Page 5 of 210 FirstFirst ... 345671555105 ... LastLast
Results 41 to 50 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #41
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்"
    நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கை பயணம்..! (அத்தியாயம் : 1)

    சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர்.

    “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ - முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்... 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது. ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்! அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன். ரத்தின சுருக்கமாக எம்.ஜி ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.

    இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.

    அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது.

    கோபாலன் நேர்மையான மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம்.

    அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
    5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.

    ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன். இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம். குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது. பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார். காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம். ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.

    மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர். “பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க...அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.

    குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது. ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்... அப்பா இனி பிழைக்கவழியில்லை. நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி 'நாராயணா, நாராயணா' என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.

    வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம். உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி. அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா. பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின. வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.

    பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத பாரும்மா... நானும் உன்னைப்போல ஒருகாலத்துல வசதியாக மாட மாளிகையில வசித்தவதான். என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல என்னை நடத்தலை. எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட உங்கிட்ட வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா.

    உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு. குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார். கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.

    அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள். குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார். கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள், அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர். கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு... அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார். குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்... அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு... தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.

    மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது.

    அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது.

    (தொடரும்)
    Posted : M.G.Nagarajan
    30 April 2020 1:07 AM
    Thanks for _ Published : Naveenan
    20:17 in
    "வண்ணத்திரை"
    யாழ் இணையம்........... Thanks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தந்தை இறந்த பிறகு தாய் சத்தியமா அனுபவித்த சொல்லொண்ணா துயரத்தின் வெளிப்பாடு தலைவரை ஏழைகளின் பால் ஈர்ப்பதற்கும்,ஈகை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது.நாகராஜன் சார் அரிய கிடைக்காத அருமையான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி........ Thanks...

  4. #43
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    M Soundararajan கொடுமையிலும் கொடியது, இளமையில் வறுமை. நீதி மொழிகளில் நாம் படித்திருக்கிறோம். அதை எம்ஜி.ஆர் அவர்கள் சிறுவயதில் அனுபவித்ததினால்; தான் பட்ட கஷ்டங்கள் வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். தனக்கு வருகின்ற வருமானம் அனைத்தையும் வாரி வழங்கி உதவி செய்தார். அதனால்தான், சுவாமிகள் கிருபானந்த வாரியார் அவர்கள் பொன்மனச்செம்மல் என்று அழைத்தார். மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்று இறையானார்....... Thanks...

  5. #44
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    காலம் தன் கடமையை செவ்வனே செய்யும் என்பதற்கு இந்த பதிவும் ஒரு எடுத்துக்காட்டு.அதனால் தான் தெய்வதாய் சத்யபாமா அவர்களை வேலைக்காரி அவமானம் செய்ய கொதித்தெழுந்த அம்மா தமிழகம் படையெடுக்க நமக்கு இதய தெய்வம் புரட்சி தலைவர் கிடைத்தது.......... Thanks...

  6. #45
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. N.G.Nagarajan, அவர்களுக்கு இனிய காலை வணக்கங்கள். நான் ஒரு போலீஸ் ஆபிசர். எனக்கும் தெரியாத விஷயங்கள் உங்களுக்கு எப்படிக் கிடைத்தன. நான் தலைவரையே காற்றாக சுவாசிப்பவன்.. நன்றி.
    எனக்கு இரண்டு விஷயங்கள் புரியவில்லை. நாம் தலைவரிடம் எதையும் எதிர்பார்க்க வில்லை. உயிரை வைத்திருக்கிறோம். ஆனால் சிலர் எம்.ஜி.ஆர் பணத்தை சாப்பிட்டவர்கள் வேறு கட்சியில் சேர்ந்து வாழ்க என்று சொல்கிறார்கள். இரக்கம் இல்லாதவர்கள். அவர்கள் உடலில் ரத்தம் ஓடுகிறார்..தெரியவில்லை..உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ய......... Thanks...

  7. #46
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    Radhakrishnan P ஆம் நண்பரே �� என்ன செய்வது. நாம் தலைவரின் மேல் உள்ள பாசத்தால் அவர் நம்மிடத்தில் வைத்துப்போன அன்பின் வட்டத்துக்கு உள்ளாகவே இருக்கிறோம். அவர்கள் பணத்தின்மேல் குறிக்கோளாகக் இருப்பவர்கள். பணம் பதவி வருகின்ற பக்கம் எல்லாம் போவார்கள்...... Thanks...

  8. #47
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #நண்பர்கள்_அனைவரும்
    #இனிய_மதியவேளை_வணக்கம்

    கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டான் அந்த மாணவன்.

    கொஞ்சம் பெரிய படிப்புதான்.
    எனவே அதற்கு பெரிய தொகை நன்கொடையாக தேவைப்பட்டது.

    1000 ரூபாய் என்பது 1968 ல் பெரிய தொகைதானே !

    யாரிடமும் போய் உதவி கேட்டுப் பழக்கமில்லை. என்ன செய்வது?

    #ஒரே_ஒருவர்_நினைவுதான்_அவனுக்கு #உடனே_வந்தது.

    தயக்கத்துடன் போனான். தடுமாற்றத்துடன் தன் நிலையை எடுத்துச் சொன்னான்.

    அமைதியாக அமர்ந்து அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்த மனிதர் அடுத்த நாள் அவனை வரச் சொன்னார். பணம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை ஓரளவு அவனுக்கு வந்தது. நிம்மதியுடன் புறப்பட்டு வீடு சென்றான்.

    #மறுநாள்_பணத்தை_எதிர்பார்த்து #சென்ற_அந்த_மாணவன்_கையில்
    #ஒரு_காகிதத்தை_கொடுத்தார்_அந்த #மனிதர்_புரியாமல்_அந்த_காகிதத்தை #புரட்டிப்_பார்த்தான்.
    #அது_ஒரு_ரசீது_1000_ரூபாயை
    #அந்த_கல்லூரியில்_தன்_பெயரிலேயே #செலுத்தி_அதற்கு_ரசீது_வாங்கி #வைத்திருந்தார்_அந்த_மனிதர்.

    ஆனந்தக் கண்ணீர் ஆறாக பொங்கி வழிய நன்றி சொல்ல வார்த்தை எதுவும் இன்றி தவித்தான் அந்த மாணவன்.

    கல்லூரி வாழ்க்கை தொடங்கியது.

    சரி. அந்த கட்டண ரசீது என்ன ஆனது ? புத்தகங்களுக்கு நடுவே புகுந்து கொண்டதா ?
    அல்லது பூஜை அறை சாமி பக்கத்தில் சயனம் கொண்டதா ?

    இல்லை. அப்படி எல்லாம் அந்த மாணவன் செய்யவில்லை. அந்த ரசீதை அழகாக லாமினேட் செய்து பத்திரமாக தன்னுடனே வைத்துக் கொண்டான் அந்த மாணவன்.

    காலத்தாற் உதவி செய்த அந்த மனிதர், சில ஆண்டுகளுக்குப் பின் காலமாகி விட்டார்.

    அந்த மாணவன் படித்து முடித்து, உத்தியோகத்திலும் அமர்ந்து ஓய்வும் பெற்று விட்டார்.

    ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய பணத்தை எடுக்க, பக்கத்திலுள்ள ATM போகிறார். அங்கே மெஷினிலுள்ள பட்டன்களை அழுத்துகிறார்.
    கட கடவென்ற ஓசைக்குப் பின்...

    #பணத்தை_கொடுப்பது_எல்லோரின் #கண்களுக்கும்_எந்திரமாக_தெரிகிறது.
    #சம்பந்தப்பட்ட_இந்த_மனிதருக்கு
    #மட்டும்_அது_எம்ஜிஆராக_தெரிகிறது.

    ஆம். 1967-68 ல் இவர் கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டபோது உடனடியாக நிதி உதவி செய்த அந்த மாமனிதர் எம்ஜிஆர்.

    எம்ஜிஆர் தன் பெயரில் பணம் செலுத்தி படிக்க வைத்த அந்த மாணவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகன் Nallathambi Nsk.

    #இதோ_நல்லதம்பி_அவர்களே
    #சொல்லும்_அந்த_நன்றிக்_கதை..

    "1967 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியாவில் Engineering படிக்க சேர்ந்தபோது, மக்கள் திலகம் எனக்காக கட்டிய Capitation Fees Receipt.
    அதை Laminate செய்து வைத்துள்ளேன்.

    கல்லூரியில் சேரும்போது தலைவர் என்னை கூப்பிட்டு "
    #கலைவாணர்_பல #கோடிகள்_சம்பாதித்தார்_ஆனால் #அதையெல்லம்_தர்மம்_செய்துவிட்டு #அழியாத_புகழை_விட்டு_சென்றுள்ளார்.
    #எனவே_செல்வம்_அழிந்து_போகும்.
    ஆனால் நான் உனக்கு கொடுக்கப்போகும் கல்வி அழியாது. நன்றாக படி"என்று ஊக்கமும் கொடுத்தார் எம்ஜிஆர்.

    #படித்து_வேலை_செய்து_ஓய்வு
    #பெற்றுவிட்டேன்_இன்றும்_ATM_சென்று #ஓய்வூதியம்_பெறும்போது_அரசாங்கம்
    #கொடுப்பதாக_எனது_கண்களுக்கு
    #தெரியவில்லை
    #தலைவர்எனக்கு_கொடுப்பதாக #நன்றியோடு_நினைத்துக் #கொள்கிறேன்."

    நன்றி நல்லதம்பி அவர்களே !

    உங்கள்
    நல்ல மனம் வாழ்க !
    நன்றி மறவாத
    அந்த தெய்வ குணம்
    வாழ்க !

    #நன்றி_மறவாத_நல்ல_மனம்_போதும்
    #என்றும்_அதுவே_என்_மூலதனம்_ஆகும்
    #எனப்_பாடிய_வரிகளுக்கும்
    #அது_போல_வாழ்ந்து_காட்டிய
    #மன்னாதி_மன்னன்
    #பொன்மனச்செம்மல்_எம்ஜிஆர்_புகழ்...
    #என்றென்றும்
    #வாழ்க_வாழ்க... !

    அண்ணன் நல்லதம்பி அவர்கள் கல்லூரியில் சேர்ந்துவிட்டு,
    #மக்கள்திலகம் அவர்களை சந்தித்து செய்தி சொல்கிறார்...

    கல்லூரியில் சேர்ந்துவிட்டாய் மாத செலவுக்கு என்ன செய்வாய் என்று கேட்கிறார் நம் #வள்ளல் அதை எதிர்பார்த்து செல்லாத அண்ணன் நல்லதம்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

    #நம்_இறைவன்_சொன்னார்_மாதா #மாதம்_செலவுக்கு_இங்கு_வந்து_பணம் #பெற்றுக்கொள்_என்கிறார்.

    அடுத்த மாதம் தோட்டத்திற்கு செல்கிறார். அப்போது #தலைவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருகிறார். என்ன செய்வது என்று அண்ணன் நல்லதம்பி யோசிக்க...
    இவரை பார்த்த #பொன்மனச்செம்மல் #ஜானகி_அம்மையாரை காணச் சொல்லிவிட்டு புறப்பட்டுவிடுகிறார். ஜானகி அம்மையாரை சந்தித்தால், அந்த மாத செலவுக்கு பணம் கொடுத்து, ஒவ்வொரு மாதமும் வாங்கிக் கொள்ள சொல்கிறார். அண்ணன் நல்லதம்பி தன் கல்லூரி படிப்பு முடியும் வரை அந்த தொகையை பெற்றுக் கொண்டார்.

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு........ Thanks.........

  9. #48
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தமிழகம் நலம் பெற #புரட்சித்தலைவர் #எம்ஜிஆர் என்கிற பெயரை மூன்றெழுத்து மந்திரமாக சட்டமன்றத்திலும்.. மேடைகளிலும்.. உச்சரித்து மக்கள் திலகத்தின் மாண்பு சிறக்க பொன்மனச்செம்மலின் சாதனைகளை முன்மொழிந்து.. "புரட்சித் தலைவரின் அரசு" என்று என்று "மனதார ஏற்று"செயலாற்றும் எவருமே ...
    எவரானாலும்.. புரட்சித் தலைவரின் பக்தராக இருந்தால்...
    வெற்றிபெறுவது நிச்சயம்..
    இனிவரப்போவது புரட்சித் தலைவரின் தீர்ப்பு.. மக்களின் மகிழ்ச்சி மட்டுமே எதிர்காலம் ..
    அச்சம் தவிர்.. விழித்துக் கொண்டோரெல்லாம்..
    பிழைத்துக் கொண்டார்..
    உள்ளதைச் சோல்லி நல்லதைச் செய்து..வருவது வரட்டும் என்றிருப்போம்..
    வாழ்க புரட்சித் தலைவரின் புகழ்.இனிய வணக்கம் அன்புள்ளங்களே......... Thanks Mrs.Hanna George Medam...

  10. #49
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    1984-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல்... 👑👑👑

    👑 புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்கா ப்ரூக்ளின்
    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்... 😭😭😭

    ⭐ அதனால், அதிமுக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை அவரது அமைச்சர்களில் ஒருவரான இராம.வீரப்பன் திட்டமிட்டு நடத்தினார்...💐🌸🌺

    ☀ அப்போது, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தில், எம்.ஜி.ஆர் உயிரோடு இல்லை என்று கடும் சொற்களால் வறுத்தெடுத்த வண்ணம் நாக்கில் நரம்பில்லாமல் போசினர்...😡😡😡

    ♥ மிக நேர்த்தியாக #இராம_வீரப்பன் அவர்கள், தலைவர் சிகிச்சை பெற்று உடல்நலத்துடன் இருக்கும் வீடியோவைத் தயாரித்து ஒளி பரப்பினார்... 💗💗💗

    💚 அதிமுக பிரச்சாரத்தில் மிக முக்கியமான ஒரு திருப்பு முனையாக அமைந்தது தான் இந்த வீடியோ...
    ⬇⬇⬇⬇⬇⬇....... Thanks...

  11. #50
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    ������ வரலாற்றில் அழியாத திரு.சைதை துரைசாமியின் துணிச்சலை நினைவு கூறும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உரை... ❤����

    திரு.சைதை துரைசாமி பற்றி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அரசு விழாவில் பேசிய பேச்சு... ⬇⬇⬇

    ➡ நாங்கள் அரசியல்வாதிகள் எப்படி இருக்கின்றோம்...?
    நான் இங்கு வந்து மேடையில் நிற்கும் போதே சைதாப்பேட்டை என்றாலே எலுமிச்சம்பழம் தான் எனக்கு ஞாபகம் வரும்... ��������

    ���� நான் ஒரு அரசியல்வாதி...❗����

    ☀☀☀எலுமிச்சம் பழத்தை மாலையாகப் போட்ட துரைசாமியைத் தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகு தான் இந்த நிகழ்ச்சி கூட ஞாபகம் வரும்... ������

    ❤❤ நான் ஒரு அரசியல்வாதி...❗❗❗

    ������ என்னுடைய அரசியல் கட்சியில் இருந்த ஒருவர், அப்போதிருந்த முதலமைச்சருக்கு, இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம் பழ மாலையைப் போட்டு, அந்த மேடையையே அடித்து தூளாக ஆக்கி, அவரைத் தூக்கிக்கொண்டு போய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம் தான் என் கண்முன்னே முன்னே நிற்கும்... ������

    ������ ஆனால், அதை நினைத்துக் கொண்டு இங்கே வந்து, அந்த எண்ணத்தைப் பரிந்துரைக்கின்ற வகையில்நான் பேச ஆரம்பித் தேனானால், நான் முதலமைச்சராக இருக்க லாயக்கற்றவன் என்பதை இங்கே தெளிவாகக் கருதுகிறேன்... ��������

    ������ ஓட்டு வாங்குவது வேறு, அதை வாங்கிய பிறகு மக்களுக்குப் பணி செய்யும் நிலைமை வேறு... ������

    ✨⭐�� தன் தொண்டருக்காக எப்படி பட்ட எச்சரிக்கையுடன் புரட்சித் தலைவர் பேசுகிறார் என்பதற்கு இது ஒரு சான்று ....⚡⚡⚡...... Thanks...

Page 5 of 210 FirstFirst ... 345671555105 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •