அன்னை ராஜாமணி அம்மையார் நினைவுநாளை யொட்டி நம் அன்புச் சகோதரர் பதிவுத் திலகம் நெய்வேலியார் அவர்களின் நெஞ்சுருக்கும் பதிவு ... மீள் பதிவு..

[quote]

அன்னை ராஜாமணி அம்மையார் அவர்களது 39வது ஆண்டு நினைவு தினம்.

தவப்புதல்வனைப் பெற்று கலை உலகுக்குத் தந்த அன்புத் தெய்வம், லட்சக் கணக்கான நடிகர் திலகத்தின் ரசிகப் பிள்ளைகளின் பேரன்புத் தாய், தன் கணவர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றதும் நிராதரவாக ஏழ்மையில் உழன்று, சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் தன் அன்புப் பிள்ளைகளை ஆளாக்கிய அற்புத அன்னை, தெய்வ மகனை ஈன்றெடுத்து, நமக்களித்து, இந்த உலகையே உவகையுறச் செய்த ஈடு இணையில்லா மாணிக்கம், "அன்னை இல்ல"த்தின் இல்லற ஜோதி "அன்னை ராஜாமணி அம்மையார்" அவர்களின் 39வது ஆண்டு நினைவு தினம். அம்மையார் அவர்களுக்கு நமது ஆத்மார்த்தமான இதய அஞ்சலி.

அம்மையார் அவர்களின் நினைவாக "கிரஹப் பிரவேசம்" திரைக்காவியத்தில் இருந்து ஒரு சிறு ஒலி-ஒளிக் காட்சியின் மூலமாக நம் இதய அஞ்சலி.

இந்தத் திரைக்காவியத்தில் நம் நடிகர் திலகம் அவர்கள் தன் அன்புத் தாயார் அவர்களின் திருவுருவப் படத்தின் முன் நின்று அவர்களிடம் பேசுவதாக வரும் ஒரு உணர்ச்சிமயமான அற்புதக் காட்சி. தன் தாயார் அவர்களின் மேல் உள்ள பாசத்தையும், வாஞ்சையையும் நடிகர் திலகம் வெளிப்படுத்துவதைக் காணும்போது கல்நெஞ்சமும் கரைந்துருகுமே....