நவரச திலகம் என்ற பட்டம் நடிகர்திலகம் சிவாஜி கணேசனுக்கு ,நவராத்திரி படம் வந்த போது ,ஒரு பிரபல அரசியல் தலைவரால் வழங்க பட்டது.முத்துராமனுக்கு அந்த பட்டம் ,அவரது குடும்ப நண்பரால் பிரஸ்தாபிக்க பட்ட போது ஒருவர் இதை சுட்டி காட்ட ,முத்துராமன் ,நடிகர்திலகத்துடன் கலந்து பேசியுள்ளார்.உங்களுக்கு தந்த பட்டமாச்சே என்று.நடிகர்த்திலகமோ,சிரித்து கொண்டே,ஆமா,நாளுக்கு ஒரு பட்டம் கொடுப்பாங்க,நாமெல்லாம் அதை உபயோக படுத்தவே இல்லையே,நீ போட்டுக்கப்பா என்றதும் ,முத்துராமன் அதை போட்டு கொண்டதாக கேள்வி.

ஆனால் ,அவன்தான் மனிதனுக்கு பிறகு நன்றி கேட்டு போனார் முத்துராமன்.பிறகு தனக்கு கே.ஆர்.விஜயா தயவில் கிடைத்த புண்ணியத்தை 1976 இல் இழந்து, மார்கெட் இல்லாமல் தவித்தார்.