Results 1 to 10 of 4018

Thread: Makkal Thilagam MGR -PART 16

Hybrid View

  1. #1
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Makkal Thilagam MGR Horoscope - Courtesy net

    புரட்சிதலைவர் எம் ஜி ராமச்சந்திரன் ஜாதகம் - -

    திரு MGR அவர்கள் 17 சனவரி 1917 இல் மணி 9:15 AM க்கு பிறந்து உள்ளார்.
    இவர் தமிழகத்தை முதல் மந்திரியாக மிக நல்ல முறையில் ஆண்டார் என்பதை பலர் உணர்வார். மதிய உணவு திட்டம் இதில் மிக சிறந்தது.

    லக்னாதிபதி சனி 6- ம் வீட்டில் இருந்தான் - வாழ்க்கையின் முற்பகுதிதியில் போராட்டத்தையும் ஏழ்மையையும் சந்திக்க வைத்தான்.
    2 - ம் அதிபதி குரு மூன்றாம் வீட்டில் இருந்து லாப வீட்டில் இருக்கும் கலைக்குரிய காரகன் சுக்கிரனை பார்த்தான் கலைத்துறையில் லாபங்களை கொடுத்தான்.

    3 - ம் அதிபதி 12 - ல் உச்சம் பெற்றான் . வீரம் கொடுத்தான். 4 - ம் அதிபதி சுக்கிரன் 11 - ம் வீட்டில் அமர்ந்தான் நல்ல தாயை கொடுத்தான். மற்றும் அறிவும் நிரம்ப கொடுத்தான்.

    4 - ம் அதிபதி சுக்கிரன் ராகு என்ற பாவியுடன் கூடி நிற்பதாலும் 6 - ம் அதிபதி சந்திரன் 9 - ம் வீட்டில் நிற்பதாலும் இவரின் தந்தை சிறு வயதில் காலமானார்.

    கடுமையான புத்திர தோஷம் :

    5 - ம் வீட்டில் கேது அமர்ந்தான் , 5- ம் அதிபதி புதன் 12- ல் மறைந்தான். ( நவம்சதிலும் புதன் நீச்சம் ). ஒரு குழந்தைகூட இல்லாத நிலை கொடுத்தான்.

    ஐந்தாம் வீட்டில் கேது இருந்ததால் புத்திர பாக்கியத்தில் கெடுதல் கொடுத்தாலும் யோககாரன் சுக்கிரனின் பார்வை பெற்று பலம் பெற்று இருப்பதால் சாம்ராஜ்யத்தை உருவாக்குமாறு செய்தது. தன்னால் பிள்ளை பெறமுடியாமல் போனாலும் யோககாரன் சுக்கிரன் பார்வை இருந்ததால் பல பிள்ளைகளை தத்து எடுத்து கொண்டார். ஜானகியின் உறவினர் குழந்தைகளையும் தத்து எடுத்தார்.

    6 - ல் சனி பகவான் நின்றான் . எதிரிகளை வெற்றி கண்டார்.

    கடுமையான களத்திரதோஷம்:

    7 - ம் அதிபதி சூரியன் 12 - ல் மறைந்தான் மேலும் உச்சம் பெற்ற செவ்வாயுடன் கூடினான் இரண்டு மனைவியை மணம் முடித்து இருவரும் இறந்தார்கள். 7 - ம் அதிபதி விரைய ஸ்தானத்தில் மறைந்ததின் விளைவும் சனியின் பார்வை கடகத்தில் இருந்து ஏழாம் அதிபதி சூரியன் மீது விழுந்ததும் இந்த அமைப்பை கொடுத்தது.

    ஏழாம் வீட்டை பார்க்கும் குரு மூன்றாவது மனைவியை அமைத்து கொடுத்தான் .

    இப்படி மண வாழ்வில் சோதனைகளை சந்திக்க காரணம் சுக்கிரனுடன் கூடி ராகு ராசியில் நிற்கிறான். நவம்சதில் சுக்கிரனுடன் கேது கூடி நிற்கிறான். இந்த அமைப்பால் பல சோதனை கொடுத்தது.

    விபரீத ராஜயோகம் :

    8 - ம் அதிபதி 12 - ல் உச்சம் பெற்ற செவ்வாயுடன் சேர்ந்தான். விபரீத ராஜயோகம் கொடுத்தான். ஏழை வீட்டில் பிறந்த மனிதனை முதலமைச்சராக்கி பார்த்தான் இந்த புதனும் செவ்வாயும்.

    9 - ம் அதிபதி சுக்கிரன் ராகுவுடன் கூடினான் , 9- ம் வீட்டில் ஆறாம் அதிபதி சந்திரன் அமர்ந்தான் , ஆகையால் தந்தையால் உபயோகம் இல்லாமல் போனது.

    10 ம் அதிபதி 12 - ல் உச்சம் பெற்றான். பிறந்த நாட்டை விட்டு வெளியே வந்து யோகம் பெறுமாறு செய்தான்.( நாவலபிடியா என்ற இலங்கை யில் உள்ள ஊரில் பிறந்து தமிழ்நாட்டில் புகழோடு வாழ்ந்தார். )

    10 ம் அதிபதி உச்சம் பெற்று 8 - ம் அதிபதி புதனுடன் சேர்ந்து 12 -இல் நின்றான். ஆகையால் அண்ணாதுரை இறந்த உடன் இவர் அரசியலில் வெற்றி பெற்றார்.

    பொதுவாக 10- ம் அதிபதி பலம் பெற்று 8 - ம் அதிபதியுடன் கூடினால் ஒருவரின் மறைவுக்கு பின்னால் முன்னேற்றம் கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

    11- ம் அதிபதி குரு மூன்றாம் வீட்டில் அமர்ந்தான். மூன்றாம் வீடு கலையையும் இசையையும் குறிக்கும். ஆகையால் சினிமா துறையில் சீமானாக விளங்க செய்தான் இந்த குரு பகவான்.

    12 - ம் அதிபதி சனி 6 - ல் அமர்ந்தான் , எதிரிகளை வெற்றிகொள்ளுமாறு செய்தான். இவர் வாழும் வரை இவரை எதிர்த்து யாராலும் வெற்றி காண முடியவில்லை.

    குரு திசை - சுக்கிரபுத்தி : சினிமா துறையில் புகுந்தார். குரு 2, 11 - க்கு அதிபதி கலைக்குரிய இடமாகிய 3 - ம் வீட்டில் இருக்கிறார். மேலும் லாப வீட்டில் நிற்கும் சுக்கிரனை பார்வை செய்கிறார். தொழில் காரகன் செவ்வாய் உச்சம் பெற்று குரு பார்வை செய்கிறார். இப்படி பலமான அமைப்பு மூன்றாம் இடத்திற்கும் சுக்கிரனுகும் உண்டானதால் கலை துறையில் நீங்கா புகழ் பெற்றார்.

    புதன் திசை - சுக்கிர புத்தி : 1967 சட்டசபை தேர்தல் வெற்றி :

    8 - ம் அதிபதி என்ற மறைவு கிரகமும் தொழில்காருகன் என்று சொல்லப்படும் 10 - ம் அதிபதியும் இணைந்து பலம் பெற்றால் ஒருவரின் மறைவுக்கு பின்னால் பெரிய பதவி கிடைக்கும்.

    இவரின் ஜாதகத்திலும் 8 - ம் அதிபதியும் புதன் மற்றும் 10 - ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று பலம் பெற்றதால் அண்ணாதுரை இறந்த பின்னால் இவர் சட்டசபை தேர்தலில் மிக பெரிய வெற்றி பெற்றார்.

    8- ம் அதிபதி புதன் 12 - ல் இருந்தான் , ராஜயோகம் கொடுத்தான். யோககாரன் சுக்கிரன் லாபத்தில் இருந்து தனது புத்தியை நடத்தும் பொது இவரை பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தான்.

    புதன் திசை - செவ்வாய் புத்தி :

    1972 - ல் கருணாநிதியால் தி மு க - விலிருந்து வெளிஎற்றபட்டார் .

    புதன் 8 - ம் அதிபதி 12 - ல் இருந்தான் , ராஜ யோகத்தை கொடுக்கவேண்டும். செவ்வாய் 10- ம் அதிபதி 12- ல் இருந்தான் , தொழில் ரீதியில் இட மாற்றம் கொடுக்க வேண்டும் . இந்த கிரகநிலையின் போது தான் தி மு க விலிருந்து வெளியே வந்து தனி கட்சி உருவாக்கினார்.

    செவ்வாய் 12 -ல் இருந்ததால் இட மாற்றமும் 12 - ல் உச்சம் பெற்றதால் தனி கட்சியை ஆரம்பிக்கும் சக்தியையும் கொடுத்தது.

    புதன் திசை குரு புத்தி : 1977 : முதலமைச்சர் ADMK

    புதன் விபரீத ராஜயோகம் பெற்று உள்ளான். குரு லாபாதிபதி உச்சம் பெற்ற செவ்வாய் பார்வை பெற்று புத்தியை நடத்தினான். முதலமைச்சர் பதவியில் அமர்த்தினான்.

    புதனை அடுத்து வந்த கேது திசை : கேது ஐந்தில் இருந்து பலம் பெற்றால் ஒன்று சாம்ராஜ்யம் அல்லது சன்னியாசம் கொடுப்பான். இவருக்கு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி கொடுத்தான்.

    கேது திசை முடியும் வரை பலமாக இருந்தார்.

    கேது திசை குரு புத்தி :

    குரு பகவான் ஆறாம் வீட்டில் சந்திரனின் பார்வையை பெற்று தனது புத்தியை நடத்தும் போது சிறு நீராக கோளாறு கண்டு பிடிக்கப்பட்டது.

    சனி புத்தியும் ஆறாம் வீட்டில் இருந்து நடந்ததால் சிறுநீரக கோளாறு அதிகபட்டது.

    சனி புத்தியை தொடர்ந்து எட்டாம் அதிபதி புதன் மறைவு வீடான 12 - ல் இருந்து நடந்த போதும் உடல்நிலை படுத்த படுக்கை ஆனது.

    சுக்கிர திசை சுக்கிர புத்தி : மரணம்

    சந்திரனுக்கு 8- ம் அதிபதி சுக்கிரன் 3 -ம் வீட்டில் இருந்து ராகு வுடன் கூடியதால் சிறுநீரக கோளாறு சம்பந்தமாக உயிர் பிரியும் நிலையும் ஏற்பட்டது .

    24-12-1987 - மரணம் சம்பவித்தது.

    வாழ்க வளமுடன்
    வீ. பொ.சத்யா.

  2. Thanks Russellisf thanked for this post
    Likes Russellisf liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •