Quote Originally Posted by Thirumaran
Though she is a good actress giving doctorate is a bit too much IMO.
Quote Originally Posted by smith
righly said, thirumaran.

Totally undeserving. But then most doctrates go to the undeserving only.
நீங்கள் இருவரும் சொல்வது முற்றிலும் சரியே...

என்றைக்கு அரசியல்வாதிகளுக்கும், சினிமாக்காரர்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுக்கத் துவங்கினார்களோ அன்றைக்கே 'டாக்டரேட்டுகள்' தங்கள் மதிப்பை இழந்து விட்டன.

முன்பெல்லாம் பொதுத்துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு, மற்றும் சமூக சேவை செய்தவர்களுக்கு (அவர்களில் கூட சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து) டாக்டர் பட்டங்கள் கொடுப்பார்கள்.

('உதவும் கரங்கள்' வித்யாகருக்கு இதுவரை யாரும் டாக்டர் பட்டம் கொடுத்ததாகத் தெரியவில்லை)

ஆனால் இப்போது..?. சரோஜாதேவி என்ன சமூக சேவை செய்துவிட்டார் என்று, வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பவரைக் கூட்டிவந்து டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள்..?. (அது பெங்களூர் பல்கலைக்கழகமாகவே இருக்கட்டுமே).

நிறைய திரைப்படங்களில் நடிப்பதும், நிறைய நடிகர்களுடன் நடிப்பதும் ஒரு சாதனையா?. அப்படிப்பார்த்தால் நூற்றுக்கணக்கில் தேறுவார்களே..!.

எல்லாவற்றையுமே இப்போது கேலிக்கூத்தாகவே ஆக்கி விட்டார்கள்.