-
17th September 2015, 06:08 PM
#1
Senior Member
Diamond Hubber
மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5
மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5
***************************************
எப்போ தகத்து நினைவார்க் கிடரில்லை
கைப்போத கத்தின் கழல்
ஆதௌ கீர்த்தனா ரம்பத்திலே...
அட... மன்னிச்சுக்கோங்க... பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை என்று சொல்ல
இது இரட்டைக் கிளவியா ( காந்திமதி + வடிவுக்கரசி என்று சிக்கா சொல்வார் )
அதனால் ஆரம்பத்திலே என்ன சொல்லி நான் எழுத என்று சுவிஸ் குளிர் போல
கைகால்கள் நடுங்க......
முதலில் இந்த பாகத்தை துவக்கச் சொல்லி என்னை துவைத்து எடுத்த வாசுஜி அவர்களுக்கு
மனதின் அடித்தளத்திலிருந்து என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.
மனதைக் கவரும் மதுர கானங்கள் திரியின் ஒவ்வொரு கிளையிலும் மலர்களாகப் பூத்து
மணம் வீசிய பதிவுகளை அள்ளி வழங்கிய நண்பர்கள் சின்னக் கண்ணன், கோபால் ஜி, ரவி சார்,
ராகவ்ஜி, சி.செ.ஜி, முரளி ஸ்ரீனிவாஸ், எஸ்.வாசுதேவன் ஜி, சுந்தர பாண்டியன், கோபு,
வாத்தியாரையா, ராகதேவன், எஸ்.வாசுதேவன், ஆதிராம், எஸ்வீ, கிருஷ்ணா, கல் நாயக்,
கலை வேந்தன், வரதா ஜி மற்றும் யார் பெயராவது விட்டுப் போயிருந்தால் மன்னித்து விடும் மாண்பு
மிக்க நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
மருமகள் ந.தி. போல படுக்கையில் கிடந்த என்னை ரேவதி போல "அன்னையாக மாறவா..
அள்ளி வைத்து பாடவா" என்று தாலாட்டு பாடி எழுப்பி விட்ட பெருமை மதுரகானத் திரிக்கு சேரும்.
சட்டு புட்டுனு பூஜையை முடிச்சு லட்டைக் கொடுப்பியானு கேட்கும் குரலுக்காகவே இந்தப் பாடலுடன் திரியைத்
துவக்குகிறேன்.
பூவண்ணன் எழுதி ஆனந்த விகடனில் வெளியாகி மக்களின் மனம் கவர்ந்த "ஆலம் விழுதுகள்" என்ற நாவல்
திரைப்படமாகி "நம்ம குழந்தைகள்" என்ற பெயரில் திரையிடப்பட்டபோது டைட்டில் பாடலாக சீர்காழி கோவிந்தராஜன்
பாடிய இந்தப் பாடல் ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல்.
"சீதக் களப" என்று ஆரம்பித்து "சரணே சரணே" என முடியும் வரை முற்றுப்புள்ளி இல்லாத ஒரே வரியாக இருக்கும்
இந்தப் பாடலுடன் ஆரம்பிக்கும் நம் ஐந்தாம் பாகம் தடையின்றி இசை வெள்ளமாக நண்பர்கள் அனைவராலும்
மனதை நனைக்கட்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
எல்லா நண்பர்களும் எல்லா நலமும் பெற்று இனிதாக வாழ கணபதியை வேண்டுகிறேன்.
Last edited by madhu; 18th September 2015 at 04:01 AM.
-
Post Thanks / Like - 6 Thanks, 6 Likes
-
17th September 2015 06:08 PM
# ADS
Circuit advertisement
-
17th September 2015, 07:01 PM
#2
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு மது அவர்கள் இன்று துவங்கிய மதுர கானம் -பாகம் 5 வெற்றி பெற வாழ்த்துக்கள் .
மதுர கானம் பாகம் 4 சிறப்பாக நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
மையத்தில் 8000 பதிவுகள் வழங்கிய திரு மது அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
-
Post Thanks / Like - 3 Thanks, 0 Likes
-
17th September 2015, 09:05 PM
#3
Senior Member
Senior Hubber
வாங்க வாங்க மதுண்ணா... வாழ்த்துக்கள்
மோதகந்த் தந்துதான் மேனி சிலிர்க்கவைத்தீர்
சோதனையாய் எண்ணினேன் சொற்களை - சாதகமாய்ச்
சொல்வேனே உம்மிடமே தெள்ளியதாய் நன்றாக
வெல்லுமிங்கு உம்பாட்டு விண்..
அது சரீ.. நிஜம்மாவே குறளுக்குஎன்னாங்க அர்த்தம்..!
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
madhu thanked for this post
-
17th September 2015, 09:10 PM
#4
Junior Member
Veteran Hubber
பாகம் 5 மதுஜி துவக்கத்தில் இனிதே வளர்ந்திட தன்னந்தனியாக ஒரு ரோஜா மலருடன் வந்து வாழ்த்துகிறேன்!
ஆனால் தனிமையிலே இனிமை காண முடியாதே !
எனவே பாகம் 5ல் நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்!
Last edited by sivajisenthil; 17th September 2015 at 09:13 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 4 Likes
madhu thanked for this post
-
17th September 2015, 09:15 PM
#5
Senior Member
Senior Hubber
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி...
மதுண்ணா...வெகு அழகான பாடல்..சிலிர்க்கிறது..முழுதும் கேட்டேன்.. மிக்க நன்றி.. வினாயகன் நம் நண்பர்கள் அனைவரின் இடரையும் அப்படியே என் இடரையும் களைந்திடுவான்.. அகெய்ன் தாங்க்ஸ்
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
17th September 2015, 09:21 PM
#6
Senior Member
Senior Hubber
மதுண்ணா உங்கள் அவதாரத்தில் உள்ள குட்டிக் கிருஷ்ணனைப் போலவே குழந்தை உள்ளம் கொண்ட இரண்டாவது நபர் நீங்கள் (அப்ப ஃபர்ஸ்ட்.. நீயா.. மன்ச்சு..உன்னையார் இங்க வரச்சொன்னா )
எண்ணம் போல க் கண்ணன் வந்தான் அம்மம்மா
என்னை ஆளத் தன்னை த் தந்தான் அம்மம்மா.. தப்போ.. பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா..
-
Post Thanks / Like - 0 Thanks, 4 Likes
-
17th September 2015, 09:33 PM
#7
Senior Member
Senior Hubber
சி.செ.. ரோஜாப்பூ குண்டா இருக்கே.. ஒல்லி ரோஜாப்பூ போடலாமா.. இல்லை அவர் குறள்ல தான் ஆரம்பிச்சார்..
குறள் படிப்போம்..
பனிமழை மேகங்கள் பொழிகின்ற குளிரினில்
திருக்குறள் படிக்கட்டுமா கண்ணே (லூசாய்யா நீ )
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
17th September 2015, 10:41 PM
#8
Senior Member
Seasoned Hubber
ஆஹா...
காலை சென்று மாலை வருவதற்குள் பாகம் முடிந்து விட்டதே... என்ன வேகம் ....
மது சார்
தங்களுடைய அழகிலே கனிரசம், அன்பிலே மதுரசம்,
பாட்டு என்னென்ன, அதன் பாவம் என்னென்ன,
நோக்கம் என்னென்ன ஓ...ஓ...ஓ...
அனைத்தும் நினைவில் இருப்பதென்ன...
அருமையான அகவலுடன் ஆரம்பித்தீர் திரி ஐந்தை
அகமகிழும் பாடலெல்லாம் உறவாடும் சந்தை
மனம் போன போக்கினிலே மனம் நோகும் வாக்கினிலே
வெளிப்படுத்த இது இல்லை மந்தை
தேமதுர கானமதை தேனமுதாய்த் தானளித்து
செவியோடு குளிரவைக்கும் சிந்தை..
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 5 Likes
madhu thanked for this post
-
17th September 2015, 10:49 PM
#9
Junior Member
Diamond Hubber
சொர்க்கம் "மது "விலே
எழுதும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் தினம் வரும் நிதம் நிதம்
எல்லாம் உறவு தான்
Last edited by senthilvel; 17th September 2015 at 10:56 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
18th September 2015, 12:16 AM
#10
Senior Member
Senior Hubber
அருமையான அகவலுடன் ஆரம்பித்தீர் திரி ஐந்தை
அகமகிழும் பாடலெல்லாம் உறவாடும் சந்தை
மனம் போன போக்கினிலே மனம் நோகும் வாக்கினிலே
வெளிப்படுத்த இது இல்லை மந்தை
தேமதுர கானமதை தேனமுதாய்த் தானளித்து
செவியோடு குளிரவைக்கும் சிந்தை..''//
//
சொர்க்கம் "மது "விலே
எழுதும் அழகிலே
மது தரும் சுகம் சுகம் தினம் வரும் நிதம் நிதம்
எல்லாம் உறவு தான்//
அட அடடா.. ராகவேந்தர் , செந்தில் நன்னாயிட்டுக் கவிதை வடிக்கறீங்கோ.. தாங்க்ஸ்..
ஞான் எந்து செய்யும்.. ரோசிக்கணும்
Bookmarks