Results 1 to 10 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    பேஹாக்.

    தாயின் கையை பிடித்து புல்தரையில் நடக்கும் சுகத்தை அனுபவித்ததுண்டா?காதலியின் கரம் கோர்த்து கடற்கரையில் நடந்த த்ரில் எத்தனை பேருக்கு வைத்திருக்கும்? அப்படியே ஒரு மெல்லிய உருளு தளத்தில் சுகமாய் உருண்டு எழுந்த செல்ல அனுபவ நுகர்ச்சி வேண்டுமா?நல்லாவே அனுபவிக்க வேண்டிய மென்னடை சுக ராகம்.

    தமிழில் அத்தனை பாடகர்களும் தொண்டை புடைக்க கத்தி ,சங்கீதத்தை MKT பாணியில் ஓலமாக்கி குதறி கொண்டிருந்த போது (பாவம் bass ,barritone பாடகர் TMS ஐயே உச்ச ஸ்தாயி ஓலத்தில் படுத்தி எடுத்தனர் இசையமைப்பாளர்கள்)அப்போது மென்மை இசையை இசையாக்கி நமக்கு ஆறுதல் கொடுத்தது ஏ.எம்.ராஜா வும்,ஏ.எல்.ராகவனும். ஆனால் ராஜா பல் கடித்து உதடு பிரிக்காமலும்,ராகவன் ஏனோ கொஞ்சம் இனிமை குறைவாகவும் இருந்ததால் கிஷோர் ,ரபி என்று தஞ்சமடைந்த இசை வெறியர்களை தமிழை நோக்கி படையெடுக்க வைத்த வசந்த பாடல்.பிறந்த நாள் விழா கண்ட கண்ணதாசன்-எம்.எஸ்.வீ, டி.கே.ஆர் இணைவில் ,ஒரு velvet குரல் ,மென்மையான ஆண்மை குறையாத ஒரு அதிசய பாடகரின் வாழ்விலும் வசந்தம் தந்த அந்த அதிசய பாடல் "காலங்களில் அவள் வசந்தம்."

    அந்த படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ரகம் . திரைக்கதை,நடிப்பு அத்தனையிலும் விந்தை புரிந்த அந்த படத்தில் சத்தமில்லாமல் முதலிடத்தை ஒரே பாடலில் கவர்ந்தார் ஒரு அதிசய பாடலாசிரியர்.(கண்ணதாசனை இந்த படத்தில் ஓரம் கட்டிய அவர்,சித்திர பூவிழி வாசலில் வாலியை ஓரம் கட்டினார்.) மாயவநாதன்.தெய்வ பாடகி அம்மா சுசிலாவின் மெலடி,பாடலின் அழகு, சாவித்திரியின் பாந்தம் எல்லாம் சேர்ந்து இன்றும் நம்மை சொக்க வைக்கும் ராகம்" தண்ணிலவு தேனிறைக்க".

    erotic என்ற ஒரு ரக ரசனையே தமிழில் கொண்டு வந்த புண்ணியம் செய்தவர் நடிகர்திலகம். தன மனம் கவர்ந்த எழில் நாயகி தேவிகாவுடன் நம் மனதை துடிக்க வைத்த (அமைதியின் நிசப்தமும்,சர வெடியின் படபடப்பும் இணைய முடியுமா?முடியுமே)என்று காட்டிய திரை இசை திலகத்தின் பாடலில் உச்ச பட்ச chemistry காட்டிய டி.எம்.எஸ் -சுசிலா இணைவில், பிறந்த நாள் நாயகன் கண்ணதாசனின் சிரஞ்சீவி பாடல் "மடி மீது தலை வைத்து".

    தான் நேசித்த பெண்ணை அடைய நினைத்த பெண் பித்தன் ,தன் அனைத்து தீ வழிகளையும் நேசத்திற்கு ஈடாக அடகு வைத்து, வழி தவறேயாயினும் அடைந்த பெண்ணை ,இனிய கற்பனையால் இணைய விழையும் குதூகல கற்பனை முதலிரவு கானம். வேட்டி சட்டையில் ஒரு ஆண் மகன் எவ்வளவு அழகாக திகழ முடியும் என்பதை திராவிட மன்மதன் உலகுக்கு உணர்த்திய தேவ கானம்.திரை இசை திலகத்தின் "கண்ணெதிரே தோன்றினாள் "

    இந்த ராகத்தின் மற்ற தேர்வுகள்.

    பாவாடை தாவணியில் - நிச்சய தாம்பூலம்.

    ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்- தெய்வத் தாய்.

    அவள் ஒரு நவரச நாடகம்- உலகம் சுற்றும் வாலிபன்.

    ஆடி வெள்ளி தேடி உன்னை - மூன்று முடிச்சு.
    Last edited by Gopal.s; 26th June 2014 at 08:29 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •