-
17th June 2010, 10:37 PM
#11
Senior Member
Seasoned Hubber
முரளி சார் சொன்னா அந்த முக்கண்ணன் - இங்கே சிவாஜி என பொருள் கொள்க - சொன்ன மாதிரி. நம் அனைவரையும் இலவசமாக பாலாஜி திரையரங்கிற்கு அழைத்துச் சென்று விட்டார். சூப்பர் முரளி சார், எங்கிருந்து தான் தங்கள் பேனாவிற்கு மட்டும் இவ்வளவு சக்தி வருகிறதோ என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
அனைத்து ரசிகர்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கலைஞருக்குப் பாராட்டு விழாவும் பங்கேற்கும் அறிஞருக்குப் பாராட்டு விழாவும் சென்னை ருஷ்யக் கலாச்சார மையம் சார்பில் 21.06.2010 அன்று மாலை 6.00 மணியளவில் சோவியத் கலாச்சார அரங்கில் நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்க உள்ள ருஷ்ய அறிஞர் அலெக்ஸாண்டர் டுபியான்ஸ்கி மற்றும் லீனா ஆகியோர் பாராட்டப் பெற உள்ளனர். பாராட்டும் மேதகையோர் முனைவர் டி.எஸ். நாராயணசாமி மற்றும் முனைவர் ராஜலக்ஷ்மி ஆகியோர். விழாவில் நடிகர் திலகத்தின் நினைவலைகள் என்ற தொகுப்புப் படம் திரையிடப்படும். இதில் பல்வேறு வகையான தமிழ் நடைகளில் நடிகர் திலகத்தின் உரையாடல் இடம் பெற்ற காட்சிகள் திரையிடப் படும். திரைப்படத்தினைத் தொகுத்து வழங்குபவர் இயக்குநர் கா. பரத் அவர்கள். இவர் நடிகர் திலகத்தை தொலைக்காட்சிக்காக இயக்கிய ஒரே இயக்குநர் ஆவார்.
நிகழ்ச்சி 6.15 முதல் 8.30 வரை
அனைத்து ரசிகர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்சசி இது.
ராகவேந்திரன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
17th June 2010 10:37 PM
# ADS
Circuit advertisement
Bookmarks