-
20th May 2015, 08:12 PM
#2221
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
20th May 2015 08:12 PM
# ADS
Circuit advertisement
-
20th May 2015, 08:33 PM
#2222
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
20th May 2015, 10:59 PM
#2223
Senior Member
Devoted Hubber
முகநூலில் படித்தது
என் உள்ளம் நிறைந்த உத்தம புத்திரனே!!
திரையறையிலிருந்து உங்கள்” பராசக்தி” வெளிவந்து இரண்டாண்டு கழித்தே என் தாயின் கருவறையிலிருந்து நான் வெளிவருகிறேன்.. எனக்கு ஆறு வயதான போது பராசக்தி படத்திற்கு என்னை அழைத்துச் சென்றதாக என் தாய் சொல்லக் கேட்டிருக்கிறேன்.சினிமா பற்றி அறியாத வயதில் நான் பார்த்த முதல் சினிமாவே உங்கள் படம்தான்.
எங்கள் நடிப்பரசே!!
நான் ஏழாவது படிக்கும் போது மீண்டும் அப்படம் பார்த்தேன்.அப்போதும் ஒரு சினிமா ரசிகனாகத்தான் பார்த்தேனே தவிர, நடிப்பை ரசிக்கத் தெரிந்த ரசிகனாகப் பார்க்கவில்லை அல்லது அதற்கான பக்குவம் அன்று என்னிடத்தில் இல்லை.. அது தான் உண்மை!!
எங்கள் கர்ணனே!!
காலங்கள் வேகமாக ஓடின. வளர்ந்த நிலையில் மீண்டும் பராசக்தியை பார்த்தேன். பிரமித்துப் போனேன். கலைஞரின் வசனம் உங்கள் சிம்மக்குரலில் சீறிப் பாய்ந்து, என் செவியில் நுழைந்தபோது எனக்கு ஏற்பட்ட அதிர்வு அடங்க பல நாட்களாயின.
தெய்வ மகனே!
திரைப் படத்தின் பாடல் வரிகளைப் புரிந்து கொள்ளும் அறிவின்றி, இசையை மட்டுமே ரசிக்கத் தெரிந்த அந்த வயதில், உங்கள்
படத்தில் வரும் பாடல்களை அதன் அர்த்தம் புரியாமலேயே வாய்விட்டுப் பாடியிருக்கிறேன். உங்கள் படப் பாடல்களை நீங்கள்தான் பாடுகிறீர்கள் என்றே பல்லாண்டுகள் நினைத்திருந்தேன். . பாடலை
எழுதுபவர் கவிஞரென்றும், பாடுபவர் பின்னனிப் பாடகர் என்றும், பாடலுக்கு இசை சேர்ப்பவர் இசை அமைப்பாளர் என்றும் பின்னர் அறிந்து கொண்டேன். அறிந்து கொண்டு பாடலை ரசிக்கத் தொடங்கிய போது தான்
கவியரசு கண்ணதாசனும், டி.எம்.செளந்திரராஜனும், எம்.எஸ்.விசுவநாதனும் என் இதயத்தில் நீங்கா இடம் பெற்றனர். அந்த மூவர் கூட்டணியில் இணைந்து நீங்கள் நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப் படங்களாயின.
உங்கள் பாடல்கள் கவியரசு கண்ணதாசனை எனக்கு அடையாளம் காட்டிய நாளிலிருந்தே நான் அம் மாகா கவியை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு கவிதை எழுதக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
தவப்புதல்வனே!!..
என் பள்ளி ஆசிரியர் கற்றுக் கொடுத்த கட்டபொம்மனும், வ.உ.சியும் வீர சிவாஜியும், மகாகவி பாரதியும் என் அறிவைத் தொட்டனர்..ஆனால் நீங்கள் நடித்துக் காட்டிய பிறகு அந்த வரலாற்று நாயகர்கள் என் உதிரத்தைச் சுட்டனர்.
.
எங்கள் செல்வமே!!
நூறு சரித்திர நூல்கள் படித்து நான் அறிந்து கொண்டதை உங்கள் ஒரு படம் எனக்குக் கற்றுக் கொடுத்தது.
தெய்வ மகனே!!
உங்கள் பாசமலரைப் பார்த்த பிறகே சகோதரப் பாசத்தை உணர்வுப் பூர்வமாக அறிந்தேன் .இன்று முகநூலில்,என் நட்புப் பட்டியலில் இருக்கும் ஆயிரக்கணக்கான சகோதரிகளை, பாசமலர் சாவித்திரிகளாகவே என் மனக்கண்ணால் பார்க்கிறேன்
கர்மவீரரின் தொண்டனே!!
உங்கள் முதல் படத்திலிருந்து கடைசிப்படம் வரை, ஒன்று விடாமல் பார்த்திருக்கிறேன். பார்த்துப் பார்த்து ரசித்திருக்கிறேன். ரசித்து ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். மகிழ்ந்து மகிழ்ந்து உருகியிருக்கிறேன்.உருகி உருகி
உங்களையே வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
சிங்கத் தமிழனே!!
தலைவர்கள், அரசர்கள், கவிஞர்கள் --- அத்தனை பேரைப் போலவும் நடித்துக் காட்டினீர்கள்.. . ஆனால் உங்களைப் போல நடித்துக் காட்ட இங்கு ஒருவரும் இல்லையே!!
நவரச நாயகரே!!
இந்தப் பாரினில்.........,
மொழி என்றால் அது தமிழ் தான்!!
நாடு என்றால் அது இந்தியா தான்!!
நடிகர் என்றால் அது நீங்கள் தான்!!!
நீங்களே தான்!! நீங்கள் மட்டும் தான்!!
என்றும் சிவாஜி நினைவோடு,
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
20th May 2015, 11:30 PM
#2224
Senior Member
Seasoned Hubber
டியர் செந்தில்வேல்
சிவாஜி சினிமாவைப் பற்றி ஜெமினி சினிமாவில் வெளிவந்த தொடரைப் பகிர்ந்து கொண்டு உள்ளம் நிறையச் செய்து விட்டீர்கள்.
தங்களுக்ககு உளமார்ந்த நன்றிீ.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
21st May 2015, 05:56 AM
#2225
Junior Member
Newbie Hubber
பாலும் பழமும்-1961.
ஒரு முக்கோண காதல் அல்ல மணவாழ்வு கதை. காதல் வாழ்வு என்பது மக்களுக்கும் ,நாட்டுக்கும்,உலகத்துக்கும் சேவை செய்யும் உன்னத நோக்குடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை சொல்லி ,பிரமாண்ட வெற்றி பெற்ற படத்தை பற்றி கேட்டதுண்டா?
உலகம் தோன்றிய நாளிலிருந்து ,இருந்து வரும் ஒரு உன்னத ,மக்களை காக்கும் தொழில் செய்யும் அனைவரும் ,ஒரு படம் பார்த்து தங்கள் தொழிலையே நினைத்து பெருமிதம் கொண்டு ,அந்த படத்தின் நாயகனை பிரதி செய்து லட்சியமாக்கிய அதிசயம் கேட்டதுண்டா?
தமிழின் ஒரே ஸ்டார் நடிகன் ,முப்பது வயது இளைஞன் , தூக்கி வாரிய தலை முடியுடன், சில நரை சேர்த்து (salt &Pepper look )லட்சியவாதி மருத்துவராய் 1960 களில் நடித்து ,ஊரையே மலைக்க வைத்த அற்புதம் கண்டதுண்டா?
ஒரு தத்துவ பாடல், பாடல் ,இசை, நடிகனின் பங்களிப்பு(பாடகனும்) ஆகியவற்றால் அமரத்துவம் கண்டு, இன்றளவும் பெஞ்ச்மார்க் என்று சொல்ல படும் தர உன்னத அளவுகோலாக cult status அடைந்த கதை தெரிய வேண்டுமா?
உன்னத மனிதர்களை வைத்தே ,ஒரு படம் முழுவதையும் சுவாரச்யமாக்கும் கலை தெரிய வேண்டுமா?ரசிகர்கள் பாத்திரங்களுடன் ஒன்றி பயணித்த பேரதிசயம் நிகழ்ந்த வரலாறு அறிய வேண்டுமா?
கதை,வசனம்,இயக்கம்,நடிப்பு,பாடல்கள்,படமாக்கம் அனைத்திலும் உயரம் தொட்டு ,சமூகத்தின் மீது அக்கறையுள்ள பார்வை, அனைத்து ரக(நகரம்,கிராமம்) ஆண் பெண் ரசிகர்களை ஒருங்கே கட்டி போட்ட அறுபதுகளின் ஒரு படத்தை காண வேண்டுமா?
நடிகர்களின் இமயம், கதாசிரிய இமயம் (ஜி.பாலசுப்ரமணியம்),இயக்குனர்களின் இயக்குனர் ,கவிஞர்களின் கவிஞன்,மெல்லிசை சக்ரவர்த்திகள் இணைந்து நடத்திய கலை சாம்ராஜ்யம் தான் பாலும் பழமும்.
ஒரு செல்வ குடும்பத்தால் எடுத்த வளர்க்க பட்டு ,மருத்துவம் முடிக்கும் அனாதையான ரவி, தன்னுடைய லட்சியமாக கொள்வது புற்று நோய்க்கு மருத்துவ தீர்வு. அதற்கு உறுதுணையாக நிற்கும் சாந்தி என்ற செவிலி (nurse ) அனாதையாக நிற்கும் போது ,அவள் தன் லட்சியத்துக்கும் துணை நிற்பாள் என்று மணமுடிக்கிறான் .எடுத்த வளர்த்த பெரியவர்கள் தங்கள் பெண் நளினியை ரவிக்கு மணமுடிக்க எண்ண ,ரவியின் விருப்பத்தை அறிந்து பெருந்தன்மையாக அங்கீகரிக்கின்றனர்.மணவாழ்வில் சாந்தியின் அன்பினால் கவர படும் ரவி, ஒரு கட்டத்தில் முற்றிய காச நோய் கண்ட மனைவியை விட்டு நகராமல் தொழிலை உதாசீனம் செய்ய, அவனை விட்டு அகல்கிறாள் சாந்தி. தான் ஒரு விபத்தில் இறந்ததாக நம்ப வைக்கிறாள். பிறகு விதிவசத்தால் நளினியின் பிடிவாதத்தால் அவளை மணந்தாலும் ,சாந்தியின் நினைவால் ,நளினியுடன் விலகியே இருக்கிறான். ஒரு உணர்ச்சி போராட்டத்தில் ,கண் பார்வையை தற்காலிகமாக இழக்கிறான். ஒரு பெரியவரின் தயவால் சுவிட்சர்லாந்து சென்று நோய் குணமாகி வரும் சாந்தி, ரவியின் நிலையறிந்து ,அவனுக்கே பணி புரிய நீலா என்ற பெயரில் வர, முக்கோண போராட்ட உணர்ச்சி குவியலின் பின் ரவியும்,சாந்தியும் இணையும் கதை.
(தொடரும்)
Last edited by Gopal.s; 21st May 2015 at 05:59 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 7 Likes
-
21st May 2015, 06:42 AM
#2226
Senior Member
Seasoned Hubber
முரளி சார்
என்னுடைய புனைப்பெயராக கோபால் என வைத்துக்கொள்ள உத்தேசம். தங்களுடைய பாராட்டைப் பெறும் பாக்கியம் கிடைக்குமல்லவா..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st May 2015, 07:08 AM
#2227
Junior Member
Veteran Hubber
Originally Posted by
adiram
Sivaji Sendhil sir,
Sorry for disturbance.
In Vasandha Maaligai, Master Ramu acted as youngest brother of vanishree.
How can we forget the dialogue, when master Ramu wake him (NT) from sleep... "Akka varalai..?"
Thank you
Thank you Adiram Sir....Your are right! Error regretted.
May be master venkatesh? memory fades....
Other thespians of this thread may throw some light on this...amidst their schedule...for a correct history of sequences related to NT's movie environs!
-
21st May 2015, 07:44 AM
#2228
Junior Member
Veteran Hubber
Monotony breakers!
Breaking the Fourth wall!!
This phrase refers to a three dimensionally (three walls within the screen) confined screen character trying to communicate to the audience directly by way of emerging off the screen as the fourth wall between them! (sivajisenthil,2015)
The fourth wall is the imaginary "wall" at the front of the stage in a traditional three-walled box set in a proscenium theatre, through which the audience sees the action in the world of the play!(Wikipedia)
Part 1 : எங்கிருந்தோ வந்தாள்
எங்கிருந்தோ வந்தாள் திரைக்காவியத்தின் ஆரம்ப கட்ட அமர்க்கள அறிமுக சீனில் ரசிகர்களின் விசில் அலப்பரை தூள் கிளப்பும்போது நடிகர்திலகம் ரசிகர்களை நோக்கி யாரு கை தட்டறது விசிலடிக்கிறது ..என்று பதிலுக்கு கலாய்ப்பார்...இதுவே நடிகர்திலகத்தின் breaking the fourth wall வெள்ளித்திரை வெளியோட்டம்!!
To break the monotony too....!
In the James Bond film
On Her Majesty's Secret Service (1969) when George Lazenby took over the duty from the original Bond Sean Connery as OO7, he makes a cross-reference to Connery as
"this never happened to the other fellow!" keeping the cheppals of the heroine in hands!! The first time a James Bond
breaking the fourth wall to communicate with the fans!
Enjoy this fantastic breathtaking beach fight scene with earphones plugged in!! The fourth wall is broken at the end!!
Last edited by sivajisenthil; 21st May 2015 at 06:36 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
21st May 2015, 09:00 AM
#2229
Junior Member
Newbie Hubber
பாலும் பழமும்(தொடர்ச்சி)
நடிகர்திலகமே படத்தின் தலையாய உயிர்மூச்சு. படவுலகத்துக்கும்,முதிர்ச்சியற்ற ரசிகர்களுக்கும் நல்ல கலையை தன் உழைப்பென்ற ரத்தத்தால் அமுதாக்கி கொடுத்து கொண்டிருந்தார் பலன் கருதாது. அவர் நடித்த அத்தனை படங்களும் ,ரசிகர்களை உயர்த்தி ,ரசனையை ஒரு படி மேலேற்றும் பணிகளை செய்தன. மற்றொரு புறம் ,ரசிகர்களை திருப்தி படுத்தி,அவன் ரசனை முன்னேறாமல் செய்து,அவனுக்கு பழகிய விருப்பப்பட்ட விஷயங்களை கொடுத்து வியாபாரியாக போட்டியாளர்கள். இப்போதைய படித்த இளைஞர்கள் (ஏட்டு படிப்பே. ரசனை உயர்ந்ததா?) மிக்க காலத்திலேயே கமல் போன்றவர்கள் இவ்வளவு திணறும் போது ,அந்த கால மந்தை கூட்டத்தின் நடுவே ,நடிகர்திலகத்தின் பணி எவ்வளவு மகத்தானது?
,பராசக்தி அந்தநாள்,ரங்கோன் ராதா, மணமகன் தேவை,அன்னையின் ஆணை,கப்பலோட்டிய தமிழன்,பார் மகளே பார்,புதிய பறவை,தில்லானா மோகனாம்பாள்,வியட்நாம் வீடு,கெளரவம் போன்ற படங்கள் காலத்தை எவ்வளவு முந்தியவை? அதுவரை இருந்த மசாலாக்களை முறித்து போட்டவை.
இந்த படத்தில் ,நடிப்புக்கு ஒரு புது இலக்கணம் வரைய பட்டது. poise ,elegance ,balance ,style எல்லாம் கொண்ட ஒரு sophisticated underplay with restraint என்பது அரங்கேறி ரசிகர்களை குதூகலத்தில் தள்ளியது. அவன் ரசனையை கைபிடித்து பத்திரமாக மேலேற்றியது. மூக்காலே ,முணு முணுப்பது(whisper through Nasal Tone ) போல வசனம் பேசி அந்த பாத்திரத்துக்கு தொழில் சார்ந்த ஒரு மரியாதை கிடைக்க செய்வார்.ஒரு உயர் ரக கண்ணிய போக்கு ,பாத்திரத்தின் மனநிலையையும் ,உணர்வு நிலையையும் கூட துல்லியமாக நூல் பிடித்தாற்போல வெளியிட்டு விடும்.
இலகுவான ஒரு உபரி செய்தி. டி.எம்.எஸ் அவர்களுக்கு ஜலதோஷம். அத்துடன் பாடியதால், சிவாஜி தன் பாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்த குரல் பாடல்களுக்கும் கிடைத்து விட்டது.
நடிகர்திலகத்துக்கு இதில் தோதான திரைக்கதையமைப்பு. கண்ணியமான லட்சிய உணர்வுள்ள மருத்துவராக ஆரம்பம், தன் லட்சியத்தை சுமக்கும் துணையை தேர்வு செய்யும் கட்டம், முரண்பட்டு நிற்கும் குடும்பத்தாரிடம் சங்கட வெளியீடு, இலட்சிய மனைவியுடன் உணர்வு ரீதியில் காதலாகி கசிந்துருகும் இடங்கள், அவள் நோய் வாய் பட்ட பிறகு எல்லாவற்றையும் துறந்து அவளுக்காகவே வாழும் வாழ்வு, பிரிவின் சோகம்-தாபம்-வேதனை-விரக்தி, குடும்பத்தால் சுமத்த பட்டு வேண்டா வெறுப்பாக இரண்டாவது திருமணம், மனைவியுடன் ஓட்ட முடியாமல் அவள் உணர்வுகளை தாண்ட முடியாமல் தகிப்பது,கண் போன பின் நீலாவிடம் இயல்பாக அமையும் பிடிப்பு, அவளிடம் உள்ளம் திறப்பது,என்று படம் முழுதும் அவருக்கு கொடி நாட்ட தோதாக கதை ,காட்சிகள்.(பீம்சிங் அல்லவா?)
அவ்வளவு பிரமாதமாக அமையும் அவர் வெளியீட்டு முறை. அமைதியான ,லட்சிய மருத்துவர் , காதலில் விழும் அழகு நான் பேச நினைப்பதெல்லாம் என்றால், மனைவியை குழந்தை போல எண்ணி உருகி பணிவிடை செய்யும் பாங்கு பாலும் பழுமும் கைகளில் ஏந்தி.(சுமைதாங்கி சாய்ந்தால் முன்னோடி)எம்.ஆர்.ராதாவின் நியாமற்ற வேண்டுகோளை curt ஆக ,அமைதியான கண்டிப்புடன் புறம் தள்ளும் அழகு. மனைவிக்கு பணிவிடை செய்யும் போது ,இடையீடு செய்யும் தொலை பேசியில் முதல் வேண்டுகோள் மறுப்பு ,இரண்டாவது முறை இயலாமை கலந்த வெறுப்பான மறுப்பு, மூன்றாவது முறை மூர்க்கமான வெறுப்புடன் உயிர் போச்சா இருக்கா I am coming என்ற இயலாமையின் உக்கிர வெளியீடு,(சாந்தி விலகி போகும் முடிவுக்கு வரும் காட்சி. என்னவொரு impact ), civilian march பாணி நடையுடன் ,வாக்கிங் ஸ்டிக் உடன் பாடும் போனால் போகட்டும் போடா என்ற விரக்தி-தத்துவ பாடலின் ரசிக ஈர்ப்பு முறை (இதனை முன்னோடியாக கொண்டே சிவாஜி என்றால் ஒரு தத்துவ சோலோ என்ற formula எண்பதுகள் வரை தொடர்ந்தது )நளினியின் பிடிவாதம்,பெரியவரின் உடல் நிலை கருதி தன்னிலை வெளியிட்டு திருமணத்துக்கு உடன் படும் கட்டம்,இரண்டாம் மனைவியின் உணர்வு வெளியீட்டின் தகிப்பை தாங்க முடியாத கட்டம்,நீலாவின் குரல் கேட்டதும் வரும் துடிப்பு,அவளிடம் உருவாகும் நேசம் நிறை நட்பு, பெரியவருடன் தன கையறு நிலையை சொல்லி கலங்கி தவிப்பது என்று டாக்டர் ரவியின் பாத்திரம் என்றென்றும் பேச படும் அளவில் நடிப்பில் முன்னோடி புது பாணி அரங்கேற்ற படும்.(இதை ரிலீஸ் நாளில் உடனே பார்த்த அண்ணாவின் மனநிலை யூகிக்க கூடியதே)
சரோஜாதேவி பிரமாத படுத்துவார். சாவித்திரியின் spontaneity வராவிட்டாலும் ,அவரை விட சில இடங்களில் முந்துவார். முக்கியமாக நோயில் வீழ்ந்து கணவரின் அளவு மீறிய ஈடுபாட்டோடு வரும் பணிவிடைகளில் உருகி நெகிழ்ந்து அதே சமயம் கடமை மறக்கும் கணவரை எண்ணி மருகுவது, நீலாவாக வேடமிடும் போது கணவரின் காதல் கண்டு பெருமிதம் ஒரு புறம்,தன்னிலை எண்ணி தன்னிரக்கம் மறுபுறம், இரண்டாம் மனைவியின் ஸ்தானத்திற்கு கொடுக்கும் மனிதம் என்று முகபாவங்களில் பிரமாத படுத்துவார். மின்னல் போல உணர்வுகளை வெட்டி வெளியிடுவார். நட்பை விரும்பவும் செய்வார்.
சௌகார் ஜானகி,சுப்பையா,பாலையா,எம்.ஆர்.ராதா ,நாகையா வழக்கம் போல நல்ல பங்களிப்பு. சுப்பையாவிற்கு அவருக்கென்றே தைத்த சட்டை போன்ற ரோல்.(நானே ராஜாவில் வில்லனாகவும் கிழிப்பார். என்னவொரு performer !!!!)
Last edited by Gopal.s; 21st May 2015 at 09:09 AM.
-
Post Thanks / Like - 2 Thanks, 8 Likes
-
21st May 2015, 09:07 AM
#2230
Junior Member
Newbie Hubber
Originally Posted by
RAGHAVENDRA
முரளி சார்
என்னுடைய புனைப்பெயராக கோபால் என வைத்துக்கொள்ள உத்தேசம். தங்களுடைய பாராட்டைப் பெறும் பாக்கியம் கிடைக்குமல்லவா..
ஒப்பு கொள்கிறேன். நான் என் புனை பெயரை ராகவேந்தர் என வைத்து கொள்ள நீங்கள் அனுமதி வழங்கினால்.
உங்களுக்காவது முரளி ஒருவர்தான். எனக்கு பண்பில் உறைவிடமாய், பண்பு university நடத்தி ,பண்பில் doctorate வழங்கும் மாற்றணியில் இருந்து (அதுவும் பண்பு university vice -chancellor உயர்திரு கலைவேந்தரவர்களிடமிருந்து )பண்பாளர் பட்டம் இலவசமாக வருமே? ஹையா .... ஜாலி....ஜாலி....
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
Bookmarks