Page 2 of 13 FirstFirst 123412 ... LastLast
Results 11 to 20 of 125

Thread: MAKKAL TV

  1. #11
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    இது நம்ம கடை
    கடை இருக்கும், கடையில் பொருள் இருக்கும், பொருளுக்கான விலை குறிப்பிட்டிருக்கும். ஆனால் விற்பனையாளர்கள் யாரும் அங்கே இருக்க மாட்டார்கள்.

    நமக்குத் தேவையான பொருளை நாமே எடுத்துக் கொள்ளலாம். அதற்கான பணத்தை நாமே கல்லாப் பெட்டியில் போட்டு விடலாம். எல்லா மனிதர்களும் நல்லவர்கள் தான். அவர்களை நல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் சந்தர்ப்பத்தை யாரும் தரவில்லை. அந்த நல்ல வாய்ப்பை மக்களுக்குத் தரும் நிகழ்ச்சி தான் இது நம்ம கடை.

    சென்ற வருடம் விடுதலை நாள் அன்று முதல் சுதந்திரம் தீப்பிடித்த வேலூரில் நம்ம கடை விரித்தது மக்கள் தொலைக்காட்சி. அப்போது மக்கள் தொலைக்காட்சி மக்கள் மேல் வைத்த நம்பிக்கையை மக்கள் காப்பாற்றினார்கள்.

    இந்த வருடம் சேலத்தில் நம்ம கடை போடுகிறது. மக்கள் தொலைக்காட்சி, மக்கள் நம்ம கடைக்கு எப்படிப்பட்ட வரவேற்பை தரப்போகிறார்கள் இன்று இரவு 8.30 மணிக்கு காணலாம்.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #12
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    மக்கள் தொலைக்காட்சியில் இன்று முதல் ஒளிபரப்பாக விருக்கும் புதிய நிகழ்ச்சி காலம். விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு காலத்தை வென்ற வீரர்களின் கதை என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    முதல் நிகழ்ச்சியாக பூலித்தேவன் கதை இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 1775-ஆம் ஆண்டு வாழ்ந்த பூலித்தேவன் அன்னியரை எதிர்த்து சமர்புரிந்த வீரர் செறிந்த வரலாறுக்கு சொந்தக்காரன்.

    திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டும் சேவல் பகுதியை ஆண்டவன். மடியும் வரை அன்னியனுக்கு அடிமையில்லை என்று வீரனாக மாண்டவன். இன்றைய தலைமுறைக்கு நம்ம விடுதலை வீரர்களின் தியாக வரலாறை பதிவு செய்து தந்திருப்பவர் தீனதயாளப் பாண்டியன்.

    ஒவ்வொரு தமிழனும் அறிந்து கொள்ள வேண்டிய வீர வரலாறு காலம்.
    "அன்பே சிவம்.

  4. #13
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    வளாகம்


    மக்கள் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி `வளாகம்.' பயனுள்ள இந்நிகழ்ச்சி எப்படியெல்லாம் முன்னேறலாம் என்ற முழு விவரமும் தாங்கி வருகிறது.

    புதன்கிழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் பங்கு சந்தை நிலவரம், மிïச்சுவல் பண்ட், ஆயுள் காப்பீடு, ஜெனரல் இன்சூரன்ஸ், ஓய்வூதியத்திட்டம், பண உதவித்திட்டம், சேமிப்புத்திட்டம், வீடு மனை வாங்கும் திட்டம் போன்ற திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அதன் மூலம் அவர்கள் பயன்பெற திட்டங்களை வகுத்து கொடுக்கும் நிகழ்ச்சியாகும். எஸ்.எச்.எஸ். அட்வைசரி குரூப்பின் நிர்வாக இயக்குனர் எஸ்.நாராயணன் இதுபற்றி விரிவாக விவரிக்கிறார்.

    மிïச்சுவல் பண்ட்டில் எத்தனை விதமான முதலீடுகள் மற்றும் எப்படி செய்யலாம்? எந்த முதலீட்டில் போட்டால் நல்ல பயன் பெறும்?

    ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் ஜெனரல் இன்சூரன்சில் எந்த வகையான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் லாபம் ஈட்டும்?

    ஓய்வூதிய திட்டம் என்றால் என்ன? இத்திட்டத்தின் கீழ் எவ்வளவு முதலீடு செய்தால் எந்த வயதில் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

    எதிர்கால சேமிப்புத்திட்டத்தில் நிறைய வகை முதலீடுகள் உள்ளன. அவற்றில் பாண்ட்ஸ் வாங்குவது, தபால் நிலையத்தில் சேமிப்பது எந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது, வருமான வரியை சேமிக்க எங்கே எப்படி முதலீடு செய்வது என்பது பற்றி தெரிவிக்கப்படும்.

    வீடு மனை வாங்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் எந்த இடத்தில் வாங்குவது? எதிர்காலத்தில் அந்த இடத்தின் முன்னேற்றத்தையும், மதிப்பையும் விவரமாக ஆராய்ந்து கூறுவது.

    பங்கு சந்தை மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் சந்தேகம் மற்றும் நேயர்களின் கேள்விகளுக்கும் நாராயணன் பதில் அளிக்கிறார்.
    "அன்பே சிவம்.

  5. #14
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    காலத்தை வென்றவர்கள்



    மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய நிகழ்ச்சி `காலம்.'

    விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாறு `காலத்தை வென்ற வீரர்களின் கதை' என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

    18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பூலித்தேவன், மருதநாயகம், வேலுநாச்சியார், திப்பு சுல்தான், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஊமைத்துரை, தீரன் சின்னமலை, வீரன் வேலுத்தம்பி, ஜான்சிராணி என்று அன்னியனுக்கு அடிபணியாமல் வீரத்தை நிலைநாட்டிய ஒப்பற்ற வீரர்களின் வரலாற்றை காலம் வென்ற வீரர்களின் கதை நிகழ்ச்சியில் தொடர்ந்து காணலாம்.

    விடுதலை வீரர்களின் தியாக வரலாற்றை பதிவு செய்து தந்திருப்பவர் தீனதயாளப் பாண்டியன்.

    இந்த வீர வரலாறு, வெள்ளி தோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

    "அன்பே சிவம்.

  6. #15
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    மக்கள் தொலைக்காட்சியில், எல்லாமே நன்றாகத்தான் இருக்கிறது.

    ஆனால் 'சந்தனக்காடு' தொடரில், சந்தனக்கடத்தல் வீரப்பனை ஒரு பெரிய தியாகி போலவும், நாட்டுவிடுதலைக்குப் போராடியவரைபோலவும் சித்தரித்தது ரொம்பவே நெருடுகிறது.

  7. #16
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மதுரையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பானது. முழுவதாகக் காணமுடியவில்லை. பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன் கச்சிதமாக, மிக அழகாகப் பேசினார். தமிழ் அலைவரிசைகளில் தனித்து நிற்கிறது மக்கள் தொலைக்காட்சி
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  8. #17
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    Quote Originally Posted by Prabhu Ram
    மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மதுரையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பானது. முழுவதாகக் காணமுடியவில்லை. பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன் கச்சிதமாக, மிக அழகாகப் பேசினார். தமிழ் அலைவரிசைகளில் தனித்து நிற்கிறது மக்கள் தொலைக்காட்சி
    எங்களுக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  9. #18
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Yeah Joe.
    I think you will like that channel. Despite its political slant - which has become inevitable with most of our channels - the channel has several very good programs. The total 'feel' of the channel is impressive.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  10. #19
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    இந்த விடயத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  11. #20
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like
    புத்தகம் படி.. பரிசைப்பிடி!


    உங்கள் வீட்டில் நூலகம் வைக்க ஆசையா? நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் `புத்தகம் படி பரிசைப்பிடி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினால் போதும். புத்தகங்களை பரிசாக வெல்ல முடியும்.

    ஆனால் ஒன்று, நீங்கள் பொது அறிவு, இலக்கியம் எல்லாவற்றிலும் புலமை பெற்றவராக இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடத்துபவர் உடன் விளையாடுபவரிடம் கேள்வி கேட்பார். அதற்கு நான்கு பதிலும் தருவார். அதிலிருந்து சரியான பதிலை தேர்ந்தெடுத்து சொன்னால் ஒரு புத்தகம் பரிசாக கிடைக்கும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒவ்வொரு புத்தகம் பரிசு.

    கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லி கைநிறைய புத்தகங்களை பரிசாக அள்ளிச் செல்லும் இந்த நிகழ்ச்சியை நடத்துபவர் இ.மாலா.

    ` புத்தகம் படி பரிசைப்பிடி நிகழ்ச்சி' மக்கள் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் மாலை 6.03 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
    "அன்பே சிவம்.

Page 2 of 13 FirstFirst 123412 ... LastLast

Similar Threads

  1. 'Makkal Kalaignar' JAISHANKAR
    By saradhaa_sn in forum Tamil Films - Classics
    Replies: 395
    Last Post: 4th June 2016, 09:44 AM
  2. MAKKAL THILAGAM MGR (Part 2)
    By joe in forum Makkal Thilakam MGR and His Movies
    Replies: 3983
    Last Post: 23rd October 2012, 08:34 PM
  3. mannan aachiyil makkal thirrpu
    By kavithaipen in forum Poems / kavidhaigaL
    Replies: 6
    Last Post: 18th September 2011, 12:50 PM
  4. Makkal Aatchi
    By svbp007 in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 2
    Last Post: 2nd November 2008, 03:37 PM
  5. MAKKAL THILAGAM MGR !!!
    By m_23_bayarea in forum Makkal Thilakam MGR and His Movies
    Replies: 1469
    Last Post: 21st April 2007, 04:41 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •