-
1st June 2015, 09:24 PM
#501
Senior Member
Diamond Hubber
நானும் 'கலை' 'கலை'ன்னு பினாத்த ஆரம்பிச்சுட்டேன். கடவுளே! இது எங்க போய் முடிய போவுதோ!
-
1st June 2015 09:24 PM
# ADS
Circuit advertisement
-
1st June 2015, 09:40 PM
#502
Junior Member
Seasoned Hubber
கருவின் கரு - பதிவு 30
ஒரு தாயின் தியாகத்தையும் அன்பையும் 5 பருவங்களாக விவரிக்கலாம் - தத்ரீ (Dhatree) - அதாவது குழந்தையை சுமப்பவள் - இந்த நிலையில் அவள் செய்யும் தியாகங்களுக்கு அளவே இல்லை - ஒரு பெண் தாய்மை என்ற நிலையை அடையும் போதுதான் அவளின் உள்ளே ஒளிந்திருக்கும் கருணை ஒரு கருவாக உருவாகிறது .
இரண்டாவது இடம் ஜனணி (Janani) - குழந்தையை ஈன்றுபவள் - இங்குதான் அவளின் சுயநலம் , தனக்கு என்று வாழ்தல் என்னும் குணங்கள் கொல்லப்படுக்கின்றன - தாய்மை கருவாக வெளி வருகிறது ( A child gives birth to a mother )
மூன்றாவது அம்பா ((One who nourishes the limbs of the child) - தன் குழந்தையின் ஒவ்வொரு அங்கத்தையும் அழகு பார்க்க தொடங்குகிறாள் - அவைகளை ஆராதிக்கின்றாள் .
நான்காவது "வீரசு" ( veerasu ) - (One who makes him a hero),- தன் குழந்தையை வளர்க்கத்தொடங்குகின்றாள் - தன்னம்பிக்கையை பாலாக ஊட்டுகின்றாள் - ஒரு பண்புள்ள நல்ல தலைவனாக வருவான் என்று கனவுகள் பல காணுகின்றாள் .
அடுத்தது ஷுஸ்ரூ - Shusroo- (One who takes care of him till her end ) - பல வருடங்கள் தன் குழந்தையை சுமக்குகின்றாள் - இளமை உதிர்ந்த இலைகளாக கீழே விழ , முதுமையின் கொடுமையிலும் அவனுக்காகவே வாழ்கிறாள் - அவள் தவம் செய்யும் இடத்திற்கு , யாரோ " முதியோர் இல்லம் " என்ற தவறான பெயரை கொடுத்துள்ளனர் - மேற்கொண்ட வரிசையில் சில பாடல்களை ரசிப்போமா ?
பருவம் 1- தத்ரீ
Last edited by g94127302; 1st June 2015 at 10:06 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st June 2015, 10:30 PM
#503
Senior Member
Senior Hubber
-
1st June 2015, 10:58 PM
#504
Senior Member
Veteran Hubber
Originally Posted by
vasudevan31355
(அடுத்த சதித் திட்டத்திற்கு உங்க எல்லோரோட உதவியும் தேவை)
sadhi thittam? I thought thiis was a friendly hub !
" I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
1st June 2015, 11:26 PM
#505
Senior Member
Senior Hubber
//பூமிக்கு நாமொரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீருமுன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்.
தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரிய கீற்றொலித் தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
அம்மா என்னுடன் வாழ்ந்திடக்கூடும் .//
ரவி சூப்பர்.. நெகிழ வைக்கும் கவிதை..ச்சும்மா பூந்து விளையாடறீங்க..
*
-
1st June 2015, 11:49 PM
#506
Senior Member
Senior Hubber
என்னமோ போங்க 16
**
ஓரவிழிப் பார்வையிலே உள்ளமெலாம் தந்தவளை
…ஊடிநின்று கேள்வியினைக் கேட்கின்றான் வாலிபனும்
பாரமென இளமனதை வாட்டுகின்ற வேட்கையிலே
..பாவையவள் நூலிடையை பற்றித்தான் கேட்கின்றான்
ஆரமென நாணத்தில் அன்னமது நடைமறந்து
..ஆணழகன் கேள்விக்குப் பதில்சொல்லும் நாடகந்தான்
வாரம்போய் வருஷம்போய்ப் பலவிதமாய் ஆனாலும்
..வரமெனவே தொடர்ந்துவிடும் காதல்தான் தெரியாதா..
தெரியலையா..என்னமோ போங்க..
*
பார்க்காத உலகம் பழகாத இதயம்
கேட்காமல் தந்தால் குடியேறலாமோ
சிந்தாத இளமை செந்தேனின் இனிமை
தந்தான பின்னே தடை சொல்லுவேனா..
டி.எம்.எஸ். எல்.ஆர்.ஈஸ்வரி..என்னவாக்கும் படம்..
*
-
2nd June 2015, 12:03 AM
#507
Senior Member
Senior Hubber
என்னமோ போங்க - 17
*
முன்பு எழுதியது நினைவில் ( போன போஸ்ட் கவிதை புச்சு)
இயல்புதனை மறந்த காலத்தை விட
இருந்த காலம் எப்பொழுது...
ரகசியமாய்ப்
பக்கத்து கிளாஸ்மேட் கொடுத்த
மயிலிறகை
புத்தகத்தில் இரவில் ஒளித்து வைத்துவிட்டு
கண்ணை இறுக்க மூடி
தூக்கம் வரும் வரை
இரவெல்லாம் சாமியை வணங்கி
காலையில் பார்த்தால்
வளராமல் போக
கண்ணீல் குளம் கட்டி அழுத போது..
ஸ்ஸ் பச்சமிளாகா பிடிக்காது தெரியுமல்
ஏன் போட்ட
எனக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய
ஏண்டி நா போடவேஇல்லையே
எனப் பதறித்
தண்ணீர் தந்த அம்மாவிடம்
கண் சிமிட்டிச் சிரித்த போது...
பருவ நிலைக்கேற்ப
மாறுதலடைந்ததால்
கண்களில் கொஞ்சம் கனவு,
கொஞ்சம் பூரிப்பு
கொஞ்சம் நாணமாய்த் தலைகுனிதல்,
மற்றவர் கொஞ்சம் வியந்து பார்க்கையில்
ஏற்பட்ட பெருமிதம்...
கண்ணாடி காட்டும் முக அழகில்
ஏற்படும் மெலிதான கர்வம்...
எதற்கும் குறைவில்லை..
இவ இவ்ளோ அழகா இருக்காளேங்க்
எப்ப படிப்ப முடிப்பாளோன்னு
ரொம்ப பயம்மா இருக்கு
அம்மா சொல்ல
அப்பா நல்லா பிஜியே படிக்கட்டும்
வேலை கிடைத்தாலும் சரிதான்..
இந்தக்காலத்தில் அழகு மட்டும் கூடாதுடி..
படிப்பும் வேண்டும் என்று சொன்ன போது
வயதை மறந்து ஓடிச் சென்று
அப்பாவை கட்டிக் கொண்டு
தாங்க்ஸ்பா சொன்ன போது...
இயல்பாகத் தானிருந்தேன்...
கல்லூரியிலும் பின் வேலையிலும்
எல்லோரிடமும் சகஜமாகத் தான் பேச்சு..பழக்கமெல்லாம்..
பின்..எப்படி..
கடங்காரா.. எங்கிருந்து வந்தாயடா..
பொருத்தமெல்லாம் சரியா இருக்காம்..
இந்தா பையன் ஃபோட்டோ..
பிடிச்சிருந்தா வரச்சொல்லட்டா..
அப்பா காட்டிய புகைப்படத்தில்
உன்னைப்பார்த்ததில்...
கொஞ்சம் முகம் மலர ...
நாணமும் உடன் வர
உள்ளே ஓடி
வழ்க்கம் போலக் கண்ணாடி பார்க்கையில்
தெரிந்தது மாற்றம் துல்லியமாக..
இன்னொன்றும் புரிந்த்து..
அது நிரந்தரம் என.......
***..
கரெக்ட் தானே பொண்ணுங்கள்ளாம் ஸ்விட்ச் போட்டா மாதிரி எப்படி மாறறாங்க.. என்னமோ போங்க
ம்ம் இங்க இந்தப் பொண்ணு என்னவாக்கும் பாடுது
*
உயிர் நீ உனக்கொரு உடல் நான்.
உடல் தொட்டால் இன்பக் கடல் நான்
வளைந்தால் கொடி போல் வளைவேன் நான் (கொஞ்சம் கஷ்டம் தான்)
விழுந்தால் மடிமேல் விழுவேன் நான்..
பிறந்தது பிறந்தாள் உனக்கெனப் பிறந்தாள்
வளர்ந்தாள் காதல் அமுதம்
கனவிலும் தொடர்ந்தே நிழலென நடந்தே
வருவாள் வாழ்வு முழுதும்..
*
-
2nd June 2015, 12:19 AM
#508
Senior Member
Senior Hubber
என்னமோ போங்க - 18
*
கல்யாணம்னாலே எல்லாருக்கும் ஒருவித மயக்கம் நடுக்கம் - ஆணாகட்டும் பெண்ணாகட்டும் உள்ளூர இருக்கத் தான் செய்யும்..
ஆனா குஷியா வெளிக்காட்டிக்கறதுங்கறது கொஞ்ச பேர் தான்.. அதில் ஆண்களோட பெர்சண்டேஜ் ஜாஸ்தி தான்..
பெண்கள் ரேர் தான்..
இங்கபாருங்க இந்தப் பொண்ணு..படத்தோட டைட்டில் மலை நாட்டு மங்கையாம்.. ஆனா படிச்ச பொண்ணாட்டமா கல்யாணத்தைப் பத்தி எப்படிக் கனவு
காணுது பாருங்க..தப்பில்லைங்கறீங்களா.. நானும் என்ன தப்புன்னா சொன்னேன்.. என்னமோ போங்க
*
-
2nd June 2015, 12:21 AM
#509
Senior Member
Senior Hubber
கருவின் கரு - பதிவு 30// ஒம்ம கிட்ட இருந்து நான் கற்றுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கே.. நீரும் என் குருக்களில் ஒருவராகி விட்டீர்கள் ரவி.. நன்றி..(கடைசிப்பருவத்திற்கு எப்படி முதியோர் இல்லம் வரும்..ஸ்லோகத்தில..அந்தக்காலத்திலயும் அப்படி இருக்கா என்ன)
-
2nd June 2015, 06:57 AM
#510
Senior Member
Seasoned Hubber
அபூர்வ கானங்கள்
Piano ... என்னென்ன மாயமெல்லாம் செய்கிறார் மன்னர். அதுவும் துவண்டு கிடக்கும் மனதைத் தேறுதல் செய்து தைரியம் தரும் பாடலுக்கு பியானோ என்னவாய் இவரிடம் ஏவல் செய்கிறது. மனிதன் என்பவன் பாடலுக்கு சற்றும் குறையாத சிறப்பு வாய்ந்த இப்பாடலைத் தரவேற்றிய நண்பருக்கு நன்றி. பால்குடம் படத்திலிருந்து துணிந்து நில் பாடல் பாடகர் திலகத்தின் குரலில்..
பியானோ மட்டுமா.. ட்ராம்போன், அக்கார்டின், விசில், புல்லாங்குழல், வயலின் எல்லாமே அமர்க்களமான இசை ராஜ்ஜியம்.. கேட்கக் கேட்கத் தெவிட்டாத இன்பம்..
பாடல் வரிகள்.. தனியே ஒரு திரியே ஆரம்பிக்கலாம். அவ்வளவு உண்மையான வரிகள்..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks