Page 5 of 5 FirstFirst ... 345
Results 41 to 47 of 47

Thread: Director Sridhar is no more

  1. #41
    Senior Member Seasoned Hubber rangan_08's Avatar
    Join Date
    Feb 2008
    Location
    Per andam
    Posts
    1,208
    Post Thanks / Like
    Thanks Saradha mam for sharing those information about the thespian.

    I think the NT - Sridhar combo started of with " Uthama puthiran ", right ? where he was responsible for the story, screenplay & dialogues.
    Perhaps life is just that. A Dream and a Fear. -- Joseph Conrad

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #42
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like

  4. #43
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    this is from kumudham :
    சாதனைகளைத் தொடக்கி வைத்தவர் !( 26.10.08 ஹாட் டாபிக்)

    எம்.ஜி.ஆர்., சிவாஜி என நட்சத்திரங்களின் கைகளில் ஜொலித்துக் கொண்டிருந்த தமிழ்த் திரைப்பட உலகை இயக்குநர்களின் பக்கம் திருப்பியவர், இயக்குநர் சகாப்தம் கலைமாமணி சி.வி.ஸ்ரீதர். முதன்முதலில் புதுமுகங்களை மட்டுமே வைத்து `வெண்ணிற ஆடை', பத்து நாட்களில் ஒரே செட்டில் படமாக்கப்பட்ட `நெஞ்சில் ஓர் ஆலயம்', நடிகர்களுக்கு மேக்கப் போடாமல் `நெஞ்சிருக்கும் வரை', முதன்முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட `சிவந்த மண்', முதல் ஈஸ்ட்மென் கலர் படமான `காதலிக்க நேரமில்லை' என தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பல சாதனைகளைத் தொடங்கி வைத்தவர் இவர்தான்.

    இருபதாண்டுகளுக்கு மேலாக உடல்நலக் கோளாறினால் அவதிப்பட்டு வந்த இந்த சகாப்தம், தனது 76-வது வயதில் திங்களன்று அடையாறு மலர் மருத்துவமனையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டது. நீலாங்கரை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் கண்ணீரஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல், இயக்குநரை வழியனுப்ப வந்திருந்த திரைப்பட ஆய்வாளர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் தழுதழுத்த குரலில் ஸ்ரீதர் உடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

    ``மதுராந்தகம் அருகே ஒரு குக்கிராமத்தில் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரீதர். `ரத்தபாசம்' என்ற நாடகத்தை எழுதி, அதை டி.கே.எஸ். பிரதர்ஸிடம் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்து அசந்து போன அவர்கள், அதை நாடகமாக்கினர். அதற்குக் கிடைத்த வரவேற்பால் அந்த நாடகம், ஸ்ரீதரின் கதை, வசனத்தில் திரைப்படமானது. பின்னர், தெலுங்கிலும் இந்தியிலும் ரிமேக் செய்யப்பட்டு மூன்று மொழிகளிலும் ஹிட்டானது அந்தப் படம். இது நடந்தது 1954-ல். அதற்குப் பின், `எதிர்பாராதது', `உத்தமபுத்திரன்' என பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருந்தாலும் படம் இயக்குவதில் தனக்கு இருந்த காதலை யாரிடமும் அவர் வெளிப்படுத்தவில்லை. எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர், தமிழில் வெற்றிகரமான கதை வசனகர்த்தா ஆனதுதான்.

    அதன்பின்பு, நண்பர்களுடன் சேர்ந்து `வீனஸ் பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, படங்கள் எடுக்க முடிவெடுத்தார். அதில் தனது கதை, வசனத்தில் உருவான `கல்யாணப் பரிசு' படத்தை தானே இயக்கப் போவதாக நண்பர்களிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், ஸ்ரீதரின் பிடிவாதத்தால், ஏனோ தானோ என்று சம்மதம் தெரிவித்தனர். இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் இல்லாத அவர் இயக்கிய அந்தப் படம், மிகப் பெரிய வெற்றியடைந்தது.

    அந்தக் காலகட்டத்தில் (1956) தமிழ் சினிமாவில் ஹீரோக்களை வைத்தே, ஒரு படத்தின் வியாபாரம் தீர்மானிக்கப்பட்டது. தமிழில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தனர். ஸ்ரீதரின் வருகையால் அந்த நிலை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது. இயக்குநர்களுக்கென்று தனி மரியாதை உருவாகத் தொடங்கியது. `சித்திராலயா' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்ரீதர், முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து பல படங்களை இயக்கினார். அவரது படங்கள் ரிலீஸாகும் போது பெரிய நடிகர்களே தங்கள் படங்களை ரிலீஸ் செய்யத் தயக்கம் காட்டினர். அந்தளவுக்கு தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டவர் ஸ்ரீதர். ஜெயலலிதா, ரவிச்சந்திரன், வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஸ்ரீகாந்த், காஞ்சனா என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்களின் லிஸ்ட் மிக நீளம்.

    ஐம்பத்தேழு படங்களை இயக்கியவர், முப்பத்து மூன்று படங்களைத் தயாரித்தார். இவரது படங்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. இவர் இயக்கிய `தேன்நிலவு' படத்தின் ஷூட்டிங் முழுக்க முழுக்க காஷ்மீரில் நடந்தது. அந்தப் படத்தின் ஸ்டில்களை பப்ளிசிட்டிக்காக இங்குள்ள பத்திரிகைகளுக்குக் கொடுக்க மக்கள் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ) ஒருவரை நியமிக்க விரும்பினார்.

    படங்களுக்கு மட்டுமே பி.ஆர்.ஓ.க்கள் பணியாற்றிய காலம் அது. முதன்முதலில் தனக்கென தனி பி.ஆர்.ஓ.வை வைத்துக் கொண்டு, காஷ்மீரில் நடந்த அந்தப் படத்தின் ஸ்டில்களை இங்குள்ள பத்திரிகைகளில் வெளிவரச் செய்தார். அவரது பி.ஆர்.ஓ.வாகப் பணியாற்றிய அந்த முதல் நபர் வேறு யாருமல்ல நான்தான்'' என்று பழைய நினைவுகளில் மூழ்கிவிட்டார் ஆனந்தன்.

    அருகில் இருந்த இயக்குநர் சந்தான பாரதி, ``ஸ்ரீதர் சாரிடம் உதவி இயக்குநராக ஐந்தாண்டுகள் (1975-80) பணியாற்றினேன். என்னை சொந்தப் பிள்ளையைப் போல் பார்த்துக் கொண்டார். அப்போதெல்லாம் யாரை அழைத்தாலும் என் பெயரைச் சொல்லியே அழைப்பார். அந்தளவுக்கு என் மீது பாசம் வைத்திருந்தார். எங்களுடன் டேபிள் டென்னிஸ் விளையாடுவார். கார்ட்ஸ் விளையாடுவார். நானும், அவரது மற்றொரு உதவியாளருமான பி.வாசுவும் இணைந்து, `பன்னீர் புஷ்பங்கள்' படத்தை இயக்கினோம். அந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர், எங்களை கட்டித் தழுவி `என்னோட சிஷ்யன்னு நிரூபிச்சிட்டீங்கடா' என்று உணர்ச்சிவசப்பட்டார்!'' என்று அழுதே விட்டார் சந்தானபாரதி.

    மீண்டும் தொடர்ந்த ஃபிலிம் நியூஸ் ஆனந்தன், ``இருபது ஆண்டுகளுக்கு முன் கமலை வைத்து இவர் இயக்கிய `நானும் ஒரு தொழிலாளி' படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. மூன்று ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த அந்தப் படம் சரியாகப் போகவில்லை என்பதால் மிகுந்த வேதனையில் இருந்தார். விக்ரம் நடித்த முதல் படமான `தந்துவிட்டேன் என்னை' என்ற இவரது படமும் சரியாகப் போகவில்லை. இரும்புக் கம்பி குத்தியதில் இவரது பார்வை பறிபோனது. பக்கவாதமும் சேர்ந்து இந்த சகாப்தத்தை சாய்த்தே விட்டது.

    அண்மையில் நான் எழுதிய `சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு' என்கிற புத்தகத்தை ஸ்ரீதரிடம் காண்பிக்க வந்தேன். அந்தப் புத்தகத்தில் வெளியாகியிருந்த `வெண்ணிற ஆடை' படத்தின் ஸ்டில்களைத் தடவிப் பார்த்துக் கொண்டே கதறியழுத ஸ்ரீதர், `அம்மு (ஜெயலலிதா) இப்போ எப்படி இருக்கா?' என்று கேட்டார். தன்னைச் சந்திக்க வருபவர்கள் அனைவரிடமும் அவர் மறக்காமல் கேட்கும் கேள்வியும் இதுதான்.

    சாவதற்குள் ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டே வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் அப்பாஸின் கால்ஷீட் என்னிடம் இருப்பதைத் தெரிந்து கொண்டு என் வீட்டுக்கு வந்த ஷ்ரீதர், அவரை வைத்துப் படம் எடுக்க வேண்டும் என்று கேட்டார். அந்தச் சமயத்தில், காரில் இருந்து இறங்கி நடந்து வரமுடியாத நிலையில் அவர் இருந்தார்'' என்று கண்கலங்கினார், ஆனந்தன்.

    அருகில் இருந்த இயக்குநர் பார்த்திபன், ``என்னுடைய `ஹவுஸ்ஃபுல்' படத்தைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்துப் பாராட்டினார். தள்ளாத வயதிலும், படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர், என்னை வைத்துப் படம் எடுக்க முயன்றார். கடைசி வரை அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்காமல் போய்விட்டது. இயக்குநர்களுக்கு முதல் மரியாதையை ஏற்படுத்திய இவர் தான், தமிழ் சினிமாவில் நடமாடிய நிஜ ஹீரோ!'' என்று வேதனையுடன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
    thanks
    ஸீ வே. வெற்றிவேல்
    படங்கள் : ஞானமணி
    regards

  5. #44
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    "தேன் நிலவு’ நினைவுகள்

    அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் 'தேன் நிலவு' படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதர் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை ஸ்ரீதர் வாயிலாகவே கேட்போம். (பழைய சினிமா இதழ் ஒன்றில் நான் படித்தது). ஸ்ரீதர் சொல்கிறார்:

    "தேன் நிலவு படத்தை காஷ்மீரில் ஐம்பத்திரண்டு நாடகள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதியல்லாம் அப்போது கிடையாது. அதிலும் நாங்கள் இருந்த இடம் ஸ்ரீநகரில் இருந்து வெகு தொலைவில் ஒரு கிராமத்துக்கு அருகில் இருந்தது. அந்த கிராமத்தில் ஒரேயொரு சினிமா தியேட்டர்தான் உண்டு. காஷ்மீரில் கஷ்டப்பட்டு எடுத்த காட்சிகளை சென்னைக்குப் போய் போட்டுப்பார்த்து சரியாக வரவில்லையென்றால் மீண்டும் ஷூட் பண்ணுவது எல்லாம் முடியாத காரியம். அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றையெல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விருமிபினோம்.சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக்கொள்ளலாமே என்பதனால்.

    காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப்பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.

    அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இரண்டுமுறை மட்டும் 'டக்கோட்டா' விமானம் டெல்லிக்குப்போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச்சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னைசென்று, அங்கு விஜயா லேபட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்.

    அந்த படப்பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப்போய் அவர்களிடம் அனுமதி பெற்று, அங்கு வழக்கமான இரவுக்காட்சி முடிந்தபிறகு, இரவு ஒரு மணிக்கு மேல் அங்குள்ள புரொஜக்டரில் திரையிட்டு நான், கோபு, ஜெமினி, வைஜயந்தி (மாலா), நம்பியார், வின்சென்ட், பி.என்சுந்தரம் மற்றும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். மனதுக்கு திருப்தியாக இருக்கும். திருப்தியில்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம். உண்மையில் 'தேன் நிலவு' படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்துக்கு முழுவதும் காரில் போக முடியாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும். அப்படிப்போகும்போது, தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை நம்பியார் தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது".

    இவ்வாறு ஸ்ரீதர் சொல்லியிருந்தார்..

    எந்த வித வசதியும் இல்லாத அந்த நாட்களில் நல்ல படங்களை நமக்கு தர வேண்டும் என்று அவர் பட்ட கஷ்ட்டங்களைப் பார்த்தீர்களா?.

  6. #45
    Member Regular Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    57
    Post Thanks / Like
    Watched his Kalyana Parisu last night. An exceptional film. His ability to narrate the story, the comedy track, music and acting was simply phenomenal. The fact that i could enjoy and feel the emotions of the movie after 30 odd years of its original release is tastamount to the ability and genius of the late film maker. I was watching it for the first time.I felt sad about his death.

  7. #46
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    From the site: http://www.alaikal.com/news/?p=9012
    டைரக்டர் சிறீதர் ஒரு சினிமா மேதை !

    தமிழகத்தின் தலை சிறந்த இயக்குநர் சிறீதர் சென்ற மாதம் அமரராகிவிட்டார். இன்றைய நடிகர்களை தலைவன் என்றும், தளபதி என்றும், சூப்பர் ஸ்டார் என்றும், சுப்hPம் ஸ்டார் என்றும் துதிபாடிக் கொண்டிருக்கும் நம் தமிழ் ரசிகர்களுக்கும், தமிழினத்திற்கும் சிறீதரின் மரணம் ஒரு சிறிய சம்பவமாக தெரிந்திருப்பது ஆச்சரியமான விடயமல்ல.

    நடிகர்களைத்தான் விடுங்கள், தற்போதிருக்கும் டைரக்டர்கள், கமேராமேன்கள் போன்ற தொழில்நுட்பவியலாளர்களாவது சிறீதரின் மேன்மையை அவர் இறப்பின் போதாவது வெளிப்படுத்தியிருக்க வேண்டும், அது நடைபெறவில்லை. சிறீதரின் மரணம் நம் தமிழ் திரையுலகத்தினரின் அத்தனை வீறாப்புக்களும் ஏமாற்றகரமானவை என்பதை மீண்டும் ஒரு முறை கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

    எங்கே ஒரு திறமைசாலியின் பெருமைகளை மனந்திறந்து சொன்னால் நாம் சேர்த்து வைத்திருக்கும் பெருமைகளை நமது அடியாட்கள் மறந்துவிடுவார்களோ என்ற பாமரத்தனமான அச்சம், நம்மவர்களைப் போலவே தமிழக கலைஞரிடமும் பட்டொளி வீசிப்பறப்பதை சிறீதரின் மரணம் ஐயத்திற்கு இடமின்றி வெளிக்காட்டியுள்ளது.

    சிறீதருக்கு இணையான ஒரு இயக்குநர் தமிழில் இதுவரை தோன்றவில்லை என்பதற்கான வலுவான காரணங்களைத் தேடி நடக்கிறது இக்கட்டுரை. தமிழ் திரையுலகில் சிறீதர் படைத்த சாதனைகளுக்கு உதாரணமாக கல்யாணப்பரிசு, சிவந்தமண், ஊட்டிவரை உறவு, காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை, அவளுக்கென்று ஒரு மனம், சுமைதாங்கி, கலைக்கோயில், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற பல ஒப்பற்ற சிறந்த திரைப்படங்களைக் கூறலாம். அதைவிட ஊத்தம புத்திரன் போன்ற பல பழைய வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியவரும் சிறீதர்தான் என்பது அவரைப் பற்றிய பொதுவான பார்வையாகும்.

    கல்யாணப்பரிசு தமிழகத்தில் வசூலில் சாதனை படைத்து, பெரும் பெரும் நடிகர்களை எல்லாம் கதிகலங்க வைத்த திரைப்படம். நெஞ்சில் ஓர் ஆலயம் 24 தினங்களில் எடுக்கப்பட்டு வெள்ளி விழா தாண்டிய திரைப்படம், நெஞ்சிருக்கும் வரை ஒப்பனையே இல்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம். வெண்ணிற ஆடை முற்றிலும் புது முகங்களை வைத்து அவர் வெளியிட்ட கோவா கலர் திரைப்படம். உலகம் சுற்றும் வாலிபனுக்கு முன்னரே உலகத்தைச் சுற்றியது சிறீதரின் சிவந்தமண். தேன்நிலவு, இதைத் தவிர ரஜினி, கமல், எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களை வைத்தும் சிறீதர் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

    kalyana-parisu.jpg

    இந்தத் திரைப்படங்களின் வெற்றிகளை, அவை படைத்த சாதனைகளை வைத்து சிறீதரை பலர் மதிப்பீடு செய்துள்ளனர். ஆனால் இவைகளுக்கு அப்பால் சிறீதரின் கண்களுக்கும், சிறீதரின் திரைப்பட வெளிப்பாட்டுக்கும் இருந்த சிறப்பை இதுவரை யாருமே எடுத்துப் பேசியது கிடையாது. அவசர வாழ்வில் உழலும் அனைவரும் அவசர அவசரமாக சிறீதரைப்பற்றிப் பேசிவிட்டு அவசர அவசரமாகவே அவரை மறந்தும் விட்டனர்.

    sivantha-man.jpg

    திரைப்படம் என்பது நாம் நினைத்தால் நினைத்தது போல வரும் ஒன்றல்ல. ஒன்றை நினைக்கில் அது வரினும் வரும், அல்லது நினையாத ஒன்று வந்து முன் நிற்கினும் நிற்கும் எல்லாம் எனையாளும் ஈசன் செயல் என்ற பாடலைப் போலவே திரைப்படங்களிலும் நாம் நினைப்பது வந்தாலும் வரலாம், நினையாத ஒன்று வந்து நின்றாலும் நிற்கலாம்.

    எனவேதான் கமேரா என்ன செய்யும், அதன் வலு எவ்வளவு இருக்கும், அதற்கு அப்பால் நாம் எப்படி சாதனை படைக்கலாம் என்பதெல்லாம் ஒரு டைரக்கடரின் முன்னால் இருக்கும் பெரும் சவாலாகும். இந்தச் சவாலுக்கு சரியான விடை கண்டவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் சிறீதர், இன்னொருவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்த இருவருமே இந்தியாவில் தொழில் நுட்பத்தை தம் உள்மன ஆற்றலால் வெற்றி கண்ட மேதைகளாக இருந்தவர்கள்.

    இன்று எத்தனையோ நவீன கமேராக்கள், கணினி ஜாலங்கள் எல்லாம் வந்துவிட்டன. இருப்பினும் அத்தனை சாதனங்களையும் பயன்படுத்தி வெளியில் கொண்டுவர முடியாத அவுட்புட்டை தனது நடிப்பால் வெளிக் கொண்டுவந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நவராத்திரியில் இரவினில் ஆட்டம் பகலினில் கூட்டம் என்ற பாடலைப் பாருங்கள். அந்தக் கற்பனையையும் அவுட்புட்டையும் தர இன்றும் உலகில் நடிகர் கிடையாது என்பதை உணர்வீர்கள். அதேபோல தனக்குப் பின் வரப்போகும் நூறாண்டு தொழில் நுட்பத்திற்கே தனது கண்களால் சவால் விட்டு திரைப்படங்களை தந்தவர் சிறீதர்.

    இன்று எத்தனையோ சாதனைகளை படைக்க வல்ல கமேராக்கள் வந்துவிட்டன. 4 கே அளவில் றெட் கமேரா சந்தைக்கு வந்துவிட்டது. ஆனால் இவைகளால் அடையக் கூடிய திரைப்படப் பெறுமதிகளை எல்லாம் இவைகள் வருவதற்கு முன்னரே தனது திரைப்படங்களில் கச்சிதமாக தந்திருக்கிறார் சிறீதர்.

    ஒவ்வொரு திரைப்படத்திலும் சிறீதர் தேர்வு செய்யும் ஆடைகள், பின்னணி காட்சிகள், அதற்கு அமைவாக அவர் கொடுத்திருக்கும் மின் விளக்கின் அளவுகளை இன்று எடுத்துப் பார்த்தால் நம்ப முடியாத பிரமிப்பு ஏற்படுகிறது. உடம்பு சில்லிட்டு மயிர்க் கூச்செறிகிறது.
    ஊட்டிவரை உறவு படத்தைப் பாருங்கள். அதில் தேடினேன் வந்தது என்ற பாடலில் கே.ஆர்.விஜயா நடனமாட சிவாஜிகணேசனை அருகில் நடக்க விட்டு காட்சியை அமைத்திருப்பார். ஒறேஞ் வர்ணத்தில் கே. ஆர் விஜயாவின் ஆடை, வெள்ளை வெளேர் நிறத்தின் சிவாஜியின் உடை, பச்சை நிறத்தில் சுவர்கள், பளிச்சென்ற மஞ்சள் நிறத்தில் ஆங்காங்கு விளக்குகள். என்ன அற்புதமான ஷாட்டுக்கள் ! காட்சியை நேர மிருந்தால் பாருங்கள், கமேரா என்ற ஜடப் பொருளை அதி உன்னதமாக பாவித்திருக்கும் மாபெரும் கலைஞன் சிறீதர் என்பதைக் கண்டு கொள்வீர்கள்.

    கொஞ்சம் நினைவுகளை பின்நோக்கி செலுத்தி காதலிக்க நேரமில்லையை பாருங்கள். மாடிமேலே மாடி கட்டி என்ற பாடல் முதல் படத்தில் வரும் சகல பாடல்களிலும் வர்ணக் கலவையை உருவாக்குவதில் மாபெரும் சாதனையை அவர் படைத்திருப்பதைக் காண்பீர்கள். சற்று மனதை மாற்றி சிவந்த மண்ணை சிந்தியுங்கள், திரைப்படம் தொடங்கி முடியும்வரை ஆடைகளின் நிறங்களை தேர்வு செய்வதில் சிறீதர் காட்டிய கவனம் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும்.

    மேலைத் தேயத்தில் உள்ள புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர்களுக்கு சிறீதரின் படங்களை கொடுத்து, அவருடைய பட உருவாக்கத்தை பார்க்கும்படி கூறியிருக்கிறேன். இன்றும் அமெரிக்காவின் கொலிவூட்டில் கூட எட்டித்தொட இயலாத சில இடங்களை அவருடைய திரைப்படங்களின் பல காட்சிகள் பெற்றிருப்பதாக பாராட்டுகிறார்கள். றெட் கமேராவுக்கு 40 வருடங்கள் முன்னரே இன்றைய றெட் கமேராவினால் வெளிப்படுத்த இயலாத சிறப்பை சிறீதர் எப்படி வெளிக் கொண்டு வந்தார் என்பது அதிசயத்திலும் அதிசயம். கமேராவை உயிரில் கலந்து அதனால் அவர் தனது உணர்வை செதுக்கியுள்ள மகத்துவத்தை அனுபவிக்க முடியாத வாழ்வை வாழ்வது பாவமான செயலாகும்.

    திரைக்கதை ஒன்றை எழுதலாம், எழுதினாலும் எழுதியபடி அதை வெளிக் கொண்டுவருவது கடினம். கதை எழுதுவதற்கு முன்னரே கமேரா, ஒலி, ஆடை, லொக்கேசன், குளோசப், மிட்சொட், வைட் என பல ரகங்களிலும் காட்சி வெளியாகும் போது எல்லாமே மாறும். அந்த மாற்றத்தை உள்வாங்கி கதையை உருவாக்க வேண்டும் என்பதை சிறீதர் மற்றவர்களை விட அற்புதமாக அறிந்திருந்தார்.

    ஒரு கதையை தொழில் நுட்பத்தால் எவ்வளவு உயர்வாக, துல்லியமாக சொல்ல முடியும் என்பது ஓர் அளவு. ஆனால் அதற்கும் அப்பால் வெளிக் கொண்டுவரும் வழிகளை அறிந்து தொழில் நுட்பத்தையே வெற்றி கொள்ளும் மேதையாக இருந்தார் சிறீதர். இன்று உலகப் புகழ் பெற்ற சினிமாக்களின் வெற்றி பெற்ற காட்சிகளின் தொகுப்பாக வெளி வந்திருக்கும் புத்தகத்தைப் புரட்டிப் பாருங்கள், அவர்கள் வெற்றி பெறுவதற்கு முன்னரே அத்தகைய காட்சிகளை சிறீதர் தந்துவிட்டார் என்பதை அறிந்து வியந்து நிற்பீர்கள்.

    கதை, உடை, பாடல், வெளிப்படுத்தும் முறை, நடிகர்களின் தேர்வு, அவர்களின் நடிப்பின் வெளிப்பாடு இவைகளை கமேராவோடு கரைத்து சரியான திரைப்படமாக அவரே வடித்துக் கொடுத்திருக்கிறார். எப்படியெல்லாம் செய்தால் ஒரு அற்புதமான திரைப்படத்தைத் தரலாம் என்பதை கடவுள் கொடுத்த வரமாகவே சிறீதர் பெற்றிருந்தார். அதனால்தான் இன்று திரைப்படங்களில் நடிக்க வரும் இளம் நடிகர்களை அழைத்துச் சென்று, அவர்களிடம் கும்பிட்டு மன்றாடியாவது சிறீதரைப்பற்றி சொல்வேன். அவர் திரைப்படங்களை காட்டி, காட்சிக்கு காட்சி அவர் செய்திருக்கும் சாதனைகளை விளக்கிக் கூறுவேன். சிறீதரைத் தெரியாமல், சிறீதரின் அபார திறமைகளை அறியாமல் தமிழில் சினிமா எடுக்கவோ நடிக்கவோ வரக்கூடாது என்ற உண்மையை அவர்களிடம் சொல்வேன்.

    காதலிலே தோல்வியுற்ற ஜெமினி கணேசன், மன்னார் அன் கம்பனி மனேஜராக வரும் தங்கவேல், ஊட்டிவரை உறவு கே.ஆர்.விஜயா, சிவந்த மண் பாரத் சிவாஜி, நெஞ்சிலோர் ஆலயம் தேவிகா, கல்யாண குமார், முத்துராமன், காதலிக்க நேரமில்லை விஸ்வநாதன் பாலையா, ஓகோ புரொடக்சன் நாகேஸ், வெண்ணிற ஆடை ஜெயலலிதா, நெஞ்சம் மறப்பதில்லை ஜமீன்தார் நம்பியார் என்று சிறீதர் திரைக்கு தந்த காலத்தால் அழியாத பாத்திரங்களை அதேயளவு வலுவோடு தந்த தமிழ் டைரக்டர் ஒருவரை இன்றும் நம்மால்; காட்ட முடியாது.

    எல்லோரும் யானை போல பெரும் பணத்தை செலவிட்டு சினிமாவை தயாரிக்க சிறீதர் எறும்புபோல சுறுசுறுப்பான படங்களை தயாரித்து, அவர்கள் தும்பிக்கைக்குள் நுழைந்து, எல்லா பெரிய யானைகளையும் படுக்க வைத்தார். சினமாவிற்காக அவர் வெளியிட்ட சித்திராலயா பத்திரிகை, ஆழ் கடலில் நமது சிறிய தோணி, கலையுலகில் நமது புதிய பாணி என்று அவர் கொடுத்த விளக்கம், யாவும் பொய்யானதல்ல. சினிமா என்னும் கலையுலகில் காலத்தால் அழியாத புதிய பாணிதான் சிறீதர் என்பதற்கு அரிய சான்றுகள்.

    கலையே என் வாழ்க்கையை நீ மாற்றினாய் - நீயில்லையேல் நானில்லையே ! என்பது சிறீதரின் படத்தில் வரும் பாடல். சிறீதரின் தயாரிப்பு மேன்மைய இன்றய நவீன விஞ்ஞான நுட்பங்களை அறிய அறியத்தான் ஒருவரால் புரிய முடியும். மேலும் சிறீதரைப் புரிவதானால் அவர் உண்மையான கலைஞராக இருக்க வேண்டும். மற்றவர்களால் அவரைப் புரிய முடியாது. அதுதான் பணத்திற்காக சோரம் போகும் பல கோடம்பாக்க நடிகர்களாலும், இயக்குநர்களாலும், அரசியல் தலைவர்களாலும் சிறீதரை சரியாக அறிய முடியாமல் போய்விட்டது.

    சத்தியசித்ரே, அடுர் கோபாலகிருஸ்ணன், குரோசேவா என்று பேசினாலே நம்மையும் மற்றவர் நாலு விஷயம் தெரிந்தவனாக மதிப்பார்கள் என்று எண்ணி நம்மில் பலர் புலம்பித் திரிவார்கள். அத்தகைய உலகில் சிறீதரைப்பற்றிப் பேசாமல் இருப்பது புதுமையல்ல. சிறீதரை இவ்வளவு இலகுவாகவும், சாதாரணமாகவும் நினைத்து அவரது மரணத்தைக் கூட அரச மரியாதையால் அங்கீகரிக்காத தமிழினத்தை நினைத்தால் கண்ணீர் வரும். வள்ளுவன், கம்பன், இளங்கோ, பாரதி போன்றவர்களையே மதித்தொழுகாத நம் இனம் சிறீதரை மட்டுமா மதிக்கப்போகிறது.

    ஆனால் ஒன்று -
    வரலாற்றில் இருந்து தங்கள் பெயர் அழிந்துவிடுமே என்று அஞ்சி சிறீதரை இருட்டடிப்பு செய்த அத்தனை பேரையும் காலம் இருட்டடிப்பு செய்யும். சிறீதர் கல்யாணப் பரிசு போல கல்யாணங்களும் பரிசுகளும் உள்ளவரை உலகில் கல்யாணப் பரிசாக நிறைந்திருப்பார்.
    மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்,

    அதுவரை நம்பிக்கைகளுடன்,

    கி.செ.துரை 02.12.2008

  8. #47
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kaadhalikka Neramillai

    Kaadalikka nEramillai ad , along with his own preface

    http://s775.photobucket.com/albums/y...dhar%20Movies/

    புதுமை எதையாவது செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தியது
    எனது ரசிகர்களே
    காதலிக்க நேரமில்லை படத்தைப் பொறுத்தவரையில் நான் செய்திருக்கும் புதுமை
    வழக்கம்போல் காதலில் தோல்வி சோகமான முடிவு
    போன்றவைகள் இல்லாமல் ஒரு சிறிய காட்சியில் கூட
    எனது ரசிகர்கள் கண்கலங்கக்கூடாது என்ற வகையில்
    ஒரு முழு நீள ஹாஸ்ய படமாகத் தயாரித்திருப்பதே .
    முக்கிய இரண்டு கதாப்பாத்திரங்களுக்கு புதுமுகங்களைப் புகுத்தி
    ஒரு முழு நீள கலர் படமாக* முதன்முறையாக வெளிவரும் சமூகச் சித்திரம்
    காதலிக்க நேரமில்லை
    ஒரு சின்ன ரகசியம் ஆனால் உண்மை
    புதுமணத் தம்பதிகளுக்கும் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் இளைஞர் சமுதாயத்திற்கும்
    காதலிக்க நேரமில்லை ஒரு நல்ல காதல் விருந்து
    அலுவகத்துக்கு செல்வவர்களோ வயதில் பெரியவர்களோ
    நாங்கள் மட்டும் விதிவிலக்கா என்று கேட்டு விடாதீர்கள்
    ஓயாத உழைப்பிற்குப் பிறகு உங்கள் பொழுதை
    குடும்பத்தோடு உற்சாகத்தோடு கழிக்க வழி செய்யும் படம்
    காதலிக்க நேரமில்லை
    ஆனால் ஒரு நிபந்தனை
    படம் பார்த்த பிறகு அதிகம் சிரித்ததினால்
    ஏற்படக்கூடிய வயிற்றுக்கோளருகளுக்கு
    சித்ராலயா ஸ்தாப்னம் பொருப்பாளியல்ல !

    ஸ்ரீதர் !

Page 5 of 5 FirstFirst ... 345

Similar Threads

  1. Sound-man Sridhar is no more!
    By groucho070 in forum Tamil Films
    Replies: 11
    Last Post: 6th December 2008, 08:07 PM
  2. Sridhar - IR combo - one of the top in TFM
    By app_engine in forum Ilaiyaraja (IR) Albums
    Replies: 24
    Last Post: 24th November 2008, 11:26 AM
  3. Director Sridhar passes away
    By sathyakabali in forum Current Topics
    Replies: 24
    Last Post: 7th November 2008, 11:45 AM
  4. Aran by Joshua Sridhar
    By slperson1 in forum Current Topics
    Replies: 13
    Last Post: 12th August 2006, 11:03 PM
  5. 'UYIR' by Joshua Sridhar
    By rajasaranam in forum Current Topics
    Replies: 50
    Last Post: 26th May 2006, 11:05 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •