-
30th October 2015, 08:29 AM
#11
Junior Member
Senior Hubber
திகட்டாத 16 பூர்த்தியாகி,
தித்திக்கும் 17 துவக்கமாகி
இருக்கிறது.
பலத்த காற்றில் படபடத்து
விரிந்து மூடிக் கொள்கிற
புத்தகத்தின் பக்கங்கள் போல்,
பதினாறாம் திரியின் பக்கங்கள்
பரபரப்பாகவே நிறைந்து
பூர்த்தியாயின.
பதினாறென்ன..?
பதினேழென்ன..?
இலட்சம் திரிகளில் எழுதினாலும் தீராத புகழை
தன்னுடையதாக்கிக் கொண்ட
தனக்குவமை இல்லாத கலைஞன் அய்யா நடிகர் திலகம்.
அவரது பெருமை போற்றிய
பதினைந்து திரிகளில் நான்
இல்லையே என்கிற என்
கவலையை, இந்தப் பதினாறாம்
திரி தீர்த்தது.
மூன்று மாத கால மகிழ்வே
இத்தனை பரவசம் தருகின்றதென்றால்..
துவங்கியிருக்கிற இந்தப்
பதினேழாம் திரி முழுதும்
நான் பங்குபெறப் போகிற
சந்தோஷம்...
எனக்கு மோட்சமே தரும்.
------------
மக்கள் தலைவர் அய்யா
நடிகர் திலகத்தின் பெருமை
பேசி நான் 16-ம் திரியில்
எழுதிய ஒவ்வொன்றையும்
எழுத்து,எழுத்தாய் ரசித்து
என்னை வியந்தவர்கள்,
அன்போடு ஆலோசனை
தந்தவர்கள், பாராட்டியவர்கள்..
தரமான பதிவுகளால் திரியை
நிறைத்தவர்கள்...
அத்தனை பேருக்கும் திரி-16
நிறைவடைந்த இந்த நேரத்தில்
நெஞ்சார நன்றி சொல்கிறேன்.
திரி-16 எனும் இப்போது
நிலை சேர்ந்த தெய்வத் தேரோட்டத்தை அன்றொரு
தினம் தொட்டுக் கொடுத்துத்
துவக்கிய உயர்திரு.சிவாஜி செந்தில் அவர்களுக்கு எனது பணிவான நன்றிகள்.
திரி-17 எனும், அதே கடவுளை
உள்ளமர்த்திய அடுத்தவொரு
தெய்வத் தேருக்கு வடம்
பிடிக்க வந்திருக்கும் அன்புத்
தோழர்.திரு.செந்தில்வேல்
அவர்களுக்கு எனது இதயத்தின்
ஆழத்திலிருந்து நல்வாழ்த்துகள்.
திரு.செந்தில்வேல் அவர்களின்
ஆசைப்படியே பழைய திரிகளைப் பெருமை செய்த
பெரியோரெல்லாம் மீண்டும்
களமிறங்கட்டும்.
கலைக் கடவுளுக்கான நமது
புகழ் மந்திரங்கள் எல்லாத்
திசைகளிலும் ஒலிக்கட்டும்.
புனிதர் நடிகர் திலகத்தின்
புகழெழுதப் பேனாக்கள்
திறக்கட்டும்.
பதினேழு(ம்) சிறக்கட்டும்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
30th October 2015 08:29 AM
# ADS
Circuit advertisement
-
30th October 2015, 08:33 AM
#12
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-25
"புதிய பறவை".
அயல்நாட்டிலிருந்து தாயகம்
திரும்பி, நீண்ட காலத்திற்குப்
பிறகு வீடு வரும் நடிகர் திலகத்தை வேலைக்கார
ராஜூ தாத்தா அடையாளங் கண்டு பாசம் பகிரும் கட்டம்.
"மலேயாவுக்குப் போகும் போது
நீ, அம்மா, அப்பா..எல்லோரும்
ஒன்னாப் போனீங்க..இப்போ
நீ தனிமரமா வந்து நிக்கிறியேப்பா" -என்பார்
ராஜூ தாத்தா.
ராஜூ தாத்தா பேசத் துவங்கும்
போது முகத்தில் தோன்றும்
புன்னகை.." அம்மா,அப்பா"
என்று பேசப் பேச மாறி,
சோகமாகி, கண்களில் நீர்
தானாய் நிரம்புமே?
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
30th October 2015, 08:34 AM
#13
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-26
"ராமன் எத்தனை ராமனடி?"
அறிமுகக் காட்சி.
சாதாரணமாய் ஒரு மனிதனால்
சாப்பிட முடியாத அளவுக்கு
மலைபோல் குவித்து வைக்கப்பட்ட தின்பண்டங்களை உண்ணத்
துவங்குவதற்கு முன், அசட்டுத்
தனமும்,பெருமிதமும் கலந்த
ஒரு சிரிப்பு சிரிப்பாரே?
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th October 2015, 08:36 AM
#14
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-27
"பலே பாண்டியா".
ஒரு காட்சியில், அதிர்ச்சியை
வெளிக்காட்டுவதில் கூட
நகைச்சுவை காட்டிச் சொல்லும் "ஆஹாஹா...
ஹையோ...ஹையோ!".
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
30th October 2015, 08:37 AM
#15
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-28
"வசந்த மாளிகை".
உறக்கத்திலிருந்து எழுந்தவருக்கு பிறந்தநாள்
வாழ்த்துச் சொல்லி, மாலை
அணிவிக்கும் விசுவாசமான
வேலையாள் பொன்னையாவை, நெகிழ்ச்சியுடன் வித்தியாசமாய்
அழைக்கும் "ப்பொனையா"...
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
30th October 2015, 08:38 AM
#16
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-29
"நவராத்திரி".
சத்தியவான்-சாவித்திரி தெருக்
கூத்தில், ஒரு காட்சியில்
ஸ்ரீபார்ட் உள்ளேயிருந்து
மேடைக்கு வர வேண்டிய
நேரம்.
சத்தியவான் ஒப்பனையில்
சோடா குடித்துக் கொண்டு
தெனாவெட்டாய்ப் போடும்
உத்தரவு...
"வரச் சொல்லு..வரச் சொல்லு".
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
30th October 2015, 08:39 AM
#17
Junior Member
Senior Hubber
நினைப்போம்.மகிழ்வோம்-30
"பாபு".
'இதோ எந்தன் தெய்வம்'
பாடலினூடே குட்டி ஸ்ரீதேவியைத் தூக்கி இரண்டு,
மூன்று முறை வட்டமாய்ச்
சுற்றி விட்டு, நிற்கும் போது
அழகாகத் தள்ளாடி விட்டு
நிற்பாரே?
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
30th October 2015, 08:56 AM
#18
Junior Member
Seasoned Hubber
Congratulation Mr Senthilvel and as usual continue to rock your post in Part 17 of ACTING GOD.
-
30th October 2015, 10:36 AM
#19
Junior Member
Diamond Hubber
இன்றுமுதல் கோவை டிலைட்டில்
"தெய்வமகனின்"
நீதி
திரைப்படம் திரையிடப்படுகிறது.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th October 2015, 10:43 AM
#20
Junior Member
Diamond Hubber
14.02 2014. அன்று கோவை ராயலில் நீதி திரையிடப்பட்டபோது ...
Bookmarks