-
24th May 2015, 06:40 PM
#2381
Junior Member
Veteran Hubber
நடிகர்திலகத்தின் ஆகாயப் பார்வை 1 : Cloud o' Nine desires!!Gravity Defying!!/வானம் வசப்படும்
Sky walker Sivaji Ganesan Vs Sky Diver/Skier Roger Moore/Bond3!
பூமியில் நாம் கால் பதித்திருக்கும்போது (Down to the Earth) கட்டெறும்பின் கண்களுக்கு நம் மனித இனம் விஸ்வரூப ராட்சஷர்களாக தோன்றும்
அதே மனிதர்கள் ஆகாயத்திலிருந்து பார்க்கும் போது எறும்புகளாகவே தென்படுவர் !
ஆகாயத்தை நோக்கி எறியப்படும் எதுவுமே புவிஈர்ப்பினால் பூமிக்கு வந்து கால் பதித்தே தீர வேண்டும்! ஆனால் வளி மண்டலம் நீங்கி மேலே சென்றுவிட்டால் புவியீர்ப்பு இன்மையால் மிதக்கலாம்
அந்தரத்தில் நடக்கவும் ஆகாயத்தில் மிதக்கவும் ஆசைப்படாதோர் யாருமுளரோ?!
இக்கரை இச்சை!
ஆகாயத்தில் நடக்கும் ஆசையை விண்ணோடும் முகிலோடும் விளையாடும் நாரத வெண்ணிலாவாக தீர்த்துக் கொள்கிறார் நடிகர்திலகம்!!
நடிப்பின் நவரச வானவில் நடிகர்திலகம் மழை வான வில்லின் மீதும் (on Earth, other planets and stars too!!) சர்வசாதாரணமாக ஏறுகிறாரே!
அக்கரைப் பச்சை !
ஆகாயத்தில் தன்னால் மிதக்கவும் எதிரிகளை மிதிக்கவும் முடியும்....போட்டிக்கு வரும் ஜேம்ஸ் பாண்ட்3 ரோஜர் மூர்!
Relax friends!! NT always comes back...so is Bond OO7!
Next episode : NT Vs JB in flight fight!
Sivandha Mann Vs Gold Finger!!
Last edited by sivajisenthil; 24th May 2015 at 07:19 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
24th May 2015 06:40 PM
# ADS
Circuit advertisement
-
24th May 2015, 09:37 PM
#2382
Junior Member
Veteran Hubber
Cloud o' Nine desires!!Gravity Defying!!/வானம் வசப்படும்
நடிகர்திலகத்தின் ஆகாயப் பார்வை 2 Flight Fight!! : ஆகாயத்தில் மிதக்கும் விமானத்திற்குள் எதிரியை மிதித்தல் சிவந்தமண் NT Vs Goldfinger Connery/Bond!
விமானத்தில் இருப்பதே வாழ்க்கைக்கு உத்தரவாதமில்லை!! இதில் விமானத்திக்குள் கட்டிப்புரண்டு சட்டை கிழியாமல் சண்டையெல்லாம் போட்டால்....NT's brilliant stunt moves and Connery's brutal stunt reflexes!!
தரையில் கால் பதியுங்கள் நடிப்பு விமான கேப்டன்களே !!
For NT தேங்காய் வில்லனாமே.....ஹி ஹி
Connery/Bond quips : Congratulations Goldfinger on your promotion...!!
Last edited by sivajisenthil; 25th May 2015 at 06:51 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
-
24th May 2015, 09:47 PM
#2383
Junior Member
Senior Hubber
திருச்சி கெய்ட்டியில் இன்று மாலை காட்சி 75 சதவிகித அரங்கு நிறைவோடு இளையதிலகம் பிரபுவின் சின்னத்தம்பி 3 நாட்களில் ரூபாய் 5000 க்கும் அதிகமாக விநியோகஸ்தர் லாபம் பெற்று மக்கள் ஆதரவோடு வெற்றி நடைபோடுகிறது. இன்று மாலை காட்சியில் ஒவ்வொரு பாடலின் போதும் கைத்தட்டலும் விசில் சத்தமும் கேட்டுகொண்டே இருந்தது.
1991ம் ஆண்டு திரையுலகை புரட்டி போட்ட வசூலில் வரலாறு படைத்ததை இன்றும் பலர் பேசியதை கேட்க முடிந்தது. IPL FINAL தாண்டியும் மக்கள் வரவேற்பு நன்றாகவே இருந்தது.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
25th May 2015, 03:21 AM
#2384
Junior Member
Newbie Hubber
நேற்று சுமார் இந்திய நேரம் 9.00 மணி காலை, கலைஞர் டி வீயில் எஸ்.பீ.,பிறைசூடன் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி. எஸ்.பீ ,மெல்ல நட பாடிய ஒரு பாடகருக்கு assessment கொடுக்கும் போது ,அப்படியே மனம் பொங்கி நடிகர்திலகத்தின் நடிப்பை ,ஸ்டைல் ஐ சொல்லி சொல்லி ,அவர் அவர்தாங்க என சிலாகிக்க, பிறை சூடன் ,தான் எழுதிய கவிதையை சொல்லி நடிகர்திலகத்தை பற்றி பேசினார். இந்த நிகழ்ச்சியில் பொதுவாக நடிக-நடிகையரை பற்றி பேசியதே இல்லை. ஆனால் இந்த முறை ஒரு trans நிலையில் இருவரும் நினைவுகளில் மூழ்கி பரவசமானதை பார்க்க முடிந்தது.
சும்மாவா சொன்னார் சுஜாதா...
நடிகர்திலகம் இறந்த போது மட்டுமே ,அத்தனை அழுதவர் கண்ணீரிலும் உண்மை இருந்தது என்று.
-
Post Thanks / Like - 3 Thanks, 7 Likes
-
25th May 2015, 06:59 AM
#2385
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகம் சண்டைக்காட்சி தொடர் (புதையல்) படித்து, பார்த்து, ரசித்து நன்றி சொன்ன வாசு, முரளி சார், ராகவேந்திரன் சார், கோபால், கிருஷ்ணா, (சப்போர்ட் பதிவு பிரமாதம்) ஆதிராம் சார், சிவாஜி செந்தில் சார், செந்தில்வேல் சார், ரவி சார், அலைபேசியில் பாராட்டு தெரிவித்த வினோத் சார், சின்னக் கண்ணன் சார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
-
25th May 2015, 07:01 AM
#2386
Senior Member
Seasoned Hubber
அவன் தான் மனிதன்...
நேற்றைய மாலைப் பொழுது மற்றோர் மறக்க முடியாத இனிய மாலையாக அமைந்தது. நமது நடிகர் திலகம் திரைப்படத் திறனாய்வு அமைப்பின் சார்பில் கவிஞர் எம்.ஜே.எம்.ஜேசுபாதம் அவர்களின் "நடிப்பதிலும் கொடுப்பதிலும் சிகரம் தொட்ட சிவாஜி" நூல் வெளியீட்டு விழாவும் அவன் தான் மனிதன் 40வது ஆண்டு விழாவும் சிறப்புற நடைபெற்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் பங்கேற்கும் ஐ.பி.எல். இறுதிப் போட்டியின் நேரலை ஒளிபரப்பின் காரணத்தால் மக்கள் வரமாட்டார்கள் என்ற பரவலான அபிப்ராயத்தைத் தவிடு பொடியாக்கி விட்டு, அரங்கு நிறைந்ததுடன் பலர் நின்று கொண்டே நிகழ்ச்சியைக் கண்டு களித்ததன் மூலம், நடிகர் திலகத்திற்காக எதையும் மக்கள் தியாகம் செய்வார்கள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக நிரூபி்த்து விட்டது.
விழாவில் அன்புச் சகோதரர், அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் திரு ராம்குமார் கணேசன் அவர்கள் நூலை வெளியிட, நம் அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மகேந்திரா அவர்கள் பெற்றுக் கொண்டார். உடல் நிலை காரணமாக திரு பஞ்சு அருணாசலம் அவர்களால் பங்கேற்க இயலவில்லை.
பொதுவாக நடிகர் திலகத்தின் நடிப்புப் பற்றியே பலரும் நூல் வெளியிட்டு வந்த மரபை உடைத்து அவருடைய சமுதாயப் பணி, அவர் அளித்த நன்கொடைகள் இவற்றை எதிர்காலத் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வத்திலும் ஈடுபாட்டிலும் கவிஞர் திரு எம்.ஜே.எம். ஜேசுபாதம் அவர்கள் இந்நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அவருக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.
நூல் வெளியீட்டைத் தொடர்ந்து அவன் தான் மனிதன் திரைக்காவியத்தின் சிறப்பை நமது முரளி சார் எடுத்துரைத்தார். மேலும் நமது அமைப்பின் சார்பில் ஒரு நினைவுப் பரிசும் வழங்கப் பட்டது.
தன்னுடைய 90 வயதிலும் சிரமப்பட்டாலும் பரவாயில்லை இவ் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வந்திருந்து சிறப்பித்ததோடு மட்டுமின்றி முழுப்படத்தையும் அமர்ந்து பார்த்த நமது அமைப்பின் உறுப்பினர் திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி அவர்கள் நம் மற்ற ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
மிக நுட்பமாக ரசிக்கக் கூடிய ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் திலகம் மட்டுமே என்ப்து நேற்றும் நிரூபணமானது. குறிப்பாக அந்தப் படிக்கட்டு இப்படத்தில் ஒரு பாத்திரமாகவே மாறி விட்ட்து. ஆனந்த பவனத்தை விட்டு வெளியேறும் காட்சியில் வெளியில் நின்று திரும்பிப் பார்க்கும் போது உணர்ச்சி மிகுதியில் இது ஒரு படம் என்பதையே மக்கள் மறந்து அனுதாபத்தில் திளைத்தது ரசமான அனுபவம் [இதே போன்று படையப்பாவிலும் காட்சி அமைந்திருந்தாலும் அதற்கும் இதற்கும் தான் எத்துணை வித்தியாசங்களைக் காட்டியிருக்கிறார் தலைவர்...]. மாடிப் படிக்கட்டில் ஏறும் போது கூட அந்தப் பாத்திரத்தின் சூழ்நிலையைச் சித்தரிக்கும் வகையில் அந்த நடையில் காட்டியிருக்கும் வித்தியாசம்..
நடிப்பின் இலக்கணம் நடிகர் திலகம் என்பது ஆணித்தரமாக அங்கே நிறுவப்பட்டது.
விழாவில் வெளியிடப்பட்ட நூலின் முகப்பு நம் பார்வைக்கு.
அரங்கிலேயே கணிசமான எண்ணிக்கையில் நூல் விற்பனையாகியுள்ளதாக வெளியீட்டாளர் கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விலை என்னவென்று முன் கூட்டியே தெரியாத நிலையிலேயே இவ்வளவு பிரதிகள் விற்பனையாவது நடிகர் திலகத்தால் மட்டுமே சாத்தியம்.
நூலின் பிரதியைப் பற்றி அறிந்து கொள்ள நூலாசிரியர் கவிஞர் எம்.ஜே.எம். அவர்களின் கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.... 9940225052
விழா விவரங்களை முரளி சாரின் நேர்முக வர்ணனையில் அனுபவியுங்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 7 Likes
-
25th May 2015, 07:07 AM
#2387
Senior Member
Diamond Hubber
நடிகர் திலகம் பற்றி உங்களுக்குள் இருந்து வரும் பல கான்செப்ட் கள் எங்களை ஆகாயப் 'பார்வை' பார்த்து அண்ணாந்து வியக்க வைக்கிறது.
அதுவும் பாண்ட் படங்களின் மீது தங்களுக்கிருக்கும் அதீத ஆர்வமும் அமர்க்களம். ஒரு காலத்தில் தேடி தேடி தியேட்டர்களில் பாண்ட் மூவீஸாக பார்த்த காலங்கள் நெஞ்சில் நிழலாடுகின்றன.
என்னுடய முதல் choice 'Gold finger'. அதனுடைய பிரம்மாண்டமே தனி.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
25th May 2015, 07:14 AM
#2388
Senior Member
Seasoned Hubber
திரையுலகில் மட்டுமின்றி பொதுவாழ்விலும் சரித்திரம் படைத்த திருவிளையாடல் திரைக்காவியத்தின் பொன்விழா நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்பின் சார்பில் கொண்டாட உத்தேசிக்கப் பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. நமது எண்ணங்களும் திட்டங்களும் ஈடேறினால் இது மிகவும் சிறப்பானதாகவும் மறக்க முடியாத வகையிலும் அமைந்து வரலாற்றில் இடம் பெறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.
இதைப் பற்றி சில மேலான விவரங்களை நமது முரளி சார் கூறுவார்.
ஆவலுடன் காத்திருப்போம்..
Last edited by RAGHAVENDRA; 25th May 2015 at 07:27 AM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
25th May 2015, 07:18 AM
#2389
Senior Member
Diamond Hubber
ராகவேந்திரன் சார்,
காவேரி படத்தின் (Sivaji Ganesan - Definition of Style 22) 'சிந்தையறிந்து வாடி' பாடல் பற்றிய பதிவை படித்து ரசித்தேன். உண்மையாகவே அபார உழைப்பு. தலைவரின் அங்க அசைவுகளை அற்புதமான விளக்கங்களுடன் மிக மிக அழகாக தந்து தொடரை அலங்கரித்துள்ளீர்கள். ஒவ்வொரு வினாடியையும் தாங்கள் விவரித்து எழுதியிருப்பது அபாரம். இப்பாடலை நானே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். மிக மிகச் சிறப்பாக நீங்கள் என்றும் மறக்க முடியாத பதிவாக நெஞ்சில் நிலைக்கச் செய்து விட்டீர்கள்.
பத்திரமாக சேமித்து வைத்துக் கொண்டேன்.
திலகத்தின் அந்த வெட்டும், ஒவ்வொரு அங்கமாகக் காட்டும் துடிப்பும். என்னத்தை சொல்வது? அபூர்வமான, திரியில் அதிகம் அலசப்படாத பாடலை தேர்ந்தெடுத்து, அமுத விருந்து படைத்ததற்கு நன்றி!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
25th May 2015, 07:33 AM
#2390
Senior Member
Diamond Hubber
செந்தில்வேல் சார்,
தங்களுடைய ஆவணங்களின் பிரம்மாண்ட அணிவகுப்பை இப்போதுதான் சேர்த்து, தொகுத்து தனி போல்டரில் போட்டு வைத்தேன். சுயநலம் சிறிதும் பாராமல் இரவென்றும், பகலென்றும் பாராமல் தாங்கள் தலைவரைப் பற்றி அளித்துள்ள ஆவணங்களுக்கு என் வாழ்நாள் நன்றிகள். இது ஒரு சாதாரண வேலை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஒவ்வொரு பக்கமாக ஸ்கேன் செய்து அல்லது காமெராவினால் போட்டோ எடுத்து பின் சரி பார்த்து போட்டோ பக்கெட்டில் அப்லோட் செய்து அப்புறம் திரியில் ஒவ்வொன்றாக பதிவு செய்ய வேண்டும். நேரமும் உழைப்பும் அதிகமாக செலவாகும். நிறைய முறை நான் இரவுப் பணிக்கு செல்லும் போது அந்த நேரங்களில் கூட நீங்கள் ஆவணப் பதிவுகள் அளித்துக் கொண்டிருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன்.
உடல் உழைப்பு, ஊன் உறக்கம் பாராமல் தாங்கள் செய்து வரும் இந்த அற்புதமான சேவைக்கு தலைவர் தனது ஆசிகளை தங்களுக்கு நிச்சயம் வழங்குவார். நானும், ராகவேந்திரன் சாரும் தினமும் உங்கள் ஆவணப் பதிவுகளைப் பற்றி உரையாடாமல் இருக்க மாட்டோம். நேரமின்மை காரணமாக தங்களுக்கு நான் முன்னமேயே இது பற்றி எழுத முடியவில்லை.
ஜெமினி சினிமாவின் தொகுப்பு அத்தனையும் என்னிடம் உள்ளது. முன்பு நானும் சில ஆவணங்களை அளித்து வந்தேன். பம்மாலாரும் அருமையாக அளித்து வந்தார். இப்போது நீங்கள். (எப்போதுமே நடிகர் திலகத்திற்கு இந்த சேவையை செய்ய ஒருவர் மாற்றி ஒருவர் இருப்பது இந்தத் திரியின் பெருமை மற்றும் அதிர்ஷ்டம்)
இந்த அரிய சேவைக்கும், காலம் கடந்து நிற்கக் கூடிய தங்களின் ஆவணங்களின் அணிவகுப்பிற்கும் மீண்டும் மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Last edited by vasudevan31355; 25th May 2015 at 08:12 AM.
நடிகர் திலகமே தெய்வம்
-
Post Thanks / Like - 2 Thanks, 5 Likes
Bookmarks