Page 48 of 210 FirstFirst ... 3846474849505898148 ... LastLast
Results 471 to 480 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #471
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார் மக்கள் திலகம் "எம்.ஜி.ஆர்" அவர்கள்.
    சிவாஜிகணேசன்
    அவர்கள் இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்.. என்ற அரைப்பக்க விளம்பரம் பிரசுரமான அதே நாளில்,
    "எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடிக்கும் உத்தமபுத்திரன்" என்ற அரைப்பக்க விளம்பரம் வேறு பக்கத்தில் பிரசுரமாகியது! இந்தப் படத்தை "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ்" தயாரிக்கப் போவதாகவும் அந்த விளம்பரம் கூறியது. அதாவது எம்.ஜி.ஆரின் சொந்தப்படம்!
    இதைப் பார்த்த ரசிகர்கள் வியப்பும், திகைப்பும் அடைந்தனர். திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. "சிவாஜி, எம்.ஜி.ஆர். இடையே பெரும் மோதல் உருவாகி விட்டது" என்று எல்லோரும் நினைத்தனர். ஏற்கனவே இருதரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டிருந்த நேரம் அது.
    இந்த விவகாரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தலையிட்டார். எம்.ஜி.ஆருக்கு போன் செய்து, "நீங்கள் ஏற்கனவே நாடோடி மன்னன் படத்தை தயாரித்து வருகிறீர்கள். அதில் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்கள். சிவாஜி கணேசன் வளர்ந்து கொண்டிருக்கும் பிள்ளை. உத்தமபுத்திரனை சிவாஜிக்கு விட்டுக்கொடுங்கள்" என்று கூறினார்.
    கலைவாணரிடம் அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் உடையவர் எம்.ஜி.ஆர். கலைவாணர் வார்த்தைக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். எனவே, போட்டியில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
    [நன்றி :மாலைமலர்]
    Thank you Anna .........
    Nallathambi Nsk

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #472
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #எம்ஜிஆர்.பெயர் தமிழில் இல்லையா ?

    "சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பில் தமிழ் எழுத்துக்களைக் காணோம். இந்தி எழுத்துக்கள் மட்டுமே உள்ளன" என்று சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருந்தன. அது தவறான தகவல் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    "#புரட்சி_தலைவர்_டாக்டர்
    #எம்_ஜி_ராமச்சந்திரன்_மத்திய_ரயில் #நிலையம்' பெயர் பலகையில் ஏதும் மாற்றம் செய்யப்படவில்லை.
    நிலையத்தின் முகப்பில் முதலில்
    தமிழிலும், அடுத்து இந்தியிலும்,
    கடைசியில் ஆங்கிலத்திலும் பெயர்
    பலகைகள் முன்பே வைக்கப்பட்டுள்ளன.

    தமிழ் பெயர் பலகை நீக்கப்படவில்லை.
    நிலைய கட்டிடத்தின் பாதி படத்தை
    மட்டும் எடுத்து சமூக வலைதளங்களில்
    பதிவிட்டு தவறான செய்தி பரப்புவது
    கண்டனத்திற்குரியது" என்று தெரிவித்துள்ளது ரயில் நிலைய செய்திக்குறிப்பு. நாமும் உண்மை
    என்னவென்பதை நேரில் தெரிந்து
    கொண்டோம்.

    "ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு - இனி
    அவசரக்காரனுக்கு முகநூல் மட்டும்"
    என்று புதுமொழி படைத்திடலாமோ ?

    செய்தியை முந்தித்தருவது தவறில்லை.
    ஆனால் உண்மை பிந்திப் போய்விடக்கூடாது.

    Ithayakkani S Vijayan with Plato Rajagopalan & Sakthi Flowers Decorations.........

  4. #473
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் என்ற அந்த மகா நடிகன் கண்ட " ஹீரோயிசம்" என்பது காலவரையறுகளுக்கு உட்பட்டது.

    பள்ளியில் சென்று ஆத்திச்சூடி பயிலும் பாலகனாக இருக்கும்போதே வறுமையை நீக்க, வயிற்றுப்பசியைப்போக்க நாடக கொட்டாய்களில் திரை இழுக்கும் வேலைக்கு வந்து விட்டார்...

    அந்தக்காலம் மிகக்கொடியது... சின்னக்குழந்தை அல்லவா??? சமயத்தில் திரையை ஏற்றவும், இறக்கவும் மறந்து தூங்கிப்போய் விடும். அதற்கு அந்தக்கால "பாய்ஸ்" நாடகக்கம்பெனியில் இந்த பாய்சுகளுக்கு தண்டனை கிடைக்கும்...

    ஐந்து வயதில் வயிற்றுப்பசியை போக்க அரும்பாடு படுவது என்பது அந்தக்காலத்தில் future என்னும் எதிர்காலத்தை ஏற்படுத்தி பின்னர் நல்வாழ்வு பெறவே...

    1917 ல் பிறந்தவர் 1937 ல் திரையில் முதலில் தோன்றி, 1947 ல் நாயகனாக மாறி, 1957 ல் கதாநாயகனாக கோலோச்சி, 1967 ல் தென்னிந்திய திரையின் ஏகபோக அரசனாக, அதிக ஊதியம் பெறும் பெரும் நடிகனாக வலம் வந்து அந்தப்பதவியை மீண்டும் பத்தாண்டு காலம் தன்னில் தக்க வைத்து , 1977 ல் தமிழகத்தையே ஆளும் மன்னாதி மன்னனாய் 1987 ல் தன் இறுதி மூச்சு வரை அந்த முதல்வர் பதவியை அலங்கரித்தார்...

    அன்றெல்லாம் இன்றைய ஒப்பனை மற்றும் ஒளிப்பதிவு சாகசங்கள் இல்லை, இருந்திருந்தால் இவரின் பெரும்பாலான படங்கள் தொழில்நுட்பத்தின் உச்சத்தையே தொட்டிருக்கும் உலக ஆச்சர்யங்களாக வீற்றிருக்கும்...

    விருப்பு, வெறுப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, எம்ஜியார் என்ற அந்த பிம்பம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு எட்டாவது அதிசயம்...

    ஆனந்த் ...........

  5. #474
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழ்நாடு வரலாறு தெரியாதவர்கள் பல செய்திகளை சொல்கிறார்கள். திராவிடம், திராவிட கொள்கை, திராவிடத்தை வளர்த்தவர் யார்? என்பதை எடுத்துக் கூறுவது என் கடமை. 1952-ம் ஆண்டு mgr தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் இணைந்த பிறகுதான், தி.மு.க. வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்தது.

    1952-ம் ஆண்டு mgr தி.மு.க.வில் இணையும் வரை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. அந்த தேர்தலின் போது mgr குறிப்பிட்ட தலைவர்களுக்காக பிரசாரம் செய்தார். அப்போது 15 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது.

    தி.மு.க. என்ற கொடி பாமர மக்களிடம் சென்றடைவதற்கு காரணம், ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் தான். Mgr படத்தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கிய போது, அந்த நிறுவனத்தின் ‘லோகோ’வில் தி.மு.க.வின் இருவர்ண கொடியை இடம்பெற செய்தார். அந்த லோகோவை வெளியிட தணிக்கைத்துறை தடைசெய்தது. அந்த தடையை mgr தகர்த்து எறிந்தார்.

    60 ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வின் இருவர்ண கொடியை அடையாளப்படுத்தி பட்டித்தொட்டி எங்கும் mgr கொடி என்று அறிமுகப்படுத்தப்பட்டதுஅந்த இருவர்ணத்திலான 1¼ அடி துண்டை அப்போது கழுத்தில் போடுவதில் பெருமை அடைந்தோம். Mgr ரின் திரைப்பட பாடலில் இருவர்ண கொடி, உதயசூரியன் பற்றி எழுதப்பட்டது.

    1962-ம் ஆண்டு தேர்தலில் 50 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1967-ம் ஆண்டில் ஆட்சி கட்டிலில் ஏறியது. 1967-ல் ஆட்சி பிடித்ததும் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை அணிவிக்க எல்லோரும் சென்றனர்.அப்போது பேரறிஞர் அண்ணா அந்த மாலையை வாங்க மறுத்துவிட்டார். இந்த வெற்றிக்கு காரணமானவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார். அவருக்கு சென்று மாலை அணிவியுங்கள் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.

    பேரறிஞர் அண்ணாவே 1967-ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு காரணமானவர் mgr தான் என்று சொன்னதற்கு அடிப்படை காரணம், அவர் துப்பாக்கியால் சுடப்பட்ட கட்டுடல் போடப்பட்ட படம்தான் நாட்டு மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற்று வெற்றிக்கு வித்திட்டது. பெரும்பான்மையை பெறுவதற்கு மூலக்காரணமாக mgr இருந்தார்.

    பேரறிஞர் அண்ணா தான் mgr ரை சரியான முறையில் அடையாளம் கண்டவர். Mgr ரை இதயக்கனி என்று அழைத்தார். ஒருமுறை தேர்தலுக்காக mgr நிதி கொடுக்க வந்த போது, உன்னுடைய நிதி வேண்டாம், உன் முகத்தை மட்டும் காட்டு, 30 லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்.

    பேரறிஞர் அண்ணா பொதுக்கூட்டங்களுக்கு சென்றுவரும் நேரங்களில், அவருடைய காரில் இருக்கும் கொடியை அங்குள்ள பாமர மக்கள் பார்த்து, அண்ணாவிடம், mgr கட்சியா? என்று கேட்கும் அளவுக்கு mgr மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். அதை பேரறிஞர் அண்ணா பெருமையாகவே கருதினார்.

    படித்தவர்கள் மத்தியில் என் எழுத்தும், பேச்சும், கருத்தும் சென்றடைகிறது என்றால், படிக்காத பாமர மக்களிடம் என்னுடைய கருத்தை, சிந்தனையை கொண்டு சென்றவர் என்னுடைய தம்பி mgr என்று அண்ணா சொல்வார். தி.மு.க. வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறவர் mgr என்றும் அண்ணா சொல்வார். அவரால் திராவிட இயக்கம் வளர்ந்தது என்று பேரறிஞர் அண்ணா மிகத்தெளிவாக பதிவு செய்தார்.

    1971-ல் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடந்தபோது, அப்போது தேர்தல் வருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பட்டித்தொட்டி எங்கும் பிரசாரம் செய்தார். இந்த ஆட்சிக்கு உத்தரவாதம் தருகிறேன், தவறு நடந்திருந்தால் அதை திருத்தியமைக்க போராடுவேன் என்று சொன்னார். என்னை நம்பி வாக்களியுங்கள் என்றும் கேட்டார். அதை தமிழக மக்கள் ஏற்றார்கள் என்பதற்கு வெளிப்பாடு, 183 இடங்களில் தி.மு.க. வெற்றிபெற்றது. அதன்பின்னர், தி.மு.க.வை விட்டு mgr வெளியேறி, 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை தொடங்கினார்.

    அதன்பிறகு, 1972-ம் ஆண்டு முதல் 1987 வரை mgr ரை யாராலும் வெற்றிபெற முடியவில்லை. எத்தனை சூழ்ச்சிகள், சதிகள் செய்தாலும் mgr உயிரோடு இருக்கும் வரை தமிழக மக்கள் தலைவர் mgr தான் என்று நாட்டு மக்கள் நிரூபித்தனர். திராவிட இயக்கத்தை வளர்த்தவர் mgr தான்.

    பேரறிஞர் அண்ணாவை நாட்டின் முதலமைச்சராக உட்காருவதற்கு காரணமாக இருந்தார். அதன்பிறகு கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் அமருவதற்கு காரணம் mgr தான். இப்போது தமிழ்நாடு முதலமைச்சராக
    எடப்பாடி.k.பழனிச்சாமி இருப்பதற்கும் mgr தான் காரணம். Mgr இல்லை என்றால் திராவிடம் என்ற பேச்சு தமிழகத்தில் இருந்திருக்காது.........

  6. #475
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இளம் வயதில் காந்தீய கொள்கைகள் மீது புரட்சிதலைவருக்கு அப்படி ஒரு ஈடுபாடு இருந்துள்ளது...

    கதர் சட்டை கழுத்தில் உத்திராட்சம் அணிந்து எப்போதும் வெளியில் சென்ற காலங்கள் உண்டு...

    ஒரு முறை வால்டாக்ஸ் சாலைக்கு அருகில் மாலையில் நாடகம் நடிக்க போகணும்.....
    மதிய வேளைக்கு முன் இப்போ பக்கத்தில் போய் விட்டு வருகிறேன் என்று பெரியவரிடம் சொல்லி விட்டு போன தலைவரை ரொம்ப நேரம் காணவில்லை.

    பதறி போன பெரியவர் அவரை தேடி கொண்டு போக.....ஒருவர் மட்டும் யானைகவுனி காவல் நிலையத்தில் அவரை போல பார்த்தேன் என்று சொல்ல அங்கே ஓடுகிறார் பெரியவர்.

    பார்த்தால் அங்கே ஒரு பெரிய கூட்டத்தின் நடுவில் நம்ம நாயகன்.

    காவல் அதிகாரியிடம் பெரியவர் விசாரிக்க இன்று மதியம் காங்கிரஸ் கட்சி சார்பில் கள்ளு கடை மறியல்...அதில் கலந்து கொண்டவர்களை இங்கே வைத்து இருக்கிறோம்..

    மாலையில் விட்டு விடுவோம்...என்று சொல்ல ஐயா மாலை எங்களுக்கு நாடகம் இருக்கு உடனே தம்பியை மட்டும் விடுங்க என்று சொல்ல.

    சரி நல்ல நோக்கத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்...சரி அவர் தொழில் பாதிக்க கூடாது என்று வெளியில் விட..வெளியில் வந்த பெரியவர் என்னப்பா இப்படி அண்ணா வரும் வழியில் இந்த அறப்போர் எனக்கு மிகவும் பிடிக்க நானும் உள்ளே போய் கோஷம் போட்டேன்...என்று வெகுளியாக சொன்னார் நம் இதய தெய்வம்...

    நல்ல கொள்கைகள் அவர் ரத்தத்தில் ஊரியவை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று.

    காரைகுடிக்கு அண்ணல் மகாத்மா அவர்கள் வரும் போது அங்கே அப்போது இருந்த பெரும் பணம் படைத்தவர்கள் தங்கம் வெள்ளி பணம் என்று அண்ணல் அவர்களிடம் அள்ளி கொடுக்க.

    அப்போது வறுமை தலைவர் இடம் அண்ணன் அவர்களுடன் எட்டனா வாங்கி ஆளுக்கு நாலு அனா என மஹாத்மா அவர்கள் கையில் கொடுத்து அவரை ஒரே முறை சந்தித்து உள்ளார் நம் காவிய நாயகன்...

    அடுத்து வந்த நாட்களில் அவரை நேரில் பார்த்ததை பற்றியே பலரிடம் சொல்லி மகிழ்ந்து இருக்கிறார் நம் பொன்மனம்..

    அவர் படங்களில் காந்தியின் படங்களை காட்டி மகிழ்வார் தலைவர்.

    வாழ்க அவர் புகழ்.
    நன்றி...தொடரும்.
    உங்களில் ஒருவன் .........

  7. #476
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ஏவி.எம். நிறுவனத்துக்காக "அன்பே வா' படத்தை இயக்கியது ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. எம்.ஜி.ஆருக்கென்று ஒரு பார்முலா உண்டு. அவர் ஏழையாக இருப்பார். ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்வார். நிறைய சண்டைக் காட்சிகளும் படத்தில் இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட எம்.ஜி.ஆர். பார்முலாவுக்குள் அடங்காத படம் "அன்பே வா'. அப்படத்தின் கதையை எம்.ஜி.ஆரிடம் கூறிய போது, இந்தப் படத்தில் நடிக்கும் எல்லோருமே பொம்மைகள், நீங்கள்தான் அவர்களை ஆட்டுவிக்க வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார். "அன்பே வா' வெற்றிவிழாவின் போது ரசிகர்களின் முன்னிலையிலேயே இந்த விஷயத்தைச் சொன்னார்.

    "அன்பே வா' படப்பிடிப்பு நடக்கும் போது சென்னையில் கிங்காங், தாராசிங் போன்ற புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் பங்கு பெற்ற போட்டிகள் நடந்து வந்தன. அதில் பங்கு பெற வந்திருந்த ஆந்திரத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர் ஒருவரை எம்.ஜி.ஆருடன் மோத வைத்து படமாக்கிய சண்டைக் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதை விட முக்கியமான விஷயம் "அன்பே வா' படம் முடிந்த பிறகு ஒரு முழுப் பாடலும் நடனக் காட்சியும் வரும். அதையும் முழுமையாக பார்த்து ரசித்தார்கள். "அன்பே வா' படத்துக்கு முன்பும், பின்பும் இப்படி படம் முடிவடைந்து ஒரு பாடல் மற்றும் நடன காட்சி எந்த படத்திலும் இடம் பெற்றதேயில்லை !

    - இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர்.........

  8. #477
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நாம் அடுத்து "நேற்று இன்று நாளை" திரைப்படத்தின் வெற்றியை பற்றி பார்க்கலாம். சிவாஜி ரசிகர்கள் தோல்விப்படம் என்று சொன்ன "நவரத்தினம்" மற்றும் "ஊருக்கு உழைப்பவன்" வசூல் விபரங்களை பார்த்தோம். அவைகளும் வெற்றி படங்கள்தான் என்பதை வசூல் விபரங்கள் மூலம் நிரூபித்தோம். அவர்கள் "நேற்று இன்று நாளை"யை தோல்விப் படம் என்றும் அசோகன் ஐயோ பாவம் என்றும் சொல்கிறார்கள். அது சிவாஜியின் வெள்ளிவிழா படங்களை எப்படி புரட்டி எடுத்தது என்பதை பார்க்கலாம்.

    முதலில் "நேற்று இன்று நாளை" படத்தை தயாரிக்க அசோகன் எவ்வளவு தன் சொந்தப்பணத்தை போட்டார் என்று தெரியுமா?. தம்பிடி காசு கூட போடவில்லை. அத்தனையும் பைனான்சியர் கொடுத்த பணம். "ஆயிரத்தில் ஒருவன்" படமெடுக்க பந்துலுவுக்கு கொடுத்தது எல்லாமே பைனான்சியர் காசுதான். எம்ஜிஆர் நடிக்கிறேன் என்று கடிதம் கொடுத்தால் போதும். பணம்தர பைனான்சியர்கள் தயாராக இருக்கிறார்கள்.

    சிலர் பைனான்சியர் கொடுக்கும் பணத்தில் தங்கள் சொந்த செலவுக்கும் எடுத்துக் கொள்வார்கள். அப்புறம் படம் அவர்கள் எதிர்பார்த்தபடி முடியாமல் கோஞ்சம் லேட் ஆனாலும் வட்டி அதிகம் வந்து விடுமே என்று தலைவருக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி விடுவார்கள். தலைவருக்கு உடனே தெரிந்து விடும் எங்கே தவறு நடந்திருக்கிறது என்று. அதனால் கோபத்துடன் சென்று விடுவார்.

    இவர்கள் ஏதோ இவர்கள் முதலில் வட்டி போகிறதே என்று கவலை கொண்டு பிதற்றி திரிவார்கள். லாபத்தில் ஒரு பங்கை வட்டிக்கு செலவழிக்க போகிறார்கள் அவ்வளவுதான். இதுதான் "நேற்று இன்று நாளை" படத்துக்கும் நடந்தது.
    படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பது எம்ஜிஆர் நடிப்பதனால்தான். ஆனால் பைனான்சியர் ஏதோ தனக்கு கடன் கொடுத்ததை போலவும் தான் அந்த கடனிலிருந்து வெளியே வர எம்ஜிஆர் சீக்கிரம் நடித்து கொடுக்க வேண்டும் என்று பிறரிடம் புலம்பித் திரிவதுதான்.

    சில தயாரிப்பாளர்கள் தலைவருக்கே ஆலோசனை வழங்குவது, தான் ஒரு தயாரிப்பாளர் போல நடந்து கொள்வது போன்ற ஆணவம்தான் படம் லேட் ஆக காரணம். அப்படி ஆணவம் பிடித்து அழிந்து போனவர்தான் சந்திரபாபு. உனக்கு திறமையிருந்தால் நீ வேறு நடிகர்களை போட்டு அடுத்த படத்தை எடுத்து உன் திறமையை காட்டலாமே? ஒரே படத்தில் பல சொத்துக்களை இழந்து சொந்த ஊருக்காவது போகலாம்.

    இனாமாக கொடுத்த மாட்டை பல்லை பிடித்து பார்த்த கதையாக ஆக்கி விடுகிறார்கள். சரி, "நேற்று இன்று நாளை" படத்தின் வசூலை பார்க்கலாம். சென்னையில் பிளாசா மகாராணி யில் 105 நாட்களும் கிருஷ்ணவேணியில் 72 நாட்களும் சயானியில் 66 நாட்களும் சேர்த்து
    மொத்தம் 348 நாட்கள் ஓடி வசூலாக ரூ 10,65,105.45 ம் பெற்றது. சாதாரண திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதித்து காட்டியது.
    மதுரை சிந்தாமணி யில் வெளியாகி
    119 நாட்கள் ஓடி வசூல் ரூ 405964.78
    ஐ எட்டியது.

    நெல்லை பார்வதியில்
    வெளியாகி 119 நாட்கள் ஓடி ரூ
    238097.25 வசூல் பிரளயம் செய்தது.
    வெள்ளி விழா ஓட்டிய "பட்டிக்காடா பட்டணமா" நெல்லையில் அதே பார்வதி தியேட்டரில் பெற்ற வசூல்
    எவ்வளவு தெரியுமா?. 100 நாட்களில்
    ரூ 1,59,982.65 வசூலாக பெற்று "நேற்று இன்று நாளை" யிடம் படுதோல்வி கண்டது.

    நாகர்கோவிலில் "நேற்று இன்று நாளை" 50 நாள் வசூலுடன் மோதி படுதோல்வி கண்ட கணேசனின் வெள்ளி விழா படங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல.
    நாகர்கோவிலில் நே.இ.நா.
    50 நாள் வசூல் ரூ 1,16,709.75.
    "தங்கப்பதக்கம்" "எங்கள் தங்க ராஜா" "ராஜராஜசோழன்" "வசந்த மாளிகை" ஆகிய கணேசனின் படங்கள் கதறுவதை காணலாம்.

    தமிழகத்தில் 44 அரங்கில் வெளியாகி 38 அரங்குகளில் 50 நாட்களை கடந்த அற்புதம். முதலில் திரையிட்ட 44 அரங்குகளில் 75 லட்ச ரூபாய் வசூலாக பெற்று, முதல் ரவுண்டில் 85 லட்சம் பெற்று மிகப் பெரிய சாதனை செய்தது.. எல்லா மாநிலங்களிலும் ஓடியதை சேர்த்தால் கோடியை தாண்டி ஜெயக்கொடியை ஓங்கி உயர்த்தி காட்டிய படம். சிவாஜிக்கு எம்ஜிஆர் சினிமாவில் இருக்கும் வரை அவர் நடித்த வேறு எந்த படமும் இந்த சாதனையை நினைத்து கூட பார்க்க
    முடியவில்லை.

    அசோகனுக்கு புது வாழ்வு தந்ததோடு அவருடைய குடும்பம் இன்று வரை வசதியாக வாழ வழிவகை செய்து கொடுத்ததை அவரது மகன் வின்சென்ட் அசோகன் பேட்டி கொடுத்திருக்கிறாரே?. அதை சிவாஜி ரசிகர்கள் பார்த்து விட்டு மெளனமாக இருப்பது ஏன்?. நீங்கள் தயாரிப்பாளர்களை தெருவில் விட்டதை போல் எங்களையும் நினைக்க வேண்டாம். தலைவரை நம்பி கெட்டவர்கள் இன்று வரை யாரும் கிடையாது.

    நெல்லை பார்வதியில் வாழ்நாள் சாதனை.
    -----------------------------------'----------'-----------
    திருநெல்வேலி பார்வதி தியேட்டர் தொடங்கி தியேட்டர் பணி நிறைவடையும் (மூடும்)காலம் வரை
    அந்த தியேட்டரில் ரூ 2 லட்சம் வசூல் பெற்ற ஒரே படம் தலைவரின் "நேற்று இன்று நாளை" தான். சிவாஜி படங்கள் அதிகமாக திரையிட்ட தியேட்டர் பார்வதிதான். அந்த குகைக்குள்ளே நுழைந்த சிங்கத்தை கண்டவுடன் ஆட்டுக்குட்டிகள் அலறிப்புடைத்து
    ஓடி விட்டன.

    நெல்லையை பொறுத்தவரை மிகப்பெரிய தியேட்டர் என்றால் அது சென்ட்ரலும்
    பூர்ணகலாவும் தான். அங்கு சிவாஜி படங்கள் சொற்பமாகத்தான் வெளியாகும். அங்கு சிவாஜி படம் திரையிட்டால் அலிபாபாவின் குகைக்குள் ஆட்டுக்குட்டி நுழைந்தது
    போலிருக்கும்.

    அங்கெல்லாம் தலைவர் படங்கள்தான் சாதனை செய்யும். சிவாஜி படங்கள் வேதனையை தான் தரும். மற்ற இடங்களில் வெள்ளி விழா ஓட்டிய "வசந்த மாளிகை" இங்கு சென்ட்ரலில் 69 நாட்கள் ஓட்டுவதற்குள் நெல்லையப்பர் கோவில் தேரின் வடக்கயிறு கொண்டு வர வேண்டியதாயிற்று. ஊர் ஊருக்கு ஒரு சின்ன தியேட்டர் வைத்துக் கொண்டு அதில் 100 நாட்கள் ஓட்டுவதுதான் அவர்கள் வாடிக்கை.

    இந்த ஒரே படம் அசோகனின் இழந்த சோகத்தை மீட்டுத் தந்ததோடு கடனையும் அடைத்து கையில் ஒரு பெருந்தொகையையும் கொடுத்தது.
    எஞ்சிய காலங்களில் நிம்மதியாக கழிக்க "நேற்று இன்று நாளை" அசோகனுக்கு பேருதவி செய்தது..........

  9. #478
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    கே.சுந்தரராஜனின் பதிவு.
    1.எம்ஜிஆர் அவர்கள்
    ஜாதி மதம் இனம்
    மொழிகளுக்கெல்லாம்
    அப்பாற்பட்ட மனிதர்
    2.மனித நேயத்தின்
    உச்சக்கட்டம்
    3.வள்ளல் தன்மை
    4.தாயை வணங்குதல்.
    5.உடற்கட்டுக்கோப்பாக
    வைப்பதில் கவனம்.
    6.எந்த நிலையிலும்
    தன் கொள்கையை
    விட்டுக் கொடுக்காதிருத்தல்.
    7.நல்லது மட்டுமே
    குறிக்கோள்.
    8.தமிழ்மீதும் தமிழக மக்கள் மீதும் மிகுந்த
    அன்பு.
    9.பெண்களை தெய்வமாக நினைப்பவர்.
    10.எந்த கெட்ட பழக்கத்துக்கும் அடி
    பணியாதவர்.
    11.கெட்ட வார்த்தைகள்
    வாழ்நாளில் பேசியதும்
    கிடையாது.
    12.குழந்தைகளிடம் அன்பு நேருவைப் போல
    13.தொண்டு செய்வதில்
    அப்துல்கலாம் போல
    14.ஒன்றே குலம்
    ஒருவனே தேவன்
    என உரைப்பதில்
    அண்ணாவைப்போல
    15.இலவச கல்வி
    இலவச உணவு
    தருவதில் காமராஜரைப்போல
    16.தமிழ் மொழி
    எழுத்துவடிவம்
    சிலைகள் அமைத்தல்
    வழிபடுதல்
    பெண்களின் வாழ்விற்கு அரும்பாடுபட்ட பெரியாரைப் போல
    17.சுதந்தரமாக வாழவேண்டும் மக்கள்
    எனப் பாடுபட்ட காந்தியைப் போல
    18. அரசியலில் வெற்றி
    ஒன்றே குறிக்கோள்
    என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
    போல
    19.சமூக தொண்டு பரிவதில் அன்னை தெரசா போல
    20.நல்வழிப்படுத்த நம்நாடு காக்க
    கம்னியூஸ்டு தலைவர்
    ஜூவானந்தம் போல
    21.தேவைப்பட்டால்
    நம் நாட்டைக் காப்பாற்ற
    எதிரிகளிடம் அகப்படமால் எமர்ஜென்சி கொண்டு
    வந்த இந்திராவைப்போல
    மொத்தத்தில்
    இன்று நம் எம்ஜி ஆர்
    இதய தெய்வமாக.........
    காட்சி அளிக்கிறார்.

  10. #479
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    அதற்கொரு நேரம்!
    ----------------------------------
    கவிஞர் உடுமலை நாராயணகவி!
    தமிழன்னையின் செல்லப் பிள்ளைகளில் ஒருவர்!
    தஞ்சை ராமையா தாஸ்,,உடுமலைப் போன்றவர்கள் தாம் கவியரசருக்கும் முன்னர் திரையுலகின் தமிழ் ஜாம்பவாங்கள்!
    மனிதர் மகா வம்பு பிடித்தவர்!
    இவரிடம் எவரேனும் வாய் கொடுத்தால் போச்சு-அவரை-
    வலிக்காமலேயே வானகம் அனுப்பி விடுவார்!!
    தர்க்கம்--குதர்க்கம்-இரண்டுமே நிரம்பிய வர்க்கம்!
    மெல்லிசை மன்னரும் வாலியும் ஒரு பாடல் கம்போஸிங்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலைப் பொழுது!
    மெல்லிசை மன்னரின் முகம் திடீரென்று-
    மின்சாரத்தை சாப்பிட்டது போல் ஆகிறது?
    அவசரமாக வாலியிடம் சொல்கிறார்--
    வாலி,,உடுமலை வருகிறார்,நீங்க அவர்க்கிட்ட வாய்க் கொடுத்து மாட்டிக்காதீங்க. மனுஷர் மகா வம்பு பிடிச்சவர்--
    இதற்குள் அவர்கள் அருகே வந்துவிட்ட உடுமலையார் வாலியிடம் கேட்கிறார்--
    என்ன வாலி,,சமீபத்துல நீங்க எழுதின பாட்டு ஒண்ணுல இலக்கணப் பிழை இருக்கே?
    வாலியின் புருவங்கள் கேள்விக் குறியாக--
    உடுமலையாரே தொடர்கிறார்--
    எம்.ஜி.ஆருக்கு ஒரு பாட்டு எழுதியிருந்தீங்களே அதைக் கேக்கறேன்--
    நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்னு எழுதியிருக்கீங்களே? எம்.ஜி.ஆர் எப்படி அதை ஒத்துண்டார்?
    நான் ஆணையிட்டால் அது நடக்கும்ன்னு தானே ஒரு ஹீரோ அழுத்தமாகச் சொல்லணும்?
    நடந்துவிட்டால் என்று சந்தேகமா அர்த்தம் வரும்படி எழுதினது தப்பில்லையா??
    உடுமலையாரின் அஸ்திரத்தால் சலனமடைந்த வாலி வஸ்திரத்தால் முகத்தைத் துடைத்தபடி சொல்கிறார்-ஏதோ எழுதிட்டேன். அதை விடுங்க. உங்கப் பையன் சந்தானகிருஷ்ணன் எப்படி இருக்கார்?
    உடுமலையார் உதட்டில் சலிப்பைக் காட்டுகிறார்-
    என்னமோ இருக்கான். சரியான வேலைக் கிடைக்கலே. நான் சொல்லற அட்வைஸ்களையும் கேக்காமல் ஊர் சுத்திண்டிருக்கான்-
    இந்த பதிலுக்காகவேக் காத்திருந்தாற் போல் வாலி உடுமலையாரை மடக்குகிறார்--
    தந்தை சொன்னால் மகன் கேட்டே ஆகணும் அல்லவா? நீங்க சொன்னதை அவர் கேக்கறதில்லேன்னு சொல்றீங்க. அதே மாதிரி தான்--ஒரு தலைவன் ஆணையிட மட்டும் தான் முடியும். அது நடக்கக் கூடியக் காலச் சூழல் அவன் கையில் இல்லையே??
    நீங்க சொல்றதும் சரி தான் வாலி!--பலகீனமாக ஒப்புக் கொண்டு வாயடைக்கிறார் உடுமலையார்!
    இல்லான் இரப்பதும்-
    நல்லான் தவிப்பதும்
    வல்லான் விதித்த வேடிக்கைச் சூழல் தானே!
    வாலியின் பதிலை ஆமோதிப்பது உடுமலையார் மட்டுமல்ல நாமும் தானே???!!!.........

  11. #480
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எனக்கு ஏன் எம்ஜியாரின் நடிப்பு பிடிக்கும்

    சினிமா என்ற ஒரு கற்பனை உலகில் நான் பலதரப்பட்ட நடிகர்களின் அற்புதமான பல்வேறு நடிப்பு திறன்களை பார்த்து வியந்து இருக்கிறேன் .

    என்னுடைய பார்வையில் தமிழ் நடிகர் திரு எம்ஜியார் அவர்களின்

    30 வயதில் கதாநாயகன் - ராஜகுமாரி

    37 வயதில் மலைக்கள்ளன் படத்தில் சிறப்பான நடிப்பு

    41 வயதில் நாடே போற்றிய நாடோடி மன்னன் - இமாலய புகழ்

    47 வயதில் எங்க வீட்டு பிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் சூப்பர் ஹிட்

    50 வயதில் மரணத்தை வென்று - குரல் பாதிக்க பட்டு காவல்காரன் - மாபெரும் வெற்றி

    50 வயதுக்கு பிறகு

    ஒளிவிளக்கு

    குடியிருந்த கோயில்

    ரகசிய போலீஸ் 115

    அடிமைப்பெண் - நம்நாடு - மாட்டுக்காரவேலன் - ரிக்ஷாக்காரன் - நல்லநேரம் - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - இதயக்கனி

    நீதிக்குதலை வணங்கு - மீனவநண்பன் - மதுரையை மீட்டசுந்தரபாண்டியன் வந்த படங்கள் ஒரு சரித்திர சாதனை படைத்தது .

    இனி நடிப்புக்கு வருகிறேன்

    நாடகத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவம் நடிப்பு துறையில் ஒருவகையில் உதவியது .

    அவரது நடிப்பில் மிளிரும்

    இயற்கையான முக பாவங்கள்

    குரலில் சம சீரான வெண் குரல்

    பல மாறுபட்ட வித்தியாசமான நடிப்பு .

    எல்லாவற்றிகும் மேலாக

    ரசிகனை ஆனந்த வெள்ளத்தில் மிதக்க விட்ட

    அவரின் சுறுசுறுப்பான சண்டை காட்சிகள்

    short & sweet காதல் - வீரம் - - காட்சிகள்

    ரசிகனை 3 மணி நேரம் மகிழ்ச்ச்சியில் திளைக்க வைத்து மீண்டும் மீண்டும் அவரின் படத்தை பார்க்க வாய்த்த சாதுரியம் .

    இந்த நிலையான புகழ் பெற்ற முதல் நடிகர் எம்ஜியார்
    .
    Uncomparabale Hero in the World Films History.........

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •