Page 72 of 114 FirstFirst ... 2262707172737482 ... LastLast
Results 711 to 720 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #711
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாட்டுக்கு செய்த சேவை.



    Thanks Vijaya Raj Kumar
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #712
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #713
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    சவாலுக்கு சவால் சந்திக்கத் தயாரா?

    ஈழத்தில் புதிதாக முளைத்துள்ள வாத்தியாருக்கு ஜால்ரா போடும் உரிமைக்குரல் ஏடு,
    சிம்மக்குரல் மூலம் சிவாஜி ரசிகர்கள் விடும் சவால்களை சமாளிக்க முடியாமல் புலம்பித்திரிகிறது.
    நேற்றுச் சொன்னதை இன்று சொல்லவில்லை என்று மறுப்பது,உண்டையை திரிப்பது,
    பொய்யை மெய்போல பேசுவது, மழுப்புவது, குழப்புவது ஆகியயவை எம ஜீ ஆருக்கு கைவந்த கலையே ,
    அது போலவே ரசிகர்களும் அந்தக் கலையில் தீரம் மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை.

    உரிமைக்குரல் விட்ட சவால்களை சிம்மக்குரல்மூலம் அதை சமாளித்து சவாலுக்கு சவால் விடும்,
    சிவாஜி ரசிகர்களின் முழு முகவரியுடன் விட்டதை ஏற்க நெஞ்சில் துணிவு இல்லாத, அரைவேக்காடு
    ஈனப்பிறவி விலாசமே சரியாக எழுதத்தெரியாத ரசிகர்கள் என்று பொய்யான களங்கம் கூறும்,அறிவிலியே,
    மதம் கொண்ட யானையின் மந்தகத்தை பிளந்து அதன் ரத்தத்தை குடிக்கும் சிங்கத்தின் முன் ,
    உங்களைப்போன்ற குள்ளநரிக்கூட்டம் எம்மாத்திரம்.

    தூங்குபவனை எழுப்பலாம் ஆனால் தூங்குவனை போல் பாவனை செய்பவனை எப்படி எழுப்பமுடியும்?
    அதே போன்றே சாதனை திலகம் சிவாஜி தான் என்பதை புரிந்துகொண்டிருக்கும் உங்களுடன் வாதாடுவது,
    தண்ணீரை கலக்கிவிட்டாலும் ஓனாய் சாதுவான ஆட்டை கிலிக்குள்ளாக்குவதைபோன்று இருக்கிறது.
    நீங்கள் எப்பொழுதும் புரட்டுத்தான் எழுதுவீர்கள் என்பது எதிர்பார்த்ததே.
    ஆனால் தலைவனைவிட ஒரு படி மேலே போய்விட்டீர்கள்.
    பொய்களை உண்மையாக்கி வெளியிட உங்களக்கு ஒரு ஏடு தேவைதான்.
    உண்மையை உணராத நீங்கள் பத்திரிகை நடாத்த அருகதை அற்றவர்கள்.
    ஏன் பத்திரிகை நடாத்தி அதன் தொழிலுக்கே களங்கம் உண்டாக்குகிறீர்கள்.
    சாதனைகளை மக்கள் முன் கூறுங்கள்,ஆனால் வேதனைகளை சாதனையாக்க முயலாதீர்கள்.
    மூக்கு உடை படுவீர்கள் ,பொய்களை மூட்டைகளாக்கி ,அதை பத்திரிகைபோல வெளியிடும்,
    திறமையை நீங்களேதான் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும்.

    எம்ஜீ ஆர் ரசிகர்கள் தெளிவு பெற ...

    1) சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதால் சூரியனுக்கு எந்தவித குறையும் ஏற்படப் போவதில்லை.
    அப்படி குரைப்பதைப் போல் முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.

    2) ஆகாயத்தை நோக்கி காறி உமிழ்கின்ற எச்சில் தன் மீதுதான் விழும் என்பதைகூட,
    புரிந்துகொள்ளமுடியாத உங்களுக்கு நாங்கள் என்ன உபதேசம் கூறுவது.

    3) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? அது போல கழுதைக்கு
    உபதேசம் கூறினால் அது தரும் பதில் காள்.. காள்.. காள் தான்.

    சாதனை என்றால் என்ன என்பதனை கூட புரிந்து கொள்ள முடியாத அரைவேக்காடு அவர்கள்.
    முன்பு சிம்மக்குரலில் இந்தியா முழுவதும் தங்கப்பதக்கம் ஓடி முடிய 1 1/2 கோடி வசூல் விபரம்,
    ஊர், தியேட்டர் வாரியாக வெளியிட்டது பார்க்கவில்லை போலும்.
    அரை குறையுடன் உளறும் அதிமேதாவியே, எதையாவது ஒன்று முழுமையாக தெரிந்துகொண்டு
    சாதனைக்கு விளக்கம் கூற வா. தமிழக சாதனைகளை அக்டோபர் /8 /1974 நவசக்தி தின இதழில்,
    தங்கப்பதக்கம் வசூல் பார்க்கவில்லையா? சிவாஜி புரெடக்*ஷன்ஸ கணக்குப்பார்த்து ,
    பத்திரிகை ,பிலிம்ஷேம்பர் அங்கீகாரத்துடன் சென்னையில் அதக வசூல் பெற்ற படம் தங்கப்பதக்கம் தான் என்பது,
    "தமிழ்முரசு" 25/12/1974 ஏட்டில் வந்ததே அதைக்கூடவா நீங்கள் பார்க்கவில்லை ;
    நான் மறந்துவிட்டேன் நீங்கள்தான் கிணற்றுத் தவளைகள் ஆயிற்றே,சமுத்திரம் பார்த்திருக்கமாட்டீர்.

    ரிக்*ஷாகாரன் வசூலை வெளியிட்டதாக ஓலமிடும் அறிவாளி அவர்களே! கறுப்பு வெள்ளை படங்களில்
    இத்தனை ஆண்டுகளாக எந்தப்படத்தாலும் நெருங்க முடியாத சரித்திர வசூல் சாதனை புரிந்த
    பட்டிக்காடா பட்டணமா?, 6 வார வசூலை 51 வது நாள் விளம்பரத்தில் தினத்தந்தியில் முழுப்பக்கம்
    தயாரிப்பாளர் p. மாதவன் அறிவித்தது நீர் பார்க்கவில்லையா?

    உலகம் சுற்றும் வாலிபன் 6 மாதத்தில் 60 லட்சம் வரி செலுத்தியது உண்மை.ஆனால் அப்படம்
    பெற்றது 1 கோடி வசூல் மட்டுமே! எப்படியென்றால் அப்பொழுது கூட ரூபாவிற்கு 60 காசு வரி
    வசூலிக்கப்பட்டது, ஊர் அறிந்த உண்மை.ஆகையால் தங்கப்பதக்கம் 6மாதத்தில் 1கோடியே 20 லட்சமும்,
    1 வருடத்தில் 1 1/2 கோடியும் பெற்ற மாபெரும் சாதனைப்படம் தங்கப்பதக்கமே உணருவீர்.

    எங்கள் சிவாஜி ரசிகர்கள் ஒவ்வொருவரும் வீடு விலாசத்துடன் நகரில்தான் உள்ளது.
    ஆனால் சுடுகாட்டில் சாக்கடை ஓரத்தில் கடை வைத்துக்கொண்டு
    விலாசமே தெரியாமல் உளறவேண்டாம்.

    பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை ஆனால் சாக்கடைகள் கொக்கரிக்கும் போது,
    சவுக்கடி தந்து சாத்தான்கள் வாயை அடைப்பது நம் கடமை.ஆகையால் இதுவரை பல முறை ,
    தங்கப்பதக்கம் சௌத்திரியின் காலடியில் உலகம் சுற்றும் வாலிபன் ஓலமிட்டதை தந்திருந்தோம்,
    ஆனால் மீண்டும் ஒருமுறை தருவோம்.எம் ஜீ ஆர் ரசிகர்களே,
    கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
    வசூல் விபரம் 2ஆம் பக்கம் பார்க்கவும்..

    (இமேஜில் உள்ளவை)

    நன்றி சிம்மக்குரல்

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #714
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ஒரு அருவியின் சில நீர்த் திவலைகள்..

    நடிகர்திலகம் ...
    எந்த ஒரு படைப்பாளியின் சுதந்திரத்திலும்
    தலையிடாத அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்.
    "நீங்கள் என்னிடம் என்ன எதிர் பார்க்கிறீர்களோ அதை சொல்லுங்கள், அதைச் செய்கிறேன் பிடித்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் வேண்டுமானாலும் செய்கிறேன்."
    இந்த பாடலில் இது பிடிக்கவில்லை , அந்த வரி சரியில்லை என்ற தலையீடுகள் இல்லை.
    3 ஷிப்டில் வேலை செய்தார்.ஒரு நாளோ, பல நாளோ இல்லை.பல வருடங்கள்.இப்படி எந்த மனிதராவது வேலை செய்யும் போது சோர்வு பிடித்து தள்ளாதா?
    ஆனால் அந்த முப்பது வருட உழைப்பில் எந்த ஒரு சிறு காட்சியிலாவது அந்த சோர்வை காண்பித்து இருப்பாரா?

    என்னப்பா,
    'அண்ணன் நேத்திருந்து சரியா சாப்பிடலையாம், தூங்காம நைட் பூரா வேறு வீட்டை சுத்தி சுத்தி வந்தாராம் '
    "இன்னைக்கு பாசமலர் க்ளைமாக்ஸ் எடுக்கப் போறாங்களாம்.அது ரொம்ப சோகமான சீனாம்.பல நாள் சாப்பிடாம, தூங்காம ஊரைச் சுத்தி வந்த மனுஷனோட நிலைமை எப்படியிருக்கும்.
    அதை காட்டணும்."
    'என்ன சோகமான சீனா இருக்கட்டும் .அவர்
    செய்யாத ஆக்டாயா?'
    "அது சரிப்பா, என்ன சிறப்பா செஞ்சாலும் முகத்திலும், உடம்பிலும் அந்த எபெக்ட் காட்டணும்தானே, அதுக்குத்தாய்யா இவ்வளவு மெனக்கெடல்."
    அண்ணன் தங்கை பாசக்கதையை சாதாரணமாக வந்து செய்துவிட்டு சென்றுவிடவில்லை நடிகர்திலகம்.
    அவர் சிரத்தையை புரிந்து கொள்வது பார்ப்பவர்களின் அறிவைப் பொறுத்தது.

    12 வருடத்தில் நூறு படம்.ஒவ்வொரு படமும் ஒவ்வொரு மாதிரி.சாதாரண படங்களா செய்திருக்கிறார்.?ஒவ்வொன்றும் காவியமாயிற்றே!
    பட அதிபர்களின் முற்றுகை எந்த நேரமும்?
    இதே நிலைமையிலே வேற நடிகர்கள் இருந்திருந்தால் அவர்களை வைத்து எடுக்க கோடீஸ்வர அதிபர்கள் தான்
    முன் வர வேண்டும்.நல்ல கதையா?
    ' நல்ல ரோலா? செய்யறேன்?'..
    இந்த உயரம் சென்றவர், பத்தாயிரம் ரூபாயை பார்த்து என்ன இவ்வளவு பணம்?
    இதில் எவ்வளவு தாள்கள் இருக்கும்? என்றாராம்.நடிப்பின் மீது அவர் காட்டியது பக்தி.
    பணத்தின் மீது பக்தி கொண்ட கலைஞர்களிடம், அர்ப்பணிப்பான உழைப்பு சாயம் போகும்படியாய்தான் இருக்கும்.

    நடிகர்திலகத்தின் படங்கள் நின்றிருக்கலாம்.நடிகர்திலகத்தால் எந்த படமும் நின்றதில்லை.
    "சிவாஜி நடிச்ச படம் இவ்வளவு நாளாச்சு இன்னும் காணலியே! "
    'அந்த படம் பைனான்ஸ் பிராப்ளத்தாலே ஷுட்டிங் விட்டு விட்டு நடக்குது. '
    "சிவாஜி ரொம்ப பிஸியால்லே இருப்பாரு.
    இப்படி விட்டு விட்டு ஷுட்டிங் போனா அவருக்கு கால்ஷீட் பிரச்சினை வராதா?"
    'அவரென்னப்பா? மூணு வேஷத்தையே பத்து நாளிலிலே முடிச்சாரு.தன்னாலே யாரும் நஷ்டப் படக்கூடாதுன்னு கேட்டப்போ வந்து முடிச்சுக் குடுத்துடுவாரு!'
    இன்னும் கூட இறங்கி வந்து சம்பளம் வாங்காமயோ, குறைச்சோ நடிச்சு குடுத்துடுவாரு.'
    சினி பீல்டு நல்ல நிலைமையில இருக்குன்னா அவர்தாம்பா காரணம்.
    வருஷத்துக்கு எட்டு படம் கணக்கால்லே
    செஞ்சாரு!
    தியேட்டர் அதிபர்களில் இருந்து போஸ்டர் ஒட்டுபவர்கள் வரை ஒரு சுழற்சியா எவ்வளவு பெரிய பிசினஸ் நடந்துச்சு..ரெகுலரா, இடைவெளி இல்லாம..அந்த பீரியட்தான்யா தமிழ் பீல்டு
    பெஸ்ட்டா இருந்துச்சு..

    அண்ணே! அவர் ரொம்ப கஷ்டத்துல இருக்கார்.நீங்க ஒரு படம் பண்ணிக் கொடுத்தால் கடனை அடைச்சி நிம்மதி அடைசிருவார்.உங்ககிட்ட வந்து கேட்க கொஞ்சம் சங்கோஜப்படறார்.இனி நீங்க சொல்றீங்களோ அதை அவர்கிட்ட நான் சொல்லிடுவேன்.
    அவருக்கு பண்ணிக் கூடாதுன்னு ஏதுமில்ல.நீங்க சொல்றதால பண்ணிடலாம்.சம்பளம் கூட வேண்டாம்.
    இது தான் சிவாஜி குணம்.
    ஆனா, அந்த தயாரிப்பாளர் என்ன செஞ்சார்? டிபன் பாக்ஸ்ல கொஞ்சம் பணத்தை வச்சி அனுப்பிச்சு வச்சார்.இது நல்லாவா இருக்கு? அப்புறம் அவர்
    புரிஞ்சுகிட்டார்.நாலு ஜென்மத்துக்கு செருப்பா இருப்பேன்னு, சொல்லிட்டாரே.
    நடிகர்திலகம் ஒரு படத்தில் சொல்வார்.
    நம்மை சுத்தி இருக்கறவங்க நல்லா இருக்கணும்.படத்தோட டயலாக்கை வசனம் பேசியதோடு நிறுத்தி கொள்ளவில்லை.நல்ல விஷயங்களை வாழ்க்கையிலும் செய்தவர் சிவாஜி.

    "நான் இன்னைக்கு நடிக்கப் போறதோ
    பரதேசி வேஷம்.இவ்வளவு உசத்தியான ட்ரெஸ்ஸில தைச்சு போட்டுட்டு நடிச்சா அது நான் நடிக்கிற நடிப்போட ஒட்டுமா? "
    ஷுட்டிங் வேற ஆரம்பிக்க போகிறது.
    உதவியாளர்கள் வேறு காஸ்ட்யூம் தேடி அலைகின்றனர்.நேரம் வேறுசெல்கிறது. அங்கே பக்கத்தில் ஒரு கிணறு இருக்கிறது.கிணற்றடியில் கிழிந்த சாக்கு ஒன்று கிடக்கிறது.பார்த்தார் நடிகர்திலகம்.
    அடுத்த நிமிடம்அது இடையில்.இதை விட பொருத்தமான காஸ்ட்யூம் இந்த காட்சிக்கு இருக்காது என்பதை வெண்திரையில் பார்த்தோமே.அது மெனக்கெடல் இல்லை.ஆனால், சரியான சமயோசித புத்தி.இயக்குனர்கள் கொண்டாடுவதில் என்ன வியப்பு? (குறவஞ்சி)

    அண்ணே! எனக்கொரு படம் நடிச்சுக் கொடுங்க. நட்புடன் அந்தக் கோரிக்கை நடிகர்திலகத்திடம் வைக்கப்பட்டது.கதையை கேட்டார்.பக்கத்து மாநிலத்தில் ஹிட்டடித்த கதைதான்.
    நம்மூர்க்காரன் ரசனை வேறு.இதை எடுத்து ஹிட் ஆக்குவது தமிழ்நாட்டில் கஷ்டம் என்பதை சொல்கிறார்.நட்பு உணரும் இல்லை.வேறு வழி இல்லாமல் நட்புக்காக நடிக்கிறார்.ஆனால் நடிப்பை குறைத்து நடிக்கவில்லை.சாதாரணமாக செய்து மெகா ஹிட்டடித்த படங்களை விட இதில் நல்ல நடிப்புத்தான்.உழைப்புத்தான்.
    ஆனால் முடிவு அவர் சொன்னதே.இது யார் தவறு?

    ஒரு படத்தில் நடிக்க குறிப்பிட்ட நாட்களை கொடுத்தார் நடிகர்திலகம்.ஒரு நாள் ஷுட்டிங் முடிந்து கிளம்பும் போது நாளைக்கு என்ன காட்சியப்பா?
    உங்க போர்ஷன் இன்னையோடமுடிஞ்சாச்சு சார்?
    என்னப்பா! இன்னும் ரெண்டு நாள் இருக்கே கால்ஷீட்!
    ஆமாம் சார் .ஆனால் உங்க சீன் எல்லாத்தையும் எடுத்தாச்சு சார்.
    தயாரிப்பாளர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கொடுத்த நடிகர்.
    சாதா நடிகனின் படம் எடுக்க ஆகும் பிலிம் செலவை வைத்து நடிகர்திலகத்தின் நான்கு படங்களை முடித்து விடலாம்.
    பெரிய நடிகனின் நூறு பட நடிப்பு நடிகர்திலகத்தின் ஒரு பட நடிப்புக்கு ஈடாகாது.

    மீண்டும் பேசலாம்.

    Thanks Senthilvel Sivaraj

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #715
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    50 வது நாள் விளம்பரம் பிராப்தம்
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #716
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    இன்று முதல் (!7/12/20200
    மாரண்டஹள்ளி (தர்மபுரி dt) பொன்முடி,
    மற்றும் மேட்டூர் டேம் கற்பகம் திரையரங்குகளில் கர்ணன் குதூகல ஆரம்பம்,



    Thanks Divyafilms Chockalingam
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #717
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நடிகர் திலகம் பொதுவாகவே விளம்பரங்களைத்தேவையில்லாமல் தேடுபவர் இல்லை.

    அன்புள்ள அப்பா படப்பிடிப்பு ஏவிஎம் கார்டென வீட்டில் நடந்தது. நடிகர் திலகத்தின் நண்பர் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தார். அவரை அழைத்துக்கொண்டு சென்றேன்.

    அப்போது, ஏவிஎம் ஸ்டுடியோவில் "மேஸ்திரி" என்று அழைக்கப்பட்ட ஊழியர் நடிகர்திலகத்துடன் பேசிக்கொண்டிருந்தார். அது அவரது பெண்ணின் திருமணம் சம்பந்தமாக. நடிகர் திலகம் அவருக்கு ஒரு கவரில் பணம் வைத்துக்கொடுத்தார். அத்துடன் நடிகர் திலகத்துடன் ஒரு படம் வேண்டும் என்று தயக்கத்துடன் கூற, நான் என் கமெராவில் படம் எடுத்துக்கொண்டேன்.

    சிங்கப்பூர் நண்பரிடம், விவரத்தைக்கூறினேன். அவர் எனக்கு அந்த படத்தின் பிரதி ஒண்ணு குடுங்க. நம்ம பத்திரிகைல போடலாம்னு சொல்ல, நடிகர் திலகம் பதறிப்போய், "நோ நோ வேண்டாம். இது பத்திரிகைல வந்தா, மேஸ்திரி குடும்பத்துக்கு தேவையில்லாம தர்மசங்கடம் உண்டாகும். நாம கொடுக்கறது, ஒரு நண்பன் குடும்பத்துக்கு செய்யற உதவி. இதுக்கு எல்லாம் நியூஸ்/போட்டோ போடாதீங்க."

    இதை யாராவது யோசித்தோமா? அது தான் நடிகர் திலகம்.



    Thanks Chandramouli Mohan (Sivaji Group)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #718
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    (நன்றி "ரசிகன்" நவம்பர் 1973)

    ஆட்சேபனை அரங்கு

    "வசந்த மாளிகை மர்மம்"

    இலங்கையில் வசந்த மாளிகை புரிந்த மகத்தான சாதனை சிலருக்கு வயிற்ரெரிச்சலை உண்டுபண்ணியுள்ளது.கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கில் 250 நாட்களும் யாழ் வெலிங்டன் திரையரங்கில் 208 நாட்களும் காட்சியளித்து மாபெரும் சரித்திரமாக மாறியிருக்கும் வசந்த மாளிகை இன்னும் ஈழத்தில் பல்வேறு நகரங்களில் காட்டப்படு அங்கெல்லாம் வசூலில் சாதனைகள் புரிந்தவண்ணம் இருக்கிறது.

    இச்சமயத்தில் இச்சாதனையை சிலர் வேதனையோடு அவதானிக்கிறார்கள். அதுமட்டுமல்ல வீண் புரளிகளை கிளப்பி தங்கள் மேதாவித்தனத்தையும் பறைசாற்றிக் கொள்கிறார்கள். கலண்டர் கொடுத்து வசந்த மாளிகை ஓடியதாக சிலர் கருதுகிறார்கள்.கலண்டர் கொடுத்து ஒரு படத்தை ஊட்டுவதாக இருந்தால், திரையிடப்படும் எல்லா படங்களுக்கும் ஒரு சில ஆயிரங்களில் கலண்டர் விநியோகித்து ஓட்டலாமே! வசந்த மாளிகையின் வெற்றியின் ஞாபகார்த்தமாகத்தான் கலண்டர் விநியோகிக்கப்பட்டதே தவிர கலண்டருக்காகத்தான் படமே ஓடியது கீழ்ப்பாக்க ஆசாமிகள் தாங்கள்தான் என பறைசாற்றுவதற்கு ஒப்பாகும்.இதுபோன்றதொரு விதண்டாவாதம்.

    தனிப்படதொரு ஸ்த்தாபனத்தின் கடைசி இறக்குமதியாக வசந்த மாளிகை இருந்ததனால்தான் வசந்த மாளிகை ஓட்டப்படது.என கூறப்படுகிறது.அட மடையா! தனிப்பட்ட ஸ்த்தாபனத்தின் இறக்குமதியாக இருப்பதால கட்டாயமாக அப்படத்தை ஓட்டித்தான் ஆகவேண்டுமா?அப்படியானால் ஏனைய ஸ்த்தாபனங்களின் திரைப்படங்கள் ஏன் அப்படி ஓட்டப்படவில்லை? எம் ஜீ ஆரின் இதயவீணை கூட கடைசி இறக்குமதிதானே? அது ஏன் 99 நாட்களுடன் ஓடி ஒழிந்துவிட்டது. அட மடையா! சொல்வதற்கு ஒன்றும் இல்லாவிட்டால் ஏன் பைத்தியக்காரன்போல் உளறுகிறாய்.

    இச்சமயத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இலங்கை வருவார் என கூறியதால்தான் வசந்த மாளிகை ஓடியது என கூறும் கோமாளிகளே எம் ஜீ ஆர் இலங்கை வந்தும் எங்க வீட்டுப் பிள்ளை படத்தை 100 நாட்கள் ஓட்டமுடியாத பரிதாபத்தைதான் பா◌ாத்தோமே.அப்படி இருக்கும் போது , சிவாஜி வருவார் என கூறி எப்படி படத்தை ஓட்ட முடியும்?

    எப்படியோ தங்கள் உளறுதல் மூலம் வசந்த மாளிகை 250 நாட்கள் ஓடியதை இவர்கள் ஒத்துக் கொள்கின்றார்கள்.அனால் தமிழகத்தின் :புரட்சியார் ரசிகன்" வசந்த மாளிகை 200 நாட்கள் ஓடவில்லை அத 73 ஆம் ஆண்டின் பெரும் பொய் என கதறுகிறது. கருடனுக்கு எங்கே வெளிச்சம் தெரியப் போகிறது. அதுகள் நல்லவைகளை ஒரு போதும் கேட்பதோ, பார்ப்பதோ தான் இல்லையே.அவ்வளவு ஏன் தன் வாத்தியாரின் உ சு வாலிபன், ப ◌ாபன்னையா ஆகியவையே இன்னும் பார்க்காத புரட்சியார் ரசிகன் வசந்த மாளிகையின் வெற்றியை எங்கே அறியப்போகிறது.

    எந்த வழியில் பார்த்தாலும் வசந்த மாளிகையின் வெற்றியின் மர்மம் உங்களுக்கு என்றைக்குமே புரியாது. அதை விளக்கிக் கூறினாலும் அறிந்துகொள்ளக்கூடிய நிதானம் உங்களிடம் இல்லை.

    எனவே வசந்த மாளிகையின் மர்மம் உங்களுக்கு மர்மமாகவே இருக்கட்டும்.

    எம்.சுப்ரமணியம், லோவர் வீதி ,பதுளை.

    (இமேஜில் உள்ளவை)

    நன்றி "ரசிகன்"



    Last edited by sivaa; 20th December 2020 at 04:07 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #719
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    (நன்றி மதி ஒளி-1/09/1971)

    ஆர் எம் வீரப்பனுக்கு ஒரு சவால்!

    அன்புள்ள ஆசிரியருக்கு!

    வணக்கம். சென்ற வாரம் ராணி இதழில் சத்தியா மூவிஸ் அதிபராம்
    திரு ஆர் எம் வீரப்பன் அவர்கள் எம் ஜீ ஆர் நடித்த படங்கள்தான் ,
    எம் ஜீ ஆர் அளிக்குமென்றாலே ஓடுகிறது என்று தனது பாணியிலேயே சொல்லிருக்கிறார்.
    அவர் இந்த சமயத்தில் ஒரு விசயத்தை மறந்துவிட்டார் போலிருக்கிறது.
    1966 ஆம் ஆண்டு அவர் தயாரித்து வெளியிட்ட நான் ஆணையிட்டால் என்ற படம் ,
    5 லட்சம் ஜனத்தொகை கொண்ட மதுரை மாநகரிலே சென்ட்ரல் திரை அரங்கில்,
    29 நாட்கள் ஓடியது என்பதை அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம்.
    அடுத்து வெளியிட்ட கண்ணன் என் காதலன் என்ற படம் மதுரையில் 96 நாட்கள்,
    (சிந்தாமணி தியேட்டரில்) இழு பறி நிலையில் ஓட்டப்பட்டது என்றும்
    பணவன்புடன் தெரிவிக்கின்றோம்.

    இந்த நேரத்தில் மதிப்புக்குரிய உயர் திரு வீரப்பன்அவர்களுக்கு மற்றுமோர் விசயத்தையும் தெரிவிக்கின்றோம்.
    எம் ஜீ ஆர் படம் ஓரளவுக்கு தற்பொழுது ஓடுகிறதென்றால் , அதற்கு காரணம் அதில் நடிக்கும் கதாநாயகிதான்.
    இந்த விடயம் எம் ஜீ ஆர்க்கோ, அல்லது வீரப்பனுக்கோ தெரியாமல் இருக்க முடியாது.
    நடிகர் திலகத்தைபோல பத்மினி,சௌகார்ஜானகி ஆகியோருடன் திரு எம ஜீ ஆர் ஒரு படத்தில் நடிக்கட்டுமே ,
    அந்தப்படம் எப்படி ஓடும் என்று? குறைந்த வயது நடிகைகளுடன் அவர் நடிப்பதால்தான் கூட்டம் வருகிறதே தவிர
    எம் ஜீ ஆருக்காக இது நாள்வரை எந்தப் படத்துக்கும் கிடையாது.
    இந்த உண்மையை ஒப்புக்கொள்ள வீரப்பன் மறுத்தால் .....
    அவருக்கு ஒரு சவாலும் காத்திருக்கிறது.

    தனது அடுத்த படத்தில் பத்மினி, சௌகார்ஜானகி இதில் யாராவது ஒருவரை எம்ஜீ ஆரக்கு இணையாகப் போட்டு,
    படம் எடுத்து அதை வெற்றிபெறச் செய்தால் எம் ஜீ ஆர் படத்துக்கு மவுசு இருக்கிறது என்று தெரிய வரும்.
    இதைவிட்டுவிட்டு 61-ல் 16-ஐ மோத விட்டு கூட்டம் கூடினால் அது 16 க்குத்தான் பெருமையே தவிர ,
    இந்த இடத்தில் 61 க்கு எள்ளவும் மதிப்பில்லை.

    இப்போதாவது மதிப்பிற்குரிய ஆ◌ா எம் வீரப்பன் அவர்கள் தெளிவடைந்து இருப்பார் என நம்புகிறோம்.


    பத்மஶ்ரீ சிவாஜி கணேசன் ரசிகர்கள்
    ஆர் .அமர்நாத்.
    எஸ் .லட்சுமணன்.
    டீ. வேணுகோபால்
    சிவகாசி

    (இமேஜில் உள்ளவை)

    நன்றி மதிஒளி

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #720
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை உதவியாக வழங்கிய நடிகர் திலகம் சிவாஜி,

    5000 கோடி ரூபாயை வாரி வழங்கி இருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,
    ஆமாம் தமிழகத்தில் உள்ள 2 கோடி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ 2500 என ஜனவரி மாதம் முதல் வாரி வழங்கப் போகிறார்கள்,
    எல்லாமும் மக்கள் வரிப் பணம் தான் மக்கள் பணம் மக்களுக்கே என எப்போதும் போல சாமான்ய மக்களின் குரல் கேட்கவே செய்கிறது,

    தமிழகத்தின் மறைந்த முந்தைய முதலமைச்சர்கள். இது போல மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே அள்ளிக் கொடுத்திருக்கிறார்கள்,
    அவர்கள் எல்லாம் "வள்ளல்' பட்டம் சூட்டிக் கொண்டது போல எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சூட்டிக் கொள்வாரா? எனப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்,

    அரசுப் பணத்தை வாரிக் கொடுப்பதில் என்ன ஆச்சர்யம் இருக்கப் போகிறது
    ஆனால் பாருங்கள் 65 ஆண்டுகளுக்கு முன்னரே நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான் நடித்து சம்பாதித்த பணத்தை கோடிக் கணக்கில் பல்வேறு வகையான நலத்திட்டத்திற்கும், ஏழை எளிய மக்களுக்காகவும் வாரி வழங்கி இருக்கிறார்,

    1952 ல் பராசக்தி முதல் படத்திற்காக ரூபாய் 2500 ஐ ஊதியமாக பெற்ற நடிகர் திலகம் அடுத்து ஒப்பந்தம் செய்து கொண்ட படமான பரதேசிக்கு ரூபாய் முப்பதாயிரம் என உயர்ந்தது, அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து பவனி வந்த நடிகர் திலகம் அடுத்த பத்து ஆண்டுகளிலேயே 80க்கும் மேலான படங்களை கடந்தார்
    அதன் மூலம் அன்றைய மதிப்பில் சுமார் 250 லட்சங்களை குவித்திருப்பார் என ஊகிக்கலாம்,
    நடிகர் திலகத்தை மட்டுமே நம்பி இருந்த அவரது சிவாஜி நாடக மன்றக் குழுவினரின் குடும்பங்களுக்காகவும் பல்வேறு அறக்கட்டளைகளுக்காகவும் வேண்டி நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றமும் செய்து வந்தார் அதன் மூலம் பல நூறு இலட்சங்களை வசூலித்து பல குடும்பங்கள் வாழவும் தர்ம காரியங்கள் நடந்திடவும் வழி வகை செய்து வந்தார்,
    உதாரணத்திற்கு
    1)பெருந்தலைவர் காமராஜர் அவர்களது உயர்ந்த எண்ணத்தில் உதித்த பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து நடத்திட ரூ ஒரு லட்சம்
    2) பிரதமர் நேரு அவர்களிடம் தாமபரத்தில் டி.பி நோயை குணமாக்க மருத்துவமனை அமைக்க ரூ ஒரு லட்சம்
    3) போடி நாயக்கனூரில் தொழிர் கூடம் அமைக்க ரூ 3 லட்சம்
    4) புயல் பெரு வெள்ளம் காரணமாக இயற்கை இடர்ப்பாடுகளிலிருந்து மக்களின் துயர் போக்கும் விதமாக பல லட்சம் மதிப்பிலான் உணவு பொட்டலங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் முதலமைச்சர் நிவாரண நிதியாக இரண்டு லட்சங்கள்,
    5) தமிழகத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த கல்விக் கூடங்கள்,கல்லூரிகள் மறு சீரமைக்கவும், நலிவடைந்த நாடக கலைஞர்கள் வாழ்வில் உயர்ந்திடவும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை நூற்றுக்கணக்கான முறையில் நடத்தியதன் மூலம் வசூலான ரூ 32 இலட்சத்தையும் வழங்கினார்,
    6) இந்தியா- சீனா யுத்தத்தின் போது யுத்த நிதிக்காக ரூபாய் நாற்பதாயிரத்துடன் 400 கிராம் தங்க நகைகள்,
    7) இலங்கை தமிழர் நலனுக்காக வேண்டி இலவச வைத்தியசாலை அமைத்திட உதவி,
    8) டெல்லி வாழ் தமிழர்களின் நலனுக்காக ரூபாய் இரண்டு லட்சம் வழங்கியது
    9) ராமநாதபுர மாவட்டம் புயலால் முழுவதுமாக பாதிக்கப்பட்ட போது அவர்களது நலனுக்காக ரூபாய் ஒரு லட்சம்
    10) எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது அவரது சத்துணவு திட்டத்தை தொடர்ந்து நடத்திட ரூபாய் 4 கோடியை நாடகங்களை நடத்தி வசூலித்து கொடுத்தது
    என

    இவ்வாறு முப்பது ஆண்டுகள் காலத்திலேயே தனது வருமானத்தில் வந்த வருவாயில் ஏறக்குறைய 50% அளவிற்கும் கூடுதலாக வழங்கி இருக்கிறார்,
    அன்றைய 50 களில் வருடங்களாகட்டும் பிற்பாடாகட்டும் நடிகர் திலகம் வழங்கிய ரூபாயில் லட்சத்திற்கும் அதிகமான தொகையை போல அப்போதைய பிற நடிகர்கள் யாரேனும் வழங்கியோரைப் பற்றிய வரலாற்று குறிப்புகளை பார்க்க முடியாது,
    நடிகர் திலகம் சிவாஜி மட்டுமே வரலாற்று குறிப்புகள் கொண்டு உயர்ந்து நிற்கிறார்,

    அத்தகைய தொடர் கணக்கீடுகளைக் கொண்டு பார்த்தோமானால் நடிகர் திலகம் வாரி வழங்கிய தொகயின் மதிப்பீடு இன்றைய நாளில் பத்தாயிரம் கோடிகளையும் தாண்டி வியப்பில் போற்ற வைக்கிறது,

    அதனால் தான் வேறு எந்த நடிகர்களுக்கும் அமைந்து விடாத மஹாபாரத வள்ளல் கர்ணன் பாத்திரம் நடிகர் திலகம் சிவாஜிக்கு மட்டுமே அமைந்தது
    அந்த கர்ணன் 1964 ல் வெற்றி வாகை சூடியது போலவே
    2012 ல் டிஜிட்டல் வடிவில் வெளியாகி வசூல் புரட்சியை இன்று வரையிலும் செய்து வருகிறது,

    என்றென்றும் வள்ளல் கர்ணன் நடிகர் திலகம் சிவாஜி புகழ் வாழ்கவே!!




    Thanks Sekar Parasuram

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 72 of 114 FirstFirst ... 2262707172737482 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •