http://sports.dinamalar.com/2014/02/...nnisspain.html

நடாலுக்கு ரூ. 6 கோடியா

புதுடில்லி: சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் தொடரில் ஸ்பெயினின் நடால் விளையாடினால், ஒரு நாளுக்கு மட்டும் ரூ.6 கோடி பெறுவார் என கூறப்படுகிறது.

இந்தியாவில் பிரிமியர் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதே முறை ஹாக்கி, பாட்மின்டனிலும் புகுத்தப்பட்டது. தற்போது, இதில் டென்னிசும் இணையுள்ளது. இத்தொடர் பாங்காங், கோலாலம்பூர், மும்பை, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட 5 இடங்களில் நடக்கவுள்ளது. இதற்கு சர்வதேச பிரிமியர் (ஐ.பி.டி.எப்.,) டென்னிஸ் லீக் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அறிமுக தொடர் வரும் நவ.,28 முதல் டிச., 20 வரை அரங்கேறவுள்ளது. வீரர்களுக்கான ஏலம் வரும் 2ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், ‘நம்பர்–1’வீரர் மற்றும் 13 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயினின் ரபெல் நடால், இதில் பங்கேற்க ஆர்வமாக உள்ளாராம்.

ஒருவேளை, நடால் விளையாடினால் ஒரு நாளுக்கு மட்டும் சுமார் ரூ.6 கோடி சம்பளமாக பெறுவார். தவிர, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

பெண்கள் பிரிவில் முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அசரன்கா, டென்மார்க்கின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோரும் இதில் கலந்து கொள்வர் என நம்பப்படுகிறது.