Page 375 of 400 FirstFirst ... 275325365373374375376377385 ... LastLast
Results 3,741 to 3,750 of 3992

Thread: Film / Documentary - Recently watched & worthy of some discussion

  1. #3741
    Senior Member Veteran Hubber
    Join Date
    Mar 2007
    Location
    Mocity
    Posts
    1,115
    Post Thanks / Like
    Quote Originally Posted by Dilbert View Post
    -deleted with warning-
    What the hell ??? Youtube itself has not restricted this video.. this is too much Mr. Sakthi Kapoor !!!
    My onions and Signature changes according to my desperate need to be in lime light as the BIG Brother :0 - just saying..

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #3742
    Senior Member Veteran Hubber
    Join Date
    Apr 2005
    Posts
    1,361
    Post Thanks / Like
    which video are you referring to?

  4. #3743
    Junior Member Senior Hubber Mr.GreyShirt's Avatar
    Join Date
    Oct 2011
    Location
    Ottawa, Canada
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by irir123 View Post
    Freaking hilarious!

    I can't stand Vijay TV comedy shows. They sometimes do this in the movies too. Whenever they tell a joke they put an annoying sound to indicate that's a joke and we must now laugh. It is the same with laugh tracks
    It is difficult to say what is impossible, for the dream of yesterday is the hope of today and the reality of tomorrow.
    - Robert H. Goddard

  5. #3744
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Gibraltar
    Posts
    0
    Post Thanks / Like
    Thani Oruvan _ Superb!!! Best Action film in recent times. No more can he be referred as 'Remake Raja'

  6. #3745
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    Quote Originally Posted by Movie Buff View Post
    Thani Oruvan _ Superb!!! Best Action film in recent times. No more can he be referred as 'Remake Raja'
    Good to hear...I expected other way & skipped advance booking...

  7. #3746
    Senior Member Senior Hubber GSV's Avatar
    Join Date
    May 2010
    Posts
    239
    Post Thanks / Like
    Happy for raja..
    Sachin...

  8. Likes gane14 liked this post
  9. #3747
    Senior Member Diamond Hubber VinodKumar's's Avatar
    Join Date
    Jun 2009
    Posts
    2,797
    Post Thanks / Like
    Happy for Raja and Ravi .. will be watching it soon in theatre ...

  10. Likes gane14 liked this post
  11. #3748
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    முதல் பார்வை: தனி ஒருவன் - விறுவிறுப்பு விருந்து! - hindu

    அண்ணன் 'ஜெயம்' ராஜா (இப்போது மோகன் ராஜா) இயக்கத்தில் மீண்டும் இணைந்திருக்கிறார் ஜெயம் ரவி. ஆனால், இது வேற மாதிரி. தொடர்ந்து ரீமேக் படங்களாகவே அளித்து வந்த இந்த சகோதரக் கூட்டணி இப்போது முதல் முறையாக அசல் சினிமாவில் கரம் கோத்துள்ளது.
    இந்த அசல் விஷயம் மட்டுமின்றி, கடல் படத்துக்குப் பிறகான அரவிந்த் சுவாமியின் மறு மறுவருகையும் எதிர்பார்ப்பை சற்றே எகிறவைத்தது.
    ஆனால், நம் எதிர்பார்ப்பையும் தாண்டி, நமக்கு சிறப்பு விருந்து அளிக்கும் 'தனி ஒருவன்', தமிழ் சினிமாவில் தனது அழுத்தமான கால்களைப் பதித்துள்ளான்.
    அரவிந்த் சுவாமிக்கு தன் தந்தைக்காக கொலைப்பழி ஏற்கும் சிறுவனாக ப்ளாஷ்பேக்கில் அறிமுகம். சிறார் சீர்திருத்தப் பள்ளியில் இருந்து திரும்பும் அவர், 'கடலை'க் கடந்து அதிரடி கெட்டப்பில் வருகிறார். இம்முறை எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிடுகிறார்.

    'பேராண்மை'யில் போராடிய ஜெயம் ரவிக்கு மீண்டும் செம தீனி கிடைத்துள்ளது. போலீஸ் ஆஃபிஸராக அவர் மக்களுக்காக தனி ஒருவனாகவே சாகசங்கள் நிகழ்த்துகிறார். கதைப்படி தீய சக்திகளுக்கு எதிராக மட்டுமல்ல, படத்தையும் ரசிகர்களிடம் விறுவிறுப்பு குறையாமல் கொண்டுவந்து சேர்த்துவிட்டதில் ரவிக்கு ஜெயம்!

    அரவிந்த் சுவாமியின் அத்தனை வியூகங்களையும் முறியடித்து நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுபவர்தான் அதிரடி நாயகன் ஜெயம் ரவி. ஆனால், படம் முழுக்க வந்து நம்மை ஆக்கிரமிப்பது அரவிந்த் சுவாமியே!
    இடைவேளைக்கு சிறிது நேரத்துக்க்கு முன்பான அரவிந்த் சுவாமியின் என்ட்ரி... கடைசி ப்ரேம் வரைக்கும் அந்த கேரக்டருக்கான ஜஸ்டிஃபிகேஷன்... தமிழ் சினிமாவில் சமீபகாலத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒப்பிடத்தகுந்த ஸ்ட்ராங்கான வில்லன் சித்தரிப்பும் கனக்கச்சிதமான வெளிப்பாடும் பார்க்கவில்லையென்றே சொல்லலாம். அல்லது அரிதாகத்தான் பார்த்திருக்கிறோம்.

    நயன்தாரா வெறும் தமிழ் சினிமாவுக்கு ஊறுகாய் ஹீரோயினாக இல்லை என்பதை இப்படத்தில் மீண்டும் நிரூபித்துவிட்டார். வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தன் சகல பிரதாபங்களையும் முன்வைக்கும் தம்பி ராமையாவின் நகைச்சுவை படத்தின் தடத்தை உறுத்தாதவண்ணம் நம்மை ஈர்க்கிறது. மற்றபடி நாசர், ஜெயம் ரவி நண்பர்களாக வரும் நான்கு பேர், வில்லனாக வரும் என்று எல்லாருமே பக்காவாக பொருந்துகிறார்கள்.
    நல்ல தொழில்நுட்ப ரீதியான ராம்ஜியின் ஒளிப்பதிவு, ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை, கோபி கிருஷ்ணா எடிட்டிங் அனைத்துமே படத்தின் வேகத்தோடு பாய்ந்து வருகிறது.

    ஓர் அதிரடி த்ரில்லர் படம் என்றால் கண்டிப்பாக போர் அடிக்காத பாய்ச்சல் இருக்கவேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் வைத்து படத்தில் அங்கங்கே திரைக்கதையில் இயக்குநரின் விளையாட்டு பளிச்.
    தனி ஒருவன் அப்படி சாதாரணமாக வேகமான படம் என்று இல்லாமல், படத்தில் நிறைய இடங்களில் இயக்குநர் தன்னோட புத்திசாலித்தனத்தையும் காண்பித்துள்ளார். அதற்கான பிரதிபலிப்பு அரங்கு முழுவதும் கைத்தட்டலில் தெரிகிறது.

    மற்றபடி, போரடிக்காத ஆக்*ஷன் படத்தில் சின்னச் சின்ன சறுக்கல்கள்... முதல்பாதியில் அவ்வப்போது ஜெயம் ரவி கருத்து கந்தசாமியாக மாறிவிடுவதுதான். அந்த ஒரே ஒரு டூயட் கூட படத்தின் வேகத்தை குறைத்துவிடுகிறதோ என்றும் தோன்றுகிறது.

    கத்தி, துப்பாக்கி, ரமணா, ஏழாம் அறிவு, பேராண்மை போன்ற படங்களின் நல்ல அம்சங்கள் எல்லாம் கலந்து ஒரு உல்டாவாக இல்லாமல் தரமான கலவையாக மிளிர்கிறான் தனி ஒருவன்.

    ஜெயம் ராஜா எனும் இயக்குநர் எம்.ராஜா, கடந்த 4 வருடங்களாக இந்த ஸ்க்ரிப்டைத் தான் எழுதிக் கொண்டிருந்தாரா? இவ்வளவு திறமையான திரைக்கதையாசிரியர் எதற்கு இவ்வளவு நாள் இந்த மாதிரி ஒரு சொந்தக் கதையை எடுக்காமல், மொழிமாற்றுப் படமாகவே இயக்கிக் கொண்டிருந்தார் என்று நிறைய கேள்விகள் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

    அந்த எல்லா கேள்விகளுமே படத்துக்கு வரும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்தான் நல்ல பதிலாக இருக்கும். மொத்தத்தில், விறுவிறுப்பு சினிமா விரும்பிகள் தவறவிடக்கூடாத படம் இது.

  12. #3749
    Senior Member Veteran Hubber
    Join Date
    Jul 2008
    Location
    Chennai
    Posts
    184
    Post Thanks / Like
    தனிஒருவன் படம் எப்படி? - VIKATAN

    அண்ணன் உருவாக்கிய காவலதிகாரி வேடத்தில் பசை போட்டு தன்னை ஒட்டிக்கொண்டுவிட்டார் ஜெயம்ரவி. கதாநாயகன் என்பதால் ஒரு வரையறைக்குள் செயல்பட்டாக வேண்டியிருந்தாலும் பாத்திரப்படைப்பில் மட்டுமின்றி நடிப்பிலும் பலமாக எதிர்நிற்கும் அரவிந்த்சாமியைச் சரியாக எதிர்கொண்டிருக்கிறார். நாயகி நயன்தாராவின் பாத்திரமும் அரவிந்த்சாமியின் பாத்திரத்துக்குக் கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. கொஞ்சம் பிசகியிருந்தாலும் இருவர் முன்னாலும் ரவி வீழ்ந்திருப்பார். ஆனால் அவர்களுக்கு ஈடுகொடுத்து தன்னைக் காத்துக்கொண்டிருக்கிறார்.
    பதினைந்துவயதிலேயே சமயோசிதமாகச் செயல்பட்டு தான் சிறைக்குப் போனாலும் தன்னுடைய அப்பாவை சட்டமன்றஉறுப்பினராக்கிவிடும் மூளைக்காரரான அரவிந்த்சாமி வளர்ந்து பெரியஆளாகும்போது, அறிவியலாளராகவும் வியாபாரப்புள்ளியாகவும் மாநிலஆட்சியையே தன் சுட்டுவிரலுக்குள் வைத்திருக்கும் சகலசக்தியும் பொருந்தியவராக இருக்கிறார். சித்தார்த் என்கிற அந்த வேடத்துக்கு நூறுசதம் பொருத்தமாக இருக்கிறார் அரவிந்த்சாமி. மிகஅலட்சியமாகச் சிக்கல்களை எதிர்கொள்வதும் மிகப்பெரிய பாதகத்தையும் இதழ்க்கோடியில் புன்னகையுடன் மிகஎளிதாகச் செய்வதும் என்று எல்லாக்காட்சிகளிலும் வரவேற்புப் பெறுகிறார். அதுவும் கடைசிக்காட்சி சிறப்பு.

    படத்தின் கதையில் கறிவேப்பிலை அளவுக்கே பயன்பட்டாலும் நயன்தாரா தன்னுடைய உடல்மொழியாலும் அவருக்குக் கொடுக்கப்பட்ட வசனங்களாலும் ஈர்த்துவிடுகிறார். ஜெயம்ரவியை அவர் விரட்டி விரட்டிக் காதலிக்கிறார் என்றாலும் அதற்குள்ளும் ஒரு கம்பீரம் இருக்கிறது. அவனை எதிர்க்கிறேன்னு உன் நிதானத்தை இழந்துட்டியே என்று ரவியிடம் சொல்லுமிடத்திலும் எதுவாக இருந்தாலும் கட்டிப்பிடித்துக்கொண்டே பேசவும் என்று எழுதிக்காட்டுவதும் ரசிக்கத்தக்க காட்சிகள். நல்லவெளிச்சத்தில் நயன்தாராவைப் பளிச்சென்று காட்டாமல் பாடல்காட்சி உட்பட அவர் வருகிற பெரும்பாலான காட்சிகளில் அவர் முகத்தில் நிழல்படிகிற மாதிரியே படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கு ஒரு விசாரணைக்கமிஷன் வைக்கவேண்டும். எல்லா நேரங்களிலும் ரவியுடனிருக்கும் நயன்தாரா உச்சக்கட்டக்காட்சிகளில் ஓரிடத்திலும் தென்படவில்லை, அவற்றை எடுக்கும்போது அவருடைய கால்ஷீட் கிடைக்கவில்லையா?

    அரவிந்த்சாமியின் அப்பாவாக நடித்திருக்கும் தம்பிராமய்யா போல் ஒரு அப்பாவியை இந்த உலகம் முழுவதும் தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாது. அவர் வருகிற காட்சிகள் சிரிப்பாக இருந்தாலும் அவருடைய வேடம் நம்பும்படியாக இல்லை.



    ஜெயம்ரவியின் நண்பர்கள் அரவிந்தசாமியின் பினாமிகள் என்று படத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். அவரவர்க்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் சரியாகச் செய்துவிட்டார்கள்.

    ஹிப்ஹாப்தமிழாவின் இசையில் பாடல்கள் கேட்கிற மாதிரி இருக்கின்றன. பின்னணிஇசையிலும் அவர் குறைவைக்கவில்லை.

    தன்னைவிட ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்த எதிரியான அரவிந்த்சாமியை நாயகன் ஜெயம்ரவி எப்படி எதிர்கொள்கிறார்? என்கிற பழைய கதையை திரைக்கதையில் சில யுக்திகளைச் சேர்த்து புதிதாக்கிக்கொடுத்திருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. ஒவ்வொரு சின்ன குற்றத்துக்கும் பின்னால் பெரியகுற்றங்கள் இருக்கின்றன என்று சொல்லமுடியாவிட்டாலும் நடக்கிற பெரியகுற்றங்களுக்கு முன்பாக சின்னக்குற்றங்கள் இருக்கின்றன என்று சொல்வதோடு அதற்குச் சான்றாக, இப்போது நாட்டில் நடக்கிற நிகழ்வுகளையே காட்டியிருக்கிறார் இயக்குநர்.

    எதிரியைத் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் பற்றி ஜெயம்ரவி விளக்குமிடங்கள் சலிப்பூட்டுபவை. அவர் முன்னால் வருகிறவர்களை எதிர்கொண்டாலே அந்தஇடத்தில்தான் போய்நிற்பார்.

    நாயகனின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் புதியவழிமுறை அது புதிதாக இருப்பதால் ரசிக்கமுடிகிறது. நுணுகிப்பார்த்தால் அதிலும் குறைகள் உண்டு. ஆனாலும் அந்த உண்மையைத் தெரிந்துகொண்டவுடன் ஜெயம்ரவி ஒரேநேரத்தில் இரண்டுபெண்களின் உயிர்களைக் காப்பாற்றுவது வரவேற்புக்குரிய காட்சியாக இருக்கும்.

    முதலமைச்சர், அமைச்சர் என்று குறிப்பிட்டுக்காட்டிவிட்டு அவர்களை எதிர்க்கும் காவல்அதிகாரிக்கு உயர்மட்டத்திலிருந்து எவ்வித அழுத்தங்களும் இல்லாமல் இருக்கிறது, உலகஅளவில் கவனம் பெற்ற ஒரு மருந்துநிறுவனத்தின் தலைவர் மரணம் தொடர்பாக எவ்வித விசாரணையும் இல்லை என்பது உட்பட திரைக்கதையில் உள்ள பலவீனங்களை விறுவிறுப்பைக் கொண்டு மறைத்திருக்கிறார்கள்.

    சர்க்கரைநோய்க்கு மருந்து குறைந்தவிலையில் மருந்து போன்ற மக்களுக்குத் தேவையானவற்றை வைத்து தனிஒருவனைப் பொதுமனிதனாக்கியிருக்கிறார் இயக்குநர்.

  13. #3750
    Senior Member Diamond Hubber PARAMASHIVAN's Avatar
    Join Date
    May 2009
    Location
    Kailash
    Posts
    5,541
    Post Thanks / Like
    Quote Originally Posted by Movie Buff View Post
    Thani Oruvan _ Superb!!! Best Action film in recent times. No more can he be referred as 'Remake Raja'
    Oh really, thought it would be mokkai , will be watching it then
    Om Namaste astu Bhagavan Vishveshvaraya Mahadevaya Triambakaya Tripurantakaya Trikalagni kalaya kalagnirudraya Neelakanthaya Mrutyunjayaya Sarveshvaraya Sadashivaya Shriman Mahadevaya Namah Om Namah Shivaye Om Om Namah Shivaye Om Om Namah Shivaye

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •