Page 62 of 401 FirstFirst ... 1252606162636472112162 ... LastLast
Results 611 to 620 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #611
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes J.Radhakrishnan, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #612
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes J.Radhakrishnan, Russellmai liked this post
  6. #613
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  8. #614
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes J.Radhakrishnan, Russellmai liked this post
  10. #615
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

  11. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai liked this post
  12. #616
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    322
    Post Thanks / Like
    10. 1952-ன் இறுதியில் தமிழகமெங்கும் கடும்புயல், பெருமழை காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டு, நிவாரணப் பணிகள் அரசால்
    மேற்கொள்ளப்பட்டன. புதுமுக நடிகரான சிவாஜி, நிவாரண நிதியாக ரூ.1000/- வழங்கினார்
    .
    அப்போதிருந்த சீனியர், நட்சத்திர நடிகர்களெல்லாம் சிவாஜியை விட குறைவாக ரூ.100/-ம், ரூ.200/-ம் நிவாரண நிதியாக வழங்கினார்கள்.
    இதனைக் குறிப்பிட்டு அப்போது, 'குண்டூசி' சினிமா இதழ், சிவாஜியைப் புகழ்ந்தும், குறைவாகக் கொடுத்த நடிகர்களை கிண்டல் செய்தும் செய்தி வெளியிட்டிருந்தது.
    நாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான
    உயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.

  13. Likes Georgeqlj liked this post
  14. #617
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like


    ராஜாவின் படங்களுக்கு நன்றி முத்தையன்.

    அச்சோ! மறுபடியும் 'ராஜ' சொர்க்கம். ராஜா! இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் உதடுடன் சேர்த்து உள்ளமும் உவகையுருமே! படங்களைப் பார்த்ததும் இருக்கையில் உடல் அமர வில்லையே! கைகளைக் கொட்டாமல் இருக்க முடிய வில்லையே!

    இப்போதுதான் ஜனவரி 26 1972 பிறந்தது மாதிரி இருக்கிறது. இன்றுதான் ரிலீஸ் ஆன மாதிரி. அன்று கடலூர் நியூசினிமாவில் 'ராஜா' ரசிகர்களுடன் ஆப்பிள் மாலைகளுடன் அனுபவித்த அதே ஆனந்தக் குதூகலம். ஒரே வித்தியாசம் அன்று வயது 11. இன்று 54. ஆனால் ராஜா மார்கண்டேய மகராஜன். அவனுக்கு வயது என்பதே இல்லை. மூப்பு என்பதே இல்லை. அவன் உலகம் உள்ளவரை 25 வயது வாளிப்பு வாலிபன். (ராஜாவாக யாரோ சிவாஜியாம். அவருக்கு அப்போது வயது 44 ஆம். இதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.)

    ராஜாக்களுக்கு வேண்டிய முழுத் தகுதிகளுக்கு மேலும் தகுதி பெறத் தகுதி உள்ளவன் இந்த 'ராஜா' மட்டுமே. அவன் எடையே 50 கிலோவுக்குள் தான் இருக்கும். 18 வயது பருவ மங்கையை அவன் அருகில் வைத்து ஒப்பிட்டுப் பார்த்தாலும் அந்த நங்கை கிழவியாகத்தான் தெரிவாள் அவனுடைய தேஜஸில். இப்போது உணர முடிகிறதா ராஜாவின் இளமை பற்றி? அவனுடைய அந்த ஹேர் ஸ்டைல் இருக்கிறதே! நெற்றியின் முன் மொத்தக் கற்றையாய் புரளும் கண் கொள்ளா அழகு. அந்த வசீகர வதன முகம். மன்மதன் இவன் அழகைக் கண்டு எங்கோ வெட்கி ஓடி விட்டானாம். அவன் கண்கள் 'துறுதுறு'வென ஏன் அலைபாய்ந்து கொண்டே இருக்கின்றன? கண்களை அங்குமிங்கும் உருட்டி நிறைய பொய்களைச் சொல்லும் போது கூட நம்மை அவன் சொல்லும் பாணியால் நிர்மூலமாக்கி விடுகிறானே?

    லீலா வினோதங்கள் புரிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு இவன்தான் குருவா? இவன் செய்யும் குறும்புகள் கிருஷ்ணனிடம் இல்லையே? வைரங்கள் அடங்கிய ஒரு பெட்டியை வைத்துக் கொண்டு வைராக்கியம் பிடித்தவளையும் தன் வலையில் விழ வைக்கும் சாமார்த்தியக்காரன். 'கடைப்பக்கம் போகும் கல்யாணப் பெண்ணை' கோட் போட்ட கிருஷ்ணனாக தொடர்ந்து சென்று ஒரு வினாடி கூட நிற்காமல் இவன் செய்யும் அலம்பல்களுக்கு அளவே இல்லையா?

    இவனுக்கு எதிரியிடம் மோதும் போது எதிரியை கேலி செய்வது ஒரு பழக்கம். சண்டையிடும் போதே 'டபக்'கென்று கண்ணடித்து கலாட்டா செய்து வெறுப்பேற்றுவான். எதிரியை சரியாக ஆழம் பார்ப்பான். ரப்பர் பந்து தரையில் பட்டு முதல் தடவை எகிருவதைப் போல சண்டையிடும் போது துள்ளி எழுந்திருப்பான். இவனுக்கு எதையுமே ஸ்டைலாக செய்ய வேண்டும். அப்படித்தான் பிறந்தான். அப்படித்தான் வளர்ந்தான். சண்டையைக் கூட ஸடைலாகத்தான் அவனுக்கு செய்யத் தெரியும். 'யேய்! என் பெயர் ராஜா' என்று கூறி முடிவாக உதைத்து அனுப்புவான்.

    இவன் சிகரெட்டை வாயில் வைத்தால் வாயு பகவான் அலறுவான். ஏனென்றால் இவன் ராஜாவின் வாய்க்குள். இவன் சொன்னபடிதான் அவன் கேட்க வேண்டும். ஐந்து பூதங்களுமே இவனுடைய ஐந்து அடிக்கும் அடக்கமாகி இவனுக்கு அடிமைகள். ஷூவின் முன்னால் கீழ் உள்ள கேப்பில் ஹாக்ஸா பிளேடை அழகாகச் செருகுவது இவனுக்குக் கைவந்த கலை. கிருஷ்ணன் ஜெயில்தானே பிறந்தான்?! ராஜா அறிமுகமாவதே ஜெயிலில்தான்.

    வீம்பு செய்யும் பெண்ணைத் தன் காலடியில் கிடத்துவது இவனுக்கு இலகுவான வேலை. கொள்ளைக் கூட்டத்தில் இருந்தாலும் நம் நெஞ்சைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரன் இவனேயன்றி நாகலிங்கம் இல்லை. நாகலிங்கம் 9 கோடி மட்டுமே சம்பாதித்த கேடி. ராஜாவோ பல கோடி உள்ளங்களைக் கொள்ளையடித்த அன்றைய இன்றைய மோடி. ராஜ சிம்மாசனம் அவன் ஒருவனுக்கு மட்டுமே. அதைத் தொட்டுப் பார்க்கக் கூட எவருக்கும் தகுதி இல்லாமல்தான் போகும். அவன் அப்படித்தான்.

    இவனை வீட்டை எல்லாம் விட்டு காதலி துரத்த முடியாது. புகை மாதிரி சந்து பொந்து என்று எப்படியோ நுழைந்து காதலி மடியை மெத்தையாக நினைத்து சாய்ந்து விடுவான். இவனை ஒன்றும் செய்ய முடியாது.
    தீராத விளையாட்டுப் பிள்ளை. கோட், பேண்ட் எல்லாம் இவனிடம் தஞ்சம் புகத்தான் விரும்புமாம். மற்றவர்கள் அணிந்தால் அணிந்தவர்களை இவை அசிங்கப்பட வைத்துவிடுமாம். தானும் அசிங்கப் பட்டுப் போகுமாம்.

    இவன் சிகரெட் லைட்டரை வைத்து எதிரிகளைப் படம் பிடிப்பானே சிகரெட்டை வாயில் பிடித்தபடி! எவனும் இவனின் அந்த ஸ்டைலில் மயங்கி அதைக் கண்டு பிடிக்கவே முடியாது. அப்படியே யாருக்காவது சின்ன சந்தேகம் வந்தால் செல்லமாக அவர்கள் பின் பக்கம் சிரித்தபடி தட்டி நடந்தபடியே காரியத்தைக் கந்தலாக்கிவிடுவான். கை தேர்ந்த போலீஸ் கேடி இவன்.

    தந்திர நரி! சாகசப் புலி! பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம் என்று காதலி தூபம் போட்டு பரீட்சித்தால் முதலாளிக்கு யோக்கியன் போல நேர்மை காண்பிப்பான். விதவிதமான பெயர்கள் வைத்திருப்பான். குமரேச ஓதுவார் என்பான். ராஜா என்பான் அப்புறம் இல்லை என்பான். சேகர் என்பான். கவர்ச்சிக் கள்ளன். திடீரென கொள்ளையர் கோவிலில் இருக்கும் போது காவல் அதிகாரியாய் அங்கு வந்து நடித்து அனைவரையும் காப்பற்றி நம்ப வைப்பான். அதே சமயத்தில் உண்மையாக காவல் அதிகாரியாயும் இருப்பான். கொள்ளைக்கார கும்பலை மடக்கும் போது, தன் ஜோடியிடம் கூட தான் யாரென்று வாயால் சொல்லாமல் 'நான் ஒரு போலீஸ்தான்' என்று ஒரு சிறு தலையசைவில் துப்பாக்கி கொண்டு ஜாடையில் காட்டுவான். தகிடுதத்தக்காரன். ஆனால் நல்லவைகள் நடக்க மட்டுமே. சூதுவாதுகளை அவை கொண்டே வெல்வான்.

    சகோதரன் என்று தெரியாமல் அவனுடன் துள்ளித் துள்ளி கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் ஸ்கார்ப் அழகாக காற்றில் பறக்க இவன் மோதும் போது கடல் அலைகளைவிட ஆர்ப்பாட்ட சப்தம் அரங்கங்களில் எழும். 'ராஜா.... ராஜா இல்ல' என்று அங்கேயும் மாறி மாறி உதைபட்டு பின் உடன்பிறந்தவனை உதைப்பான். உணர்ந்ததும் உற்சாகம் கொள்வான்.

    வில்லனிடம் இவனும், இவன் கூட்டணியும் அரைமணி நேரத்திற்கு செய்யும் அட்டகாச கிளைமாக்ஸ் போர் குருஷேத்திரப் போர் போன்று மகா தந்திரங்கள் நிறைந்தது. மூளையை ஷார்ப்பாக வைத்துக் கொண்டு பார்த்தால்தான் இவனுடைய தந்திர வளையங்கள், பின்னல்கள் புரியும். கண்களை நீங்கள் இமைக்கக் கூடாது. இமைத்தால் அவன் செய்யும் ஜாலங்களைக் காணக் கொடுத்து வைக்காத பாவியாகி விடுவீர்கள்.

    தன் தாயைக் கொடுமைப்படுத்தும் போது தானும், தன் சகாக்களும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் பாவனை காட்டி உள்ளுக்குள் அழுவான். அந்த சிரிப்பழுகையில் எல்லோர் மனதிலும் அவனைப் பற்றிய வெறி விதை விதைப்பான். தாயைத் துன்புறுத்தியவனை அதே முறையில் துன்புறுத்தி இன்புறுவான்.

    அவன் கிருதா இருக்கிறதே! சும்மா நாயக்கர் மஹால் தூண் மாதிரி! அப்படியே இமயமலையை கயிறு கொண்டு ஏறுவது போல் பிடித்து ஏறலாம். மலை கோணல். இவன் கிருதா இவனைப் போலவே நேரான நேர்மை. பிரம்மன் இவன் உடலை உளி கொண்டு செதுக்கி செதுக்கி பார்த்து பார்த்து படைத்து இவன் ஒருவனைத்தான் நாம் உருப்படியாகப் படைத்திருக்கிறோம் என்று இறுமாருவானாம். அவனின் இந்த அற்புதப் படைப்பை அவனே வியந்து வியந்து பார்த்து மீண்டும் வியப்பானாம்.

    இவன் மனங்களை மட்டுமா கொள்ளையடித்தான்? பணங்களையும் கொள்ளையடித்தான். ஆம்! வசூலிலும் இவன் எவருமே நெருங்க முடியாத ராஜாதான். பாரடைஸ் இன்னும் சொர்க்கபுரியானது. இவன் அழகு உருவத்தைப் பார்ப்பதற்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டது. இவனை எதிர்த்த கூட்டம் கூட இவன் ஸ்டைலில், அழகில் மயங்கி இவனை ஒளிந்து ஒளிந்து பார்த்து ரசித்து மகிழ்ந்தது.

    இவனுக்கு அழிவு என்பதே இல்லை. எதிரிகளை கண்ணாடி பார்த்து அழ வைப்பதே இவனுக்கு தொழில். இவன் அடியொற்றித்தான் எவனுமே பயணிக்க வேண்டும். இவன் செய்யாதது என்று உலகில் ஒன்றுமே இல்லை. உலக அசைவுகள் அத்தனையையும் நிறுத்தியவன் சிவன். அவனையே அசையாது நிறுத்தும் சக்தி படைத்தவன் இவன்.

    அவன்தான் எங்கள்

    எவர்க்ரீன் 'ராஜா'.

    எங்கள் இதய 'ராஜா'

    ('ராஜ' சேவை தொடரும்)
    Last edited by vasudevan31355; 19th August 2015 at 07:55 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Thanks sss, Russellbpw, Russellmai, eehaiupehazij thanked for this post
  16. #618
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாஸ்கர்

    சுந்தரா குறிப்பிட்டது போல ஊடகங்களின் பாரபட்சமான சந்தர்ப்பவாதஅணுகுமுறைகளுமே நடிகர் திலகத்திற்கு கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்காமல் போனதற்குக் காரணம். ஆரூர்தாஸ் அவர்களின் எழுத்தில் உள்ள நம்பகத்தன்மை எத்தகையது என்பது அனைவருக்குமே தெரியும். நமது நடிகர் திலகம் திரைப்படத்திறனாய்வு அமைப்புத் துவக்க விழாவிலே தேவையற்ற கருத்தினைச் சொல்லி லேசாக சலசலப்பை உண்டாக்கியவர். அவர் எழுத்தில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பது ஊரறிந்த ரகசியம்.

    சண்முகம் இருந்திருந்தால் நடிகர் திலகத்தைத் தனிக்கட்சி துவங்க விட்டிருக்க மாட்டார் என்பது நிச்சயம். இல்லை எனச் சொல்லவில்லை. ஆனால் த.மு.மு. வை நடிகர் திலகம் துவக்கியதற்குக் காரணம், ரசிகர்களுக்காகத் தான். தன்னை நம்பி இருக்கும் ரசிகர்களுக்கு ஒரு தலைவனாக இருந்து நல்வழி காட்டவேண்டும், அவர்களை நல்வழியில் தொடர்ந்து அரவணைத்துச் செல்லவேண்டும் என்ற உயரிய நோக்கமே. அது மட்டுமல்ல அதை செயல்படுத்தியும் காட்டினார். உண்மையில் நடிகர் திலகம் நடத்திய அரசியல் இயக்கம் நம்மையெல்லாம் காலரைத்தூக்கி நிமிர்ந்து நடக்கவைக்கும் அளவிற்கு உன்னதமாகத் தான் செயல்பட்டது. அது வருத்தப்படவேண்டிய விஷயமே இல்லை. இந்தியாவில் எந்த ஒரு அரசியல் தலைவரும் செய்யாத நேர்மையான காரியத்தைச் செய்தவர் நடிகர் திலகம். எந்தவித தேர்தல் கெடுபிடியும் இல்லாத அந்த காலத்திலேயே தன் கட்சி வாசகங்களை சுவர்களிலிருந்து அழித்து விட்டு அவரவர் வீடுகளுக்கு தன் சொந்த செலவில் வண்ணம் பூசித் தந்த ஒரே தலைவர் நடிகர் திலகம் மட்டுமே. இதை தேசிய இயக்கம் நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த காங்கிரஸ் கூட செய்ததில்லை. அதே போல சொந்த செலவிலேயே கட்சி நடத்திய ஒரே தலைவரும் அவர் தான்.

    இதையெல்லாம் அவர் கூடவே இருந்து பார்த்தவன் நான். எனவே தேர்தல் தோல்வி என்பது வேறு. ஒரு நேர்மையான அரசியல் இயக்கத்தை நடத்தி நல்வழி காட்டுவதென்பது வேறு. அந்தத் தோல்வியால் நஷ்டமடைந்தது மக்கள் தான். ஒரு சிறந்த தலைவரை மக்கள் இழந்து விட்டார்கள்.

    அது மட்டுமல்ல, இயக்கம் தேவையா என நானே கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் சொன்ன பதில், நம் பிள்ளைகள் என்னைத் தவிர வேறு எதையும் தெரியாதவர்கள். அவர்களுக்கு உலகமே நான் தான். நான் போன பின்னாலும் அவர்கள் என் பேரைச் சொல்லித் தான் இருப்பார்கள். என் பிள்ளைகள் எனக்காக காலம் தோறும் மற்றவர்களிடம் சேவகம் செய்வதை இனியும் நான் தொடர விடப் போவதில்லை. வெற்றியோ தோல்வியோ நாம் ஒரு குடும்பமாக நமக்கென்று ஓர் உலகத்தை வைத்துக் கொண்டு இயங்கிக் கொள்ளலாம். அண்ணனுக்கு அண்ணன் கட்சிக்கு நாம் ஆதரவு தருவது அவருக்கு நாம் தந்த சொல்லுக்காக என்று சொன்னார்.

    எந்த ஆட்சிப் பொறுப்பிற்கோ அல்லது வேறு ஆதாயங்களின் காரணமாகவோ அவர் கட்சியைத் துவக்கவில்லை. நண்பனுக்குத் தந்த வாக்குறுதியைக் காக்கவே அவர் அதிமுக ஜானகி அணிக்கு ஆதரவு தந்தார். அப்போதும் அவர் தான் ஆட்சியில் அமர வேண்டும் எனக் கோரி மக்களிடம் வரவில்லை.

    அதற்கப்புறமும் அவர் கட்சியைக் கலைத்து விட்டு அமைதியாகத் தான் இருந்தார். தன் கட்சியில் வேட்பாளர்களாகப் போட்டியிட்ட அனைவரையும் அழைத்துத் தன் முடிவைச் சொல்லி அவரவர் தங்களுக்கு விருப்பமான கட்சியில் சேர்ந்து பணியாற்றிக்கொள்ளுங்கள், நான் தொடர்ந்து கட்சி நடத்தும் எண்ணம் இல்லை எனவும் கூறியவர். இதையெல்லாம் நான் முன்பே சொல்லியிருக்கிறேன்.

    கட்சியைக் கலைத்தது கூட ரசிகர்களிடம் கலந்தாலோசித்து விட்டுத் தான் அந்த முடிவெடுத்தாரே தவிர தன் இஷ்டத்திற்கு கம்பெனியைப் போல முடிவெடுத்து நடக்கவில்லை.

    இப்படிப்பட்ட தலைவன் அரசியலில் தொடர்ந்து பணியாற்ற மக்கள் அனுமதிக்கவில்லை என்றால் இதற்குக் காரணம் மக்கள் தானே தவிர அவரல்ல.

    எனவே அவருடைய அரசியலை நினைத்து நாம் பெருமைப்படவேண்டுமே தவிர ஒரே ஒரு தோல்வியை வைத்து சலித்துக் கொள்வதோ அலுத்துக்கொள்வதோ தேவையில்லை.

    அவருடைய செல்வாக்கைப் பொறுத்த மட்டில் அது அப்படியே இருக்கிறது. நான் மீண்டும் மீண்டும் கூறுவதையே இப்போதும் கூறுகிறேன்.

    கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது .அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழத்தை உணர முடியும்.

    பொய் சொல்கிறார்களோ உண்மை சொல்கிறார்களோ அது அவரவர் மனசாட்சிக்குத் தான் தெரியும். நடிகர் திலகத்தின் சாதனைகள் குறிப்பாக தாங்கள் குறிப்பிட்ட சாதனைகள் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவானவை. இவற்றிற்கெல்லாம் சான்றுகள் தேவையில்லை. These are analyses based on facts. No necessity for material evidence.

    நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி எழுதுவதற்கு எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவருடைய சாதனைகளைப் பற்றியும் அவருடைய சமுதாயப் பணிகளைப் பற்றியுமே நாம் அதிகம் மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டும், இதைத் தான் நான் தொடக்கம் முதல் வலியுறுத்தி வருகிறேன்.

    இந்த அடிப்படையில் தான் நானும் இத்தனை நாட்களாக எழுதி வருகிறேன். என்னைப் பொறுத்த மட்டில் அவருடைய சமுதாய பங்களிப்பு, குறிப்பாக அவருடைய அரசியல் ஈடுபாட்டினைப் பற்றியே நான் பெரும்பாலும் எழுதி வந்துள்ளேன்.

    வசூல் விவரங்களைப் பொறுத்த மட்டில் என்னிடம் ஆவணங்கள் அதிகம் இல்லாதது மட்டுமல்ல, அந்த அளவிற்கு விவரங்கள் நினைவிலும் இல்லை என்பதால் இந்த விவாதங்களில் நான் ஈடுபடுவதில்லை. அது மட்டுமின்றி இவற்றை நிரூபிப்பதற்கு நடைமுறையில் இருக்கக் கூடிய சிரமங்களையும் நான் விரிவாக எழுதியுள்ளேன்.

    நடிகர் திலகம் அவ்வளவு தான், இனிமேல் அவர் தலைதூக்க மாட்டார், ஒழிந்தான் சிவாஜி, என்றெல்லாம் ஒரு காலத்தில் மிகவும் ஆபாசமாகவும், ஆத்திரமூட்டும் வகையிலும் அவரை கீழ்த்தரமாக விமர்சித்ததெல்லாம் உண்டு, அவர் படம் ஓடும் தியேட்டரில் ரகளை செய்தவர்களும் உண்டு. இதையெல்லாம் செய்தது மாற்று முகாம் நண்பர்களல்ல. ஆனால் அதையெல்லாம் தாண்டி தன்னுடைய ஒப்பற்ற திறமையினால் நிமிர்ந்து நின்றவர் நடிகர் திலகம். ஆனால் அவரை விமர்சனம் செய்தவர்களெல்லாம் எங்கு போனார்கள் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம். அது மட்டுமல்ல தன்னுடைய செல்வாக்கை சிறிதும் குறைய விடாமல் அப்படியே தக்க வைத்து அதை இன்னும் அதிகமாக வளர்த்துக் கொண்டவர் நடிகர் திலகம். இவையெல்லாம் வரலாறு. கதையல்ல.

    அவருடைய செல்வாக்கு எந்த அளவிற்கு மிகப் பரந்துள்ளது என்பதற்கு சிறந்த உதாரணம் சமீபத்திய கர்ணன் வெற்றியே. அதைத் தொடர்ந்த மற்ற படங்கள் சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தாலும் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தாலுமே மக்களிடம் சென்று சேரவில்லையே தவிர வசூலைப் பொறுத்த மட்டில் அவை வெற்றியைக் காட்டியே உள்ளன. இன்றும் தங்களுடைய திருச்சி மாநகரில் வசந்தமாளிகை மீண்டும் மீண்டும் திரையிடப்படுவதே அதற்கு ஓர் சான்று.

    இந்த திரியில் நானே பலமுறை மனம் வருந்தும் அளவிற்கு நடந்திருக்கிறது. என்றாலும் நடிகர் திலகம் என்கிற அந்த மக்கள் தலைவனுக்காக அவற்றைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் புகழ்பாடும் பணியாற்றி வருகிறேன்.

    எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகனே, இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகனே..

    யானைக்கொரு காலம் வந்தா பூனைக்கொரு காலம் வரும்... பூனைக்கே காலம் வரும் போது, இன்னோர் யானைக்கு வராமலா போய்விடும்...

    தொடர்வோம். தொடர்ந்து மக்கள் தலைவரின் பாதையில் நடப்போம்.

    என்னைப் பொறுத்தவரையில் எனக்கு அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவன்

    மக்கள் தலைவர் நடிகர் திலகம் மட்டுமே.

    அவர் காட்டிய வழியில் நம் பயணம்
    அது அன்பால் தொடரும் பயணம்.
    Last edited by RAGHAVENDRA; 19th August 2015 at 06:58 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  17. Thanks sss, vasudevan31355 thanked for this post
  18. #619
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராஜாக்களுக்கு வேண்டிய முழுத் தகுதிகளுக்கு மேலும் தகுதி பெறத் தகுதி உள்ளவன் இந்த 'ராஜா' மட்டுமே.
    வாசு சார்
    தங்களுக்கே உரித்தான நடை.. படிக்கப் படிக்கத் திகட்டாத தேனமுதாய் தங்கள் பதிவுகள் அமைகின்றன. அதுவும் சில சமயங்களில் தாங்கள் தரும் 'பஞ்ச் ' இருக்கிறதே, ஆழமென்றால் அவ்வளவு ஆழம், அந்த டர்னியர் விமானம் போய் விழுந்த கடலை விட பல்லாயிரம் மடங்கு ஆழமான அர்த்தங்களைத் தரும். சூப்பரான பஞ்ச டயலாக் என்று இப்போதெல்லாம் சினிமாக்களில் நம்மைக் கடுப்பேத்துகிறார்கள். தாங்கள் தரும் இந்த மாதிரியான வரிகளை விடவா.

    ராஜான்னா ராஜாதான்.

    அதைப் பற்றி எழுதும் சிறப்பிற்கு வாசுன்னா வாசுதான்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  19. #620
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முத்தையன் சார்
    நடிகர் திலகத்தின் எந்தப் படமாக இருந்தாலும் அவற்றின் நிழற்படங்களை மிகவும் அழகாக அருமையாகத் தொகுத்தளிக்கிறீர்கள். தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. தாங்கள் எம்.ஜி.ஆர் அவர்களின் ரசிகராக இருந்தாலும் தங்களையும் ஈர்ப்பது நடிகர் திலகத்தின் நடிப்பும் அவருடைய தோற்றமும் என்பதில் எங்களுக்குப் பெருமையே. அதே போல் அதை அனுபவித்து அதை எங்களுடன் பகிர்ந்து கொள்வது தங்களுடைய நல்ல மனதைக் காட்டுகிறது.
    தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
    தொடர்ந்து நடிகர் திலகத்தின் நிழற்படங்களைத் தாருங்கள்.
    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •