Page 4 of 210 FirstFirst ... 234561454104 ... LastLast
Results 31 to 40 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #31
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அப்பொழுது தொலைக்காட்சி வசதிகள் அதிகமாக இல்லை ஒரு 5 கிலோமீட்டர் தூரத்தில் ஒரு செல்வந்தர் வீட்டிற்கு சென்று பார்த்தோம் அப்போது கூட்டம் அதிகமாக அந்த செல்வந்தர் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த கலையரங்கில் தொலைக்காட்சி பெட்டியை வைத்து அனைவரையும் பார்க்க வைத்தார் ஒரே அழுகை அலரல் யாராலும் தாங்கிக்கொள்ள முடியாத சோகம் .வள்ளல் அவர்களின் இறுதி ஊர்வலம் முடிந்து அடக்கம் வரை அனைவரையும் பார்க்க வைத்த அந்த செல்வந்தர் காங்கிரஸ் கட்சியில் பிரபலமானவர் என்றும் ஆனாலும் தலைவரின் அபிமானி என்பதை என் தந்தையார் சொல்லி தெரிந்து கொண்டேன் .
    அருமை பதிவு ங்க அண்ணா. ����������..... Thanks...Rathnavel Kumaran

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இரண்டு நாளுக்கு முன்னர் வந்த என் பதிவுக்கு வந்த வரவேற்பை கண்டு மலைத்துவிட்டேன்! ஏன் என்றால் தலைவரைப்பற்றிய நிகழ்வுகள் அரசியல் பற்றிய அனுபவங்கள் நடக்கும் போது நமக்கு புரியாத வயது! அதனால் அதுபற்றி தெரியாது! படங்கள் பற்றி நிறைய எழுதிவிட்டேன்! பாடல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் புதுமையாக ஏதாவது பதியலாம் என்று இதனை பதிவிட்டேன்! அதன் தொடர்ச்சி இது:-
    நான்:- ஏண்டா தலைவரைப்பற்றி படங்களை பற்றி பெருமையாக பதிவிட்டால் என்னையா சுனாமி தூக்கனும்கற? உனக்கு என்னடா தெரியும்? தலைவரைப் பற்றி!
    நண்பன்:- சொல்லுடா கேட்கிறேன்!
    நான்:- 40 பாடல்கள் ஆலாபனை வசன நடை என்று போன தமிழ் சினிமாவை புதிய பாதைல திருப்பிவிட்டதே எங்க தங்க தலைவர் தான்!
    வசனத்திற்கு:- மதுரை வீரன்
    எழில் தோற்றம்:- அலிபாபாவும் 40 திருடர்களும்
    கத்திவீச்சுக்கு:- சர்வாதிகாரி
    சிலம்ப சுழற்றுக்கு:- படகோட்டி: தாயை காத்த தனயன், அன்னமிட்டகை
    களரி, மல்யுத்தம்:- சக்கரவர்த்தி திருமகள், அன்பே வா
    குத்து சண்டைக்கு:- காவல்காரன்! பட்டிக்காட்டு பொன்னையா!
    புதுமையான ரிக்ஷா சண்டை, சுருள் செயின் வீச்சு:- ரிக்ஷாக்காரன்
    சண்டை புதுபரிமாணங்கள்:- உலகம் சுற்றும் வாலிபன்
    பதுப்பு கண்ண அழகுக்கு:- தேவர் படங்கள்
    சுருள் முடி அழகிற்கு:- குலேபகாவலி,சக்கரவர்த்தி திருமகள் புதுமைப்பித்தன்,
    வேட்டி கட்டழகு:- உரிமைக்குரல்; உழைக்கும் கரங்கள்
    பெல்பாட்ட அழகு:- மீனவநண்பன், நீதிக்கு தலைவணங்கு
    புதுமை கதை அமைப்பு:- நான் ஏன் பிறந்தேன்?
    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்! மற்ற எந்த நடிகர் படங்களானாலும் இது பீம்சிங் படம், திருலோகசந்தர் படம், மாதவன் படம் ஸ்ரீதர் படம், பாலசந்தர் பாடம் அட்லி படம் புட்லி படம், சின்னப்பய முருகதாசு படம் என சொல்வார்கள்! அது தற்போது வரை உள்ள எந்த நடிகப்பயல்களுக்கும் பொருந்தும்! ஆனால் எங்க தலைவர் படங்கள் எவன் டைரக்ட் செய்தாலும் வாத்தியார் படம்டா?
    நண்பன்:- உங்கிட்ட பேசமுடியுமா! ஆளவிடுடா சாமி! என்னத்தான் சுனாமி தூக்கணும்! ஒங்கிட்ட பேசவந்தேன் பாரு!!!...... Thanks SR.,

  4. #33
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர்ச்சி.
    ***********

    புரட்சித்தலைவர் அவர்கள்.!

    வறுமையின் கொடுமையின் காரணமாக கல்வி பயில முடியாமல் போக, அவர் ஆரம்பக் கல்வியை மட்டுமே பயின்றவர்.

    அந்த அற்புத தலைவர்.! பொன்மன தலைவர்.! கல்வியைப் பற்றி நன்கு அறிந்தவர்.

    1977- ஆம் ஆண்டு தமிழகத்தினுடைய முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தார்.

    ஆட்சிக்கு வந்த கையுடன், கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்.

    மாணவர்களுக்கு தொழில் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

    மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

    இதற்கெல்லாம் ஆதாரமாக.. அச்சாரமாக அண்ணா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

    இன்றைக்கு இருக்கின்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் புரட்சித்தலைவரின் மானியத்தால் தொடங்கப்பட்ட கல்லூரிகளே ஆகும்.

    இன்றைக்கு இருக்கின்ற அத்தனை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்தவை ஆகும்.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட இன்ஜினியர் பிரிவுகளில் இருக்கும் அத்தனை பாடத்திட்டங்களையும் புரட்சித் தலைவரே கொண்டுவந்தார்.

    தமிழ்நாட்டு மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் புரட்சித் தலைவர் அவர்களே ...

    இன்றைக்கு மாணவர்கள் வளமுடன் வாழ்கிறார்கள் என்றால் ...

    அதற்கு காரணம், நம் புரட்சித் தலைவரே புரட்சித் தலைவரே....

    இதை மாணவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.

    என்கிற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

    வாழ்க புரட்சித் தலைவர்.!!
    வாழ்க பொன்மனச்செம்மல் ..!!
    வாழ்க மக்கள் திலகம் ...!!!

    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் புரட்சித் தலைவா வாழ்க வாழ்க வாழ்கவே ....

    ( 2. ).

    ������������������������������..... Thanks...

  5. #34
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத்தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். படத்தில் நஷ்டம் வந்ததால் ஈட்டுத் தொகையை கொடுக்க தயாரிப்பாளரை,விநியோகஸ்தர் வலியுறுத்தும் காலம் இப்போது.
    ஆனால் அக்காலத்தில எம்.ஜி.ஆர். செய்தது என்ன தெரியுமா? கூடுதலாகக் கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டுமல்ல, கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்தான்.
    அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி(இதுவும் இக்காலத்தில் காண இயலாதது.) மறுத்து விட்டார். "நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இத்தொகையைப் பயனபடுத்திக் கொள்ளுங்கள்" என்று அந்த காசோலையைத் திருப்பி அனுப்பி விட்டார்.எம்.ஜி.ஆரிடம்.திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயர் துடைத்ததோ யாருக்குத் தெரியும்?..... Thanks...

  6. #35
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    [எம்ஜிஆர் அவர்களின் அருமை நண்பர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்கள் கோயம்புத்தூரில் மாருதி உடற்பயிற்சி நிலையம் என்று ஒரு அமைப்பு வைத்திருந்தார் எம் ஜி ஆர் ஷூட்டிங்க் இல்லாத வேளையில் அங்கு சென்று விடுவார் அவருடன் சண்டை போடுவார் சுமார் ஒரு மணி நேரம் அப்படியே கம்புச் சண்டை நடந்துகொண்டிருக்கும் இடைவெளி இல்லாமல் அவர்கள் 2 பேரும் சூழ்ந்து தன்னை தாக்கி கொள்வார்கள் அப்படி உருவானது அவர்கள் நட்பு கம்பு வீச்சு என்றால் அது தேவருக்கும் எம்ஜிஆருக்கும் தான் சரியாக இருக்கும்..... Thanks...

  7. #36
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எம்ஜிஆா் சினிமாவில் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டினாா்
    அண்ணன் சக்கரபாணியை "யேட்டா" என்று எம்ஜிஆா் அழைப்பாா். ஒ௫ போதும் பெயா் சொல்லி அழைத்ததில்லை.அண்ணன் பிள்ளைகளிடமும் அதை பிரதிபலிக்கச் செய்தாா். சக்கரபாணியின் மகன்களில் இளையவா் மூத்தவரை அண்ணன் என்றே அழைக்க வேண்டும் பெயா் சொல்லி அழைக்கக் ௯டாது. மூத்தவா் இளையவரைப் பெயர் சொல்லிக் ௯ப்பிடலாம் இந்த மாியாதை விஷயத்தில் எம்ஜிஆா் ரொம்ப உஷாராக உறுதியாக இ௫ந்தாா்
    அந்தக் குடும்பத்துப் பணியாளா்களைக்௯ட வயதில் சிறியவா்கள் அணணே என்றுதான் அழைக்க வேண்டும் சக்கரபாணியின் பிள்ளைகள் ாிக் ஷாவில் பள்ளிக்கு அழைத்து செல்லப்படுவாா்கள் அதற்காக வ௫ம் இ௫சப்பன் என்ற ாிக் ஷாக்காரரை இ௫சப்பண்ணே என்றோ அண்ணே என்றோதான் பிள்ளைகள் மாியாதை காட்டியி௫க்கிறாா்கள் பணியாளா்கள் யாராக இ௫ந்தாலும் அவா்களுக்கும் இத்த மாியாதை உண்டு
    உணவு விஷயத்தில் எம்ஜிஆாிடம் எந்தளவு தாராளம் உண்டோ அந்தளவு நிபந்தனைகளும் உண்டு வீட்டில் எந்த உணவு சமைத்தாலும் எல்லோ௫ம் அதைச் சாப்பிட்டாக வேண்டும். யா௫ம் இது எனக்குப் பிடிக்காது என்று மறுக்கக்௯டாது பாகற்காய் கசக்கிறதே என்று முகம் சுழிக்கக் ௯டாது.கசப்பான உணவுகளையும் பழகிக்கொள்ள வேண்டும் என்பாா் எம்ஜிஆா்
    சாப்பிடும்போது உணவைத் தட்டில் பாிமாறி விட்டால் அதை மீதம் வைக்காமல் சாப்பிடவேண்டும். தேவைக்கேற்ப உணவை பாிமாறிக் கொள்ளலாம். இவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது ஆனால் தட்டில் மீதம் வைக்கக்௯டாது. சாப்பிட்டு விடவேண்டும் சாப்பிட்டபின் அவரவா் தட்டை எடுத்துக்கொண்டு போய் கழுவி வைத்துவிட வேண்டும்
    எம்ஜிஆா் அதிகாலையில் 4.30 அல்லது 5மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கிவிடுவாா் அவா் எழுந்தி௫க்கும் நேரத்தில் பிள்ளைகளும் எழுந்தாக வேண்டும் எழுந்து அவா்களும் உடற்பயிற்சி செய்யவேண்டும் படிக்கவேண்டும் அவா்கள் எல்லாம் அ௫கிலுள்ள வி்.கே. ஆச்சாாி என்பவரது உடற்பயிற்சி ௯டத்திற்குச்சென்று பயிற்சிகளை மேற் கொள்வாா்கள் இதில் சிலம்பு வீரதீரமான பயிற்சிகளும் அடங்கும்
    படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நேரமென்றால் எம்ஜிஆா் எல்லோ௫டனும் சாப்பிட உட்காா்ந்துவிடுவாா் எறா தொக்கு சாப்ஸ் என்றால் அதைச்சோற்றுடன் எம்ஜிஆரே பிசைந்து ஒ௫ பொிய பாத்திரத்தில் போட்டுக்கொள்வாா் அண்ணன் பிள்ளைகளை உட்காரவைத்து அவா்களுக்குத் த௫வாா் அப்போது மீண்டும் அவாிடம் உ௫ண்டை பெற ஒ௫ போட்டியே நடக்கும் அதெல்லாம் கண்டிப்பு இல்லாத கலகலப்பான நேரம்
    எம். எஸ். சேகா் இ௫௯ா் கோவை...... Thanks...

  8. #37
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #வணக்கம் #முதலாளி

    பொதுவாக தமிழ்த்திரைப்பட உலகில் எம்ஜிஆரை, 'சின்னவர்', 'முதலாளி' என்றழைப்பர்...

    ஆனால் எம்ஜிஆர், திரைப்படத்துறையில் சிலரைப் பார்த்து, 'முதலாளி' என்றழைப்பதுண்டு...

    அந்தப் பெருமைக்குரியவர்கள் பலருண்டு. ஏவி.மெய்யப்பச் செட்டியார், பி.நாகிரெட்டியார், எஸ்எஸ் போன்றோர் சிலர்...
    நேற்று இன்று நாளை படப்பிடிப்பில், நடிகர் அசோகனைப் பார்த்து, 'வணக்கம் முதலாளி வாங்க' என்றார்.

    உடனே அசோகன் எம்ஜிஆரின் காலைப் பிடித்துக்கொண்டு, "ஐயோ! என் தெய்வமே! நீங்க என்னை பார்த்து முதலாளின்னு சொல்வதா ? இனிமேல் அப்படிச் சொல்லமாட்டேன்னு சொன்னால் தான் காலை விடுவேன் " ன்னு சொல்லி எம்ஜிஆரின் காலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு விட்டார்.

    உடனே எம்ஜிஆர், அசோகனைத் தூக்கி, கட்டிப்பிடித்து முத்தமிட்டு, "அட மண்டு, நான் படத்தில் நடிப்பவன், நீ எனக்கு சம்பளம் கொடுப்பவன். உன்னை முதலாளின்னு சொல்வதில் என்ன தவறு இருக்குறது !? தயாரிப்பாளரான உனக்குக் கொடுக்கும் மரியாதையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் !!! உன்னை எல்லோரும் முதலாளி என்று தான் அழைக்கவேண்டும். இப்போது நீ நடிகன் மட்டுமல்ல...ஒரு படத்தயாரிப்பாளரும் கூட...பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும்..."

    இந்த அறிவுரைகளைக் கேட்ட அசோகனும் படப்பிடிப்புக் குழுவினரும் கண்ணீர் மல்கினர்...

    இதுபோல மற்றவர்களை மதிக்கும் மாண்பு தான் வாத்தியாரை தெய்வீகநிலைக்கு உயர்த்தியது.......... Thanks.........

  9. #38
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #தலைவரின்_நேற்றுஇன்றுநாளை
    [ 12 - 07 - 1974 ]

    தலைவர் இயக்கம் கண்டு திண்டுக்கல் இடைத்தேர்தல் இமாலய வெற்றிக்குப் பிறகு வெளியான சூப்பர் ஹிட் காவியம்.

    திமுக ஆட்சியை இழந்ததற்கும் அதன் பின்பு தலைவர் இருக்கும் காலம் வரை திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கும் தலைவரின் இந்தப் பாடலும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

    குறிப்பாக 1974 நேற்று இன்று நாளை
    ரிலீஸான நாள் முதல் 1977 சட்டமன்ற பொதுத்தேர்தல் வரை கிராமங்களில் நடைபெறும் இல்ல சுபகாரியங்களில் கூட இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் ஒலி பரப்புவார்கள்...

    திமுகவினருக்கு வரும் ஆத்திரத்திற்கு அளவே கிடையாது.

    இந்தப் பாடலில் வரும் வரிகளான...

    மக்கள் நலன் மக்கள் நலன் என்றே சொல்லுவார்...
    தம் மக்கள் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்...

    என்ற வரிகள் நேரடியாக கலைஞரையே தாக்குவதாக உள்ளதால் திமுகவினரின் ஆத்திரம் தலைவர் மீது மட்டுமல்ல...

    இந்தப் பாடலை எழுதிய வாலி அவர்களையும் தயாரிப்பாளர்
    நடிகர் S.A. அசோகன் அவர்களையும்
    விட்டு வைக்கவில்லை.

    மக்கள்திலகம் ரசிகர்களின் பேராதரவில் மாபெரும் வெற்றிப்படம் மட்டுமல்ல...
    தலைவர் அரியணை ஏறுவதற்கும் கலைஞர் சொன்னாரே 14 ஆண்டு கால வனவாசம் என்று...

    அதை நிறைவேற்றியதில் பெரும்பங்கு வகித்த பாடல் இது...

    நெல்லை எழில்மிகு பார்வதி திரையரங்கில் இந்த திரைப்படத்திற்கு திரண்ட மக்கள் சமுத்திரம் போல் பார்வதி திரையரங்கில் எந்த திரைப்படத்திற்கும் வந்ததில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கொடுக்கும் சாட்சியாகும்.

    இத் திரைக்காவியத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

    �� வளர்க புரட்சித்தலைவர் புகழ் ��

    #இதயதெய்வம்......... Thanks...

  10. #39
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Cont-1
    ஷுட்டிங்கிற்கா … நான் வந்து இரண்டு நாளாச்சு யாருமே சொல்லவே இல்லையே சரி இங்கெல்லாம் நிறைய பூக்கள் இருக்கே இங்கேயே ஷுட்டிங் எடுக்கலாமே …
    நீங்க இங்க இருக்கீங்க உள்ளே ஒரு ஆளை விடுவாங்களா என்ன? என்றேன் நான். யார் சொன்னது நீங்க எடுங்க என்று கூறிவிட்டு போன் செய்தார்,
    மறுநாள் காவல்துறையினரின் பாதுகாப்போடு தமிழ்நாடு ஹவுசில் படப்பிடப்பு ஆரம்பமானது. அப்போது ஒரு அதிகாரி வந்து இன்னிக்கு மத்தியானம் லஞ்ச் எங்கேயும் அரேஞ்ச் பண்ணிடாதிங்க. மொத்த யூனிட்டிற்கும் சாரோடதான் சாப்பாடுன்னு உங்க்கிட்டே சொல்லச் சொன்னார் … என்று தெரிவித்து விட்டுச் சென்றார். நான் திகைத்துவிட்டேன்.
    கொஞ்ச நேரத்தில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் பரபரப்பாக ஓரிடத்தில் பார்வையைக் குவித்தனர். திரும்பிப் பார்த்தால் எம்.ஜி.ஆர் . வந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரை நோக்கி விரைந்தேன். என்னை அழைத்தார். எங்கே டான்ஸ் மாஸ்டர் ? தயங்கிய படியே இல்லை… நான் தான்.. ஓகோ நீங்களே டான்ஸ் மாஸ்டரா ? என்று கூறி குழந்தையாகச் சிரித்தார்
    ஷாட் முடிந்தவுடன் என்னையும் கமலையும் பக்கத்தில் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடித்தபின் என் ஸ்டில் போட்டோகிராபர் சங்கர்ராவை அழைத்து, அவரிடமிருந்த மிகமிகச் சிறிய ஒரு கேமராவைக் கொடுத்துப் படம் பிடிக்கச் சொன்னார். நான் அவரிடம் பழக்கமான உரிமையுடன் என்னங்க உங்களைப் பத்தி நிறைய மிஸ்டரி இருக்குன்னு சொல்வாங்க கேமராவில் கூட மிஸ்டரி வச்சிருக்கிங்களே என்றேன்.
    அவர் சிரித்துக் கொண்டே கையில் கட்டியிருந்த வாட்சைக் காண்பித்து இங்கே பார் இதுல கூட கேமரா இருக்கு. பேசிட்டிருக்கும் போதே கூட படமெடுக்கலாம் என்று சொல்லி அதை இயக்கிக் காட்டினார். நான் மறுபடியும் திகைத்துப் போனேன்.
    மறுநாள் காலையில் என்னையும் கமலையும் கூப்பிட்டனுப்பியிருந்தார். சென்றோம். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பேனர் படம் எடுத்து ரொம்ப நாளாச்சு. நீ டைரக்ட் பண்ணு கமல் நடிக்கட்டும். இப்ப இல்ல. உனக்கு எத்தனை படம் கமிட் ஆகியிருக்கோ … அத்தனையையும் முடித்து விட்டு அப்புறமாய் பண்ணு… நான் கேக்கறேங்கறதுக்காக அவசரப்படாதே எவ்வளவு செலவழிக்கணுமோ அவ்வளவு செலவழிச்சு பிரம்மாண்டமா எடுத்துடுவோம் என்றார்....... Thanks...

  11. #40
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர்ச்சி.
    ***********

    புரட்சித்தலைவர் அவர்கள்.!

    வறுமையின் கொடுமையின் காரணமாக கல்வி பயில முடியாமல் போக, அவர் ஆரம்பக் கல்வியை மட்டுமே பயின்றவர்.

    அந்த அற்புத தலைவர்.! பொன்மன தலைவர்.! கல்வியைப் பற்றி நன்கு அறிந்தவர்.

    1977- ஆம் ஆண்டு தமிழகத்தினுடைய முதலமைச்சர் பொறுப்புக்கு வந்தார்.

    ஆட்சிக்கு வந்த கையுடன், கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வந்தார்.

    மாணவர்களுக்கு தொழில் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

    மாணவர்களுக்கு பாலிடெக்னிக் கல்வியை கொண்டு வந்தவர் புரட்சித் தலைவர் அவர்கள்.

    இதற்கெல்லாம் ஆதாரமாக.. அச்சாரமாக அண்ணா பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார்.

    இன்றைக்கு இருக்கின்ற சுயநிதி பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் புரட்சித்தலைவரின் மானியத்தால் தொடங்கப்பட்ட கல்லூரிகளே ஆகும்.

    இன்றைக்கு இருக்கின்ற அத்தனை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்தவை ஆகும்.

    கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட இன்ஜினியர் பிரிவுகளில் இருக்கும் அத்தனை பாடத்திட்டங்களையும் புரட்சித் தலைவரே கொண்டுவந்தார்.

    தமிழ்நாட்டு மாணவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றவர் புரட்சித் தலைவர் அவர்களே ...

    இன்றைக்கு மாணவர்கள் வளமுடன் வாழ்கிறார்கள் என்றால் ...

    அதற்கு காரணம், நம் புரட்சித் தலைவரே புரட்சித் தலைவரே....

    இதை மாணவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு.

    என்கிற வள்ளுவன் வாக்கை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

    வாழ்க புரட்சித் தலைவர்.!!
    வாழ்க பொன்மனச்செம்மல் ..!!
    வாழ்க மக்கள் திலகம் ...!!!

    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் புரட்சித் தலைவா வாழ்க வாழ்க வாழ்கவே ....

    ( 2. ).

    ������������������������������... Thanks...

Page 4 of 210 FirstFirst ... 234561454104 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •