மறு வெளியீடுகளில் மன்னவரின் சாதனைகள் தொடர்கின்றன. குறுகிய இடைவெளி நீண்ட இடைவெளி என்றெல்லாம் சொற்சிலம்பம் ஆடாமல் எப்போது நடிகர் திலகம் படங்கள் திரையரங்குகளில் வெளியானாலும் மக்கள் ஆதரவு என்றும் தொடர்கிறது உண்மை நிலை. தொடர்ந்து நடிகர் திலகத்தின் படங்களாக கோவை ராயல் திரையரங்கில் வெளியான போதும், இப்போது ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கம் பொது மக்களை திரையரங்கிற்கு வரவழைப்பதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
இன்று நண்பகல் 12 மணி முதல் 3.30 வரை தமிழகமே நடிகர் திலகத்தின் தில்லானா வாசிப்புக்கு மயங்கி கட்டுண்டு கிடந்த அந்த வேளையிலும் கூட இன்று மாலை வரை 500 பேருக்கு மேல் திரையரங்கிற்கு டிக்கெட் எடுத்து படம் பார்த்திருக்கின்றனர். இது உண்மையிலே ஆச்சரியமான விஷயம. சொர்கத்தின் வெற்றி பவனி தொடர்கிறது.
திருச்சி கெயிட்டி திரையரங்கில் கடந்த வர்ரம் வெளியான எங்கள் தங்க ராஜா சிறப்பான வசூலைப் பெற்று அந்த திரையரங்கில் அண்மையில் வெளியான அனைத்துப் படங்களின் வசூலை முறியடித்திருக்கிறது.
தூத்துக்குடி ksps திரையரங்கில் எங்க மாமாவின் வெற்றி நடை தொடர்கிறது.
மதுரை மாநகரை கலக்கிய சி.ஐ.டி ஆனந்த் வரும் செவ்வாய் முதல் அருப்புகோட்டையில் வெற்றி பவனி துவக்குகிறார். அங்கே அருப்புக்கோட்டையில் ஓடிய பின் வைர நெஞ்சம், திருப்பரங்குன்றம் லட்சுமியில் வெளியாகிறது.
இன்று முதல் பைலட் திரையரங்கில் காட்சியளிக்க விஜயம் செய்த ஸ்டைல் சக்கரவர்த்தி சிபிஐ ஆபிஸர் ராஜனுக்கு பெரிய வரவேற்பு நல்கி வரவேற்றார்கள் ரசிகர்களும் பொது மக்களும் என்ற செய்தி வந்திருக்கிறது. மேலதிக தகவல்கள் விரைவில் இங்கே பதிவிடப்படும்.
முகநூலில் திரு யுவகிருஷ்ணாவின் பதிவு. [Mr.Yuva Krishna In Face book]. Thank You Sir!
ஜேம்ஸ்பாண்ட் பாணியில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லா மாஸ் நடிகர்களுக்குமே உண்டு. சிவாஜியும் நடித்தார். ‘தங்க சுரங்கம்’
“நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது”, "கட்டழகு பாப்பா” என்று பாடல்கள் சூப்பர்ஹிட். ஒரு பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர் பாணியில் காஷ்மீர் தொப்பி அணிந்து வருவார் சிவாஜி.
சிபிஐ அதிகாரியாக அவர் நடித்த இந்த படத்தில்தான் தமிழ்ச்சூழலில் முதன்முதலாக சிகரெட் குடிக்கும் பழக்கம் ஒரு ஹீரோயிஸ பண்பாக முன்வைக்கப்பட்டது. ஒரு ஃபிகரின் தோளில் தீக்குச்சியை உரசி சிகரெட் பற்றவைப்பார். படம் வந்த காலத்தில் இந்த காட்சிக்கு தியேட்டரில் விசில் பறக்குமாம். பின்னாளில் ரஜினி இந்த ஸ்டைலை அப்படியே தனதாக்கிக் கொண்டார்.
எம்.ஜி.ஆர் பட பார்முலா சிவாஜிக்கு செட் ஆகாது என்பார்கள். அதெல்லாம் சும்மா என்று அசால்டாக சிவாஜி நிரூபித்த திரைப்படம் இது. வண்ணத்தில் பிரும்மாண்டமாக நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஆக்*ஷன் கரம் மசாலா சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான ’தங்கசுரங்கம்’ மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
இன்று முதல் சென்னை பைலட் தியேட்டரில் தினமும் இரவு 7 மணி காட்சி. டோண்ட் மிஸ் இட்!
இன்று மாலைக் காட்சி பைலட் திரையரங்கில் தங்க சுரங்கம் படம் பார்த்த அனுபவம் மறக்க முடியாத ஒன்று. சரியான கூட்டம். மிகப் பெரிய அலப்பரை. இது போல ரசிகர்களின் ஆரவாரத்துடன் படம் பார்த்து நாளாயிற்று. மிகவும் ரசித்துப் பார்த்தோம். நேரம் கிடைக்கும் பொது மேலும் பகிர்ந்து கொள்கிறேன்.
சாதனை சாதனை என்று பலர் பேசினாலும் அதை எப்போதும் செயல்படுத்துபவர் நடிகர் திலகம் மட்டுமே. நடிகர் திலகத்தின் திரைப்படங்களை இன்றைய காலகட்டத்தில் வெளியிடுவதற்குதான் எத்தனை சோதனைகளையும் இன்னல்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது? நடிகர் திலகத்தின் படங்களை வைத்திருக்கும் விநியோகஸ்தர்களும் சரி படத்தை வெளியிட முன் வரும் திரையரங்க உரிமையாளர்களும் சரி பிரச்சனைகளை சந்திக்க நேர்கிறது. சிவாஜி படத்தை ஏன் திரையிடுகிறீர்கள் என்று கேட்பது முதல் சிவாஜி படங்களை திரையிடாதீர்கள் என சொல்வது வரை, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் திலகத்தின் படங்களை கூட தங்களின் influence-ஐ பயன்படுத்தி தியேட்டரிலிருந்து மாற்றும் அளவிற்கு ஒரு சிலர் செயல்படுவதையும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இது போதாதென்று ஒரு சில தயாரிப்பாளர்/விநியோகஸ்தர்கள் வேறு குறுக்கீடு செய்கிறார்கள்.
சொல்ல வரும் விஷயம் தங்க சுரங்கம் பற்றியது. ஆல்பட் வளாகத்தில் திரையிடப்படுவதாக இருந்த தங்க சுரங்கம் படத்தை, ஆல்பட் தியேட்டர் பெயரோடு கூடிய விளம்பரம் வந்த பிறகும் கடைசி நிமிடத்தில் தங்க சுரங்கம் விநியோகஸ்தர் அழைக்கப்பட்டு அங்கே திரையிட முடியாது என்று அவரிடம் சொல்லப்படுகிறது. உடனே அவர் பைலட் திரை அரங்க நிர்வாகத்தை அணுகி கேட்க அவர்கள் 2 காட்சிகள் தருவதாக ஒப்புக் கொண்டு அந்த செய்தியை, அந்த விளம்பரத்தை நாளேடுகளில் அவர் கொடுக்க இருக்கும் நேரம், படம் வெளியாவதற்கு முதல் நாள் விநியோகஸ்தர் அழைக்கப்பட்டு ஒரு காட்சிதான் கொடுக்க முடியும் என சொல்லப்படுகிறது. காரணம் Captain America படத்தை திரையிடும் UTV நிறுவனம் தங்கள் படத்திற்கு மூன்று காட்சிகள் வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்க பழைய படம்தானே ஒரு காட்சியை குறையுங்கள் என தியேட்டர் உரிமையாளருக்கு பிரஷர் கொடுக்கப்பட, அவர்களை விரோதித்துக் கொண்டால் நாளை அவர்கள் தொடர்ந்து படம் தர மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாக தங்க சுரங்கம் விநியோகஸ்தர் ஒரு காட்சியை விட்டுக் கொடுக்கும்படி வற்புறுத்தப்பட ஏற்கனவே இரண்டு திரையரங்குகளின் பெயர் போட்டு விளம்பரம் செய்து விட்டோம். இப்போது இதையும் மாற்றினால் நமது நம்பகத்தன்மை போய் விடும் என்பதனால் ஒரு காட்சிக்கு விநியோகஸ்தர் ஒத்துக் கொள்கிறார்.இந்த விவரங்கள் எதுவும் தெரியாத சராசரி ரசிகன் திட்டுவதையும் விநியோகஸ்தர் வாங்கி கட்டிக் கொள்ள வேண்டிய சூழல்.
ஆனால் பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் ஒரு காட்சியானாலும் என்ன நமது முத்திரை அதிலும் பதிக்கப்படும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. மற்றவர் படங்கள் எல்லாம் வாரத்தில் 7 நாட்களில் தினசரி மூன்று காட்சிகளில் வசூல் செய்வதை ஒரே காட்சியில் செய்திருக்கிறார் நடிகர் திலகம். 7 நாட்களில் நடைபெற்ற 7 காட்சிகளில் ரூபாய் 68,000/- [அறுபத்தி எட்டு ஆயிரத்திற்கும்] அதிகமாக வசூலித்திருக்கிறது தங்க சுரங்கம். அரங்க உரிமையாளருக்கு மிகுந்த சந்தோஷம் என்பதோடு அடுத்த முறை அங்கே நடிகர் திலகத்தின் படத்திற்கு சரியான முறையில் காட்சிகள் ஒதுக்கி தருவதாகவும் வாக்களித்திருக்கிறார்.
இன்று சென்னை மகாலட்சுமி திரையரங்கிற்கு வருகை தந்த பைரவருக்கு உற்சாக வரவேற்பு. இன்றைய தினம் மட்டும் 683 டிக்கெட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. மொத்த வசூல் சற்றேறேக்குறைய ருபாய் 14,000/- வந்திருக்கிறது. வரும் நாட்களில் மகாலட்சுமியில் திருவிழாதான்,
Bookmarks