Results 1 to 10 of 4004

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part 20

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜி பாட்டு - 45
    ----------------------------------
    ( 24.06.2018-ல் எழுதியது)




    வார்த்தைகளுக்குள் வாழ்க்கையை சுருக்கிக் காட்டிய கவியரசர் அய்யா கண்ணதாசன்...

    மனித குலத்தின் நீண்ட நெடிய நினைவுகளை, சந்தோஷக் கனவுகளை தனது ஆர்மோனியப் பெட்டிக்குள் சுருட்டி மடித்து வைத்து விட்ட மெல்லிசை மன்னர்
    அய்யா எம்.எஸ்.வி...

    இணையற்ற இவ்விரு சாதனையாளர்களும் இணைந்தே
    பிறந்த நாள் காணும் இந்த இனிய
    தினம் இந்த அற்புதப் பாடலை
    நினைத்துக் கொள்ளச் சொல்கிறது.
    -----------

    எக்காலத்திலும் போற்றிக் கொண்டாடப்படும் இவ்விருவரின்
    இணைவில் வந்த ஏராளமான பாடல்களில் மிகப் பெரும்பாலானவை, அய்யா நடிகர் திலகத்தினுடையவை.

    தனது ஒப்புவமையில்லாத உயர்ந்த கலைத் திறமையையும்,
    கலையுலகின் வெற்றியையும் ஒன்றிணைத்த பெருமையோடு,
    இந்த இரண்டு சாதனையாளர்களின் மாசற்ற
    திறமைகளை அதிகமாக ஒன்றிணைத்த பெருமையும் அய்யா நடிகர் திலகத்தைச் சேர்கிறது.
    ----------

    ஒரு திரைப்படத்தின் நீளத்தில் கணிசமான பகுதியை பாடல்களால் அடைத்து நிரப்பும்
    சராசரி இசையமைப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக்
    கொள்ள விரும்பாமல், திரைப்படம் சொல்ல வரும் சேதியை தன் இசை மொழி கொண்டு சொல்ல முற்படும் இசை வித்தகராக அய்யா எம்.எஸ்.வி இருந்திருக்கிறார்.

    குறிப்பிட்ட படத்தின் குறிப்பிட்ட
    பாடல் காட்சிக்கு அப்போதைக்கு உகந்ததாய் சில வரிகள் எழுதி விட்டுப் போகிற பாடலாசிரியராய்
    இல்லாமல், ஆண்டாண்டு காலம்
    கடந்து போனாலும் மனிதர்களால்
    மறக்கவியலாத வாழ்வியல் தத்துவங்களை ஒரு சின்னஞ்சிறு பாட்டுக்குள் சுருக்கித் தருகிற
    சூரியக் கவிஞனாய் அய்யா கண்ணதாசன் இருந்திருக்கிறார்.

    இந்த இரண்டு அற்புதங்களை இணைக்கும் அற்புதமாக அய்யா
    நடிகர் திலகம் இருந்திருக்கிறார்.
    --------

    இந்தப் பாடல் எனக்குத் தரும் மகா வியப்புக்கு என் வயது.

    அழச் சொல்லும் வாழ்வின் சோகம். அந்த நேரத்தில் சிரிக்க வைத்து சோதிக்கும் விதியின் குரூரம்.

    " துன்பம் வரும் வேளையில் சிரிங்க.. என்று சொல்லி வச்சார் வள்ளுவரு.. சரிங்க!

    பாம்பு வந்து கடிக்கையில், பாழும்
    உடல் துடிக்கையில்.. யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு?"

    - வாழ்க்கை சவுக்காலடித்து
    உடம்பெல்லாம் ரணப்பட்டிருக்க,
    வள்ளுவப் புத்தகத்தால் விசிறும்
    காற்று ..புண்ணாற்றுமா? - எனும்
    கண்ணதாசக் கேள்விக்கு மறுப்பேதும் வரவில்லை.. இன்று
    வரை.

    " இங்கு நானிருக்கும் இருப்பு.. நாலு பேரு பொறுப்பு.. நல்லாத்தான் நான் சிரிச்சேன் சிரிப்பு!"- எனும் வரிகள்
    பாடப்படும் போது நாம் உணரும்
    ஒரு வித சலிப்புணர்வு... இந்தப்
    பாடலின் மெட்டிலேயே இருக்கும்.
    ரணத்தை ராகமாக்கிய எம்.எஸ்.வி எனும் இசைஞனைப்
    போல் வேறோருவர் வரவில்லை.. இன்று வரை.

    ஞானக் கலைஞனே..! நடிகர் திலகமே.. ! இந்தப் பாடலைப் பார்த்த பின் " உன்னை நினைச்சு..பாட்டுப் படிச்ச" வர்கள்..
    உன் வழியில் வர முடிந்தது. உன்னைப் போல் வர முடியவில்லை.. இன்று வரை!
    ------------

    நம் ரசனைக் கதவு திறக்கும்.

    இந்த சின்னக் கிளி பறக்கும்.

    சிந்தை நிறைந்த இந்த மாமேதையரை வணங்கிச் சிறக்கும்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •