-
9th February 2015, 11:29 AM
#11
Senior Member
Seasoned Hubber
திரைப்படம்: சாந்தி நிலையம்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விச்வநாதன்
பாடகர்கள்: பாலு & பி. சுசீலா
நடிப்பு: ஜெமினி கணேஷ் & காஞ்சனா
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
பொன்னிறத்து மெல்லிடையில் பூவாட
பொட்டு வைத்த வண்ண முகம் நீராட
தாமரையாள் ஏன் சிரித்தாள்
தலைவனுக்கும் தூது விட்டாள்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
தலையை விரித்து தென்னை போராடுதோ
எதனை நினைத்து இளநீராடுதோ
கன்னி உன்னைக் கண்டதாலோ
தன்னை எண்ணிக் கொண்டதாலோ
இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ
இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ
கட்டிக்கொண்ட கள்வன் யாரோ
கள்வனுக்கும் என்ன பேரோ
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ண
மலையை தழுவிக் கொள்ளும் நீரோட்டமே
கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே
மஞ்சள் வெய்யில் நேரம் தானே
மஞ்சள் ஒன்று போடலாமே
தரையை தடவிச் செல்லும் காற்றோட்டமே
காலை நனைத்துச் செல்லும் ஆற்றோட்டமே
இன்னும் கொஞ்சம் நேரம் தானே
அந்திப் பட்டுப் பேசலாமே
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி...
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th February 2015 11:29 AM
# ADS
Circuit advertisement
Bookmarks