Page 4 of 15 FirstFirst ... 2345614 ... LastLast
Results 31 to 40 of 143

Thread: Images from old tamil films

  1. #31
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள ராகவேந்தர் சார் மற்றும் வாசுதேவன் சார்,

    உங்கள் இருவரின் கைவண்ணத்தில், இந்த திரியில் இடம்பெற்றிருக்கும் அபூர்வ ஸ்டில்கள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளது. இவற்றில் பல நிஜமாகவே காணக்கிடைக்காதவை.

    'அவனா இவன்' திரைப்படம் திகில் படம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எஸ்.பாலச்சந்தரின் படங்களில் 'அந்த நாள்' தவிர வேறெந்தப்படங்களும் மறு வெளியீட்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை.

    மக்கள் கலைஞரின் 'கண்ணே கண்டதெல்லாம் காட்சியா' பாடல் ஸ்டில்லும், காஞ்சனாவின் 'ஓகோ... எத்தனை அழகு' பாடல் ஸ்டில்லும் மிகவும் அருமை.

    திரியை அண்ணியின் ஸ்டில்களோடு துவங்கியமைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #32
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கார்த்திக்,
    தங்களுடைய பதிவுகளைப் படித்தும் பார்த்தும் பல நாட்களாகி விட்டன. இதற்கு ஒரு வாய்ப்புத் தந்த இத்திரிக்கு நன்றி கூறினால், அது எனக்கு நானே கூறிக் கொள்வது போலாகும்..எனவே தங்களுக்கு எனது உளமார்ந்த நன்றி.

    நவீன கால கட்டத்தில் நமக்கு பல அரிய பழைய படங்கள் நெடுந்தகடு வடிவில் பல்வேறு நிறுவனத்தினரால் வெளியிடப் பட்டுள்ளன. அதில் எஸ் .பாலச்சந்தரின் நடு இரவில், அவனா இவன் போன்றவையும் அடங்கும். அவ்வாறு பல்வேறு நிறுவனத்தினரால் வெளியிடப் பட்ட ஒரிஜினல் நெடுந்தகடுகளின் நிழற்படங்களையும் இங்கே நாம் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அந்த நெடுந்தகட்டினைப் பற்றிய விமர்சனமோ பரிந்துரையோ நாம் இங்கு செய்தலாகாது. தங்கள் அருகாமையில் இருக்கக் கூடிய கடைகளில் அவற்றைப் பற்றிய விவரங்களைத் தந்து பெற நீங்கள் முயற்சிக்கலாம். அதற்கு இந்த நிழற்படங்கள் உதவும். தங்களுடைய மனம் மகிழும் வகையில் கீழ்க்காணும் நிழற்படங்கள் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.





    Last edited by RAGHAVENDRA; 20th July 2012 at 04:36 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #33
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
















    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #34
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள ராகவேந்தர் சார்,

    விவரம் கேட்டதும் அள்ளி வழங்கியமைக்கு நன்றி.

    நீங்கள் தந்திருக்கும் பல படங்களின் பெயர்கள் என்னை கடந்த காலத்துக்கு இட்டுச்சென்றன. குறிப்பாக ஆனந்தன் (with Rajashree) நடித்த 'செங்கமலத்தீவு' என்னுடைய மிகச்சிறிய வயதில் பார்த்தது. மீண்டும் ஒருமுறை எதிர்பாராத விதமாக பொருட்காட்சியில் பார்க்க நேர்ந்தது.

    நேற்றிரவு முரசு தொலைக்காட்சியில் 'அனுபவம் புதுமை' படத்தில் இடம்பெற்ற 'கனவில் நடந்ததோர் கல்யாண ஊர்வலம்' என்ற பாடலைக்கேட்டு அசந்து போனேன். மெல்லிசை மன்னர் அப்போதே என்னவெல்லாம் புதுமைகள் செய்து அசத்தியிருக்கிறார் என்று வியந்தேன். அந்தப்படம் ஓடாததால் அருமையான இப்பாடல் வெளிச்சத்துக்கு வராமல் போய்விட்டது. இதே பாடலை நடிகர்திலகம் படத்துக்கோ, அல்லது எம்.ஜி.ஆர். படத்துக்கோ அல்லது பாலச்சந்தர் படத்துக்கோ போட்டிருந்தாரானால் நிச்சயம் பயங்கரமாக வெற்றியடைந்திருக்கும்.

    இதுபோல மறைந்து கிடக்கும் மாணிக்கங்கள் ஏராளமாக உள்ளன.

  6. #35
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கார்த்திக்,
    அனுபவம் புதுமை படத்தைப் பற்றியும் அதனுடைய அறிமுக இயக்குநர் திரு சி.வி. ராஜேந்திரன் அவர்களைப் பற்றியும் யாருக்குத் தெரிந்ததோ இல்லையோ, நடிகர் திலகம் அப்படத்தைப் பார்த்து பிரமித்து, சி.வி.ராஜேந்திரனைப் பாராட்டியதோடு, கலாட்டா கல்யாணம் படத்துக்கு யாரைப் போடலாம் என்ற விவாதம் வந்த போது, ராஜேந்திரனைப் போடலாம் என்று ஆலோசனை கூறிது திறமை எங்கிருந்தாலும் பாராட்டுவதோடு நில்லாமல் அவர்களுக்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதில் தனக்கு ஈடு இல்லை என நிரூபித்ததுள்ளார் என்பது சிறப்பு.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #36
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு கார்த்திக் சார்

    வருக! வருக! தங்கள் வருகையும், ரசனையும் எங்களை மிக்க மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. தங்களின் அன்புப் பாராட்டுதல்களுக்கு நன்றி! தங்களைப் போன்றவர்களின் ஆதரவினால் இது போன்ற வித்தியாச முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளலாம்.

    நீங்கள் குறிப்பிட்டது போல 'அனுபவம் புதுமை' படத்தில் வரும் 'கனவில் நடந்ததோர் கல்யாண ஊர்வலம்' பாடல் என்னைக் கட்டிப் போட்ட பாடல். அந்தப் பாடலை தினம் ஒரு முறையாவது கேட்காமல் என்னால் இருக்க முடியாது.வெகு நேர்த்தியான எம்.எஸ்.வி யின் வித விதமான இசைக்கருவிகளின் சங்கமத்தில் எக்காலமும் பரிமளிக்கும் பாடல். நீங்கள் சொன்னதற்கப்புறம் நாம் அனைவரும் கேட்டு மகிழாமல் இருந்தால் எப்படி? இப்போதே கேட்டு சாரி பார்த்தும் மகிழலாம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #37
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    ஆஹா!ஆஹா!ஆஹா! அற்புதம். அரிய படங்களின் டிவிடி முகப்புக்களை தந்து அசத்தியுள்ளீர்களே. ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க நினைவுகள் எங்கோ பறக்கின்றன. குறிப்பாக 'ஜிம்போ' இப்படத்தின் information க்காகவே தங்களுக்கு ஒரு பார்ட்டியே வைத்து விடலாம். நெடுநாள் கனவு இப்படம் எனக்கு. அதில் வரும் சுசீலா அவர்களின் மிக மிக வித்தியாசமான பாடலான 'என் நெஞ்சு உன்னை அகலாது... அன்... பை அசைக்க முடியாது..." என்ற பாடல் நம்மை சொர்க்கபுரிக்கே அழைத்து சென்று விடும். வித்தியாசமான இசையில் அருமையான வரிகள். இந்த அற்புத பாடலின் லிங்க் இதோ..

    http://www.paadal.com/tamilsongs/jim...galathu-song/1
    Last edited by vasudevan31355; 20th July 2012 at 06:16 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #38
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    some more tamil movies dvd covers



















    bonus stil

    Last edited by vasudevan31355; 20th July 2012 at 06:35 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #39
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நான் (1967)

















    நடிகர் திலகமே தெய்வம்

  11. #40
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    திரையரங்குகளில் துப்பாக்கியோடு வந்து மக்களை குருவி சுடுவது போல் சுடும் இந்த நாளில் அந்த நாளைய ரிவால்வரை நினைவூட்டும் வாசுதேவன் சார், உங்களுடைய பதிவு சூப்பர்...

    மேலும் சில நிழற்படங்கள்

    நடிகர் திலகத்துடன் ராதிகா உரையாடும் காட்சி



    நடிகர் திலகத்துடன் சுஹாசினி உரையாடும் காட்சி



    சந்திரோதயம் படத்திலிருந்து ...



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Page 4 of 15 FirstFirst ... 2345614 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •