Results 1 to 9 of 9

Thread: Nadhaswaram - Thirumurugan's new serial

Threaded View

  1. #1
    Moderator Diamond Hubber aanaa's Avatar
    Join Date
    Mar 2005
    Location
    இந்திரலோகம்
    Posts
    5,808
    Post Thanks / Like

    Nadhaswaram - Thirumurugan's new serial


    மெட்டிஒலி என்ற தொடர் மூலம் தேர்ந்த இயக்குனராக தன்னை அடையாளம் காட்டியவர் திருமுருகன். குடும்பஉறவுகள் பற்றிய இவரது கதைப்பின்னணி, தொடரோடு நேயர்களை இணைத்தது. இந்த தொடரில் கிடைத்த புகழைத் தொடர்ந்து பெரிய திரைக்கும் போனார், திருமுருகன். இப்போது சின்னத்திரையில் தயாரிப்பாளர் என்ற புதிய அடைமொழியையும் சேர்த்துக்கொண்டு களம் இறங்குகிறார்.


    இவர் இயக்கும் தொடருக்குப் பெயர் நாதஸ்வரம். காரைக்குடி பகுதியில் வாழும் ஒரு நாதஸ்வரைக் கலைஞரின் வாழ்க்கைப் பின்னணியை களமாகக்கொண்டு உருவாகும் இந்தப் படைப்பில் திருமுருகனுக்கே உரிய குடும்ப நேசிப்பு, நெகிழ்வுக் காட்சிகளும் உண்டு.


    தொடரில் நாதஸ்வரக்கலைஞராக மவுலி நடிக்க, அவரது மகனாக திருமுருகன் நடிக்கிறார். இவர்கள் தவிர மற்ற அனைவரும் புத்தம் புதுமுகங்கள். இந்த புதுமுகங்களின் தேர்வு கடந்த 2 மாதங்களாக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய இடங்களில் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நேரடித்தேர்வில் முதற்கட்டமாக 40 பேரை தேர்ந்தெடுத்திருக்கிறார், திருமுருகன். இவர்களுக்கான நடிப்பு பயிலரங்கம் சென்னையில் 3 நாட்கள் நடந்தது. நடிகர் நாசரின் `அடவு பவுண்டேஷன்' இந்த பயிற்சியை நடத்தி முடித்தது. நடிகர் சண்முகராஜன், டைரக்டர் அனிஷ், ராம் ஆகியோரும் சிறப்பு பயிற்சி அளித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 14 வயது தொடங்கி 72 வயது வரை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.


    படப்பிடிப்பு கடந்த 19-ந்தேதி காரைக்குடியில் தொடங்கியது. விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது, நாதஸ்வரம்.







    நன்றி: தினதந்தி



    கொசுறு:
    check this - ( Not mine)
    http://nadhaswaramblog.blogspot.com/
    Last edited by aanaa; 9th April 2011 at 06:58 PM.
    "அன்பே சிவம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Sun Tv New Serial - MUTHARAM A NEW TAMIL TV SERIAL
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 26th November 2011, 08:27 PM
  2. Nadhaswaram - Hq Videos - First on net
    By anbupani in forum TV,TV Serials and Radio
    Replies: 1
    Last Post: 16th May 2010, 07:00 PM
  3. best serial
    By kandiban in forum TV,TV Serials and Radio
    Replies: 42
    Last Post: 10th April 2007, 12:32 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •