Rajni
Kamal
Ajith
Vijay
Vishal
Surya
Vikarm
Simbu
Jeeva
Powerstar
பிரேமம் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்
நேரம் படத்தை இயக்கிய அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் நிவின்பாலி நாயகனாக நடித்து மலையாளத்தில் வெளியான படம் பிரேமம்.
த்ரிஷ்யம் படம் போலவே சில கோடிகளில் தயாரிக்கப்பட்டு அதைவிடப் பத்துமடங்கு அதிகமாக வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. அந்தப்டபத்தைத் தமிழில் எடுப்பதற்காக அந்த உரிமையை வாங்க தமிழகத்திலிருந்து பல படத்தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டன. அதில் ஸ்டுடியோகிரின் நிறுவனம் வெற்றி பெற்றிருக்கிறதாம்.
தமிழில் அந்தப்படத்தைத் தயாரிக்கும் உரிமையை அந்நிறுவனம் பெற்றிருக்கிறது. உரிமையை அவர்கள் வாங்கிவிட்டார்கள்? அடுத்து கதாநாயகனாக நடிக்கப்போவது யார்? என்கிற கேள்வி வந்துவிட்டது.
ஸ்டுடியோகிரின் என்பதால் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு முன்னுரிமை இருக்கும். ஆனாலும் இப்போது அதுகுறித்து எந்த முடிவும் செய்யவில்லை என்று அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. அதற்குள் இந்தப்படத்தில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆளாளுக்கு சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
பிரம்மாண்ட ஹாலிவுட் ரீமேக்கில் சூர்யா, விக்ரம், கார்த்தி?
பிரம்மாண்ட பொருட்செலவில் அமெரிக்க விளையாட்டு சார்ந்த படமாக வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘வாரியர்’. காவின் ஓ கோனர் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் கதைப்படி மூன்று ஹீரோக்கள் என்பதால் தமிழில் முன்னணி நாயகர்களான சூர்யா, விக்ரம், கார்த்தியிடம் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் சமீபகாலமாக மலையாள, மற்றும் ஹாலிவுட் ரீமேக் என பெருகி வரும் நிலையில் இது ஆச்சர்யப்படும் விஷயம் அல்ல என்றே சொல்லலாம்.
எனினும் இவர்கள் மூவரும் நடிக்கிறார்களா, அல்லது வேறு யாருமா என்பதும் மற்ற இயக்குநர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
That movie didnt do well in Hollywood.
Looks like already remade in Hindi and releasing this week..
Brothers is an upcoming Indian action-drama film, based on Mixed Martial arts (MMA) directed by Karan Malhotra and produced byDharma Productions, Lionsgate Films and Endemol India.[5] The film is an official remake of the 2011 Hollywood film Warrior.[6] It stars Akshay Kumar, Sidharth Malhotra and Jacqueline Fernandez in leading roles, while Jackie Shroff and Shefali Shah play the supporting roles.
வாழு! வாழ விடு!
அறிவழகன் இயக்கத்தில் தமிழில் ரீமேக் ஆகிறது 'மெமரீஸ்'
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'மெமரீஸ்' திரைப்படம், தமிழில் அறிவழகன் - அருள்நிதி இணைப்பில் ரீமேக்காகிறது.
'ஈரம்', 'வல்லினம்' போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் அறிவழகன். 'வல்லினம்' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்க ஓப்பந்தமாகி இருக்கிறார். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்கி டிசம்பரில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறது படக்குழு. நாயகி மற்றும் படக்குழுவினர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்ற 'மெமரீஸ்' படத்தின் ரீமேக்காகும். ப்ருத்வி ராஜ் நடித்திருந்த இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார். ஏற்கனவே ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' படம் தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
arulnithi is continuing to impress with his interesting choice of movies, though he is at very early stage of his career.
மீண்டும் ரீமேக், தனிஒருவன் இயக்குநர் மோகன்ராஜா முடிவு
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘தனி ஒருவன்’. படத்திற்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி. படத்தின் விமர்சனங்களும் சரி, வசூலும் சரி அனைத்து தரப்பிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில் தனி ஒருவன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருக்கிறாராம் மோகன் ராஜா . இதுகுறித்து அவர் கூறுகையில், நான் மற்ற மொழியில் வெளியாகி ஹிட்டடித்த படங்களை தமிழில் அதிகம் ரீமேக் செய்துள்ளேன். அந்தப் படங்களும் வெற்றிபெற்றுள்ளன. ஆனால் ரீமேக் ராஜா என எனக்கு பெயர் கிடைத்தது.
அந்தப் பெயரை மாற்றவே ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கினேன். முழுக்க முழுக்க ரசிகர்களை மனதில் வைத்து படத்தின் கதையை மூன்று வருடமாக உருவாக்கினேன். இப்போது இந்தப் படத்தை இந்தியில் சல்மான்கான் பார்த்துள்ளார். படம் குறித்து நல்ல கருத்துகள் அவரிடமிருந்து கிடைத்துள்ளன. இந்தியிலும் இப்படத்தை இயக்க தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.
தெலுங்கு, இந்தியில் 'ரீமேக்'கப்படும் துல்கர் சல்மான் படம் - tamil hindu
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள 'கம்மட்டிப்பாடம்' திரைப்படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகிலும், இந்தியில் அர்ஜுன் கபூரும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'கம்மட்டிப்பாடம்' திரைப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இந்தப் படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் ஆக தயாராகிறது.
அகில் மற்றும் அர்ஜுன் கபூர் இருவரும் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை ஆனால் இந்தக் கதை அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அவர்கள் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியில் பல படங்களில் ஒளிப்பதிவாளராக ராஜீவ் ரவி பணியாற்றியுள்ளதால், 'கம்மட்டிப்பாடம்' படத்தை இந்தியிலும் இயக்க அவர் ஆர்வமாக உள்ளார்.
Dane Dane Pe Likha Hai Khane Wale Ka Naam
Bookmarks