பார்வையாளர்களோடு அரங்கில் கட்டபொம்மன் நாடகம் நடைபெறும் காட்சி
பார்வையாளர்களோடு அரங்கில் கட்டபொம்மன் நாடகம் நடைபெறும் காட்சி
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
மறக்க முடியாத திரைப்படங்கள் என்ற தொடரில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தைப் பற்றி... வேறோர் இணைய தளத்திலிருந்து...
இதற்கான இணைப்பு
பள்ளிக் காலத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டு வெறும் இருபத்தைந்து பைசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட நினைவு தெரிந்த நாட்களின் முதல் திரைப்படம், இன்றைக்கு வரைக்கும் "வீரபாண்டிய கட்டபொம்மன்" என்கிற ஒரு வரலாற்றுப் பாத்திரத்தின் வடிவத்தை வேறு எந்த ஒரு மாற்று ஊடகத்தின் தாக்கத்துக்கும் ஆளாக்காமல் எனக்குள் (அனேகமாக நம் அனைவருக்குள்ளும்) வைத்திருக்கும் திரைப்படம், திரைப்படம் எத்தனை வலிமையான கலை என்பதை நான் இன்று வரை வியக்கும் ஒரு திரைப்படம், ஒரு நடிகனின் மகத்தான அடையாளங்களை, மிடுக்கை, மேதமைகளை தன்னந்தனியனாக நின்று களமாடும் "சிவாஜி கணேசன்" என்கிற நமது கலைஞனை வியந்து பார்க்க வைத்த திரைப்படம் என்று பல குறிப்புகளை இந்தப் படம் தனக்குள் கொண்டிருந்தாலும், அவை எல்லாவற்றையும் கடந்த ஒரு ரசிகனுக்கான எல்லாவற்றையும் உள்ளடக்கியது என்பது தான் இந்தப் படத்தின் தனிச்சிறப்பு, வரலாற்று முகவரி, விடுதலைப் போராட்டத்தின் பதிவுகள், நகைச்சுவை, காதல், பாடல்கள் என்று ஒரு காட்சியிலும் தொய்வு இல்லாமல் நகர்த்தப்பட்ட பொழுது போக்குச் சித்திரமாகவும் இந்தப் படம் இன்று வரை வரலாற்றில் அழியாமல் இருப்பது ஒரு வியக்கத்தக்க சாதனை.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
திருப்பு முனை திரைப்படங்கள் என்ற தொடரில் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி ... சினிமா எக்ஸ்பிரஸ் இணைய தளப் பக்கத்திலிருந்து...
திருப்புமுனை திரைப்படங்கள் - 32
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
.....ஏற்கெனவே கட்டபொம்மன் கதையை சிறந்த முறையில் வடிவமைத்து சிவாஜி நாடக மன்றத்தார் நாடகமாக நடித்து பிரபலமாகியிருந்தது. சக்தி கிருஷ்ணசாமி எழுதிய அந்த நாடகத்தில் நடித்து வந்தார் சிவாஜி. மூதறிஞர் ராஜாஜி, அறிஞர் அண்ணா, இந்த நாடகத்தைப் பார்த்து பாராட்டினார்கள்.
வெள்ளையனை எதிர்த்துக் குரல் கொடுத்த பாஞ்சாலங்குறிச்சி சிங்கமான வீரபாண்டிய கட்டபொம்மன் கதையை படமாக்க முடிவு செய்தார் பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர். பந்துலு. அவரே டைரக்ட் செய்யத் திட்டமிட்டார். நாடகத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமியே சினிமாவுக்கும் எழுத வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டார்கள். வழக்கமாக நாடகங்களில் எழுதப்படும் வசனங்களைப் போல் அல்லாமல், புதிய பாணியில் அவரது வசனங்கள் உயிரோட்டத்துடன் எழுதப்பட்டிருந்தன. சிவாஜிக்கு மட்டுமல்ல தமிழ் திரை உலக வரலாற்றிலேயே வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு சரித்திர சாதனைப் படமாக அமைந்தது. சிவாஜியின் புகழ் தரணி எங்கும் பரவியது.
இன்னொரு சிறப்பு இந்தப் படத்தின் கதை ஆலோசனை குழுத் தலைவர் பொறுப்பை ம.பொ. சிவஞானம் அவர்கள் ஏற்றுப் பணிபுரிந்தார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தைப் பற்றி பல ருசிகர தகவல்கள் உண்டு. கட்டபொம்மன் நெல்லைச் சீமையில், பாஞ்சாலங்குறிச்சியில் வாழ்ந்த விடுதலை போராட்ட வீரன். கட்டபொம்மன் வாழ்ந்த, இடங்கள் பொட்டல் காடாக இருந்ததால் இப்படத்தை எங்கு எப்படிப் படமாக்குவது என்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ஒருமுறை பார்லிமெண்டில் கே.டி.கே. தங்கமணியின் ஒரு கேள்விக்கு மத்திய மந்திரி டாக்டர் கேஸ்கர் பதில் அளிக்கையில், ""கட்டபொம்மன் வரலாற்றை யாராவது சினிமாவாக எடுத்தால், அரசு அவர்களுக்கு உதவிகளைச் செய்யும் என்று அறிவித்திருந்தார்.
பி.ஆர். பந்துலு அதை நினைவில் கொண்டு, மத்திய அரசை அணுகினார். மத்திய அரசு ஜெய்ப்பூரில் வீரபாண்டிய கட்டபொம்மனை திரைப்படமாக்க அனுமதி கொடுத்ததோடு, இராணுவத்தின் குதிரைப் படைகளையும் தந்து உதவியது. திரைப்படத்தின் பெரும் பகுதிக் காட்சிகளை ஜெய்ப்பூரிலே படமாக்கினர்.
காதல் இல்லாமல் சினிமா முழுமை பெறாது என்பதால், அழகான ஒரு காதல் கதையை, பத்மினி ஜெமினி கணேசனுக்காக சிறப்பாக உருவாக்கி இருந்தார் பி.ஆர். பந்துலு.
இன்பம் பொங்கும் வெண்ணிலா பாடலை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அதுபோல போகாதே போகாதே என் கணவா பாடலும், மக்கள் மனதில் எழுச்சியை ஊட்டிய பாடல் காட்சிகளாகும்.
ஜெமினிகணேசன் நடித்த பாத்திரத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட சிவகங்கை சீமை படத்தில் அவர் நடித்ததால், இப்படத்தில் நடிக்கவில்லை. கேவா கலரில் உருவாக்கப்பட்டு, லண்டர் போய் டெக்னிக் கலராக மாற்றி வெளியிட்டார்கள்.
பல ஊர்களிலும் 100 நாள் விழா கண்ட வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ்பட உலகின் பெருமையை உயர்த்தி இமயம் மாதிரி நிமிர்ந்து நின்றது.
எல்லாவற்றிற்கும் முத்தாப்பு வைத்தது போல, 1960 ஆண்டு கெய்ரோவில் நடந்த ஆசிய ஆப்பிரிக்கா திரைப்பட விழாவில், சிறந்த நடிகர் என்ற உயர்ந்த பரிசை சிவாஜிக்கு பெற்றுத் தந்தது. அத்துடன் இசை அமைப்பாளர் ஜி. இராமநாதனுக்கும் சிறந்த இசை அமைப்பாளர் விருது கிடைத்தது.
படங்கள்: ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்
நடிக, நடிகையர் : சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன், ஜாவர் சீதாராமன், ஓ.ஏ.கே. தேவர், வி.கே. ராமசாமி, ஏ. கருணாநிதி, பத்மினி, ஜி. வரலட்சுமி, மற்றும் பலர்.
இசை : ஜி. ராமநாதன்
பாடல்கள் : கு.மா. பாலசுப்ரமணியம்
தயாரிப்பு : பத்மினி பிக்சரஸ்
டைரக்ஷன் : பி.ஆர். பந்துலு
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
மராட்டிய மண்ணில், நம் நடிகர்திலகத்துக்கு அபார வரவேற்பை தந்து லதாஜி, ப்ரித்விராஜ் கபூர் ,ராஜ் கபூர் போன்றோர்களை நம் நிரந்தர ரசிகர்களாய் ஆக்கியதில் மும்பை ஷண்முகானந்த சபையில் மேடையேறிய வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்துக்கு பெரும் பங்குண்டு.
Last edited by Gopal.s; 25th June 2013 at 08:59 AM.
என் நினைவில் நிழலாடும் வீரபாண்டிய கட்டபொம்மன்.
வரிவிலக்கு அளிக்கப்பட்டு சென்னை திருவல்லிகேணியில் உள்ள ஸ்டார் திரைஅரங்கில் மறுவேளியிடு என்று அப்போது நாங்கள் தங்கி இருந்த திருவல்லிக்கேணி வீடு பக்கத்தில் இருந்த தட்டான் கடையில் தினத்தந்தியில் பார்த்தவுடன் எனக்கு ஒரே குஷி. ஆஹா ! சிவாஜி படம் கட்டபொம்மன் (அப்போது இறுதியில் கட்டபொம்மன் தூக்கிலிடபடுவார் என்பது தெரியாது) ராஜா கெட்-அப் பார்த்தவுடன் இந்தபடத்தை விடக்கூடாது என்று வீட்டில் அடம் பிடித்து, எனக்கு சிபாரிசாக பக்கத்து குடித்தனம் மாமி, கீழ் வீட்டு மாமி மற்றும் அவரது பிள்ளைகள்...இப்படி ஒரு 14 பேர் வெள்ளிகிழமை அன்று மதியம் செல்வதென்று முடிவுசெய்யப்பட்டது. காலை 10 மணிக்கு கவுன்டரில் சென்று டிக்கெட் வாங்கிவிடலாம் என்று வாடகை சைக்கிள் எடுத்துகொண்டு நானும் கீழ்வேட்டு சகோதர நண்பர்கள் சந்துரு, ராஜு ஆகியோர் சென்றோம்.
மண்ணெண்ணெய் ரேஷன் கடையில் வாங்க நிற்கும் Q போல அப்படியொரு மக்கள் வெள்ளம் ! அவ்வளவு மக்கள் கூட்டம் அதுவரை நான் பார்த்ததில்லை அப்படி ஒரு கூட்டம். 400 meters தொலைவில் உள்ள மசூதி வரை வரிசை...கிட்டத்தட்ட சுமார் ஒன்றரை மணிநேரம் நின்றிருப்போம்.
கடைசியில் கிடைத்ததோ மாலை காட்சிக்கு டிக்கெட். சரி, கிடைத்தது அதிர்ஷ்டம் என்று நினைத்து வீடு வந்து சேர்ந்தோம் ...வாங்கினோம் பாருங்கள் திட்டு...மறக்கவேமுடியாது...மாலை காட்சிக்கு ஏன் வாங்கினீர்கள்...நாளை காலை அல்லது மதியம் வாங்கவேண்டியது தானே என்று திட்டு. காரணம் எங்களுடைய தந்தையார் உத்தியோகத்திலிருந்து வந்துவிடுவார்களே..ஆகையால் இந்த திட்டு. ஹ்ம்ம்.... ஒருவழியாக பொது தொலைபேசியில் தந்தையாரிடம் பேசி கட்டபொம்மனை காண ஆயுத்தம் ஆனோம்.
மாலை 545 க்கு தியேட்டரில் ஆஜர். ஒரு 25 நிமிட காத்தலுக்கு பின், அரங்கின் உள்ளே நாங்கள். எனக்கு எப்போதும் போல நடு சீட். திரையில், முதல் நாள் என்பதால் newsreel எல்லாம் இல்லை. நேராக படம்தான் ! பெயர்போடும் காட்சியில் இருந்தே அப்படியொரு ஆரவாரம் ...கூடை கூடாக பூக்களை வைத்து...ஒவொவொரு காட்சியிலும் பூக்கள் தூவினர் ரசிகர் மன்ற பிள்ளைகள். அப்போது எனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்கு என்று...காரணம் நான் சிறுவன்..!
ஆனால் சிவாஜி அவர்களை காட்டும்போதெல்லாம் ரோஜா பூக்கள் தூவும்போது என்மனதில் என்னமோ அவ்வளவு சந்தோஷமும் பூரிப்பும். காரணம் அப்போது விளங்கவில்லை..இப்போது புரிகிறது ! கிட்டத்தட்ட படம் முடியும் வரை இந்த பூ தூவும் நிகழ்ச்சி நடந்தது...!
கடைசி காட்சி கட்டபொம்மன் தூகில்டுவதர்க்கு முன் பந்நேர்மன் உரையாடல்...ரசிகர்கள் பந்நேர்மனை நல்ல மொழிகளால் வசவுசெய்வது காதில் விழுகிறது..நான் அப்போது சிறுவன் என்பதால் பந்நேர்மன் சிவாஜியை உண்மையாகவே சங்கிலியால் பிணைதிருந்தான் அதனால் இவர்கள் அவரை திட்டுகிறார்கள் என்று நினைத்தேன்.
அவர்களை பார்த்து நானும் என்னை மறந்து...சங்கிலியை அவுத்துவிடுங்க சார் ! ப்ளீஸ் ! என்று உரக்க சொன்னதுதான் தாமதம்..முன் வரிசையில் மற்றும் பின் வரிசையில் உள்ளவர்கள் "ஹ..ஹ..ஹ.." என்ற குபீர் சிரிப்பு ..உடனே என் அம்மா " பட்" என்று ஒரு அடி கையில் வைத்து "ஒக்காருடா ...மானத்த வாங்காதே ! " என்று கூற ..இப்போது நினைத்தாலும் ஒரு சிரிப்பு ஒரு பெருமை !
இதற்குள் திரையில்..கட்டபொம்மன் தூக்கிலிடும் காட்சி....துணிந்தவருக்கு தூக்குமேடை பஞ்சுமெத்தை என்ற வசனம்...முடிந்ததும் படக் என்று தூக்குமாட்டி இறக்கும் காட்சி..."ச..ச...ச..ச..." என்று அரங்கம் முழுதம் என்னமோ..தெரியவில்லை..ஒரு பரிதாபத்தை வெளிபடுத்தும் சத்தம்....திரையில் மக்கள் அழுவதை பார்த்து எனையும் அறியாமல் அழுதுவிட்டேன் ! ஏன் அழுதேன் என்று அன்று புரியவில்லை ! அனால் இப்போதும் அதை நினைத்தால் ஒரு பெருமை..!
டியர் சுப்பு சார்
குழந்தைப் பருவத்தில் கட்டபொம்மன் பார்த்த அனுபவம், அதை தாங்கள் விவரித்த விதம், இரண்டுமே சுவையாக இருந்தது. பாராட்டுக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Sivaji Ganesan Filmography Series
56. மரகதம் Maragatham
[கருங்குயில் குன்றத்துக் கொலை]
தயாரிப்பு – பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்
வசனம் – முரசொலி மாறன்
நடிகர்கள்
சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலைய்யா, சந்திரபாபு, எஸ்.பாலச்சந்தர், டி.எஸ்.துரைராஜ், ஓ.ஏ.கே. தேவர், நாராயண பிள்ளை, சந்தானம், கன்னையா, பக்கிரிசாமி, நடராஜன்,
நடிகைகள்
பத்மினி, சந்தியா, ஞானம், முத்துலக்ஷ்மி, லக்ஷ்மிபிரபா, காமாட்சி, லக்ஷ்மிராஜம், சரஸ்வதி
இசையமைப்பு – எஸ்.எம்.சுப்பய்யா
பாடல்கள்
வாகி சுத்தானந்த பாரதியார், பாபநாசம் சிவன், ரா.பாலு, கு.மா.பாலசுப்ரமணியன், மருதகாசி
பின்னணி பாடியோர்
டி.எம்.சௌந்தர்ராஜன், ஜெயலக்ஷ்மி, லீலா, ஜமுனா ராணி, அலமு மற்றும் சந்திரபாபு
நடன அமைப்பு – ஹீராலால்
ஒலிப்பதிவு – ஈ.ஐ. ஜீவா, மணி
கலை – ஏ.கே. சேகர்
லேபரட்டரி – நாதன், மோஹன்
எடிட்டிங் – வேலுச்சாமி
மேக்கப் – குமார், தனகோடி
ஸ்டில்ஸ் – அனந்தன்
செட்டிங் – பக்தவத்சலம்
ஆர்ட் – அந்தோணி
ஓவியம் – துரைசாமி
ஒளிப்பதிவு – சைலன் போஸ்
தயாரிப்பு – டைரக்ஷன் – எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு
Last edited by RAGHAVENDRA; 5th July 2013 at 10:20 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி இன்னும் நிறைய பதிவுகள் எதிர்பார்க்க படுகின்றன.
பிறகு அடுத்தது தொடரும்.
மரகதம் திரைப்பட விளம்பர நிழற்படங்கள்
உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
பொக்கிஷப் புதையல்
முதல் வெளியீட்டு விளம்பரம் : The Hindu : 7.8.1959
முதல் வெளியீட்டு விளம்பரம் : முரசொலி : 21.8.1959
"மரகதம்" சென்னை 'வெலிங்டன்' திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய சிறந்த வெற்றிக் காவியம்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
மரகதம் விமர்சனம்
மரகதம் திரைப்படத்தின் மற்றொரு விளம்பரம்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks