Page 23 of 46 FirstFirst ... 13212223242533 ... LastLast
Results 221 to 230 of 453

Thread: INTERVIEWS With TV Artists

  1. #221
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    ஒரு பக்கம் சீரியல்களில் அழுவாச்சி கண்ணீர், மறு பக்கம் விஜய் டி.வி. 'காமெடியில் கலக்குவது எப்படி?’ நிகழ்ச்சியில் ஹ்யூமர் கலாட்டா என கலக்குகிறார் சின்னத்திரையின் ஸ்வீட் பியூட்டி சபர்ணா. கசங்கிய சேலையும், கண்ணீர் கண்களுமாய் ஷூட்டிங்கில் இருந்தவரிடம் ஜாலியும் கேலியுமாய்ப் பேசியதில்...


    ''ஹீரோக்கள் 60 வயசானாலும் ஹீரோவா நடிக்கிறாங்க... ஹீரோயின்கள் மட்டும் ஏன் சீரியலுக்கு வந்துடுறாங்க?''


    ''அவங்க என்னங்க பண்ணுவாங்க? இதுவரைக்கும் அந்த மாதிரி கல்யாணம் ஆன பொண்ணுங்களை நம்ம தமிழ் சினிமா ஏத்துக்கிட்டது இல்லை. அதனால ஹீரோயின்களும் அதுக்கான முயற்சியை எடுக்கிற எண்ணம் வரலை.''


    ''சைட்...?''


    ''சூப்பரா அடிப்பேன்! பட்... நான் சைட் அடிக்கிறது மத்தவங்களுக்கு மட்டுமில்ல, சம்மந்தப்பட்ட ஆளுக்குக்கூடத் தெரியாது. ஓரக் கண்ணால பார்க்கிறதுல அப்படி ஒரு கிக்.''


    ''உங்களை கரெக்ட் பண்றதுக்கு என்னங்க பண்ணணும்?''


    '' 'அகத்தின் அழகு முகத்துல தெரியும்’னு சொல்வாங்க. அதனால, அழகா இருக்கணும்னு அவசியம் இல்லை. கேரக்டர் நல்லா இருந்தாப் போதும். கல்யாணம் பண்ண பொண்ணை கண் கலங்காம வெச்சுப் பார்த்துக்கிறவன்தான் ஆம்பளை. என்னோட சாய்ஸ் அப்படி இருக்கும்.''






    ''நிறைய அனுபவமோ?''


    '' அய்யய்யோ... இதுவரைக்கும் எனக்கு வந்த மொத்த லவ் லெட்டர் ரெண்டோ, மூணோதான். முதல் லெட்டர் ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருந்தப்போ, பேக்கரி கடை வெச்சிருந்த அஜித்துங்கிற மலையாளிப் பையன் கொடுத்தது. லெட்டர்னு சொல்ல முடியாது... காதல் கவிதையை எழுதிவெச்ச கிரீட்டிங் கார்டு. அதை வாங்கிக்கிட்டு என்னோட ஃபிரெண்ட்ஸ்கிட்ட எல்லாம் 'எனக்கும் ஒருத்தன் லவ் லெட்டர் கொடுத்திருக்கான்டி’னு பெருமைப்பட்டுக்கிட்டேன்.''


    ''இப்போ கிரீட்டிங்ஸ் கார்டுல காதல் கவிதை எழுதிக் கொடுத்தா?''


    ''நோ சான்ஸ்... 'ஐ மேரி யூ...’னு அப்ரோச் பண்ணிட்டு, வீட்டுல வந்து பொண்ணு கேட்டுக் கல்யாணம் பண்ணிக்கணும். கல்யாணம் முடிஞ்சு ஆற அமர லவ் பண்ணிக்கலாம்.''


    ''முகத்துக்கு முன்னாடி விழற முடி மேல பொண்ணுங்களுக்கு அப்படியென்ன கிரேஸ்?''


    ''சில பேருக்கு அது ஸ்டைல், சில பேருக்கு அது 'என்னைக் கவனிடா’ங்கிற சிக்னல். முக்கியமானது பசங்க பக்கத்துல நிக்கும்போது வர்ற படபடப்பைப் போக்கிக்கிறதுக்கு!''





    நன்றி: விகடன்
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #222
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    கலைஞர் டி.வி. 'பார்த்த ஞாபகம் இல்லையோ’ சீரியல்ல... ஜாலியான கேரக்டர்; சன் டி.வி. 'சொந்தபந்தம்’ சீரியல்ல ரொம்ப பொறுப்பான கேரக்டர்னு... மாத்தி மாத்தி கலக்கிட்டிருக்காங்க ஆஷ்ரிதா.


    அம்மணிகிட்ட பேச்சுக் கொடுத்தா... ''ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல!''னுதான் சொல்லணும்.


    ''நிஜம்தான் ரீட்டா... ஷூட்டிங் ஸ்பாட்ல எப்பவாச்சும் நான் சைலன்ட்டா இருந்தா போதும்... 'என்னம்மா, உடம்பு ஏதும் சரியில் லையா?'னு ஆளாளுக்கு விசாரிக்க ஆரம்பிச்சுடு வாங்க. அந்த அளவுக்கு துறுதுறு பொண்ணு. சின்ன வயசுல இருந்தே நான் ஃபீல்டுக்கு வந்த வங்கறதால, செட்ல உள்ளவங்களுக்கு நான் எப்பவுமே செல்லம்'' என்று சொல்லும் ஆஷ்ரிதா, மூணு வயசுல சன் டி.வி. 'அப்பா அம்மா’ சீரியலில் நாகேஷ் சாருக்கு பேத்தியா நடிச்சதுதான் ஆரம்பம். பிறகு... 'அண்ணாமலை’, 'கீதாஞ்சலி’, 'சலனம்’, 'கனாகாணும் காலங்கள்’, 'அனுபல்லவி’னு தொடர்ந்து ஓடிட்டே இருக்காங்க.


    ''எங்க அப்பா தாஸ், டெலி மீடியால புரொடக்ஷன் மேனேஜரா இருந்ததால, சின்ன வயசுலயே இதுக்குள்ள வந்துட்டேன். அதனால் நான் ஜாலியா இருந்தாலும்.. 'ஷாட் ரெடி’னு சொன்னதும் நடிப்புல வெளுத்துக் கட்டிடுவேன். ஆனா, ரெண்டு வருஷத்துக்கு முன்ன திடீர்னு அப்பா தவறினதுதான் கொடுமை. ஆனாலும், அவரோட ஃப்ரெண்ட்ஸ் இன்னிக்கு வரை ஃபீல்டுல எனக்கு ரொம்பவே உதவியா இருக்காங்க'' என சென்டிமென்ட்டாக பேசிட்டிருந்த ஆஷ்ரிதாவை ஜாலியாக்க...


    ''ஆமா, உங்க குடும்பமே கலைக்குடும்பமாமே?'' கேள்வியை எடுத்துவிட்டேன்.


    ரொம்ப உற்சாகமாயிட்ட பொண்ணு, ''ஆமா ரீட்டா... இதை எப்படி கண்டுபிடிச்சே? எங்கம்மா புஷ்பாவும் ஆர்ட்டிஸ்ட்தான். என்னோட சித்தி தீபா, சீரியல் ஆக்டர் நேத்ரன் அங்கிளை மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. ரெண்டு பேருமே நடிக்கறாங்க. இன்னொரு சித்தி சப்னாவும் 'தேன்நிலவு’ சீரியல்ல நடிச்சுட்டிருக்காங்க. அவங்க பையன்தான் விஜய் டி.வி. '7- சி’ சீரியல்ல கலக்கற கண்ணன். தீபா சித்தியோட பொண்ணு அபிநயா, விஜய் டி.வி. 'ஜோடி நம்பர்-1’ , 'பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ல டான்ஸ் ஆடி இருக்கா. அடுத்ததா எங்க குடும்பத்துல இருந்து இன்னொரு ஆளும் ரெடியாயிட்டு இருக்கு. சீக்கிரமே உன்கிட்ட சொல்றேன்''னு சொன்ன ஆஷ்ரிதாகிட்ட...


    ''வெள்ளித்திரை?''னு கேட்டேன்.


    ''ஆல்ரெடி வந்தாச்சு’'னு படக்குனு பதில் வரவே... ''சொல்லவே இல்ல''னு நான் 'ஷாக்' ஆனேன்.


    ''நம்பு ரீட்டா... நம்பு. 'திருமணம் என்னும் நிக்காஹ்’ அப்படிங்கற படத்துக்காக ஜெய்க்கு அத்தை பொண்ணாவும், 'தெகிடி’ படத்தில் ஜனனி ஐயரோட ஃப்ரெண்டாவும் நடிச்சுட்டிருக்கேன்'' என கலகலத்தவருக்கு.... வீட்டுல வெச்சுருக்கற செல்லப் பேரு 'கிங்கிணி’யாம்!


    அம்மணி பொறந்த சமயத்துல மலையாள ஹிட் சாங்... 'கிங்கிணி'. இதுதான் பேருக்கு பின்னணி!


    ''இந்த ஷபானா பொண்ணு செம்ம டெடிகேடட்பா''னு யூனிட்ல ஒரே பேச்சா இருக்காம்.


    ''நிஜமாவா சங்கதி?''னு... சன் டி.வி. 'தேவதை' சீரியலில் நடிக்கும் ஷபானா பர்வின்கிட்ட கேட்டேன்.


    ''ஓ, அதுவா... பாட்டில் பாட்டிலா கோக்கை என் மேல கடகடனு ஊத்தி, அப்படியே ஷூட் பண்ணினதுதான் 'தேவதை' சீரியல்ல என்னோட முதல் ஷாட். கோக் பாட்டில்களை உடைச்சு ஊத்தினதும் கண்ணெல்லாம் ஒரே எரிச்சல். ஆனாலும் அசராம ஆக்ட் கொடுத்துட்டிருந்தேன். அதுக்குப் பிறகும், தொடர்ந்து பல எபிசோட்கள்ல குங்குமத்தை மேல கொட்டுறது, சேற்றை அள்ளி மேல அடிக்கறது, சோப்பு தண்ணியை ஊத்துறது... எல்லாத்தையும் தாங்கிட்டே இருக்கேன். அதான், 'இவ ரொம்ப நல்லவப்பா’னு... இப்படி பட்டம் கொடுத்துட்டாங்க...'’னு சொன்ன ஷபானாவை...


    ''ஏம்மா... ஏன் இப்படி?''னு அதிர்ச்சியா பார்த்தேன்.



    ''எனக்கு நடிப்புனா ரொம்ப இஷ்டம். அதனாலதான் எதைக் கொட்டினாலும் தாங்கிக்கிறதுனு முடிவு பண்ணிட்டேன் (பாறாங்கல்லைக் கொட்டினா கூடவா?!). சன் மியூசிக், கலைஞர் டி.வி, இசையருவினு காம்ப்பயர் பண்ணிக்கிட்டே நடிக்கவும் ஆரம்பிச்சுட்டேன். ஆனா, இதெல்லாம் எனக்கு பெரிசா தெரியல. கதைல நான் உருகி உருகி லவ் பண்றனே அதான் காமெடியா இருக்கு. ஏன்னா, நெஜத்துல எனக்கு 'லவ்’வுனா சுத்தமா புடிக்காது. கல்யாணமே பண்ணிக்காம, அன்னை தெரசா மாதிரி சர்வீஸ் பண்ணணும்ங்கிறதுதான் என் ஆசை''னு சொன்னாங்க.


    அன்னை ஷபானா பர்வீன்... வருக வருக!





    நன்றி: விகடன்
    "அன்பே சிவம்.

  4. #223
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    எப்படி காதல் வரும்?



    சீரியல் நடிகை, நிகழ்ச்சித் தொகுப்பாளர் என கலக்கிக் கொண்டிருக்கிறார் தேவிகிருபா. தமிழின் பெரும்பாலான முன்னணி தொலைக்காட்சிகளில் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளன. இவருடைய தம்பி கோகுலும் சீரியல் நடிகர்தான். ஒரே குடும்பத்தில் இருந்து சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இருவரையும் தி.நகர் நடேசன் பூங்காவில் சந்தித்தோம்.


    ""பிறந்தது வளர்ந்தது எல்லாமே சிங்காரச் சென்னைதான். பி.பி.ஏ படிச்சிருக்கேன். சின்ன வயசுலேயே நடிகையாகணும்கிற ஆசை வந்துவிட்டது. ஆனால், ஏன் வந்தது, எப்படி வந்ததுனு தெரியவில்லை. 8ஆம் வகுப்பு படிக்கும்போதே ஜெயா தொலைக்காட்சியில் "ஜோடி மாற்றம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானேன். நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் நன்றாகத் தமிழ் பேசவேண்டும் என்று சொன்னார். பிறகு, பேசிப்பேசி, நாளிதழ்கள் படித்து நன்றாகத் தமிழ் பேச கற்றுக் கொண்டேன். நான் நடிகையானதற்கு காரணம் என் தம்பிதான்'' என்று கோகுலைக் காண்பித்த தேவிகிருபா, அதற்கான காரணத்தையும் சொன்னார்.


    "" "என் பெயர் ரங்கநாயகி' என்ற சீரியலில் குட்டி சேத்தனாக இவன் நடித்தான். ஒருநாள் இவனுடன் ஷூட்டிங் சென்றபோது, அங்கிருந்த ஒருவர் கிரேஸி மோகன் சீரியலைப் பற்றி சொல்லி, "நீ ஏன் முயற்சி செய்யக் கூடாது?' என்றார். அந்தச் சமயத்தில் நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. இருந்தாலும், ஆடிஷனில் கலந்துகொண்டேன்.
    அவர்கள் சொல்கிற டயலாக்கை திருப்பிச் சொன்னால் போதும் என்றார்கள். நானும் அப்படியே செய்தேன். அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது'' என்று தேவிகிருபா சொல்ல, ""இந்த வாழ்க்கை நான் போட்ட பிச்சை...'' என்று சொல்லி சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டார் கோகுல்.


    "" "இணைக் கோடுகள்', "ஆனந்தம்', "தீர்க்க சுமங்கலி', "கஸ்தூரி' ஆகிய சீரியல்களில் நடித்தேன். பிறகு படங்களில் நடிக்கலாம் என்று மூன்று வருடங்கள் கஷ்டப்பட்டு உடம்பைக் குறைத்தேன். "பயமறியான்' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தேன். பிறகு, மறுபடியும் சீரியல். அதுவும் இவனால்தான்'' என்ற தேவிகிருபா, தொடர்ந்தார்.

    ""ஒருவரைப் பார்ப்பதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இவன் சென்றிருந்தபோது, நடிகர் சஞ்சீவைப் பார்த்திருக்கிறான்.
    "தென்றல்' சீரியலில் உனக்கு ஒரு ரோல் இருக்கு, மேனேஜரைப் போய் பாரு என்றிருக்கிறார் அவர். தற்போது ஆடம்ஸ் நடித்துக் கொண்டிருக்கும் பாத்திரம் அது.

    அங்கு சென்றால், "நீ ரொம்ப சின்னப் பையனா இருக்க. வேற ரோல் இருந்தா சொல்றேன்' என்றார் இயக்குநர் குமரன்.
    அப்போது நானும் இவன்கூட போயிருந்தேன். குமரன்கூட ஏற்கெனவே சில நாட்கள் "கஸ்தூரி' சீரியல்ல வேலை பார்த்திருந்தேன்.
    அதனால் "தென்றல்' சீரியலில் புஜ்ஜிமா ரோல் கிடைத்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக நான் அந்த சீரியலில் வரவில்லை. இருந்தாலும், மக்களுக்கு இன்னும் புஜ்ஜிம்மாவை ஞாபகம் இருக்கிறது.

    "புகுந்த வீடு', "மாமா மாப்ளே', "மை நேம் இஸ் மங்கம்மா', "மாயா', "பிள்ளைநிலா' என சீரியல் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறேன்'' என்று தேவிகிருபா சொல்ல, ""ஒரு பக்கத்துக்கு நீயே பேசிக்கிட்டிருக்காத.
    எனக்கும் கொஞ்சம் இடம்கொடு'' என வம்படியாக அக்காவை ஆஃப் பண்ணிவிட்டு ஆரம்பித்தார் கோகுல்.

    ""அக்காவால்தான் எனக்கு நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவங்க ஆடிஷனுக்கு போனபோது, இந்தப் பையன் நல்லா இருக்கானே என்று "என் பெயர் ரங்கநாயகி' சீரியலில் ஜூனியர் சேத்தனாக நடிக்க வைத்தனர். தற்போது முதன்முதலில் என்னை அறிமுகப்படுத்திய ஜே.கே.வின் தயாரிப்பில் நீராவி பாண்டியன் இயக்கிவரும் "தேவதை' சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

    இதுவரைக்கும் கிட்டத்தட்ட 350 எபிசோடு ஒளிபரப்பாகி இருக்கும் என நினைக்கிறேன். அதில் பெருமையாக சொல்லிக்கக் கூடிய விஷயம், 330 எபிசோடுகளில் நான் இருப்பேன்.''
    "மறுபடியும் சினிமாவில் நடிப்பீர்களா?' என்று தேவிகிருபாவிடம் கேட்டோம்.

    ""தற்போது "இலக்கணமில்லா காதல்' என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஜெய் ஆகாஷுக்கு தங்கையாக ஒரு படத்திலும், ஜோடியாக ஒரு படத்திலும் நடித்திருக்கிறேன்'' என்று தேவிகிருபா சொல்ல, கோகுல், தங்களுக்குள் இருக்கும் சிக்கலையும் விளக்கினார்.


    ""எப்போது வெளியில் சென்றாலும் நான், அக்கா, அம்மா மூவரும் சேர்ந்துதான் போவோம். சில சமயங்களில், அம்மா இல்லாமல் நாங்கள் இருவரும் மட்டும் வெளியில் செல்லும்போது, காதலர்கள் என்று தவறாக நினைத்துவிடுகின்றனர். பையனும் பெண்ணும் ஒன்றாக வெளியில் சென்றால், காதலர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எங்களைப் போல அக்கா - தம்பியாகவும் இருக்கலாம்.''

    "உங்களுக்கு வந்த காதல் மனுக்களைப் பற்றிச் சொல்லுங்கள்...' என்று தேவிகிருபாவிடம் கேட்டோம்.

    ""பல வருடங்களாக சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை காதல் மனுக்கள் வரவில்லை. நடிக்க வேண்டும், செட்டில் ஆகவேண்டும் என்ற குறிக்கோளோடு இருப்பதால், என்னை யார் பார்க்கிறார்கள் என்று நான் கவனிப்பதே இல்லை. ஆனால், கண்டிப்பாக காதல் கல்யாணம்தான். ஆனால், காதல் எப்படி வரும்னுதான் தெரியலை.''
    "அன்பே சிவம்.

  5. #224
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு மீண்டும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் ராதிகா.
    சங்கத்திற்காக பல திட்டங்களை அவர் கையில் வைத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது:எங்களுக்கென்று சொந்த அலுவலக கட்டிடம் வேண்டும். சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப நலத் திட்டங்களை நிறைவேற்றவும் நிதி தேவைப்படுகிறது. இதற்காக நிதி திரட்டப்போகிறோம். அதை எந்த வகையில் செய்யலாம் என்று யோசித்து வருகிறோம்.
    பிற மொழி சீரியல்கள் இங்கு டப் செய்து ஒளிபரப்புவதால் இங்குள்ள டெக்னீஷியன்களுக்கு வேலையில்லாமல் போகிறது. கேரளா, கன்னடத்தில் டப்பிங் சீரியல்கள் கிடையாது. அதுபோன்ற நிலையை இங்கு கொண்டு வரவேண்டும். இதற்காக சேனல்களுடன் பேசுவோம்.
    எங்கள் சங்கம்தான் பெப்சி தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கிறது. இந்த விஷயத்தில் சினிமா வேறு தொலைக்காட்சி வேறு. பெப்சி ஸ்டிரைக் நடந்தால் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஸ்டிரைக் முடிந்த உடன் படப்பிடிப்பை தொடங்கலாம். ஆனால் தொலைக்காட்சிகள் அப்படியில்லை அன்றைக்குள்ள எபிசோட்களை கொடுத்தாக வேண்டும். இடைவெளி விட முடியாது. தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். இதனை பெப்சி அமைப்புடன் பேசி சீர்படுத்துவேன் என்கிறார் ராதிகா.
    "அன்பே சிவம்.

  6. #225
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியல்களில் நடிப்பது சினிமாவை விட கடினமானது: எஸ்.பி.பி.சரண்


    பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரணுக்கு பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பல முகங்கள் உண்டு. தற்போது நெஞ்சத்தை கிள்ளாதே தொடரில் நடித்து வருகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: சின்னத்திரை எனக்கு புதிதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே அண்ணாமலை சீரியலில் நடித்திருக்கிறேன். அதன் பிறகு படத் தயாரிப்பில் இறங்கினேன். பல படங்களை தயாரித்தேன். சென்னை 28 தவிர மற்ற எல்லா படங்களும் எனக்கு நஷ்டத்தைத்தான் கொடுத்து. ஆரண்ய காண்டம் பட ரிலீசுக்கு பட்ட கஷ்டத்தால் படத் தயாரிப்பையே விட்டு விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனாலும் தொடர்ந்து படம் தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.


    நான் நடிகன், பாடகன் எந்த மாதிரி வாய்ப்புகள் அமைகிறதோ அதனை பயன்படுத்திக் கொள்கிறேன். என்னால் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. அதனால் சீரில்களில் நடிக்கிறேன். என்னை மக்களுக்கு சின்னத்திரை நடிகனாகத்தான் அதிகமாக தெரியும். சீரியல்களில் நடிப்பது சினிமாவில் நடிப்பதை விட கடினமானது. சினிமாவில் ஒரு நாளைக்கு ஒரு சீன்தான் எடுப்பார்கள். சீரியலுக்கு பத்து சீன் வரை எடுப்பார்கள். அதிகமாக ரீடேக் போகாமல் மளமளவென நடிக்க வேண்டும். அந்த கடின உழைப்பு பிடித்திருக்கிறது. அதனால் சீரியல்களில் நடிப்பதை ரசித்து செய்கிறேன். என்றார் சரண்



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  7. #226
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    டிவி சீரியல்களில் கசக்கிப் பிழிகிறார்கள்! -டிவி நடிகை துர்கா பேட்டி


    டிவி சீரியல்களில் ஒரு நாளைக்கு 10, 12 சீன்கள்கூட எடுக்கிறார்கள். சில சமயங்களில் சாப்பிடக்கூட நேரம் இருக்காது. அந்த வகையில் நாஙகளெல்லாம் ஒவ்வொரு நாளும் கசக்கிப்பிழியப்படுகிறோம் என்கிறார் டிவி நடிகை துர்கா


    தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


    பெரும்பாலும் அழுகாச்சி கேரக்டர்களாக நடிப்பது ஏன்?


    அழுகாச்சி கேரக்டர்களாக நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவதில்லை. எனது தோற்றம், முக அமைப்பு எல்லாமே ரொம்ப மென்மையானதாக இருப்பதால் எனக்கு அந்த மாதிரியான கேரக்டர்களே தருகிறார்கள். மேலும், சீரியல்களைப் பொறுத்தவரை ரப் அண்ட் டப்பாக நடிக்கும் வேடங்களில் நடிப்பவர்களை திட்டுவார்கள். ஆனால் என்னைப்போன்று சாப்ட்டான வேடங்களில் நடிக்கும் நடிகைகளை தங்களில் ஒருத்தியாக கருதுவார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டில் சீரியல் பார்க்கும் பெண்கள் எல்லாருமே என் பக்கம்தான் இருக்கிறார்கள்.


    இருப்பினும் உங்களுக்கு தொடர்ந்து ஒரேமாதிரியான நடிப்பது போரடிக்கவில்லையா?


    சாப்ட்டான வேடம் என்றாலும் ஒவ்வொரு சீரியல்களிலும் ஒவ்வொரு மாதிரியான வேடங்களில்தான் நடிக்கிறேன். அதோடு, நான் நடிக்கும் கேரக்டர்கள் எல்லாமே கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இப்படி மாறுபட்ட பிரச்சினைகளை உள்ளடக்கிய வேடங்களில் நடிப்பதால் எனக்கு ஒவ்வொரு சீரியல்களிலுமே ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கிறது. நேயர்களும் எனது நடிப்பை வெகுவாக ரசிக்கிறார்கள். ஆனபோதும், இப்போது நான் நடித்து வரும் சொந்தபந்தம் தொடரில் நான் நடித்து வரும் செளந்தர்யா என்ற கேரக்டர் இதுவரை மென்மையானதாக இருந்தபோதும், இனிமேல் வில்லியாக மாறுகிறது.


    அப்படி வில்லியாக மாறும்போது எனக்கு தீங்கு விளைவித்தவர்களை நான் பழிவாங்குவதை நேயர்கள் வரவேற்று கைதட்டுவார்கள். காரணம் அந்த அளவுக்கு நான் இதுவரை கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன். அதனால் இனி வரும் எபிசோடுகளில் எனது கையே ஓங்கியிருக்கும்.


    உங்களது மென்மையான முகம் வில்லி அவதாரத்துக்கு பொருந்துமா?


    பூ ஒன்று புயலானது எப்படி என்பது உங்களுக்குத் தெரியாதா? சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் நம்மை மாற்றும். அந்த வகையில், கேரக்டர் நெகடீவாக மாறும்போது அதற்கேற்ற பர்பார்மென்ஸை கொடுத்தால் நமமுடைய கெட்டப்பும் டோட்டலாக மாறி விடும். அந்த மாதிரி ஏற்கனவே சில சீரியல்களில் நான் நடித்திருக்கிறேன். அதனால், என்னால் கதைக்கேற்ப எப்படி வேண்டுமானாலும் மாறி நடிக்க முடியும்.


    சீரியல் நடிகைகளில் எந்த நடிகையின் நடிப்பு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?


    என்னை அதிகமாக கவர்ந்த நடிகை என்றால் அது ரம்யா கிருஷ்ணன்தான். சீரியல்களை விட சினிமாவில் அவரது நடிப்பை ரொம்ப ரசிப்பேன். குறிப்பாக, ரஜினியுடன் அவர் நடித்திருந்த படையப்பா படத்தில் பின்னி எடுத்திருப்பார். அதற்கு முன்பு அவர் நடித்திருந்த படங்களை பார்த்தால், ரம்யாகிருஷ்ணனா இது என்று ஆச்சர்யப்படுகிற அளவுக்கு நடித்திருந்தார்.


    மற்றபடி சீரியல்களில் ராதிகா மேடம் ரொம்ப பிடிக்கும். எத்தனை வெயிட்டான கதாபாத்திரங்களையும் சுமக்கக்கூடிய நல்ல ஆர்ட்டிஸ்ட். அவரது நடிப்பு ரொம்ப இயல்பாக இருக்கும். இந்தமாதிரி சீனியர்களிடமிருந்தும் நான் நடிப்பு கற்றுக்கொள்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும்.


    சீரியல்கள் பார்க்க நேரம் ஒதுக்குவதுண்டா?


    ஒரே நேரத்தில் முந்தானை முடிச்சு, சொந்த பந்தம் என இரண்டு மெகா தொடர்களில் நடிப்பதால் நடிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. அதனால் நான் நடித்த சீரியல்களையே என்னால் பார்க்க முடிவதில்லை. இருப்பினும், எனது வீட்டில் இருப்பவர்கள் பார்த்து தங்களது கருத்தை சொல்வார்கள். அதேபோல் என் அம்மா நிறைய சீரியல்களைப்பார்ப்பதால், ஒவ்வொரு தொடர்களைப்பற்றியும் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன்.


    மேலும், சில சமயங்களில் நேரம் கிடைத்தால் தமிழ் மட்டுமின்றி இந்தி சீரியல்களையும் பார்ப்பேன். அப்படி நான் பார்த்ததில் தமிழுக்கு டப்பாகியுள்ள சில இந்தி சீரியல்கள் பிரமாதமாகவும், பிரமாண்டமாகவும் இருப்பதைப்பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.


    அப்படியென்றால் இந்தி ரீமேக் தொடர்களில் நடிப்பீர்களா?


    ஒரு ஆர்ட்டிஸ்டா எல்லா விதமான கதைகளிலும் நடிக்க ஆசை உள்ளது. அதிலும் அவர்களின் கதை, காட்சி அமைப்புகள் நம்மளை விட வித்தியாசமாககூட உள்ளது. முக்கியமாக ஒரே மாதிரியாக இல்லாமல் குடும்ப பிரச்சினை மட்டுமின்றி, கல்லூரி போன்ற ஜாலியான கதைகளிலும் வருகிறது. அதனால், அந்த மாதிரி தொடர்களில் சான்ஸ் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதேசமயம், இந்தி தொடர்களில் சினிமாக்களில் காட்சிகள் வருவது போன்று ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகள் வைக்கிறார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான காட்சிகளில நடிக்க மாட்டேன். அப்படி நடிக்க பிடிக்காமல்தான் சினிமாவில் நடிப்பதைகூட நான் தவிர்த்து வருகிறேன்.


    சீரியல்களில் அதிக வேலைப்பளு இருப்பதாக கூறப்படுகிறதே?


    உண்மைதான், ஒரே நாளில் 10,12 சீன்கள்கூட எடுக்கிறார்கள். இதனால் காலையில் ஸ்பாட்டுக்கு செல்லும் நாங்கள் மாலை வீடு திரும்பும் வரை துளியும் இடைவேளை இல்லாமல் நடிக்கிறோம். சில சமயங்களில் மதியம் சாப்பிடகூட நேரம் இருக்காது. அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ஓடுவோம். அந்த வகையில், டிவி சீரியல்களில் நடிப்பவர்களை கசக்கிப்பிழிகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்கிறார் துர்கா.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  8. #227
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    நான் மூன்று முகம் கொண்ட நடிகன் ! - சொல்கிறார் ராமச்சந்திரன்


    சின்னத்திரையில் ஏராளமான தொடர்களில நடித்திருப்பவர் ராமச்சந்திரன். தற்போது மகாபாரதம், கேளடி கண்மணி, சொந்தபந்தம், லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். டிவித்தொடர்களில் நடிக்கத் தொடங்கியதில் இருந்தே வில்லன், காமெடியன், கேரக்டர் என எல்லாவிதமான வேடங்களிலும் நான் நடித்து வருகிறேன். எந்த மாதிரி கேரக்டருக்கும் நான் பொருந்தக்கூடிய நடிகனாக இருப்பதால் என்னை நம்பி மாறுபட்ட வேடங்களாக தருகிறார்கள் டைரக்டர்கள். அந்த வகையில், சின்னத்திரை உலகில் நான் மூன்று முகம் கொண்ட நடிகனாக வலம் வந்து கொண்டிருக்கிறேன் என்கிறார் ராமச்சந்திரன்.


    இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, கோலங்கள் தொடரில் தேவயானியின் சித்தப்பாவாக நடித்தேன். வில்லன், காமெடி, கேரக்டர் என மூன்றுவிதமான நடிப்பை அந்த ஒரே கேரக்டரில் வெளிப்படுத்தினேன். அதனால் அப்போதே ராமச்சந்திரன் என்றால் வில்லன், காமெடியன், கேரக்டர் என மூன்றுவிதமான கேரக்டர்களிலும் நடிப்பார் என்றொரு பெயராகி விட்டது. அதனால் இதையே நான் பெரிய வெற்றியாக நினைக்கிறேன். மேலும், உறவுகள், அகல்யா, மைநேம் இஸ் மங்கம்மா போன்ற தொடர்களில் முழுக்க முழுக்க காமெடியனாகவும் நடித்து கைதட்டல் பெற்றேன் என்கிறார்.

    அவரிடத்தில், சின்னத்திரையில் நடிகர்கள் டைட்டில் ரோலில் நடிக்க வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டதற்கு, சான்சே இல்லை என்கிறார். காரணம், டிவித்தொடர்கள் முழுக்க முழுக்க பெண்களை நம்பியே தயாரிக்கப்படுகிறது. ஆண்கள் காலையில் அலுவலகம் சென்றால் இரவு 9 மணிக்கு பிறகுதான் வீட்டிற்கு செல்வார்கள். அதனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரே பொழுதுபோக்கு டிவித்தொடர்கள்தான். அதனால் டிவி சீரியலைப்பார்ப்பது பெரும்பாலானோர் பெண்களே என்பதால் பெண்களை மையப்படுத்திதான் சீரியல்கள் தயாரிக்கப்பட்டு ஆக வேண்டும் என்கிற நிலை உள்ளது.


    திருமதி செல்வம் என்ற தொடரில், ஆண்களை நல்லவர்கள் போன்றும் ஹீரோயிசம் கொண்டவராக காண்பிப்பது போல் கொண்டு வந்தாலும், அந்த சீரியலும் பின்னர் பெண்ணில்தான் முடிந்தது. ஆக, பெண்களே டிவித்தொடர்களுக்கு ஆடியன்ஸ் என்பதால், இந்த நிலை மாற வாய்ப்பே இல்லை.


    மேலும் என்னைப்பொறுத்தவரை, யாருக்கு கதையில் முக்கியத்துவம் உள்ளது என்பதையெல்லாம் பார்க்கமாட்டேன். என்னை நம்பி டைரக்டர்கள் தரும் வேடத்தை நூறு சதவிகிதம் திருப்தியாக நடித்துக்கொடுப்பேன். அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பேன். இப்படி எந்த வேடமாக இருந்தாலும் நான் முழுமனதோடு நடிப்பதால்தான் எல்லாவிதமான கேரக்டர்களுக்கும் நான் செட்டாகி விடுகிறேன்.


    சினிமாவில்கூட, கண்களின் வார்த்தைகள், பனிவிழும் மலர்வனம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் அந்த கேரக்டர் பெருசாக ரீச்சாகவில்லை. அதேசயம், டிவியைப்போன்றுதான் சினிமாவிலும் நான் இந்த மாதிரியாகத்தான் நடிப்பேன் என்று சொல்வதில்லை. எந்த மாதிரியான வேடத்தை என்னை நம்பி கொடுத்தாலும் நடிக்க தயாராகயிருக்கிறேன்.


    மேலும், டிவியில் இருந்து சினிமாவுக்கு சென்ற சந்தானம், சிவகார்த்திகேயன் என பலர் சமீபகாலமாக ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் என்போன்றோருக்கு சினிமாவிலும் நம்மால் ஜெயிக்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. அதோடு சினிமாவில் ஒருநாளைக்கு ரெண்டு சீன் எடுத்தால் டிவியில் 6 சீன்கள் வரை எடுப்பார்கள். அதோடு டயலாக்கும் அதிகமாக இருக்கும். அந்த வகையில், சின்னத்திரை நடிகர் நடிகைகள் நல்ல திறமையானவர்களும் கூட. அதனால் இங்கிருப்பவர்களால் சினிமாவிலும் பெரிய அளவில் சாதிக்க முடியும். முக்கியமாக, எதிர்காலத்தில் சின்னத்திரை கலைஞர்களும் சினிமாவுக்கு அவசியம் தேவை என்கிற நிலையும் ஏற்படும் என்கிறார் ராமச்சந்திரன்.



    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  9. #228
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மீண்டும் சினிமாவில் நடிக்க சுதா சந்திரன் ஆர்வம்


    மயூரி படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சுதா சந்திரன். பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தவர் தற்போது சின்னத்தரை சீரியல்களில் நடித்து வருகிறார். தெய்வம் தந்த வீடு சீரியலில் அவர் நடிக்கும் சித்ரா என்ற மாமியார் கேரக்டர் பெண்களிடையே மிகவும் பிரபலம். அதோடு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.


    "தெய்வம் தந்த வீடு சித்ரா கேரக்டர் எனது நிஜ கேரக்டர் மாதிரி, அதனாலதான் எளிதாக நடிக்க முடிகிறது. நான் எந்த சீரியலில் நடித்தாலும் எனது கேரக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். தெய்வம் தந்த வீடு தொடரில் மாமியார் கேரக்டராக இருந்தாலும் பாசிட்டிவான கேரக்டர். மற்ற தொடர்களில் மாமியார்களை வில்லியாக காட்டும்போது எனது கேரக்டரில் மருமகளுக்கு இன்னொரு தாயாக உருவாக்கப்பட்டுள்ள கேரக்டர். அதனால்தான் சித்ரா கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தமான கேரக்டராக இருக்கிறது.


    சினிமாவில் இருந்துதான் சின்னத்திரைக்கு வந்தேன். என் காலகட்டத்து நடிகைகள் மீண்டும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருக்கிறது. எனக்கேற்ற நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன்" என்கிறார் சுதா சந்திரன்.





    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

  10. #229
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    சீரியல் வில்லி நிஷாவின் அடுத்த ஆசை!


    வைராக்கியம், அழகி, கஸ்தூரி, தெய்வம் தந்த வீடு என பல சீரியல்களில் மெயின் வில்லியாக நடித்தவர் நிஷா. இதில் தற்போது தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து வரும் ப்ரியா கேரக்டர் டிவி நேயர்கள் மத்தியில் அவருக்கு ஏகப்பட்ட திட்டுக்களை வாங்கிக்கொடுத்திருக்கிறதாம்.


    இப்படி டிவி நேயர்கள் உங்களை திட்டுவது மனதை பாதிக்கிறதா? என்று நிஷாவைக்கேட்டால்,


    ஆரம்பத்தில் இப்படி திட்டுகிறார்களே என்று வருத்தப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அது பழகி விட்டது. தொடர்ந்து நான் வில்லியாகவே நடிப்பதால் ஷாப்பிங் போகும் இடங்களில் என்னை பார்க்கும் பெண்கள் சகஜமாக பேச மாட்டார்கள். அவர்களுக்குள் ஏதோ முணுமுணுத்துக்கொள்வார்கள். பின்னர் தயக்கத்துடன்தான் பேசுவார்கள்.


    ஆனால் நான் அவர்களிடம் சீரியலில் பேசுவது போன்று ரப் அண்ட் டப்பாக பேசாமல் மென்மையாக பேசுவதைப்பார்த்து அவர்களும் என்னிடம் சகஜமாக பேசுவார்கள். ஆனபோதும், எதற்காக சீரியல்களில் அவ்வளவு மோசமானவராக நடிக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அப்போது அவர்களிடம், ஒரு கதை என்று வருகிறபோது வில்லி கேரக்டர் அப்படி இருந்தால்தான் கதையே நகரும். டைரக்டர்கள் எப்படி அதில் நடிக்க சொல்கிறார்களோ அப்படித்தான் நாங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்வேன். அதை சிலர் புரிந்து கொள்வார்கள்.


    மேலும், சீரியலில் பேசப்படும் நடிகையாகி விட்ட எனக்கு அடுத்தபடியாக சினிமாவிலும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டிருக்கிறது. என்று கூறும் நிஷா, விஷால் நடித்த பூஜை படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தேன். தொடர்ந்து சீரியல்களைப் போன்று சினிமாவிலும் என்னை வெளிச்சம் போட்டு காட்டும் வெயிட்டான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். அதோடு, என்னைப்பொறுத்தவரை பாசிட்டீவ், நெகடீவ் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எனக்கு ஸ்கோர் பண்ணுவதற்கு எந்த கேரக்டரில் வாய்ப்பு இருக்கிறதோ அதில் நடிப்பேன் என்கிறார் நிஷா.





    நன்றி: தினமலர்
    Last edited by aanaa; 8th August 2015 at 12:48 AM.
    "அன்பே சிவம்.

  11. #230
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    பேய் வேடத்தை என்சாய் பண்ணி நடித்தேன்! - சீரியல் நடிகை ஷாமிலி பேட்டி


    சின்னத்திரைகளில் என்ட்ரியான 3 வருடங்களில் 20 சீரியல்களுக்கு மேல் நடித்து விட்டவர் ஷாமிலி. பாசிட்டீவ், நெகடீவ் என சீரியலுக்கு சீரியல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வரும் ஷாமிலி, மாதம் 30 நாட்களும் நான் சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.


    தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...


    தென்றல் சீரியலில் சுஜிங்கிற கேரக்டர்ல வில்லியாதான் நான் முதல்ல சீரியலுக்கு அறிமுகமானேன். அந்த சீரியல் பெரிய அளவில் ரீச் ஆனதால், ஒரே சீரியலில் பிரபலமாகி விட்டேன். எங்க வீட்ல யாரும் சீரியல் பார்க்க மாட்டாங்க. அதனால் எனக்கு முதல்ல அந்த வில்லி வேடத்தோட ரெஸ்பான்ஸ் தெரியல. ஆனா நான் ரோட்டுல நடந்து போகும்போது சுஜி போறா பாருங்க என்று சிலர் பெண்கள் கூறினர். இன்னும் சிலர் என்னை திட்டவும் செய்தனர். இதனால் நான் பயந்து விட்டேன். அதையடுத்து டைரக்டரிடம் என்னை பார்க்கிற லேடீஸ்ங்க திட்டுறாங்க சார் என்றேன். அதற்கு, இப்பதான் முதன்முதலா வில்லியாக நடிச்சிருக்கீங்க. போகப்போக இது பழகிடும் என்றார். அதுக்கு அப்புறம் உதிரிப்பூக்கள் அதுவும் செகண்ட் லீடுதான். ரொம்ப நல்ல வேடம். மேகா என்ற அந்த கேரக்டர் சிறந்த நடிகைக்கான விருதினை எனக்கு வாங்கித்தந்தது.


    அப்புறம் பைரவியில் நடிச்சேன். இப்ப பாசமலர், மாகாபாரதம், ரோமாபுரி பாண்டியன், 63 நாயன்மார்கள். வள்ளி, பிரியசகின்னு நிறைய சீரியல் பண்றேன். பிரியசகியில செகண்ட் லீடு கேரக்டர். ஹீரோயினிக்கு ப்ரண்டா வந்து அப்புறம் அவருக்கு எதிர்ப்பா மாறும் நெகடீவ் வேடம். ஒரு பாசிட்டீவா இருந்து நெகடீவா ஹீரோயினோட லவ்வருக்காக மாறும் இந்த வேடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.


    அவரிடத்தில், இதுவரை நடித்ததில் அதிக என்சாய் பண்ணி நடித்த வேடம் எது? என்று கேட்டபோது,


    பாசமலர் சீரியலில் நடித்த பேய் வேடத்தில்தான் என்சாய் பண்ணி நடித்தேன். கதைப்படி பேய் என் உடம்புக்குள் போயிடும். எனக்குன்னு ஒரு கேரக்டர் உருவாக்கி என்னைச்சுற்றியை கதை செல்வது போல் இருந்த அந்த கேரக்டரை அனுபவித்து நடித்தேன். மேலும் எப்போதுமே நான் டைரக்டர்கள் சொல்வதை மட்டுமே செய்யக்கூடிய மிஷின் மாதிரி இல்லாமல் நானும் அந்த கேரக்டருக்கு தேவையான கொஞ்சம் விசயங்களை சேர்த்துதான் நடிப்பேன். அந்த வகையில் அந்தந்த கதாபாத்திரங்களாக என்னை முழுமையாக மாற்றிக்கொள்வேன்.


    பேய் இருக்கிறதா? எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?


    என்னைப் பொறுத்தவரை கடவுள் என்ற ஒன்று இருந்தால் பேய் என்ற ஒன்றும் இருக்கும். காரணம் பாசிட்டீவ் ஒன்று இருந்தால் நெகடீவ் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். மேலும், எனக்கு பேய்க்கு பெரிதாக பயம் கிடையாது. ஆனால் ஒருமுறை மகாபாரதம் சீரியல் படப்பிடிப்புக்காக கார் ஓட்டிக்கொண்டு பெங்களூர் ஹைவேயில போய்க்கிட்டிருக்கும்போது ஒரு ஆள் நிற்பதுபோல் இருந்தது. ஆனால் பக்கத்துல போனபோது அதை காணவில்லை. நான் பயந்துட்டு காரை நிறுத்தி விட்டு ஒரு நிமிடம் சாமியை கும்பிட்டு விட்டு காரை வேகமாக எடுத்து சென்றேன். அதுக்கு அப்புறம் நான் தனியாக லாங் டிரைவிங் போறதில்லை. அந்த பேய நெனச்சு இப்ப வரை பயந்துக்கிட்டிருக்கேன்.


    சினிமா வாய்ப்புகள் வருகிறதா?


    ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்தேன். ஜூனியர் பாலையா பேத்தியாக நடித்துள்ளேன். எனக்கு ஒரு பாடல்கூட உள்ளது. அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் படத்திலும் நடித்தேன். அதுவும் ஒரு நல்ல கேரக்டர். இந்த ரெண்டு படத்திலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தால் அப்புறம் சினிமாவை தொடருவேன். பெருசா பேர் கிடைக்கலேன்னா சீரியலே பெட்டருன்னு ஒதுங்கிடுவேன்.


    மேலும், சினிமாவில் ஒர்க் கம்மி. ஆனால் சீரியலில் காலை 9 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 9 மணி வரை ஷீட்டிங் போய்க்கிட்டேயிருக்கும். சினிமாவை விட சீரியலில்தான் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக கிடைக்குது. மேலும் சினிமா ஒரு பத்துல நாள்ல முடிஞ்சிடும். ஆனா சீரியல் மாசம் 30 நாளும் ஒர்க் இருந்துக்கிட்டேயிருக்கும். அதோடு, டிவி நடிகைங்க சினிமாவில் பெருசாக வந்த மாதிரி தெரியல. அதனால் எனக்கு சினிமா ஆசை பெருசாக இல்லை.


    மேலும், நான் சிட்டியில் மாடர்ன் கல்ச்சரில் வளர்ந்து பொண்ணு. ஆனா எனக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் ரொம்ப பிடிக்கும். நான் மெயினா பண்ணின ரெண்டு சீரியல்களிலும் பாவாடை தாவணி அணிந்துதான் நடித்தேன். என்னை நானே ரொம்ப ரசித்தேன். நான் எந்த நடிகர் நடிகைக்கும் ரசிகை கிடையாது.


    அவர்கள் நடிக்கும் கேரக்டர் பிடித்திருந்தால் ரசிப்பேன். எனக்கு பிடித்த நடிகருன்னு சொல்லனும்னா தனுஷ்தான். அவருக்கு கொடுத்த ரோலை அழகாக பண்ணுவார்.


    சினிமாவில் பாடல் காட்சிகளில் கிளாமர் பண்ணுவீங்களா?


    கண்டிப்பாக பண்ண மாட்டேன். எனக்கு சினிமாவில் பிடிக்காத விசயமே கிளாமர்தான். சீரியலில் தொடாமல் நடிக்க வைப்பார்கள். டீசன்டா இருக்கும். அதனால்தான் நான் சீரியலை செலக்ட் பண்ணினேன். அதனால் சீரியல் மாதிரிடீசன்டான வேடங்கள் சினிமாவில் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். ஹீரோக்களை தொட்டு நடிக்கும் வேடங்களை தவிர்த்து விடுவேன். அதேசமயம், சீரியலில் யாராவது கொஞ்சம் கிளாமராக டிரஸ் பண்ணியிருந்தாலும் கமபெனியில் இருந்து போன் வந்து விடும். அவங்க என்ன அப்படி டிரஸ் பண்ணிருக்காங்க என்பார்கள். அந்த அளவுக்கு சீரியல்களில் குடும்பப் பாங்காக மட்டுமே நடிக்க வைக்கிறார்கள். எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. அதனால் சீரியல்களில் டீசன்டான நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.


    மேலும், நான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சு 3 வருடமாச்சு அதற்குள் 20 சீரியல்களில் நடித்து விட்டேன். இங்கே ரொம்ப டீசன்டா பிகேவ் பண்றாங்க. பாதுகாப்பா இருக்கு. அதனால் சினிமாவைவிட நான் சீரியல்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார் ஷாம்லி.





    நன்றி: தினமலர்
    "அன்பே சிவம்.

Page 23 of 46 FirstFirst ... 13212223242533 ... LastLast

Similar Threads

  1. IR concerts, TV shows and Interviews ...
    By Sanjeevi in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 355
    Last Post: 2nd June 2018, 06:26 AM
  2. Sharing-IR's music-interviews-BgmClips- in web
    By rajasaranam in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 860
    Last Post: 2nd October 2012, 12:43 AM
  3. Talented TV artists
    By swathy in forum TV,TV Serials and Radio
    Replies: 20
    Last Post: 21st March 2010, 10:13 PM
  4. Artists and their best emotions
    By Shakthiprabha. in forum Tamil Films
    Replies: 167
    Last Post: 22nd May 2007, 08:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •