Courtesyinamalar

லிப் ஹியுஸ் உயிரை பறித்த ‘பவுன்சர்’

நவம்பர் 27, 2014. Comments

Philp Hughes, Australia, Cricket, Died, Bouncer
சிட்னி: சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று கருப்பு நாளாக அமைந்தது. ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் தலையில் பலத்த காய*ம*டைந்த பிலிப் ஹியுஸ், கடைசி வரை நினைவு திரும்பாமல் மரணம் அடைந்தார். இதனால், கி*ரிக்கெட் உலகம் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முதல் தர போட்டி ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடர். இதில் நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அப்போது, சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’, தெற்கு ஆஸ்*தி**ரே*லிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, தலை*யில் பலமாக தாக்கியது. உடனடியாக நிலை குலைந்த இவர், நினைவு இழந்து கீழே சரிந்தார். செயின்ட் வின்சன்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்*லப்*பட்ட இவ*ருக்கு, தலையில் ‘ஆப்*ப*ரே*ஷன்’ செய்யப்*பட்*டது. மூளைக்கு ஏற்படும் அதிர்ச்சியை தடுக்கும் வகையில், தொடர்ந்து ‘கோமா’ நிலை*யில் வைக்*கப்பட்*டி*ருந்தார். 48 மணி நேரத்துக்குப் பின் தான் எதுவும் சொல்ல முடியும் என, டாக்டர்கள் தெரிவித்தனர். மூளையில் தொடர்ந்து ரத்தக் கசிவு இருந்த நிலையில், மருத்துவ கருவிகள் உதவியுடன் தாக்குப்பிடித்து வந்தார். ஆனால், இவரது உடல் நிலையில் எவ்வித முன்*னேற்*றமும் ஏற்*படவில்லை. சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், நினைவு திரும்பாமலேயே, நேற்று ஹியுஸ் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி டாக்டர் பீட்டர் புருக்னர் கூறுகையில்,‘‘ஹியுஸ் மரணச் செய்தியை அறிவிப்பது சோகமாக உள்ளது. மிகவும் அரிதான விதத்தில், இவரது கழுத்து பகுதியில் பந்து தாக்கியுள்ளது. இதில், தமனியில் பிளவு ஏற்பட, மூளையில் அதிகமான ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணத்தை சந்தித்துள்ளார். கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இவருக்கு, கடைசி வரை நினைவு திரும்பவில்லை. இறக்கும் முன் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்,’ என்றார்.
ஹியுஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், இவரது நெருங்கிய நண்பர் மற்றும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க், உடன் இருந்தார். ஹியுஸ் மரணத்தை அறிந்து கிளார்க், ஹாடின், வாட்சன் என, பலரும் பெரும் சோகத்துடன் காணப்பட்டனர். பின், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் உள்ளிட்ட சக வீரர்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினர். ஹியுசிற்கு ‘பவுன்சர்’ வீசிய அபாட்டும், கனத்த இதயத்துடன் கிளம்பினார்.
26க்கு முன் வந்த எமன்
ஹியுசின் 26வது பிறந்த நாள் நவ. 30ல் வருகிறது. இதுவரை முதல் தர போட்டிகளில் 26 சதம் அடித்துள்ள இவர், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் சில நாட்களில் தனது பிறந்த நாள் வரவுள்ள நிலையில், தொடர்ந்து அசத்தி, 27வது முதல் தர சதம் அடிக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், துரதிருஷ்டவசமாக பந்து தாக்கி, மரணம் அடைந்தார்.
முதல் டெஸ்ட் நடக்குமா
ஹியுஸ் மரணத்தை அடுத்து, ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த உள்ளூர் போட்டிகள் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டன. ஹியுஸ் அடிபட்ட போட்டியில் பங்கேற்ற டேவிட் வார்னர், வாட்சன், ஹாடின் உள்ளிட்ட வீரர்கள், அதிர்ச்சியில் உள்ளனர்.
இவர்கள் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் (டிச. 4) போட்டிக்கு, மனதளவில் தயாராக முடியுமா எனத் தெரியவில்லை. இதனால், பிரிஸ்பேன் டெஸ்ட் துவங்குவது தள்ளிப் போகும் என்று தெரிகிறது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறுகையில்,‘‘ முதல் டெஸ்ட் துவங்க இன்னும் ஒரு வாரம் உள்ளது என்றாலும், வீரர்கள் யாரும் விளையாடும் மனநிலையில் இருப்பர் என்று உறுதியாக சொல்ல முடியாது. இதனால், முதல் டெஸட் போட்டியை பிறகு நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என, பி.சி.சி.ஐ., மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு இணைந்து முடிவு செய்ய வேண்டும்,’’ என்றார்.
சார்ஜா டெஸ்ட் ரத்து
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் சார்ஜாவில் நடக்கிறது. ஹியுஸ் மரணம் காரணமாக, நேற்று நடக்க இருந்த இரண்டாவது நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதற்குப்பதில், கூடுதலாக ஒருநாள் போட்டி நடக்கும்.
பிரதமர் இரங்கல்
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘ ஏராளமான கனவுகளுடன் இருந்த இளம் வீரர் ஹியுஸ். இவரது மரணம் கிரிக்கெட்டுக்கு சோக நாள். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போதே, காயத்தால் மரணம் ஏற்பட்டது அதிர்ச்சியாக உள்ளது,’ என, தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இரங்கல்
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘ எங்கள் மத்தியில் இருந்து பிரிந்து சென்ற ஹியுஸ், குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். துரதிருஷ்டவசமான இந்த சம்பவத்தை சமாளித்து, மீண்டு வர தேவையான வலிமையை தருமாறு, இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்,’ என, தெரிவிக்கப்பட்டது.
1998க்குப் பின்...
கடந்த 1998ல் இந்திய வீரர் ராமன் லாம்பா, 38, வங்கதேச உள்ளூர் தொடரில் விளையாடினார். ‘பீல்டிங்’ செய்த போது, பந்து இவரது தலையில் தாக்கியதில், மூன்று நாட்களுக்குப் பின், மரணம் அடைந்தார். இதன் பின், 16 ஆண்டுகள் கழித்து இப்போது, ஹியுஸ் மரணம் அடைந்துள்ளார்.
ஐ.சி.சி., வருத்தம்
ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன் வெளியிட்ட இரங்கல் செய்தியில்,‘ ஹியுஸ் மரணச் செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். இவரை இழந்து வாடும் கிரிக்கெட் உலகிற்கும், அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என, தெரிவித்துள்ளார்.
துரதிருஷ்டவசமானது
கடந்த 1962ல் வெஸ்ட் இண்டீசில் பார்படாஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய வீரர் நாரி கான்டிராக்டர், 80, சார்லியே கிரிப்த் வீசிய வேகப்பந்துவீச்சில் தலையில் பலத்த காயம் அடைந்தார். இதில் இருந்து ஒரு வழியாக மீண்ட போதிலும், மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பவில்லை.
தற்போது ஹியுஸ் மரணம் குறித்து கான்டிராக்டர் கூறுகையில்,‘‘ இது மிகவும் துரதிருஷ்டவசமானது, சோகமானது,’’ என்றார்.