Page 86 of 210 FirstFirst ... 3676848586878896136186 ... LastLast
Results 851 to 860 of 2097

Thread: Makkal Thilagam MGR Part 26

  1. #851
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    "தர்மம் தலை காக்கும்" தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த 5 வது படம். இதுவரை வெளிவந்த நான்கு படங்களும் 100 நாட்களை தாண்டி சிறப்பான வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து வெளியான படம். இதுவும் 100 நாட்களை தாண்டி ஓடியது குறிப்பிடத்தக்கது.

    வழக்கம் போல தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான கலைஞர்களை கொண்டு தயாரிக்கப் பட்ட படம். சில டைரக்டர்கள் பாடுபட்டு உருவாக்கிய கதையை வசனம் பாடல்கள் என மெனக்கெட்டு ராசிக்காக 'ப,பா' வரிசையில் பெரும் நட்சத்திர கூட்டத்துடன் எடுத்த படத்தை எம்ஜிஆர் தேவருடன் இணைந்து
    த வரிசையில் 10 முதல் 30 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தி 'ப' வரிசை படங்களை தூக்கி தூளியில் தூங்க வைத்து விட்டு 'த' வரிசையை தாயின் ஆசிர்வாதத்தால் வென்ற
    கதை தெரிந்து கொள்ளுங்கள். 'ப' வரிசை படம் எடுத்தவர் பரிதாபமாக நின்றார். 'த' வரிசை படம் எடுத்தவர் தரணியில் தலைநிமிர்ந்து நின்றார்.

    இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் எம்ஜிஆர் என்ற தனி மனிதரின் ஆற்றல் என்னவென்று?.
    படத்தின் ஆரம்ப காட்சி இருளில் தொடங்கி சற்று நேரம் வரை இருளிலேயே செல்வதால் முதலில் மாட்னி ஷோ பார்த்ததால் திரையில் நடப்பது என்னவென்று புரியவில்லை. பின்பு இரவுக்காட்சி பார்த்தவுடன்தான் காட்சிகள் புரிந்தது.

    ஆரம்ப காட்சியிலேயே சஸ்பென்ஸ் வைத்து பரபரப்பை ஏற்றி விடுவார் தேவர். எம்ஜிஆர் டாக்டராக வந்தாலும் அவரை
    ஜேம்ஸ்பாண்டாக மாற்றி விடுவார்.
    அதுவும் படத்தில் வரும் பின்னணி இசை ஆங்கிலப்படத்தின் தழுவல் பிரமிப்பூட்டுவதாக இருக்கும்.
    படம் பார்த்த அனைவரும் 'த' வரிசை படங்களை பற்றித்தான் அதிகம் பேசினார்கள். 'ப' வரிசை படுத்து விட்டது. 'த' வரிசை வென்று விட்டது.
    'ப' வரிசை படங்கள் ஓட்ட ஸ்டிரெச்சர்
    தேவைப்பட்டது. 'த' வரிசை படம் எடுத்தவர் இந்தி படம் எடுக்கும் அளவுக்கு உயரத்துக்கு சென்றதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    அருமையான பாடல்கள்தான் தேவர் எம்ஜிஆர் கூட்டணியின் சிறப்பு. எம்ஜிஆரும் k.v மாமாவுக்கு அதிகம்
    முக்கியத்துவம் கொடுப்பவர். "அடிமைப்பெண்" "மாட்டுக்கார வேலன்" போன்ற பெரிய படங்களை மாமாவுக்கு கொடுத்தார்.
    ஆனால் மாற்று நடிகரோ தன்னை நம்புவதை விட விஸ்வநாதன், கண்ணதாசன் போன்றவர்களைத்தான் நம்புவார்.
    எம்ஜிஆர் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தன்னை மட்டுமே நம்புவார்.

    அடுத்தவர் உழைப்பிலே தன்னை பெரிதாக காட்டிக் கொள்பவர்கள் மத்தியில் தலைவர் ஒரு தனிப்பிறவி. 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்' என்ற
    பாடலை வரவழைக்க யாராலும் முடியவில்லை என்பதை உணர்ந்து மருதகாசியிடம் அந்த பாடல் வரிகள் ஒளிந்திருப்பதை தலைவர் கண்டறிந்தார் என்றால் அவருடைய திறமை அடுத்தவர் மனதிற்குள் நுழைந்து அறியும் ஆற்றல் பெற்றது
    என்பதை உணர வேண்டும்.

    மாற்று நடிகர் கண்ணதாசன் எழுதிய பாடலுக்கு எம் எஸ் வி
    அருமையான மெட்டு போட்டு கொடுத்தாலும் அதற்கு உடனே நடிப்பு வரலையாம். உடனே பலவிதமான ஆங்கிலப்படங்களை பார்த்து முடிச்க ஒருவாரம் ஆனவுடன்
    அந்த நடிப்பை, நடையை, சிகரெட் ஊதலை காப்பியடித்து நடித்ததாக படித்தேன். இது எப்படி இருக்கு?

    இதில் சரோஜாதேவிக்கு இரண்டு தனிப்பாடல்கள். 'அழகான வாழை மரத்தோட்டம்' 'பறவைகளே பறவைகளே எங்கே போறீங்க' இரண்டு பாடலிலும் சற்று கூடுதல் அழகாக தெரிவார். 'தர்மம் தலை காக்கும்' பாடலில் தலைவர் கார் ஓட்டுவதை காணலாம். அந்த பாடலின் இசை மிகவும் அருமை.
    மூன்று டூயட் சாங். மூன்றுமே அருமையான பாடல்கள். 'ஹலோ ஹலோ சுகமா'? போனிலே முழு பாடல் காட்சியும். புது முயற்சியில்
    கலக்கியிருப்பார்கள்.

    'மூடுபனி குளிரெடுத்து' 'தொட்டுவிட தொட்டுவிட தொடரும்' எல்லாமே தலைவரை தொட்டு விட்டால் அதிர்ஷ்டம் தொடரத்தானே செய்யும்.
    ஒரு தனிப்பாடல் 'ஒருவன் மனது ஒன்பதடா' அதுவும் மனித மனங்களை பற்றி அமைந்த தத்துவப்பாடல். க்ளைமாக்ஸில் ட்விஸ்ட் என படம் பார்ப்பவர்களுக்கு
    விருந்து படைத்திருந்தார்கள்.

    மொத்தத்தில் படத்தை பார்த்த இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள்..
    சென்னையில் சித்ரா பிரபாத் சரஸ்வதியில் வெளியாகி மூன்றிலும் 70 நாட்கள் ஓடியது. கோவை ராயலில் 86 நாட்களும் சேலம் நியூசினிமாவில் 84 நாட்களும் ஓடி வெற்றி பெற்றது. தமிழகத்தின் பல இடங்களில் 50 நாட்களை கடந்து வெற்றி பெற்றது. ஆனால் இலங்கை கொட்டாஞ்சேனை கெயிட்டியில் 100 நாட்கள் ஓடி இலங்கை தலைவரின் வெற்றிச்சலங்கை என்பதை நிரூபித்தது..........ks...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #852
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நவம்பர் 1976

    மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த '' ஊருக்கு உழைப்பவன்'' 12.11.1976 அன்று திரைக்கு வந்தது . சென்னை நகரில் பைலட் , மகாராணி , அபிராமி , கமலா திரை அரங்கில் வெளியானது . சென்சார் பிடியில் இப் படத்தில் இடம் பெற்ற எம்ஜிஆரின் ஹெலிகாப்டர் சண்டை காட்சிகள் , மற்றும் இந்தி ஸ்டண்ட் நடிகர் ஷெட்டியுடன் மோதும் அனல் பறக்கும் காட்சிகள் வெட்டப்பட்டன . இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள் .

    இந்த நிலையில் யாருமே எதிர்ப்பாராத வண்ணம் மக்கள் திலகம் எம்ஜிஆர் சென்னை நகரில் மேற்கண்ட 4 திரை அரங்கிற்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்தது சில நிமிடங்கள் படத்தை பார்த்து விட்டு சென்றார் . ரசிகர்கள் அனைவரும் தங்களுடன் எம்ஜிஆர் படத்தை பார்த்ததை மிகவும் பெருமையாக கருதினார்கள் ............vd...

  4. #853
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரே நீங்க வேறு லெவல்...இனி ஒருவரை எங்கே காண்போம் இது போல படிப்பினை திரையில் சொல்ல..வாழ்க உங்கள் புகழ்...நன்றி.

    இதை போல கருத்து உள்ள பாடலை எங்கே இனி தேட...

    அவர்போல முதல்வர் கனவில் மிதக்கும் பலர் வேறு பணம் தேடி சின்ன திரை தேடி அலையும் காலம் இது.

    ஒரே பிக்பாஸ்..மாஸ்டர் எந்திரன் இந்திரன் எல்லாம் என்றும் இவரே..வேறு பக்கம் தேடி வீணாக போகவேண்டாம்..

    நீங்கள் நடிக்கும் வரை எங்களுக்கு கவலை இல்லை ரசிப்போம்.
    இவர் இடத்தை பிடிக்க நினைக்கும் போது உணர்வுகள் கொண்டு நியாயம் கேட்போம். இது சரியா என்று.

    முடிந்தால் தலைவன் ஆகுங்கள்..இருந்தால் நீங்கள் இருந்தால் தொண்டர் ஆகிறோம்.

    1967 இல் தலைவர் படத்தில் பாட்டு இது 93 வது படம் அவருக்கு. 53 வருடங்கள் முன்பு...

    இதை போல கருத்து சொல்லும் பாடல்கள் உங்கள் படங்களில் வந்ததா சகோஸ்....Mn...

  5. #854
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படம் 1965ம் ஆண்டில் 7 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடி அதுவரை வெளியான எல்லா படங்களின் வசூலையும் தூக்கியடித்து துவம்சம் செய்தது. மக்கள் திலகம் திரையுலகில் இருந்தவரை எங்க வீட்டு பிள்ளையின் 7 தியேட்டர் வெள்ளிவிழாவை எந்த நடிகரின் படமும் முறியடிக்கவில்லை.

    கோழை ராமுவாகவும் வீரமிக்க இளங்கோவாகவும் படத்தில் மக்கள் திலகம் இரண்டு வெவ்வேறு மனிதர்களாகவே வாழ்ந்திருப்பார். ராமுவுக்கு சரோஜாதேவியை திருமணம் பேசி முடிக்க ரங்காராவ் வீட்டுக்கு நம்பியார் வருவார். மாப்பிள்ளை பற்றிய கேள்விகளுக்கு ‘ பட்டம்- ஜமீன்தார்’, ‘இஷ்டம்-என் இஷ்டம்’ என்று கேள்விகளுக்கு நம்பியார் பதில் சொல்வார். மாப்பிள்ளை என்ன கலர்? என்ற கேள்விக்கு, ‘ரோஸ் கலந்த சிகப்பு’ என்று பதிலளிப்பார்.

    நீங்களே சொல்லுங்க... இந்த நிறத்தை குறிப்பிட்டு வேறு எந்த நடிகருக்காவது ஒரு வசனகர்த்தா வசனம் எழுதமுடியுமா?

    ரோஜா நிறத் தலைவரின் அழகைப் பாருங்கள்.......... Swamy.........

  6. #855
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    இந்த பாடலை எழுதியவர் யார் ?

    நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்....
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்....
    நீதிக்கு இது ஒரு போராட்டம் – இதை
    நிச்சயம் உலகம் பாராட்டும்...... (வெற்றி)
    வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,
    இல்லாமல் மாறும் ஒரு தேதி – அன்று,
    இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ,
    இந்நாட்டில் மலரும் சம நீதி – நம்மை
    ஏய்ப்பவர் கையில் அதிகாரம்,
    இருந்திடும் என்றும் கதை மாறும்
    ஆற்றலும் அறிவும்
    நன்மையை வளர்க்க,
    இயற்கை தந்த பரிசாகும் – அதில்
    நாட்டினைக் கெடுத்து,
    நன்மையை அழிக்க
    நினைத்தால், எவர்க்கும் அழிவாகும்.
    நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்,
    அல்லதை நினைப்பது அழிவாற்றல்.

    ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் டைடில் பாடல் இது.

    இந்தப் பாடலை எழுதியவர் புலவர் புலமைப்பித்தனாய் இருந்தாலும், பட பெயர் பட்டியலில் பாடலாசிரியர் வேதா என்று வெளிவந்தது. அந்த பாடலுக்கான ஊதியமும் அவருக்கே கொடுக்கப்பட்டது!

    உரிய நேரத்தில் பாடலை வேதா எழுதித் தராதால், எம்.ஜி.ஆர். வேண்டுகோளின்படி புலமைப்பித்தன்
    பாடலை எழுதித்தந்து வேதாவின் பெயரை டைட்டிலில் இடம் பெறச்செய்து
    ஒத்துழைத்தார். இந்த விளக்க விபரம்
    புலவர் கூறி 'இதயக்கனி' இதழில்
    இடம் பெற்றது. 'இதயக்கனி' நடத்திய
    விழா மேடையிலும் தெரிவித்தார்.

    (திருத்தப்பட்ட மறு பதிவு)

    ‘#இதயக்கனி’.எஸ்.விஜயன்.........

  7. #856
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புரட்சி_தலைவர்
    #இதயதெய்வம்
    #மக்கள்_திலகம்
    #பாரத_ரத்னா_டாக்டர்
    பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். #அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய
    #வியாழக்கிழமை_காலை_வணக்கம்..

    இதயதெய்வம் எம்ஜியார்
    தன்னிடம் உதவி கேட்பவர்களுக்கு மட்டுமின்றி, கேட்காதவர்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிந்து உதவிகள் செய்யக் கூடியவர். இதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் உண்டு...

    இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அவ்வளவாக அரங்குகள் கிடையாது. மயிலாப்பூரில் ரசிக ரஞ்சனி சபாவுக்கு சொந்தமான சுந்தரேஸ்வரர் அரங்கு, எழும்பூரில் அரசுக்கு சொந்தமான மியூஸியம் தியேட்டர், வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருந்த ஒற்றை வாடை தியேட்டர், மாநகராட்சி
    அலுவலகத்தை ஒட்டிய வி.பி.ஹால், அண்ணா மலை மன்றம் போன்ற ஒருசில அரங்குகள்தான் இருந்தன.

    இந்த அரங்குகளில் நடந்த பல கலை நிகழ்ச்சிகளுக்கு எம்.ஜி.ஆர். வருகை தந்து தலைமை தாங்கியிருக்கிறார். மாநகராட்சி அலுவலகம் அருகே இருந்த வி.பி.ஹாலில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எம்.ஜி.ஆர். சென்றார். நிகழ்ச்சி முடிந்து கலைஞர்களை பாராட்டிவிட்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அந்தக்
    காலகட்டத்தில் அவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் வசித்து வந்தார். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு எதிரே ஒரு ரயில்வே (பூங்கா ரயில் நிலையம்)
    கேட் உண்டு. இப்போது அந்த பகுதியில் மேம்பாலம் உள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்து ரயில்வே கேட்டைக் கடந்து (சென்னை மத்திய சிறை பின்புறம்) சிந்தாதிரிப்பேட்டை வழியாக ராயப்பேட் டைக்கு எம்.ஜி.ஆர். செல்ல வேண்டும்.

    எம்.ஜி.ஆரின் கார் வந்து
    கொண்டிருந்தபோது ரயில்வே கேட் மூடப் பட்டிருந்தது. அது திறப்பதற்காக கார் காத்திருந்தது. ரயில்வே கேட் அருகே ஒரு குதிரை லாயம்.
    (இன்றும் அந்த குதிரை லாயம் உள்ளது) காரில் எம்.ஜி.ஆர். செல்லும்போது, சுற்றும்முற்றும் கூர்ந்து கவனித்தபடி இருப்பார். அவர் பார்த்த போது குதிரை லாயம் அருகே சிறு கூட்டம். கூடவே அழுகை சத்தமும் கேட்டது. என்ன வென்று விசாரித்து வருமாறு காரில் இருந்த தனது மேனேஜர் சாமியிடம் எம்.ஜி.ஆர். சொல்ல, அவரும் விசாரித்து வந்தார்.

    அங்கிருந்த ஒரு குதிரை
    வண்டிக்காரருக்கு சொந்தமான
    குதிரை திடீரென இறந்துவிட்டது. வண்டிக்காரரின் குடும்பமே குதிரை சவாரியை நம்பித்தான் இருந்தது. திடீரென குதிரை இறந்த அதிர்ச்சி, துக்கம், இனி பிழைப்புக்கு என்ன செய்வது என்ற கவலை எல்லாம் சேர, அவரது குடும்பமே இறந்த குதிரையின் அருகில் அமர்ந்து கதறியது. அதைவிடக் கொடுமை, அந்தக் குதிரையை அடக்கம் செய்யக்கூட அவர்களிடம் பணம் இல்லை.

    இந்த விவரங்களை எம்.ஜி.ஆரிடம் மேனேஜர் சாமி தெரிவித்தார். பொறுமையாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக் குதிரை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?’’ என்றார். ‘‘600 ரூபாய் தேவைப்படலாம்’’ என்றார் சாமி. ஒரு பொருளின் விலையை கடைக்காரர் அதிகமாக சொன்னால், ‘‘என்னய்யா... யானை விலை, குதிரை விலை சொல்ற?’’ என்ற வசனத்தை முன்பெல்லாம் கேட்டிருப்போம். 50 ஆண்டுகளுக்கு முன் குதிரை விலை 600 ரூபாய் என்பது அதிகம்.

    சாமி சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., ‘‘புதுக்குதிரை வாங்கி வந்து வண்டியில் பூட்டி ஓட்ட வேண்டும். இதற்கு சில
    நாட்கள் ஆகலாம். அதுவரை அந்த வண்டிக்காரரின் குடும்பம் கஷ்டப்படக் கூடாது. இறந்த குதிரையையும் அடக்கம் செய்ய வேண்டும். எனவே, குதிரை விலையோடு சேர்த்து தேவை யான பணத்தை வண்டிக்காரரிடம் கொடுத்துவிடுங்கள்’’ என்றார். பணத்தோடு சென்ற சாமி, வண்டிக்காரரிடம் விவரங்களைச் சொல்லி பணத்தைக் கொடுத்தார்.

    வண்டிக்காரருக்கு இன்ப அதிர்ச்சி.
    நம்ப முடியாமல் கூட்டத்தை விலக்கி எம்.ஜி.ஆர். வந்த காரைப் பார்த்தார். காரில் எம்.ஜி.ஆர். இருப்பதை கவனித்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டபடி, கண் ணீருடன் காரை நோக்கி ஓடிவந்து அப்படியே தரையில் விழுந்து
    வணங்கினார். காரில் இருந்து இறங்கிய எம்.ஜி.ஆர்., அவரை தூக்கி ஆறுதல் சொன்னார். ‘‘இறந்த குதிரையை
    அடக்கம் செய்துவிட்டு, புதுக் குதிரை வாங்கி தொழிலை கவனியுங்கள்’’ என்றார். அதற்குள், விஷயம் பரவி அங்கு பெரும் கூட்டம் சேர்த்துவிட்டது. அந்த நேரத்தில், ரயில்வே கேட் திறக்கப்பட, மக்களைப் பார்த்து கையசைத்து விடைபெற்றபடி எம்.ஜி.ஆர். புறப்பட்டார்.

    அந்தக் குதிரை வண்டிக்காரர் நன்றி மறக்காதவர். அடுத்த சில நாட்களில் ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு புதிய குதிரை பூட்டிய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது காலில் விழுந்து நன்றி சொன்னார். அவரை வாழ்த்தி குதிரையையும் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைத் தட்டிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.!

    ‘பல்லாண்டு வாழ்க’ படத்தில் ஜெயிலர் ராஜன் என்ற பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். கொடிய குற்றங்கள் செய்த சிறைக் கைதிகள் 6 பேரை தனது பொறுப்பில் அழைத்துவந்து, அவர்களோடு தானும் வாழ்ந்து கைதிகளை திருத்தும் முயற்சியில் ஈடுபடுவார். குற்றவாளிகளில் ஒருவராக நடிக்கும் ஆர்.எஸ். மனோகர், கதைப்படி தனது மனைவியை கொன்றுவிட்டதால் சிறை தண்டனை அடைந்திருப்பார். அவரைப் பார்க்க மனோகரின் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அவரது தாயார் வருவார்.

    தனது தள்ளாத வயதில், வீடுகளில் வேலைசெய்து குழந்தைகளைக் காப்பாற்றி வருவதாகவும் தானும் இறந்துவிட்டால் இந்தக் குழந்தைகளின் கதி என்ன என்று மனோகரிடம் கூறி அவரது தாயார் கலங்குவார். என்ன செய்வதென்று புரியாமல் மனோகரும் கண் கலங்கும் கட்டம் பார்ப்பவர் மனதை உருக்கும்.

    இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரு குழந்தைகளையும் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறுவார். அந்தத் தாய், நன்றியும் மகிழ்ச்சியும் போட்டிபோட, உணர்ச்சிப் பெருக்கோடு எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சொல்வார்…

    ‘‘#இந்த_உலகத்துலே_ஏழைங்களோட #கஷ்டத்தைப்_புரிஞ்சவங்க_உன்னை #மாதிரி_வேற_யாரும்_இல்லப்பா!’’

    எம்.ஜி.ஆர். குதிரையேற்றம் அறிந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் குதிரை சவாரியில் விருப்பம் உள்ளவர். பல குதிரைகளை வளர்த்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் குதிரை சவாரி காட்சியில் எம்.ஜி.ஆர். ஓட்டியது, டி.ஆர். சுந்தரத்துக்கு சொந்தமான குதிரை....

    அன்புடன்
    படப்பை
    ஆர்.டி.பாபு.........

  8. #857
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    #புர*ட்சித்த*லைவ*ரின் வ*ழித்தோன்ற*ல்க*ள்...

    ‘கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும்..’ -எம்.ஜி.ஆர். சொன்னதை செய்யும் அமைச்சர்கள்..

    ‘வாழும் கர்ணன்’ என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைப் புகழ்ந்து மதுரையில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். காரணம் – மதுரை மாவட்டத்தில், கரோனா நோய்க் காலத்தில், மாநகர், புறநகர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கரோனா நோயாளிகளுக்கு, 68 நாட்களாக, தினமும் மூன்று வேளை உணவளித்து வருகிறாராம்.

    அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் அப்படித்தான்! சொந்த நிதியிலிருந்து, வறுமையில் வாடும் அ.தி.மு.க நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, தொடர்ந்து லட்ச லட்சமாக வழங்கி வருகிறார். இதன் நீட்சியாக, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும், தலைமைக் கழகப் பேச்சாளர்களான சிவகாசி தீப்பொறி சின்னத்தம்பி, அருப்புக்கோட்டை சரவெடி சம்ஸ்கனி, விருதுநகர் இளந்தளிர் பழனிகுமார், சங்கரன்கோவில் சங்கை கணபதி, தீக்கனல் லட்சுமணன் ஆகியோருக்கு, தனது சொந்த நிதியிலிருந்து, தலா ரூ1 லட்சம் வீதம், மொத்தம் ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருக்கிறார்.

    ‘கட்சி நிர்வாகிகளோ, தொண்டர்களோ, பொதுமக்களோ, எத்தனை பேருக்குத்தான், இப்படி நிதி வழங்கி உதவிட முடியும்? கஷ்டப்படும் மக்கள் எங்கெங்கும் இருக்கிறார்களே? இது தேர்தல் நேரத்து அரசியல் என்றும் விமர்சிக்கப்படுகிறதே?’ என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பிடம் கேட்டோம்.

    “பத்து வருடங்களுக்கு முன், அவர் அமைச்சராவதற்கு முன்பிருந்தே, நலிந்தோருக்கு உதவத்தானே செய்கிறார். தேர்தல் நேரத்து அரசியலென்றால், எதிர்க்கட்சிகளும், தாராளமாக இதைச் செய்ய வேண்டியதுதானே? யார் செய்தால் என்ன? எளியோருக்கு உதவி போய்ச் சேர்ந்தால், மகிழ்ச்சிதானே!

    புரட்சித்தலைவரின் பேட்டி ஒன்றை ராஜேந்திரபாலாஜி அடிக்கடி நினைவுகூர்வார். எம்.ஜி.ஆரை அப்போது பேட்டி கண்டபோது, ‘உங்களைப் போல மற்ற நடிகர்கள் ஏழைகளுக்கு வாரி வழங்குவது இல்லையே?’ என்பதுதான் கேள்வி. அதற்கு எம்.ஜி.ஆர். “வாரியெல்லாம் நான் வழங்குவது இல்லை. தேவைகளைப் பார்த்துக் கொடுக்கிறேன். அதிலும், உதவி கேட்ட எல்லோருக்கும் செய்ய முடியவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. மற்ற நடிகர்கள் செய்யவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? அவரவர் வசதிக்கேற்ப கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள். வெளியே தெரியாமல் இருக்கலாம். கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும் அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்?” என்று பேட்டி கண்டவரையே திருப்பிக் கேட்டார்.

    ‘இருப்பதையெல்லாம் கொடுத்துவிட்டால் என்னாவது? உங்களுக்குத்தானே இழப்பு? எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையே இல்லையா?’ என்று அமைச்சரிடம் உரிமையுடன் கேட்பவர்கள் உண்டு. அதற்கு அவர் ‘இழப்பா? எனக்கா? கொடுப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சியும் திருப்தியும், கொடுப்பதைவிட பல மடங்கு திரும்பக் கிடைக்கிறதே?’ என அன்று எம்.ஜி.ஆர். சொன்னதை ‘ரிபீட்’ செய்வார்.

    ராஜேந்திரபாலாஜி பாசக்காரர் என்பது பலருக்கும் தெரியாது. தொகுதிக்கு வந்துவிட்டால், காலை மற்றும் இரவு உணவை அம்மா கையால்தான் சாப்பிடுவார். தற்போது, அவருடைய தந்தை தவசிலிங்கமும், தாயார் கிருஷ்ணம்மாளும், கரோனா தொற்றுக்கு ஆளாகி, மதுரையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனால், அவர் வீட்டுக்கே செல்வதில்லை. இங்கே தனியார் கெஸ்ட் ஹவுஸில்தான், சாப்பாடு, தூக்கமெல்லாம்.” என்றனர்.

    குடும்பப் பாசத்தோடு, தொகுதிப் பாசமும் இருந்துவிட்டால், நல்லதுதானே..

    #தலைவ*ர்வ*ழி வ*ந்த* த*ங்க*ங்க*ள் எல்லாம் ஓர்வ*ழி நின்று நேர்வ*ழி சென்றால் நாளை ந*ம*தே! இந்த* நாளும் ந*மதே!.........Babu...

  9. #858
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    தர்மம் தலைகாக்கும் படத்தில் முகமூடி மனிதன் எம்.ஆர்.ராதா என்றே காட்டியிருப்பார்கள். கடைசியில் ட்விஸ்ட் எதிர்பாராதது. முகமூடி மனிதன் வரும் காட்சிகளில் திகிலூட்டும் பின்னணி இசை அருமை. மக்கள் திலகம் டாக்டராக அற்புதமாக நடித்திருப்பார். அவரது உடல்மொழி இயற்கையாக இருக்கும். மக்கள் திலகத்தை நோட்டம் விடுவதற்காக கையில் வலி என்று சின்னப்பா தேவர் வருவார். வேறொருவரை மக்கள் திலகம் பரிசோதிக்கும்போதே கதவை திறந்து வலி.. வலி. என்றபடி மக்கள் திலகத்தை நோட்டமிடுவார். அவரை வெளியே காத்திருக்குமாறு கூறி அவரது முறை வந்ததும் கம்பவுண்டரிடம் மக்கள் திலகம், ‘அந்த கைவலிக்காரரை வரச் சொல்லுங்க’ என்று ரொம்ப கேஷூவலாகச் சொல்லிவிட்டு, அவர் வரும்வரை தன் கையில் உள்ள பேனாவை ஸ்டைலாக பார்த்து ஆராய்ந்தபடி இருப்பார்.

    அந்த சில விநாடிகளில் சுவற்றை வெறித்துப் பார்த்தபடியோ, கேமராவைப் பார்த்தபடியோவா இருக்க முடியும்? எதிரே வேறு ஆளும் இல்லை. எப்படி ரியாக்ட் செய்ய முடியும்? அந்த விநாடிகளில் மக்கள் திலகம் ஒரு டாக்டருக்குரிய மேனரிஸத்தைக் காட்டியிருப்பார். கம்பவுண்டர் வந்து தேவர் அங்கே இல்லை என்று சொன்னதும், மக்கள் திலகத்தின் முகம் .. ஏன்? எதற்காக காண்பிக்காமலேயே போய்விட்டார்? வந்தது யார்? .... என்ற சிந்தனையையும் குழப்பத்தையும் வசனம் இல்லாமலே பிரதிபலிக்கும்.

    சிவாஜி கணேசனை வைத்து பீம்சிங் எடுத்த கடைசி படம் பாதுகாப்பு. அதுவும் பா வரிசைதான். அந்தப் படத்தால் பொருளாதார பாதுகாப்பு கிடைக்காமல் நஷ்டமடைந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதோடு சிவாஜி கணேசனை பீம்சிங் தலைமுழுகியது உலகமே அறிந்ததுதான். ... Swamy

  10. #859
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் வி.சி.கணேசன் பிள்ளைகள் பொய்கள் வாரி இரைப்பார்கள். தனிப்பட்ட தங்கள் முகநூலில் புரட்சித் தலைவர் மீது அவதூறாக சொல்வார்கள். அவர்களை முதலில் நிறுத்த சொல்லுங்கள். சி.கணேசன் ரசிகர்கள் பொய் சொல்லுவான்கள் இத்ற்கு ஒரு உதாரணம். ஒரு ஆளு சொன்னதற்கு கோபி பீம்சிங் இன்னிக்கி செருப்பால அடிச்சா மாதிரி பதில் சொல்லிருக்கார். பாகப்பிரிவினை டைரக்டர் படம். சி.கணேசனால் மட்டுமே அந்தப்படம் ஓடவில்லை என்று சொல்லிருக்கார். இந்த கணேசன் ரசிகனுக்கு கொஞ்சம் கூட சினிமா அறிவு கிடையாது. பாகப்பிரிவினை இந்தியில் தோல்வி என்று பொய் சொல்லிருக்கான். அதுக்கு உனக்கு சினிமா வரலாறு தெரியுமா என்று கோபி பீம்சிங் நாக்கை பிடுங்கறா மாதிரி கேட்டிருக்கார்..........Feedbacks @fb.,

  11. #860
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.-வின் டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*22/09/20 அன்று அளித்த*தகவல்கள்*
    ------------------------------------------------------------------------------------------------------------------------
    ஒரு புன்னகை என்பது*தொற்றிக் கொள்கிற நல்ல ஒரு உபாயம் என்பதை*மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்க்கையில்*கற்று*கொடுத்திருந்தார் .இந்தி நடிகர்*திலீப்குமார் எம்.ஜி.ஆரின்*புன்னகை பல கோடி*அளவிற்கு*மதிப்புள்ளது என்று கருத்து*தெரிவித்துள்ளார் .தன்னுடைய திரைப்படங்களில் அதிகபட்சமாக சோக*காட்சிகள் , மன*அழுத்தம் ,துயரம் ,அழுகை, மன வருத்தம் தரும்*காட்சிகளை முடிந்த*அளவிற்கு*தவிர்த்து ,திரைப்படங்களை காண வருபவர்கள்அனைவரும்* எந்த காரணத்தை முன்னிட்டும் இந்த பாதிப்புகளை*அடைய கூடாது*என்பதால்* ஒவ்வொரு நொடியும்**திரைக்கதையை*அமைப்பதில்* முழு கவனம்*செலுத்தி*வந்தார்*.அதனால்தான் அவரது படங்களில் சோக முத்திரை இருக்காது .அதே சமயத்தில் மக்களின்*மனதில்*ஆழமாக*சில கருத்துக்களை*பதிய செய்தார் . அதாவது நீங்கள் கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் .நீங்கள் நல்லவராக இருந்தால்*உங்களுக்கு வெற்றி என்பது*எப்போதும் சாத்தியம்*.* ஊருக்கு*உதவிகள்*, நன்மைகள் செய்தால் வாழ்வில்*உயர்வு பெறலாம்*என்ற படிப்பினைகள், பாடங்களை*மட்டுமே*தன் படங்களில் விதைத்திருந்தார் .*


    குறிப்பாக*ஆண்டிபட்டியில் இருந்து திருமதி வசந்தி*அவர்கள் பேசினார்களே ,என்னுடைய* மரணத்தருவாயில் இருந்து காப்பாற்றிய பாடல்கள்*எம்.ஜி.ஆருடையது* என்று ,அப்படியான பாடல்களை* பலருக்கும் உருவாக்கி தந்தவர் எம்.ஜி.ஆர். என்றால் அவருக்கு*இசை ஞானம் இருந்தது . அவருக்கு*மொழி ஞானம் இருந்தது ,அவருக்கு*கர்நாடக சங்கீதம் ,படத்தொகுப்பு ,காமிரா*இயக்கம், தொழில்நுட்பம் ,மேல் நாட்டு இசை, நடிப்பு , இயக்கம், திரைக்கதை அமைப்பு, வசனங்கள் அமைப்பு , பாடல்கள்*தேர்வு செய்வது*,அவற்றை*திருத்துவது*என்று எல்லா*விஷயங்களிலும்,நுட்பங்களிலும்* கைதேர்ந்தவர் .என்பதால் திரைப்பட*துறையை அவர் பெரிதும்**நேசித்தார் அதில் சாதித்தார் .


    திரைப்படத்துறையை எந்த அளவிற்கு*எம்.ஜி.ஆர்.நேசித்தார் என்பதற்கு ஒரு உதாரணம் கூறலாம் .அடிமைப்பெண் படத்திற்காக கிளைமாக்ஸ் காட்சியில் சிங்கத்துடன் மோதும்*காட்சியை*படம் பிடிக்க சத்யா*ஸ்டுடியோவில் ஒரு மரணக்கிணறு போல ஒருஅரங்கம்* வடிவமைக்கப்பட்டது .கிட்டத்தட்ட ஒருவார*காலமாக*படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த கால கட்டத்தில்தான் பேரறிஞர் அண்ணா*மறைந்த*பின் அடுத்த தமிழக*முதல்வர்* யாராக இருக்க கூடும்*என்ற யூகம்,விவாதம் ஆங்காங்கே* பரவிக்கொண்டிருந்தது* அதைப்பற்றி அனைவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த விஷயத்தில் எம்.ஜி.ஆரின்*முடிவு என்னவாக இருக்கும்*என்பதில்*பலரும்*தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர் .குறிப்பாக*சத்யா ஸ்டுடியோவில் தொழிலாளர்களும் இது குறித்து*தீவிரமாக பேசி கொண்டிருந்தார்கள் .எம்.ஜி.ஆர். சிங்கத்துடன் மோதும் காட்சிகள் பரபரப்பாக எடுத்து கொண்டிருந்த நேரம் ,எம்.ஜி.ஆர்.தன் உதவியாளரிடம்*இன்று மதியம் நாம் உணவருந்திய பின் ,மாலை 4 மணியளவில் கலைஞர் கருணாநிதி அவர்கள் வர உள்ளார் . அவருடன் வருபவர்களை ஸ்டுடியோவில் தங்குமிடத்தில் இருக்க வைத்து கருணாநிதி அவர்களை மட்டும் இந்த மரணக்கிணறு க்கு*அனுப்பி வைக்க சொன்னார் .வேறு யாரையும்*கண்டிப்பாக அனுப்ப கூடாது*என்று உத்தரவிட்டார் .* சத்யா ஸ்டூடியோ மேலாளர் திரு.பத்மநாபன் கருணாநிதியை மட்டும் மரண கிணறு அரங்கத்திற்கு அழைத்து செல்கிறார் . கருணாநிதியை பார்த்ததும்*எம்.ஜி.ஆர். கீழே இறங்கி வாருங்கள் என்கிறார் .கருணாநிதி நான் இதற்குள் இறங்கி வரவேண்டுமா என்கிறார் .பத்மநாபன் கருணாநிதியிடம் நீங்கள் கீழே இறங்கி*போங்கள்* அப்போதுதான்*நீங்கள் நல்ல முடிவோடு*மேலே வர முடியும்*.உங்களை*ஏற்றிவிடத்தான் உங்கள் நண்பர் எம்.ஜி.ஆர். காத்திருக்கிறார் என்றார்*.கருணாநிதி கீழே சென்றதும் எம்.ஜி.ஆருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார் .அந்த வார்த்தைகளின் ரகசியங்கள் எம்.ஜி.ஆர். கருணாநிதி ,சிங்கம்*ஆகிய மூவருக்கு*மட்டுமே தெரிந்தவை*.மேலே இருந்த*பத்மநாபனுக்கு* *கூட*தெரியாது .ஆனால் பேச்சு வார்த்தை முடிந்து மேலே வந்தபின் கருணாநிதி தமிழகத்தின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டார் . ஆகவே, எந்த தீர்மானம் ,எந்த முடிவு எடுப்பதாக* இருந்தாலும் ,எங்கு, எப்படி யாருடன்*பேசுவது*என்கிற*பண்பாடு, பழக்கம் , அனுகுமுறை*எல்லாம் எம்.ஜி.ஆருக்கு*கை*தேர்ந்த விஷயங்கள் .


    திரு. கா.லியாகத்*அலிகானுடன் திரு.துரை பாரதி*பேட்டி*
    ------------------------------------------------------------------------------------------
    இன்றைக்கும்*எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கி என்பது*தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது .அது எப்படி சாத்தியம்*.மேலும் தி.மு.க. வின் முரசொலியில் திரு.செல்வம்*என்பவர் இன்றைக்கும் எம்.ஜி.ஆரை*பற்றி கேலி*சித்திரங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகிறார்*அதுபற்றி உங்கள் கருத்து என்னஎன்று** திரு.துரை பாரதி கேட்க ,பின்வருமாறு திரு.லியாகத் அலிகான்*பேசினார் .

    இதுபற்றி*விவரங்கள் அறிந்தபோது எனக்கு*முரசொலி செல்வம் மீது கோபம்தான் வந்தது . ஏனென்றால் எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சி*தி.மு.க.*,அவரால்தான் கட்சி*தமிழகத்தில் பிரபலம் ஆனது என்று பேரறிஞர் அண்ணாவே*பல மேடைகளில் குறிப்பிட்டு பேசியுள்ளார் .தி.மு.க. வெற்றி பெற்றதும் வெற்றி மாலையை அவருக்கு சூட்ட வரும்போது*இந்த மாலைக்கு சொந்தக்காரர் மருத்துவமனையில் உள்ளார்* அவருக்கு*போய் சூட்டுங்கள் என்றார்*.மந்திரிசபை பட்டியல் தயார் ஆனதும்*எம்.ஜி.ஆரின் நேரடி பார்வைக்கும் ,ஆலோசனைக்கும் அனுப்பி வைத்தவர்*அண்ணா . தி.மு.க.மாநில மாநாட்டை*ஒருமுறை எம்.ஜி.ஆர். தலைமையில் நடத்திய*பெருந்தமை*வாய்ந்த தலைவர் பேரறிஞர் அண்ணா .இப்படி தி.மு.க.விற்காக உழைத்த*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை இவர்கள் விமர்சிப்பது ஏற்கத்தக்கது அல்ல .முரசொலி செல்வம்*அண்ணா*மறைந்தபோது அமரர் அண்ணா என்று பத்திரிகைகளில் எழுதினார் .அனைவரும் இதுசரியா என்று கேள்வி எழுப்பினார்கள் .* அமரர் என்றால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அர்த்தம் . அண்ணா*அவர்கள் என் இதயத்தில் மட்டும் அல்லாமல் தமிழர்கள் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்ற அர்த்தத்தில் தான் எழுதுவதாக கூறினார் . அதுபோலத்தான் எம்.ஜி.ஆர். அவர்களை இன்றைக்கும் தமிழர்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று அனைவரும் கருதுகிறார்கள் ஜெயலலிதா அவர்கள், கருணாநிதி அவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள் அவர்களும் அமரர்கள்தான் .அவர்களை கேலியாக, கிண்டலாக செய்யவில்லை .ஆனால் காழ்ப்புணர்ச்சி*காரணமாக, இன்னும் காலம் கடந்து எம்.ஜி.ஆர். அவர்கள் மறைந்தும் மறையாமல்*மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் , அவருடைய வாக்கு வங்கியை அசைக்க முடியவில்லை*என்கிற காரணத்தால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் நடைபெற்ற சில* குறைபாடுகளை சுட்டி காட்டி ,ஏன் தி.மு.க.வில் இருந்து விலகினார் , மத்தியில் உள்ள காங்கிரசின் நிர்பந்தம் காரணமாக விலகினார்* என்று சொல்லி*எம்.ஜி.ஆர். அவர்களை கொச்சைப்படுத்தி ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை .கருணாநிதி காலத்திலும், ஸ்டாலின் காலத்திலும் இப்படி எல்லாமில்லை* நாங்களும் போதிய இடைவெளி விட்டுத்தான் இவர்களிடம் உறவு கொண்டிருந்தோம் . .இப்போது என் இப்படி முரசொலி செல்வம் எழுதுகிறார் என்பது புரியாத புதிர் .இப்போது நான் முரசொலி செல்வத்திற்கு பண்புடன் சொல்லி கொள்வது என்னவென்றால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எவ்வளவு பெரிய* ஒரு நீதிமான் ,,நேர்மையானவர் , நியாயமானவர் என்பதை நாம் சொல்வதைவிட தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும்*.எம்.ஜி.ஆர் அவர்களுக்கு எவ்வளவு பெரிய வாக்கு வங்கி இருக்கிறது என்பதை*அவருக்கு தெரியாத காலகட்டத்தில் ,தனக்கு*இழைத்த அநீதிக்காக, ஏற்பட்ட கோபத்திற்காக ,184 சட்டமன்ற உறுப்பினர்களை தனியொரு மனிதனாக*நின்று திருக்கழுக்குன்றத்திலும், ராயப்பேட்டையிலும் எதிர்த்து ,மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் .*யாராக இருந்தாலும் சரி, இன்று உலகத்திலே எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் ,மிருகபலம்கொண்ட மெஜாரிட்டி** என்று சொல்வார்களே அப்படி பெரும்பான்மை பலம் பொருந்திய ஒரு அரசை, 184 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட அரசை*எதிர்க்க*ஒரு சாதாரண*தைரியம் இருந்தால் போதாது . காங்கிரஸ் கட்சியோ,அல்லது அவர்கள் சொல்வது*போல வேறு யார் பின்புறம் இருந்து இயக்குவதாக இருந்தாலும் அது நடக்கிற காரியம் இல்லை . தனது செல்வாக்கு மங்கிவிடுமேயானால் , தான் செல்லாக்காசு ஆகிவிடுவோம் என்ற நிர்பந்தத்தின் காரணமாக*,தன்னுடைய வாழ்க்கையை*பணயம் வைத்து எதிர்த்து குரல் கொடுத்தார்*நான் ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறேன் .. ஆரம்பத்தில் ஒன்றுமில்லாதவர்கள் எல்லாம் இன்று கோடிக்கணக்கில் ,லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் இது எப்படி சாத்தியம்*என்று கேள்வி எழுப்பி கணக்கு கேட்டேன்,எப்படி வந்ததுஎன்ன தவறு* *என்று கேட்கக்கூடிய மனோதிடமும், தைரியமும்*படைத்த ஒப்பற்ற தலைவர் இன்றுவரையில்*வேறு எவரும் கிடையாது .இன்றைக்கு ஊழல் குற்றச்சாட்டு பொத்தாம்*பொதுவாக சுமத்தினாலே யாரும் அதை பொருட்படுத்துவது கிடையாது* ஆனால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். கேள்வி எழுப்பிய நேரத்திலே*,யாருக்கும்*அந்த மாதிரி மனதைரியம் வரவில்லை .* திரைப்படங்களில் எப்படி வீரனாக நடித்தாரோ ,அதுபோல அரசியலிலும், பொது வாழ்விலும் வீரனாக வளர்ந்து வாழ்ந்து மறைந்தும் மறையாமல்*,வாழ்ந்து கொண்டிருக்கிற**ஒரே தலைவர் புரட்சி தலைவர் அமரர்* எம்.ஜி.ஆர்.தான் .


    பழம்பெரும் நடிகர் திருப்பதிசாமி எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் . எம்.ஜி.ஆர் படப்பிடிப்பு* தளங்களில் அசதியாக ஓய்வெடுக்கும் நேரங்களில் எம்.ஜி.ஆரின் கால்களை பிடித்து விடுவார் .அவருக்கு உதவியாக கூடவே இருப்பார் .எம்.ஜி.ஆரின் படங்களில் அவர் இல்லாத படங்களே இல்லை என்ற அளவிற்கு*பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார் .ஒருமுறை ஊட்டியில் படப்பிடிப்பில் இருந்த சமயம் இடைவேளையில் உணவருந்திய பிறகு எம்.ஜி.ஆரின் கால்களை*பிடித்து அமுக்கி*கொண்டிருந்தார் .அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் கதை ஆசிரியர் ரவீந்தர் அங்கு வரும்போது ,அவரிடம் திருப்பதிசாமி சைகை மூலம் தான் ஒய்வு*அறைக்கு சென்று வருவதாக*சொல்லி*எம்.ஜி.ஆரின் கால்களை பிடித்து விடுமாறு கூறுகிறார் .* அதன்படி ரவீந்தர் எம்.ஜி.ஆரின் கால்களை பிடித்து விடுகிறார்*.தன் கால்களை பிடிக்கும் கைகளின் வேறுபாட்டை உணர்ந்த எம்.ஜி.ஆர். சட்டென விழித்து பார்க்கிறார் . ரவீந்தரிடம் நீங்கள் இதையெல்லாம் செய்ய கூடாது என்கிறார் எம்.ஜி.ஆர். அப்படி இல்லை ,நான் உங்களின் வளர்ப்பு தானே . உங்களுடன்தானே இருக்கிறேன் .இதை நான் செய்தால் என்ன தவறு என்று கேட்கிறார் ரவீந்தர் .* அப்படியல்ல. தமிழ் மொழியை எழுதும் இந்த கையால்*இந்த வேலைகள் செய்யக்கூடாது .உங்களுக்கு என்று பல்வேறு வேலைகள் உள்ளன . நீங்கள் இந்த வேலையை செய்ய கூடாது என்கிறார் .அப்படி தமிழ் மொழியையும், அதை எழுதுகிறவர் கையையும் நேசித்தவர் எம்.ஜி.ஆர். மற்ற தகவல்கள் அடுத்த அத்தியாயத்தில் தொடரும் ...


    நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம் .
    --------------------------------------------------------------------------------
    1.சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் -தாய் சொல்லை தட்டாதே*

    2.நான் அளவோடு ரசிப்பவன்* - எங்கள் தங்கம்*

    3.எம்.ஜி.ஆர்.சிங்கத்துடன் மோதும் சண்டை காட்சி -அடிமைப்பெண்*

    4.திரு.கா.லியாகத் அலிகான் அவர்களின் பேட்டி*

    5.அமுத தமிழில் எழுதும் கவிதை -மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்*

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •