Results 1 to 10 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவரின் படங்கள் என்றுமே திரையீட திரையீட வசூலில் குறைவில்லாத அட்சய பாத்திரம்



    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    எங்கள் இதய தெய்வம் எம். ஜி. ஆர். அவர்கள் நடித்த காவியமாம் " எங்கள் வீட்டு பிள்ளை "


    ஏற்படுத்திய வரலாறு காணாத சாதனை காணீர் :

    சென்னை நகரையே வலம் வந்து சுமார் மூன்று மாத காலம் ஓடியது.


    06-08-1982 முதல் சென்னை சரவணா மற்றும் குரோம்பேட்டை வெற்றி ஆகிய அரங்குகளில் தினசரி 4 காட்சிகளுடன் ஒரே நேரத்தில் வெளியாகி, சரவணா அரங்கில் முதல் 28 காட்சிகளும் அரங்கு நிறைந்தது.

    13-08-82 முதல் சென்னை செலக்ட் அரங்கில் திரையிடப்பட்டது. சரவணா அரங்கில் 2வது வெற்றிகரமான வாரம் தொடர்ந்தது.

    20-08-82 செலக்ட் அரங்கிலும் முதல் 28 காட்சிகள் அரங்கு நிறைந்தது. சென்னை செலக்ட் அரங்கில் 2வது வெற்றிகரமான வாரம் தொடர்ந்தது.

    27-08-82 முதல் சென்னை சித்ரா (தினசரி 4 காட்சிகள் ) மற்றும் ஸ்ரீனிவாசா (தினசரி 3 காட்சிகள் ) அரங்குகளில் திரையிடப்பட்டது. இரண்டு அரங்கிலும் முதல் வாரத்தில் அனைத்து காட்சிகளும் (முறையே 28 மற்றும் 21 காட்சிகள் ) அரங்கு நிறைந்தது.

    03-09-82 அன்று இரு அரங்குகளிலும் ( சித்ரா மற்றும் ஸ்ரீனிவாசா அரங்குகளில் ) இரண்டாவது வாரம், அதே 4 மற்றும் 3 காட்சிகளுடன் வெற்றிகரமாக தொடர்ந்தது.

    10-09-82 அன்று பழனியப்பா அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    ஒரு வார குறுகிய இடைவெளியில், (புதிய பட வரவின் காரணமாக இருக்கும் என்று கருதுகிறேன்) மீண்டும்

    24-09-82 முதல் உமா அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    01-10-82 முதல் தங்கம் அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    08-10-82 முதல் வீனஸ் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    ஒரு வார குறுகிய இடைவெளியில், மீண்டும்

    22-10-82 முதல் பிரைட்டன் அரங்கில், தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    29-10-82 முதல் ஸ்ரீ பத்மநாபா அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    05-11-82 முதல் காமதேனு அரங்கில் தினசரி 4 காட்சிகளுடன் திரையிடப்பட்டு, அதில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்தது. முன்னரே அரங்க நிர்வாகத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தினால், காமதேனு அரங்கில் 26 காட்சிகள் அரங்கு நிறைந்தும், 2வது வாரம் தொடர முடியாமல் போனது துரதிருஷ்டமே.

    12-11-82 முதல் சன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    இந்த சாதனை போதாதென்று, மீண்டும் 3 மாத இடைவெளியில், 1983ம் வருடம், திரையிடப்பட்ட போது, ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது எங்கள் தங்கத்தின் "எங்க வீட்டு பிள்ளை " காவியம்

    04-02-1983 முதல் சென்னை பிரபாத் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    ஒரு வார குறுகிய இடைவெளியில்
    18-02-83 முதல் சென்னை சரஸ்வதி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது

    சற்று இடைவெளியில் ,

    08-04-83 சென்னை வெலிங்டன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    15-04-83 முதல் சென்னை சயானி அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    29-04-83 முதல் ஸ்ரீ முருகன் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.

    12-08-83 முதல் ஜெயராஜ் அரங்கில் தினசரி 3 காட்சிகளுடன் திரையிடப்பட்டது.


    இது போன்ற சாதனைகளை நிகழ்த்த தமிழ் திரையுலகில் மக்கள் திலகத்தால் மட்டும்தான் முடியும் என்ற காரணத்தினால் அவர் " புரட்சி நடிகர் " என்ற மற்றொரு பட்டப்பெயருடன் அழைக்கப்பட்டு பின்னர் அது அரசியல் சாதனையால் "புரட்சித் தலைவர் " என்று மாறியது.

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்


    குறிப்பு :

    அடுத்து இதே போல் சாதனகைளை ஏற்படுத்திய .... உலகம் சுற்றும் வாலிபன், அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், வேட்டைக்காரன் போன்ற வெற்றிப்படத் தகவல்கள் இடம் பெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்
    .

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •