Page 3 of 8 FirstFirst 12345 ... LastLast
Results 21 to 30 of 74

Thread: M. N. Nambiar is no more!

  1. #21
    Senior Member Veteran Hubber Sanguine Sridhar's Avatar
    Join Date
    Apr 2005
    Posts
    3,220
    Post Thanks / Like
    2-3 weeks back I read a gossip, in a magazine, that he was very sick and he could not even identify people before him.

    What to say?! RIP.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Devoted Hubber ShereneAndrew's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    In HIS Heart!!!
    Posts
    381
    Post Thanks / Like
    RIP
    *♥*SHERENE*♥*

    If its to be.. its upto me..

  4. #23
    Senior Member Veteran Hubber mgb's Avatar
    Join Date
    Mar 2006
    Posts
    4,146
    Post Thanks / Like
    RIP

  5. #24
    Senior Member Diamond Hubber HonestRaj's Avatar
    Join Date
    Aug 2008
    Posts
    7,900
    Post Thanks / Like
    Gurusami Nambiyar avargalin aathma santhi adayattum!!!!!

    Kettavarga thoandrinar
    Nallavaraga vazhndhar



  6. #25
    Senior Member Diamond Hubber groucho070's Avatar
    Join Date
    Jun 2006
    Location
    Malaysia
    Posts
    5,390
    Post Thanks / Like
    http://www.indiaglitz.com/channels/t...cle/43110.html

    He acted with 7 generations!! Not sure that is accurate, but he did act with many generations. That itself is a record.
    " நல்ல படம் , சுமாரான படம் என்பதையெல்லாம் தாண்டியவர் நடிகர் திலகம் . சிவாஜி படம் தோற்கலாம் ..சிவாஜி தோற்பதில்லை." - Joe Milton.

  7. #26
    Senior Member Diamond Hubber joe's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Singapore
    Posts
    9,462
    Post Thanks / Like
    சென்னை: அமரர் எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரும் பழம்பெரும் நடிகருமான எம்.என்.நம்பியார் இன்று பிற்பகல் மரணமடைந்தார். அவருக்கு வயது 89.

    உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது.

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சேரி நாராயண் நம்பியார் என்ற எம்என் நம்பியார் தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராஜமாணிக்கம் குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்தார். 1935-ம் ஆண்டு பக்த ராமதாஸ் என்ற படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவங்கினார்.

    கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார் நம்பியார். மக்கள் திலகம் அமரர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவர் படங்களிலுமே நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றிருந்தவர் நம்பியார். எம்ஜிஆரின் மிக நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார். இவர் நடிக்காத எம்ஜிஆர் படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். வில்லனுக்கு வில்லன் என்ற பட்டப் பெயரே இவருக்குண்டு.

    வேட்டைக்காரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் எங்க வீட்டுப் பிள்ளையில் எம்ஜிஆரும் நம்பியாரும் புதிய சகாப்தமே படைத்தார்கள்.

    எம்ஜிஆருக்கும் தனக்கும் இடையே எந்த மாதிரி நப்பு இருந்தது என்பதை நம்பியாரே ஒருமுறை இப்படிக் குறிப்பிட்டார் ஒரு விருது வழங்கும் விழா மேடையில்:

    எனக்கு எம்ஜிஆர் மேல ரொம்பக் கோபம். அவர் இருந்த வரைக்கும் எங்கே போனாலும் எம்ஜிஆர் என்றதும் உடனே மக்கள் நம்பியார் என்றும் சேர்த்தே உச்சரிப்பார்கள். இப்போ அவர் போய்ட்டாரு. மக்கள் என்னை மறந்துட்டாங்க... போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம் அவர், என்று கூறி மேடையிலேயே கண் கலங்கினார்.

    அந்த விழாவில் தலைமை விருந்தினர் கலைஞர் மு.கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

    எண்பதுகளில், வில்லன் என்ற நிலையிலிருந்து நம்பியாரை குணச்சித்திர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே.பாக்யராஜ். கதாநாயகனுக்கு இணையாக நகைச்சுவையும் செண்டிமெண்டும் கலந்து அவர் நடித்த 'தூறல் நின்னு போச்சு', இன்றும் தமிழின் மிகச் சிறந்த படைப்பாகப் பார்க்கப்படுகிறது.

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரும்பாலான படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் நம்பியார். கடைசியாக ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தார்.

    நம்பியார் நடித்த கடைசி படம் விஜய்காந்தின் சுதேசி.

    தமிழ் தவிர, ஜங்கிள் என்ற ஆங்கிலப் படத்திலும், கணவனே கண்கண்ட தெய்வம் படத்தின் இந்திப் பதிப்பிலும் நடித்துள்ள நம்பியார் 1000 படங்களுக்கு மேல் நடித்தவர். தனது 'நம்பியார் நாடக மன்றம்' மூலம் இரு நாடகங்களை பல முறை அரங்கேற்றியுள்ளார்.

    திகம்பரசாமியார் எனும் சூப்பர் ஹிட் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார் என்பது இன்னமும் பலருக்குத் தெரியாது.

    நம்பியார் என்றதும் பலருக்கும் உடனே நினைவுக்கு வருவது சபரிமலை அய்யப்பன்தான். ரஜினிகாந்த் உள்பட தமிழ் சினிமா நடிகர்கள் பலருக்கும் இவர்தான் குருசாமி. தொடர்ந்து 65 ஆண்டுகளாக தொடர்ந்து சபரி மலைக்குச் சென்று வந்தார் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். திரையில்தான் வில்லனாக நடித்தாரே தவிர, நிஜ வாழ்க்கையில் எந்த தீய பழக்கமும் இல்லாத, கடவுள் பக்தி மிக்க நேர்மையான மனிதாராகவே வாழ்ந்தார் நம்பியார்.

    பாஜகவின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாறன் நம்பியார் இவரது மகன்தான்.

    அஞ்சலி

    கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    http://thatstamil.oneindia.in/movies...sses-away.html
    பாசமலருக்கு அழாதவன் மனுஷனாடே ! - சுயம்புலிங்கம்

  8. #27
    Moderator Diamond Hubber Thirumaran's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Chennai
    Posts
    10,222
    Post Thanks / Like

  9. #28
    Senior Member Veteran Hubber Sourav's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    Chennai
    Posts
    5,571
    Post Thanks / Like
    RIP...
    "Sehwag is the most destructive modern cricketer, There is no doubt abt it. He is just so destructive. He is totally fearless"-Viv Richards

  10. #29
    Moderator Diamond Hubber Thirumaran's Avatar
    Join Date
    Nov 2005
    Location
    Chennai
    Posts
    10,222
    Post Thanks / Like
    பழம்பெரும் நடிகர் எம்.என். நம்பியார் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 89. கடந்த பல நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அவர் சிசிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிசிச்சை பலனின்றி இன்று மதியம் 1 மணியளவில் அவர் காலமானார். 1919 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 7 ஆம் தேதி பிறந்த எம்.என். நம்பியார், தனது, 13 வயது முதலே நாடக கம்பெனிகளில் நடித்து வந்தார். பின்னர், 1935 ஆம் ஆண்டு, முதன் முதலாக, பக்தராமதாஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். கல்யாணி மற்றும் கவிதா ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் அவர் நடித்துள்ளார். பின்னர், பிரபல நடிகர்கள் எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை, உலகம் சுற்றும் வாலிபன், நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடன் சிவந்த மண், மற்றும் கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்களுடன் வில்லனாக நடித்துள்ளார். மொத்தம் ஆயிரம் படங்களுக்கும் மேல் நடித்துள்ள அவர், தமிழ் திரையுலக ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்றிருந்தார். இதுவரை அவர், ஆண்டுதோறும், சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார். அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

    http://www.kumudam.com/latest_news.p...s&id=1238#1238

  11. #30
    Senior Member Diamond Hubber
    Join Date
    Jan 2006
    Posts
    6,074
    Post Thanks / Like
    RIP great actor...great personality

    i liked his role in "neengalum hero thaan" (?)
    Anbe Sivam

Page 3 of 8 FirstFirst 12345 ... LastLast

Similar Threads

  1. M.N.Nambiar
    By swathy in forum Tamil Films
    Replies: 44
    Last Post: 26th July 2007, 03:24 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •