Page 2 of 210 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ரசிகர்களும் மக்களும் விரும்பிய ஒரே நடிகர் மக்கள் திலகம் எம்ஜிஆர் .( அதற்க்கான results பல தடவைகள் நிரூபிக்கபட்டுள்ளது உலகறிந்த உண்மை)
    எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் தலைப்பே அதற்கு உதாரணம் .

    நாடோடி மன்னன்
    மன்னாதி மன்னன்
    தர்மம் தலைகாக்கும்
    நல்லவன் வாழ்வான்
    நீதிக்கு பின் பாசம்
    என் கடமை
    தொழிலாளி
    தெய்வத்தாய்
    படகோட்டி
    எங்க வீட்டுப்பிள்ளை
    ஆயிரத்தில் ஒருவன்
    கலங்கரை விளக்கம்
    ஆசை முகம்
    நான் ஆணையிட்டால்
    முகராசி
    சந்திரோதயம்
    தனிப்பிறவி
    காவல்காரன்
    விவசாயி
    குடியிருந்த கோயில்
    புதியபூமி
    ஒளிவிளக்கு
    நம்நாடு
    தலைவன்
    எங்கள் தங்கம்
    நீரும் நெருப்பும்
    சங்கே முழங்கு
    நல்ல நேரம்
    நான் ஏன் பிறந்தேன்
    அன்னமிட்டகை
    நேற்று இன்று நாளை
    உரிமைக்குரல்
    சிரித்து வாழ வேண்டும்
    நினைத்ததை முடிப்பவன்
    நாளை நமதே
    இதயக்கனி
    பல்லாண்டு வாழ்க
    நீதிக்கு தலை வணங்கு
    உழைக்கும் கரங்கள்
    ஊருக்கு உழைப்பவன்
    இன்று போல் என்றும் வாழ்க
    மீனவ நண்பன்
    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் ...... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [எழுத்தாளர் மாலனின் வலைப்பூ

    தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.

    அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.

    சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
    "இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.

    ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
    டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.

    அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன்.

    Cont...]......... Thanks...

  4. #13
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Cont-2
    புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்தது புரட்சி தலைவர்,அவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
    பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது !....... Thanks...

  5. #14
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் மறைந்தபோது எனக்கு 10 வயது எங்க வீட்டுக்கு பின்புறம் இரயில் பாதை அந்த இரண்டு நாட்களும் எல்லா ரயில்களும் இது போலவே சென்றது அப்பா என்னை அழைத்து கொண்டு தலைவரை பார்த்து விட வேண்டும் என்று கிளம்பினார் ஆனால் அம்மா ஒவ்வொரு ரெயிலிலும் இவ்வளவு கூட்டம் போகிறது பிள்ளையை அனுப்ப மாட்டேன் என்று சொல்லி விட்டார் தலைவரை பார்க்க வேண்டும் என்கிற ஆசை நிறைவேறாமலே போய்விட்டது...... Thanks Chezhiyan...

  6. #15
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மறக்க முடியாத பயணம்...
    நிறைய ரத்தத்தின் ரத்தங்களுக்கு--
    இதைத்தான் நடிகர் சோ சொல்வார்---
    "எல்லா நடிகளுக்கும் ரசிகர்கள் உண்டு.ஆனால் MGR க்கு மட்டுமே
    பக்தர்கள் உண்டு"....... Thanks... Kumaravel...

  7. #16
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    சினிமா, அரசியல் என இரட்டைக் குதிரையிலும் உச்ச வேகத்தில், உயரத்தில் #எம்.ஜி.ஆர் பயணித்துக்கொண்டு இருந்த சமயம் அது...

    ஆனந்த விகடனில் 'நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை எழுதினார்... #மக்கள்திலகம்...

    வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் முதல் அத்தியாயமே எம்.ஜி.ஆரின் கையெழுத்தில் இப்படித்தான் தொடங்கியது...... Thanks...

  8. #17
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Cont-2
    மதுரை தியேட்டர்களில் எந்த நிறுவனத்தின் எம்பளம் பார்த்துட்டு கை தட்டினேனோ அந்த நிறுவனத்தின் படத்தை நான் டைரக்ட் செய்ய வேண்டுமா … நானும் கமலும் அதிர்ந்து போய்விட்டோம்.
    ஒருமுறை சென்னை மாங்கொல்லையில் அவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசி முடித்து விட்டு, நான் என் காரைத் தேடிக் கொண்டிருந்த போது, அவர் என்னைத் தன்னுடைய காரில் ஏறச் சொன்னார். நான் தயங்கினேன்.
    கூட்டம் கூடுது சீங்கிரம் ஏறு என்றார். ஏறிக் கொண்டேன். வீடு எங்கே ஜெமினி காம்ப்ளக்சில் தானே என்று கேட்டு என்னை இறக்கி விட்டார். பின் இந்த வீட்டிலதான் இன்னும் இருக்கியா என்று கேட்டார். இல்ல தி.நகரில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். நீங்கதான் வந்து கிரகபிரவேசத்திற்குக் குத்து விளக்கேற்றி வைக்கணும் என்றேன். அவசியம் வருகிறேன் என்று சொல்லி விடைபெற்றார்.
    அவர் புரூக்ளின் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்த பிறகுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது.
    வீட்டிற்குக் குடிபோவதற்கு முதல் நாள் ஒரு மரியாதைக்காக அவரிடம் சொல்லிவிட்டு வருவதற்காகச் சென்றேன். நாளைக்கு எத்தனை மணிக்கு என்றார். காலை ஆறரை மணிக்குங்க என்றேன்.
    மறுநாள் காலை ஆறேகால் மணிக்கு அந்த மாமனிதனின் கால்கள் என் வாசலில் பதிந்தன. நான் நெகிழ்ந்து போனேன். அவர் ஏற்றி வைத்த விளக்கு என் வீட்டில் இன்னும் வெளிச்சம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த மனிதன் … அந்த மனிதன் ….
    புரூக்ளின் மருத்துவமனையே … அந்த மாமனிதனின் சுவாசத்தை இரண்டாண்டுகள், மூன்றாண்டுகள் தானா உன்னால் நீட்டிக்க முடிந்த்து. இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்க்க் கூடாதா? கண்களில் நீர் தளும்ப நான் அதனோடு மானசீகமாகப் பேசினேன்.
    புரூக்ளின் மருத்துவமனை சலனமில்லாமல் நின்றது.
    ஞாபக நதிக்கரையில் நூலில் இயக்குநர் பாரதிராஜா....... Thanks...

  9. #18
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் தலைமையில் ஒன்றிய செயலாளர் திருமணம் pmv ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தலைவர் குறித்த நேரத்தில் வர இயலவில்லை வரும் வழி எங்கும் தொண்டர்கள் கூட்டம் மிக தாமதமாக தலைவர் வந்து சேர்ந்தார் வந்தவுடனே தலைவர் கேட்டது நல்ல நேரத்தில் முகூர்த்தம் முடித்திருக்கலமே என்றார் ஒன்றியச் செயலர் ஒற்றை வரியில் சொன்னது தலைவர் அருகில் இருக்கும் போது ராகு கேது மற்றும் எமகண்டம் என்னை நெருங்காது தாலியை நீங்கள் தொட்டு தாருங்கள் இதுவே என் வாழ்க்கையில் பொன்னான நாள் என்றார்.... Thanks...

  10. #19
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஒவ்வொரு கிராமத்திலும், ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பரம்பரை பரம்பரையாக கிராம நிர்வாகத்தை கவனித்து வரும் முறையை ஒழித்து..

    'கிராம நிர்வாக அலுவலர்' என்கிற பதவியை ஏற்படுத்தி அதை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் #எம்ஜிஆர்.

    இதன் மூலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் கிராம நிர்வாக அலுவலராக வரக்கூடிய சூழல் உருவானது என்பது மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு செயலாகும்.

    எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்த போதுதான், தெரு பெயர்களில் 'ஜாதிப்பெயர் இடம்பெறக்கூடாது' என்கிற முக்கியமான அரசாணையைப் பிறப்பித்தார்.

    சென்னை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக நடைமுறைக்கு வந்தது !........ Thanks...

  11. #20
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கௌரவம் பார்த்தால்
    கௌரவம் பார்க்காதே?
    ---------------------------------------------

    எம்.ஜி.ஆரின் சிறப்பை வகை வகையாய் ஒவ்வொருத்தரும்,, தங்கள் தனித் திறமையால் வித விதமாக முக நூல்,,வாட்ஸ்-அப்புகளில் விளக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்!
    அந்த வகையில் எம்.ஜி.ஆரின் ஒரு குண நலனை,,அதுவும் அவர் முதல்வராக இருக்கும்போதும் செயல்படுத்தியதை இங்கேப் பார்க்கலாம்!
    அது,,சத்யா மூவீஸின் மாஸ்டர் பீஸ் படம்--
    ரிக்ஷாக்காரன்!!
    சோ வையும்,,இன்னொரு சிறந்த நடிகரையும் தனது விருப்பத் தேர்வாக,,அந்தப் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் எம்.ஜி.ஆர்!
    தேங்காய் ஸ்ரீனிவாசனோடு ஈடு கட்டும் ஐயராக சோ நடிக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் எதிர்ப்பார்ப்பு எவ்வளவு சரியானது என்பதைப் படம் பார்த்த நாம் புரிந்து கொள்ளலாம்!
    தேங்காயோடு சேர்ந்து கலக்கியிருப்பார் சோ!!
    வக்கீலாக,,ஒரு குணச்சித்திர நடிகரை தம் மனதில் தேர்வு செய்து வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்!
    கதையே,,அந்த வக்கீலால் தான் அமைந்திருக்கிறது என்பதையும்,,அந்த நடிகரால் தான் அந்தப் பாத்திரத்துக்கு உயிர்க் கொடுக்க முடியும் என்றும் திடமாக நம்பினார் எம்.ஜி.ஆர்!
    குணச் சித்திர நடிகராக எவர் பொருத்தமானவர் என்று எம்.ஜி.ஆர் கருதினாரோ,,அவரால் எம்.ஜி.ஆரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய இயலவில்லை?
    சிவாஜி படங்களுடன் வேறு நடிகர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ஒரு நாள் கால்ஷீட்டைக் கூட ரிக்ஷாக்காரனுக்காக அவரால் ஒதுக்க முடியவில்லை!
    தயாரிப்பாளர் சார்பிலும்,,இயக்குனர் சார்பிலும் கேட்கப் பட்டும் சாதகமான பதிலை அந்த நடிகரால் கொடுக்க முடியவில்லை!
    வத்தி வைக்கவும்,,வளைத்துப் பேசவும் தான் வகை வகையாய் மனிதர்கள் இருக்கிறார்களே?
    ரொம்ப அலட்சியமா மாட்டேன்னு சொல்லிட்டார்!
    சிவாஜி படங்களில் நடிக்கறோம்ங்கற திமிரு?
    உங்கள வச்சு தாண்ணே படமே!
    அந்தாளு கிட்டே எதுக்குக் கெஞ்சணும்?
    இப்படியாக உப்புக் காரம் சேர்த்து??
    பதில் ஏதும் சொல்லாத எம்.ஜி.ஆர்,,தொலைபேசியைக் கையில் எடுக்கிறார்--
    சாதாரணமாக,, மறு முனையில் பேசிய அந்த நடிகர் பேசுவது எம்.ஜி.ஆர் எனத் தெரிந்ததும் டென்ஷனாகிறார்?
    என் படத்துல நீங்க நடிச்சா நான் சந்தோசப்படுவேன். உங்களுக்குக் கால்ஷீட்டு பிரச்சனை இருக்குங்கறதையும் நான் மறுக்கலே.
    உங்களுக்காக ஒரு ரெண்டு மாசம் காத்திருக்கணும்ன்னாலும் பரவாயில்லே--
    எம்.ஜி.ஆர் போய் இப்படி--அதுவும் நம்மப் போல சாதாரண நடிகரிடம்??
    நெகிழ்ச்சியில் கண் கலங்கிய அந்த நடிகர் பல்வேறு முறைகளில் தன் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து கொண்டு நடித்துக் கொடுத்து,,தம் நடிப்பில் எம்.ஜி.ஆருக்கு இருந்த நம்பிக்கையை பூர்த்தி செய்து கொடுக்கிறார்!1
    ஆம்! அவர் மேஜர் சுந்தரராஜன்!!!
    ஒரு கலைஞனாக மட்டுமே தம்மை இருத்தி,,ஒரு படம் வெற்றிப் படமாக இருக்க வேண்டும் என்பதோடு,,காசு கொடுத்துப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மன நிறைவைக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால்,,தன் நிலையைத் தாழ்த்தி மேஜரிடம் பேசிய எம்.ஜி.ஆர்??
    இதே எம்.ஜி.ஆர் தான் முதல்வராக இருந்தபோது மத்தியில் பிரதமராக எவர் இருந்தாலும் தன் ஆதரவைக் காட்டினார்--
    நான் இப்போ தமிழ் நாட்டு மக்களின் பிரதி நிதி!
    ராமச்சந்திரனுக்குன்னு நான் கவுரவம் பார்த்தால் தமிழ் நாட்டு மக்களுக்கு மத்தியிலேர்ந்து வரும் உதவிகள் தடைபடுமே??
    எவன் ஒருவன்--
    தன்னிலைத் தாழ்ந்து மற்றவர்க்காக குரல் கொடுத்தால்--
    விண் நிலைக்கு உயரமாட்டானா ஒருவன்?
    என் நிலை இதுவென்று எம்.ஜி.ஆர். சொன்னதைக் கடைப் பிடித்தால்-
    இன் நிலை தானே எல்லோருக்கும் இறுதி வரைக்கும்!!
    இதுவென்று நாமும் பணிவைக் கொள்வோம்!
    இது வென்று கொடுக்கும் நம் முயற்சிகளை!!!...Thanks...

Page 2 of 210 FirstFirst 12341252102 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •