Page 3 of 210 FirstFirst 123451353103 ... LastLast
Results 21 to 30 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #21
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் பெரும் மதிப்பிற்குரிய கலைவாணர் தன் 49 ஆம் வயதில் உடல் நலம் மிகவும் பாதிக்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருடன் அவர் சீடர்கள் காக்கா ராதாகிருஷ்ணன் , டனால் தங்கவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

    கலைவாணர் ஒருவேளை நான் இல்லாமல் போனால் தம்பி ராமச்சந்திரனை நன்கு கவனித்து கொள்ளுங்கள் ..அவன் மிகவும் நல்லவர் என்று சொல்லி கொண்டே இருக்க.

    ஒரு நாள் இரவு மருத்துவ மனைக்கு அவரை நலம் விசாரிக்க தலைவர் போகிறார்...அங்கே மருந்து சாப்பிட்டு விட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் கலைவாணர்.

    வெளியே காத்து இருந்த மேலே சொன்ன இருவரிடமும் நான் வந்து போனதாக சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தலைவர் புறப்பட.

    மறுநாள் விடிந்தது..காலை கடன்களை முடித்த பின் கலைவாணர் இருவரையும் அழைத்து நேற்று இரவு என்னை பார்க்க எம்ஜிஆர் வந்தாரா என்று கேட்க.

    தங்கவேலும், ராதா கிருஷ்ணன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு ஆமாம் அண்ணே எப்படி சரியா சொன்னீங்க....என்று கேட்க.

    பசங்களா இந்த நாட்டுல வேறு எவர் நான் தூங்கி கொண்டு இருக்கும் போது என் தலையணை கீழே ஒரு பேப்பரில் சுற்றி கட்டு கணக்கில் பணத்தை வைத்து இருக்க போறாங்க...என்று சொல்ல.

    வியப்பில் அசந்து போனது அவர்கள் மட்டும் அல்ல நாமும் தானே...

    வாழ்க எம்ஜியார் புகழ்.

    நன்றி... திரு.நெல்லை மணி அவர்களின் பதிவிலிருந்து........ Thanks...

  4. #23
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  5. #24
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks...

  6. #25
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ... Thanks......

  7. #26
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தங்கத்தின் தங்கமான தலைவருக்கு சைக்கிள் ஓட்ட கற்று கொடுத்த கலைவாணர் ஒரு நாள் அவரின் வீட்டு வழியே தினமும் ஒரு நபருக்கு ஒரு ரூபாய் கொடுப்பாராம். இதை கவனித்த நம் தங்கத்தின் தங்கம் அவரிடம் ஏன் அண்ணே என கேட்க , அவன் அதைவைத்து என்ன வீடா கட்ட போகிறான் என்றவுடன் வள்ளல் பெருமை அடைந்தும், பிறர் இன்னும் எத்தனையோ கண்கள் குளமாகின்றன. மீண்டும் வரவேண்டும் என்ற வலிகளுடன் தினமும் கண்ணீருடன்......
    Thanks...

  8. #27
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த வருடம் என் பிறந்தநாளுக்கு அமெரிக்காவில் வசிக்கும் என் அன்பு சகோதரியின் வாழ்த்துக்களுடன் கூடிய பரிசு. இந்த புகை படங்களை வரைந்தவர் என் சகோதரியின் அன்பு தோழி திருமதி. ரேவதி மோகன் அமெரிக்காவில் வசிக்கும் இவர் இதய தெய்வத்தின் தீவிர அபிமானி என்பது குறிப்பிடதக்க ஒன்று. கடல் கடந்து வசிக்கும் இவருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்பது நம் கடமையாகும். முக நூல் நண்பர்களுக்கு... Saravanan... Thanks...

  9. #28
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று :
    சர்வதேச நடன தினம் கொண்டாடபடுகிறது.
    எம்.ஜி. ஆர். இரு வேடங்களில் நடித்த 'குடியிருந்த கோயில்' திரைப்படத்தில் "ஆடலுடன் பாடலைக்கேட்டு..." என்ற பாட்டில் அவர் எல். விஜயலட்சுமி உடன் ஆடுவதுபோன்ற காட்சியை அமைத்திருப்பார் டைரக்டர் சங்கர். ஆனால் எம். ஜி. ஆர். இப்பாடலுக்காக ( பங்கரா டான்ஸ் ) கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். அதன் பயனாக இந்த பாடல் இன்று வரை ரசிகர்களிடைய பெரும் வரவேற்பு பெறுகின்ற ஒன்றாகும். தமிழ் திரைப்பட வரலாற்றில் இதுபோல ஒரு நடனக்காட்சி இதுவரை வந்ததில்லை.

    'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தில் இப்பாடல் ரீமிக்ஸ் செய்யபட்டிருக்கும் .ஆனால் இதுபோல் நடனக்காட்சி இல்லை. இருப்பினும் பாடலின் இறுதியில் எம். ஜி. ஆர். படத்துக்கு பூக்களை தூவி, "பொன்மனச்செம்மல் நூற்றாண்டை வரவேற்போம்" என்பார் லாரன்ஸ்.
    'மன்னாதி மன்னன்' படத்தில் பதமினியுடன் போட்டி நடனமும்,
    'கலங்கரை விளக்கம்' படத்தில் 'பல்லவன் பல்லவி' பாடல் காட்சியும் , 'அன்பே வா' படத்தில் 'நாடோடி போகவேண்டும் ஓடோடி ' பாடலிலும், 'என் அண்ணன்' படத்தில் வரும் 'ஆயிரம் எண்ணம் கொண்ட 'பாடலில் என்று பல பாடல் காட்சிகளில் எம். ஜி. ஆர். , நடனம் பயின்ற நாயகியருக்கு ஈடாக அழகுபட நடனமாடி நடித்திருப்பார்.

    Ithayakkani S Vijayan with Plato Rajagopalan... Thanks...

  10. #29
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய மாலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!

    "விவ*சாயி" திரைப்ப*ட*த்தில் மக்கள் திலகம்.. இப்ப*ட*த்தின் பெரும்பாலான வெளிப்புற* ப*ட*ப்பிடிப்பு கோவை அக்ரி யுனிவ*ர்சிட்டி மற்றும் ம*ருத*ம*லை அடிவார*த்தில் எடுக்க*ப்ப*ட்ட*து. 1.க*ட*வுள் என்னும் முத*லாளி 2. ந*ல்ல ந*ல்ல நிலம் பார்த்து..3. இப்ப*டித்தான் இருக்க*வேணும் பொம்ப*ள 4. காத*ல் எந்த*ன் மீதில் என்றால் 5. எவ*ரிட*த்தும் த*வ*றுமில்லை..6. என்ன*ம்மா, சிங்கார* க*ண்ண*ம்மா.. ஆகிய இனிய பாட*ல்க*ள் உண்டு.

    ச*ண்டைக்காட்சிக*ள் மிக*ச்சிற*ப்பு..

    கோரிக்கை நிறைவேறாவிட்டால் க*ல்லால் அடிப்ப*தா?

    த*வ*று செய்ப*வ*ர்க*ளைப்ப*ற்றி த*க*வ*ல் கொடுக்குமுன் அதே த*வ*று ந*ம்மிட*ம் இருக்கிற*தா? என பார்த்துக்கொள்ள வேண்டும்..

    நாடே உண*வுப்ப*ஞ்ச*த்தில் த*விக்கும்போது விளைநிலங்க*ளை அழித்து க*ட்டிட*ம் க*ட்ட* அனும*திக்க* கூடாது..

    நெல் விளையும் நிலத்தில் நெல்தான் விளைவிக்க வேண்டும்..

    கூட்டுப்ப*ண்ணை திட்ட*ம், கூட்டுற*வு விவ*சாய*ம் போனேஅவ*ற்றை வ*லியுறுத்தும் காட்சிக*ள்..

    விவ*சாய*த்தொழிலே அனைத்து தொழில்க*ளிலும் முத*ன்மையான*து..

    த*வ*று செய்த*வ*னை த*ண்டிப்ப*தைவிட மன்னித்து ஏற்றுக்கொண்டால் அவ*னும் ந*ல்ல மனித*னாக மாறுவான்.. போன்ற* க*ருத்துக்க*ளை வ*லியுறுத்தும் காட்சிக*ள் கொண்ட*து..

    மக்கள் திலகம் துப்பாக்கி சூட்டில் பாதிக்க*ப்ப*ட்டு சிகிச்சையில் இருந்த*போது அவ*ர் உயிர் பிழைத்து வ*ருவாரா? அப்ப*டியே மீண்டு வ*ந்தாலும் மீண்டும் சினிமாவில் முன்புபோல் ந*டிக்க* இய*லுமா? என திரையுலகமும், அவ*ர*து எதிர்முகாமைச் சார்ந்த*வ*ர்க*ளும் வ*த*ந்தி ப*ர*ப்பிக்கொண்டிருந்த*ன*ர். அப்போது சின்ன*ப்பா தேவ*ர் எம்ஜிஆர் சிகிச்சை பெற்றுவ*ரும் ம*ருத்துவ*ம*னைக்கே வ*ந்து முருகா! நீங்க*ள் குண*ம*டைந்து ந*ல்லப*டியாக* திரும்பி வ*ருவீர்க*ள்..முன்பைவிட* சுறுசுறுப்புட*ன் திரைப்ப*ட*த்திலும் ந*டிப்பீர்க*ள் என்று ஆறுத*ல் கூறி மக்கள் திலக*த்தின் நெற்றியில் விபூதியை இட்டார். மேலும் ஒரு பெரிய தொகையை த*ன*து அடுத்த* ப*ட*த்தில் ந*டிப்ப*த*ற்கு முன்ப*ண*மாக* அளித்துச்சென்றார். அத*ன்ப*டியே எம்ஜிஆர் குணமாகி வ*ந்ததும் காவ*ல்கார*ன் ப*ட*த்தில் மீதியிருந்த* காட்சிக*ள் மற்றும் ட*ப்பிங் வேல*க*ளை முடித்ததும் விவ*சாயி ப*ட*த்தில் ந*டித்து கொடுத்தார். குறுகிய காலத் த*யாரிப்பான விவ*சாயி பெரும் வெற்றிப்ப*ட*மாக*வும் அடிக்க*டி திரைய*ர*ங்குக*ளிலும், தொலைக்காட்சிக*ளிலும் இன்றும் திரையிட*ப்ப*டும் ப*ட*மாக*வும் அமைந்துள்ள*து குறிப்பிட*த்த*க்க*து..

    மேலும் இப்ப*ட*த்தில் த*லைவ*ர*து ப*ஞ்ச் ட*ய*லாக் ஒரு காட்சியில்..ந*ம்பியாரிட*ம் ச*மாதான*ம் பேச* அவ*ர் வீட்டிற்கே எம்ஜிஆர் வ*ருவார். பின் எதிர்பாராத* நேர*த்தில் தாக்க* வ*ரும் ந*ம்பியாரை புர*ட்டி எடுப்பார். பிற*கு நம்பியாரிட*ம் என்ன? நீங்க கேட்ட*து கிடைச்சுதா? ப*த்த*லைனா சொல்லுங்க..வ*ந்து குடுத்துட்டுப் போகிறேன்.. என்னும் காட்சியில் க*ர*வொலி அதிரும்..... Thanks...

  11. #30
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [மக்கள் திலகம் பற்றி நடிகர் திலகம்:
    (டிசம்பர் 1984, ஜனவரி மற்றும் பிப்ரவரி 1985 பொம்மை இதழ்களிலிருந்து)

    "அண்ணன் எம்.ஜி.ஆரைப் போல நானும், என்னைப் போல அண்ணன் எம்.ஜி.ஆரும் தாய்ப்பாசத்தில் அதிகமாகப் பற்று கொண்டவர்கள். தாய் சொல்லைத் தட்டாதவர்கள். தாய் கிழித்த கோட்டை தாண்டாதவர்கள். தாயை தெய்வமாக மதிப்பவர்கள். அந்நாளிலும் இந்நாளிலும் நாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், அரசியல் காரணமாக வெவ்வேறு பாதையில் இருந்தாலும், குறித்த நேரத்தில், சந்திக்க வேண்டிய இடத்தில், பேசுகின்ற பாஷையில், கண்களில் அன்பு நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு நாங்கள் இருவரும் சிறிது நேரம் எங்களையே மறந்து நிற்கின்ற அந்த நிலையை யாரால் விளக்க முடியும்?! இதை வெளியிலே கூற முடியுமா? சொன்னால் மற்றவர்களுக்கு எப்படிப் புரியும்?! படிப்புக்கு பலர் இலக்கணம் வகுத்திருப்பார்கள். நாங்கள் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள்.

    ராஜாமணி அம்மையாருக்கு உடம்பு செளகரியமில்லை என்றால் தன் உடம்புக்கு வந்து விட்ட மாதிரி அண்ணன் இருப்பார். மூதாட்டி யாரைப் பார்த்தாலும் அண்ணன் தாய்ப்பாசத்தைப் பொழிவார். அந்த மூதாட்டியை அணைத்துக் கொள்வார். அரசியலுக்காக இதைக் கிண்டல் பண்ணலாம். ஆனால் அவருடைய மனதில் எங்கோ ஒரு மூலையில் தாய்ப்பாசம் இருப்பதனால் தானே இப்படிச் செய்கிறார். மற்றவர்களால் முடியுமா?!

    திரையுலகில் அண்ணனின் பாணி வேறு. என்னுடைய வழி வேறு. நம்மாலும் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தேன். தம்மாலும் நடிக்க முடியும் என்பதை அவரும் பல படங்களில் காண்பித்தார். எவ்வளவு தான் இருந்தாலும் அவர் அண்ணன், நான் தம்பி. அரசியலில் என்னை விட அவர் திறமைசாலி. நினைத்ததை செய்து காட்டியவர். நான் இன்றும் தொண்டனாகத் தான் இருக்கிறேன். அதனால் தான் அவர் அண்ணன், நான் தம்பி.

    அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று அறிந்தவுடன் நான் சென்று பார்ப்பேன். அவருக்கு கால் உடைந்த போது தொடர்ந்தாற் போல் சிரமங்கள் வந்து கொண்டு இருந்தன. அவருடைய மூத்த மனைவி இறந்து விட்டார். நான் அவருடன் இரண்டு தினங்கள் இருந்தேன். அவருடன் மயானத்திற்குப் போனேன். அங்கு அவருக்கு மயக்கம் வந்து விட்டது. அவரைக் காரில் வீட்டிற்கு அழைத்து வந்து நானே அவருக்கு குளிப்பாட்டி, தலை துவட்டி விட்டு 'ஒரு வாயாவது ஹார்லிக்ஸ் குடித்துத்தான் ஆக வேண்டும்' என்று வற்புறுத்தி, அவர் ஹார்லிக்ஸ் குடித்த பிறகே நான் காபி குடித்தேன். அந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் அண்ணன். நாம் அவருடன் பேசும் போது சென்டிமென்டைத் தொட்டு விட்டால் மற்றவற்றை அவர் மறந்து விடுவார். அப்போது அண்ணன் குழந்தை ஆகி விடுவார்.

    அவர் மக்களுக்கு இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன என்று கருதிய ஆண்டவன், நம் பிரார்த்தனைகளை ஏற்று அண்ணன் அவர்களை அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு உடல் நலத்துடன் திருப்பி அனுப்பி இருக்கிறான். அவர் நீண்ட நாட்கள் பொறுப்பில் இருந்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை. ஆனால் இனிமேலாவது மற்றவர்களுக்காகப் பணியாற்றும் போது அண்ணன் தன் உடல் நலத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். என்னுடைய இந்த சிறு வேண்டுகோளை அண்ணன் ஏற்றுக் கொள்ள வேண்டும்#அரசியலில் இரு துருவங்கள்,உண்மையில் இரு சகோதரர்கள்! ]...... Thanks Poongodi...

Page 3 of 210 FirstFirst 123451353103 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •