-
20th March 2014, 06:55 AM
#1
Senior Member
Seasoned Hubber
-
20th March 2014 06:55 AM
# ADS
Circuit advertisement
-
21st March 2014, 12:24 AM
#2
கோவை ராயல் திரையரங்கில் வசூலில் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார் பைரவன். இன்று மாலைக் காட்சி வரை பார்த்து மகிழ்ந்த மக்களின் எண்ணிக்கை 2915. கூடுதல் விவரங்கள் நாளை.
கொங்கு நாட்டை கலக்கிய பைரவன் நாளை 21-ந் வெள்ளி முதல் மலைக்கோட்டை நகருக்கு விஜயம் செய்கிறார். சென்ற் வாரம் சில தொழில் நுட்ப காரணங்களால் வெளியீடு தள்ளி போன எங்கள் தங்க ராஜா திரைப்படம் திருச்சி கெயிட்டி திரையரங்கில் நாளை முதல் வெளியாகிறது. சீரிய வரவேற்பு கொடுக்க திருச்சி மாநகர மக்களும் ரசிகர்களும் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
அன்புடன்
-
21st March 2014, 03:27 AM
#3
Junior Member
Senior Hubber
Originally Posted by
Murali Srinivas
கோவை ராயல் திரையரங்கில் வசூலில் புதிய சரித்திரம் படைத்திருக்கிறார் பைரவன். இன்று மாலைக் காட்சி வரை பார்த்து மகிழ்ந்த மக்களின் எண்ணிக்கை 2915. கூடுதல் விவரங்கள் நாளை.
கொங்கு நாட்டை கலக்கிய பைரவன் நாளை 21-ந் வெள்ளி முதல் மலைக்கோட்டை நகருக்கு விஜயம் செய்கிறார். சென்ற் வாரம் சில தொழில் நுட்ப காரணங்களால் வெளியீடு தள்ளி போன எங்கள் தங்க ராஜா திரைப்படம் திருச்சி கெயிட்டி திரையரங்கில் நாளை முதல் வெளியாகிறது. சீரிய வரவேற்பு கொடுக்க திருச்சி மாநகர மக்களும் ரசிகர்களும் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
அன்புடன்
The new thread of NADIGARTHILAGAM for rereleses very grand. kindly upload some snaffs of THYAGAM openings at madras and other centres and sunday melas regularly for absenties enjoyment.
-
22nd March 2014, 12:51 AM
#4
கோவை நகரில் சென்றவாரம் 2966 பேர் நமது திரை உலக சக்ரவர்த்தியை இவர் எங்கள் தங்க ராஜா என்று சூழ்ந்துகொண்டு தரிசித்தனர் !
கோவை ராயலில் சென்றவாரம் சக்கைபோடு போட்ட நடிக பேரரசரின் எங்கள் தங்கராஜா திரைக்காவியம் இன்றுமுதல் திருச்சி GAIETY திரை அரங்கில் தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது !
திருச்சி நகர மக்கள் நமது தங்கராஜாவை இனி நீங்கள்தான் "எங்கள் தங்க ராஜா" என்று உரிமையுடன் கொண்டாட துவங்கிவிட்டார்கள் !
மலைக்கோட்டை மாநகர் மக்கள் எங்கள் தங்க ராஜாவிற்கு இன்று அமோக வரவேற்பு நல்கியுள்ளனர். திருச்சி கெயிட்டி திரையரங்கில் இன்றைய முதல் நாள் மட்டும் 474 டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த திரையரங்கை பொறுத்தவரை கடந்த ஒரு சில வருடங்களில் வெளியான முதல் நாளன்று அதிகமான மக்கள் கண்டு களித்தது இந்தப் படத்தைத்தான் என்று தியேட்டர் உரிமையாளரே இன்று சொன்னாராம். எந்த ஊர் ஆனால் என்ன/ எத்தனை பேர் வந்தால் என்ன? நடிகர் திலகத்தை வெல்ல நடிகர் திலகமேதான் வர வேண்டும். வரும் நாட்களில் இந்த வரவேற்பு கூடும். ஞாயிறு மாலை விண்ணை முட்டும்
அன்புடன்
-
22nd March 2014, 12:54 AM
#5
கோவையில் ராயல் திரையரங்கில் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் பைரவன். எங்கள் தங்க ராஜாவின் ஒரு வார வசூல் முன் வெளியான படங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற வைத்திருக்கிறது. தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்கள் புரிகின்ற சாதனைகளை பார்த்து விட்டு திரையரங்க உரிமையாளர்கள் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ராயல் திரையரங்க உரிமையாளர் அடுத்த நடிகர் திலகத்தின் படத்திற்கும் தேதி கொடுத்து விட்டார். ஆம் வரும் வெள்ளி மார்ச் 28 முதல் நடிகர் திலகத்தின் சொர்க்கம் அங்கே திரையிடப்பட இருக்கிறது. இந்த கோவை மட்டுமல்ல, சென்னை, மதுரை திருச்சி போன்ற ஊர்களிலும் இது தொடரும்.
அன்புடன்
-
22nd March 2014, 10:34 AM
#6
Junior Member
Veteran Hubber
2012 மார்ச் மாதம் இதே வாரத்தில் திவ்யா நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் முதல் முதலாக வெளியிட்ட நடிகர் திலகம் கர்ணனாக வாழ்ந்த, பல புதிய படங்கள் ரிலீஸ் செய்தும், 2012இல் தமிழகத்தில் அதிகபட்சமாக 152 நாட்கள் சத்யம் வளாகத்திலும், 115 நாட்கள் எஸ்கேப் திரை வளாகத்திலும் ஓடிய ஒரே காவியமான "கர்ணன்" கிண்டலும் கேலியும் செய்த கயவர்களின் முகத்தில் கரியை பூசி வெற்றி நிலை நாட்டிய 2வது வார விளம்பரம், அனைவர் பார்வைக்கும் !
-
23rd March 2014, 11:46 PM
#7
பழைய திரைப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளில் தற்போதைய சூழலில் வெளியாகும் படங்களுக்கு வெள்ளியன்று நல்ல response இருக்கும். மறுநாள் சனியன்று சற்றே drop ஆகி ஞாயிறு மீண்டும் சூடு பிடிக்கும். தமிழகத்தின் பெரிய நகரங்களில் எல்லாம் இப்படியான சூழலே நிலவுகிறது. அந்த trend-ஐயும் முறியடிக்கும் வண்ணம் திருச்சி மாநகர மக்கள் Dr.ராஜாவையும் பைரவனையும் உற்சாகமாக வரவேற்றிருக்கிறார்கள். வெள்ளியன்று கிடைத்த வசூலை விட சனியன்று கூடுதல் கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நாட்களையும் தாண்டி இன்று வசூல் சாதனை படைத்திருக்கிறது எங்கள் தங்க ராஜா. இன்று மாலைக்காட்சி வரை கிட்டத்தட்ட 1400 நபர்கள் பார்த்திருக்கின்றனர். சில குறிப்பிடத்தக்க விஷயங்கள்.
இன்று மாலைக்காட்சியில் அரங்கத்திற்கு வெளியே ரசிகர்களின் கொண்டாட்டாம் பெரிய அளவில் இருந்ததாம். அண்மைக் காலங்களில் கெயிட்டி திரையரங்கில் இது போன்ற பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லையாம்.
கெயிட்டி திரையரங்கிற்கு அண்மைக் காலமாக class audience வருவதில்லை என்ற நிலை மாறி இந்த மூன்று நாட்களிலும் குறிப்பாக இன்று மாலைக் காட்சிக்கு ஏராளமான class audience வந்திருக்கிறார்கள். அரங்க நிர்வாகத்தை சேர்ந்தவர்களே இதை ஆச்சரியத்துடன் சொன்னார்களாம்.
முதலில் விற்று தீர்ந்தது high class tickets அதன் பிறகு வந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் high class full ஆகி விட்டது என்று தெரிந்தவுடன் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிகழ்வும் நடந்திருக்கிறது.
படம் வெளிவருவதற்கு முன் ஒரு வித apprehension mood-ஐ பிரதிபலித்த அரங்க உரிமையாளாரும் மேலாளாரும் இன்று மாலை மிகவும் மகிழ்ச்சியோடு காணப்பட்டார்கள. மட்டுமல்ல மேலும் இது போன்ற நடிகர் திலகத்தின் திரைப் படங்களை வெளியிடுமாறு படத்தை திரையிட்டவரிடம் கேட்டுக் கொண்டனர்.
நமது ரசிகர்களும் நடிகர் திலகத்தின் படங்களை திருச்சி மாநகரத்தில் தொடர்ந்து வெளியிடுமாறு கேட்டுக் கொண்டனர். அது நிறைவேறும் என வெளியிட்டாளர் உறுதி கூறினார்.
செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி.
அன்புடன்
-
24th March 2014, 09:29 PM
#8
Junior Member
Veteran Hubber
-
27th March 2014, 08:12 PM
#9
Junior Member
Veteran Hubber
எங்கிருந்தோ வந்தாள் ரிலீஸ் செய்யப்பட்ட 100 நாட்கள் கண்ட அதே கோவை ராயல் திரை அரங்கில் நாளை முதல் நடிக பேரரசர் கலக்கும் சொர்க்கம் !
1970 - இரெட்டை தீபாவளி நமக்கு ! -
ஆம் நமது நடிக பேரரசர் நடிப்பில் இரண்டு படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யும் தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது -
1) எங்கிருந்தோ வந்தாள் - நடிகர் திலகம், பாலாஜி, தேவிகா மற்றும் ஜெயலலிதா
2) சொர்க்கம் - நடிகர் திலகம், முத்துராமன், பாலாஜி மற்றும் KR விஜயா
முதல் படம் கிளாஸ் வகையை சார்ந்தது
இரெண்டாவது ஜனரஞ்சகம் வகையை சார்ந்த கிளாஸ் மற்றும் மாஸ் சரியான விகிதத்தில் கலந்த ராமண்ணா இயக்கத்தில்.
தமிழ் திரை உலகம் இதற்கும் முன்பும் பல முறை நடிகர் திலகத்தின் இரண்டு படங்கள் ஒரே நாள் வெளியீடு கண்டிருந்தாலும், இந்த சமயம் ஒரு மாறுதல். இரெண்டுமே கலர் படங்கள் !
மற்ற நடிகர்களின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பொறாமைப்படும் அளவுக்கு ஒரு தைரியமான செயல். வேறு எந்த நடிகரும் இதை செய்ய துணியாத ஒரு செயல்.
பொதுமக்களும் ரசிகர்களுடன் மிகுந்த வரவேற்ப்பு இரண்டு திரைப்படங்களுக்கும் கொடுத்து இரெண்டுமே சூப்பர் ஹிட் !
எங்கிருந்தோ வந்தாள் 100 நாட்கள் அதற்க்கு மேலும் ஓடிய அரங்குகள்.
1) சென்னை - சாந்தி கிரௌன் புவனேஸ்வரி
2) மதுரை - தேவி
3) திருச்சி - பாலஸ்
4) கோவை - ராயல்
5) சேலம் - சாந்தி
சொர்க்கம் 100 நாட்களும் அதற்க்கு மேலும் ஓடிய திரை அரங்குகள்
1) சென்னை - தேவி பாரடைஸ் (அரங்கில் பக்கத்திலயே சாந்தி திரையில் எங்கிருந்தோ வந்தாள் திரையிட்ட நிலையிலும், தேவி பாரடை புதிய வசூல் சாதனை படைத்தது )
2) மதுரை - சென்ட்ரல்
3) சேலம் - ஜெயா
4) திருச்சி - பிரபாத்
5) நெல்லை - பாபுலர்
கோவையில் சொர்க்கம் ஒரு வருடம் முன்பு திரையிடப்பட்டு வழக்கம்போல நல்ல ஒரு வரவேற்ப்பு பெற்றது.
நடிகர் திலகம் படங்கள் திரையிட முடியாதபடி நடந்த பல சதிகளை முறியடித்து இப்போது ராயல் திரையரங்கில் நடிகர் திலகம் படங்கள் மீண்டும் வளம் பெற்று வலம் வரத்தொடங்கிய காரணத்தால் சொர்க்கம் திரைப்படம் வரும் வெள்ளி முதல் மீண்டும் திரையிடப்பட உள்ளது.
சூடுபிடித்துள்ள தேர்தல் பிரச்சாரங்கள், ஸ்டேட் போர்டு மாணவ மாணவிகளின் தேர்வு , Labour கூட்டங்கள் என்று பல விஷயங்களுக்கு மத்தியில் சொர்க்கம் கோவையில் நாளை முதல் அதாவது 28 மார்ச் முதல் வலம் வருகின்றது !
-
28th March 2014, 01:03 AM
#10
வெகு நாட்களாக தூத்துக்குடி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோடீஸ்வரன் நாளை முதல் வெற்றி விஜயம். தூத்துக்குடி ksps திரையரங்கில் நாளை முதல் ஸ்டைல் சக்கரவர்த்தி அழகு மன்மதன் நடிகர் திலகம் தூள் பரத்திய எங்க மாமா ரெகுலர் காட்சிகளில் வெற்றி பவனி வருகிறது.நன்றி திரு ராமஜெயம்.
அன்புடன்
Bookmarks