Page 73 of 114 FirstFirst ... 2363717273747583 ... LastLast
Results 721 to 730 of 1135

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 22

  1. #721
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    மற்றுமோர் ஆதாரம்.
    மா கோ ராமச்சந்திரனின் ரசிகர்களது தில்லு முல்லு.


    நடிகர் ராமச்சந்திரனின் சீடர்கள் தாங்கள் புனிதவான்கள் போல
    காட்டிக்கொண்டு சொல்லுவது , எழுதுவது எல்லாமே கடைந்தெடுத்த
    முழுப் பொய்களும் , பித்தலாட்டங்களுமே.
    நாடோடி மன்னன் 20க்கு மேற்பட்ட தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடியதென
    காட்டுவதற்காக தங்கள் பட்டறையில் தயாரிக்கும் போலி விளம்பரங்கள்,
    தாங்கள் செய்யும் தில்லுமுல்லுகளை மற்றவர்கள் செய்வதாக திசை திருப்பும் கைங்கரியங்கள்.
    ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு தியேட்டர்காரர்களை மிரட்டி
    வாத்தி படங்களை ஓட்ட வைப்பது,ஆட்சி அதிகாரம் இருக்கும்வரை தமிழ் நாட்டில் உள்ள
    அனைத்து தியேட்டர்களுமே அவர்களது சொந்தத் தியேட்டர்தான். எனவே வாத்தி படத்தை
    ஓட்டுவதென்பது என்ன அவ்வளவு கஷ்ட்டமா?

    இவை மட்டுமா பிற நடிகர்களின் ,
    முன்னைய சாதனைகள் ஒன்றையும் தெரிந்து கொள்ளாமல்,
    வாத்தி படம்தான் சாதனை புரிந்திருக்கிறதென்ற எண்ணத்தில் ஏனைய நடிகர்களின் படங்கள்
    ஏதாவதொரு ஊரில் சாதனை செய்யும்பொழுது, தங்களது வாத்தியால் சாதனை என்பது இனிமுடியாத காரியம்
    என்பதனால் பிற நடிகர்களின் சாதனைகளை தடுப்பது , தடுத்துவிட்டு கொக்கரிப்பது,

    பொய் ,புரட்டு வசூல்களை வெளியிடுவது, வெளியிட்டு விட்டு பிற நடிகர்களின் பட வசூல்,மற்றும் சாதனைகளை
    ஆதாரம் இல்லாமல் பொய் என்று தங்கள் கற்பனைில் விபரங்களை எழுதுவது என்பது வாத்தி சீடர்களுக்கு,
    கை வந்த கலை.

    நாங்கள் அவர்களது பொய், பித்தலாட்டங்களை ஆதாரத்துடன்தான் வெளிக் கொணர்வோம்.
    அப்படி அண்மையில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டவைதான் காரைக்குடி விவகாரம் மற்றும்
    நாடோடி மன்னன் படத்தின் போலியாக தயாரிக்கப்பட்ட 100 நாள் விளம்பரம் அத்துடன்
    உழைக்கும் கரங்கள் 96 நாள் விளம்பரம், மற்றும் பல.

    இதோ மீண்டும் ஒரு பித்தலாட்டம் கண்ணில் புலப்பட்டுள்ளது.
    இவர்கள் எப்படியெல்லாம் வசூல் பித்தலாட்டம் செய்கிறார்கள் என்பதை பாருங்கள்.
    எம் ஜீ ஆர் புகழ் பரப்பும் உரிமைக்குரல் என்ற மாத இதழ் சென்னையில் இருந்து வெளிவருகின்றது.
    அப்பத்திரிகை வெளியிட்ட ஒரு படத்தின் இரண்டுவிதமான வசூல் விபரத்தை பாருங்கள்.






    ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் சென்னனை நகர வசூல் இரண்டுவிதமாக சொல்லப்பட்டிருக்கிறது.

    ஒன்றில்.............9,21,222.18
    மற்றையது........8,10,112.39
    வித்தியாசம்......1,11,109.79

    இப்படியாகத்தான் எம் ஜீஆரின் பட வசூல்கள் எல்லாமே அவர்களது பட்டறையில்
    போலியாக தயாரித்து வெளியிடுவது ,தங்களது கள்ளத்தனத்தை மறைக்க
    எங்களை குறைகூறுவது.
    (இனி ஒன்று வரிநீக்கிய வசூல் என்று சொல்லுவார்கள்,சொன்னாலும் ஆச்சசரியப்படமுடியாது)

    எம் ஜீ ஆர் ரசிகர்களின் தில்லு முல்லை நாங்கள் ஆதாரத்துடன் சொல்கிறோம்.
    Last edited by sivaa; 21st December 2020 at 09:33 AM.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #722
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கடமையை செய், பலனை எதிர்பாராதே....
    இது கீதையின் வாசகம்...

    இதை யார் பின்பற்றுனார்களோ இல்லையோ...

    நடிகர்திலகம் பின்பற்றினார்...

    இன்று, அவர்தம் அன்பு இதயங்களும் பின்பற்றுகிறார்கள்.

    சென்ற ஆண்டு துவக்கவிழா கண்ட ரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ், மதுரை.
    23.12.20 அன்று இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவினை கொண்டாடுகிறது..

    இந்த ஒரு வருடத்தில் பலநற்பணிகளை செய்து வருவதோடு, அன்னதானமும் செய்து வருகின்றனர்.

    அனைத்திற்கும் முத்தாய்ப்பாக,
    இந்த கொரோனா காலத்தில் ரத்ததானம் செய்து வருகின்றனர்.
    மூன்று மாதத்திற்கு முன்பு, ஒரு ரத்ததான முகாம் நடத்தினர்.

    தற்போது இரண்டாம் ஆண்டுவிழாவினை முன்னிட்டு,

    23.12.20 அன்று காலை,
    மதுரை செயின்ட் மேரிஸ் பள்ளி அருகே,
    ரத்ததான முகாமினை நடத்துகின்றனர்.

    மேலும், காமராஜர் சாலையில் உள்ள காந்தி பொட்டலில், அன்னதானமும் வழங்குகின்றனர்.

    தொடர்ந்து நற்பணிகளை செய்து வரும்
    ரத்தபாசம் சிவாஜி குரூப்ஸ், நிர்வாகிகளை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது,

    சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை.


    Thanks Sundar Rajan

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  4. #723
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ராஜபார்ட் ரங்கதுரை 22/12/1973



    Thanks Vcg Thiruppathi.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  5. #724
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ராஜபார்ட் ரங்கதுரை மதுரை

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  6. #725
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    திருவண்ணமலை

    நகரில் எப்படமும் காணமுடியாதளவில் திரிசூலம்- பாலசுப்ரமணியாவல்

    143 நாட்கள் ஓடி 3,03, 952.95 வசூலை வழங்கிய ஒரே வரலாற்றுச்சித்திரம்!

    எம் ஜீ ஆரின் படங்களில் 100 நாள் கண்ட படம்,

    மாட்டுக்கார வேலன் (at balasubramania 100 days)

    NSC Area விலுள்ள ..... 250 நகரங்களிலே அதிகமாக

    ஓர் தமிழ் திரைப்படத்தை பார்த்தவர்கள் "திருவண்ணாமலை " நகரத்திலே!

    திரிசூலம் பார்த்தவர்கள் 3,93,441 Audience for 143 Days
    .


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  7. #726
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    கர்னாடக மாநிலம்.

    நகரில் ரெகுலர் சோ நடைபெற்று அதிக நாள் ஓடிய திரைச்சித்திரம் ,

    சிவாஜியின் பாவ மன்னிப்பு ( ஸ்டேட்ஸ் 133 நாட்கள்)

    நகரில் 10,68,000.00 அதிக வசூல் பெற்ற ஒரே படம் பெங்களூர் நகரில்!

    தங்கப்பதக்கம். ஒன்றே!

    Rs 35 லட்சம் வசூலையும் Rs 10 லட்சம் D/share ரும் (NAVAUGA Picture )
    அள்ளித்தந்த ஒரே படம் கர்னாடகத்தில் தங்கப்பதக்கம் திரைக்காவியமே!

    இரண்டாவதாக Rs 9 லட்சம் விநியோகர் பங்காக வழங்கிய படம் ஒரு தலை ராகம் ஒன்றே!


    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  8. #727
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    (நன்றி சிம்மக்குரல்)

    கொடுப்பதை சுருட்டுபவன் மோசக்காரன்.

    கொடுப்பதுபோல் நடிப்பவன் நயவஞ்சகன்.

    கொடுப்பவனை தடுப்பவன் அயோக்கியன்.


    தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும்,புயலினாலும் அநேக மக்கள் சொத்திழந்து,
    சொந்தம் இழந்து பெரும் கஷ்ட்டங்களுக்குள்ளாகி இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
    இந்த இடத்திலும் மாண்புமிகு முதல்வர் தனது நயவஞ்சக நாடகத்தை நடாத்தி நல்லவன் வேஷம் போடுகிறார்.


    அண்மையில் தமிழ் நாட்டிலும் மற்றும் சில பகுதிகளிலும் இயற்கையின் சீற்றத்தினால்,
    மக்கள் பெரிய கஷ்ட்டத்திற்கு உள்ளாக் உள்ளனர்.
    இந்த சமயத்தில் மற்றவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.
    சிலர் இதை தமது அரசியல் லாபத்திற்கு பயன் படுத்துகிறார்கள்.
    இன்னும் சிலர் இதை வைத்துக்கொண்டே பிழைப்பிற்கு சுருட்டுகின்றார்கள்.

    ஆனால் சிலரோ தன்னலம் கருதாமல் சொந்த லாபம் எதையும் எதிர்பாராமல் சேவை செய்கின்றார்கள்.
    அப்படி எதுவித லாபத்தையும் கருதாது நாட்டிற்காக, மக்களுக்காக சேவை செய்பவர்களை தடுத்து,
    தனக்கே நல்ல பெயர் வரவேண்டுமென காரியமாற்றும் கயவர்களை கண்டிப்பது நமது கடமையாகிறது.

    முதல்வர் ராமச்சந்திர நாயர் இது சம்மந்தமாக நிதி சேகரித்துவருகிறார்.
    அவர் உண்மையில் சுத்தமான மனதுடன் பாதிப்படைந்தவர்களுக்கு
    உதவவேண்டுமென்ற நோக்கத்துடன்,செயல்படுகின்றாரா என்றால் அதுதான் இல்லை.காரணம்,
    தி மு க வினர் கொண்டு சென்ற தொகையை வாங்க மறுத்ததாக தெரிகிறது.
    அதுமட்டுமல்லாமல் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் ஊர் ஊராகச்சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ,
    உதவி செய்வதையும் தடை செய்துள்ளார். பொலிஸ் பாதுகாப்புடன் சேவை செய்ய வந்தபோது
    திடீரென பொலிசார் பாதுகாப்பை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
    காரணம் கேட்டதற்கு மேலிடத்து உத்தரவு உன கூறப்பட்டுள்ளது.அந்த மேலிடம்தான் எது?
    அது யாரின் உத்தரவு?

    ஜெய்சங்கர் மக்களுக்கு உதவி செய்தால் தனது செல்வாக்கு பறிபோய்விடும் என்று அஞசக்கூடிய அளவிற்கு
    அவர் சிந்திக்கிறார். எதுவித சேவையும் செய்யாமலேயே படிப்பறிவில்லாத பாமர மக்களிடம்
    தன்கு இருக்கும் செல்வாக்கு ,சேவைமூலம் மற்றவர்களுக்கு போய்விடுமோ என முதல்வர் அஞசுகிறார்.
    அவருக்கு தன் லாபம்தான் பெரிதே தவிர ,பாதிப்படைந்த மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை.

    வாத்தியை ஆதரிக்கும் ரசிகர்களே உங்கள் தலைவனின் யோக்கியதையை பார்த்தீர்களா?
    இவர்தானா ஏழைகளின் தோழன்? இவர்தானா பொன்மனச் செம்மல்,?
    இவரா கொடை வள்ளல்?உங்கள் தலைவர் கொடுப்பதுபோல் நடித்து மக்களை ஏமாற்றி,
    இன்று ஆட்சியையும் அலங்கரித்துவிட்டார்.


    சிலரை பல காலம் ஏமாற்றலாம். பலரை சில காலம் ஏமாற்றலாம்.
    ஆனால் திட்டம் போட்டு வேலை செய்தால் எல்லோரையும் நீண்ட காலம்
    ஏமாற்ற முடியும் என்பதற்கு ராமச்சந்திரன் நல்ல உதாரணம்.


    (இமேஜில் உள்ளவை)

    நன்றி சிம்மக்குரல்



    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  9. #728
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    அராஜக எம்ஜிஆர் ஆட்சிக்கு ரஜினி, கமல், பாஜக எதற்கு …? மாற்று அரசியலைப் பேசும் ரஜினியும் ’’எம்.ஜி.ஆர் ஆட்சி தருவேன்’’ என்கிறார் ஊழலற்ற நேர்மையான ஆட்சியைப் பேசும் கமலஹாசனும் எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடுகிறார்! திராவிட கட்சிகளை ஒழிப்பதே இலக்கு என்ற பாஜகவும் எம்.ஜி.ஆரை கொண்டாடுகிறது..! இதை, ’’சுயமாக ஒரு ஆட்சியை தருவதற்கு எங்களுக்கு துப்பில்லை’’ என்பதற்கான அவர்களின் ஒப்புதல் வாக்கு மூலமாகவே நாம் பார்க்கவேண்டும்! எம்.ஜி.ஆர் எந்த மாதிரியான ஆட்சியை தந்தார் என்பதை கீழே பட்டியலிட்டுள்ளேன். இதை நமது இளம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, மக்களுமே கூட குறித்து வைத்துக் கொண்டு ஆக, ‘’இப்படிப்பட்ட படுமோசமான ஆட்சியைத் தான் தரப் போகிறீர்களா..?’’ என்று முகத்திற்கு நேராக சம்பந்தபட்டவர்களிடம் கேளுங்கள்! எளியவர்களிடம் இரக்கம், ஏழைகளுக்கு உதவி,வள்ளல், மனிதரில் புனிதர்…என்றெல்லாம் எம்.ஜீ.ஆரைப் பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்திற்கும்,எம்.ஜி.ஆரின் ஆட்சிக்கும் சம்பந்தமே இல்லை என்பது அவருடைய ஆட்சிகாலத்தில் வாழ்ந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்ல,துன்பத்திற்கு ஆளான பலதரப்பட்ட மக்களுக்கும் நன்றாகவே தெரியும். # தமிழகத்திலேயே அதிகமான போலீஸ் அடக்குமுறைகளையும்,துப்பாக்கி சூட்டையும் நிகழ்த்தியது எம்.ஜி.ஆர் ஆட்சி தான்! # மாணவர்கள் மீதே காவல்துறை வன்முறையை பிரயோகப்படுத்தி பல கண்மூடித்தனமான தாக்குதல்களை நிகழ்த்தியது எம்.ஜி.ஆர் ஆட்சி! # விவசாயிகள் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் அனேகம்! அதில் ஒருமுறை 14 பேரும்,மற்றொரு முறை ஐந்து பேரும் கொல்லப்பட்டனர். # சென்னை மெரினாவில் மீனவர்கள் மீது நிகழ்த்தபட்ட துப்பாக்கிசூட்டில் 14 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். # வட ஆற்காடு,தர்மபுரி பகுதிகளில் பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய ஏழை,எளிய இளைஞர்களை நக்சலைட்டுகள் என்று முத்திரைகுத்தி, குருவிசுடுவதைப் போல சுட்டுதள்ளியதில் சுமார் 25 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்! # இடஒதுக்கீடு போராட்டம் நடத்திய வன்னியர்கள் மீதான துப்பாக்கிசூட்டில் 21 வன்னியர்கள் படுகொலைக்கு ஆளாயினர்! # போராடும் தொழிலாளர்கள் மீது ஆயிரக்கணக்கான பொய்வழக்குகள்,கைதுகள்,சித்திரவதைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன! # சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளின் மரணம் அதிகரித்தது! # போராடுபவர்களைப் பார்த்து எம்.ஜி.ஆர் அடிக்கடி சொன்ன புகழ்பெற்ற வாசகம் ’’பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள்’’ என்பதாகும். அப்படிச் சொன்னால், போலீஸ் அல்லாத அடியாட்களின் தாக்குதலை போராட்டக்காரர்கள் சந்திக்க வேண்டும் என்பது அனுபவங்கள் தந்த பாடமாகும்! # அதிமுகவினர் பாதுகாப்பிற்கு கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்று எம்.ஜி.ஆர் பேசி, முதலமைச்சர் இப்படி சொல்லலாமா..? என்ற பெரிய சர்ச்சை எழுந்ததும் பின்வாங்கிவிட்டார்! # திருச்செந்தூர் சுப்பிரமணியபிள்ளை கொலையில் பால்கமிஷன் ரிப்போர்ட்டையே மறைத்து அரசு ரெக்கார்டுகளிலேயே பொய் எழுதிய ஆட்சி எம்.ஜி.ஆருடையது தான்! # சாராய சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் கட்டமைத்து, அதில் கட்சிக்காரர்கள் கல்லா கட்டும் கலையை கற்றுத்தந்தார்! எம்.ஜி.ஆரின் எரிசாராய ஊழலுக்கு ரே கமிஷனே சாட்சி! # மதுபான உற்பத்தியாளர்களுக்கு கலால் வரியிலிருந்து விலக்களித்த ஒரே ஆட்சியாளர் இந்தியாவிலேயே எம்.ஜி.ஆர் தான்! # பால்டிகா கப்பல் நிலக்கரி பேர ஊழல் தொடங்கி ராபின்மெயின் மர்மங்கள் வரை எம்ஜி.ஆர் ஆட்சி ஊழல்களுக்கு பேர்போன ஆட்சி தான்! # தமிழகத்தில் அரசு பள்ளி,கல்லூரிகளை அலட்சியப்படுத்தி,தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல் போல தோன்றி, கல்வி வணிகமய சுரண்டல் வடிவம் கண்டதும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான்! # பனை வளத்தில் தன்னிகரற்று செழித்தோங்கிய தமிழகத்தில் பனை ஏறுவதை குற்றச்செயலாக சட்டமாக்கி, பனைஏறிகள் 12 லட்சம்பேரின் வாழ்வாதரத்தையும், பனைவளத்தையும் முற்றாக சிதைத்தார்- சாராய ஆலைகளின் நலனுக்காக! # அதிரடி சட்டத்தின் மூலமாக பாரம்பரியமுறையில் செயல்பட்டு வந்த கிராமஅதிகாரிகளை ஒரே நாளில் பணி நீக்கம் செய்து, கிராம நீர் நிலைகள், பொதுப் பயன்பாட்டு நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்கள் ஆக்கிரமிக்க காரணமானவர்! # உள்ளாட்சி தேர்தல்களை நடத்தாமல், உள்ளாட்சி அமைப்புகள் சிதையக் காரணமானவர். # இன்று மோடியிடம் எடப்பாடியும்,பன்னீரும் பணிவதைவிட அதிகமாக இந்திராகாந்தியிடம் பணிந்து, சோரம் போகும் அடிமைத்தனத்தை அரசியலில் அறிமுகப்படுத்தியவர். # எதிலும் சந்தேகம், குழப்பம்,மர்மம், ஜனநாயகத்தை நிர்மூலமாக்கிடும் தனிமனித சர்வாதிகாரம் ஆகியவற்றின் ஆகச்சிறந்த அடையாளமாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர், ஏகப்பட்ட இலவசதிட்டங்களின் மூலமும், ஜால்ரா பத்திரிகையாளர்கள் வழியாகவும் தனக்கான போலிபிம்பத்தை சிறப்பாக உருவாக்கி தன்னை நிலை நாட்டிக் கொண்டவர்! # ’ஏழைகளின் நாயகன்’ என்ற பிம்பம் தந்த பாதுகாப்பில் அரசியல் தளத்திலும்,சமூகத் தளத்திலும் மாபியாக்களின் ஆதிக்கம் தோன்ற வழிவகுத்தவர் எம்.ஜி.ஆர்! எதிர்கட்சியினரையும் கூட அவ்வப்போது தனது ஊழலில் பங்குதாரர்களாக்கி, பக்குவமாக பல ஊழல்கள் வெளியேவராமல் தடுத்த தந்திரசாலி! இப்படிப்பட்ட ஆட்சி இன்றைய தகவல் தொழில் நுட்பங்கள் வளர்ந்த டிஜிட்டல்யுகத்தில் துளியும் சாத்தியமேயில்லை என்பதை உணராமல் ரஜினி,கமல்,பாஜகபிரமுகர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆட்சி தருவதாக சொல்லி வருகின்றனர்! எம்ஜிஆர் ஆட்சியின் நீட்சியாக ஜானகி,ஜெயலலிதா,ஒ.பிஎஸ்,இ.பி.எஸ் ஆட்சிகளை நாம் அனுபவித்து நொந்தது போதாது என்று ஆளாளுக்கு எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவோம் என்றால்,அதற்கு தமிழக மக்கள் ஏமாளிகளல்லர் என உணர்த்த வேண்டும்!

    [COLOR=var(--blue-link)]https://aramonline.in/2397/worstmgrregime-rajinikamalbjp[/COLOR]சாவித்திரி கண்ணன் அறம் இணைய இதழ்.

    whatsapp
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  10. #729
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    நன்றி சிம்மக்கரல்

    தங்த்தமிழக தலை நகராம் (சென்னையில்)

    சிங்கத்தமிழன் சிவரஜி கணேசனின் சாதனை!

    நகரில் அதிக வசூல் பெற்ற ஒரே படம் தங்கப்பதக்கம் 23,47,621.05.
    தொடர்ந்து அதிக காட்சிகள் அரங்கு நிறைந்த படம் தங்கப்பதக்கம்.

    1 ஆம் ஏரியா (சாந்தி)...........241 காட்சிகள்.
    2ஆம் ஏரியா (கிரௌண்).......177 காட்சிகள்.
    3ஆம் ஏரியா (புவனேஸ்வரி)...137 காட்சிகள்.

    3 தரைகளில் இரண்டு முறை வெள்ளி விழா கண்ட நடிகர் ,
    சாதனை திலகம் சிவாஜி கணேசனே.

    * திருவிளையாடல் * தங்கப்பதக்கம்
    (மேற்கண்ட 2 படங்களும் சென்னையில் 3 திரைகளில் வெள்ளிவிழா கண்டன)

    ஒரே திரையில் 7 லட்சத்தை கடந்த நடிகமன்னனின் திரைப்படங்கள் .


    1) திருவிளையாடல் ..................சாந்தி........................7, 06,469.68
    2)ராஜா.....................................தேவி பாரடைஸ்.........7,24,902.90
    3)பட்டிக்காடா பட்டணமா?.........சாந்தி........................7,6 5,725.50
    4)வசந்த மாளிகை..................... சாந்தி........................8,57,877.90
    5)தங்கப்பதக்கம்.........................சாந்தி.... ...................11,65,185.50

    ராமச்சந்திரனின் 3 படங்கள் மட்டுமே 7 லட்சங்கள் பெற்றன.

    3வது ஏரியாவில் பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்க சாதனை
    5 லட்சத்தை கடந்த ஒரே படம் தங்கப்பதக்கமே.
    புவனேஸ்வரி 176 நாள் வசூல் 5,72,127.95.

    ராமச்சந்திரனின் படங்கள் 4 லட்சத்தை நெருங்கியதாக சரித்தரமே கிடையாது.


    நன்றி சிம்மக்குரல்

    (இமேஜில் உள்ளவை)

    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  11. #730
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    289
    Post Thanks / Like
    ரோஜாவின் ராஜா 25/12/1976 -- இன்று 44 வருடங்கள் நிறைவு.



    Thanks Vcg Thiruppathi
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

Page 73 of 114 FirstFirst ... 2363717273747583 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •