-
27th August 2015, 03:53 PM
#1001
Senior Member
Seasoned Hubber
As per the diagram attached and as my knowledge, any vehicle crossing any traffic island, should take only circular road for right turn and if it is so, then the Fountain is the one which is blocking vision if at all there is any such. The right turn from Kamarajar Salai to Radhakrishnan Salai has to be made only circum navtigating the Fountain and not diagonally in beteen the fountain and the statue. This point has to be raised in the argument. Similarly there is enough space for vehicles coming from Radhakrishnan Salai to turn right to Kamarajar Salai which again has to be made circumnavigating the fountain. Similarly for those who want to make U turn at Kamarajar Salai from IG Office should also circumnavigate the fountain. In all the possibilities there is no issue of traffic snarl here since there is ample space for vehicle movement around the fountain. The space between the statue will be used only for two kinds of movement - one for right turn from Radhakrishnan Salai to Kamarajar Salai and the other for U turn from IG office. And this is the normal system followed in any traffic island in the city. In all probabilities, the statue of Sivaji obstructing the vsion is only an assumption and not reality.
This is purely my personal opinion only.
Last edited by RAGHAVENDRA; 27th August 2015 at 03:57 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th August 2015 03:53 PM
# ADS
Circuit advertisement
-
27th August 2015, 04:08 PM
#1002
Senior Member
Seasoned Hubber
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை சென்னை காமராஜர் சாலையில் அதே இடத்தில் நீடிக்க வேண்டும் என்பது உணர்வு பூர்வமான வேண்டுகோளும் கூட. நெஞ்சிருக்கும் வரை படத்தின் பாடல் காட்சியில் அந்த நீரூற்றினைச் சுற்றி வந்து கீழே குதிப்பார். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட உடன் தற்போது சிலை இருக்கும் இடத்தில் ஒரு நாற்காலியும் குடையும் இருத்தப்ப்ட்டு அங்கு தான் நடிகர் திலகம் ஓய்வெடுத்தார். இப்போது போல காரவனெல்லாம் கிடையாது. வெயில் பாராமல் அந்தக் குடை கீழேயே அமர்ந்தார். மிகச் சரியாக தற்போது சிலை இருக்கும் இடத்தில் தான் அமர்ந்தார். இதை நேரில் பார்த்த வகையில் சென்டிமென்டாக நாங்கள் அந்த நாட்களை நினைவு கூர்ந்து நெஞ்சம் நெகிழ்கிறோம். எனவே இந்த உணர்வு பூர்வமான வேண்டுகோளை மதித்து நடிகர் திலகத்தின் சிலை அங்கேயே இருக்க மாண்பு மிகு முதல்வர் அன்புச் சகோதரி ஜெயலலிதா அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். அவருடனேயே திரைப்படத்துறையில் பணியாற்றிய காரணத்தால், நடிகர் திலகத்தின் மேன்மையை மற்றவர்களை விட அவர் அதிகம் தெரிந்தவராவார்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 4 Thanks, 5 Likes
-
27th August 2015, 07:39 PM
#1003
Junior Member
Senior Hubber
வரி.
எந்த வரியும்
தர மறுத்த
எங்கள் மன்னன்
தந்தான்..
நடிப்புக்கு முகவரி.
-
Post Thanks / Like - 2 Thanks, 4 Likes
-
27th August 2015, 07:46 PM
#1004
Junior Member
Senior Hubber
திருத்தம்.
எல்லாக் காலத்திலும்
இருக்கிறார்கள்..
வீரபாண்டிய கட்டபொம்மன்
வேறு மாதிரி
இருப்பதாய்க் கருதி,
பாடப் புத்தகத்தில்
உங்கள் உருவம் போல்
மாற்றி வரையும்
பள்ளிப் பிள்ளைகள்.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
27th August 2015, 08:08 PM
#1005
Junior Member
Senior Hubber
Today vpkattabomman at satyam theatre enjoyed lot of yongsters and children wondered about NTs roaring performane and started to know more about NT and his calibre.
if the trend contiues it will be another karnan for us.
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
-
27th August 2015, 08:50 PM
#1006
Junior Member
Regular Hubber
congrats thiru. muthaiyan ammu for your contributions in the hub
-
27th August 2015, 09:26 PM
#1007
Junior Member
Senior Hubber
சத்தமல்ல..சங்கீதம்.
புதுசாய்
கல்யாண மண்டபம்
திறக்கிறோமென்று
தெருமுனையில்
ஒலிபெருக்கிகளை
அலறி விடுகிறார்கள்.
"வேண்டாம்.. வேண்டாம்" என
கெஞ்சுகின்றன காதுகள்.
----------
காற்று கிழித்து விரையும்
வாகனமொன்றின்
ஹாரன் சத்தம்
தூக்கி வாரிப் போடுகிறது.
---------
வாசலில் விளையாடும்
சிறுவர்கள்
சிரிக்கிறார்கள்..
கத்துகிறார்கள்..
எதைக் கொண்டோ,
எதிலோ அடித்து
பெருத்த ஓசையெழுப்புகிறார்கள்.
அமைதி என்கிற
வார்த்தை
மறந்தே போயிற்று.
--------
தெரு முழுக்க
சிவப்பாய் பரப்பி
சரவெடி வெடிக்கிறார்கள்.
கைகள், தன்னைப் போல்
காதுகளை நோக்கிப் போகிறது..
அடைத்துக் கொள்ள.
---------
ஆனால்...
கட்டபொம்மனாகவே மாறி நீங்கள் கத்திப் பேசுவதை
இன்னுமொருமுறை
கேட்டு விட
செவிகள் துடிக்கின்றனவே?
எப்படி நிகழ்கிறது
இந்த அதிசயமென்று
யோசித்தால்
புரிகிறது.
உங்கள் சிம்மக் குரலிலிருந்து
வரும் பேரொலி
காதுகளோடு
சம்மந்தப்பட்டதில்லை..
அது,
எங்கள் மனசோடு
சம்மந்தப்பட்டது.
நாங்கள்
எங்கள் மனசோடு
பொருத்தியிருக்கும் காதுகளுக்கு
இது சத்தமல்ல..
சங்கீதம்.
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
27th August 2015, 09:50 PM
#1008
Senior Member
Devoted Hubber
அன்பு நண்பர் திரு சந்திரசேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
நம் கனவான மணிமண்டபம் பற்றிய அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு மிக்க நன்றி!
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
27th August 2015, 10:02 PM
#1009
Junior Member
Seasoned Hubber
Originally Posted by
Aathavan Ravi
புதுசாய்
கல்யாண மண்டபம்
திறக்கிறோமென்று
தெருமுனையில்
ஒலிபெருக்கிகளை
அலறி விடுகிறார்கள்.
"வேண்டாம்.. வேண்டாம்" என
கெஞ்சுகின்றன காதுகள்.
----------
காற்று கிழித்து விரையும்
வாகனமொன்றின்
ஹாரன் சத்தம்
தூக்கி வாரிப் போடுகிறது.
---------
வாசலில் விளையாடும்
சிறுவர்கள்
சிரிக்கிறார்கள்..
கத்துகிறார்கள்..
எதைக் கொண்டோ,
எதிலோ அடித்து
பெருத்த ஓசையெழுப்புகிறார்கள்.
அமைதி என்கிற
வார்த்தை
மறந்தே போயிற்று.
--------
தெரு முழுக்க
சிவப்பாய் பரப்பி
சரவெடி வெடிக்கிறார்கள்.
கைகள், தன்னைப் போல்
காதுகளை நோக்கிப் போகிறது..
அடைத்துக் கொள்ள.
---------
ஆனால்...
கட்டபொம்மனாகவே மாறி நீங்கள் கத்திப் பேசுவதை
இன்னுமொருமுறை
கேட்டு விட
செவிகள் துடிக்கின்றனவே?
எப்படி நிகழ்கிறது
இந்த அதிசயமென்று
யோசித்தால்
புரிகிறது.
உங்கள் சிம்மக் குரலிலிருந்து
வரும் பேரொலி
காதுகளோடு
சம்மந்தப்பட்டதில்லை..
அது,
எங்கள் மனசோடு
சம்மந்தப்பட்டது.
நாங்கள்
எங்கள் மனசோடு
பொருத்தியிருக்கும் காதுகளுக்கு
இது சத்தமல்ல..
சங்கீதம்.
அருமை திரு ஆதவன் சார் , இனிய தமிழில் , எளிய நடையில் இவ்வளவு அழகாக நீங்கள் அளிக்கும் புகழாஞ்சலி 1000 மணிமண்டபத்திற்கு சமம் .
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
27th August 2015, 10:09 PM
#1010
Junior Member
Seasoned Hubber
திரு முத்தையன் அம்மு - ஏன் திடீரென்று எங்கள் மீது ஒரு கோபம் ? உங்கள் பதிவுகளை எப்படி ரசிக்கிறோம் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது . உங்கள் பதிவுகள் வரவில்லையென்றால் உங்கள் உடம்புக்கு என்னவோ என்று இங்கு எல்லோருக்கும் உடனே கவலை பிறந்து விடுகிறது . உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் வேண்டும் என்று அன்புடன் எப்பொழுதும் உங்களை இந்த திரியில் கேட்டுக்கொள்கிறோமே - எப்படி அவைகள் உங்கள் கவனத்திலிருந்து தப்பின ?? தொடருங்கள் - கோபம் வேண்டாம்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks