Results 1 to 1 of 1

Thread: Palimar Tv

  1. #1
    Senior Member Seasoned Hubber R.Latha's Avatar
    Join Date
    Jan 2005
    Posts
    1,599
    Post Thanks / Like

    Palimar Tv

    அமுதசுரபி

    பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வரும் பாலிமர் தொலைக்காட்சி 'அமுதசுரபி' என்ற புதிய தொடரை ஒளிபரப்புகிறது.

    இதில் சங்கீதா கதாநாயகியாக நடிக்கிறார்.​ 'மர்மதேசம்',​ 'சிதம்பர ரகசியம்' போன்ற பிரபல தொடர்களை இயக்கியவரும் ஷங்கர் தயாரிப்பில் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தை இயக்கிக்கொண்டிருப்பவருமான நாகா இந்தத் தொடரை இயக்குகிறார்.

    'அமுதசுரபி' பற்றி கேட்டபோது...​ '' அமுதசுரபி என்பது மணிமேகலை கையில் இருந்த அட்சயபாத்திரம் என்பது எல்லோரும் அறிந்த செய்தி.​ மணிமேகலையிடம் இருந்த அந்த அட்சயபாத்திரம் இப்போது எங்கே இருக்கிறது?​ இந்தக் காலத்தில் இப்படி ஒரு பாத்திரம் இருக்குமா?​ என்பதன் தேடல்தான் இந்தத் தொடர்.​ இதை வரலாற்றுப் பின்னணியோடு மாயாஜாலம்,​​ அமானுஷ்யம் கலந்து விறுவிறுப்பாகக் கூறுகிறோம்.​ மேலும் தொல்லியல்துறை,​​ கட்டடக்கலை போன்றவற்றைப் பற்றிய பல அரிய குறிப்புகளும் இந்தத் தொடரில் இடம்பெறுகின்றன.​ மணிமேகலையாக சங்கீதா நடிக்கிறார்'' என்றார் இயக்குநர் நாகா.

    இந்தப் புதிய தொடர்,​​ ஏப்ரல் மூன்றாம் வாரம் முதல் பாலிமர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

    http://dinamani.com/edition/story.as...41&SEO=&Title=

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •