Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 3997

Thread: Makkal thilagam mgr part 14

Hybrid View

  1. #1
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by makkal thilagam mgr View Post
    கடந்த 64 வருடங்களுக்கு முன்பு, 02-02-1951 அன்று வெளியான, மக்கள் திலகத்தின் மகத்தான காவியம் “மர்மயோகி” பற்றிய சிறப்புக்கள் : :

    1. தமிழ்த்திரையுலகில், முதன் முதலில் பஞ்ச் டயலாக் (PUNCH DIALOGUE) இடம் பெற்றது இந்த காவியத்தில்தான். அந்த பஞ்ச் டயலாக் : குறி வைத்தால் தவற மாட்டேன் தவறுமாயின் குறி வைக்க மாட்டேன் .



    2. முதன் முதலில், திகில் காட்சிகளுக்காக மட்டுமே (வன்முறை, ஆபாசம் போன்ற காட்சிகள் இல்லை என்பது கவனத்தில் கொள்ளவும்) வயது வந்தவ ர்களுக்கு மட்டும் என்று தணிக்கை சான்றிதழ் பெற்ற திரைக்காவியம்.



    மக்கள் திலகத்தின் அறிமுக காட்சி :

    போட்டிகள் பலவற்றில் வெற்றி பேற்ற வீராங்கனுக்கு (எஸ். வி. சகஸ்ரநாமம்) ராணியாக வரும் அஞ்சலிதேவி பரிசு வழங்குவார் என்று அறிவிக்கப்பட, “ வேண்டாம்” என்ற குரல் கணீரென்று ஒலிக்கும். அவையினர் அனைவரும் குரல் வந்த திசையில், ஆச்சரியத்துடன், அதிசயத்துடன் பார்க்க அங்கே குதிரை மீது வேகமாக சவாரி செய்தபடி அரண்மனை மைதானத்துக்குள் நுழைவார் நம் மக்கள் திலகம். இந்த அறிமுக காட்சியில் ரசிகர்களின் பலத்த கைதட்டல் எதிரொலிக்கும். பின், யார் நீ என்று அரசன் வினவ, அதைப்பற்றி உங்களுக்கென்ன என்று நம் பொன்மனச்செம்மல் அவர்கள் திரும்ப பதிலளிக்க, திரையரங்கே அதிரும் அளவுக்கு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புதான். வேண்டுமானால், வீராங்கன் என்னோடு போட்டியிடட்டும் என்று சவால் விட்டு, பின்பு போட்டியில் வெற்றி பெற்ற கரிகாலனாகிய நம் மக்கள் திலகத்தை ராணியின் கரங்களால் பரிசு வாங்க அழைக்கப்படும் போது, “ ராணி, என்று அலட்சியமாக கூறி. மனதிலே ஈரமின்றி மக்களை கசக்கி பிழியும் இவள் கையால் பரிசு வாங்க மாட்டேன்” என்று, கரிகாலனாக நடிக்கும் நம் கலைப்பேரரசர் எம். ஜி. ஆர். அவர்கள் கூறிய பின், ராணி “பிடியுங்கள் அவனை” என்று கூக்குரலிடும் பொழுது, நம் நடிகமன்னன், தனக்கே உரிய இயல்பான நடிப்பால், குதிரை மீது ஏறி அரண்மனையை விட்டு வெளியேறும் காட்சியை, கூடியிருக்கும் மக்கள் கூட்டம் கரிகாலனுக்கு ஜே என்று முழங்கும் போது, படத்தை பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் ஜே என்று முழங்குவதை மறக்க முடியாது.

    நம் நிருத்தய சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்கள் பட்டத்து ராணியை எதிர்த்து ஆக்ரோஷமாக பேசும் வசனக்காட்சிகள் நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள். பின்னாளில் இது போன்ற கதையமைப்பு கொண்ட படங்களுக்கு, நம் இதய தெய்வத்தின் இந்த காவியம் தான் முன்னோடி என்றே கூறலாம். அரண்மனை அவைக்குள் தனி ஒரு நபராக, சாரவிளக்கு ஊஞ்சலை பிடித்தபடி நுழைந்து சவால் விட்டு பேசி மீண்டும் திரும்பும் போது புரியும் சண்டைக்காட்சிகளை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

    இப்படத்தில் நம் மக்கள் திலகம் அவர்கள்; காட்டில் வாழும் ஏழை கூட்டத்திற்கு தலைவராகவும், எவர் உதவி என்று நாடி வந்தாலும் உதவி செய்பவராகவும் நடித்துள்ளார். கணீர் என்று ஒலிக்கும் குரல், பேசிக் கொண்டிருக்கும் போதே அம்பை விடும் வேகம், இயற்கையான நடிப்பு ஆகியவையெல்லாம் பொருந்திய இந்த காவியத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தப்படும். .குதிரையின் மீது அமர்ந்து கொண்டே சண்டையிடும் காட்சியும், அரண்மனைக்குள் வந்து ராணியின் முன்பு அம்பு விடும் காட்சியும், திரைச்சீலைகளை கொண்டு தாவித் தாவி வரும் காட்சியும் அற்புதமானவை.

    மக்கள் திலகத்தின் துள்ளல் நடிப்புக்கும், அட்டகாசமான சாகச சண்டை காட்சிகளுக்கும், ரசிகர்களிடமிருந்து கிடைத்த எழுச்சி மிகு ஆரவாரமும், வரவேற்பும், கைதட்டல்களும், நம் பொன்மனசெம்மலை யோசிக்க வைத்தது. ரசிகர்கள் தன்னிடம் எதை விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களின் இதய வேட்கையை தணிக்கும் வண்ணம் தனக்கென்று ஒரு பார்முலாவை வகுத்து கொண்டது இந்த காவியத்தின் வெற்றி மூலம்தான்.

    ஏழைகளுக்கு இரங்கும் ராபின்ஹுட் பாணி படம் என்று அந்த நாட்களில் பேசப்பட்டது. ஆனால் அதிலும் தனது தனித்துவத்தைக் காட்டி இருப்பார், நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்கள்.

    எம்.ஜி.ஆர் குதிரையில் ஏறி நடிக்கும் காட்சிகளை தவிர்ப்பார் என்று சிலர் கதை விட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில், இந்தப்படத்தில் பல காட்சிகளில் குதிரையில் லாவகமாக அதே நேரத்தில் மிக வேகமாக ஓட்டி நடித்திருப்பதோடு சண்டை செய்யும் காட்சியும், குதிரையின் மீது அமர்ந்து வேகமாகப் பாய்ந்து சண்டை செய்யும் காட்சியும் மிக அருமை. (பின்னாளில், ஜெனோவா, குலேபகாவலி, அலிபாபாவும் 40 திருடர்களும், ராஜா தேசிங்கு, ராணி சம்யுக்தா உட்பட பல படங்களில் குதிரையேற்றத் திறமையை வெகு அழகாகக் காட்டி அற்புதமாக நடித்திருப்பார். .

    கரிகாலன் ராணியை அவருடைய தர்பாரில் சந்திக்கும் அந்த காட்சி பிற்காலத்தில் படையப்பா படத்தில் கதைக்கு ஏற்றார் போல் கொஞ்சம் மாற்றி எடுக்கப்பட்டது என்றும் கூறலாம்.

    பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகள், கம்பீரமான நடிப்பு, அழுத்தமான, ஆழமான நடிப்பு, இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

    வசனக்காட்சிகளில் அவரது குரல்வளம் அற்புதம். நம் கலைச்சுடர் எம். ஜி. ஆர். அவர்கள் குண்டடி பட்ட பின்பு பேசும் வசனக்காட்சிகளை மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் இந்த காவியத்தில் இடம் பெறும் வசனக் காட்சிகளை மிமிக்ரி செய்ய முடியாமல் திண்டாடுவர் என்பது நிச்சயம்.

    என்ன ஒரு நேர்த்தியான நடிப்பு. டூப் போடாமல் தானே தாவித்தாவி பாய்ந்தோடும் காட்சி அசரவைத்தது.

    நம் வசூல் சக்கரவர்த்தி எம். ஜி. ஆர். அவர்களுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும், அவர் ஒரு தலைசிறந்த சண்டை நடிகர் என்றும் நிருபித்த காவியம்.

    மொத்தத்தில், இன்றைய தலைமுறை ரசிகர்களையும் காந்தம் போல் கவர்ந்திழு க்கும் காவியம் “மர்மயோகி” என்று சொன்னால் அது மிகையாகாது.

    இதே கதை தெலுங்கு மொழியில் பின்னர் என்.டி.ராமாராவ் அவர்களை கதாநாயகனாக கொண்டு தயாரிக்கப்பட்டு, 1964ல் வெளியிடப்பட்டது. .


    புரட்சித்தலைவரின் 2 3 வது காவியம் "மர்மயோகி" ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்த்கத்தின் முன் அட்டை தோற்றம் :



    பின் அட்டையில் ஜுபிடர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக "ராணி" விளம்பரம். விளம்பரத்தில், நடிகை பானுமதி மற்றும் சந்திரபாபு ஆகியோர் தோற்றமளிக்கின்றனர். எனவே, பின் அட்டை தோற்றம் பதிவிடப்படவில்லை.
    ஆரம்பமே அமர்க்களம். மர்மயோகி விமர்சனம் சூப்பர். நன்றி திரு.செல்வகுமார் சார்.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  4. #3
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. #4
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  6. #5
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  7. #6
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  8. #7
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  9. #8
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  10. #9
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  11. #10
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Page 1 of 3 123 LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •