Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    நேற்று உங்களுடைய ஸ்பெஷல் நாள் போல. சும்மா பிய்த்து உதறி விட்டீர்களே! நமக்கு மிகவும் பிடித்த 'நல்லொதொரு குடும்பம்' படத்தின் தலைவர் போன் காட்சியை தங்கள் எழுத்தின் மூலம் அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே! அருமை! அருமை!

    எனக்கு 'நல்லதொரு குடும்பம்' படத்தின் முதல் பாதி இன்னும் இன்னும் ரொம்பப் பிடித்தமானது. 'அறிவாளி' படத்தின் அடங்காத குதிரையான பானுமதியை தலைவர் அவர் போக்கிலேயே சென்று அதே போன்று வேண்டுமென்றே ஈகோ காட்டி நடித்து அடக்குவார்.

    'நல்லதொரு குடும்ப'த்தில் நடிகர் திலகம், வாணிஸ்ரீ இருவருமே ஒருத்தருக்கொருத்தர் சளைக்காமல் அவரவர்கள் ஈகோவால் அடிக்கடி பிய்த்து பிடுங்கிக் கொள்வார்கள். ஆனால் ஒருவர் மேல் ஒருவர் அசாத்திய அன்பு வைத்திருப்பார்கள். குலமா குணமா ஆலமரக் காட்சியில் நடிகர் திலகமும் வாணிஸ்ரீயும் நடிப்பில் போட்டி போடுவார்களே. அதற்குப் பிறகு இதில்தான் நடிப்புப் போட்டி. நடுவில் பல படங்கள் சிறப்பாக இருந்தாலும் நல்லதொரு குடும்பத்தில் நடிப்பு இன்னும் அம்சம்.

    அதுவும் முதல் பாதியில் கேட்கவே வேண்டாம். நொடிக்கு நொடி நீயா நானா போட்டிதான். 'பெரிய இது' என்று வாணிஸ்ரீ பொருமுவதும்....'போடி திமிர் பிடிச்சக் கழுதை' என்று தலைவர் பதிலடி கொடுப்பதும் செம கலக்கல். வாணிஸ்ரீ இவரிடம் சண்டை போட்டுக் கொண்டு (அதாவது திருமணத்திற்கு முன்னால்) வீட்டை விட்டுக் கிளம்பியதும் தலைவர் தனியே வாணிஸ்ரீயைத் திட்டி அதே சமயம் புலம்பித் தீர்க்கும் காட்சிகள் இருக்கிறதே! சலிக்காத இன்பக் காட்சிகள் அவை. அதே போல தேங்காய் மனைவியான மனோரமாவை தேங்காய் முன்னாலேயே வீட்டில் மெடிக்கல் செக்-அப் செய்யும் காட்சி வெகு யதார்த்தம். தேங்காய் பண்ணுவது ஓவர் என்றாலும் சிரிக்காமல் இருக்க முடியாது. தலைவர் வீட்டிலிருந்து கிளினிக்கிற்கு டாக்டராகச் செல்லும் அழகே அழகு.

    எங்கள் ஊர் ரமேஷ் தியேட்டரில் 45 நாட்களுக்கும் மேலாக அமர்க்களமாக ஓடியது நல்லதொரு குடும்பம். 'இமயம்' பாடலி தியேட்டரில் ஜூலை 21 ரிலீஸ் ஆன 3 நாட்களுக்கு முன்பு தான் 'நல்லதொரு குடும்பம்' திரைப்படத்தை ரமேஷிலிருந்து எடுத்தார்கள் என்று நினைவு. அதுவரை 'நல்லதொரு குடும்ப'த்தைப் பார்த்து தீர்த்து விட்டோம். 'கண்ணா உன் லீலா வினோதம்...சிந்து நதிக்கரையோரம்.....சச்சச்சா.....செவ்வானமே' என்று ராஜாவின் இசையில் அமர்க்களமான பாடல்கள். ஆனால் தலைவருக்கான சோலோ பாடலான 'பட்டதெல்லாம் போதுமாம் பட்டினத்தாரே' பாட்டில் இளையராஜா கொஞ்சம் கோட்டை விட்டிருந்தார். இந்தப் பாடல் சுமார் ரகமே. கொஞ்சம் ஏமாற்றம் தந்தது.

    நல்ல படத்தை நினைவு கூர்ந்து காட்சிகளையும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள். எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள். இந்த 17ம் பாகத்தில் தங்களுடைய பங்கு மகத்தானது. அது போல ஆதவன் ரவி, தம்பி செந்தில்வேல் இவர்கள் பங்கும் பாராடப்பட வேண்டியது. திரி அமர்க்களமாகச் செல்கிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது இப்படியே தொடர வேண்டும் என்பதுதான் அனைவருடைய விருப்பமும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •