாகச் செல்வார். அது மட்டுமல்ல,
    எம்.ஜி.ஆருக்கான, 'ஷாட்' தயாராகி விட்டால், 'அண்ணே மன்னிச்சுக்குங்க...' என்றபடியே எம்.ஜி.ஆரை கையைப் பிடித்து இழுத்து, செட்டுக்குள் அழைத்துச் செல்வார். அதிர்ந்து போய் நிற்பர் எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்த விருந்தினர்.
    தேவர், எப்போதும் ஒன் - மேன் ஆர்மியாகவே செயல்பட்டார். சகலமும் அவரே! எம்.ஜி.ஆர்., படப்பிடிப்புக்கு வர தாமதமாவது போல தெரிந்தால், ராமாவரம் தோட்டத்திற்கு அவரே சென்று விடுவார். ஷூட்டிங்கில் எம்.ஜி.ஆர்., இருந்தால், தேவர் அவருடனேயே இருப்பார். எம்.ஜி.ஆரும், தேவர் படங்களில் நடிக்கும் போது, ப்ரீயாக இருப்பார். அவரது தலையீடு அறவே இருக்காது. பொதுவாக, தன் படங்களின் எடிட்டிங்கில் எம்.ஜி.ஆரே நேரடியாகப் பங்கு கொள்வார். அவர் ஒப்புதல் பெறாத காட்சிகள், படத்தில் வராது; ஆனால், திருமுகமே, ஒரு எடிட்டர் என்பதால், தேவர் பிலிம்ஸில் எடிட்டிங் மேஜையில், எம்.ஜி.ஆர்., உட்கார மாட்டார்.
    எம்.ஜி.ஆர்., தன் பட அதிபர்களை, 'ஆண்டவனே' என்றும், 'முதலாளி சவுக்கியமா?' என்றே நலம் விசாரிப்பார். தேவரை மட்டும், 'அண்ணே...' என்று பாசமாக அழைப்பார்.
    எம்.ஜி.ஆரை வைத்து, தேவர் தயாரித்த படங்களில் நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், வசனகர்த்தா என்று அனைவருக்குமே மிக அதிக சம்பளம் கிடைத்தது....vrh

  5. #1954
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒருவருக்கு உதவி செய்யவேண்டும் என்று நினைத்துவிட்டால், அதை உடனே செய்துவிடவேண்டும், நேரம் காலம் பார்க்கக்கூடாது, புயலோ மழையோ எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தன்னுடைய உதவி தேவைப்பட்டவருக்கு அந்த உதவியை செய்து முடித்த பின்பு தான் எம்.ஜி.ஆருக்கு சாப்பாடே இறங்கும்.

    #உதவும்_வரை_நிம்மதி_ஏது

    எம்.ஜி.ஆர் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால் நேரம், காலம் பார்க்க மாட்டார். தான் எவ்வளவுதான் கடினமான பணியில் இருந்தாலும் தேவைப்படும் நபருக்கு சரியான நேரத்தில் உதவி செய்யக் கூடியவர். அதிலும் வசதியுடன் வாழ்ந்து பின்னர் நொடித்துப் போனவர் என்றால் அவர்களுக்கு உதவும்வரை அவர் மனம் அமைதி அடையாது.,

    #எம்_ஜி_ஆரின்_உதவியாளர்

    அந்த உதவி இயக்குநரின் பெயர் கோபாலகிருஷ்ணன். பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு உதவியாக இருந்தவர். வேறு பல படங்களுக்கும் உதவி இயக்குநராக இருந்துள்ளார். நல்ல நிலையில் இருந்தவர், காலச் சூழலில் நொடித்துப் போனார். சென்னை நங்கநல்லூரில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் சிரமப்பட்டு வந்தார்.

    #கை_விரித்த_நண்பர்கள்

    கிடைத்த சிறிய வேலைகளை செய்து குடும்பத்தினரின் பசியாற்றுவதே அவருக்கு பெரும்பாடாக இருந்தது. வீட்டு வாடகையைக்கூட அவரால் கொடுக்க முடியவில்லை. சில மாதங்கள் வாடகை பாக்கி இருந்த நிலையில், வீட்டின் உரிமையாளர் பொறுமை இழந்தார். ஒருநாள், வீட்டில் உள்ள தட்டுமுட்டு சாமான்களை எடுத்து வெளியே வீசி விட்டு வீட்டையும் உரிமையாளர் பூட்டி விட்டார். நிர்க்கதியாக நின்ற குடும்பத்தினரை நெருங்கிய நண்பர் வீட்டில் விட்டுவிட்டு தனது உறவினர்கள், நண்பர்களிடம் உதவி கேட்டார் கோபாலகிருஷ்ணன். அவருக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே.

    #எம்_ஜி_ஆர்_உதவி_செய்வாரா

    என்ன செய்வது என்று தெரியாத நிலையில், கோபாலகிருஷ்ணனுக்கு எம்.ஜி.ஆரின் நினைவு வந்தது. பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரோடு அவருக்கு தொடர்பு இல்லை. தன்னை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருப்பாரா? நினைவில் இருந்தாலும் நெருக்கம் இல்லாத நிலையில் உதவி செய்வாரா? என்று அவருக்கு சந்தேகம். இருந்தாலும், கடைசி முயற்சியாக எம்.ஜி.ஆரை பார்த்துவிடலாம் என்று அவரைத் தேடிச் சென்றார்.

    #ஸ்டுடியோவில்_காத்திருப்பு

    அப்போது, எம்.ஜி.ஆர் வாஹினி ஸ்டுடியோவில் பட்டிக்காட்டு பொன்னையா படப்பிடிப்பில் இருந்தார். படப்பிடிப்பு முடியும்வரை காத்திருந்தார் கோபால கிருஷ்ணன். படப்பிடிப்பு முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர், சோகத்துடன் நின்றிருந்த கோபாலகிருஷ்ணனை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டார். அகமும் முகமும் மலர அவரை அழைத்து நலம் விசாரித்தார்

    #எம்_ஜி_ஆர்_ஆறுதல்
    கோபாலகிருஷ்ணனின் முகத்தையும் உடையையும் பார்த்தே அவரது நிலைமையை எம்.ஜி.ஆர் தெரிந்துகொண்டார். அவர் அன்போடு விசாரித்ததைப் பார்த்து, கோபாலகிருஷ்ணனுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்தது. அவரை சமாதானப்படுத்தி எம்.ஜி.ஆர். ஆறுதல் கூறினார். ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தனது நிலைமையையும் குடும்பத்தினரை நண்பர் வீட்டில் விட்டுவிட்டு வந்திருப்பதையும் குமுறித் தீர்த்தார் கோபாலகிருஷ்ணன்.

    #ஏன்_இவ்வளவு_லேட்டா_வந்தீங்க

    அதைக் கேட்டு துடித்துப்போன எம்.ஜி.ஆர், ‘உங்கள் நிலைமையை ஏன் முன்பே என்னிடம் தெரிவிக்கவில்லை என்று அவரை அன்போடு கடிந்துகொண்டார். வாடகை பாக்கி எவ்வளவு? என்று கேட்டார். மூவாயிரம் ரூபாய் என்று பதிலளித்தார் கோபாலகிருஷ்ணன். அவரை சாப்பிட வைத்து கைச்செலவுக்கு சிறிது பணம் கொடுத்ததுடன், தனது உதவியாளர்களிடம் அவரது வீட்டு முகவரியை கொடுத்துவிட்டு போகச் சொன்னார். அவரும் எம்.ஜி.ஆரின் உதவியாளரிடம் தன்னுடைய முகவரியை கொடுத்துவிட்டு திரும்பி வந்துவிட்டார்.

    #இந்த_மழையில்_உதவி_வருமா

    எம்.ஜி.ஆரை கோபாலகிருஷ்ணன் பார்த்தது பிற்பகலில். அன்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டோம். எப்படியும் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொட்டும் மழையிலும் பூட்டப்பட்டிருந்த தனது வாடகை வீடு முன்பு தாழ்வாரத்தில் ஒடுங்கியபடி அமர்ந்து சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன்.

    #மழையிலும்_தேடிவந்த_உதவி

    அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அவர் வீட்டுக்கு இரண்டு வீடுகள் தள்ளி ஒரு கார் வந்து நின்றது. அதில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள். தன்னைப் பற்றி அவர்கள் விசாரிப்பதை அறிந்து, ஓடோடிச் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கோபாலகிருஷ்ணன். அவரிடம் எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னதாக பேப்பரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை உதவியாளர்கள் கொடுத்தனர்.

    #மழையுடன்_போட்டி_போட்ட_ஆனந்தக்_கண்ணீர்

    இதில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. வாடகை பாக்கியான மூவாயிரம் ரூபாய் போக மீதிப் பணத்தை உங்களையே வைத்துக்கொள்ளச் சொன்னார் என்று கோபாலகிருஷ்ணனிடம் எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தெரிவித்தனர். நன்றிப் பெருக்கில் மழையுடன் போட்டியிட்டபடி, கோபாலகிருஷ்ணனின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. பின்னர் அவருக்கு சில வாய்ப்புகளும் கிடைத்தன. இது எம்.ஜி.ஆரின் உதவிதான் என்று தெரிந்து கொண்டார் கோபாலகிருஷ்ணன். அப்போது பக்கத்து வீட்டு ரேடியோவில் ஒரு பாட்டு அந்த மழையின் சத்தத்தையும் தாண்டி ஒலித்தது அவருடைய காதுகளில் கேட்டபோது அவருடைய ஆனந்தக் கண்ணீர் மேலும் அதிகரித்தது.

    அவன் வீட்டுக்கு கதவுகள் இல்லை

    அந்த வாசலில் காவல்கள் இல்லை

    அவன் கொடுத்தது எத்தனை கோடி

    அந்தக் கோமகன் திருமுகம் வாழி... வாழி

    இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அன்றிரவு வெகுநேரம் வரை எம்.ஜி.ஆர் சாப்பிடாமல் இருந்தார். தனது உதவியாளர்கள் திரும்பி வந்து கோபாலகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துவிட்டோம் என்று தெரிவித்த பிறகுதான் சாப்பிடச் சென்றார்

    #தொடரும்

    சிவதாஸ்-கிருஷ்ணசாமி...

  6. #1955
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    புரட்சித்தலைவர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
    #ஆசியோடு_நண்பர்கள்
    #அனைவருக்கும் #இனிய_வியாழக்கிழமை_காலை #வணக்கம்...

    புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த திரைப்படங்களை வரிசைப்படி பார்த்து வருகின்றோம் அந்த வகையில் இன்று மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட சர்வாதிகாரி திரைப்படம் பற்றி பார்ப்போம்...

    சர்வதிகாரி என்பது 1951 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்,
    புரட்சி தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், எம். என். நம்பியார் வில்லனாக நடித்தார்.

    இது நம்பியாரை ஒரு முக்கிய நட்சத்திரமாக இந்த திரைப்படம் நிறுவியது. இந்தபடம் சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது மற்றும் திருச்சியில் அதிகபட்ச ஓட்டம் - 141 நாட்கள். இந்த திரைப்படம் நடிகை
    டி. பி.முத்துலட்சுமியை நகைச்சுவை நடிகராகவும் துணை நடிகையாகவும் தன்னை நிலை நிறுத்த
    வைத்தது

    இயக்கியது டி. ஆர்.சுந்தரம்
    தயாரித்த டி. ஆர்.சுந்தரம்
    எழுதியது ஏ.வி.பி.ஆசைதம்பி
    கதை மற்றும் திரைக்கதை
    கோ.தா.சண்முகசுந்தரம்

    எம்.ஜி.ஆர்
    அஞ்சலி தேவி
    எம்.என்.நம்பியார்
    சித்தூர் வி.நாகையா
    ஏ.கருணாநிதி
    டி. பி.முத்துலட்சுமி

    இசை எஸ்.தட்சிணாமூர்த்தி சினிமாடோகிராபி எம்.மஸ்தான்
    ஜி. ஆர். நாதன்
    எடிட்டிங் எல்.பாலு

    மன்னர் வகை படங்களில் இந்த படமும் ஒன்று மணிப்பூரின் கைப்பாவை மன்னரை (புலிமூட்டை ராமசாமி) கவிழ்ப்பதற்கான வடிவமைப்புகளைக் கொண்ட ஒரு லட்சிய மந்திரி (மகாவர்மன்) தளபதி (உக்ரேசனார்) மற்றும் அவரது மெய்க்காப்பாளர் (பிரதாபன்) ஆகியோரின் பிரபலத்தால் ஒரு தடுமாற்றத்தைக் காண்கிறார் . பிரதாபனை கவர்ந்திழுக்க அவர் ஒரு இளம் பெண்ணை (மீனா தேவி) அனுப்புகிறார், ஆனால் அவள் அவனை காதலிக்கிறாள். பல திருப்பங்களுக்கு பிறகு, மகாவர்மன் பிரதாபனுடன் ஒரு அற்புதமான சண்டையில் அம்பலப்படுத்தப்படுகிறார்.
    அன்று முதல் ஜனாதிபதியாக உக்ரேசனார் தேர்ந்தெடுக்கப்பட்டார், பிரதாபன் புதிய தளபதியாக நியமிக்கப்படுகிறார். கடைசியில் மணிப்பூரி இராச்சியம் இப்போது ஒரு குடியரசாக காட்டப்படுகின்றது..

    படத்தின் நடிகர்கள் மற்றும் அவர்களின்
    கதாபாத்திரம்

    பிரதாபனாக
    எம்.ஜி.ஆர்

    உக்ரேசனராக
    வி.நாகையா

    மகாவர்மனாக
    எம்.என்.நம்பியார்

    ராஜாவாக
    புலிமூட்டை ராமசாமி

    வைராகியமாக
    ஏ.கருணாநிதி

    பாலாதேவாக
    வி.கே.ராமசாமி

    மோகனாக
    கே.கே.சவுந்தர்

    மீனா தேவியாக அஞ்சலி தேவி

    கற்பகமாக எம்.சரோஜா

    ஜெயலட்சுமி

    எஸ். ஆர். ஜானகி

    அங்கமுத்து

    பூஞ்சோலை என முத்துலட்சுமி

    நடனம்

    குமாரி கமலா

    அன்புடன்
    படப்பை
    ஆர். டி. பாபு...

  7. #1956
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [#கேட்காமலே #கொடுப்பவர்

    பழம்பெரும் நடிகர் வீரப்பன் அவர்களின் அளித்து பேட்டியில் இருந்து:

    #மக்கள்திலகம் முதலமைச்சராக இருந்த பொது, ஒருநாள் நான் ராமாவரம் தோட்டத்திற்கு போயிருந்தேன். அப்போது
    ஒரு பழைய நாடக நடிகர் அங்கு வந்திருந்தார்.

    அவரிடம் என்ன விஷயமாக வந்திருக்கிறீர்கள?'
    என்று கேட்டேன்.

    அவர் தயங்கித் தயங்கி 'குடும்பமே பட்டினி..ஒன்றும் முடியவில்லை. நான் சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன்... ஏதாவது உதவி கேட்கலாம்னு வந்திருக்கேன்... என்றார்!

    சரி உட்காருங்க...! 'சின்னவர் வெளிய
    வந்ததும் கேளுங்க..செய்வார்' என்றேன்...

    சிறிது நேரம் கழித்து எம்ஜிஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று
    அந்த நாடக நடிகரைப் பார்த்து, 'எப்படி
    வந்தே' என்று சைகயால் கேட்டுவிட்டு,
    "இருந்து சாப்பிட்டுவிட்டுத் தான் போகணும்"
    என்று சொல்லி விட்டு,காரில்
    ஏறிச் சென்றுவிட்டார்.

    அந்த நடிகரோ ஒன்றும் புரியாமல்
    தவிப்புடன் நின்றார்.
    "இருந்து சாப்பிட்டுவிட்டு போகச்
    சொன்னாருல்ல, மதியம் சாப்டுட்டு
    போங்க " என்றேன்...

    "நான் எப்படிச் சாப்பிடுவது..என்
    குடும்பமே பட்டினியா இருக்கும் போது? "
    என்றார் அவர்.

    'நான் ஒரு ஐநூறு ரூபா தருகிறேன்,
    அத வச்சு சமாளியுங்கள்' என்றேன்...
    சந்தோஷப்பட்டார். மதியம் அவர்
    சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது
    எம்ஜிஆர் கோட்டையிலிருந்து வந்து
    விட்டார்.

    அந்த நடிகரிடம், மதியம் திரும்ப
    எம்ஜிஆர் வெளியே புறப்படும்போது
    அவரைப் பார்த்து சொல்லிவிட்டுப்
    போங்க..என்றேன். "சரி.." என்றார்.

    வெளியே வந்த எம்ஜிஆர் அவரைப்
    பார்த்து " சாப்பிட்டுவிட்டாயா " என்று
    கேட்டு விட்டு காரில் ஏறிவிட்டார். அந்த
    நடிகருக்கோ ஒரே பதற்றம். புறப்பட்ட கார்
    மீண்டும் நின்றது. எம்ஜிஆர் சைகையால் அந்த நடிகரை அழைத்தார்.
    அவர் காருக்கு அருகில் சென்று சற்று தள்ளி நிற்க...நெருக்கமாக அழைத்தார்.
    அவரும் காருக்கு மிக அருகில் போய்
    நிற்க, சட்டென்று அவருடைய பாக்கட்டில்
    ஒரு கவரை யாருக்கும் தெரியாமல்
    எம்ஜிஆர் வைத்துவிட்டார். கார் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

    அவர் என்னருகே வந்து கவரைப்
    பிரித்தார். அதில் பத்தாயிரம் ரூபாய்
    இருந்தது. அவர் கண்கள் கலங்கிப் போய்
    விட்டது. அவருடைய ஆனந்தக் கண்ணீரைக் கண்டு அவரைவிட
    எனக்குத்தான் அதிக சந்தோஷம்...

    மறுநாள், திரும்ப தோட்டத்திற்கு
    சென்றிருந்த போது எம்ஜிஆரிடம்
    கேட்டேன்...

    "கஷ்டத்துல வந்த அந்த
    நடிகரை சாப்பிடச் சொன்னீங்க, ஆனா
    அவரப் பத்தி எதுவுமே அவர்கிட்ட
    கேட்காம போயிட்டீங்க...
    திரும்ப மதியம்
    வந்து அப்பவும் காருல ஏறிட்டீங்க...
    அந்த
    நடிகர் ரொம்பவும் பதறிப் போயிட்டாரு...
    இவ்வளவுக்கும் பிறகு அவரைக் கூப்பிட்டு பாக்கட்டுல பத்தாயிரம் ரூபா
    வச்சு அனுப்புறீங்க... ஏன் அண்ணே
    அப்படிச் செஞ்சீங்க...? என்று கேட்டேன்.

    சில கணங்கள் என்னை அமைதியாகப்
    பார்த்துவிட்டு அவர் சொன்னார்.

    "எப்பவும் கஷ்டப்பட்டு வர்றவங்களை
    அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக்
    கூடாது. அதுவும் அவர் கொஞ்சம் கூச்ச
    சுபாவம் உள்ளவர். கேட்க சங்கடப்
    படுவார். அவரா கேட்டா கம்மியாத் தான்
    கேட்டிருப்பார்.அதனால் தான் நம்மளா
    கொடுத்திடனும்..." என்றார்.

    எனக்குத்தான் இப்ப கண்கலங்குச்சு.
    அவருடைய கொடை உள்ளம் பற்றியும்
    அவரது ரத்தத்தில் கலந்திருந்த அந்த
    ஈகை இயல்பு பற்றியும் இருவேறுகருத்துக்கு எப்பொழுதுமே இடமில்லை.

    அதனால் தான் அவர் இன்னும்
    வாழ்ந்து கொண்டிருக்கிறார்!...bpn

  8. #1957
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இரட்டையர்கள் சேகர் மற்றும் ஆனந்த்,(எம் ஜி ஆர்) அவர்களின் தாய் மங்களத்துடன் (பண்டரிபாய்) சேர்ந்து, தந்தை ராம்நாதன் (ராமதாஸ்) நாகப்பனால் (நம்பியார்) கொலை செய்யப்பட்டதைக் காண்கிறார், இது ஒரு புதிய வாழ்க்கையைத் தொடர குடும்பத்தை மெட்ராஸுக்குச் செல்லத் தூண்டுகிறது. ஆனால் சேகர் (அண்ணன் எம்ஜி.ஆர்) கொஞ்சம் தண்ணீர் எடுக்க ரயிலில் இருந்து இறங்கும்போது, ​​ரயில் போய்விடுகிறது. நாகப்பன் தப்பித்து வரும் போது தண்டவாளத்தில் சேகரை கண்டு தூக்கி செல்கிறான். அதே மனிதன் தான் தன் தந்தையை கொன்றான் என்பது சேகருக்குத் தெரியாது.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தன்னை "பாபு" என்று அழைக்கும் சேகர், ஒரு குற்றவாளி. நகரத்தில் வாழும் ஆனந்த் (தம்பி எம்.ஜி.ஆர்) ஒரு கிளப்-நடனக் கலைஞர், அவரோ பாபுவோ ஒருவருக்கொருவர் இருப்பதை அறிந்திருக்கவில்லை. ஒரு கொள்ளை சம்பவத்தின் போது, ​​பாபு கடுமையாக காயமடைந்து மங்களத்தின் வீட்டில் தஞ்சம் புகுந்தாலும், அவளை தனது தாய் என தெரியாமல் அவள் மேல் ஒரு பாசம் வைக்கிறார்., ஆனால் நாகப்பன் (இப்போது பூபதி என்று அழைக்கப்படுகிறார்) இதைப் பற்றி அறிந்ததும், அவர் பாபுவிடமிருந்து பாசத்தை ஒழிக்க முயற்சிக்கிறார்.

    மற்றொரு போலிஸ் என்கவுண்டரின் போது, ​​பாபு மீண்டும் காயமடைகிறார், ஆனால் இந்த முறை பைத்தியக்காரத்தனமாகி, மறதி நோயாகவும் மாறுகிறார். டி. ஐ. ஜி. மோகன் (சுந்தர்ராஜன்)ஆனந்தைக் காண்கிறார், அவருக்கும் பாபுவுக்கும் இடையிலான ஒற்றுமையைப் பார்த்தபின், கும்பலின் அனைத்து ரகசியங்களையும் பெற்று அவர்களை கைது செய்ய பாபுவாக செயல்பட அறிவுறுத்துகிறார். ஆனந்த் ஒப்புக்கொள்கிறார், ஆனால் பின்னர் பாபு தனது சகோதரர் என்பதை உணர்ந்தார். இதை உணராத ஆனந்தின் காதலி ஜெயா (ஜே.ஜே) ஆனந்தின் பிரீஃப்கேஸில் நிறைய பணம் இருப்பதைக் கண்டு, உண்மையை அறியாத அவர், ஆனந் ஒரு குற்றவாளியாக மாறிவிட்டதாக நினைத்து, அவருடன் பேச மறுக்கிறார். மங்களமும் இதை அறிந்து, மனம் உடைந்து போகிறது. இருப்பினும், மங்கலமும் ஜெயாவும் ஆனந்தின் உண்மையை அறிந்தவுடன் விரைவில் சமரசம் செய்து கொள்கிறார்கள், மேலும் பாபு அவருடைய சகோதரர் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.

    ஆனந்த், பாபுவாக ஆள்மாறாட்டம் செய்கிறார் என்பதை பாபுவின் காதலி ஆஷா (ராஜ ஶ்ரீ) கண்டுபிடித்தார், ஆனால் அவர் அவளிடம் சரணடைந்து பாபுவின் மருத்துவ நிலை குறித்து விளக்குகிறார், பின்னர் தன்னை பாபுவின் சகோதரர் என்று வெளிப்படுத்துகிறார். ஆஷா அவரை மன்னிக்கிறார், பின்னர் இருவரும் நாகப்பனையும் அவரது ஆட்களையும் தோற்கடிக்க அணிவகுக்கின்றனர். ஆனந்தைப் பற்றி அறியும்போது அவரைக் கொல்ல பாபு பின்னர் சிறையிலிருந்து தப்பிக்கிறான், ஆனால் ஜெயாவால் ஆனந்த் தனது சகோதரன் என்று அறிகிறான். ஆனால் பாபு இதை நம்பவில்லை, ஜெயாவைக் கடத்துகிறான். பின்னர் அவரை மங்களம் தடுத்து நிறுத்துகிறார், அவர் தனது மகன் என்றும் ஆனந்த் அவரது சகோதரர் என்றும் உணர வைக்கிறார். நாகப்பன் தனது தந்தையை கொன்றதை நினைவில் கொண்டு, நாகப்பனை தோற்கடிக்க ஆனந்த் உடன் இணைகிறார், பின்னர் கைது செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து, பாபு "சேகர்" ஆகத் திரும்பி, தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைகிறார்.
    அருமையான பாடல்கள் கொண்ட அற்புத திரைப்படம் .நாகேஷ் அவர்கள் கிழவி வேடத்தில் வந்து வி.கே.ராமசாமியுடன் பண்ணும் காமெடி கலாட்டா ஹைலைட்.........Sr.Bu

  9. #1958
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சித்தலைவர் கொடுங்கோலன் ஜெயவர்த்தனே-வுக்கு விடுத்த தில்லான எச்சரிக்கை..!

    தமிழக முதல்வர் #எம்ஜிஆர் 1983-ஆம் ஆண்டு ஆகஸ்டு 30-ஆம் தேதி கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.

    "தமிழர்கள் கட்டுப்பட்டிருக்கிறார்கள். கட்டுண்டு இருக்கிறார்கள். ஜெயவர்த்தனே தயவு செய்து தமிழகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிட வேண்டாம்’ என்று மட்டும் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு,

    ‘இருப்பது ஓர் உயிர் தான், போவதும் ஒருமுறைதான்’ என்ற அறிஞர் அண்ணா கூறியதை தெரிவித்துக் கொள்வேன்.

    'ஈழத்தில் நடைபெறுகின்ற இனப்படு கொலை காரணமாகத் தமிழகத்தில் உள்ள ஐந்துகோடி தமிழர்களும் சீறிப்பாயக்கூடிய நிலைமையை ஜெயவர்த்தனே நிச்சயமாக ஏற்படுத்தக் கூடாது' என்று தமிழக முதல்வர் என்ற முறையிலும் அனைத்திந்திய அண்ணா தி.மு.கவை நிறுவியவன் என்ற
    முறையிலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    #மக்கள்திலகத்தின் இந்த அறிக்கை, எந்த மாநில முதல்வருக்கும் இல்லாத
    துணிச்சலை பறைசாட்டியது...

    சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் நம் தலைவர் ஹீரோதான்..........Rmh

  10. #1959
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அள்ளிக்கொடுத்த எம்ஜியாரும்...கிள்ளிக்கொடுத்த கருணாநிதியும்...

    எனது விளம்பரப்படங்களுக்கு புரடக்*ஷன் மேனேஜராக பணியாற்றியவர் மறைந்த எனது நண்பர் பாகனேரி ராஜேந்திரன்.அவர் சொன்ன தகவல் இது...

    ராஜேந்திரனது தாய்மாமன் சிவகங்கை நகர திமுக செயலாளர். திமுக தோன்றிய காலத்திலிருந்து திமுகவில் இருப்பவர். எம்ஜியாரை வைத்து சிவகங்கை பகுதிகளில் நாடகமெல்லாம் போட்டு அவரோடு மிக நெருக்கம். இருந்தும் கருணாநிதி மீது உள்ள பிடிப்பால்... எம்ஜியார் அதிமுக தொடங்கியபோது போக மறுத்து விட்டார்.

    தனது மகளுக்கு திருமணம் நிச்சயித்து... பத்திரிக்கை அடித்து... தனது தானைத்தலைவனுக்கு முதல் பத்திரிக்கை வைத்து விட்டு கல்யாணச்செலவுக்காக வெறும் ஏழாயிரம் உதவி கேட்டார். கோபாலபுரத்து சீமான் 500 ரூபாய் கொடுத்து விட்டு... நான் கல்யாணத்துக்கு வந்தா...வரவேற்ப்பு,கட்சிக்காரனுக்கு சாப்பாடு அது..இதுன்னு எக்கச்சக்கமா செலவு வரும்.
    நான் வராததுதான் நான் உனக்கு செய்யும் பேருதவி....என தனது நரி சிரிப்பை உதிர்த்து இருக்கிறார். .

    உடைந்து போனார்... தனது உதிரத்தை திமுகவுக்கு உறிஞ்சக்கொடுத்தவர். பாகநேரி ராஜேந்திரன் அதிமுக உறுப்பினர். "வாங்க மாமா...ராமாவரம் தோட்டத்துக்கு போவோம்..." என இழுத்திருக்கிறார்.

    "அவரை வச்சு நாடகம் போட்ட காலத்துல... பழக்கம். அவர் தனிக்கட்சி ஆரம்பிச்ச பிறகு... தொடர்பு விட்டு போச்சு...அவரை எதிர்த்து அரசியல் பண்ணிட்டு... அவர்கிட்ட உதவிக்கு எப்படி போய் நிற்க முடியும்..." என தயங்கியிருக்கிறார்.

    "நீ வா மாமா...தலைவர் எப்பவுமே பழசை மறக்க மாட்டாரு.." என தைரியம் சொல்லி அழைத்து சென்றார்.

    முதல்வர் எம்ஜியாரை.... வீட்டில் பார்க்க ஏகப்பட்டக்கூட்டம். எம்ஜியார் காரில் ஏறி புறப்பட்டு விட்டார். பொன்மனச்செம்மலின் பார்வையில் பாகநேரியும்,தாய் மாமனும் பட்டு விட்டனர்.
    காரை நிறுத்தி அருகில் அழைத்து....

    "இங்கேயே இருந்து... சாப்பிட்டு.... வெய்ட் பண்ணுங்க... கோட்டைக்கு போய்ட்டு வருகிறேன்....'

    -என பாசக்கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு போய் விட்டார்.

    மத்தியானம் மட்டன் கோழியோடு சாப்பாடு. உண்ட மயக்கத்தில்... ஒரு குட்டித்தூக்கம்.
    தலைவர் கூப்பிடுகிறார் என எழுப்பி விட்டனர்.

    வந்தவர்களை வரவேற்று...
    "சாப்பிட்டீங்களா... என்ன விஷயமா.... என்னை பார்க்க வந்தீர்கள்?' என கேட்டிருக்கிறார்.

    திருமணப்பத்திரிக்கையை நீட்டி இருக்கிறார்.
    ஏழாயிரம் கேட்டு... கோபால புரத்தில் ஏமாந்த சோகத்தை விவரித்திருக்கிறார்.

    ஒரு சிறு புன் சிரிப்பை மட்டும் தவழ விட்டு...
    தனது உதவியாளரிடம் சொல்லி...
    20,000 ரூபாய் வரவழைத்து... கொடுத்து விட்டு...

    "அந்தக்கட்சியிலேயே இரு....
    நல்ல படியா கல்யாணத்தை நடத்தி முடி..." என வாழ்த்தி இருக்கிறார் எட்டாவது வள்லல்.

    ஊருக்கு வந்தவர்... திமுகவிலிருந்து விலகி...
    அதிமுகவிலும் சேராமல் வாழ்ந்து... மறைந்து போய் விட்டார்....Baabaa

  11. #1960
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நிலைத்து நிற்கும் புகழ் மன்னர்
    நீடித்து நிற்கும் பெருமைக்குரிய பேரரசர்
    அழியாத புகழின் அதிபதி பூலோக சக்கரவர்த்தி
    மக்கள் அனைவரும் இறைவனாக கடவுளாக நம்பிக்கையுடன் போற்றி வணங்கப்படுகிற ஒரேயொரு தமிழர்களின் உண்மையான தலைவர் பெருந்தகை மக்கள் திலகம்

    கிட்டத்தட்ட சுமார் 100/ ஆண்டுகளாக தொடர்ந்து அனைவரது இதயத்திலும் பேச்சிலும் மூச்சிலும் எழுத்திலும் கலந்து நிறைந்து நிற்கும் ஒரேயொரு திருநாமம் உண்டு என்றால் அது எம் ஜி ஆர் என்ற புனித பெயர்தான் ��

    தினம் தோறும் அனைவராலும் உச்சரிக்க படுகின்ற ஒரேயொரு திருநாமம் எம் ஜி ஆர் என்ற புனிதமான தெய்வீக திருப்புகழ் பெற்ற பெயர் தான் ��

    100/ ஆண்டுகள் என்ன 1000/ ஆண்டுகள்
    என்ன
    ஆண்டுகள் ஆயிரக்கணக்கில் ஆனாலும் அழியாத புகழின் அதிபதி பேரரசர் வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் ��

    பொன் மனம் கொண்ட வள்ளல் பெருமான் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான தெய்வீக நல்லாசி களுடன் ��

    எனதருமை நண்பர்கள் அனைவருக்கும் இனிதான நல் அழகிய இளம் காலை பொழுது வணக்கம் அன்பர்களே ��

    எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் என்றும் கிடைத்திட எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும் ��

    என்றும் என்றென்றும் அன்புடன் நன்றியுடன் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் கோடானுகோடி ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளில் நானும் ஒருவன்✌️������.........smn

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •