Results 1 to 10 of 1139

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

Hybrid View

  1. #1
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    எதிர் முகாமிலிருந்து கொண்டு தன்னை இழிவாக பேசிய அசோகன் ,தேங்காய் ஸ்ரீனிவாசன் , தங்கவேலு போன்றவர்களை காழ்ப்புணர்ச்சி இன்றி தன படங்களில் வாய்ப்பு அளித்தார் அவர் சொன்னது " ஒரு நடிகனின் இயல்பு வேறு தொழில் வேறு இரண்டையையுந் நான் ஒப்பிட்டு பார்ப்பதில்லை " என்று . பராசக்தி படம் ஒரு ரீல் படமாக்க பட்ட பின்பு ஏ.வி எம் செட்டியாருக்கு சிவாஜியின் நடிப்பு பிடிக்க வில்லை அப்போது பிரபலமாக இருந்த கே ஆர் ராமசாமியை அந்த வேடத்திற்கு நடிக்க வைக்க விரும்பினார் ஆனால் அவரது பாகஸ்தரான நேஷனல் பெருமாள் சிவாஜியை வைத்து படமெடுத்தால் நான் பாகஸ்தராக இருக்கிறேன் இல்லை என்றால் அதிலிருந்து விலகி கொள்ளுகிறேன் என்று சொல்லவே செட்டியார் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார் . அந்த நன்றியை மறக்காத சிவாஜி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று பெருமாளுக்கு பரிசளித்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்குவதை கடைசி வரை கடை பிடித்தார் . பராசக்தி படம் வருவதற்கு முன்பே அஞ்சலிதேவி சிவாஜியின் நடிப்பை ஒரு நாடகத்தில் பார்த்து தனது இரு மொழி படமான பரதேசி , பூங்கோதை அவரை ஒப்பந்தம் செய்தார் . பராசக்திக்கு முன்பாகவே பூங்கோதை வெளி வர தயாராக இருந்தது . பெருமாளின் வேண்டு கோளுக்கு இணங்க பராசக்தி முதலில் வெளிவந்தது சிறிது காலம் கழித்து அஞ்சலிதேவி " பக்த துக்காராம் ' தெலுங்கு படத்தில் சிவாஜியாக நடிக்க அழைத்தார் நன்றி மறவாத சிவாஜி சத்ரபதி சிவாஜிக்கான ராஜ உடைகளை தன செலவிலேதைத்து அந்த படத்தில் பணம் வாங்காமல் நடித்து கொடுத்தார்

    Thanks Kumbakonam Srimanth Govindan
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    293
    Post Thanks / Like
    திரையுலக வரலாற்றில் ஒரு திரைப்படம் நூறு நாட்களைக் கடந்தும் தொடர் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிய திரைப்படம் "திரிசூலம்' எனத் தெரிந்து வைத்திருந்த எனக்கு இதற்கு முன் பாகப்பிரிவினையும் இதுபோன்ற சாதனையை நிகழ்த்திய வெற்றிக் காவியம் என தெரிந்து கொள்ளாமல் தான் வந்திருக்கிறேன்,
    நடிகர் திலகம் திரைப்படங்களது வெற்றிச் செய்திகளை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் அதிலிருக்கும் மேலும் பல சாதனைகளை பிடிக்க முடிகிறது,

    கடந்த காலங்களில் நிகழ்ந்த நடிகர் திலகத்தின் திரைப்பட வெற்றிகளை அதுவும் மதுரை நகர சாதனைகளை ஆவணப்படுத்தும் தொடர் பதிவுகளை நண்பர் திரு Vaannila Vijayakumaran
    அவர்கள் தொடர் பதிவுகளை செய்திருந்தார், அதில் பாகப்பிரிவினை திரைக்காவியம் மதுரையில் சிந்தாமணி திரையரங்கில் தொடர்ந்து 216 நாட்கள் ஓடியிருந்த தகவலோடு ஒட்டுமொத்த வசூல் தொகை ரூபாய் 3,36,184-54/- என்பதோடு விநியோகபங்குதாரர் பங்கீட்டு தொகையையும் கூட துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்,


    அதிலிருந்து நமக்குத் தெரிய வருவது யாதெனில்
    மதுரையில் முதன் முதலாக வசூலில் 3 இலட்சத்தை கடந்த திரைக்காவியம் உறுதியாக பாகப்பிரிவினை மட்டுமே.என்ற
    இந்தச் செய்தியை நான் முன்னர் ஒரு பதிவில் காட்டும் போது நண்பர் ஒருவர் மதுரையில் முதன் முதலாக 1956 ல் மதுரை வீரன் தான் சாதனை செய்தது அதன் பிறகு தான் பாகப்பிரிவினை எனக் குறிப்பிட்டார்,

    விவரங்களை அலசுவோம்,

    பாகப்பிரிவினை வெளியான சிந்தாமணி திரையரங்கு 1560 இருக்கைகளை கொண்டது,
    திரையரங்கு அன்றைய நாளில் தினம் இரண்டு காட்சி மற்றும் சனி ஞாயிறு நாட்களில் மூன்று காட்சிகள் என கணக்கில் கொண்டு பார்த்தால்
    வாரத்திற்கு 16 காட்சிகள் நடைபெற்று இருக்கும்,
    100 நாட்களுக்கான 15 வாரங்களில்
    15weeksX16 shows
    = 240 shows
    240 showsX 1560 seats
    = 3,74,400 viewers

    1959 வெளியான பாகப்பிரிவினையின் 100வது நாள் வெற்றி அறிவிப்பில் பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் வசூல் தொகையை அறிவித்து இருக்கிறார்கள்

    100 நாட்களில்
    3,72,446 பார்வையாளர்கள் அதன் மூலம் வசூலான தொகை ரூ 2,29,060

    அதாவது ஓடிய 100 நாட்களும் அரங்கு நிறைந்து ஓடியதால் மட்டுமே இந்த வசூல் தொகை,

    தொடர்ந்து 216 நாட்கள் ஓடியதால் அடுத்த 116 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொகையை வசூலாக பெற்றிட முடியும் என்பதால்
    216 நாட்களில் வசூல் ரூ 3,36,184/- ஆகியிருக்கிறது,
    சராசரியாக டிக்கெட் கட்டணம் ரூ 61 பைசா என கணக்கில் கொள்ளலாம்,

    இல்லை மதுரை வீரன் தான் முதலில் மூன்று லட்சம் வசூலாகி இருக்குமா?

    அதையும் பார்ப்போமே?
    அதாவது மதுரை செண்ட்ரல் திரையரங்கில் வெளியான மதுரை வீரன் தொடர்ந்து 181 நாட்கள் ஓடியிருக்கிறது,

    180 நாட்களில் வசூலான தொகை என சொல்லப்படுவது ரூ 3,67,000/- ஆகும்,

    ஆனால் இந்தத் தொகையை மதுரை வீரன் வசூலித்து இருக்க வேண்டும் என்றால்
    1620 இருக்கைகளை கொண்டிருந்த செண்ட்ரல் திரையரங்கு தொடர்ந்து 180 நாட்களும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியிருந்தாலும் வசூலித்து இருக்காது

    எப்படி?
    16shows X 26 weeks
    = 416 shows

    416 shows X 1620 seats
    = 673920 viewers

    பாகப்பிரிவினை 1959 ல் வெளியான திரைப்படம் அதன் டிக்கெட் கட்டணம் ரூ 0.61 பைசா என்றால்

    1956 ல் வெளியான மதுரை வீரன் மேலும் குறைவான கட்டணமாகத் தான் இருந்து இருக்க வேண்டும்

    6,73,920 viewers X 0.55 பைசா
    = ரூபாய் 3,70,656-00

    இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா?( காட்சிகள் பற்றிய சந்தேகம் இருந்தால் அது பாகப்பிரிவினைக்கும் பொருந்தும்)

    பாகப்பிரிவினை வசூலை ஏற்கனவே வசூலித்து விட்டதாக கூறுவதற்கு என்றே ஒரு தொகையை பின்னாளில் உருவாக்கி இருக்கிறார்கள்,

    இதற்கு மேலும் புரியாதவர்களுக்கு

    1956 ல் மதுரை வீரன் 180 நாளில் ரூ 3,67,000

    1965 ல் எங்க வீட்டு பிள்ளை-176 நாளில்
    ரூ 3,85,000

    ஓடிய நாட்கள் ஏறக்குறைய ஒன்று தான்

    ஆண்டு இடைவெளி 9 வருடங்கள்

    எப்படி ஏறக்குறைய ஒரே தொகையை வசூலிக்க முடியும்?

    தங்கம் தியேட்டரா?
    அதில் 1960 கள் வரை எந்தத் திரைப்படமும் இரண்டரை லட்சத்தை கூட வசூலித்து இருக்க வாய்ப்பில்லை அங்கு கட்டணம் மிகவும் குறைவாகவே இருந்து இருக்கிறது,

    என்னை ஒருத்தர் கணக்கில் நீ என்ன புலியா எனக் கேட்டிருந்தார்??



    Thanks Sekar.P
    ...........................................

    மதுரைவீரன் ,நாடோடி மன்னன் இரண்டினதும் மதுரை வசூல் எம் ஜீ ஆர் ரசிகர்களால் வெளியிடப்பட்டவை இட்டுக்கட்டிய போலி வசூல்கள். நாடோடி மன்னன் மதுரை தங்கம் 133 நாள் சரியான வசூல் 2,13,935.58. ம.வீரன் சரியான வசூல் கிடைக்கவில்லை . பாகப்பிரிவினை 3 லட்சம் தாண்டிவிட்டதென்ற பொறாமையில் எம் ஜீ ஆர் ரசிகர்களால் ம வீரனும் நா மன்னனும் 3லட்சம் தாண்டியதாக காட்டுவதற்கு வெளியிடப்பட்ட போலி வசூல்கள்தான் அவை.(இனி கீழ்ப்பாக்கத்தில் இருந்து புலம்பப்போகிறார்கள் பாவம்.)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •