தெய்வ பரம்பரையின் வழித்தோன்றல் விக்ரம் பிரபு நிஜமாகவே நான்காம் முறை வரிசையாக சிகரம் தொட்டு தொட்டு ,அடுத்த சிகரங்களில் ஏறி கொண்டுள்ளார்.தனக்கென்று ஒரு பாதை,உடற்கட்டில் கவனம்,அழகான ஸ்கிரிப்ட் தேர்வு,இயக்குனர்களை மதித்தல்,தயாரிப்பாளர்களை தொல்லை படுத்தாத ஒத்துழைப்பு,ஒவ்வொரு படத்திலும் நடிப்பிலும் ,presentation இலும் காட்டும் முன்னேற்றம்,நடனம்,சண்டை இவற்றில் தேர்ச்சி அதிகரிப்பு,நாலு படங்களும் தொடர்ச்சியான சூப்பர் ஹிட் என்பதால் தன்னம்பிக்கையின் உச்சத்தில், அதனால் பரம்பரை கொடையான screen presence (என்னதான் சொன்னாலும் சிவாஜியின் அழகு யாருக்கும் வாய்க்கவில்லை)என்று நிஜமாகவே சிகரம் தொடும் தெய்வத்தின் பேரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேலும் மேலும் வெற்றிகளை குவிக்க தெய்வத்தின் ஆசி துணையிருக்கும்..