Page 161 of 401 FirstFirst ... 61111151159160161162163171211261 ... LastLast
Results 1,601 to 1,610 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1601
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நண்பர்களே,

    http://www.mayyam.com/talk/showthrea...urali-Srinivas

    மேற்காணும் இணைப்பில் உள்ள திரியில் நடிகர் திலகத்தின் அத்தனை சாதனைகளும் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டு நாமெல்லாம் வருவதற்கு முன்னரே முரளி சாரால் விவரமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அத்திரியானது ஸ்டிக்கி என்ற வகையில் அதே இடத்தில் எப்போதும் இருக்கும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது. எத்தனை புதிய திரிகள் துவக்க்ப்ப்ட்டாலும் இந்த சாதனைத் திரி அவருடைய சாதனைகளைப் போலவே நிரந்தரமாக அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது. இதனை விட மேலும் நாம் புதியதாக எழுத முடியுமா தெரியவில்லை. எனவே புதிய பரிமாணங்களில் நாம் நமது இதய தெய்வம் மக்கள் தலைவரின் புகழாரம் சூட்டுவோமே.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. Likes Russellbzy liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #1602
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆதவன் ரவி
    புதிய தலைமுறை ரசிகர்கள் நமது மக்கள் தலைவரின் திரைப்படங்களை எந்தக் கோணங்களில் அணுகுகிறார்கள், எப்படி ரசிக்கிறார்கள் என்பது சற்று புரியாமல் தான் சில காலங்களுக்கு முன் இருந்தது. தங்களுடைய பதிவுகளின் மூலம் தெள்ளத் தெளிவாக தாங்கள் அதைக் கூறி விட்டீர்கள். காலத்தைக் கடந்து நிற்கும், வெகுவாக புறக்கணிக்கப்பட்ட அவருடைய பின்னாளைய படங்களின் சிறப்பினை மிக அழகாக தொகுத்து தாங்கள் வழங்கி வருவதின் மூலம் முதல் படத்திலிருந்து கடைசிப் படம் வரையிலும் தான் சிங்கம் தான் என்று நிரூபித்த அந்த மாபெரும் கலைஞனின் பெருமை பாரெங்கும் பரவலாக சென்றடைகிறது.

    தங்களுடைய இந்த உன்னதமான பணிக்கு என் சிரந்தாழ்த்த வணக்கங்கள்.

    லட்சுமி வந்தாச்சு, அப்போதைய புதிய தலைமுறை இயக்குநரின் புதிய அணுகுமுறை, புதிய கோணங்களில் நடிகர் திலகத்தின் வித்தியாசமான நடிப்பிற்கு சரியான தீனி போட்ட படம்.

    Subtle என்கின்ற நுட்பமான சங்கதிகளைத் தன்னுடைய Subdued எனப்படும் அடக்கமான இயல்பான நடிப்பின் மூலம் எடுத்துக்கூற இன்னுமோர் வாய்ப்பை அளித்த திரைப்படம். லட்சுமி வந்தாச்சு.
    Last edited by RAGHAVENDRA; 10th September 2015 at 06:23 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #1603
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஸ்ரீதர், ஏபிஎன் இருவருமே பொருளாதார ரீதியில் நஷ்டப்பட்டவர்கள் என்பது உண்மையே. ஆனால் அவை நிச்சயமாக நடிகர் திலகத்தின் படங்களால் அல்ல என்பதும் வரலாறு நிரூபித்த உண்மையாகும். ஸ்ரீதரைப் பொறுத்த மட்டில் அவளுக்கென்று ஓர் மனம், அலைகள் என பரீட்சார்த்தமான படங்களை எடுக்கிறேன் என, சிவந்தமண் மூலம் தான் ஈட்டிய லாபத்தை விரயம் செய்தார். இரு படங்களுமே தோல்வியடைந்தன. அதே போல ஏபிஎன் அவர்களும் கண்காட்சி மேல் நாட்டு மருகள் என வெவ்வேறு படங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் மூலம் தான் ஈட்டிய லாபத்தை விரயம் செய்தார். இதன் பின்னரே இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து படம் எடுக்கச் சென்றனர். இதுதான் வரலாறு. நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்து நஷ்டமடைந்தேன் என்று மனசாட்சி உள்ள எந்த தயாரிப்பாளருமே இது வரை கூறியதில்லை. ஏபிஎன்னைப் பொறுத்த மட்டில் திருமலை தென்குமரி மட்டுமே நல்ல லாபத்தைத் தந்தது. மேல் நாட்டு மருமகள் நல்ல புகழைப் பெற்றாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. சென்னையிலும் ஓரிரு பெரு நகரங்களிலும் மட்டுமே இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே போல் தான் அ்கத்தியர் திரைப்படமும், பெரு நகரங்களில் மட்டுமே ஓரளவிற்கு வசூல் செய்தது. சென்னையில் அகத்தியர் நல்ல வரவேற்பைப் பெற்றதும் உண்மை.

    இன்னும் சொல்லப்போனால் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் திரையிட்டு அதன் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு திரையரங்கினை வாங்கிப் புதுப்பித்து, அவர் பின்னாளில் அத்திரையரங்கின் பெய்ராலேயே அடையாளம் காணப்பட்டார். இது அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியதாகும்.
    Last edited by RAGHAVENDRA; 10th September 2015 at 06:58 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #1604
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    TODAY 1.30PM WATCH RAJ TV

  7. Likes Russellmai liked this post
  8. #1605
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    அன்பார்ந்த திரி நண்பர்களே
    நிறைந்த மனதுடன் பெறும் வாழ்த்துக்கள் உடனே பலித்து விடும் என்பது எவ்வளவு உண்மை ....!
    என் ஆராய்ச்சி மாணவர்கள் எனக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்று அன்புள்ளத்தோடு எனக்கு கல்விப்பணி ஓய்வு வாழ்த்துக்களைத் தெரிவித்தீர்கள் ...
    இப்போது எனது வழிநடத்துதலில் பி எச் டி முடித்த இரு மாணவர்கள் :
    முனைவர் பட்டம் சார்ந்த ஒரு ஆய்வுக்கட்டுரையை சிகாகோவில் செயல்படும் உலக நீர்சூழல் அமைப்புக்கு சமர்பித்து சிறந்த ஆய்வுக்கான பரிசினை தட்டி வந்து எனக்கும் எனது பல்கலைக்கழகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்!. மகிழ்ச்சியை உங்களனைவருடனும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன் !!
    செந்தில்

    FOR IMMEDIATE RELEASE 20 August 2015

    Indian Scientists to Receive Prestigious Water Quality Award

    ALEXANDRIA, Va. – Indian Scientists Dr. Manoj P. Samuel (Principal Scientist, Indian Council of Agricultural Research- National Academy of Agricultural Research Management, Hyderabad), Dr. S. Senthilvel (Professor(Agricultural Engineering)), Tamil Nadu Agricultural University, Coimbatore and Dr. A.C. Mathew (Principal Scientist, Indian Council of Agricultural Research-Central Plantation Crops Research Institute, Kasaragod, Kerala) will receive the prestigious McKee Groundwater Protection, Restoration, or Sustainable Use Award- 2015 from the Water Environment Federation (WEF), an international not-for-profit technical and educational water quality organization. The award will be presented during a ceremony at the organization’s 88th Annual Technical Exhibition and Conference this fall in Chicago, Ill. www.weftec.org.
    This award is considered to be one of the most prestigious awards in the area of water resources and environmental engineering and being conferred to Indian scientists for the first time.

    நடிகர்திலகத்துக்கு மானசீகமாக இப்பெருமையை அமரரின் ஆசிவேண்டிசமர்பிக்கிறேன்
    திரிசார்ந்த பங்களிப்புகளை மீண்டும் அக்டோபர் இரண்டாம் வாரம் முதல் நண்பர்களின் இணைவில் தொடங்குகிறேன்
    Dr. Senthil,

    This is wonderful and awesome news. You should be feeling proud to have had wonderful students and they feel proud having an inspiring teacher like you. Congratulations for this achievement and wishing you having a continued success in the future.

    Plus, on behalf of NT fans, it is a great honor that one of us has achieved this distinction. Planning to visit US to receive the award?

    Regards.

  9. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  10. #1606
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dr. Senthil,

    This is wonderful and awesome news. You should be feeling proud to have had wonderful students and they feel proud having an inspiring teacher like you. Congratulations for this achievement and wishing you having a continued success in the future.

    Plus, on behalf of NT fans, it is a great honor that one of us has achieved this distinction. Planning to visit US to receive the award?

    Regards.
    tacinema

    Thank you Sir for your greetings. I just did my duty as the thesis guide for these gems of students who have their own latent talents and I feel proud for being instrumental to have brought out their potential to this level. The present generation youngsters prove that they cannot be misjudged or underestimated! They just make us sit back and enjoy the ride!! All pride dedicated to my University and the science and engineering community of our nation.
    I am not attending this function abroad as I am nearing my superannuation retirement by the end of this month and I have to join as a Guest faculty in another Institute...but my students will go and attend!
    regards,
    senthil

  11. #1607
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ஸ்ரீதர், ஏபிஎன் இருவருமே பொருளாதார ரீதியில் நஷ்டப்பட்டவர்கள் என்பது உண்மையே. ஆனால் அவை நிச்சயமாக நடிகர் திலகத்தின் படங்களால் அல்ல என்பதும் வரலாறு நிரூபித்த உண்மையாகும். ஸ்ரீதரைப் பொறுத்த மட்டில் அவளுக்கென்று ஓர் மனம், அலைகள் என பரீட்சார்த்தமான படங்களை எடுக்கிறேன் என, சிவந்தமண் மூலம் தான் ஈட்டிய லாபத்தை விரயம் செய்தார். இரு படங்களுமே தோல்வியடைந்தன. அதே போல ஏபிஎன் அவர்களும் கண்காட்சி மேல் நாட்டு மருகள் என வெவ்வேறு படங்களில் நடிகர் திலகத்தின் படங்கள் மூலம் தான் ஈட்டிய லாபத்தை விரயம் செய்தார். இதன் பின்னரே இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து படம் எடுக்கச் சென்றனர். இதுதான் வரலாறு. நடிகர் திலகத்தை வைத்து படம் எடுத்து நஷ்டமடைந்தேன் என்று மனசாட்சி உள்ள எந்த தயாரிப்பாளருமே இது வரை கூறியதில்லை. ஏபிஎன்னைப் பொறுத்த மட்டில் திருமலை தென்குமரி மட்டுமே நல்ல லாபத்தைத் தந்தது. மேல் நாட்டு மருமகள் நல்ல புகழைப் பெற்றாலும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. சென்னையிலும் ஓரிரு பெரு நகரங்களிலும் மட்டுமே இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதே போல் தான் அ்கத்தியர் திரைப்படமும், பெரு நகரங்களில் மட்டுமே ஓரளவிற்கு வசூல் செய்தது. சென்னையில் அகத்தியர் நல்ல வரவேற்பைப் பெற்றதும் உண்மை.

    இன்னும் சொல்லப்போனால் ஒரு விநியோகஸ்தர் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைத் திரையிட்டு அதன் மூலம் தான் ஈட்டிய வருவாயில் ஒரு திரையரங்கினை வாங்கிப் புதுப்பித்து, அவர் பின்னாளில் அத்திரையரங்கின் பெய்ராலேயே அடையாளம் காணப்பட்டார். இது அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியதாகும்.
    ராகவேந்தர் சார்

    தாங்கள் கூறியது முற்றிலும் முக்காலமும் நடந்த சத்தியமான நிகழ்வுகள்

    திரு APN அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த திருவிளையாடல் திரைப்படத்தின் வெற்றி உலக வெற்றி ..அதனை தொடர்ந்து சரஸ்வதி சபதம் , கந்தன் கருணை இப்படி பல படங்கள் .....வசூல் பிரளயம் !

    இதில் சம்பாதிக்காததை படுதோல்வி அடைந்த மற்ற ஒரே ஒரு படத்தில் APN எடுத்த அந்த ஒரே ஒரு படத்தில் பணம் சபாதித்தாராம் APN. இதில் இருந்தே நடிகர் திலகம் திரை உலகிற்கு வந்த காலத்தில் இருந்து அவரைத் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாதவர்கள் , மிகவும் ORGANISED நெகடிவ் PUBLICITY ஒருசாரர் செய்து வருவது வெட்டவெளிச்சம் !!!

    திரு ஸ்ரீதர் அவர்கள் சிவந்தமண் எடுத்தாராம் தமிழிலும் , ஹிந்தியிலும் . அவருக்கு பணம் நஷ்டமாம் ! மீண்டும் அதே போல வைர நெஞ்சம் தமிழிலும் ஹிந்தியிலும் எடுத்தாராம் ! மீண்டும் நஷ்டமாம் ....பிறகு நீங்கள் கூறிய படங்கள் எடுத்தாராம் ஸ்ரீதர் ....அவைகளும் நஷ்டத்தை கொடுத்தது . பிறகு உரிமைக்குரல் எடுத்தார் .....அந்த ஒரு படம் இவரை கோடீஸ்வரர் ஆக்கி விட்டதாம் .

    யார் யாரை வேண்டுமானாலும் கோடீஸ்வரர் ஆகட்டும். அதுபற்றி நமக்கு கவலை illai. ஆனால் சிவந்தமண் தர்த்தி வைரநெஞ்சம் தமிழ் மற்றும் ஹிந்தி வடிவம் நஷ்டத்தை ஏற்படுத்தியது என்று புளுகவேண்டியது . கேட்டால் ஸ்ரீதர் சொன்னார் ...அந்த பத்திரிகையில் சொன்னார் என்று கூறு வார்கள் இதனை நாம் விளக்கமும் கேட்ககூடாது !

    RKS

  12. Likes Russellbzy liked this post
  13. #1608
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தயாரிப்பாளர்களின் கனவு நாயகன் நடிகர் திலகம். தாம் நஷ்டமடைந்தாலும் பரவாயில்லை நடிகர் திலகத்தை வைத்துப் படம் எடுப்பதைப் பெருமையாக நினைக்கிறேன் என்று முதல் படத்திலேயே பெருமாள் முதலியார் பிடிவாதமாக அவரை கதாநாயகனாகப் போட்டு படம் எடுத்ததை விட நடிகர் திலகத்திற்கு வேறு பெருமை ஏதும் தேவையில்லை. பல தயாரிப்பாளர்கள் நடிகர் திலகத்தை வைத்துப் படம் எடுத்தாலே போதும் என்று மிகவும் பெருமையாக சொல்லிக் கொண்டது தமிழ்த் திரையுலகில் இவருக்கு மட்டுமே கிடைத்த பெரும்பேறு. அவ்வாறு நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று வந்த தயாரிப்பாளர்கள் யாருமே நஷ்டத்தை சந்தித்ததில்லை என்பதும் வரலாற்று உண்மை.

    சாதாரண தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமாகி பின்னாளில் பெரிய பேனராக வளர்ந்து நின்ற பல நிறுவனங்களின் முதல் படத்தில் நடிகர் திலகம் நடித்துக் கொடுத்து அவர்களைத் தூக்கி விட்டிருக்கிறார்.

    அண்ணாவின் ஆசை படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான பாலாஜி, தன்னுடைய சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். தங்கை படத்தின் மூலம் அந்நிறுவனம் ஈட்டிய புகழும் பொருளாதார ஸ்திரத்தன்மை, தொடர்ந்து ஏராளமான படங்களைத் தயாரித்து மிகப் பெரிய பேனராக வளர்ந்தது, நடிகர் திலகத்தினால் தான்.

    பனித்திரை, தேன் மழை, நினைவில் நின்றவள் என்று படங்களை எடுத்து வந்த முக்தா ஃபிலிம்ஸ் நிறுவனம் உலகெங்கும் புகழ் பெற்று நிலைக்க வைத்ததும் நடிகர் திலகத்தின் நிறைகுடம், தவப்புதல்வன், அன்பைத் தேடி. அந்தமான் காதலி, இமயம், கீழ்வானம் சிவக்கும், உள்ளிட்ட படங்களே.

    வி.கே.ராமசாமி, கே.சோமுவுடன் இணைந்து படங்களை லக்ஷ்மி பிக்சர்ஸ் பேனரில் படங்களைத் தயாரித்து வந்த ஏபிஎன் அவர்களின் முதல் தயாரிப்பிற்கே தைரியமாக நூறாவது படம் என்கிற முத்திரையை அளித்து, தன்னுடைய prestigious projectஐ ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்துக்கு அளித்த பெருந்தன்மையும் நடிகர் திலகத்திற்கு மட்டுமே உரியது.

    மற்ற அனைவருக்குமே நூறாவது படம் ஒரு பெரிய பேனரின் பெயரில் தான் எடுக்கப்பட்டது குறிப்படத்தக்கது. அவ்வாறல்லாத மற்ற சிலரும் தங்களுடைய சொந்த தயாரிப்பில் தான் தங்களுடைய நூறாவது படத்தைத் தந்துள்ளனர்.

    அதே போல ஏவிஎம்முடன் பணியாற்றி வந்த ஏசிடி அவர்கள் சினி பாரத் என்ற பெயரில் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போது அதில் நடித்துக் கொடுத்து பின்னர் அந்நிறுவனமும் உலகப் புகழ் பெற வைத்தவர் நடிகர் திலகமே.

    இன்னும் இது போன்று ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய முதல் படத்தில் நடிகர் திலகத்தை நடிக்க வைத்துப் பெருமை பெற்றதோடு நீடித்த புகழையும் அடைந்தன,

    1952 முதல் 1999 வரை 47 ஆண்டுகள் தமிழ்த்திரையுலகில் சக்கரவர்த்தியாக விளங்கி வந்த நடிகர் திலகத்தால் ஒரு தயாரிப்பாளரும் நஷ்டமடைந்ததில்லை என்பதே உண்மை.
    Last edited by RAGHAVENDRA; 10th September 2015 at 02:49 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  14. #1609
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Vasu,

    Please maintain decorum. Let us not stoop down to low levels.

    Thanks for your understanding.

    Regards
    Last edited by Murali Srinivas; 10th September 2015 at 07:22 PM.

  15. #1610
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    ஏ.பி.நாகராஜன் தயாரித்த படங்கள் நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், தில்லானா மோகனாம்பாள் ஆகியவைதான். இவற்றை ஸ்ரீ விஜயலட்சுமி பிக்சர்ஸ் என்ற பேனரில் தயாரித்தார். இவற்றில் திருவருட்செல்வர் மட்டுமே சுமாராக போனது. மற்றவை அனைத்தும் பேய் ஓட்டம் ஓடியவை.

    மற்ற படங்களான கந்தன் கருணை (ஏ.எல்.எஸ்), திருமால் பெருமை (வெங்கடேஸ்வரா மூவீஸ்), ராஜராஜசோழன் (ஆனந்த் மூவீஸ்) படங்களில் சம்பளத்துக்காக கதை வசனம் இயக்கம் மட்டுமே.

    இப்படியிருக்க சொந்தப்படங்களில் என்னத்தே நஷ்ட்டம் அடைந்தார்?. 'அந்தப்பக்கம்' போய் என்னத்தே வாரிக்கட்டினார்?. தோல்விப்படத்தை தந்ததற்கே இந்த குதியா?.

    ஸ்ரீதர் சிவந்தமண் வெற்றிக்குப்பின் உத்தரவின்றி உள்ளே வா படத்தை தயாரித்தார் (இயக்கம் இவரது உதவியாளர் சக்கரவர்த்தி) . படம் பெரிய வெற்றி. உடனே 'நான் மீண்டும் என் பழைய பாணிக்கு போகிறேன்' என்று, காலாவதியாகிப்போன அவரது பழைய பாணியில் அவளுக்கென்று ஓர் மனம், அலைகள், ஒ மஞ்சு போன்ற படங்களை எடுத்து தோல்வி கண்டார். சிவந்தமண் அவருக்கு லாபம் தரவில்லைஎன்றால் மீண்டும் நடிகர்திலகத்தை வைத்து ஹீரோ 72 தயாரிப்பாரா என்று நமது "நண்பர்கள்" யோசிக்க வேண்டும்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •