Page 3 of 277 FirstFirst 123451353103 ... LastLast
Results 21 to 30 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #21
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    .....and another existing thread for Gemini Ganesan is here:

    http://www.forumhub.mayyam.com/hub/v...ic.php?t=10106

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #22
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Saradha Madam,
    Thank you for pointing out the threads. Let me continue there itself.

    A request to moderator.

    Kindly take my posting to that thread Sir

    Raghavendran
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #23
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    காதல் மன்னன் குறித்து நடிப்புலகின் மன்னர் மன்னன்

    "காதல் மன்னன் என்றால் ஜெமினி கணேசன் தான். அந்தப் பட்டம் எனக்கும் கிடையாது, கமலுக்கும் கிடையாது. கண்ணம்மா முதல் கமல் வரை அவர் காதல் செய்கிறார். அவர் என்றென்றும் காதல் மன்னனே தான்."

    - 30.4.1997 புதனன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற "அவ்வை சண்முகி" வெற்றி விழாவில் பேசியதிலிருந்து.

    இன்று 17.11.2010 காதல் மன்னன் அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் 91வது பிறந்த தினம்.

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  5. #24
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    GEMINI GANESAN BOOK LAUNCH - IMAGES

    http://www.behindwoods.com/new-image...ent-index.html


    Regards

  6. #25
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    காதல் மன்னன் ஜெமினி கணேசனின் திரைப்பட சாதனைப் பட்டியல்

    [திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்]

    1. மிஸ் மாலினி - 26.9.1947

    2. சக்ரதாரி - 3.12.1948

    3. நவ ஜீவனம் - 28.5.1949

    4. தாயுள்ளம் - 9.2.1952

    5. மூன்று பிள்ளைகள் - 11.7.1952 - வெலிங்டன், பிரபாத்

    6. முக்குறு கொடுக்குலு(தெலுங்கு) - . .1952 ["மூன்று பிள்ளைகள்" தமிழ்ப் படத்தின் தெலுங்குப் பதிப்பு]

    7. ஔவையார் - 15.8.1953 - வெலிங்டன், பிரபாத், சரஸ்வதி [24 வாரங்கள் ஓடிய ஹிமாலயன் ஹிட் காவியம்]

    8. ஆசைமகன் - 18.9.1953 - சித்ரா, பிராட்வே, லட்சுமி(பெரம்பூர்)

    9. ஆசாதீபம்(மலையாளம்) - . . 1953 ["ஆசைமகன்" தமிழ்ப் படத்தின் மலையாளப் பதிப்பு]

    10. மனம் போல் மாங்கல்யம் - 5.11.1953 - காஸினோ, பிராட்வே, சரஸ்வதி [100 நாள் ஓடிய பெரு வெற்றிப்படம்]

    11. பெண் - 25.6.1954 - வெலிங்டன், ஸ்ரீகிருஷ்ணா, உமா, ராஜகுமாரி, லட்சுமி(பெரம்பூர்)
    [நடிகர் திலகத்தின் "மனோகரா"வுக்குப் பின் சென்னையில் ஐந்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம்]


    காதல் மன்னன் களை கட்டுவார்.....

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #26
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    காதல் மன்னனின் 1955-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்

    [திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்]

    12. மிஸ்ஸியம்மா - 14.1.1955 - காஸினோ, கிரௌன், ராக்ஸி [100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் காவியம்]

    13. வள்ளியின் செல்வன் - 11.2.1955 - வெலிங்டன், பிரபாத், சரஸ்வதி

    14. கணவனே கண்கண்ட தெய்வம் - 6.5.1955 - காஸினோ, பிரபாத், சரஸ்வதி [100 நாட்களுக்கு மேல் ஓடிய மெகாமகாஹிட் காவியம்]

    15. நீதிபதி - 7.10.1955 - நியூஎல்ஃபின்ஸ்டன், கிரௌன், மஹாலட்சுமி, காமதேனு

    16. மாமன் மகள் - 14.10.1955 - பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, ராஜகுமாரி, உமா

    17. மகேஸ்வரி - 13.11.1955 - சித்ரா, ஸ்ரீகிருஷ்ணா, உமா, காமதேனு

    18. குணசுந்தரி - 16.12.1955 - காஸினோ, கிரௌன், சயானி


    குறிப்பு:
    1. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, 1955-ம் ஆண்டு, ஜெமினி வருடம். 1955-ன் ஈடு, இணையற்ற வசூல் சாதனைப் படமாக "கணவனே கண்கண்ட தெய்வம்" அமைந்தது. "கணவனே கண்கண்ட தெய்வம்" திரைப்படத்திற்கு அடுத்த நிலையில், "மிஸ்ஸியம்மா" உண்டாக்கிய வசூல் பிரளையம், அதனை இரண்டாவது இடத்தில் திகழச் செய்தது.

    2. மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களின் இணையில்லா வெற்றி, ஜெமினிக்கு மிகப் பெரிய நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கியது.


    காதல் மன்னன் களை கட்டுவார்.....

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #27
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like
    பெரும்பாலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட
    திரைக்கதையமைப்பாக இருந்த போதிலும்
    திரைப்பட பெயர்கள் உட்பட*
    அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நடிக்க
    ஒப்புக் கொண்ட*தோடு மட்டுமல்லாமல்
    அலட்டிக் கொள்ளாமல் ரொம்ப ஈஸியாகவும் நடித்தவர்
    விளம்பரங்களில் கூட கதாநாயகிகளுக்கே முதலிடம்
    அதுவும் நடிகயர் திலகம் சாவித்திரியோடு நடித்திருந்தாரேயானால்
    அது சாவித்திரி படமாகவே கருதப்பட்டது
    எப்போதுமே second fiddle , இங்கே பட்டியல் போட்டு காட்டியிருக்கும் படங்கள் உட்பட*
    இருந்தும் தனது தனித் தன்மையை பதித்தவர்
    காதல் மன்னன் !

  9. #28
    Senior Member Seasoned Hubber tfmlover's Avatar
    Join Date
    Jan 2005
    Location
    Reykjavik Iceland .
    Posts
    1,972
    Post Thanks / Like

    Kaaviyath Thalaivi



    soulful performance by GG and Sowcar Janakimmaa
    a must see

    Regards

  10. #29
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2005
    Location
    Chennai
    Posts
    2,197
    Post Thanks / Like
    Quote Originally Posted by tfmlover
    பெரும்பாலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட
    திரைக்கதையமைப்பாக இருந்த போதிலும்
    திரைப்பட பெயர்கள் உட்பட*
    அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமல் நடிக்க
    ஒப்புக் கொண்ட*தோடு மட்டுமல்லாமல்
    அலட்டிக் கொள்ளாமல் ரொம்ப ஈஸியாகவும் நடித்தவர்
    விளம்பரங்களில் கூட கதாநாயகிகளுக்கே முதலிடம்
    அதுவும் நடிகயர் திலகம் சாவித்திரியோடு நடித்திருந்தாரேயானால்
    அது சாவித்திரி படமாகவே கருதப்பட்டது
    எப்போதுமே second fiddle , இங்கே பட்டியல் போட்டு காட்டியிருக்கும் படங்கள் உட்பட*
    இருந்தும் தனது தனித் தன்மையை பதித்தவர்
    காதல் மன்னன் !
    Yes....., True.

    ஜெமினி கணேசனைப் பொறுத்தவரையில், அவர் நடிகர் திலகத்துடன் நடித்த பல படங்களிலும், எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படத்திலும் மட்டும்தான் இரண்டாம் பட்சமாகக் கருதப்பட்டார் என்றில்லை. அவர் கதாநாயகனாக நடித்த முக்கால்வாசிப்படங்களில் அவர் இரண்டாம் பட்சமாகவே கருதப்பட்டார்.

    ஆரம்ப காலத்தில் அவர் அஞ்சலிதேவியுடனும், பின்னர் சாவித்திரியுடனும் நடித்த படங்களில் கதாநாயகிகளே பிரதானமாகப் பேசப்பட்டனர்.

    கல்யாணப்பரிசு, மீண்ட சொர்க்கம், தேன் நிலவு, அவளுக்கென்று ஓர் மனம் போன்ற படங்கள் ' ஸ்ரீதரின் படங்கள்' என்ற முத்திரையுடனேய கவனிக்கப்பட்டன.

    அதுபோலவே இருகோடுகள், காவியத்தலைவி, புன்னகை, கண்ணா நலமா, வெள்ளி விழா ஆகியவை 'கே.பாலச்சந்தரின் படங்கள்' என்றும், அவற்றில் ஜெமினி இருக்கிறார் என்றுமே மக்கள் மனதில் இடம்பிடித்தன. காவியத்தலைவியில் இவர் நடிப்பு சிறப்பாக இருந்தபோதிலும், இயக்குனருக்கு அடுத்த இடத்தை சௌகாரே பிடித்துக்கொண்டார். இருகோடுகளிலும் சௌகார், ஜெயந்தி சக்களத்தி சண்டையில் இவர் கேரக்டர் நசுக்கப்பட்டு விட்டது.

    அதே வரிசையில் கற்பகம், சித்தி, பணமா பாசமா, ஆதிபராசக்தி ஆகிய படங்கள் 'கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்கள்' என்ற பட்டத்தை சூடிக்கொண்டன. சித்தியில் கூட பத்மினிக்கு அடுத்த இடம்தான் இவருக்கு.

    இருப்பினும் தான் நடித்த அத்தனை கேரக்டர்களிலும் மிகவும் 'லாயலாக' குறைவின்றி நடித்திருப்பார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார். 1969-ல் இவர் இரட்டை வேடத்தில் நடித்த (ஒரிஜினல்) 'சங்கமம்' படத்திலும், 1974-ல் இவர் நடித்து தயாரித்த (ஒரிஜினல்) 'நான் அவனில்லை' ப்டத்திலும் இவர் நடிப்பு அட்டகாசம்.

    இருந்தாலும், 'எம்.ஜி.ஆர்.படம்', 'சிவாஜி படம்', 'ஜெய்சங்கர் படம்', 'கமல் படம்', 'ரஜினி படம்' என்று சொல்லப்படுவது போல, 'ஜெமினி படம்' என்று இவர் படங்கள் பேசப்படவில்லை என்பது நமது வருத்தம்.

  11. #30
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    காதல் மன்னன் ஜெமினியின் 1956-ம் ஆண்டு சாதனைப் பட்டியல்

    [திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்]

    19. பெண்ணின் பெருமை - 17.2.1956 - காஸினோ, பிராட்வே, மஹாலட்சுமி [100 நாட்களுக்கு மேல் ஓடிய பெரிய வெற்றிப்படம்]

    20. ஆசை - 10.3.1956 - மிட்லண்ட், கிரௌன்(16.3.1956), ராக்ஸி(16.3.1956)

    21. பிரேமபாசம் - 21.3.1956 - பாரகன், மஹாராணி, உமா [100 நாட்களுக்கு மேல் ஓடிய அமோக வெற்றிப்படம்]

    22. சதாரம் - 13.4.1956 - கெயிட்டி, ஸ்ரீகிருஷ்ணா, ராஜகுமாரி, மஹாலட்சுமி

    23. காலம் மாறிப் போச்சு - 11.5.1956 - வெலிங்டன், ஸ்ரீகிருஷ்ணா, உமா [100 நாட்கள் ஓடிய நல்ல வெற்றிப்படம்]

    24. தேவ்தா(ஹிந்தி) - . .1956 ["கணவனே கண்கண்ட தெய்வம்" திரைப்படத்தின் ஹிந்திப் பதிப்பு]

    25. மாதர்குல மாணிக்கம் - 21.12.1956 - காஸினோ, கிரௌன், சயானி [100 நாட்களுக்கு மேல் ஓடிய சிறந்த வெற்றிப்படம்]


    குறிப்பு:
    1. சிவாஜி, ஜெமினி - இரு கணேசர்களும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் "பெண்ணின் பெருமை".

    2. "ஆசை" திரைப்படம், சென்னை மிட்லண்ட் மற்றும் தென்னகமெங்கும் 10.3.1956 அன்று வெளியானது. சென்னை கிரௌன், ராக்ஸி அரங்குகளில் மட்டும் , 6 தினங்கள் தள்ளி, 16.3.1956 அன்று வெளியானது.

    3. சென்னையில் 11.5.1956 அன்று வெளியான "காலம் மாறிப் போச்சு", தென்னகமெங்கும் ஒரு வாரம் முன்னரே, அதாவது 4.5.1956 அன்றே வெளியானது.

    4. 1956-ல் நான்கு 100 நாள் படங்களை கொடுத்தார் ஜெமினி. அந்த வருடம் அதிக 100 நாள் படங்களைக் கொடுத்த ஹீரோ என்ற பெருமையை பெற்றதோடு மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் தொடக்கமான 1931லிருந்து அன்றைய காலகட்டமான 1956 வரை, ஒரே வருடத்தில் நான்கு 100 நாள் படங்களை கொடுத்த முதல் கதாநாயக நடிகர் என்கின்ற பெருமையையும் தட்டிச் செல்கிறார்.


    காதல் மன்னன் களை கட்டுவார்.....

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Page 3 of 277 FirstFirst 123451353103 ... LastLast

Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •