Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எல்லாம் வல்ல நமது இதய தெய்வம் மக்கள் தலைவர் நடிகர் திலகம் அவர்களின் பொற்பாதங்களில் இந்த எட்டாயிரமாவது பதிவினைப் பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றேன்.

    Sivaji Ganesan - Definition of Style 29

    ரோஜாவின் ராஜா





    காட்சி : காதலர் பிரிவும் காதலன் துயரும்

    ராஜாவும் கோபாலும் நெருங்கிய நண்பர்கள். கல்லூரித் தோழர்கள். ஜானகியும் அவர்களுடைய கல்லூரியில் சக மாணவி. ராஜாவும் ஜானகியும் காதல் வயப்படுகிறார்கள். அவர்களின் காதல் வளர்ந்து ஒருவரை ஒருவர் கணப்பொழுதும் பிரியாமல் இருக்க விரும்பும் அளவிற்கு உள்ளத்தால் நெருங்கி விடுகிறார்கள்.

    காதலுக்கும் பாசத்திற்கும் ஜாதிக்கும் எப்பொழுதுமே ஒத்து வராது என்கின்ற உலக நியதியோடு பணமும் சேரும் போது காதலின் உணர்வைப் பெற்றோர் புரிந்து கொள்வதில்லை. இங்கும் அதே நிலைமை காதலிக்கு ஏற்படுகிறது. பிடிவாதமாக அவள் காதலை நிராகரித்து வேறு மாப்பிள்ளையை ஏற்பாடு செய்கிறார்கள். சந்தர்ப்ப வசத்தால் ராஜாவின் தோழனான கோபாலே அங்கு மாப்பிள்ளையாக வருகிறான். பெற்றோர் இந்தக் கல்யாணத்தை வலுக்கட்டாயமாக நிச்சயித்து விடுகின்றனர்.

    இந்தக் காதல் தோல்வியை ஏற்க முடியாமல் ஜானகி கதறுகிறாள். குமுறுகிறாள். துடிக்கிறாள்.

    அங்கோ தாய் மகன் என இருவரே வாழும் வீட்டில், இந்த சந்தர்ப்பத்தில் ராஜா தன் காதல் தோல்வியை எப்படி எதிர்கொள்கிறான், தன் மகன் ராஜாவை உயிருக்கும் மேலாக நேசித்து வரும் ராஜாவின் தாய். அவனை எப்படி அணுகுகிறாள் என்பதை விளக்கும் காட்சியைத் தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.

    இதில் ராஜாவாக நடிகர் திலகம், ஜானகியாக வாணிஸ்ரீ, கோபாலாக ஏவி.எம்.ராஜன், ராஜாவின் தாயாக ருக்மணி, ஜானகியின் பெற்றோராக மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் சுகுமாரி நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி படத்தில் சோ இரு வேடங்களில், ஸ்ரீகாந்த், ஏ.சகுந்தலா, ஆர்.எஸ். மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    தயாரிப்பு என்.வி.ஆர்.பிக்சர்ஸ்
    இயக்கம் கே.விஜயன்
    இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.

    காட்சிக்குப் போகும் முன்.....

    ரோஜாவின் ராஜா - நினைவலைகள்..




    வெளியீடு 25.12.1976


    ரோஜாவின் ராஜா படத்துவக்க விழாக் காட்சிகள். நன்றி ஆவணத்திலகம் பம்மலார் அவர்கள்.

    மதி ஒளி 15.07.1973



    நெஞ்சை அள்ளும் நிழற்படங்கள். உபயம் நெய்வேலி வாசு அவர்கள்.



    வாசு அவர்களின் பங்களிப்பில் மேலும் நிழற்படங்களுக்கு
    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post788247

    ரோஜாவின் ராஜா திரைப்படத்தைப் பற்றி நண்பர் கார்த்திக் அவர்களின் அனுபவ நினைவலைகள்

    http://www.mayyam.com/talk/showthrea...l=1#post788259

    தான் பணியாற்றும் ஒவ்வொரு படத்திற்கும் தன் முழு அர்ப்பணிப்புடன் இசையமைக்கும் மெல்லிசை மன்னர் இப்படத்திலும் தன் ஈடற்ற இசையைத் தரத் தவறவில்லை. பின்னணி இசையில் அதகளம் பண்ணியிருப்பார்.

    இப்போது நாம் காண இருக்கும் காட்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

    இனி காட்சிக்குச் செல்வோம்.

    காட்சியின் துவக்கம்.. 1.16.50 மணித்துளியிலிருந்து




    1. தன் நண்பன் கோபாலிடமே தன் காதலைப் பற்றிச் சொல்ல நினைக்கும் ராஜா கடிதம் எழுத எத்தனிக்கிறான். தாளில் மை கொட்டி விடுகிறது.
    கோபாலும் தானும் இருக்கும் படத்தை ராஜா எடுத்துப் பார்க்கிறார் ..
    இந்த இடத்தில் வசனம் தலைவரின் உதடுகளில் உயிர் பெற்று உலவுவதை நாம் உணரலாம்.

    கோபால் தி கிரேட் பெர்சன். இந்த வரியின் போது முகத்தில் பாராட்டும் விதமாக முகம் மலர்கிறது. உடனே தன்னை ஒப்பிடும் போது முகபாவம் மாறுவதைப் பாருங்கள். உன்னை வெச்சி கம்பேர் பண்ணினா நான் ரொம்ப சாதாரணமானவன். இந்த வசனத்தின் போது அந்த சாதாரணமானவன் என்பதைத் தன் முகத்திலேயே கூறி விடுவதை கவனியுங்கள். நீ எனக்கு என்னெல்லாம் செஞ்சிருக்கே நான் கேட்டு நீ எதுவும் எனக்கு வாங்கிக் குடுத்ததில்லே.. இந்த வரியின் போது முகத்தில் நன்றியுணர்ச்சி பெருகுவதைப் பாருங்கள். நான் நெனக்காத்தெல்லாம் நீ நிறைவேத்தி வெச்சிருக்கே.. இந்த வரிகளின் போது நன்றியுணர்ச்சி வெளிப்படுகிறது. ஆனால் அதனுடன் கூட ஒரு எதிர்பார்ப்பை கூடக் கொண்டு வருகிறார். ஆனால் இப்போ, நான் நெனக்காத ஒண்ணை எங்கிட்டேயிருந்து நீ கேக்காம கேக்கிறியேடா, என்கிறார். இந்த வரிக்கு ஒரு சங்கடம் வெளிப்படுகிறது. தன்னுடைய நன்றியைக் காட்ட வேண்டிய கடமை உணர்ச்சியை அடுத்த வரியில் சொல்கிறார். நான் மறுக்க்க் கூடாது உடனேயே குடுத்தடணும், இந்த வரியின் போது உடனே முகம் மாறி நன்றியுணர்ச்சி வெளிப்படுகிறது, அடுத்த வரியில் தான் அந்த சராசரி மனிதனின் இயல்பு வெளிப்படுகிறது. ஆனால் என் மனசு கேக்கலியே கோபால்.. இப்போது தவிப்பு உண்டாகிறது.. நன்றியுணர்ச்சிக்கும் சுயநலத்திற்கும் இடையே மனம் அல்லாடுகிறது.. இந்த இடம் தான் மிகவும் முக்கியமான கட்டம். சுயநலத்தையும் காட்ட வேண்டும் அதே நேரம் நன்றியுணர்ச்சியையும் காட்ட வேண்டும். இந்த இருதலைக் கொள்ளி நிலைமையைத் தன் முகத்தில் எவ்வளவு அழகாக்க் கொண்டு வருகிறார் பாருங்கள். நான் என்ன செய்வேன் எனத் தவிக்கிறார். அந்த சுயநலத்தை நியாயப்படுத்துகிறார். என்ன பாக்குறே, உனக்குள்ள பெரிய மனசு எனக்கில்லையேன்னு பாக்கிறியா.. என புலம்புகிறார்.


    இப்போது குற்ற உணர்ச்சி தலையிடுகிறது. என்னை அப்படிப் பாக்காதே கோபால் எனக் குற்ற உணர்ச்சி மேலிட, அதைத் தணித்துக் கொள்ள தன் நண்பனே அருகில் இருப்பதாக பாவித்துக்கொண்டு அந்த புகைப்படத்தைத் தன்னோடு அணைத்துக்கொள்கிறார்.
    இப்போது கடிதம் எழுத எத்தனிக்கிறார். அந்தக் கடிதத்தின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவர் தன் முகத்திலேயே பிரதிபலிக்கிறார். தன் மனதில் உள்ளவை யாவையும் எழுதி தனக்கும் ஜானகிக்கும் உள்ள காதலை சொல்ல வரும் போது மை கொட்டி தாளில் உள்ள எழுத்துக்கள் அழிந்து விடுகின்றன.
    இந்த நேரத்தில் மெல்லிசை மன்னரின் பின்னணி இசையை கவனித்தோமானால், பின்னால் வரக்கூடிய அந்த சோகமான நாட்களை முன்கூட்டியே பின்னணி இசையில் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்.

    மை கொட்டியவுடன் என்ன செய்வதெனத் தெரியாமல் கை பிசைகிறார்.
    (என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்பது - இந்த மாதிரி வாக்கியம் ஏராளமான நாவல்கள், சிறுகதைகளில் நாம் படித்திருப்போம். ஆனால் அவற்றைக் கண்முன்னால் உயிரோடு நமக்கு நடிகர் திலகம் தரும் போது தான் அதனுடைய பொருளே நமக்கு விளங்குகிறது.).
    தாளில் மை கொட்டிய காரணத்தால் தன்னிடமிருக்கும், தானும் காதலியும் எடுத்துக்கொண்ட போட்டோவை கவரில் போட்டு அனுப்ப முயற்சிக்கிறார்.
    (கவரில் போட்டைவைப் போடும் போது கவனித்தால், அவர் முகத்தில் ஒரு தீர்க்கம் இருக்கும். இந்த கல்யாணத்தை கோபால் நிறுத்தி விட வேண்டும், ஜானகி தனக்கே கிடைக்க வேண்டும் என்கிற சுயநலம் முகத்தில் தென்படுவதையும் அதில் ஓர் உறுதி இருப்பதையும் நடிகர் திலகத்தின் முகத்தில் காணலாம்.
    பின்னணியில் வயலினில் தீம் மியூஸிக்கை மெல்லிசை மன்னர் கொண்டு வந்தவாறே இருப்பார். மை கொட்டியவுடன் இசையும் அதன் போக்கில் மாற்றம் கண்டு விடும்.)


    கவரை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.

    துணைக்கு மெல்லிசை மன்னரின் தீம் மியூஸிக் சற்று கூடுதல் சோகமான உணர்வில் தொடர்கிறது.

    இப்போது மனசாட்சியின் குரல் தொடங்குகிறது (இந்தக்காலத்தில் இதற்குப் பேர் மைண்ட் வாய்ஸ் ...). ராஜா, இந்தப் போட்டோவை இப்போது எதற்காக அனுப்புறே, கோபாலோட மனசைப் புண்படுத்தறதுக்கா. இல்லை ஜானகியோட வாழ்க்கையை அழிக்கிறதுக்கா.. ஜானகியோட மனசிலே ராஜா கோபால் ரெண்டு பேருக்கும் இடம் இருக்க முடியாதே..அவ மனசிலேருந்து தான் உன்னைத் தூக்கி எறிஞ்சிட்டாளே.. அப்புறம் ஏன் அவஸ்தைப்படறே.. கோபாலாவது நிம்மதியா இருக்கட்டும்..என்று அவருடைய மனசாட்சி அவருக்குள் இருக்கும் நல்ல எண்ணத்தை, நல்ல உள்ளத்தை, பெருந்தன்மையான குணத்தைத் தட்டி எழுப்புகிறது..

    (இதெல்லாம் அவருடைய பிறவிக் குணமாயிற்றே.. இதை வைத்துத்தானே அவரைப் பலரும் தங்கள் இஷ்டத்திற்கு பயன் படுத்திக்கொண்டு கூசாமல் துரோகம் செய்து ஓடினார்கள்..)

    இந்த மைண்ட் வாய்ஸ் பேசப்பேச அவருடைய முகத்தில் அந்த உணர்வுகள் கொண்டு வரும் மாற்றமும் இறுதியில் கண்ணீர் விட்டவாறே மனசாட்சியின் குரலை எதிர்கொள்ள முடியாமல் அந்தக் கடிதத்தைக் கிழித்து எறிவதும், முகத்தில் விரக்தியோடு அந்த போட்டோவை பார்ப்பதும்...

    தலைவர் கலக்கல்...

    இப்போது ஜானகியின் காட்சி..
    படுக்கையில் சோகமாக படுத்திருக்கிறாள் ஜானகி. தாயார் மகளின் திருமணத்திற்காக கொண்டு வந்திருக்கும் புடவை மற்றும் நகையைப் பார்க்குமாறு அவளை எழுப்புகிறாள். ஜானகி தன்னுள் இருக்கும் சோகம் கோபமாக மாற தாயாரைப் பார்க்கிறாள்..
    . காதலினால் வரும் கோபம் எப்படி இருக்கும் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் நூற்றாண்டு தமிழ் சினிமாவில் எனக்குத் தெரிந்து நான் கண்டதில்லவை.
    இந்த ஒரு காட்சியைப் பொறுத்த வரையில், இது வரை வந்த தமிப்ப்பட நாயகியரிலேயே வாணிஸ்ரீ மிகவும் அதிக பட்ச ஸ்கோராக, அருகில் யாருமே நெருங்க முடியாத ஸ்கோர் செய்கிறார். அந்தப் பார்வையைப் பாருங்கள்..



    தன் மகள் மேல் ஒரு தாய்க்கே உரிய கரிசனத்தோடு தாயார் அவளிடம் பரிவாகப் பேசுகிறார். நீ எங்களுக்கு ஒரே பொண்ணு, உன்னை விட்டா எங்களுக்கு யார் இருக்கா. உன் எதிர்காலம் நல்லா இருக்கணும் அதுதான் எங்க லட்சியம், உனக்கெது நல்லதோ அதைத்தான் நாங்க செய்வோம், அதை மட்டும் திண்ணமா நம்பு எனக் கூறுகிறார்.

    சுகுமாரியும் சளைத்தவரா என்ன. நடிப்பில் பழுத்த அனுபவசாலியல்லவா..

    ஜானகியோ கோபம் சற்றும் குறையாமல் பேச ஆரம்பிக்கிறார். எங்கிட்டே யாரும் பேச வேண்டாம். தயவு செஞ்சி இங்கிருந்து போயிடுங்க.. எனக் கூறி விட்டு படுக்கிறார்.

    இப்போது தாயாருக்கு கோபம் வருகிறது. எவ்வளவு நேரமா சொல்றேன். எடுத்தெறிஞ்சு பேசறியே. உன்னைப் பெத்து வளர்த்து ஆளாக்கின எங்களை விட நேத்து ரோட்லே பாத்தவன் அவ்வளவு முக்கியமானவனா போயிட்டானா.. எனக் குமுறுகிறார்.

    அவ்வளவு தான் ஜானகியின் கோபம் அதிகரிக்கறது. அம்மா என்றும் பாராமல் கோபத்தோடு குரலை அதிகரிக்கிறார். காதலனைப் பற்றி சொன்னதும் கோபம் கொப்பளிக்க, அவரைப் பற்றி எதுவும் பேசாதே, என ஆவேசமாக்க் கூறி விட்டு தாயார் என்றவுடன் சற்றே பாச உணர்வும் மரியாதையும் எழ., குரலைத் தாழ்த்தி அடங்குகிறார்.

    இப்போது தாயார் கோபம் சற்றும் குறையாமல், ஏண்டி அவன் என்ன கலெக்டரா இல்லை கவர்னரா, அசோக வனத்து சீதை மாதிரி இருக்கியே எனச் சொல்லி விட்டு, மகளின் பதிலுக்காகக் காத்திருக்காமல், இதில் எது பிடிச்சிருக்கோ பாத்துத் சொல்லு எனக் கட்டளையிடுகிறார்.

    ஜானகியின் கோபம் அதிகரிக்கிறது. எனக்கு எதுவுமே பிடிக்கலை, யாருமே பிடிக்கலை போங்க இங்கிருந்து என கூவியவாரு தலையணைகளை தூக்கி எறிகிறார்.

    தாயார் ஏண்டி உனக்கென்ன பைத்தியமா என தானும் கோபமாக்க் கேட்கிறார். இருவருமே உணர்ச்சியின் பிடியில் உச்சத்தில் இருக்கிறார்கள்.

    ஜானகி ஆமாம், நான் பைத்தியம் தான், பைத்தியம் தான் என ஆவேசமாக்க் கூச்சலிட்டவாறே அழத் தொடங்குகிறார். காதல் எத்தனை சக்தி வாய்ந்த்து என்பதை அந்தக் கோபம், ஆவேசம், அழுகை அத்தனையும் சேர்ந்து அங்கே ஒரு பாடமே நடத்தி விடுகிறது

    எத்தனையோ படங்களில் அதற்கு முன் நாயகியின் காதல் வெற்றி பெற முடியாமல் பெற்றோர் பார்த்து வைத்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ள வற்புறுத்தப்படக்கூடிய சூழ்நிலை உள்ள காட்சிகள் வந்துள்ளன. ஆனால் அதை எந்த நாயகியும் வீராவேசமாக எதிர்கொண்டதாக நாம் அதிகம் பார்த்த்தில்லை.. இந்த வகையில் இந்தப் படம் ஒரு முன்னோடி எனச் சொல்லலாம்.. காதலின் உண்மையான ஆழமான உணர்வை இந்தப்படமே சரியான வகையில் வெளிப்படுத்தியிருக்கிறது என சொல்லலாம்.. )

    இப்போது தலைவரிடம் காட்சி வருகிறது.

    இங்கே துவங்குகிறது அந்த நடிப்பின் இமயத்தின் ஆளுமை..


    சே..சே...தப்பு தப்பு என்றவாறே மேஜையைத தட்டுகிறார் ராஜா. விரக்தியோடு ஜானகியை நான் காதலிச்சதே தப்பு, ஹ.. நானாவா காதலிச்சேன், எதிர்பாராத ஏற்பட்ட சந்திப்பு தானே...காதலிக்கிறதுக்குக் கூட தகுதி அந்தஸ்து எல்லாம் வேணும் போலிருக்கு... என்று தனக்குத் தானே புலம்புகிறார்.

    நடந்தவாறே பேசிக்கொண்டு, அந்தப் பாத்திரத்தின் மன உணர்வை அந்த வரிகளில் கொண்டு வரும் வித்தை அவருக்கே உரியதாகும்.


    இப்போது ராஜா நண்பன் தியாகுவைக் குறை சொல்கிறார். டேய் தியாகு நான் மட்டும் பணக்காரனாயிருந்திருந்தா என் காதல்லே நீ குறுக்கிட்டிருப்பியாடா என விசும்புகிறார். கல்யாணம் பண்ணி வெச்சு கங்கிராஜுலேஷன்ஸ் சொல்ல வேண்டிய ஃப்ரெண்ட்ஸெல்லாம் கண்டோலென்ஸ் சொல்லும்படியா செஞ்சிட்டியேடா...எனப் புலம்பும் அவருடைய உணர்வு இப்போது கோபாலிடம் திரும்புகிறது.

    கோபால், கோபால், ஜானகி உம் பக்கத்திலே உக்காந்துகிட்டு, நீ அவ கழுத்திலே தாலி கட்டும் போது, என் கழுத்திலே தூக்குக் கயிறு மாட்ற மாதிரி இருக்குமேடா.. என்றவாறே சோகத்தின் உணர்ச்சிக்குப் போகிறார், அதை நான் எப்படிப் பாப்பேன்.. No, I can't bear it, I can't bear it என உரத்த குரலில் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.


    டேபிளைத் தட்டும் போதும் சரி, நடக்கும் போதும் சரி, ஐ காண்ட் பேர் இட் என சொல்லுவது வரையிலும் சரி, தலைவரின் முகத்தில் தான் அந்த பல்வேறு உணர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக எப்படியெல்லாம் வெளிவருகின்றன.



    இப்போது மனம் சற்றே நிலை மாறுகிறது. ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவர் போல் முகத்தில் விரக்தியுடன் சேர்ந்த தெளிவு பிறக்கிறது. நடையில் சற்றே அந்த தீர்மானம் எதிரொலிக்கிறது. கைகள் ஏதாவது செய்ய வேண்டும் என்று உந்தப்பட்டு கையை சுற்றுகிறார். இப்போது அவருடைய மனம் தன் தாயாரிடம் செல்கிறது. அம்மா என்னை வளர்க்க நீ எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பே, நான் எப்படியெல்லாம் ஆகணும்னு நீ கனவு கண்டிருப்பே.. என்னாலே உனக்கு ஒரு பிரயோசனமும் இல்லேம்மா. என்று கூறுகிறார்.

    இப்போது அவருடைய இரு கைகளும் அந்த இயலாமையை எப்படி வெளிப்படுத்துகின்றன. ஒரு மனிதனின் சகல அவயங்களும் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியதாய் இறைவன் படைத்த்து நடிகர் திலகம் என்கிற கலை தெய்வத்தை மட்டும் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகிறது. எப்படி அந்த கைகள் சுற்றப்பட்டு அதன் மூலம் அந்தப் பாத்திரத்தின் மன நிலையைக் கொண்டு வர பயன்படுத்தப்படுகின்றன என்பதை சினிமாவில் நடிக்கவருபவர்களும் நடிக்க வேண்டும் என ஆவல் உள்ளவர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படைப் பாடமாகும் இது.


    ஒண்ணும் செய்ய முடியாது, நான் உனக்கு ஒண்ணுமே செய்ய முடியாது, நோ... என தீர்க்கமாகத் தனக்குத்தானே கூறிக்கொண்டு படுக்கையில் விழுகிறார்.

    இப்போ படுத்தேண்ணா காலைலே கண்முழிக்கவே கூடாது. என்னுடைய முடிவு யாருக்குமே புரியாத முடிவா இருக்கணும் என்று கூற, மெல்லிசை மன்னரின் பின்னணி இசை சற்றே திகில் கலந்த இசையுடன் அது நடக்காது என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.

    படுக்கையில் இவர் இருக்கும் போது வாசலில் ஓர் உருவம் தென்படுகிறது. ராஜா என தாயார் அழைக்கிறார்.

    தாயாரிடம் செல்லும் ராஜா, அம்மா எனப் பாசத்தோடு அழைக்கிறார். இவ்வளவு நேரமாக இங்கேயா நின்னுக்கிட்டிருந்தே எனக் கேட்கிறார். அந்தக் கேள்வியைக் கேட்கும் தொனியிலேயே இதெல்லாம் அம்மா கேட்டு விட்டார்களே என்கிற எண்ணம் அதில் எதிரொலிக்கிறது.

    இப்போது மழுப்புகிறார். அது ஒண்ணுமில்லேம்மா, நம்ம கோபாலுக்கு பதிலா நான் ஆக்ட் பண்ணினேன் இல்லே, அதிலேருந்து இந்தப் பசங்க என்னை விடறதே இல்லை, ஏதாவது நாடகம் எழுத சொல்லிக்கிட்டே இருக்காங்க, இப்போ கூட ஒரு புது நாடகம் எழுதியிருக்கேன், டிராஜெடி ப்ளே, அதைத் தான் ஒத்திகை பாத்துக்கிட்டிருந்தேன் என சமாளிக்கப் பார்க்கிறார்.
    தாயார் கேட்கிறார். கோபால், தியாகு, ஜானகின்னு சொல்லிட்டிருந்தியேப்பா எனத் தன் சந்தேகத்தை அதில் வெளிப்படுத்துகிறார்.

    அதெல்லாம் அந்த நாடகத்திலே வர்ற கேரக்டர்ஸ், நடிக்கிறவங்க பேரையே கேரக்டர்ஸுக்கு வெச்சிட்டேன் என ராஜா சமாளிக்கிறார்.

    உன் நாடகத்திலே அம்மா கேரக்டர் கூட வருதாப்பா ... என தாயார் தனக்கே உரிய உரிமையோடு தன் கேள்வியிலேயே மகனைத் தான் புரிந்து கொண்டதை வெளிப்படுத்துகிறார்.

    பெத்த மனதுக்குத் தெரியாதா தன் பிள்ளையின் மன நிலை.

    அனுபவம் வாய்ந்த ருக்மணி அவர்களும் இக்காட்சியில் தாயாரின் மனநிலையை தத்ரூபமாக பிரதிபலிக்கிறார்.

    கோபால் இப்போது மாட்டிக் கொள்கிறார். தாயாரிடம் மறைக்க முடியாமல் தடுமாறுகிறார். நீ இன்ஜினீயருக்கு படிச்சதை விட ஆக்டரா இருந்திருக்கலாம்பா எனக் கூறுகிறார் தாயார்.

    தாயார் பேசப் பேச கோபாலின் முகம் மாறுகிறது. தன் தாயாரைத் தன்னால் ஏமாற்ற முற்பட்டோமே என்கிற குற்ற உணர்வு மேலிடுகிறது.

    நீ என்னதான் மறைச்சாலும் உன் கண்ணீர் உன்னைக் காட்டிக்கொடுத்திடுச்சி பாத்தியா என தாயார் தன் மனதை வெளிப்படுத்துகிறார். அதில் தாயாருக்கே உரிய பாசம் வெளிப்படுகிறது.

    பெத்தவகிட்டேயே எல்லாத்தையும் மறைச்சிட்டியேடா என தாயார் மனம் வருந்துகிறார்.

    ராஜா திடுக்கிட்டவாறே பதில் கூறுகிறார். நோ நோ நீ தப்பா நெனக்கப்படாது. ஒரு நல்ல சமயமா பாத்து திடீர்னு சொல்லி உன்னை அதிர்ச்சி அடைய வெக்கலாம்னு நெனச்சேன்.. இப்போ ஏதோ நடந்து நானே அதிர்ச்சியாயிட்டேன். தட்ஸ் ஆல்.. என சமாளித்தவாறே தன் உணர்வுகளை மறைக்க முயல்கிறார்.

    தாயாரும் ஓரளவிற்கு அதை நம்பியவாறே, ஏதோ நடந்த்து நடந்து போச்சு, அதையே நெனச்சி உன் மனசைப் போட்டு குழப்பிக்காதே, என ஆறுதல் கூறும் தாயார், எங்கே தன் மகன் வேறு ஏதாவது தவறான முடிவுக்குப் போய் விடுவானோ என்கிற இயல்பான பயத்தில் அவனுடைய கரங்களைப் பற்றியவாறே இத்தனை வருஷமா நான் உன்னை நெனச்சு தாண்டா மனசு ஆறுதலடைஞ்சிண்டிருக்கேன், இப்போ அம்மாவுக்காக உன் மனசைத் தேத்திக்கோப்பா எனக் கெஞ்சுகிறார்.

    இப்போது தான் உச்சகட்டத்தில் செல்கிறது நமது கலை தெய்வத்தின் ஆளுமை..


    Finish... அதை நான் அப்பவே மறந்திட்டேனே. நீ ஏன் வருத்ப்படறே, நான் மறந்திட்டேன், கேரி ஆன், நீ ரெஸ்ட் எடுத்துக்க...என மிக இயல்பாக, அதே சமயம் அதில் தன் தாயார் நம்பிக்கை கொள்ளும் படியாக்க் கூறி விட்டுச் சென்று விடுகிறார்.


    இந்த FINISH என்ற வார்த்தையை அவர் சொல்லும் போது நமக்கு ஒன்று தீர்மானமாகிறது..

    நடிகர் திலகத்தோடு நடிப்பும் FINISH என்பதே அது.
    Last edited by RAGHAVENDRA; 30th October 2015 at 05:01 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •